மூப்பு அடையா யட்சகா 32

Mupu32

மூப்பு அடையா யட்சகா 32

32 மூப்பு அடையா யட்சகா !! 

போனவன் போனபடி வரவில்லை வந்தான் பதினைந்து வருடங்கள் கழித்து...

வெள்ளை நரையும் மிடுக்கான வயதான தோற்றமும் கடனால் காணாது போன ஜீவ ரத்தினம் மறுபடியும் வந்தார் என்று ஊரெல்லாம் பேச்சு போலீஸ் குழம்பியது ... 

அந்த கொலை எல்லாம் ...

"நான்தான் அந்த கொலை செஞ்சேன்னா ஆதாரம் கண்டுபிடிச்சு தூக்கி உள்ள போடுங்க, இது முன் ஜாமீன் " என்று உலகத்தை கரைத்து குடித்துதான் அவன் உலகம் உள்ளேயே காலை வைத்தது..

"நீங்க யட்சன் ஜீவ ரத்தினம்தான.... 

"நான் யட்சன் ஜீவ ரத்தினம் தான் , நான்தான் அப்பா, என் மகன் யட்சன் இறந்துட்டான் ... இது என் ரெண்டாவது மகன் ஜீவா ... அங்கே தன்னையே கொன்றுவிட்டான்..  

"இவன் தந்தை ஜீவ ரத்தினமா பிள்ளை ஜீவ ரத்தினமா என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.. இத்தனை வருடத்தில் நடை உடை என்று தன் தந்தை சாயலில் அப்படியே மாற்றி கொண்டான்... தொழிலை கையில் எடுத்து நடத்தவும்... இந்த சமுதாயத்தில் ஏமாறாது நிமிர்ந்து நிற்கவும் வயதும் பக்குவமும் வேண்டும் அது இந்த நரை கொடுக்கும் என்று நரையில் அழகாக சுற்றி வந்தான்....  

அப்பா அப்பா என்று யட்சன் கூடவே சுற்றும் ஜீவாவை கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றி கொண்டு வர அவன் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை ... சூது வாது தெரிய கொஞ்சம் தம்பியை விட்டு பிடிங்க தம்பி என்று சண்மூகம் கூற நண்பர்களோடு அவனுக்கு சுதந்திரம் கொடுக்க சுதந்திரம் தறிகெட்டு ஓட வைத்தது,.. 

இவ்வளவு தான் என் உலகம் என்று வாழ்ந்தவன் வாழ்க்கை உள்ளே வந்தாளே சண்டாளி ஒருத்தி !!! 

தன் தகப்பன் தாய் இறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க தேனிசை சுற்றி வரும் காப்பகம் வர ... அங்கே தீ கொழுந்து விட்டு எரிய எதையும் யோசிக்காது உள்ளே புகுந்து அத்தனை பேரையும் காப்பாற்றி விட்டவன் மயங்கி கிடந்த முகம் முழுதும் கரி அப்பி ...இவன் அள்ளி தூக்கி அவளை தோளில் போடும் போது கண்கள் மட்டும் சட்டென முழித்து அவனை பார்த்தாளே ஒரு பார்வை 

அய்யகோ!! அவன் ரத்தம் சுண்டி போன ஆண் இல்லை நரை விழுந்து ரத்தம் சூம்பி போன ஆடவன் இல்லை ஆசை வெறுத்த கோ இல்லை ரத்தமும் சதையும் கொண்ட சாதாரண ஆசை உள்ள ஆண் என்று ரெண்டை கண்களில் அவன் சாவு மணி அடித்தாளே!! 

அத்தனை நான் ஜீவா, தொழில் என்று ஓடியவன் வாழ்க்கையில் ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல ஒரு மாயை... இரவு கண்ணை மூடினாலே, அந்த இரட்டை கண்கள் உருட்டிய விழி அவன் கண்முன்னால் வரும்... வியர்த்து கொட்டி எழும்பி அமர்வான்.... அந்த கண்கள் அவனிடம் என்ன யாசித்தது என்ன கேட்டது? ஏன் அப்படி ஒரு பார்வை?? எத்தனை பேர் கண்ணையோ பார்த்து பேசி பழகி இருக்கிறான் , எத்தனை பெண்களின் அருகாமையிலோ உட்கார்ந்து தொழில் விஷயமாக மணிக்கணக்காக நேரத்தை செலவு செய்திருக்கிறான்.. மூச்சுக்காத்து படும் தூரத்தில் இருந்தாலும் அந்த ஆறடி உருவத்தின்... முடி கூட சிலம்பி இருக்காது., காரணம் தன் தந்தையின் உருவத்தில் அவரின் மரியாதையில் தூசி படிந்து விடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து தன்னை தகவமைத்துக் கொண்ட ஒருவன்... அவளை தொட்டு தூக்கி போன போது உடல் எல்லாம் என்னவோ சிலிர்த்து அடங்கியது... அந்தப் பார்வை அய்யய்யோ!! கருடனையும் கொன்றுவிடும் ஒரு பார்வை.... கண்ணை மூடினாலும் கனவுக்குள்ளும் அந்த கண்கள் அவள் பார்த்த அந்த ஒற்றைப் பார்வை.. ஏன் ஏன் என்று சாகடித்தது!!

