கழிமுள்ளி நெஞ்சிக்காரி-16
கழிமுள்ளி-16
நதியா இப்போது அரவிந்திடம் “ நான் கிளம்புறேன் அரவிந்த்”என்றவள் அவனது பிடியிலிருந்து விலகி வந்தாள்.
“ஏய் தியா?”என்று கூப்பிட்டான்.
“என்ன அரவிந்த்?”
“இங்க வா”
“வரமாட்டேன். மறுபடியும் தூக்கி வைச்சுக் கொஞ்சுவப்பா நான் வரலை. சோடாபுட்டி நீ ரொம்ப கெட்டுப்போயிட்ட”என்று ஒருவிரலால் அவனை மிரட்டினாள்.
“ஆஹான் ரொம்ப மிரட்டிறீங்களே டான் மேடம். இன்னும் டான் மோடுல இருந்து லவ்வர் மோடுக்கு வரலையா டான் மேடம்”என்று சிரித்தவனின் சிரிப்பில் மயங்கி பக்கத்தில் வந்தாள்.
அவளை இழுத்துக் கட்டிக்கொண்டான். அவன் உயரத்துக்கு அவள் குட்டையாகத் தெரிந்தாள்.
“அரவிந்த்”
“என்னடி?”
“உங்க வீடடுல உனக்கு யூரியோ உரம்போட்டு வளர்த்தாங்களோ. ஆத்திர அவசரத்துக்கு முத்தம் கொடுக்க ஒரு ஏணியை ஆர்டர் போட்டு வாங்கி வைக்கணும்போலிருக்கே”என்று நக்கலாகக் கேட்டவள் அவனது நெஞ்சில் முத்தம் வைத்தாள்.
“இல்லடி மாட்டுப்புண்ணாக்கு குடுத்து வளர்த்தாங்க.அதுதான் இப்படி வளர்ந்திருக்கேன். உனக்கு வேணும்னா சொல்லு எங்கம்மாவை மாட்டுப்புண்ணாக்கு பார்சல் போடச் சொல்லுறேன்”
ஹல்லோ சோடாபுட்டி இந்த வளர்த்தி எங்களுக்குப்போதும். உன் நெஞ்சுக்கு இருக்கேன்ல அப்புறம் என்ற என்றவள் அவனது நெஞ்சில் லேசாகக் கடித்துவைத்தாள்.
“ஷ்ஷ்ஷ்ஆஆஆஆ ரவுடி கடிக்காதடி. அப்புறம் உன்னை நான் கடிச்சு வைச்சிருவேன்”
“குனிஞ்சுதான் கடிக்கணும்”
குனிஞ்சு கடிக்கணும்னு இல்லடி இப்படி உன்னை என் உயரத்துக்குத் தூக்கி வைச்சும் கடிக்கலாம் என்றவன் அவளது இடுப்பைப் பிடித்துத் தூக்கி கன்னத்தில் கடித்து வைத்தான்.
ஷ்ஷ்ஷ்ஆஆஆ என்று சத்தமிட்டாலும் அவனக்கு வசதியாக கன்னைத்தைக் காண்பித்தாள்.
“அப்படியே அவளை தூக்கி வைத்திருந்தவன் இப்படியே உன்னைத் தூக்கிட்டு ஓடிரட்டுமா. உங்கப்பாவுக்குகூட எனக்கு பயமில்லைடி. உன்கூட சுத்தற குரங்குகளுக்குத்தான்டி பயமே”
“அவனது வாயில் ஒரு அடிபோட்டவள் அவங்கதான் நம்ம கல்யாணத்துக்கு மொத்தமா வந்து நின்னு எல்லாத்தையும் செய்துகொடுக்கணும். மச்சினான்களை கைக்குள்ள போட்டு வை. அதைவிட்டுட்டு முறைச்சிக்கிட்ட இருக்கக்கூடாது புரியுதா?”
“புரியுது”
“என்ன புரியுது?”
நீ ஏன் இவ்வளவு பேசுறன்னு புரியுது. உன் பேச்சை எப்படி நிறுத்தணும்னு புரியுது என்றவன் அவளது உதட்டோடு உதடுவைத்து உரசினான்.
அவ்வளவுதான் மொத்தமா பேச்சை நிறுத்திவிட்டாள். கண்ணோடு கண் நோக்கி அப்படியே அவளின் உதட்டைக் கடித்திழுத்து மெது மெதுவாக தனது உதட்டிற்குள் வைத்து சுவைக்கத் தொடங்கினவனின் கண்கள் முத்தமயக்கத்திற்கு போய்விட்டது.
