மூப்பு அடையா யட்சகா 29

Yecha29

மூப்பு அடையா யட்சகா 29

28 மூப்பு அடையா யட்சகா!! 

சார் உங்களுக்கும் அவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது உண்மையா? நியூஸ் பேப்பர்ல உங்கள பத்தி ஒரு ஆர்டிகல் வந்தது, அதை பார்த்துட்டு தான் உங்க மரியாதை கெளரவம் போச்சுன்னு நீங்க சூசைட் அட்டென்ட் பண்ணுனீங்களா... இல்ல அவங்க உங்களை கொலை பண்றதுக்கு ட்ரை பண்ணாங்களா... பபணத்துக்காக இந்த அட்டாக் நடந்ததா? 

எப்படித்தான் மோப்பம் பிடித்து மருத்துவமனை அறை வரை வந்தார்களோ தெரியவில்லை... ஒருத்தி மைக் கேமராவோடு வந்து யட்சன் முன்னால் அமர்ந்திருக்க ...

"நீங்கதானே நியூஸ் போட்டீங்க கலர் கலர் படத்தோட ..

ஆமா சார் எங்க பேப்பர்தான் போட்டுச்சு 

ம்ம் குட் அடுத்தவன் பெட்ரூம் வரை கேமரா கொண்டு வர்றது பெரிய கலைதான் , ஆனா எனக்கு பெரிய வருத்தம்மா என்று யட்சன் நியூஸ் பேப்பரை எல்லாம் புரட்டிக் கொண்டே கூற..

அது 

பின்ன என்ன, சும்மா அவ என் மடியில உட்கார்ந்து இருக்கிற மாதிரியும், என் கழுத்தைக் கட்டிக்கிட்டு இருக்குற மாதிரியும் , அவளும் நானும் கட்டிப்பிடிச்சு இருக்கிற மாதிரியும், மேல்டாப்பா படம் போட்டு விட்டு இருக்கீங்க ... என்கிட்ட கேட்டு இருந்தா இதைவிட டீப்பா டெப்தா கண்ணுக்கு குளிச்சியா ஏகப்பட்ட படம் நான் தந்திருப்பேனே... மிஸ் பண்ணிட்டீங்க 

சார் , அப்போ இதெல்லாம் உண்மையா ? அந்த பெண் என்னடா இவன் இப்படி பேசுறான் என்பது போல் அவனை பார்த்துக் கொண்டே கேட்க 

"நீங்க தானே எங்க ரெண்டு பேருக்கும் இடையில கேமரா வச்சு படுத்து இருந்த மாதிரியே போட்டு இருக்கீங்க.. நீங்க தான் கண்டுபிடிக்கணும் "என்று நெட்டி முறித்து படுக்கையில் சாய்வாக அமர

கதவை திறந்து கொண்டு மல்லிகைப்பூ மணமணக்க தங்க கலர் சேலை சரசரக்க தங்க கொலுசு ஜல்ஜல் என்று சத்தம் கொடுக்க.. உள்ளே நுழைந்தாள் அவனின் இளையகாதலி !!

என்ன சுகர்பேபி காலையிலேயே செம மேக்கப்ல வந்து இருக்க போல.... அட்டகாசமான அழகில் சிகப்பு ரோஜா ஒன்றை குத்தி கொண்டே உள்ளே வந்தவள்... 

"ரோஜா ப்பூ மட்டும் மிஸ்ஸிங் கிழவா, அதான் வர்ற வழியில வாங்கிட்டு வந்தேன் , மாத்திரை போட்டாச்சா? என்று அவன் அருகே வந்தவள் அப்போதுதான் மூணாவது ஆள் இருப்பதை உணர்ந்து 

என்னவாம்? 

""பேப்பர்ல வந்த கட்டுரைக்கு பேட்டி எடுக்கிறாங்க....

"உங்களை தாங்க தேடிட்டு இருக்கேன்.... எப்படி நீங்க அப்படி போடலாம் , என்று அந்த பெண்ணை முறைத்து பார்த்த தேனிசை 

"கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா உங்களுக்கு , நீங்க போட்ட நியூஸ் பாத்துட்டு எனக்கு மூணு நாளா ஒரே மன உளைச்சல் தாங்க முடியல தெரியுமா ? 

