கழிமுள்ளி நெஞ்சுக்காரி-22
கழிமுள்ளி-22
ஒருமாதம் எப்படி போச்சுதுன்னே தெரியாது. நதியாவுக்கு காலேஜ் திறக்குது, அவளுக்கு காலேஜிக்குப் போகணும் என்றதுமே ஒரு மாதிரி பயந்தாள்.
ரமேஷ் அவளது பயத்தைக் கண்டதும் வேதனைப்பட்டார். எவ்வளவு தைரியமா ஓடிட்டிருந்த பொண்ணு, இப்படி பயப்படுறாளே! என்று வேதனையோடு அவளைப் பார்த்தார்.
“நதியாஆஆ எதுக்கு இப்போ இவ்வளவு பயப்படுற?”
“அப்பா நான் படிக்கிறேன். எவ்வளவு படிக்கச் சொல்லுறீங்களோ அவ்வளவு படிக்கிறேன். ஆனால் அந்தக் காலேஜ்ல வேண்டாம். அங்க அவ்வளவு அடாவடி பண்ணிட்டு, இப்படிக் காதல் தோல்வியில சூசைட் பண்ணிட்டேன்னு கேவலமா பார்ப்பாங்க. எனக்கு கேவலமா இருக்கும்பா”
“ப்ச்ச் நதிம்மா அங்க யாருக்குமே எதுவுமே தெரியாது. உன்னை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணினது மட்டும் வெற்றிவேல் சாருக்குத் தெரியும் வேற யாருக்குமே தெரியாது. நீ எப்பவும் போல அதே நதியாவாக போ. உன் படிப்பை முடி. உன்னோட பாஸ்போர்ட் வந்துட்டு. உனக்கு பாரீன போய் படிக்கணும்னா அதுக்கும் அபளை பண்ணு. உன்னோட எதிர்காலத்தைப் பத்தி யோசி. கடந்தக்காலம் கடந்துப்போன காலமாகவே இருக்கட்டும்”
“அப்பாஆஆ”
“எத்தனையோ பிள்ளைங்களோட எதிர்காலத்தை சரியாக அமைத்துக்கொடுத்த எனக்கு என் மகளை இப்படிப் பார்க்க கஷ்டமா இருக்கு”
“அப்பா பீல் பண்ணாதிங்க. எனக்கு கஷ்டமாக இருக்கு. நான் நாளைக்கு காலேஜிக்கு வர்றேன்”என்று முடிவெடுத்து சொல்லிவிட்டாள்.
ஆனாலும் அவளது மனசுக்குள்ளாக ஒரு பயம் இருந்தது. ‘அங்கப்போனால் அரவிந்த் ஞாபகம் வருமே! அதை மறந்து எப்படி அங்க ஒரு வருஷத்தை ஓட்டுறது! ஆண்டவா எனக்கு தைரியத்தைக் கொடு’ என்று மனசுக்குள்ளாக வேண்டிக்கொண்டாள்.
அவள் சாப்பிட்டு முடித்து வெளியே நடந்துக்கொண்டிருந்தாள். அவளது மனசு முழுவதும் ஏதேதோ சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது.
அவளருகில் வந்த நர்மதா “நான் தேர்ட் இயர் போறேன். நீ போர்த் இயர் போற. இரண்டுபேரும் பைனல் இயர்தான். நான் என்ன பயந்துட்டா இருக்கேன். நீயேன் இப்படி பயப்படுற?”என்று கேட்டுவிட்டு அவளது பதிலுக்குக் காத்திருந்தாள்.