தூக்கம் மறக்க வைத்தது மறுமுறை அவளை பார்க்க துடிக்க வைத்ததுதான் அதிசயம்!! தேடிப்போனான்... அந்த இடம் வெறுமையாக கிடந்தது எரிந்த நிலையில் கிடந்த அந்த பங்களாவின் அருகே இருந்தவர்களிடம்

"இங்கு இருந்தவங்க எல்லாம் எங்க ?

ஏதோ ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டி இருப்பாங்க போல இருக்கு , பயர் அக்சிடெண்ட் ஆனதும் கவர்மெண்ட் எல்லாத்தையும் அள்ளிட்டு போயிட்டாங்க....  

ஓஓஓ அப்போ இங்க இருந்தவங்க எல்லாரையும் எங்க வச்சிருக்காங்க..."

அது தெரியல சார் எந்த விவரமும் சரியாக சொல்லப்படவில்லை,  

ஓஓஓ 

அந்தக் கண்ணுக்கு சொந்தகாரியை கண்டுபிடிச்சா மட்டும் என்ன பண்ணிட போற கண்ணாடிய பாரு யார் உருவத்துல நிக்கிற. இவரோட மரியாதைக்கு பங்கம் வர வைக்க போறியா? ஒழுங்கா நடையை கட்டு தொழிலை போய் பாரு... உன்னையை நம்பி உன் புள்ள இருக்கான்... நீ, அவன் இவ்வளவுதான் வாழ்க்கை!! சும்மா பறக்க ஆசைப்படாதே என்று அவனையே திட்டிக்கொண்டு... யட்சன் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு மீட்டிங் விஷயமாக போக ...

மகன் குடித்துவிட்டு கிடக்கிறான் என்று சண்முகம் மூலம் போன் வரவும் இடையிலேயே எழும்பி வர வேண்டிய சூழ்நிலையில் யட்சன் இறங்கி வர... ஒரு கிழவன் பெண்ணை வாயை மூடி இழுத்துக் கொண்டு அறைக்குள் நுழைவதை பார்த்து யோசனையாக நின்றான்... அந்தப் பெண் போக மறுக்க இவன் இழுத்துக்கொண்டு உள்ளே போய் கதவை அடைக்க கண்களை சுருக்கியவன் அடுத்த நொடி உள்ளே புகுந்து விட்டான்.. அதற்குள் அந்தப் பெண் ஓடிப்போய் சுவரோடு சுவராக தன் உடலை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவள் திரும்பி ஒரு பார்வை பார்த்தாளே ....

அதே பார்வை அவன் தேடிய அதே கண்களுக்கு சொந்தக்காரி அதே பார்வைக்கு சொந்தக்காரி மறக்குமா? இந்தப் பார்வை மறக்குமா? அந்த வலது கண் பக்கம் கிடந்த மச்சம் மறக்குமா? அந்த படபடத்த பார்வை கண்டுவிட்டானே மறுபடியும் ... 

சட்டென தன் சட்டையை தூக்கி அவள் பக்கத்தில் போட அப்போதும் முகத்தை பார்க்க முடியாமல் போனது அவன் சாபம்தான்!! அடித்து துவைத்து போலீசில் அவனை ஹேண்டோவர் பண்ணிவிட்டு அந்தப் பெண்ணை நோக்கி ஓடி வர..

ஐயோ பரிதாபம் அவள் தாவணி மட்டும் தான் அங்கே கிடந்தது அதை எடுத்து அப்படியே முகத்தில் வைத்து முகர்ந்து பார்த்தான்.. அந்த வாசம் நாடி நரம்பு எல்லாம் போய் உயிர் பெற வைத்தது.... 

பார்வையில் நுழைந்தவள் பருவத்தை கிளறாது போவாளோ துக்கம் தொலைந்து பேய் போல இரவெல்லாம் குறுக்கும் நெடுக்குமாக சுற்றினான் முதுமை வரம் அல்ல சாபம் என்று அவன் மட்டுமே அறிவான் 

இந்த உருவத்தில் அவளை தேடி பிடித்து திருமணமும் செய்ய முடியாது மகன் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை.. அவனிடம் தன் கதையை சொன்னால் புரிந்து கொள்வானா தெரியாது ... நரைத்தவனை எந்த பெண் நேசிப்பாள்? காதல் என்றும் போய் நிற்க முடியாது ..

என் வலிக்கு என்ன தான் மருந்து உடம்பும் மனசும் தடுமாற தொழிலும் கோட்டை விட ஆரம்பித்தான்... சண்மூகம் அவன் காதல் கதை தெரியாது 

தம்பி வயசுக்கு உண்டான எல்லாத்தையும் பார்க்கலன்னா தடுமாற்றம் தான் வரும் ... 