அவளுமே கண்களை மூடி அவனை முத்தத்தை எந்த அவசரமும் இல்லாது ரசித்தாள்.
இப்போது அவளது உதட்டிலிருந்து தனது உதட்டை எடுத்தவன் விலாகது உதடுக்கொண்டு உரசியவாறே பேசினான். அவளுக்குத்தான் அது போதையாகிப்போனது.
அரவிந்த் இதுக்குமேல ஏதாவது செய்தன்னா அப்புறம் அப்பா அம்மாவாகிட்டுத்தான் இங்கிருந்து வெளியே போவோம். என்னை விட்டுட்டுடா. இதுக்குமேல என்னால தாங்கிக்கமுடியல. உன்கூடவே இருக்கணும்போல இருக்கு என்று மொத்தமாக மயங்கி அவனது காதோடுரகசியம் பேசலானாள்.
அவனுக்குமே அவளது நிலை புரிந்து மெது மெதுவாக அவளை தன்னிடமிருந்து இறக்கிவிட்டான். அவ்வளவுதான் மெத்த உடலும் அவனோடு உரசிக்கொண்டிருந்தது.
அவனிடமிருந்து விலக மனதில்லாது வேற வழியின்றி விலகி கண்களாலே அவனிடம் சொல்லிவிட்டு மௌனமாக நதியா காலேஜ் கிரவுண்டில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
தனது வண்டியை எடுப்பதற்காக வந்தவள் அங்கே வண்டியில் சாய்ந்து உட்கார்ந்து இருந்த விஜயைப் பார்த்தாள்.
“நீ மாமா கூட வீட்டுக்கு போகலையா நீ இங்க என்ன பண்ற?” என்று தனது முகத்தில் தெரிந்த வெட்கத்தின் சிவப்பையும் சிரிப்பையும் மறைத்து அவனிடம் கோபப்பட்டு பேசினாள்.
“நான் அப்பாக்கூட வீட்டுக்கு போறதும் போகாததும் இருக்கட்டும்ஃ நீ இங்க என்ன பண்ணிட்டிருக்க? யார் கூட பேசிட்டு வர்ற?” என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேள்வி கேட்டான்.
“நானா நான் எனக்கு தெரிஞ்சவங்களைப் பார்த்துட்டு வரேன்”
“அந்த தெரிஞ்சவங்க அரவிந்த்துதானே நதியா மேடம்" என்று கேட்டுவிட்டு அவளது முகத்தைப் பார்த்தான்.
“விஜய்!!” என்று அதிர்ச்சியில் கூப்பிட்ட நதியா அப்படியே அவனது முகத்தை பார்த்தாள். அடுத்து என்ன பேசவென்று தெரியாது முழித்தாள்.
“என்ன நதி இத்தனை நாளும் என் முகத்துக்கு நேரா பார்த்து பேசுவ, என் ஃப்ரெண்ட் நதியாவால் இப்போ என் கண்ணை பார்த்து பேசமுடியலையே.அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்னு நீ நினைக்கிற? நீ காதலிக்கிறதையும் காதலிக்கப்படுறதையும், நான் தப்புன்னு சொல்லவேமாட்டேன். ஆனா நம்மள பிரிக்கணும், உன்னை எங்ககிட்ட இருந்து மொத்தமா தூக்கிட்டுப்போகணும்னு நினைச்சு. உன்னை காதலிக்கிறேன்னு பேருல பழி வாங்கிட்டிருக்க அந்த அரவிந்த்துகிட்ட நீ விழுந்துட்ட பாரு. அதுதான் தப்புன்னு சொல்லுறேன். உனக்கே அது தப்புன்னு தெரிஞ்சுதானே நீ அரவிந்தைக் காதலிக்கிறதை எங்கக்கிட்ட இருந்து மொத்தமா மறைக்கிற. இப்போ வரைக்கும் மறைச்சிட்டு இருக்க. என்ன இதெல்லாம்?எனக்கு பதில் சொல்லு நதி “என்று அமர்த்தலாக அவளிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