அதைக்கேட்ட நதியா அவளைப் பார்த்து முறைத்தவள் “ஏன்டி பீ.காமும் பீ.ஈ.ம் ஒன்னாடி. நீ பீ.காம், நான் பீ.ஈ கம்ப்யூட்டர் இன்ஞ்சினியரிங். போடி அந்தப்பக்கம் பைனல் இயராம்ல பைனல் இயரு. ஒரு செமஸ்டருக்கு எத்தனை பிரக்கடிக்கல், எத்தனை வைவா எத்தனை பேப்பரு எல்லாத்தையும் கூட்டி முடிச்சு எழுதி பாஸாகிறதுக்குள்ள நாக்குத் தள்ளிடும். சும்மா படிச்சு மனப்பாடம் பண்ணி எழுதிட்டு வர்ற நீ என்கூட கம்பேரீஷன போடுற பார்த்தியா? கொடுமையிலும் கொடுமைடி”
“இதுக்கே இப்படி சொல்லுறீயே நான் பி காம் முடிச்சு அடுத்து உன் காலேஜ் தான் எம்பி பண்ணதுக்கு வர போறேன் தெரியுமா?அப்பா நேத்துதான் சொன்னாங்க. செம ஜாலியா இருக்கும்ல”
“அடுத்த வருஷமா? ஹப்பா நான் தப்பிச்சேன். நான் முடிச்சிட்டு வெளிய வந்திருவேன்”
“ரொம்ப சந்தோசப்படாத. அங்க இல்லைன்னாலும் இங்க நான் உன்கூடவேதான் இருப்பேன்”
“அப்போதான் நான் வெளிநாட்டுக்கு படிக்கப்போயிருவனே”
“வெளிநாட்டுக்குப் படிக்கப்போறீயா? போகமாட்டேன்னு சொன்ன”
“இப்போ முடிவை மாத்திக்கிட்டேன் போறேன். அதுக்காக அம்மாவை எல்லாம் பார்த்து வைக்கச் சொல்லிருக்கேன். கலெக்டரம்மா சொன்னதும் எந்த கண்ட்ரிக்கோ அங்கே பறந்திருவேன்”
“சூப்பர் சீக்கிரம் போ. அப்போதானே நான் இங்க தனி ராஜாங்கம் நடத்தமுடியும். ஆமா எப்போ போற”
“என்னதிது என்னை விரட்டிவிடுறதுலயே குறியா இருக்க. அப்படியெல்லாம் உன்னை தனியா விட்டுட்டு போகமாட்டேன். அங்க என்கூட வந்து எம்.பீ.ஏ பண்ற மாதிரி ஏதாவது பண்ணுங்கன்னு கீதாஞ்சலிக்கிட்ட சொல்லிடுவனே”
“அப்பவும் எனக்கு ஜாலிதான். வெளிநாட்டுக்கு படிக்கப்போறேன்னு செமையா ஜாலியா இருக்கும்”
‘இவா என்ன எந்த பாலை போட்டாலும் சிக்ஸர் போடுறா’ என்று நதியா அதிர்ந்து பார்த்தாள்.
அவளது நாடியிஸ் தட்டிய நர்மதா “என்னை மடக்கணும்னு நினைக்காத மிஸ்.நதியா.நானெல்லாம் காலேஜ்ல ரவுடிசம் சேப்டரைக் கரைச்சுக்குடிச்சிட்டு வந்திருக்கேன்.நீயெல்லாம் சின்னப்பிள்ளை டியர். நீ இன்னும் வளரவேண்டியிருக்கு.க்கும்”என்று பெருமை பீத்தியவளை நதியா உதட்டைச் சுழித்துப்பார்த்தாள்.
“நானும் ரவுடிதான்டி”
“நீயே சொல்லிக்கோ. பார்த்தா பயந்தாங்ககோழி மாதிரிதான் தெரியுது”
“போடி இவளே” என்றவள் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
“ஹல்லோ அரிஹன்ட் காலேஜ் ரவுடி. உங்க ரவுடிசத்தை எப்போ நான் பார்க்கிறது”
போடி இவளே என்று காதைப்பொத்திக்கொண்டு படுத்துவிட்டாள்.
அடுத்தநாள் காலையில் எழுந்து காலேஜிக்குப்போக கிளம்பி வந்தவளைப் பார்த்து குடும்பே கண்ணெடுக்காது பார்த்தது.
அழகான காட்டன் சுடிதார் போட்டு தலையை நல்ல தளர பின்னிபோட்டு, ஒட்டமொத்த மகாலெட்சுமியும் குடியிருக்கும் குடும்பபாங்கான நதியாவாக வந்து நின்றாள்.
அவளைப் பார்த்ததுமே கீதாஞ்சலி ஓடிவந்து அவளை இழுத்துட்டுப்போய் சாமிக்கும்பிட வைத்து, நெற்றியில அழகாக குங்குமத்தை கீற்றாக வைத்துவிட்டாள். அவளது அந்த சந்தன நிறத்துக்கு அந்த குங்குமக்கீற்று அழகாக இருந்தது.
ரமேஷ்தான் “நீ எப்படி காலேஜிக்கு வண்டியில வருவ. இந்த ட்ரஸ்ஸை போட்டுட்டு என்பீல்டுலயா வருவ?”என முக்கியமான சந்தேகத்தைக் கேட்டார்.
