மூப்பு அடையா யட்சகா 27,28

Yecha28

மூப்பு அடையா யட்சகா 27,28

27 மூப்பு அடையா யட்சகா !! 

ஜீவா , மருந்து வாங்க மாத்திரை வாங்க என்று ஓடிக் கொண்டிருக்க சேரில் அந்தக் கண்ணாடி கதவின் வழியே தெரியும் அவன் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டு சுவாசித்துக் கொண்டிருந்தாள் யட்சனின் யட்சனி,  

இசை என்ற குறலில் திரும்பி பார்க்க..  மதர் வந்து கொண்டிருந்தார் அவர்களோடு கூடவே அவளின் தாயும் தகப்பனும்... 

எப்படி இருக்கார்?  என்று கேட்ட தகப்பன் தாயை பார்த்து 

"வந்துடுவார்... என்கிட்ட மறுபடியும் வந்திடுவார்" என்றாள்... அமைதியாக சில நொடிகள் கழிந்தது..  மதர் அவள் தாய் தகப்பனிடம் உண்மையை சொல்லி அழைத்து வந்திருக்கிறார் என்று புரிந்தது 

"எங்ககிட்ட இதுக்கெல்லாம் சொல்லி இருக்கலாமே மதர்...

"சொன்னேன் சார் அம்மா அப்பாகிட்ட சொன்னா உன்ன புரிஞ்சிப்பாங்கன்னு ஆனா அவதான் 

"எங்க அப்பா அம்மா சாதாரண ஒரு தாய் தகப்பன்,  தன்னுடைய மகள் ,  குழந்தை குட்டின்னு  அமைதியான வாழ்க்கை  வாழனும்னு ஆசைப்படுற சாதாரண பெற்றோர்கள்,  அவங்க கிட்ட நான் இவ்வளவு பெரிய பொறுப்பை என்  தலையில சுமந்துகிட்டு இருக்கேன்னு சொன்னா,  கண்டிப்பா முதல்ல இதுக்கு முட்டுக்கட்டையா இருக்கிறது அவங்களாதான் இருக்கும் மதர் ... சோ அவங்களுக்கு கூட தெரிய வேண்டாம்,  அதைவிட நீங்க அடிக்கடி ஒன்னு சொல்லுவீங்களே மதர்,  வலது கை கொடுக்கிறது , இடது கைக்கு கூட தெரிய கூடாதுன்னு , அதுதான் தானம்னு சொல்லுவீங்கல்ல ... நான் செய்றதுக்கு விளம்பரம் தேவையில்லை உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்சா போதும் என்று முடித்து விட்டாள் .....  

"சாரிப்பா" என்று வருந்தி கேட்டாள்... தகப்பன் இன்னும் அமைதியாக இருந்தவர்...

"இத்தனை பேருக்கு உன்னால வாழ்க்கை கிடைக்குது உன்னால மூணு வேளை சாப்பிட்டுட்டு இருக்காங்க,  உன்னால வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு நினைக்கும் போது ... ஒரு தகப்பனா சந்தோஷப்படுறேன்தான்...  ஆனா அதுக்காக நீ செஞ்சது சரின்னு ஆகிடுமா   இசை??  என்ற தகப்பனின் கேள்வியில் தலையை குனிந்து கொண்டாள்...

"நல்லது செய்றதுக்காக எல்லாரும் கெட்ட வழியில  போக ஆரம்பிச்சா , இங்க கெட்டவங்கதான் ஜாஸ்தியா இருப்பாங்க ...  ஏன்னா எல்லோருக்கும் ஒரு தேவை உண்டு ... எல்லாருக்கும் கிடைக்காத ஏதோ ஒன்னு உண்டு , எல்லாரும் அதுக்காக பாதை மாறி போனா சரியா ... நீ செஞ்சது தானமாகவே இருக்கட்டும்,  நீ செஞ்சது தர்மமாகவே இருக்கட்டும்,  அதுக்காக களங்கப்பட்டு , கறைப்பட்டு தப்பான வழி போய் செஞ்சா , உன் மேல இருக்கிற தப்பு,  சரியா போயிடுமா இசை,..  நெத்தி பொட்டில் அறைந்தது போல தகப்பனின் கேள்விகள் சாடியது... 