இதுக்குமேல இவன்கிட்ட மறைக்கமுடியாதென்று நினைத்தவள் இப்போது தைரியமாக அவனது முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“நான் அரவிந்தை காதலிக்கிறேன் விஜய். எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு. அவன்தான் என் வாழ்க்கை, என்னோட உயிர், அவனோடுதான் என் வாழ்க்கை இருக்கென்று மனதோடு உணர்ந்து அவனைக் காதலிக்கிறேன். இதை சொல்ல நான் பயப்படலை. உனக்கு ஏற்கனவே அரவிந்தைப் பார்த்தா பிடிக்காது. இரண்டுபேருமே முறைச்சிக்கிட்டுத்தான் இருந்தீங்க. அதுதான் உன்கிட்ட மறைச்சிட்டேன். உன்கிட்ட மட்டும்தான் நான் சொல்லலை. நம்ம பிரண்டஸ்கிட்ட நேத்து இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டேன். அவங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. என்னோட விருப்பத்தை அவங்க முக்கியமா பார்க்கிறாங்க.உன்னை மாதிரி சண்டையெல்லாம் போடல. நான் அரவிந்தை காதலிக்கிறேன்னு உன்கிட்ட வந்து சொன்னா நீ என்ன செய்திருப்ப? நேத்து அரவிந்தை அடிச்சதோட விட்ட. நாங்க காதலிக்கிறோம்னு சொன்னா என்ன பண்ணுவியோன்னு எனக்கு இப்பவும் பயமாயிருக்கு விஜய். அந்தளவுக்கு எனக்கு அரவிந்த் முக்கியம். தயவுசெய்து புரிஞ்சிக்க. நீ என் பிரண்ட் அவன் என் லவ்வர்.இரண்டுபேரும் சண்டைப்போட்டுக்கிறது எப்படி பார்த்திட்டிருக்க முடியும். எனக்காக என் கண்ணீருக்காக மட்டும்தான் அவன் உன்னை விட்டு வைச்சிருக்கான் புரியுதா”என்று தெளிவாக பேசி தன்னுடைய காதலும் காதலனும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிவிட்டாள்.
அதைக்கேட்டதும் அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு அவனது வண்டியில் சாய்ந்து உட்கார்ந்து’
அவன் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தான்.
அதைப்பார்த்தவள் அவனது கையைப்பிடித்து இழுத்தாள். அவனோ நதியாவின் கையைத்தட்டிவிட்டான்.
“விஜய் ப்ளீஸ் இப்படி நீ இருக்காத. எனக்குப் பயமாயிருக்கு. நீ கோபப்படாத. நீ இப்படி பீல் பண்றளவுக்கு ஒன்னுமில்லடா. அரவிந்த் சோ நைஸ். அவன் என்னை ரொம்ப ரொம்ப காதலிக்கிறான். அவனால் பழிவாங்கலாம் முடியாதுடா. என்னை நம்பு நான் சும்மா போய் அவன் அழகுல மயங்கியோ அவன் பணத்துக்காகவோ லவ் பண்றேன்னு நிக்கலையே அவன் என்னை பழிவாங்குறதுக்கு. என் சோல் பீல் பண்ணி அவனை லவ் பண்றேன்.என்னோட லவ்வும் அவனோட லவ்வும் உண்மையானது. இது சும்மா வந்த ஈர்ப்பு இல்ல விஜய்”
அவன் இப்போது தனது முகத்தைத் துடைத்தவன் “அவனை எப்படி நீ நம்புன நதி. அவன் நல்லவன் இல்லைன்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. இப்பவும் அதைத்தான் சொல்லுது. அவன் முகத்தை பாவமா வைச்சிக்கிறதுனாலயே அவன் யாருக்கிட்டயும் அடிதடிக்குப் போகலைங்கிறதுனாலயும் அவன் இன்னசெண்ட்டும் கிடையாது,அம்மாஞ்சியும் கிடையாது. தன்னுடைய அடையாளத்தை மறைக்கிற பக்கா கிரிமினல் அவன்”என்று தான் நினைத்ததைச் சொன்னான்.