“இல்லைப்பா நான் உங்க்ககூட கார்லயே வர்றேன். இனி தினமும் நீங்களே கூட்டிட்டுப்போங்க”
“அப்படியா சரி” என்று தலையாட்டியவர் திரும்பி கீதாஞ்சலியைப் பார்த்தார்.
நர்மதாதான்“ஐய்யோ அப்பா உங்க லவ்ஸ் தாங்க முடியல. நதியாவைக் கூட்டிட்டு கிளம்புங்க. இங்க காத்து வரட்டும்”என்று இரண்டுபேரையும் விரட்டிவிட்டாள்.
நதியா வெளியே வரவும் விஜய் கேங்க் அவங்க வீட்டுக்குள்ளாக வண்டியில் வந்தனர்.
நாலுபேர் நதியாவைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றுவிட்டனர்.
“யாரு சார்இது? அப்படியே நம்ம நதி மாதிரியே இருக்காங்க.நம்ம நதிக்கு ட்வின்ஸா இவங்க?” என்று கேட்ட முகேஷ். ஹல்லோ மேடம். நீங்க ஊருக்குப் புதுசா? நீங்க என்ன படிக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”என்று நதியாவிடமே கேட்டுவைத்தான்.
அவ்வளவுதான் அவள் அவனை முறைத்துப்பார்த்தாள்.
“டேய் ஊமைக்கோட்டான் பேசாம போயிடு அடிவாங்கிடுவா. நானே கடுப்புல இருக்கேன்”
“டேய் இவங்க அப்படியே நம்ம நதி மாதிரியே பேசுறாங்கடா உண்மையிலயே இவங்க நதிக்கு ட்வின்ஸ்தான் போலடா”
“நீ இன்னைக்கு அடிவாங்கமா போகமாட்டேன்னு நினைக்கிறேன் முகேஷ். மரியாதையா ஓடிப்போயிரு இல்லைன்ன அவ்வளவுதான்”என்று அவன் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டுவைத்தாள்.
ரமேஷுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அவர் சிரித்தவாறே காரை எடுத்து முன்னாடி கொண்டுவந்துவிட்டார்.
விஜய்தான் அங்கிள் “நாங்க அவளை வண்டியிலயே கூட்டிட்டு வர்றோம்”என்று பெர்மிஷன் கேட்டான்.
அவரோ நதியாவைப் பார்த்தார்.
நதியா “விஜய் நான் அப்பாக்கூட கார்ல வர்றேன். நீங்க போங்க”என்றாள்.
“என்னாச்சு நதி. உன் வண்டியில வா. நம்ம எப்போவும் போல வண்டியிலயே போவோம். இல்லைன்னா எங்க வண்டியில உட்காரு நாங்க கூட்டிட்டு போறோம்”என்றவனுக்கு அவள் தங்களோடு வரலைங்கிற வருத்தம் நன்றாக தெரிந்தது.
அதைப்பார்த்தும் பார்க்காத மாதிரி நதியா காரில் ஏறி உட்கார்ந்தவள் “ நான் அப்பாக்கூடவே வர்றேன்டா. எனக்கு அப்பாக்கூட வர்றதுதான் கம்பர்டபிளா இருக்கு”என்று நேரடியாகவே சொல்லிவிட்டாள்.
அதைக்கேட்டதும் நால்வரும் “சரி உனக்கு எது விருப்பமோ அப்படியே வா”என்றுவிட்டுக் கோபத்தில் அங்கிருந்துக் கிளம்பிவிட்டார்கள்.
அதையெல்லாம் பார்த்த நதியாவுக்குமே வருத்தம்தான். இத்தனை நாளும் ஒன்றாகவே சுற்றிய நண்பர்களைவிட்டு தனியாக அப்பாக்கூட போறது கஷ்டம்கத்தான் இருந்தது. ஆனாலும் மனசைத் தேத்திக்கொண்டாள். இப்படித்தான் எல்லாத்துக்கும் பழகணும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
இப்போது சீனியர் என்பதால் நேராக கிளாஸுக்குப் போகாமல் கேண்டினில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்த விஜய் க்ருப்பை பார்த்த மனோஜ் “என்னடா இவனுங்க மட்டும்தான் இருக்கானுங்க, அந்த நதியாவை எங்கடா?”என்று நதியாவை விசாரித்தான்.