""சாரி மேடம் 

"பின்ன என்ன போட்டோவுல... இந்த கிழவன் மட்டும் அழகா இருக்கார்... நான் மட்டும் ஏதோ இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கேன், குண்டா வேற தெரியுறேன், கலரா தெரியல , கண்ணு சப்பி போயி கன்றாவியா இருந்தேன்... உங்க படத்தை பெருசா போட்டு உங்க ஹிஸ்டரி எல்லாம் எழுதி இருக்காங்க என் பேரை தவிர ஒன்னுமே இல்லை ... எனக்கு மோசம் நடந்து இருக்கு கிழவா , என்னன்னு கேளுங்க என்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்த யட்சன் நோக்கி தேனிசை திரும்ப

ஆமால்ல 

ம்ம் , உங்கள மட்டும் அழகா காட்டிட்டு என்னை அசிங்கமாக காட்டி இருக்காங்க கிழவா, எவ்வளவு ஓர வஞ்சனை... 

"இதெல்லாம் கவனிக்கலையே சுகர்பேபி 

"நீங்க என்னத்த கவனிச்சீங்க ,இதுக்குதான் சொன்னேன் நாமளே வீடியோ வெளியிட்ருவோம்னு., நாலு தடவை ப்ரூப் பார்த்து நல்ல வீடியோவா வெளிய விட்டிருந்தா , மக்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்திருக்கும்ல.... எக்கா நீ போட்ட கோட்டை எல்லாம் அழி முதல்ல இருந்து கோடு போடுவோம் .... 

இப்ப அழகா போட்டோ எடுத்து மருத்துவமனையிலும் விட்டு வைக்காத இளம் பெண் தேனிசை, கதறும் கிழவன் , போடுங்க 

"அது என்னடி நான் கதறுற மாதிரி போடணும், இளம்பெண்ணோடு மருத்துவமனையில் சல்லாபம் , கையும் காலமாக சிக்கினார்னு லைவ் வீடியோ போட சொல்லுவோம் 

"இல்லை போட்டோ கிழவா 

"இல்லை வீடியோ

"போட்டோ 

"வீடியோ என்று இருவரும் போட்ட சண்டையை பார்த்து அந்த பெண் தெரியாத்தனமா வந்து சிக்கிட்டோமோ என்று தலையை சொரிந்த கொண்டு நழுவ பார்க்க , அவள் கையை பிடித்து தடுத்த தேனிசை 

"எங்க போற 

"இல்லை பிறகு வர்றேன் மேடம்

"எதுக்கு வந்த 

"பேட்டி எடுக்க 

"அப்போ பேட்டி எடுக்காம போற ... 

"இல்லை மேடம் சூழ்நிலை சரிஇல்லை

"என்ன லூசுங்க தெளிவாகட்டும்னு பார்க்கிறியா, நாங்க எப்பவும் இப்படித்தான் இருப்போம் பேட்டி எடு உட்கார்..."

"இல்லை 

"சரிதான் உட்கார்டி கேட்காம உள்ள வந்தல்ல நாங்க சொல்லாம வெளிய போக முடியாது அதான கிழவா..

அதேதான் நீயும் ரெடியாகி வந்திருக்க, நானும் ரெடியாகி போட்டவுக்கு போஸ் கொடுப்போம்... கருப்பு சட்டை எங்க ..??

"சிகப்பு போடுங்க அதான் போட்டோவுக்கு நல்லா இருக்கும்.... ப்ச் இருங்க நான் போட்டு விடுறேன் காயம் கண்ட வலது கை அசைய விடாது சட்டையை மாட்டி பட்டன் போட்டு விட்ட தேனிசை 

"ம்ம் இப்படி உட்காரவா?? அவன் கழுத்தை கட்டி கொண்டு போஸ் கொடுக்க 

"இதுக்கா அக்கா இவ்வளவு தூரம் வந்திருப்பாங்க இப்படி குடுக்கலாம்" என்று அவளை இழுத்து படுத்திருந்த அவன் மீது தூக்கி போட 

"இப்ப எடுக்கா இது போதுமா இல்லை லிப் கிஸ் பண்ணுற மாதிரி வேணுமா.. பண்ணுறதுல பிரச்சனை இல்லை... ஆனா எங்க ரெண்டு பேருக்கும் கெட்ட பழக்கம் ஒன்னு உண்டு .. கிஸ் பண்ண ஆரம்பிச்சா கில்மா சீன் முடியும் வரை நகர மாட்டோம் அதையும் எடுக்க வீடியோ கேமரா இருக்கா ... என்ன கிழவா இவ எது கேட்டாலும் பேக்க பேக்க முழிக்கிறா....அப்பெண் எத்தனையோ பெரிய தலைகளோடு பேட்டி எடுத்தவள் தலைதெறிக்க வைத்தது இதுகதான்... 

ரியலி சாரி சார் உங்க பெர்சனல் உள்ள மூக்கை நுழைச்சது தப்பு தான் .... என்று அப்பெண் எழும்ப 

உட்கார் உட்காருன்னு சொன்னேன் என்ற தேனிசை அதட்டலில் அப்பெண் மீண்டும் அமர...

