மூப்பு அடையா யட்சகா 2
Muppu2
2 மூப்பு அடையா யட்சகா!!
அந்த அறையில் நிசப்தம் நிரம்பி வழிந்தது யட்சனின் சேர் க்ரீச் கரீச் என்று அசையும் சத்தம் கேட்டு தேனிசை திடுக்கிட்டு தலையை உயர்த்தி பார்க்க.. தேனிசையை பார்த்து கொண்டே அவன் இன்னும் வேகமாக சேரை அசைக்க , சத்த வேகம் கூட தேனிசை தொண்டைக்குள் எச்சில் ஏறி இறங்கியது
ஏதோ நினைவுகள் மனதிலே என்று பாடல் அமைதியாக அவன் பாட , தகப்பன் முகத்தில் வந்து போன மகிழ்ச்சி ஜீவாவுக்கு பரவசம்...
"நல்லவேளை டேட் இவளை பிடிக்காம போயிடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் ...
"எப்படி பிடிக்காம போகும் ....ரொம்ப பிடிச்சு இருக்கு செலக்ஷன் சூப்பரோ சூப்பர்.... வாங்க வந்து ஆசீர்வாதம் வாங்கிக்குங்க...
தேங்க்ஸ் டேடி ....இசை வா டேடிக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிப்போம் என்றதும் அவள் நெளிந்து கொண்டே வந்து யட்சன் முன்னே நிற்க ....
"ம்ம் என் மகனுக்கு பொறுப்பு வந்தது போல இருக்கே குட் குட் ஆசீர்வாதம் கால்ல விழுந்து வாங்கணும்டா விழுங்க" காலை காட்டினான் குறும்புக்கார கிழவன்..
"ஓஓஓ சாரி டேடி இதுக்கு முன்ன வாங்கினது இல்லல்ல விழு இசை "என்றதும் ஜீவா குனிய ...அவள் திருதிருவென பார்க்க
"குனிடி குனிஞ்சு நில்லு, நல்லா ஆசீர்வாதம் பண்றேன்" என்று உதட்டை அசைத்தவன் வக்கிர ஆசை எல்லாம் கண்டவள் அன்றோ!!! வியர்த்து வடிய தேனிசை குனிய
"நல்லா இரு, நல்லா இரு "என்று மகனை ஒரு கையிலும் இன்னொரு கையில் அவளையும் அணைத்தவன்...
"சந்தோசமா இரு , சந்தோசமா வச்சிக்க ..நீயும் சந்தோசமா இரு சுகர்பேபி" என்றவன் செயலில் நெளிய கூட முடியாது பல்லை கடித்து தேனிசை நின்றாள்... சேலை மறைவில் அவள் இடையை சிக்கென பிடித்து கசக்கி அன்றோ ஆசீரவாத மழை பொழிந்தான் இந்த வெண்ணிற மீசைமன்மதன்!!
"ஜீவா அம்மா தேடுவாங்க போலாமா ப்ளீஸ்" என்று வெடுக்கென யட்சன் விட்டு தள்ளி நின்றாள்.. அவன் கசக்கிய இடை கன்றி போனது , அது அவன் கொண்ட கோபமா இல்லை தாபமா?
இங்கே நிற்கும் ஒவ்வொரு நொடியும் எரிமலை குழம்பில் இடை வைத்தது போல இருந்தது அவளுக்கு ..
"அப்பா அவளை கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு நான் ரேசுக்கு ப்ராக்டிஸ் பண்ண கிளம்புறேன் என்று ஜீவா நகர
"அப்பாடா மூச்சு திணறி போய் தலையை குனிந்து கொண்டே நின்ற தேனிசை விட்டால் போதுமடா சாமி என்பது போல் எழும்ப தயாராக ...
"என்ன அவசரம் மை சன், ஏதாவது ஜில்லுனு ஸ்வீட்டா தொண்டைக்கு இதமா குடிச்சிட்டு போகலாம் "என்றவன் பேனாவை தன் உதட்டின் மீது வைத்து தேய்த்துக் கொண்டே தேனிசையை கண்ணைச் சுருக்கி பார்க்க... அவளும் ஓரக்கண்ணால் அவனைதான் பார்த்தாள்...
"இது வெறும் சாதாரண உரையாடல் போல் தான் ஜீவாவுக்கு இருந்திருக்கும் ... ஆனால் அந்த உரையாடலில் உள்ளே ஒளிந்திருக்கும் சூட்சமம் இவளுக்கு புரியாமல் இல்லை...
"ஜீவா அம்மா அப்பா தேடுவாங்க , ப்ளீஸ் போலாமே என்று கிசுகிசுப்பாக ஜீவாவின் காதலில் அவள் சொல்ல ... அவள் உதட்டு அசைவை வைத்து புரிந்து கொண்டவன்...
