மூப்பு அடையா யட்சகா 33

Yecha33

மூப்பு அடையா யட்சகா 33

33 மூப்பு அடையா யட்சகா!!

பணத்தை தூக்கிவிட்டு போகும் அளவா அவள் பணப்பேய் நம்பவே முடியவில்லை !! சற்று ஏமாற்றம் தான் மறுபடியும் அவளை தேடி போக மனம் இல்லை தேடி வந்தா நாலு கடி அடி போட்டு , மறுபடியும் ஏற்காட்டுக்கு அவளை பார்சல் பண்ணி வாழலாம் என்று பேராசை வருவாள் வருவாள் என்று ரெண்டு வருடம் காத்திருக்க ... தன் மகனோடு வந்து நின்ற அவளை கண்டு ரத்தம் கொதித்து போனது ... கொஞ்சம் கோவம் அதிக காதல் ரெண்டும் சேர்த்து அவளோடு போட்ட சண்டையில் சட்டைக்கு பதில் அவன் ஆசைகள் அல்லவோ கிழிந்தது... 

சண்டாளி சாகடிக்கிறா இவ எதுக்கு தான் பணம் பணம்னு சாவுறா? தேனிசை போனை எடுத்து உருட்டினான் மதர் என்ற நம்பர் அடிக்கடி வந்து போய் இருக்க தேடி போனான் ... அங்கே கண்ட குழந்தைகளை பார்த்த பிறகு அவள் மறைத்து வைக்கும் மாணிக்கம் இல்லை அவளுக்கு நான் கொடுக்க வேண்டியது மரியாதையும் கனமும் மனைவி என்ற அந்தஸ்தும்தான்.... என் மரியாதையை காக்க நினைத்து அவளை காயப்படுத்துகிறேன் புரிந்தது நேரே போய் தாலியை வாங்கினான்..

மகனை தான் சமாளிக்க வேண்டும் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவோடு வந்தான் ...  

எப்படிடி நீ கண்டுபிடிச்ச" அவன் முடிக்கு வெள்ளை பூசி கொண்டு இருந்த தேனிசையை அண்ணாந்து யட்சன் பார்க்க 

"முடிக்கு தாடிக்கு கலர் போட தெரிஞ்ச கிழவனுக்கு மததத்துக்கு அடிக்க தெரியலையே" என்று தேனிசை சிரிக்க 

ஷட் என்று நாக்கை கடித்தான் ...

"நான் குமரன்தான்டி..

"என்ன குமரன் எப்படி பார்த்தாலும் வயசு இடிக்குது கிழவா .... நான் சஸ்ட் டுவென்டி போர்... நீரு நாற்பது நெருங்க போறீரு ...கிழவன் கிழவன் தான் குமரன் எல்லாம் ஆக முடியாது , இங்கிட்டு திரும்பும் என்று மீசைக்கு வெள்ளையை அடிக்க... 

அவனுக்கு அண்ணனா, இருக்கிறதை விட அப்பாவை இருக்கிறது தான் ஜீவா விரும்புறான் .... எதையும் மாத்த வேண்டாம் அப்படியே இருக்கட்டும் ... 

எனக்கும் இந்த நரைதான் கிழவா பிடிச்சு இருக்கு , அதை பாத்தா தான் மூட் வரும் டை அடிச்சு விடுறது என் வேலை என்று கிசுகிசுப்பாக அவள் சொல்ல...  

கிழவனுக்கு வாழ்க்கை கொடுத்தேன்னு ஒரு கெத்து இருக்கும் என்று கண்ணை சிமிட்டியவள் கூந்தலை பிடித்து இழுத்தவன் 

"ஒழுங்கா சொல்லு எப்படி கண்டுபிடிச்ச 

"நீங்க மட்டும் தான் என் போனை உருட்டுவீங்களா நான் உங்க சூட்கேஸ் பொருள் எல்லாம் உருட்ட மாட்டேனா? ஜேம்ஸ்பாண்ட் வேலை எல்லாம் பார்த்து கண்டுபிடிச்சேன்.... 

"ஏன்டி கிழவன் கூட வாழும் போது சங்கடமா இல்லை 

"நான் உங்க கண்ணை தான் முதல்ல ரசிச்சேன், நீங்க பேச நேரம் கொடுக்கும் போதே இருந்த நெருடல் போன இடம் தெரில என்னவோ நரைக்கு பின்ன ஒரு இளைஞனை மட்டும் தான் மனக்கண் பார்த்துகிட்டே இருந்தது 

பேச்சு வேற ரகமாக இருக்கு, நரை இடிக்குதேன்னு அப்பவே கிளிக் ஆச்சு,.. 