இத்தனை நாள் சும்மா இருந்த காமக்கணை அவள் அழுக்கு தாவணி வாசத்தில் வீஞ்சியே நின்று இரவை கொல்லாது கொல்ல ... விரகதாபம் கூடி போனது இது உடல் நேவைதானோ ? அவனே குழம்பி நின்றான் ....

காமம் தேடும் உடலா இது யோசிக்க மறந்தான்!! 

சரி என்று விட்டான்.. ஆனால் மனம்தான் கேட்க வில்லை பைலை புரட்டினான் செயற்கை தன்மை மனதில் ஓட்டவே இல்லை ...

ப்ச் அந்த ஒத்த பார்வை அது தந்த போதை என்ன?? இது எல்லாம் வா வா வச்சிகன்னு பார்க்கிற மாதிரியே இருக்கு" தூக்கி எறிந்தான் 

அவனுக்கா எத்தனையோ இழந்து இருக்கேன்,, ஓடி இருக்கேன் , இந்த பார்வை அந்த கண்களை மறக்க மாட்டேனா ... முடியும் என்று தனக்கு தானே தட்டி கொண்டு ராவும் பகலும் ஆபிசே கதி என்று கிடந்தான்

உன்ன யோசிக்க நேரம் இருத்தாதானடி கண்ணை கண்ணை காட்டி மயக்க வருவ நேரமே கொடுக்க மாட்டேன் என்று வேலை வேலை என்று அதன் பின்னேயே ஓட மறுபடியும் வந்து விழுந்தது அந்த பைல்

குனிந்து எடுத்து பார்த்தவன் பார்த்தபடி நின்றான் முதலில் அவன் பார்த்தது போட்டோவில் இருந்த அந்த ரெட்டை கண்களை தான் 

அய்யோஓஓஓஓஓஓஓஓ இந்த கண்கள் கடகடவென திறந்து பார்க்க அவளை இப்படி ஒரு பைலில் பார்க்க வேண்டுமா?? முதல் முதல் அவள் திருமுகத்தை தேவதையாக அல்ல ,வேசி பட்டியலில் அன்றோ பார்க்க வேண்டியதாகி போனது ... மெல்ல அவளை தடவி பார்த்தான்... அவளை தவறான பெண்ணாக யோசித்து கூட பார்க்க முடியவில்லை பணம் வேணும் என்று கட் அன்ட் ரைட்டாக எழுதி இருந்த வாசகம் அவள் தேவையை உணர வைத்தது .. 

இதுதான் முதல் முறை என்று எழுதி இருக்க , தனக்கான புதிய வாய்ப்பு போல தோன்ற.. கெளரவம் மரியாதை மகன் என்று பலதும் இடித்தாலும் தூக்கம் கெட வைத்தவளை பார்த்தே தீர வேண்டும் என்று பேராசை வந்து இரவெல்லாம் அவள் போட்டோவை பார்த்து பார்த்து ரசித்தான் ,.

அவளை பார்த்தால் போதும் என்ற ஆசையில் வந்தான்.. பார்த்த பிறகு அவள் பேச்சை கேட்ட பிறகே அவளோடு வாழ்ந்தே தீர வேண்டும் என்ற ஆசை ... அவளோ மறுத்து ஏற்காடு ஓடிவிட.... 

என் ஆசை சரின்னா மறுபடியும் அவளை கண்ணுல காட்டட்டும் என்று அவனும் கெடு வைக்க அவள் உன்னை கொள்ளையீட வந்த கொள்ளைக்காரி என்று சர்வமும் மறந்து போக வைத்தாள் மறுபடியும் அந்த இருட்டில் மழையில் வந்து அவன் முன் நின்று ... 

காமமா தேடினான்?!

காமம் என்ற பெயரில் அத்தனை காதலையும் மறைத்து வைத்த இளமை மொத்தமும் அவள் காலடியில் கொட்டினான்... பணத்துக்காக வந்தவளிடம் காரணம் கேட்டால் அவள் அவனிடம் காரணம் கேட்பாள் இவனிடம் சொல்ல காரணம் இல்லையே ... அவள் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள தோண்டி துருவினால், அவன் பற்றிய உண்மையை தோண்டி துருவுவாளே,, முட்டினால் முட்டுவாள் , கெஞ்சினால் கெஞ்சுவாள் கொஞ்சினால் கொஞ்சுவாள், அவனின் கண்ணாடி போல பிரதிபலிப்பு அங்கிருந்து வருமே !! தங்கள் தேவைகள் தாண்டி, அவர்கள் தங்கள் சந்தோசத்தை வாழ்க்கையை தேடியதே அப்போதுதான் , 

நரையோடு கூட தன்னை ரசித்த அவளை தூக்கி வைத்து கொண்டாடித்தான் தீர்த்தான்...  

இது காமத்தால் உண்டான சொந்தம் அல்ல 

காதலால் உண்டான சொந்தம்!!