“ஏதாவது உளறாத விஜய்”
“என்ன நான் உளர்றனா. நதி நான் சொன்னதை நீ கண்டிப்பா புரிஞ்சிக்கிற நாள் வரும் பாரேன்”
“அப்படி ஒன்னும் வரக்கூடாதுன்னு நீ நினைக்கலையா விஜய். என்னோட காதல் உண்மையா இருக்கும்போது அரவிந்த் பக்கத்துல இருந்து எந்தவிதமான தவறும் நடக்கக்கூடாதுன்னு நீ மனசுலக்கூட நினைக்கலையா. அரவிந்த் தப்பானவன்னு நீ கணிச்சது நடந்து நான் வேதனைப்படணும், நீ சொல்லுறதை ஒரு நாள் புரிஞ்சிக்கணும்னு நினைக்கிறியே. அதனால எனக்கு எவ்வளவு வலி கிடைக்கும் என் வாழ்க்கை என்னாகும்னு யோசிக்கலையா விஜய். நீ இவ்வளவுதானா?”என்று கேட்டவளுக்கு தன்னை மீறி குரல் ஒருமாதிரியாகி அப்படியே கண்கள் கலங்கிவிட்டது.
அதைப்பார்த்தவன் “நதி நான் நான் அப்படி நினைக்கலை நதி. எங்க நீ காயப்பட்டுருவியோ, நீ அழுதிருவியோ உன் வாழ்க்கை என்னவாகுமோனனு பயப்படுறேன். ஒரு நண்பனா நான் இதையெல்லாம் யோசிக்கமாட்டேனா. அதுதான் உன்னை எச்சிரிக்கிறனே தவிற அப்படியாகிடும்னு சொல்லலை. முளைச்சு வரும்போதே வேரோட பிடுங்கி எறிஞ்சுட்ட நமக்கு வலி மிச்சம்னு நினைச்சு சொல்லுறேன். நீ என்னடான்னா ஆலமரமா வறர்ந்தபிறகு பார்த்துக்கலாம்னு நினைசுசு பேசுற. நீ காயப்பட்டால் நான் காயப்பட்ட மாதிரிதானே நதி. ஏன் இப்படி யோசிக்கமாட்டேங்கிற”என்று அவளுக்கு புரியவைக்க முயறன்றான்.
“இதோட நிறுத்திடலாம் விஜய். இதைப்பத்தி பேசவேண்டாம். என் பிரண்ட்ஸுக்கு நான் காதலிக்கிறதை சொல்லணும். அதுதான் நியாயம்னு சொல்லிட்டேன். அதுக்காக அரவிந்தைத் தப்பா சொல்லாத. உனக்கும் அவனுக்கும் பிடிக்காதுன்னா நான் அவனைக் காதலிக்ககூடாதுன்னு இல்லை. தயவு செய்து புரிஞ்சிக்க”
“ம்ம்ம் ஓகே நதியா மேடம். நீங்க இப்போ அரவிந்தோட லவ்வரா பேசுறீங்கன்னு எனக்கு எல்லாமே புரிஞ்சது. நான் என் பிரண்ட் நதியாகிட்ட பேசுறேன்னு தப்பா நினைச்சிட்டேன். இனி உங்கக்கிட்ட பேசுறதுக்குக்கூட நான் வரமாட்டேன். நீங்க பேசினது எல்லாம் எனக்கு நல்ல்வே புரிஞ்சுது மேடம். குட்பை மேடம்”என்றவன் வேறெதுவும் பேசாது வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.
அதைப்பார்த்தவள் வண்டியில் இருந்து சாவியை பிடுங்கி எடுத்தாள் “எதுக்கு மேடம்னு கூப்பிட்டுப் பேசின?ஏன் குட்பை சொன்ன? இரண்டுக்கும் பதில் சொல்லிட்டுப்போ”என்று பிடிவாதமாக நின்றாள்.
“அதுதான் மேடமெல்லாம் பேசி முடிச்சிட்டீங்களே. இனி எப்படியும் எங்கக்கூட பேசவரமாட்ட, எங்கக்கூட பழகமாட்ட, அப்படியே இத்தனை வருஷ நட்பு காணமல் போயிடும் அதுக்காகத்தான் குட்பை சொன்னேன். அப்புறம் மேடம்னு சொன்னதுக்கு காரணம் இப்போ அரவிந்த் சாரோட லவ்வர், வாழ்க்கைத்துணை ஆகப்போறவங்க. உங்களை மரியாதையாகத்தானே பேசணும் அதுதான் மேடம்னு கூப்பிட்டேன்”
அவனது மண்டையில் வேகமாக நறுக்கென்று கொட்டியவள் “ரொம்ப பேசின நதியா உன் வாயையும் சேர்த்து உடைப்பா. இதுக்குமேல ஏதாவது பேசின உன்னைக் கொன்றுவேன். இவனுங்களை மறந்து,பிரண்ட்ஸிப்பை மறந்து நான் போயிடுவனாம் மூஞ்சைப்பாரு. அப்படியெல்லாம் நானும் போகமாட்டேன் என் அரவிந்தும் அப்படி சொல்லாமாட்டன். அவன் எனக்காக பார்க்கிறவன். என்னை அழவைக்கமாட்டான்”
அவள் அப்படி சொன்னதும் அமைதியானவன் தனது வண்டியில் உட்கார்ந்து அவள் சாவியை தரட்டும்னு வெயிட் பண்ணிட்டிருந்தான்.