"இன்னைக்கு பணத்துக்காக இந்த தப்பை செஞ்ச , இவர் ஒருவேளை இல்லாம போனாளோ இல்லை உன் மேல உள்ள மயக்கம் தீர்ந்து தள்ளி போயிருந்தாவோ,  அதே பணத்துக்காக நாளைக்கு வேற ஒருத்தர் தேடி போவியா இசை 

"அப்பாஆஆஆஆ  செருப்பால் அடிக்கும் கேள்விகள் தான் ...

"சொல்லு உனக்கு மாலை மரியாதை போட்டு கொண்டாடலாம் ... ஆனா யார் செஞ்சாலும் குற்றம் குற்றமே இசை ... 

"நீஙக வாழ்ந்த வாழ்க்கையில காதல் இருந்ததாகவே வச்சிப்போம் , அந்த காதலிக்கு நிறம் இல்ல வயசு வித்தியாசம் இல்லை ஏற்றத்தாழ்வு இல்ல ஒருத்தரை ஒருத்தர் அப்படியே ஏத்துக்கிட்டிங்க கிரேட் ... அது தான் காதலும் கூட,  உங்களைப் பொறுத்த வரைக்கும் அந்த காதல் சரிதான்...  பணத்துக்காக தேடிப்போன இடத்துல காதலை வாங்கிட்டேன்னு சொல்ற ,காமத்துக்காக தேடி வந்த உன்கிட்ட காதலை வாங்கிட்டேன்னு அவர் சொல்லலாம்.... ஆனாலும் ரெண்டு பேர் போன பாதையும் தவறு .... அந்த இடத்துல அவரு இல்ல வேற யார் இருந்திருந்தாலும் காதல்னு மாயவலை போட்டுக்கிட்டு நீ சுத்திகிட்டு தான் இருந்திருப்ப,  என்னால இதை காதலா ஏத்துக்க முடியலை...  வயசுல உன்ன விட கூடின, அனுபவத்துல வாழ்க்கையில வயசுல உன்னை விட ஒரு மடங்கு கூடின அவர்மேல எப்படி காதல் வரும்...  ஏற்கனவே ஒரு வாழ்க்கையை பார்த்தவர் தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளை வச்சிருக்கிறவர் , உன்னை விட ஆயிரம் மடங்கு ஸ்டேட்டஸ் கூடினவர் . அவருக்கு எப்படி உன் மேல காதல் வந்தது  ...  உன் தேவைக்கு அவர் கிடைச்சார் ஓட்டுச்செடி போல ஓட்டிட்ட.... அவர்,தேவைக்கு நீ கிடைச்ச அவர் உன்ன பிடிச்சுக்கிட்டார்...அவ்வளவு தான்.... 

அப்பா நான் தப்பு செஞ்சது உண்மைதான் ஒத்துக்கிறேன் பணத்துக்காக தேடி அலைஞ்சது உண்மைதான் இந்த தப்பை செய்ய துணிஞ்சதும் உண்மைதான் .. ஆனா  மனசாட்சின்னு ஒன்னு இருக்குமே..  அது என் முகத்துல காரி துப்பிச்சு...  என்ன காரியம் செய்ய துணிஞ்சிருக்கேன்னு என் பைலை கொடுத்து அனுப்புன பிறகு  அருவருப்பு தாங்க முடியல ,  தூக்கம் வரல...  தப்பு செஞ்சு பழகாத உடம்பு , கூசிச்சுப்பா.... 

பின்ன எதுக்கு போன ?

உடனே வேண்டாம்னு சொல்லிட்டேன்,  என்னால இந்த அருவருப்பான காரியத்தை பண்ணி பணம் சம்பாதிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன் .... எல்லாம் அவர் கண்ணை பாக்குற  வரைக்கும் தான் என்று தேனிசை தலையை குனிந்து கொண்டே.... 