அப்பறம் முதல் முறை வாழ ஆரம்பிக்கும் போதே தெரிஞ்சிட்டு இது காஞ்சமாடு ஆழம் தெரியாம காலை விடுதுன்னு...

ம்ம் 

"பின்ன ரெண்டு அட்டெம்ட் பண்ணிதான் கிழவா இடமே கண்டுபிடிச்ச "என்று கொள்ளென தேனிசை சிரித்தாள் 

"இந்த கிழவன் ஆட்டத்துக்கு புதுசுன்னு அப்பவே கண்டுபிடிச்சிட்டேன் அதுவே அவ்வளவு திருப்தி தெரியுமா ... என்று அவன் நெஞ்சில் சாய்த்தாள்.. அவன் கண்ணில் அவள் விழுந்த கதை சொல்ல ஆச்சர்யம்!! 

ஏதோ இருக்குன்னு தெரியும் ஆனா இவ்வளவு இருந்துச்சுன்னு தெரியாது, ஒரு தாலி கட்ட அவ்வளவு வலி அதான் சுத்தல்ல விட்டேன்...  

ப்ச் அப்படி இல்லைடி , முதுமை அப்படிங்கிறது வாழ்க்கை முடிய போகுதுன்னு அர்த்தம் இல்லை.. முழுமையான பண்பு ஒழுக்கத்தை நம்மளோட பின்னாடி சந்ததிக்கு கொடுக்கக்கூடிய மிகப்பெரிய பொறுப்பு உள்ள பருவம் !! அது உள்ளுக்குள்ள இருந்தது ஆசைகள் இருந்த ஆணா இருந்தாலும் இந்த உலகத்துக்கு தெரிஞ்சது என்னோட மூப்பு... தப்பான எடுத்துக்காட்டாக ஆகிட கூடாதென்கிற பயம் அதிகம் ஆனா? சற்று வருத்தம் குரலில் வந்தது ..

"நம்ம விளையாட்டு வெளிய தெரியும் முன்ன தாலி கட்டி மரியாதையை கொடுத்திட நினைச்சேன் 

"கடவுள் வழக்கம் போல என் வாழ்க்கையில விளையாடிட்டான் கிழவா... 

"ம்ம் இப்ப எனக்கு வருத்தமே நம்மள போல இருக்கிறது தப்பு இல்லையோன்னு தோண வச்சிடுவோம்ங்கிறதுதான்... 

"உங்களுக்கும் எனக்கும் இடையில இருந்தது வயசு இல்ல... காதல் புனிதம் தப்பானதை தேடி தேடி கத்துக்குற சந்ததிக்கு தப்பு மட்டும் தான் கண்ணுக்கு தெரியும் .... நமக்கு இடையில் இருந்த காதல் இருக்கிற காதல் தெரிய போறது இல்ல.. கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடி ஜமீன்தாரும் அரசர்களும், பெரிய பெரிய பணக்காரங்களும் சின்ன வீடு இரண்டாவது பொண்டாட்டி மூன்றாவது பொண்டாட்டின்னு ஜெகஜோதியா வாழ்ந்ததை எல்லாம் பார்த்த சமுதாயம் தான் இது!! அதையெல்லாம் பார்த்த சமுதாயம் அதை எல்லாம் கடைபிடிச்சதா என்ன ??  

ம்ஹூம் ஒத்த பொண்டாட்டிக்கு சோறு போடுறதே பெரிய வேலைன்னு ஒழுங்கா இருந்தாங்க.. 

தப்பு பண்றவன், அப்பவும் உண்டு இப்பவும் உண்டு எப்பவும் உண்டு, யோக்கியணும் அப்பவும் உண்டு எப்பவும் உண்டு .. நிலாவை பார்த்து ரசிக்கிற கூட்டமும் இருக்கு .. அதுல ஏன் களங்கம் இருக்குன்னு தேடுற கூட்டமும் இருக்கு ., தப்பு செய்றவங்க மட்டும் தான் காரணம் தேடுவாங்க... சரியா வாழனும்னு நினைக்கிறவன் நாமளே ஒரு சரித்திரமா மாறனும்னு நெனச்சு தன்னை சரியா செதுக்குவான்....  