உன் அம்மா அப்பாவை என்ன காக்காவா தூக்கிட்டு போக போகுது சுகர் பேபி , இந்த அரை கிழவனுக்காக ஒரு பத்து நிமிஷம் கூட இருந்துட்டு போக கூடாதாம்மா என்று ஊமையாக சிரித்துக் கொண்டே யட்சன் கூற ...
அதான் அப்பா சொல்றாருல்ல ஒரு கிளாஸ் ஜூஸ் குடிச்சிட்டு போறதுல என்ன ஆகிடப்போகுது என்ற ஜீவா அவளை அடக்கி உட்கார வைத்து விட்டான்
"உனக்கு என்ன வேணும் ஜீவா" என்று போனை எடுத்தபடி யட்சன் மகனை பார்க்க
"லைம் மொஜிட்டோ டேட் "என்ற ஜீவா தலையை திருப்பி இசை உனக்கு என்று முடிக்கும் முன்பு
"மாதுளம் பழத்துல நல்லா ஐஸ் க்யூப் நிறைய போட்டு சுகர் கம்மியா போட்டு ,ஒரு ஜூஸ் அப்புறம் லைம் மொஜிட்டோ ஒன்னு, சுகர் பேபி உனக்கு மாதுளை ஜூஸ் ஓகே தான .... இல்லை கசாட்டா ஐஸ்க்ரீம் சொல்லவா இந்த வெயிலுக்கு சப்பி சப்பி தின்னா செமையா இருக்கும், ட்ரை பண்ணுறியா? என்று யட்சன் நாவை உதட்டில் சுழட்டி ஈரம் பண்ண.. அவன் பேச்சு உடல்மொழி அறியாதவளா அவள் அவன் கண் சுருங்கி உதட்டு பிதுக்கினாள் என்ன அர்த்தம் என்று எத்தனை முறை டெமோ பார்த்து இருக்கிறாள் பட்டென சேரை விட்டு எழும்பிய தேனிசை
"ஜீவா நீங்க குடிச்சிட்டு வாங்க, நான் கார்ல வெயிட் பண்றேன் ஏசி காற்று ஒத்துக்கல போல ஒருமாதிரி இருக்கு "என்று தட்டுதடுமாறி சொல்லிய தேனிசை பதில் வரும் முன்னே ஓடியே விட்டாள் ...
பணத்தில் ஆரம்பித்த அவர்கள் உறவு பணத்தில் முடிந்தும் விட்டதே!!மறுபடியும் ஏன் இந்த ஆரம்பம் ... உலகம் வட்டம் தானோ மறுபடியும் ஒரு சந்திப்பா ??! உள்ளம் சற்று பதறத்தான் செய்தது ...
காரில் வர வர என் டேட் அப்படி இப்படி என்று ஜீவா புகழாரம் தகப்பனுக்கு கொடுக்க உதட்டை சுளித்தாள்... ஊருக்கும் இவனுக்கும் வேண்டுமானால் யட்சன் மரியாதைக்குரியவனாக இருக்கலாம் ஆனால் அவளுக்கு மட்டும்தானே தெரியும் அவன் யார் என்ற உண்மை
காஜி கிழவன் !! இவன் யோக்கியதை என்னன்னு எனக்குதான் தெரியும் என்று அவள் உதடு முணுமுணுத்தது
அவன் வக்கிர ஆசைகளுக்கு தீனி போட்டு கொழுக்க வைத்தவள் அவள் அல்லவா?!
அம்மா இசை, மாப்பிள்ளையோட அப்பாவுக்கு உன்னை பிடிச்சிருக்கா ? என்ன சொன்னார் வீட்டுக்குள் வந்த மகளை தகப்பனும் தாயும் எதிர்ப்பார்போடு பார்க்க
ம்ம் ரொம்ப பிடிச்சு இருக்காம் "
"அப்போ அடுத்து கல்யாணம் தானம்மா ?
"ம்ம் என்று தலையை குனிந்து கொண்டே அறைக்குள் வந்தவள் கதவை அடைத்து விட்டு கதவின் மீதே சாய்ந்து அமர்ந்து கண்களை மூட
"என்ன கிழவனா இருக்கானே, அதுல எப்படி இருப்பான்னு யோசிக்கிறியாடி" என்று தொடை தெரிய பாக்சரில் ஹார்ம் பனியனில் வெள்ளை சிகையை கணணாடி பார்த்து சீவிய யட்சன் தலையை திருப்பி தன் ஆடம்பர படுக்கையில் படுத்து கிடந்த பட்டுத்துணி போல மேனி கொண்ட தேனிசையை பார்த்தான் ... அவளோ யோசனை கலைந்து
"ஹாஹா நீங்களே ஒத்துக்கிறீங்க கிழவன்னு என்று சிரித்தவள் மடியில் வந்து படுத்த யட்சன்....