"ஒவ்வொருத்தருக்கும் தன்னோட வாழ்க்கை துணை எப்படி இருக்கணும்னு ஆசை இருக்கும்....  எனக்கு ஒரு கனவு இருந்துச்சு எனக்கு வர்ற ஒருத்தன் என்ன போலவே மத்தவங்க வலியில துடிக்கிற ஒருத்தனா,  இருக்கணும்னு தோணுச்சு...  யாரன்னே தெரியாத குழந்தைகளுக்காக எனக்கு பரிதவிக்கிற மாதிரி,  அவங்க கண்ணீருக்கு விலை உண்டுன்னு புரிஞ்சுக்கிற ஒருத்தன் எனக்காக வரணுன்னு ஆசைப்பட்டேன்....  காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்கும்போதே இந்த பிள்ளைகளை பார்த்தா என்னோட சொந்த குழந்தைக மாதிரி இருக்குதுன்னு அடிக்கடி சொல்லுவேன்.. இந்த ஹோம்லதான் என்னோட மொத்த நாளும் கழியும், அந்த நடு  ராத்திரி ஒட்டுமொத்த  இடமும் எரிஞ்சது .... விவரம் தெரியாத அஞ்சறிவு குழந்தைக, அந்த பிள்ளைகளை காப்பாற்ற முடியாம தவிக்கும் போது...  ஒருத்தன் வந்து நின்றான் 

அந்த ரெட்டை விழிகள் ...   கழுத்துல கிடந்த அந்த கழுகு சங்கிலி  கையில உரசுன  அந்த கழுகு கைசெயின் ...   புகை மண்டலமா  பிள்ளைகளை அத்தனையையும்  அணைத்து பிடித்துக் கொண்டு நெருப்பு எரியாத இடம் தேடி எல்லோரும் குனிந்து அமர்ந்து  பயத்தில் துடித்துக் கொண்டிருந்த வேளை ... பையர்  சர்வீஸ் தண்ணீரை பீய்ச்சு அடித்தது ...அதிக நெருப்பும் புகை உள்ளே யாரையும் வரவிடவில்லை ஆனால் ஒருத்தன்  நின்றான்...  முகத்தில் கண்கள் மட்டும் தெரிய மாஸ்கை போட்டு இருந்தவன்.  கண்கள் அங்கும் இங்கும் அலைந்து யாராவது இருக்கிறார்களா என்று தேடி அலைந்தது  அந்த ரெட்டை  விழிகள் 

"சார் நெருப்பு பத்தி எரியுது,  உங்களுக்கு ஏதாவது ஆகிட போகுது வாங்க சார்..  நாங்க பார்த்துக்கிறோம் என்று தீயணைப்பு ஊழியர்கள் அவனை வெளியே வரும்படி எச்சரிக்க...

"யோவ்  பச்ச குழந்தைங்க ,  நீங்க வர்றதுக்குள்ள கருகி செத்துடும்யா.... எப்பவோ போகப் போற உயிர்  ரெண்டு பேரை காப்பாத்திட்டு போகட்டும் யாராவது இருக்கீங்களா ? என்று அலைந்து திரிந்து ஒரு மூலையில் குழந்தைகளை கட்டிக்கொண்டு புகை மண்டலத்தில் இருந்த அவள் சேலையில் தன் மூக்கு வரை மூடி புகையை சுவாசிக்காமல் அத்தனை பேரையும் அப்படியே அமர வைத்திருக்க,  அவர்கள் அருகில் ஓடி வந்த அவன்  பிள்ளைகளை ஒவ்வொன்றாக தூக்கிக் கொண்டு போய் வெளியே பத்திரமாக சேர்த்தான்...  இறுதியாக கரி பூசிய  முகத்தோடு மயங்கி கிடந்த அவளையும் கையில் தூக்கிக் கொண்டு ஓடும் பொழுது அவன் கை செயின் உண்டாக்கிய ஒலி  அவளுக்குள் அடித்த முதல் காதல் மணி!! 

எங்கள காப்பாத்த வந்த ரட்சகன் அவன்  !!! 

எல்லா இடமும் தீயிக்கு இரையாகி கருகிட்டு இடம் வேணும்னு கவர்மெண்ட்கிட்ட போய் இந்த குழந்தைகளுக்காக ஒவ்வொரு அதிகாரியா பார்த்தேன்..

