கழிமுள்ளி நெஞ்சிக்காரி-17

கழிமுள்ளி நெஞ்சிக்காரி-17

கழிமுள்ளி-17

ரமேஷ் நைட் டின்னர் முடிஞ்சதும் கீதாஞ்சலியையும் நதியாவையும் கூட்டிட்டு மொட்டைமாடிக்கு போனார்.

நதியாவோ மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தாள். அரவிந்த் போன் பண்ணவுமில்லை, மெசேஜ் பண்ணவுமில்லை என்றதும் எதுவும் பிரச்சனையா?இவன் எதுவும் கோபத்துல இருக்கானா? என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளோட பிரண்ட்ஸ் போட்ட மெசேஜுக்குகூட ரிப்ளை பண்ணாமல் அரவிந்துக்காக காத்திருந்தாள்.

இப்போ ரமேஷும் கீதாஞ்சலியும் அவளைத்தான் பார்த்திருந்தனர். ஆனால் அவளது கவனம் அங்கில்லை என்பது தெரிந்ததும் கீதாஞ்சலி அவளது போனை வெடுக்கென்று பிடுங்கினார்.

அதில் அம்மாஆஆஆ என்று கூப்பிட்டவள் போனை திரும்ப வாங்க கையை நீட்டினாள்.

“நதியாஆஆஆ”ரமேஷ் அழுத்தமாகக் கூப்பிட்டார்.

“அப்ப்பாஆஆஆஆ”என்று பதறி அவரைப் பார்த்தார்.

அவரோ கீதாஞ்சலியிடம் எல்லாத்தையும் சொல்லியிருப்பார் போல, அவளும் எதுவும் பேசாது அவளையே பார்த்தாள்.

“அப்பாஆஆஆ அது வந்து அது வந்து ஒன்னுமில்லப்பா’ என்று திக்கித்திணறி பொய் சொன்னாள்.

“நதியாஆஆஆ நீ பொய்சொல்லுகிறன்னு உன் வார்த்தையும் கண்ணுமே சொல்லுது. உண்மையை மட்டுமே சொல்லு போதும்” என்றவர் தீரக்கமாகப் பார்த்தார்.

அதற்குமேல் பொய் சொல்லமுடியாது தலையை குனிந்துக்கொண்டாள்.

“நான் நேத்து நைட்டும் அரவிந்த்கிட்ட போன்ல பேசினேன், இன்னைக்கு காலையில் இருந்தும் அரவிந்த்கிட்ட கெஞ்சினேன்.விஜய் செய்தது தப்புத்தான். அதுக்காக அவனை இப்படி தண்டிக்கவேண்டாம்னு எவ்வளவு எடுத்துச் சொன்னேன். அவனது எதிர்காலம் போயிடும்னு சொன்னேன். ஆனால் அவனோ விஜயை காலேஜைவிட்டு தூக்கறதுலதான் இருந்தான். ஆனால் நீ வெளியபோய் பேசினதும் அவன் அவ்வளவு இறங்கிவந்துட்டான். உனக்காகத்தான் விஜயை மன்னிச்சுவிட்டான். இந்தளவுக்கு இறங்கியிருக்கான்னா அதுக்கு நீ சும்மா கேட்டதுனால இருக்காது. உனக்கும் அவனுக்கும் எந்த உறவுமில்லைன்னு எல்லாருக்கும் தெரியும். விஜய் ஒருவார்த்தை சொன்னான் எல்லாருக்கும் முன்னாடி ஞாபகமிருக்கா அரவிந்த் பூவும் புரபோஷல் கார்டும் தந்ததா நினைச்சுத்தான் அடிச்சேன்னு சொன்னானே அப்பவே எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. அரவிந்த் உன்னை காதலிக்கிறான்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கு, அப்போ கண்டிப்பா இது உறுதியான தகவல்தான். இதுக்குமேலயும் மறைக்காத உண்மையை சொல்லு”என்று கேட்டார்.

அதைக்கேட்டதும் தனது உதட்டைக் கடித்து எதுவும் பேசமுடியாது நின்றிருந்தாள்.

கீதாஞ்சலி அவளது தோளைப்பிடித்து உலுக்கி “ஏன்டி நீ எப்பவும் படபடன்னு பேசுவியே இப்போ எதுக்கு ஊமைக்கோட்டான் மாதிரி இப்படி நிக்கிற. உண்மையை சொல்லுடி. நாங்க ஏதோ உன்னோட எதிர்காலத்தை எவ்வளவோ ப்ளான் பண்ணிட்டிருக்கோம் நீ என்னடான்னா இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிற?”என்று திட்டினார்.