பேட்டி கேட்டல்ல கொடுக்கிறோம் ... நாங்க சொல்றது நாளைக்கு முதல் பக்கத்துல வரணும் டிஆர்பி ஏகிரனும் ... வர்ற பணத்துல உனக்கு பாதி எனக்கு பாதி டீல் பேசிக்கலாமா? என்ற தேனிசையை அப்பெண் அதிர்ந்து பார்க்க

வார வாரம் பேட்டி கொடுப்பேன், வைரல் கிட் கொடுக்க போகுது உங்க பேப்பர் ..மாமூல் கரெக்டா வந்துடனும்... எத்தனை நாள் தான் உங்ககிட்டேயே கறக்குறது கிழவா, அங்கேயும் கொஞ்சம் கறந்துக்கவா? என்று கிசுகிசுப்பாக யட்சன் காதில் கேட்க

"வந்து மாட்டி இருக்காங்கல்ல ஏன் விடுவானே, கோமணத்தை தவிர அத்தனையும் உருவிட்டு விட்டுடு...

கோமணத்தை மட்டும் ஏன் விடனும் , அதையும் வாங்கி நாலு துண்டா கிழிச்சு , அதையும் கர்ச்சிப்பா வித்துடுவோம் கிழவா ... அதுவும் லாபம்தான? 

அப்படிங்கிற அப்ப ஓகே , அந்த பெண்ணின் முகத்தில் மரண பயம் தெரிந்தது.... 

எங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்து ஏற்காட்டு ஸ்கூல்ல படிச்சுக்கிட்டு இருக்கு கொட்டை எழுத்துல இது வரணும் என்றாள் தேனிசை 

அது என்ன, என் திறமையை ஒன்னோட முடிக்கிற இதை நான் ஒத்துக்க மாட்டேன் சுகர், இன்னொரு ரெட்டை குழந்தை வயிற்றில் இருக்கு, இன்னும் தொடரும்னு போடும்மா.... இந்தாம்மா இந்தாம்மா எதுக்கு இந்த புள்ளை இந்த ஓட்டம் ஓடுது சுகர்பேபி 

கேமராவை விட்டிட்டு போயிடுச்சு கிழவா.. இதெலாம் உண்மையா பொய்யான்னு தெரியாம குழம்பி சாவுங்கடா என்று தேனிசை கலகலத்து சிரிக்க.... ஆயிரம் அடியில் சிதையாத நரை அழகன் அவள் சிரிப்பில் சிதைந்தான்... அவள் இடையை இறுக்கி கசக்கி யட்சன் .... 

பெட்டுல பூ போட்டு இங்கேயே ஒரு சாந்திமூகூர்த்தம் நடத்தாம விட மாட்ட போலையே சுகர்பேபி என்று கிறங்கி போன குரலில் அவள் கழுத்தை வளைத்து உதட்டோடு உதடு வைத்து அவள் வாசத்தை இழுத்து நுகர 

சாந்தி முகூர்த்தம் இல்லை கிழவா , சுகர்பேபி முகூர்த்தம்.... நேத்து நைட் அனுப்பி விட்ட கான்செப்ட் செம தெரியுமா கிழவா? எல்லாரும் வெளியே உட்கார்ந்து இருக்கும் போது நீங்களும் நானும் மட்டும் குளிக்கிற சாக்குல உள்ள நின்னு மொத்தமும் முடிக்கிறது ஸ்ப்பா...

"இன்னைக்கே ட்ரை பண்ணிடுவோமாடி? 

சார் நீங்க நோயாளி என்று டாக்ட்டர் தான் அவனை,பிடித்து கொண்டு வந்து படுக்கை மீது போட வேண்டியதாகி போனது ... இவள் தினமும் பட்டு சேலை பூவில் புதுப்பெண் போல மருத்துவமனை வருவதும், அவன் அவள் தோளை சுற்றி கை போட்டு கொண்டு நொண்டி நொண்டி அவளை பிடித்து கொண்டு அருகே இருக்கும் கோவில் , கேண்டீன் மரத்தடி, பெஞ்ச் என்று உல்லாசமாக சுற்றி கொண்டு இருந்தனர்.... மருந்து மாத்திரை கொடுக்க வரும் டாக்ட்டர் கடுப்பாகி விடும் அளவு வெறும் அறை தான் இருக்கும் .... 

மருத்துவமனைன்னா இப்படிதான் இருக்கணும் சார் , நோயாளின்னா இப்படிதான் இருக்கணும் எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆனா எங்களுக்கு தான் கெட்ட பேர் நோயாளி பத்தி அந்த பொண்ணுக்கு என்ன தெரியும் என்று அவர் சட்டம் பேச ... தன் கால் காயத்துக்கு ஊதி ஊதி மருந்து போட்டு கொண்டிருந்த தேனிசையை குறையாத காதலோடு பார்த்த யட்சன்... 