விதியை மீறி நடத்தினது குத்தம்னு எங்களை குறை சொன்னாங்க...   ஒரு சின்ன இடம் ஒதுக்கி கொடுங்க புண்ணியமா போகும்னு காலை பிடிக்காத குறையா கெஞ்சினேன்... கோடிகள்ல லஞ்சம் கேட்டாங்க.. ஒரு அதிகாரி மனசு இறங்கினான்,  

"ராத்திரி நான் சொல்ற நட்சத்திர ஹோட்டலுக்கு வந்துரும்மா,  எல்லாம் முடிச்சிடலாம்னு அவன் சொல்ல முடிச்சிடலாம் வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் தெரியல...  நம்பி போன  என் சேலையை உருவிட்டு படுக்கையில் வெறி பிடிச்சு என்ன திங்க நெனச்சான் என்ன காப்பாத்திக்க  கத்தினேன் கதறினேன்.... வாயில துணியை வச்சி கட்டி என் சத்தத்தை நிறுத்தினான்... 

மறுபடியும் அதே கண்கள் கண்டேன்...  கதவை உடைச்சுகிட்டு வந்து நின்னுச்சு அந்த கோபவிழிகள்!!  நான் சுவரோட  முதுக காட்டி தலை குனிஞ்சு உட்கார்ந்திருக்கும் பொழுது என் முகத்தில் வந்து விழுந்துச்சு அவரோட சட்டை...  அன்னைக்கு என் மானம் காத்தது அந்த ரட்சகனோட வெள்ளை  சட்டை!! அது  இன்னிக்கு வரைக்கும் பொக்கிஷமா என்கிட்ட இருக்கு...   அது காதலான்னு எனக்கு தெரியாது....  ரெண்டு தடவை என்னை வந்து காப்பாத்துனவன் மேல எனக்கு காதல் வருமான்னு கூட தெரியாது...  ஆனா அந்த கண்களும் அந்த சம்பவங்களும் என் நினைவை விட்டு போனதே இல்லை... மறக்கவும் விரும்பல.. 

வேறு வழியே இல்லாமல்  பாவம் செய்ய துணிஞ்ச போதெல்லாம் அந்தக் கண்கள் என்ன பாதை மாற விடல...  உனக்கு என்னடி நான் இருக்கேன் இங்கேயும் நான் வருவேன்,  உனக்கு துணையா நான் வருவேன்,  உன்னை காப்பாத்த நான் வருவேன்,  உன்ன சுமக்க நான் வருவேன்னு சொன்ன மாதிரியே இருந்தது....

அவன் யாரு என்னன்னு கூட தெரியாது,..   தப்பு செய்ய துணிஞ்ச என்ன அவர் கண்கள் மிரட்டிச்சு 

இதெல்லாம் சரி வராதுன்னு  முற்றுப்புள்ளி வச்சிட்டு காத்திருந்தேன்...  வந்தான்பா மறுபடியும் வந்து நின்னார் ஆனா நல்லவனா இல்லை,  கெட்டவனா?  என் உடம்ப  விலை பேசுற ஒருத்தனா?? 

ரட்சகன் இச்சை கொண்ட காமுகன் உருவத்தில் அன்றோ நின்றான் ,..

28 மூப்பு அடையாத யட்சகா !!

என் முன்னாடி அதே விழியோட நின்ற அவரை பார்த்து  என்னால அதிர்ச்சி தாங்க முடியல.... 

உலகத்திலேயே அதிகமா உடைஞ்சு போனது அன்னைக்கு தான்பா..  ஏன்னே தெரியாம கண்ணு கலங்கிச்சு ,  கடவுள் மாதிரி மனசுல உருவம் படுத்தின ஒருத்தன் சாத்தான போல ரத்தத்தை குடிக்க வந்து நின்னா எப்படி இருக்கும்??  அப்படி எனக்குள்ள ஒரு விரக்தி.... 