“அம்மாஆஆஆ” என்று அவளது தோளில் சாய்ந்து அழுதாள்.

“எதுக்கு இப்போ அழற? அப்பாக்கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று அவளை இழுத்து முன்னாடி நிற்கவைத்தாள்.

அவளோ நிமிர்ந்து ரமேஷைப் பார்த்தவள் “அப்பாஆஆஆ நான் நான் அரவிந்தை நேசிக்கிறேன்பா. அவன் என்னோட லைப் பார்ட்னராக வந்தா என் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன். அவனும் என்னைக் காதலிக்கிறான். இரண்டுபேருமே ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்பா. ஆனால் இப்பபதைக்கு வேற எதுவுமே நாங்க ப்ளான் பண்ணலப்பா”என்று சொல்லிவிட்டு மடங்கி உட்கார்ந்து அழுதாள்.

அப்பா அம்மாவை ஏமாத்திட்டமோ என்று குற்றவுணர்ச்சி அவளை அழவைத்தது. அதைக்கேட்ட ரமேஷும் கீதாஞ்சலியும் இதை எதிர்பார்த்திருந்தார்போல எந்தவித அதிர்ச்சியும் முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

அவள் அழுது முடித்ததும் எழுந்தவள் இருவரது முகத்தையும் பார்த்தாள். அவர்கள் எதையுமே காட்டிக்கொள்ளவில்லை.

அதனால் “அம்மாஆஆஆ”என்று மெதுவாகக் கூப்பிட்டாள்.

“உன்கிட்டயிருந்து இதை ஏற்கனவே எதிர்பார்த்தோம். நாங்க என்ன நினைச்சோம்னா நீ விஜயை விரும்புறபோலன்னு நினைச்சோம். ஆனால் அரவிந்த் அப்படிங்கும் கொஞ்சம் ஷாக்குதான். அரவிந்தைப் பத்தி எங்களுக்கு எதுவுமே தெரியாது. இப்போதைக்குத் தெரிஞ்சிக்கவும் விரும்பலை. இப்போதான் உனக்கு இருபது வயசாகுது. அடுத்து என்னன்னு படிப்பு முடிஞ்சதும் யோசிக்கிறோம். நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும் அதுதான் நான் இப்போதைக்கு சொல்லுறது. அரவிந்த் மாமாவோட காலேஜ்தான் அது. அவனுக்கோ அவங்கம்மாவுக்கோ அதுல பங்கிருக்குன்னு சொன்னாங்க. அவங்க ஸ்டேட்டஸ் நம்மளைவிட பெட்டராதான் இருக்கு. உன் காதல் எந்தளவுக்கு உறுதியாக இருக்கு அந்தளவுக்குத்தான் அடுத்தக்கட்டத்துக்கு போக வாய்ப்பிருக்கு. இன்னும் கொஞ்சம் மெட்சூரிட்டி வர்றவைரைக்கும் பொறுமையா இரு”

“சரிம்மா”தலைய்ட்டியவள் அப்பா என்ன சொல்லப்போறாரோ என்று அவரைப் பார்த்தாள்.

“அதுதான் அம்மா எல்லாத்தையும் சொல்லிமுடிச்சிட்டாளே போ போய் தூங்கு நாளைக்கு காலேஜ் இருக்குல்ல” 

இந்தளவுக்கு பொறுமையா அவங்க அவளுடைய காதல் விசயத்தை ஹேண்டில் பண்ணுவாங்கன்னு அவள் நினைக்கவேயில்லை.

அதனால் ஓடிப்போய் அப்பாவை கட்டிக்கொண்டாள். அவரும் ஒன்னுமே பேசாது அவளது தலையைத் தடவிக்கொடுத்தார்.

அவ்வளவுதான் ஒரு பெரிய பிரச்சனை முடிஞ்சது என்று மனதிற்குள் நிம்மதி வந்தது. 

“தேங்க்ஸ்பா கொஞ்சம் பயமா இருந்துச்சு நீங்க அரவிந்த் பத்திக் கேட்டதும். ஆனால் நீங்க இதை இவ்வளவு ஈஸியாக ஹேண்டில் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கவில்லை”என்று சொன்னவளுக்கு உண்மையில் கண்ணு நிறைந்துவிட்டது.