"ஓய் அப்போ நான் கிழவன் தானா??.. ஒரு புருவம் உயர்த்தி இறக்கி அவன் கேட்க ...
அரைக்கிழவன் ஆனாலும் கிழவன்தான் ...பேத்தி எடுக்கிற வயசுல கிழவனுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான் ஒன்னும் முடியாத உங்களுக்கு ஏன் இந்த ஆசை என்று குழி விழுந்த கன்னம் தெரி தேனிசை சிரிக்க... உலகத்தில் சிங்கமா வளம் வந்த நரைமுடி அழகன் சிறுத்த இடைக்காரி இடையில் மயங்கி அவள் விரலசைவில் ஆடும் விசித்திர உறவில் அன்றோ இருவரும் சிக்கி இருந்தார்கள்..
அப்படியா நீயா நானா பார்ப்போமாடி வா என்று அவளை பட்டென ஒற்றை கையில் தலைக்கு மேல் தூக்கி சுற்ற
"அரைக்கிழவா விடுங்க அய்யோ பயமா இருக்கு பயமா இருக்கு .. என்றவளை விட்டானா அவன் ப்ளீஸ் என்று அன்றும் கெஞ்ச கொஞ்ச வைத்தானே
பயமா இருக்கு என்றவள் உதடுகள் இப்போது அழுகையோடு நடுங்க கதவில் தலையை சாய்த்தாள்....
பணத்துக்காக தான இசை இது எல்லாம் , உலகத்துல திரும்புற திசை எல்லாம் வக்கிரம், அந்த வக்கிரத்தை நமக்கு சாதகம் ஆக்க போறோம்,
என்ன சொல்ற ? புரியாது தோழியை பார்த்தாள்..
ஊர் மத்தியில மரியாதை இழக்க கூடாதுன்னு ஆஹா ஓஹோ அந்தஸ்த்துல இருக்கிற நடுவயசு காரங்க இப்படி இளம் பொண்ணுங்களை தன் தேவைக்கு பயன்படுத்திக்கிறாங்க உனக்கு தேவை பணம் அவருக்கு தேவை சுகம் ,
ஆனா பயமா இருக்குடி யாருக்காவது தெரிஞ்சு போச்சுன்னா
"ப்ச் ஒன்னும் இல்லாத உனக்கே இந்த பயம் இருந்தா , கோடியில புரள்ற பணமுதலைங்க.. சொசைட்டில கொடி கட்டி பறக்குற ஆளுங்க, குடும்பம், குட்டி மகள், மகன்னு வயசு ஆன அவங்க அந்தஸ்த்து போயிடும்னு தெரியாது.... சோ எவ்வளவு கவனமாக இருப்பாங்க..
ம்ம்
"வாயை திறக்க மாட்டாங்கடி, மாட்டுனா அவங்க தான் காலி... நமக்கும் பாதுகாப்பு ப்ளஸ் பணம் ... சத்தம் இல்லாம பணம் வர்ற வரை இருந்துட்டு அப்பறம் நம்ம லைப் நாம பார்க்க போறோம் அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் எப்பவும் இல்லை ... நம்ம வாழ்க்கைக்கு இடையூறு வரவே வராது நான் எத்தனை பேரை பார்த்து இருக்கேன் ... எல்லாரும் இப்ப ஹேப்பியா குடும்பம் குட்டின்னு செட்டில் ஆகிட்டாளுக...
"ஆனா, தப்புக்கு காரணம் கண்டுபிடிக்கிற மாதிரி இருக்கு "
"போ உனக்கு பணம் புரட்ட வேற ஐடியா இருக்கா
"ம்ஹூம்
"இல்லதான, இதை விட்டா வழி இல்லைன்னு சொன்னேன் அவ்வளவு தான், தேனிசை எச்சில் விழுங்கி வழி சொன்ன தோழியை பார்த்தாள்...
"இதுல ப்ரோபைல்ஸ் இருக்கு , புரோக்கர் தந்துட்டு போறார் .... உனக்கு செட் ஆகுதா பார் என்றதும் தேனிசை கை நடுங்க ஒவ்வொரு பக்கமாக நகட்டினாள் ,பெரிய மனிதர்கள் என்று வாயை பிளந்த பல நபர்கள் பட்டியல் இருக்க, நம்ப முடியவில்லை, நம்பாது இருக்கவும் முடியவில்லை இனி இவர்களை குறை சொல்ல முடியுமா? அவளும் இனி இந்த சாக்கடையில் மீனாகத்தானே நீந்த போகிறாள் ..
ப்ச் மனம் ஒவ்வாது பைல்களை தூக்கி படுக்கையில் வீச போனவள் ஷாலில் ஒரு பைல் சிக்கி கொள்ள ...அதை எடுக்க போனவள் ஏதோ தோன்ற பைலை திறக்க ....
