மூப்பு அடையா யட்சகா 26
Yecha26
26 மூப்பு அடையா யட்சகா !!
இறந்தவர்களை மீட்டுக் கொண்டு வரும் வரம் ஒன்று அத்தனை பேருக்கும் கிடைத்தால் எவ்வளவு நலமாக இருக்கும் ?? எத்தனை காதல் உயிர்பெற்று விடும் !!
டாக்டர் எங்க அப்பாவ எப்படியாவது காப்பாத்துங்க எனக்கு எங்க அப்பாவும் ரொம்ப பிடிக்கும் சார் , அவர் இல்லாம எனக்கு வாழ தெரியாது, எந்த ஜீவா குழந்தை போல அங்கும் இங்கும் அல்லாடி கொண்டு திரிந்தாள், கழுகின் றெக்கைக்குள் வளர்ந்த புறா குஞ்சு அவன்... பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாத அவனைப் பொத்தி பொத்தி தன் கைக்குள் வைத்து பாதுகாத்த தகப்பன் இல்லை என்று கூற ,அழுது கொண்டே உட்கார்ந்து இருந்தான்...
"சாரி ஜீவா நோ யூஸ் .... என்று மருத்துவர் பெருமூச்சு விட , கண்ணாடி வழியாக நரைத்தகாதலன் முகத்தையே பார்த்து கொண்டு நின்ற தேனிசை டாக்ட்டர் அருகே ஓடி வந்து
"சார் ஒரு ரெண்டே ரெண்டு செகண்ட் அவர பார்க்க அனுமதி கொடுங்க , என் மூச்சு காத்து பட்டா போதும் அவர் மறுபடியும் கம்பீரமா எழும்பி வருவார்,
என்னம்மா கேலி பண்றியா , இத மாதிரி எத்தனை டயலாக் நாங்க கேட்டிருக்கோம்... அவரோட பல்ஸ் மொத்தமா இறங்கிடுச்சு , இனி அந்தக் கடவுள்தான் காப்பாத்தணும் , காதல் காப்பாத்தாது, போய் கடவுள் கிட்ட மன்றாடு ... அவர் பார்த்து உனக்கு இரக்கம் காட்டுனா தான் உண்டு...
அங்கும் இங்கும் சிறகு உடைந்த கிளிகள் போல ஜீவாவும் தேனிசையும் உணர்வு இல்லாமல் படுத்து கிடந்த அவன் அறை முன்னே பரிதவிக்க ஓடினார்கள்...
உயிரை பறிக்கும் காலமாணியோ கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்க
கடவுளே!!! எங்க அப்பாவை திருப்பிக் கொடு என்று ஜீவா அங்கிருந்த கடவுளின் பாதத்தை போய் பிடிக்க... அந்த கடவுளின் சிரிப்பை வெறித்துப் பார்த்த தேனிசை
" உன் கால்ல வந்து விழுவேன்னுதானே இதையெல்லாம் பண்ற , உனக்கு மதிப்பு கொடுக்காத என்ன. உன் கால்ல விழுந்து கெஞ்ச வைக்கணும் அதுதானே, உன் ஆசை... நெவர், நடக்காது , நடக்கவே நடக்காது இந்த உலகத்துல நடக்குற அத்தனை அக்கிரமத்தையும் பார்த்துகிட்டு இருக்கிற உன்னை மாதிரி ஒரு கடவுளுடைய உதவி எனக்கு தேவையில்லை, கண்ண மூடிக்கிட்டு இருக்கிறது நீதி தேவதை மட்டும் இல்ல ... நீயும்தான் சாமானியனோட அழுகை கண்ணீர், கூக்குரல் அத்தனைக்கும் கண்ணையும் காதையும் வாயையும் மூடிக்கிட்டு இருக்கிற இந்த சிலைக்கிட்ட கேட்டுதான் அவரோட உயிரை திருப்பி வாங்கணும்னு அவசியம் எனக்கு இல்லை" என்று கடவுளையே முறைத்துக் கொண்டு வெளியே போனவள்... அங்கிருந்து போனில் வேக வேகமாக நம்பரை டயல் செய்தாள்
ஹலோ என்று வயதான பெண்மணியின் குரல்
நான் இசை பேசுறேன் மதர்...
எப்படிம்மா இருக்க ...