“ஓகே ரொம்ப நேரமாகிட்டு போய் தூங்கு. நாளைக்கு காலஜ் போகணும்ல. ஆமா விஜயிக்கு அரவிந்தைப் பிடிக்காதா?அவன் ஏன் அரவிந்தை முறைச்சிக்கிட்டே இருக்கான்”

“அதுதான்பா எனக்குப் புரியலை. எப்பவும் அரவிந்தைப் பார்த்து முறைக்கிறான். ஏன்டான்னு கேட்டா அவன் ஏதோ எங்களைப் பிரிக்க ப்ளான் போட்டு என்னை லவ் பண்றான்னு சொல்லுறான். ஆனால் அரவிந்த் அப்டடியில்லைன்னு நானும் அவன்கிட்ட சொல்லிட்டேன். அவன் கேட்காமல் இப்போ எக்ஸாம் எழுத முடியாமல் இருக்கான்.நான் திரும்பவும் அரவிந்த்கிட்ட பேசி அவனை எக்ஸாம் எழுத பெர்மிஷன் வாங்கிக்கொடுக்கணும். அந்தக் கோபத்தலதான் சார் போறாரு”

“அதெல்லாம் பின்னாடி புரிஞ்சுப்பான். இத்தனை நாளும் நம்ம பிரண்டா இருந்தவளை காதலிக்கிறானேன்னு கோபம் வந்திருக்கும். விஜயிக்கு உன்மேல ஏதும் ஹோப் இருக்கோ?”என்று சந்தேகமாகக் கேட்டார்.

“அப்பாஆஆஆ என்ன பேசுறீங்கப்பா. அவன் என் பெஸ்ட் பிரண்ட். அப்படியெல்லாம் நினைக்கமாட்டான்”

“ஒருவேளை இருந்தால் என்ன பண்ணுவ?”

“இது என்ன கேள்விப்பா?இந்தக் கேள்வி இரிட்டீட்டிங்கா இருக்குப்பா பிரண்டைப் போய் யாராவது லவ் பண்ணுவாங்களா. அதெல்லாம் இருக்காது. அவன் அப்படி நினைச்சிருந்தா உடனே சொல்லிருக்கவும் செய்வான். அப்படியிருக்க வாய்ப்பேயில்லை”

“அப்படியிருந்தா நல்லதுதானே. சரி நீ போ போய் தூங்கு குட்நைட்”என்று அனுப்பி வைத்தார்.

தேங்க்ஸ்பா என்று அவருக்கு முத்தம் கொடுத்தவள் கீதாஞ்சலி கன்னத்தைப் பிடித்துக்கொஞ்சிவிட்டு கீழே ஓடிவிட்டாள்.

அவள் போனதும் ரமேஷின் முகம் இருண்டுவிட்டது. கீதாஞ்சலியும் அப்படியே அமைதியாக அவரது தோள் சாய்ந்து நின்றாள்.

“விஜயை லவ் பண்ணிருந்தாக்கூட நல்லாயிருந்திருக்கும்ல. அவன் முன்கோபிதான் ஆனாலும் நல்லபையன். இவளுக்கேத்தவன் அவன்தான். நான் இவள் காதலிக்கிறான்னு சொன்னதும் அவனைத்தான் நினைச்சேன். ஆனால் அன்னைக்கு அரவிந்தோட கார்ல இருந்து இறங்கி வந்தாப்பாரு அப்பவே சந்தேகம் வந்திடுச்சு. அதுதான் ப்யூன் மூலமா செக் பண்ணினேன். அது உண்மைதான்னு அவனும் பார்த்துட்டு சொல்லிட்டான்.

ஆனால் விஜய் செய்த பிரச்சனையால இப்போ சேரமனுக்கும் அரவிந்த்மேலயும் நதியா மேலயும் சந்தேகம் வந்திருக்கும். இதை எப்படி ஹேண்டில் பண்ணன்னு இப்போதைக்கு எனக்குமே தெரியலை, பாய்க்கலாம் அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்கிறேன். இவக்கிட்ட நீ எதையுமே சொல்லாத. நம்ம செய்யாதன்னு சொல்லுறதைத்தான் முதல்ல செய்துட்டு வந்து நிக்கப்போறா”

“ம்ம் நீங்க சொல்லுறது புரியுதுங்க”என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது. மகளுடைய காதல்,அவளது வாழ்க்கை எதிர்காலம் எல்லாத்தையும் நினைத்து பயத்தில் கலங்கினாள். அவளை சமாதானப்படுத்தி ரூமுக்குக் கூட்டிட்டு வந்த ரமேஷுக்குத்தான் தூக்கம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் மகளை கண்டிச்சு வளர்த்திருக்கணுமோ என்று முதன்முறையாக வருத்தப்பட்டார்.