பெயர் இருக்கும் இடத்தில் மிஸ்டர் எக்ஸ் என்று இருந்தது
வயது 50 !!
மல்டி மில்லியனர்
ஸ்டேட்டஸ் மனைவியை இழந்தவர்
மகனுக்காக மறுமணம் செய்யாதவர்
முதல் முறையாக நம் எஜென்சியை தொடர்பு கொண்டிருக்கிறார் ...
நிபந்தனைகள் ரகசிய உறவாக இருக்க வேண்டும்
அவரோடு இருக்கும் காலத்தில் வேறு யாரிடமும் போக்கு வரத்து கூடாது
வரும் பெண்ணின் பணத்தேவை நிறைவேற்றப்படும்
சில கன்டிஷன், அக்ரிமெண்ட் உண்டு
"என்னடி யாருன்னு செலக்ட் பண்ணிட்டியா தோழி குரலில் திடுக்கிட்ட தேனிசை
"இல்லை ... அது வந்து மறுக்க முடியாத நிலை வேறு , கையில் இருந்த பைலை தோழியிடம் நீட்டியவள்
"இ....வ.....ர்......ஓகே ஏஏஏஏஏஏஏஏஏ
செய்வது பாவம் தான், ஆனால் அதிலும் பாவத்தை பாதியாக குறைக்க நினைத்தாளோ மனைவி இல்லை என்று ஒற்றை சொல் யட்சன் பைலை எடுக்க வைத்தது ...
"தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன் கடவுளே " நெஞ்சு திக் திக் என்று கடந்த காலம் நினைத்து பதறி போய் தேனிசை இருக்க... அவள் போன் மணி எழுப்பியது ஜீவா என நினைத்து போனை எடுக்க
ஹாய் சுகர் பேபி இஇஇஇஇஇஇஇ என்ற யட்சன் குரலில் இவள் பதறி போக
"ஹைட் அன்ட் சிக் விளையாட நான் ரெடி சுகர்பேபி இனி நீ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மறுபடியும் ஆரம்பிக்கலாமா? "
"ப்ளீஸ் என்ன விட்டிருங்க... நான் உங்க மகனோட
"ம்ம் சொல்லு சுகர்பேபி என் மகனோட
"சொல்லவே அவளுக்கு வாய்கூச...
"என் மகனோட சித்தி பேபி நீ ...
"எனக்கு அவர் உங்க மகன்னு தெரியாது
"இப்பதான் தெரிஞ்சு போச்சே சுகர்பேபி
"ப்ளீஸ் நான் நான்
"ஷட் அப் ஷட் அப் என்றவன் குரலில் நடுங்கி போனாள்
"இடியட் இஇஇஇஇஇஇ எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே ஏமாத்திட்டு ஓடி ஒளிஞ்சுட்டு, இப்ப என் மகனை பிடிச்சிட்டு வந்து இருப்ப ... என் மகன்கிட்ட எவ்வளவுடி காசு வாங்குன
"வாங்கல.... என்று உள்ளே போன குரலில் தேனிசை கிசுகிசுக்க ..
"நம்ப சொல்றியா ஒரு முத்தத்துக்கே லட்ச ரூபாய் கறக்குற ஆளு நீ, சும்மா அவன் பின்னாடி சுத்துறியா? இதை நான் நம்பணுமா? ஹான்
"இல்லை கல்யாணம்...... முடிஞ்ச... பிறகு தான் காசு தருவேன்னு சொன்னாருஇஇஇஇஇஇஇஇ என்று இழுக்க
"நல்லா கைவசம் தொழில் வச்சிருக்க போல ______ யா என்று நாராசமாக அவன் திட்ட இவளுக்கு கண்ணீர் கட்டியது
"மொத்தமாக ஏழு கோடி என் பணத்தை ஆட்டையை போட்டிருக்க ... ஒன்னு துட்டை வை, இல்லை ஏழு கோடி ரூபாய்க்கு படுக்கையில சுகத்தை கொடு இவ்வளவு தான் என் டிமாண்ட் ... இப்ப போனை வை" என்று போன் கட் ஆகி விட... உடைந்த கடிகாரத்தை பார்த்தாள் இனி அவன் சொல்லும் திசையில் தான் சுற்றுவேன் என்று அதுவும் ஓட்டத்தை நிறுத்தி கொள்ள
ஏழு கோடியா ஆஆஆஆஆ
இல்லை அவனோடு இரவுகளா
இல்லை இன்னும் தேவைப்படும் பத்து கோடியா
அதை கொடுக்க தயாராக இருக்கும் ஜீவாவா? தலையை பிடித்து தேனிசை அமர்ந்தாள்...
கட்டில் விளையாட்டு விளையாட துடிக்கும் மூப்பு அடையா யட்சகனின் ஆசை தீர்ப்பாளா இந்த யட்சனி ??