நாம சரின்னு சொல்லிட்டு முடியாதுன்னு சொன்னது தப்பு யார் வந்தாலும் அவங்க கிட்ட ஒரு மன்னிப்பை கேட்டுட்டு வந்துடனும்னு நெனச்சு தான் நான் போனது...  ஆனா ,  இவரை பார்த்துட்டு என்ன பேசணும்னு கூட புரியாம நின்னுட்டு இருந்தேன்...  ஏன் மறுபடியும் மறுபடியும் எனக்கு முன்னாடி வந்து நிற்கிறார்,  புரியல  கடவுள் இன்னொரு வாய்ப்பு கொடுத்தா பாத்துக்கலாம்னு வீராப்பா சொல்லிட்டு தலைமறைவாகி ஏற்காட்டுக்கு ஓடிட்டேன் ... ஏன்னா அந்த கடவுளுக்கு என் மேல ஏதோ விட்டுக்குறை தொட்ட குறை பிரச்சனை இருக்கும் போல இருக்கு..  மறுபடியும் இவரை நம்மகிட்ட கோர்த்து விடக்கூடாதுன்னு நினைச்சேன்....  ஏற்காட்டுக்கு போனா , அங்க வந்து நிக்கிறான்பா இந்த கிழவன்...  நடு ராத்திரி சுடுகாட்டில  யாரும்  இல்லாத தனிமையில,  கார்ல வந்து என் முன்னாடி நிக்கிறார்...  எப்படிப்பா தடுமாறாம  இருக்க,  எப்படிப்பா தடம் மாறாம இருக்க...

அவன்தான் எனக்கு ரட்சகனாவும் தெரிஞ்சார் ,அவன் தான் எனக்கு யட்சகனாகவும் தெரிஞ்சான்...

"படுக்கைக்கு விலை பேசினவர் கிட்ட என் சொந்த கதையை சொல்ல முடியல,  தோணல...  உதவி கேட்க விரும்பல ,  கொஞ்சம் தன்மானம் சுரண்டிச்சு, எனக்குள்ள இருந்தது காதலா என்ன எழவுன்னு தெரியாது .. உனக்கு நான்தான வேணும் போடா வச்சுக்கோ அப்படின்னு  கொடுத்துட்டேன். எல்லாத்தையும் கொடுத்துட்டேன் எல்லாத்தையும் இழந்துட்டேன்...  வெறும் பணத்துக்காக என்னை இழக்கல..  அவர் மேல இருந்த ஏதோ ஒன்னு விரும்பியே என்னை இழக்க வச்சது என்று கண்ணை மூடிக்கொண்டு அழுத தேனிசை தலையை தகப்பன் கைகள் வருடி கொடுத்தது...  தகப்பன் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டவள்

"ஒவ்வொரு நேரமும் காசு வாங்கும் போது உடம்பு கூசும்பா....  இவங்க பசி காசை வாங்க வச்சதே தவிர என் உடம்புக்கு விலை பேசலப்பா ...  அவர் என்கிட்ட காமத்தை மட்டும் வாங்கினாரா என்னன்னு எனக்கு தெரியாது...  ஆனா நான் அவர் கூட ஒவ்வொரு தடவை இருக்கும் பொழுதும் என்ன அவர் பொண்டாட்டியா  நெனச்சுதான் அவரோட வாழ்ந்தேன்ப்பா... எனக்கும் ஆசை,  நிழல் உலகம் விட்டு நிஜ வாழ்க்கை வர ...அவர் ஒரு தடவை ஏன்டி இந்த பணம்னு கேட்டிருக்கலாம்.  நான் சொல்லி இருப்பேன் ... கேட்கலப்பா நான் சொல்லலை.... 

"கிழவனுக்கு என் மேல அவ்வளவு காதல்பா  சும்மா சொல்ல கூடாது,  பார்த்து பார்த்து காதலிப்பார் , ரசிச்சு  ரசிச்சு வாழ வைப்பார்...  இந்த உலகத்திலேயே ராணி மாதிரி பீல் பண்ணுனேன்... பொண்டாட்டி மாதிரி இல்லை, பொண்டாட்டியா வாழ பேராசை .... தாலி கேட்டேன்,  குண்டக்க மண்டக்க கிழவன் பேசினான்,  கோவம் வந்துச்சு சரிதான் போடா தாலியோட வந்தாதான் இனி கிழவனுக்கு இரக்கம் பார்க்கணும்னு வந்துட்டேன்...  ஆனா சத்தியமா அவர் வச்சிருந்த  பணத்தை  எல்லாம் எடுத்துட்டு வரலப்பா... அவர் எனக்கு கொடுத்த காதலை மட்டும் தான் சுமந்திட்டு வந்தேன் ... பணத்தை திருடிட்டு வர்ற அளவு கல்நெஞ்சு இருந்திருந்தா .... கிழவன்  பிள்ளையை வயித்துல சுமந்து தாலியையும்,  பணத்தையும் என்னால பிளாக்மெயில் பண்ணி  வாங்க முடியாதாப்பா.... அவர் பிள்ளையை தூக்கி காலடியில போட்டு தாலி கட்டுன்னு சொல்ல முடியாதாப்பா,  கடைசி வரை அவர் வாயால அங்கீகாரம் கிடைக்காதான்னு ஏமாந்து தான் அப்பா நின்னேன்... என்று கதறியவள்....