வெற்றிவேல் வீட்டிலோ அரவிந்த் அவருக்கு எதிராக உட்கார்ந்திருக்க, அவனது அத்தை சுகந்தி அழுதுகொண்டிருந்தாள்.

ப்ச்ச் எதுக்கு இப்போ இவ்வளவு அழுதிட்டிருக்க நீ. அவனுக்கு ஒன்னுமில்லை. இங்க படிக்கவந்தான் படிப்பு முடிச்சிடுச்சு. இனி எக்ஸாம் மட்டும்தானே எழுதணும் அப்போ வந்து அவன் எக்ஸாம் எழுதிட்டுப்போகட்டும். இந்த ஒரு வருஷத்துல மருமகனை சீராட்டினது போதாதா? அதுதான் எங்க அக்கா மகனை அங்க வரச்சொல்லிட்டாளே போயித்தானே ஆகணும். இல்லைன்னா மச்சானை சமாளிக்கமுடியாது”

“ம்ம்ம் நான் அண்ணன்கிட்ட பேசுறேன். அவன் இங்கயே இருக்கட்டும்னு கேட்கிறேன்”

“ஒன்னும் வேண்டாம். அதுக்கும் அவரு என்கிட்டதான் கேள்விக்கேட்பாரு. அரவிந்த் எப்போ கோயமுத்தூர் கிளம்புற?”என்று நேரடியாகவே கேட்டார்.

“இன்னும் கொச்சம் வொர்க் இருக்கு மாமா. அதை முடிச்சி லெக்ட்சரர் கையில் குடுத்திட்டு நான் கிளம்பிடுவேன்” 

“பிளைட்ல டிக்கெட் போடவா. டேட்டு சொல்லு போடுறேன்”

“வேண்டாம் மாமா நானே போட்டுக்கிறேன்”

“ஓகே டிக்கெட் போட்டுட்டு என்னைக்குன்னு என்கிட்ட சொல்லு நான் மச்சான்கிட்ட பேசிடுறேன்”என்றவர் எழுந்துப்போய்விட்டார்.

“சகந்திதான் உங்க மாமா சொன்ன் உடனே கிளம்பிடுவியா. இங்கயே இரேன் அரவிந்த். அத்தை உன்னை நல்லா பார்த்துக்கலையா”

“அப்படியெல்லாம் இல்லைத்தை மாமாவே போகச்சொல்லும்போது எப்படி நான் இங்க இருக்கேன்னு சொல்லமுடியும். எல்லாரும் என் நல்லதுக்காகத்தானே சொல்லுறீங்க”

உடனே அவனது தலையை தடவிக்கொடுத்தவர் எல்லாமே நல்லதுக்குன்னு நடந்தா நல்லாதான் இருக்கும் என்றவர் போய்விட்டார்.

அரவிந்துக்கு இப்போதைக்கு எதுவும் பேசமுடியாத சூழ்நிலை. அரவிந்த் எல்லோர் முன்னாடியும் வாயைவிட்டதுல இப்போ நம்மளைம் மாட்டிக்கிட்டு முழிக்கிறோம் என்று நினைத்தவனுக்கு அவன் மேல் அவ்வளவு கொலைவெறி வந்தது. 

“நான் நானாக இருக்கும்போது மட்டும் அந்த ராஸ்கல் என் கையில கிடைச்சிருந்தான் இதுக்குள்ள அவனை புதைச்ச இடத்துல புல்லு முளைச்சிருக்கும். என் மேலயே கைவைக்கிறளவுக்கு எவ்வளவு தைரியம்” என்று கோபத்தில் அங்கேயும் இங்கேயும் வெளியே நடந்துக்கொண்டிருந்தான்.