“அதுவா அவா அவங்கப்பா அதுதான் பிரின்சிபால் சார் கார்ல வந்து இறங்கி நல்லபொண்ணு மாதிரி கிள்ஸுக்கு போயிட்டாடா”
“என்னடா சொல்லுறீங்க?அவா இவனுங்களை விட்டுட்டு கிளாஸுக்குப் போயிட்டாளா?இது எப்படிடா நடந்துச்சு? அப்போ அவங்களுக்குள்ள சண்டையா என்ன?”
“அது தெரியாது ஆனால் அவா கிளாஸ்ல இருக்கா”
“அப்போ ஏதோ நடந்திருக்குடா. இன்னைக்கு சாயங்காலாம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு” என்று அவனுங்களோடு சண்டைப்போட சரியான நேரத்திற்காக மனோஜ் காத்திருந்தான்.
ஒரு செமஸ்டர் பரீட்சை இந்த விஜயால் எழுத முடியாமல் போச்சுது என்ற கடுப்பில் இருந்தான் அவன்.அதுக்கு பழிதீர்க்க வகைத்தேடிக்கொண்டிருக்கிறான்.
இப்போ அவங்க கேங்க் சண்டைப்போட்டு பிரிஞ்சிட்டாங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோசப்பட்டான். இனி நதியா பின்னாடி போனாலும் லவ் பண்றேன்னு சொன்னாலும் எவனும் வரமாட்டான் என்ற தைரியம் அவனுக்கு வந்தது.
இப்போ நதியா கிளாஸுக்குள்ள அமைதியாக உட்கார்ந்திருந்தவள் வெளியவே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளோட கேங்க்கை எங்க காணோம் என்று தேடிக்கொண்டிருந்தாள்.
அப்போது ஸ்டூடண்ட்ஸ் எல்லோரும் எழுந்து நிக்கவும் “குட் மார்னிங் ”என்று சொன்ன சத்தத்தையும் அந்த சத்தத்திற்கு உண்டான குரல் யாரோடது என்பதையும் உணர்ந்தவளுக்கு முதலில் கைகால் நடுங்கியது.அதன்பின் கோபம் வந்தது.
அந்தக் கோபத்தோடு விருட்டென்று எழுந்தாள். அப்போ எல்லாரும் உட்கார்ந்திருக்க அவள் மட்டும் நின்றிருந்தாள்.
அவளைப் பார்த்ததும் புருவம் தூக்கி லேசாக புன்கைத்தவன் “குட்மார்னிங்க் அதுதான் உட்கார சொல்லாட்டனே. நீ மட்டும் ஏன் தனியா நிக்கிற?உட்காரு”என்று கம்பீரக் குரலில் சொன்னவனை ஓடிப்போய் ஓங்கி அறைவிடணும்னு நினைத்தவள், அப்படியே தன் கையை மடக்கி, தனது கோபத்தை அடக்கிக்கொண்டு நின்றாள்.
“ஹல்லோ உன்னைத்தான் சொல்லிட்டிருக்கேன். உன் காதில் கேட்கலையா? உன் பேரென்ன?”
‘என் பேரென்னனா கேட்கிற ராஸ்கல்?உன்னை’ என்று மனதிற்குள் திட்டியவளுக்கு என்னைத்தாயாவது தூக்கி அவன் மண்டையை உடைக்கிறளவுக்கு ஆத்திரம் பொங்கியெழுந்தது. அப்படியே விறுவிறுவென்று வேகமாக அவன் பக்கத்தில் வந்தாள், அந்தநேரம் அவளது கேங்க் வெளியே நின்று எக்ஸ்கியூஸ்மீ சார் என்று பெர்மீசன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
“எஸ் கெட் இன்” என்று திரும்பி அவர்களைப் பார்த்துச் சொல்லவும் அப்படியே நதியா மாதிரியே அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.
“டேய் அது அரவிந்த்துதானே! இவன் எப்படி இங்க நம்ம கிளாஸுக்குள்ள லெக்ட்சரரா வந்து நிக்கிறான். என்னடா நடக்குது இங்க?”என்று எப்போதும் போல முகேஷை முதல் சந்தேகத்தைக் கேட்டான்.
“அதுதான்டா தெரியல” என்று தினேஷ் கண்களை உருட்டி அரவிந்தை உத்துப் பார்த்தான்.
“எத்தனை தடவை பார்த்தாலும் அது அரவிந்துதான்டா” என்று விஜய் உறுதிபடுத்தினான்.