அவளோ “ஏன்டா இப்படி இருக்க? உனக்கு என்னதான் பிரச்சனை? நான் அரவிந்தை லவ் பண்றதுல உனக்கென்னடா பிரச்சனை. எதுன்னாலும் நான்தானடா சமாளிக்கப்போறேன்”என்றுவிட்டு சாவியை அவன் மேல தூக்கி எறிஞ்சிவிட்டு தனது வண்டியை எடுத்தாள்.
அவனும் வண்டியை எடுத்தவன் “நதி மெதுவா போ. டென்சனாகாத. வண்டியை ஓட்ட முடியலைன்னா என்கூடவா”என்று சொன்னான்.
“நான் டென்சனானா உனக்கென்னடா?அப்படியே எங்கேயாவது போய் முட்டிட்டு செத்தா நீ கவலைப்படாத. நீ போ. என்னைப் பத்தி கவலைப்படாத. பிரண்டுன்னு சொல்லிட்டு நம்மளை புரிஞ்சிக்காதவன் எவனும் எனக்குத் தேவையில்லை”என்று புல்லட்டை எடுத்தாள் அவளுக்கே கை தடுமாறியது.
அதைப்பார்த்தவன் அவளது சாவியைப் புடுங்கி அவளை இழுத்து பின்னாடி தள்ளி உட்காரவைச்சிட்டு அவளது என்பீல்டை அவன் ஓட்டிக்கொண்டுப்போனான்.
அவளோ இன்னும் அழுதுகொண்டுதான் இருந்தாள். அதை விஜய் கண்ணாடியில் பார்த்துக்கொண்டேதான் வந்தான்.
அவளையும் அவளது வண்டியையும் வீட்டில் கொண்டுவிட்டுட்டு அவன் போவதை ரமேஷ் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. அவனுக்குமே அவரு இப்போ அவன்மேல செமக்கோபத்துல இருப்பது தெரியும் என்பதால் உடனே அங்கிருந்து வந்துவிட்டான்.
அவன் நடந்துப்போவதைப் பார்த்தவள் “விஜய் வண்டியை நீ எடுத்துட்டு வீட்டுக்குப்போ. நாளைக்கு காலேஜிக்கு எப்படி வருவ?”என்று சண்டையை மறந்துக்கேட்டாள்.
“என்னைக்கூட்டிட்டு வர எனக்காக என் உண்மையான பிரண்ட்ஸ் இருக்காங்க. நீ ஒன்னும் கவலைப்படாத” என்றுவிட்டு போய்விட்டான்.
அதைக்கேட்ட நதியாவுக்கோ வலிக்கத்தான் செய்தது. இவன் மண்டையை உடைச்சிடலாமா என்றளவுக்கு கோபமும் வந்தது. அந்தக் கோபத்தோடு உள்ளே போனவள் அப்பாவைப் பார்த்ததும் என்ன சொல்லவென்று பயந்து அமைதியாக போனாள்.
ரமேஷ் எதுவுமே சொல்லாமல் அவளை அமைதியாகவே பார்த்திருந்தார். அந்த அமைதியே அவரது கோபத்தின் அளவைச் சொன்னது.
இதுக்குமேல யாருக்கூடவும் பேசுற தெம்பில்லாமல் அப்படியே தளர்ந்து தனது ரூமுக்கு போனவளை ரமேஷ் நெற்றியில் சுருக்கத்தோடும் யோசனையோடும் பார்த்தார்.
அந்த பார்வையின் அர்த்தம் என்னவென்று அவளுக்கு புரியாது. ஆனால் அது உள்ளுக்குள் தனது மகளின் எதிர்காலத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு தந்தையின் ஆற்றாமை என்பது அவளுக்கு எப்போ தெரியுமோ?