"ரெண்டு வருசம் புள்ளைங்களை பார்த்து சிரிச்சாலும் அந்த கிழவன் டூ பேட் என்ன ரொம்ப அழ வச்சிட்டான் என்ன தேடி வரலையேன்னு,  அவர் மேல செம கோவம் ... அப்போ அவ்வளவு தானா என் மேல இரு‌ந்தது வெறும் ஆசையா?  தேடி வர மாட்டாரான்னு ஏங்கின எக்கம் எனக்கு தான் தெரியும் 

"இசையம்மா,    மூணு வேளை  வயிறார சோறு போடுவாங்க இப்ப கொஞ்சம் தான் தர்றாங்க நைட் பசிக்குது என்று கண்ணன் தவழந்து தவழந்து இசை மடியில் வந்து படுக்க 

"காசுக்காக எப்படியும் உங்களை தேடி வருவேன்னு சீப்பா நினைச்சு தான கிழவா , என்ன தேடி வரல ... வர மாட்டேன் ஊரு ஊரா பிச்சை எடுப்பேனே தவிர உன்ன தேடி வர மாட்டேன் ... என்று கண்ணீரை துடைக்க ... தோழி மீண்டும் பைல்களை கொண்டு வந்து நீட்டி 

ஒரு வயசான ஆளுக்கு ஐஞ்சு மாசம் மட்டும் வேணுமாம் போறியா என்றவள் செவியில் பூச்சி பறந்தது 

நான் அந்த கிழவன் பொண்டாட்டி... அவர் தொட்ட இந்த மனசும் உடம்பும் மண்ணுல போகுமே தவிர இன்னொருத்தன் தொட சம்மதிக்க மாட்டேன் என்று தீயாக முறைத்தாள் ...

"சாரிடி பணத்தேவை இருக்குன்னு சொன்னியே அதான் கேட்டுட்டேன் ஒரு பயலுக்கு போலி காதலி வேணுமாம் நடிச்சா காசு .... 

வேசியாக போவதற்கு நடிகையாய் போவது நலம் என்று தோன்ற அவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள்....  அவன் கெளரவம் பெரியது என்று அவளை மறைத்து வைத்தே வாழ நினைத்த அவன் மீது இப்போது கோவம் ரெண்டு மடங்கு ஆக...  அவன் ஒன்று செய்ய இவள் வேண்டுமென வேறு ஒன்றை செய்ய அங்கும் காதல்தீ தான் பற்றி எரிந்தது.... 

அந்த கிழவனை வெறுக்க தெரில

அந்த கிழவன் இல்லாம வாழவும் தெரில 

நான் என்னப்பா செய்யட்டும் என்றவள் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாது பார்த்து  கொண்டு இருக்க ...

சரி இசை அவரை பார்த்துக்க ராத்தி ஆகிடுச்சு மதரை நான் பஸ் ஏத்தி அனுப்பிடுறேன் என்று அவர்கள் வெளியே போக ஆள் அரவம் இல்லாத ஐசியூ வாசலில் அவள் ஒரு பக்கம் அவன் ஒரு பக்கம் அந்த இருட்டில் எதாவது நல்ல செய்தி வராதா என்று காத்திருந்தனர்..

யட்சன் அறையில் இருந்து  வெளியே வந்த டாக்டர் ... 