இதுக்குமேல என்ன முடிவெடுக்க என்று திணறியவன் அவனாகவே ஒரு முடிவெடுதுது அதை செயல்படுத்த என்னென்ன பண்ணனும் என்று யோசித்து, அது எப்டடி செய்லபடுத்தலாம் என்று திட்டமிட்டான்.

அதன்பின்தான் அவனுக்கு மனசுக்குள்ளாக ஒரு சின்ன நிம்மதியே வந்தது. உடனே அதை செயல்படுத்தத் தொடங்கியவன் அந்த அர்த்த இராத்திரியில் என்னென்ன வேலை செய்யணுமோ எல்லா வேலையும் செய்துவிட்டுத்தான் தூங்கப்போனான்.

அந்த காலேஜ் அடுத்த நாளிலிருந்து எந்த பரபரப்புமின்றி அந்த செமஸ்டருக்கான எக்ஸாம் ப்ரிப்பரேஷன், பிராக்டிக்கல் வைவா என்று எல்லாத்தையும் திட்டமிட்டு அதன்படி ஓடிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் விஜய் காலேஜிக்கு சும்மா எதுக்கு வரணும்னு வரவில்லை. அதைவிடவும் நதியாவிடமிருந்து எவ்வளவு தூரம் இப்போதைக்கு ஒதுங்கியிருக்கமுடியுமோ அவ்வளவு தூரம் ஒதுங்கியிருக்க இந்த நாட்கள் இருக்கட்டும் என்று வராமல் இருந்தான்.

எப்போதுமே ஆர்ப்பாட்டத்துடன் இருக்கும் நதியாவும் இப்போது தினமும் ரமேஷ்கூடவே வந்துட்டு அவருக்கூடவே வீட்டுக்குப்போய்விடுவாதல் பிரண்ட்ஸ்க்கூட அவ்வளவாக பேசமுடியவில்லை.

அதுவுமே அவளுக்கு ஒருவித மன அழுத்தத்தைக்கொடுத்தது என்றால் முன்பு போல அரவிந்தோடு இப்போது பேசமுடியவில்ஸை என்பதும் அவளை ஒருவித அழுத்தத்திற்குள் கொண்டு சென்றது.

காலேஜ்லயும் அவனை பார்க்க முடியவில்லை. அவனுக்கு போன் பண்ணியும் பேசமுடியவில்லை. போன் பண்ணினால் அவன் எடுப்பதில்லை. மெசேஜ் பண்ணினால் பார்ப்பதில்லை என்று அவளை சுத்தல்லவிட்டான்.

அவன் சென்னையில் இல்லை. அவனது சொந்த ஊரான கோயமுத்தூருக்கு போய்விட்டான் என்று அதுக்கப்புறம்தான் அவளுக்கே தெரியவந்தது.

இந்த டென்சன்ல எக்ஸாம் படிப்புன்னு கவனம் போனாலும் ஏதோ தப்பாக இருக்கே என்று அவளதுமனசு அடித்துக்கொண்டது.

நம்ம விஜய் சொன்னதைக் கேட்காமல் தப்புப் பண்ணிட்டமோ?அரவிந்த் நம்மளை பழிவாங்கத்தான் இப்படி நடந்துக்கிட்டானோ? நம்மளை இப்படி சிக்கவைச்சுட்டானோ? என்று யோசித்து அதற்கும் குழம்பிபோனாள்.

அந்தக்குழப்பத்திற்கு இடையே அரவிந்தும் எக்ஸாம் எழுத வந்தான். அவளைப் பார்த்தும் பார்க்காத மாதிரியே போய்விட்டான்.

அத்த அதிர்ச்சியில் இருந்து அவளால் மீளவே முடியவில்லை. அவளே வழியப்போய் அவனிடம் பேச்சுக்கொடுத்தும் அவன் அவளை அலட்ச்சியப்படுத்திவிட்டுப் போய்விட்டான்.

இதுக்குமேல என்ன பண்றதுன்னு தெரியாமல் கடைசி எக்ஸாம் முடிஞ்சு அவன்கிட்ட எப்படியாவது பேசணும்னு முயன்று அவனைப் பார்க்கப்போனாள்.

அவனுக்கும் வேறவழியில்லாமல் அவளோடு பேசினான். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாது. அரவிந்த பேசி முடித்துவிட்டுக் கோபமாகப் போய்விட்டான்.

அவ்வளவுதான் அப்படியே உடைந்துப்போனவள் அங்கயே மடங்கி உட்கார்ந்துவிட்டாள்.