"யார் அப்படி சட்டதிட்டம் வச்சது ... நீங்க நான் எழும்பி நடக்க மூணு மாசம் ஆகும்னு சொன்னீங்க...அவ என்ன மூணு நாள்ல தோள்ல சுமந்து நடக்க வச்சிட்டா, நீங்க பேச கூடாதுன்னு சொன்னீஙக, அவ பேசி பேசி எனக்கு வலிநிவாரணி தேவையே இல்லாம ஆக்கிட்டா... நீங்க என்ன நோயாளி நோயாளின்னு சொல்லி முடக்க பார்த்தீங்க... அவ மருந்துக்கு நடுவுல மல்லிகை பூ வாசத்தை கொடுத்து , மயக்க பாக்குறா.. நீங்க சாவு பயத்தை காட்டுறீங்க, அவ வாழ ஆசை கொடுக்கிறா, நீங்க காச வாங்கிட்டு சிகிச்சை கொடுக்குறீங்க... அவ ஒத்த அணைப்புல எனக்கு சிகிச்சை கொடுக்கிறா.. நீங்க வெள்ளை கோட் போட்டு இருக்கீங்க, அவ பட்டு சேலை போட்டிருக்கா அவ்வளவு தான் வித்யாசம் ... மற்றபடி வேலை என்னவோ ஒன்னு தான் ...

ஆனா அத செய்யுற முறை தான் வேற ... மாத்திரை மருந்து பத்தி வேண்ம்னா உங்களுக்கு தெரியலாம் ஆனா இந்த யட்சன் பத்தி அவளுக்கு தான் தெரியும் .. அது உங்களுக்கு தெரியலன்னா , ஷட் யுவர் மௌத் " என்று திமிர் கூடி நின்ற அவன் பேச்சிலும் அர்த்தம் இருக்க தலையை தொங்க போட்டு நகர்ந்து போய் விட்டார்... 

எந்த மருத்துவமனையும் ஒருவனை கொல்வதில்லை , அங்கே நிலவும் பயம்தான் ஒருவனைக் கொல்லும்... 

அவன் மருந்தில் பிழைத்தவன் இல்லை , அவளில் பிழைத்தவன்...  

ஜீவா அப்பாவை போய் பார்கலையா என்று சண்முகம் வீட்டில் சுருண்டு கிடந்த ஜீவா தோளை தொட

ம்ஹும்... 

ஏன் ??

அப்பா அவளை கல்யாணம் பண்ணிக்க போறாராம்.. 

ஓஓஓஓ 

என்ன பத்தி யோசிச்சு பார்த்தாரா?  

புரியுது தம்பி ஆனா அப்பாவும் பாவம் தானே 

என்ன பாவம் ... அவருக்கு தான் நான் இருக்கேனே அங்கிள்... எங்க அம்மாவுக்கு துரோகம் பண்ற அவரை எப்படி எல்லாரும் நல்லவர்னு சொல்றீங்க... அதுவும் என் வயசு பொண்ணு கூட ச்சீ கேட்கவே காது கூசுது அங்கிள் ...

தம்பி இத்தனை வருசம் உனக்காகதான வாழ்ந்தார் .. 

"இனிமேலும் அப்படி வாழ்ந்து இருக்க வேண்டியதுதான. எதுக்கு இந்த வயசுல அவருக்கு பொண்ணு , அவருக்கு என்ன தனியா ஒரு வாழ்க்கை நான் இருக்கும் போது அவருக்கு ஏன் இப்படி புத்தி போச்சு ... அவங்களுக்கு குழந்தை பிறந்துட்டா நான் அனாதை ஆகிடுவேனா சண்முகம் அங்கிள், என்ன தூக்கி துர போட்டிருவாரா அப்பா .. அவ என்னை சித்தி கொடுமை பண்ணுவாளா...இனி, என்னை அப்பாகிட்ட போக விட மாட்டாளா என்ன எல்லாரும் அம்போன்னு விட்டுட்டாங்கல்ல எனக்கு யாருமே இல்லல்ல.... என்று குழந்தை போல அழும் மகன் பற்றி தெரிந்து தானே யட்சன் இருட்டிலேயே தன் ஆசைகளை தொலைத்தான்...  

காதல் என்பது அழகிய உறவு , தகப்பன் என்பது அழகிய பொறுப்பு !! 

அவன் நல்ல காதலன் என்பதை நிருபித்து விட்டான் 

நல்ல தகப்பன் தான் என்பதை இவனுக்கு நிருபிக்க மறந்து விட்டானோ??