"யட்சன் சார் எப்போ வேணும்னாலும் சுயநினைவு வரலாம்..  யாராவது ஒருத்தர் உள்ள போய் கூட இருங்க" என்று கூற தேனிசை  வேகமாக அறை நோக்கி ஓட அவள் வயிற்றில் விழுந்த மிதியில் சுருண்டு சுவரில் போய் தலை முட்டி விழுந்தாள்  .... 

அங்கே கழுத்து அடைத்த நகையோடு வாயில் வெற்றிலையோடு  பட்டுசேலையில்  ஜங் ஜங் என்று நடந்து வந்தாள்  மருதம்பட்டி சிந்தாமணி!! 

ஜீவா பயத்தில் கண்ணை உருட்டி அங்கே நின்றவளை பார்க்க 

"எய்யா ,  அத்தை வந்துட்டேன்யா இனிமே என்  தம்பி பிள்ளைக்கு நான் இருக்கேன் , அய்யோ கடவுளே என் தம்பி உசுரு போச்சே என்று பொய்யாக பட்டு சேலையில்  மூக்கை சீந்தின சிந்தாமணி..

"என் தம்பி உசுருக்கு போராட இந்த பொடிசிறுக்கி பொட்டைநாய்தான் காரணம்  இவளை அடிச்சே சாகடிங்கடா என்று ரத்தம் சிதறும் கண்ணோடு ரத்தம் குடிக்கும்   ஓநாய் போல  பார்வை பார்த்த புதிய முகத்தை ரத்தம் வடிந்த நெற்றியோடு தேனிசை புரியாது பார்க்க ....

"எய்யா அத்தை இருக்கேன் இனி உனக்கு நான் இருக்கேன் சாமி வா என்று ஜீவாவை வலுக்கட்டாயமாக அப்பெண் இழுத்து கொண்டு வெளியே போனவள்,  கண்ணால் ஐசியுவில் கிடக்கும் யட்சனை ஜாடை செய்து 

"முடிச்சிடு என்றுவிட்டு போக 

"அய்யோ" என்று தேனிசை பதறி யட்சன் உள்ளே  நுழைய 

"தம்பிக்கு சத்தம் காதுக்கு போகாம இவ சத்தம் வெளியே வராம முடிச்சு விடுங்கடா... செய்தித்தாள்வ இவுக படத்தை போட்டு நம்ம வேலையை சுலபமாக்கின  அந்த பயலுக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுத்துடுங்க...  அப்படியே இவன் வீட்ல உள்ள நுழைஞ்சு என்னென்னல்லாம் எடுக்க முடியுமோ,  எல்லாத்தையும் எடுத்துடுறேன் அந்த பைத்தியக்கார பயலுக்கு நாலு கார வாங்கி கொடுத்து நம்ம கைக்குள்ள வச்சுக்கிட்டு இனி நம்ம ஆட்டம் தான் இங்க என்று  உள்ளே வந்த சிந்தாமணி கத்தியை அடியாள் கையில் தூக்கி போட்டுவிட்டு ... 

நான் அந்த லூசு பயலுக்கு பாசமா நாலு பிட்டை போட்டுட்டு வர்றேன்...  நீ என் பாச தம்பியையும்,  அவன் தொடுப்பையும் முடிச்சிடு ... காலையில இவன் ஓடி ஓடி சம்பாதிச்ச சொத்து அத்தனைக்கும் இந்த சிந்தாமணி தான் ராணியா இருக்கணும் புரியுதா என்று கர்ஜித்து விட்டு ஜீவாவை நோக்கி போனாள்..

யட்சன் நோக்கி ஒருவன் எட்டு மேல் எட்டு வைத்துப் போக...  தேனிசை ஓடி வந்து யட்சன்   மீது அணைத்து படுத்துக் கொண்டவள்...

"யாராவது அவர் மேல கை வச்சீங்க..  கடிச்சு துப்பிடுவேன்...  இவருக்காக அந்த காலன்கிட்டையே சண்டை போட்ட நான் உங்க பத்து பேர சமாளிக்க முடியாதுன்னு நினைக்காதீங்க என்று அருகே இருந்த கத்திரிக்கோலை வலுவாக பிடித்துக் கொண்டு அவனை ஒரு கையில் அணைத்து பிடித்துக் கொண்டு தீயாக முறைத்தான் தேனிசை...