உண்மைதான் நம்மள சுத்தி நடக்குற அருவருப்புகளை பார்க்கும் போது, அதுல நம்மோட அழகான வாழ்க்கை காணாம போயிட கூடாதுன்னே பயம்தான் .... காமம் இல்லை , காதல் தான் உன்னையும் என்னையும் சேர்த்ததுன்னு நமக்கு தானே தெரியும் .... 

அப்போ பேசாம போய் வீடு வீடா கதை சொல்லிட்டு வருவோமா கிழவா? நம்ம போட்டோ வந்ததும் நல்லதுதான்... அதை பார்க்கிற நாலு பேர் இதே மாதிரி கேவலப்பட வேண்டி இருக்கும்னு அடக்கமா இருப்பான் தப்பு செய்ய துணியுறவனுக்கு பயம் வரும் ..தப்பை செஞ்சுட்டு இருக்கிறவன் பதறுவான்... அதுவும் மாற்றம் தான் கிழவா. , 

இத்தனை செஞ்ச அந்த பொம்பளையை என் அரைகுறையா விட்டுட்டு வந்தீங்க, கொன்னுருக்கலாம்ல ...

அவ கழுத்துல வெட்டத்தான் ஓங்குனேன், காலை பிடித்துச்கிட்டு என் வயித்துல புள்ள இருக்குன்னு சொன்னா, அந்த வார்த்தை என்னவோ உசுர எடுக்க விடல, குறை உயிரா போட்டுட்டு வந்துட்டேன்.... அங்கும் அவன் மனிதாபிமானமே வென்று நின்றது ... 

ஓஓஓ 

இந்த கிழவனை கல்யாணம் கட்டிகிறியாடி என்று அவளை அணைக்க 

"ம்க்கும் இனி கல்யாணம் கட்டினா என்ன கட்லைன்னா என்ன என்று அவளும் அவன் மடி மீது ஏறி யட்சன் உதடு மீது உதடு வைக்க .. இருவரும் ஒன்று போல அதே மந்திர வார்த்தை சத்தம் இல்லாது சொல்ல... இருவர் கண்ணிலும் ஆயிரம் காதல் அருவியாக ஓடியது...

ம்க்கும் என்ற ஜீவா குரலில் தேனிசை நகர்ந்து அமர ...  

டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த யட்சன் காரை அவனே ஓட்ட 

"நான் ஓட்டுறேன்பா 

ப்ச் அதெல்லாம் உன் அப்பன் மார்கண்டேயன்டா... என்றவன் கார் நேரே போய் சிறுவர்கள் காப்பகத்தில் நின்றது.. இசை கண்களை விரித்தாள் அங்கே திருமண வீடு போல அலங்காரம் கண்டு ... 

பிள்ளைகள் அம்மா அப்பா என்று ஓடி வந்து இருவர் கால்களையும் கட்டி கொள்ள.. சங்கடம் இல்லாது யட்சன் இருவரை தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தான் ... வேஷம் போடும் யாரும் இல்லை உள்ளத்தால் தூய குணம் கொண்ட அத்தனை பேர் முன்னே அவளை விட்டவன்... தன் மகனை எட்டிப்பார்க்க.... ஜீவா, முகத்தை சுளித்தவன்...

அவளை 

டேய் இஇஇ  

அவங்களை அம்மான்னு எல்லாம் கூப்பிட மாட்டேன் வேணும்னா அண்ணின்னு சொல்றேன்,உங்களை அப்பான்னு தான் சொல்வேன் 

இது என்னடா முறை , அதுக்கு நீ இசைன்னே கூப்பிட்டு தொலை 

அப்போ உன் இஷ்டம் ... 

அவன் மண்டையை ஆட்டுனதே பெருசு கிழவா, தாலியை கட்டிருங்க என்றவள் கண்ணை முதல் நாள் ஆசையாக கண் வெட்டாது பார்த்தது போல இன்றும் பார்த்தான்... அவளும் முதல் தடவை அவனை படபடவென அடித்த இமையோடு பார்க்க அந்த கண்கள் நான்கும் கலங்க, தாலி அவள் கழுத்தில் நச்சென விழுந்தது ... 

தாலியில் இல்லை அவர்கள் காதல் ஆனால் அந்த தாலியில் தான் அவர்கள் காதல் முழுமை ஆனது .... 

மூப்பே அடையாத யட்சகனின் முதலும் முடிவும் அவளே ஆனாள் ...