அது
"உன்கிட்ட நேத்தே பேசணும்னு நினைச்சேன், போன் போட்டேன் ஃபோனை எடுக்கலையே அதற்குள் பின்னால் ஏகப்பட்ட சத்தம்
மதர் இசை அம்மாவா
இசை அம்மா அம்மா என்று சிறு பிள்ளைகளின் குரல்கள்
உலகம் அவளை வேசி என்றது
இங்கு ஒரு கூட்டம் அவளை தாய் என்றது
அவள் யார்?
ஆமாடா உங்க இசையம்மாதான் போன் போட்டு இருக்கா.. நான் ரெண்டு வார்த்தை பேசிட்டு தர்றேன்
"இசை அம்மா இசையம்மா என்று பலதரப்பட்ட குழந்தைகளின் குரல்கள் முதியவர்களின் குரல்கள் அவளை தேடும் அழகிய இதயங்களின் குரல்கள் கேட்டது..
" நீங்க பிறகு பேசுங்க மதர் , போன கொடுங்க என்று பிஞ்சு கைகள் போனை பிடுங்க துடித்தது.
"இருங்கடா ஒவ்வொருத்தரா பேசுங்க ஒரு இசை அம்மா தானே இருக்கு.. எல்லாரும் பேசணும்னா எப்படி பேச முடியும் ? என்று போனை மழலைகள் கையில் கொடுக்க
இசையம்மா எனக்கு இன்னும் கண்ணாடி வரல போன வாரமே வாங்கி அனுப்புறேன்னு சொன்னீங்க... சோட்டா பீம் படம் பார்க்கவே முடியல கண்ணு வலிக்குது..
"வரும்போது வாங்கிட்டு வரேன்டா தங்கம்..
இது இசை அம்மா இச் இசைமா...
"எனக்கு நீங்க வாங்கி கொடுத்த காரை ரோகன் உடைச்சுட்டான் இசைம்மா வேற வாங்கி தர்றேன்னு சொன்னீங்கல்ல எப்ப வருவீங்க...
"அடுத்த வாரம் வருவேன் புதுசா வாங்கிட்டு வரேன்,
"அப்ப ஓகே இச் இச், நான் இன்னொரு முத்தம் கூட கொடுத்து இருக்கேன்... அப்போ எனக்கு இன்னொரு சாக்லேட் கூட கொண்டு வரணும் சரியா
"சரிடா பட்டு
"எனக்கு வீல்சேர் வாங்கி தர்றேன்னு சொன்னீங்களே இசையம்மா, காசு இருந்தா வாங்கி கொடுங்க இல்ல காலாலயே தவண்டு நடந்துக்கிறேன் ..ஒன்னும் பிரச்சனை இல்ல , என்று என்று தரையில் ஊர்ந்து வந்து போனை பேசிய குழந்தை..
"மதர் மதர் இசை அம்மாவா என்ன பேசுறாங்கன்னு கேட்டு சொல்லுங்க" என்று காது கேட்காத குழந்தை மதரை ஆவலாக பார்த்தது..
"கண்ணன் உன்கிட்ட பேசணுமாம், நீ சொல்லு நான் அவனுக்கு சைகைல சொல்லிடுறேன்..
திருக்குறள் புக் கேட்டிருந்தான் , வாங்கி வச்சிருக்கேன்னு சொல்லுங்க மதர் தேனிசை கண்ணீரை துடைத்தாள்...
அம்மாடி இசை என் பேரனுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருது, எதாவது கிப்ட் வாங்கிட்டு வாம்மா அன்னைக்கு மட்டும் தான் அந்த சண்டாளி அவனை பார்க்க விடுவா, இந்த வாட்டியும் என் மகன் பேரனை பார்க்க கூட்டிட்டு போவியா இசை என்று தள்ளாடி வந்த வயதான பாட்டி
கண்டிப்பா பாட்டி போகலாம்....
முட்டு ஆப்ரேசன் பண்ணணுமாம் இசைம்மா, நேத்து செக்கப் பண்ண வந்த டாக்ட்டர் பய சொல்லிட்டான்
அடுத்த மாச பட்ஜெட்ல பண்ணிடுவோம் பாட்டி "
அந்தப் பாழடைந்த மண்டபம் முழுவதும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளும், ஊனமுற்ற பிள்ளைகளும், வயதான முதியவர்கள் இவள் ஒருத்தியின் குரலுக்காக வழி மேல் விழி மட்டுமல்ல, அன்பும் வைத்து காத்திருக்கிறார்கள்...
இந்த அன்புக்காக அவள் எந்த தவற வேண்டுமானாலும் செய்ய துணிந்தது தவறா சரியா???