டேய் ஆள் வர முன்ன ரெண்டு பேரையும் முடிக்கல சிந்தாமணி அக்கா நம்மள முடிச்சிடும்... நான் இவளை முடிக்கிறேன் நீ அவனை மூடி என்று ஆளுக்கு ஒருவராக ரெண்டு கத்தியோடு இருவரையும் நெருங்க ...

கிழவா  உன்னை காப்பாத்திடுவேன்.... நான் இருக்கேன் .. நான் உன்ன பார்த்துப்பேன் , அவனை கை நடுங்க அணைத்து கொண்டே இருக்க

, இருவர் அவளை அவனிடம் இருந்து பியத்து எடுக்க பார்க்க யட்சன் கழுத்தோடு கட்டி கொண்டவள் அவனை விட்டாள் இல்லை ... அவள் வாயை ஒருவர் இறுக்க மூடிக்கொள்ள ஒருவன் யட்சனை நோக்கி கத்தியால் குத்த போக இன்னொருவன் தேனிசை கழுத்தை அறுக்க கத்தியை ஓங்கி அவள் கழுத்தில் குத்த.... கண்களை இறுக மூடியவள்  கைகள் அவன் மீது குத்த வந்த கத்தியை இறுக்கி பிடித்து வைத்திருக்க...  அவள் மீது விழ வேண்டிய குத்து சரிந்து தலையணை மீது விழ ,  அவளை குத்த வந்தவன் மணிக்கட்டை யட்சன் கைகள் இறுக பிடித்து இருந்தது ... கண்களை மூடித்தான் யட்சன் படுக்கை மீது கிடந்தான் ... ஆனால் அவன் கையின் பிடியில் இருந்து கையை அசைக்க முடியவில்லை,  அவனை குத்த வந்தவன் கையை இவள் பிடித்து இருக்க கையை அசைக்கமுடியவில்லை....  

அவனை தாண்டி அவள் மீது கை வைக்க முடியவில்லை அவளை தாண்டி அவன் மீது கை வைக்க முடியதில்லை..  ஒன்றுக்கு சளைக்காது காதல் செய்தனர்... 

சார் சொன்னேன்ல் அவர் உயிர்க்கு ஆபத்துன்னு திபுதிபுவென்று போலீஸ் உள்ளே புக 

சார் குடிச்சிட்டு இருதாலும் தெளிவா இருப்பார் அக்ஸிடண்ட் ஆகுற அளவு ஓட்ட மாட்டார்னு சொன்னேன்ல யாரோ ப்ளான் பண்ணி தான் சாரை ஆக்ஸிடெண்ட் பண்ணினது பாருங்க "என்று சண்முகம் சரியான நேரத்தில் போலீஸோடு வந்து விட அத்தனை பேரையும் விரட்டி பிடித்தனர் ...  இது அறியும் நிலையில் எல்லாம் அந்த இருவரும் இல்லை அவன் கழுத்தில் முகத்தை புதைத்து இருந்த தேனிசை காதில் மெல்லிய முனகல் கேட்டு தலையை தூக்கி பார்க்க  யட்சன் நரை மீசை நடுவே சிரித்து கண்ணடித்தான்... 

ஹாஸ்பிட்டல் சீன் பாக்கி இருக்குடி , அவ்வளவு சீக்கிரமா எல்லாம் போக முடியாது சுகர்பேபி... மூணு அங்கிள் போட்டிருக்க , மூணு கடி தருவேன் வட்டியும் சேர்த்து என்று கிசுகிசுப்பாக சொன்னவன் சட்டென அவள் இதழ் மீது இதழ் வைத்து அவளை போல உரசியபடி மெளனமாக ஏதோ சொல்ல...

கிழவா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ தாவி  அணைத்து அவன் எலும்பை உடைத்தாள்.... 

அவன் கேட்க நினைத்த ஒன்றை அவள் சொல்லி இருந்தாள் 

அவள் கேட்க நினைத்த ஒன்றை அவன் சொல்லி இருந்தான்...அது இறுதி வரை அவர்கள் மட்டுமே தெரிந்து கொண்ட மந்திர வார்தைகள் !!