அதற்குள் அரவிந்த் அவர்களைத் திரும்பிப் பார்த்து “என்ன உங்களுக்கு கிளாஸுக்குள்ள வர்ற எந்த ஐடியாவும் இல்லையா. இன்னைக்கு இந்த இயரோட பர்ஸ்ட் டே அதனால லேட்டா வந்தாலும் கிளாஸுக்குள்ள விடுறேன்.இனி விடமாட்டேன் போங்க. நான்தான் உங்க கிளாஸ் இன்சார்ஜ் லெக்ட்சரர், அட்டென்டென்ஸ் எல்லாம் என் கைக்குத்தான் வரும் புரியுதா? போய் உட்காருங்க”என்று மிரட்டினான்.
அவங்க மெதுவா உள்ளே வரவும் அவனுக்கு முன்பாக நின்ற நதியாவைப் பார்த்து “நீ இங்க என் பண்ற?வா வந்து உட்காரு” என்று கையைப்பிடித்து இழுத்தான் விஜய். அவன் கையை உதறியவள் அடிக்குரலில் இவன் இருக்கிற கிளாஸ்ல நான் இருக்கமாட்டேன். இவன் முகத்தையே பார்க்கமாட்டேன்”என்றுவிட்டு வேகமாக வெளியே போய்விட்டாள்.
அரவிந்த் அவளையே பார்த்திருந்தவன் சிறு புன்னகையோடு போய் கிளாஸ் ஸ்டூடன்ட்ஸ்க்கு தன்னை பற்றி இன்ட்ரோ குடுத்தான்.
இப்போ என்ன பண்றதுன்னு தெரியாமல் நாலுபேரும் கிளாஸ் பின்னாடி போய் உட்கார்ந்தனர்.
“என்னோட பேரு அரவிந்த். நான் இங்கதான் எம்.பீ.ஏ படிச்சேன். நிறைய பேருக்கு என்னைத் தெரியும்னு நினைக்கிறேன். எம்.ஈ கோயமுத்தூர்ல எங்களோட சொந்த காலேஜ்லதான் படிச்சேன். இதுவும் என் மாமாவோட காலேஜ்தான். இங்க புது லெக்ட்சரரா ஜாயின்ட் பண்ணிருக்கேன்”என்று சொல்லிக்கொண்டே போனான்.
“டேய் இவன்தான் இந்த வருஷம் நமக்கு லெக்ட்சரர்னா நம்ம படிப்பு அவ்வளவுதானா?ஏற்கனவே நீ இவனை அடிச்சிருக்க. ஐய்யோ நமக்குமட்டும்தான் இப்படியெல்லாம் நடக்குமா?” என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
நதியா வேகமாக பிரின்சிபால் ரூமுக்குப் போனவள் “அரவிந்த் இந்த காலேஜ்ல வொர்க் பண்ணபோறான்னு ஏன் என்கிட்ட சொல்லலை. அவன் என் கிளாஸ் இன்சார்ஜ்ஜா வந்து நிக்கிறான். நான் அவானல் சாவு வரைக்கும் போயிட்டு பைத்தியக்காரத்தனமா நடமாடிட்டிருக்கேன். மறுபடியும் அவனைப் பார்க்கக்கூடாதுன்னு நினைச்சேன் பார்க்க வைச்சிட்டீங்களேப்பா”என்னவள் உடைந்து அவருக்கு முன்னாடியே டேபிளில் தலைகவிழ்ந்து அழுதாள்.
“நதியாம்மா அவன் இங்க வேலைக்கு ஜாயின்ட் பண்ணிருக்கிறது எனக்கே இப்போதான் தெரியும். சேர்மன் சார் எதையுமே என்கிட்ட சொல்லலை” என்று அவளை சமாதானப்படுத்தினார்.
ஆனால் அவளோ நிமிர்ந்து பார்த்தவள் “இனி நான் இந்த காலேஜ்ல இனி படிக்கமாட்டேன்” என்றவள் அங்கிருந்து உடனே வெளியேறி வீட்டுக்கு வந்துவிட்டாள்.
அவளால் இப்போதும் கோபத்தைத் தாங்கிக்க முடியாதுபோக, அதை அழுகையாக வெளிப்படுத்தினாள்.
அடேய் அரவிந்த் இதுவரைக்கும் நதியாவுக்கு செய்தது போதாதா? மறுபடியும் ஏன்டா வந்த?