இசை
சொல்லுங்க மதர்
"மழை பெஞ்சா கூரையெல்லாம் தண்ணி ஒழுகுது சுவர் எல்லாம் இடிஞ்சு கிடக்குது , பச்ச பிள்ளைகளை வச்சுக்கிட்டு பயமா இருக்கு இசை, வாங்குன நிலத்துல ஒரு பில்டிங் கட்டி இவங்களை எல்லாம் பாதுகாப்பா வச்சிரலாம்னு பார்த்தா... முடியலையே இசை ... ஏதாவது யோசிச்சியாம்மா என்று மதர் தயக்கமாக கேட்க
"நானும் என் சக்திக்கு மீறி என்னென்னலாமோ பண்ணி பாத்துட்டேன் மதர்.... எல்லாம் சரியாகிடும்னு இப்பதான் நிம்மதியா இருந்தது நம்பி அவர் தோள்ல இந்த பாசப்பாரத்தை இறக்கி வைக்க காத்திருந்தேன் ... ஆனா அந்த கடவுளுக்கு அது பொறுக்கலையே மதர்... இந்த பிள்ளைகளுக்காக மடிப்பிச்சை கேட்கும் போது வந்து மடியில உக்காரு என் உடம்பு இச்சையை தீர்த்துட்டு போன்னு சொன்ன அத்தனை பேர் முன்னால ... உன்ன உன் உடம்புக்காத்தாண்டி காசு கொடுத்து வாங்குறேன்னு கூட்டிட்டு போனவர் கொட்டி கொட்டி காதலை கொடுத்துட்டு, என்ன அம்போன்னு விட்டுட்டு போயிடுவார் போல இருக்கு மதர் என்று தேனிசை கதறி உடைந்து போய் அழுதாள்
எல்லா பாவங்களும் ஆசையால் உருவாகுவதில்லை, சில பாவங்களுக்கு ஆசையே இல்லாததும் காரணமாகி போகும் ... எனக்கென்று எதுவும் வேண்டாம் என்று வாழத் தெரிந்த அவளுக்கு , இவர்களின் கண்ணீரும் தேவைகளும் பாவத்தை துணிகரமாக செய்யத் வைத்து விட்டது
அவள் பாவிதான்!!
அவள் பாவம் செய்தவள்தான் பணத்திற்காக விலை போனவள்தான், பணத்திற்காக தன்னை விற்றவள்தான் பணத்திற்காக கண்ணை மூடிக்கொண்டவள்தான்
அந்த பாவத்தில் சாபம் விளையும் என்று நினைக்க காதல் அன்றோ விளைந்து நின்றது ..
அவள் மாபாவி என்று உலகம் உமிழ்ந்தது அவள் பாவிதானோ விடை உங்களுடையது!!
அய்யய்யோ என்னம்மா சொல்ற .... நடந்ததை அவள் அழுது கொண்டே சொல்லியவள்
"இனி இதை எல்லாம் நீங்க பாத்துக்கோங்க கடைசி வரைக்கும் உங்களுக்கு இப்படியே உலக மறைவான துணையா இருந்தாலும் சரிதான், உங்க இதயத்துக்கு இணையா இருந்தாலும் சரிதான்... உங்க மரியாதை கெடுக்காம உங்களுக்காக நான் நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி வாழ தயார்னு அவர் கையால தாலி கட்ட ஆசைப்பட்ட நான் அவருக்கு வப்பாட்டியா , இந்த இருட்டு உலகத்திலேயே வாழ நினைச்சேன் மதர்... ஏன்னா என் காதலுக்கு எப்படி மரியாதை வாங்க புரியல ?? அவர் நிலையை உணர்ந்து அவர் போக்குல போறதுதான் அவருக்கு நான் கொடுக்கிற காதல்பரிசுன்னு நினைச்சேன்
"ஆனா உனக்கு அந்த இருட்டு உலகம் கூட கிடையாது.. அவனை உன்கிட்ட இருந்து பறிச்சி கொண்டுட்டு போறேன்னு இந்த காலனும், கடவுளும் போட்டி போட்டு என் வாழ்க்கையில் விளையாடுறாங்க ... எனக்கு யாரும் இல்லையா என்ன?? படையே சம்பாதிச்சு இருக்கேன் ... அவங்க கிட்ட சொல்லுங்க... எங்க அப்பா திரும்பி வரணும்னு கேட்க சொல்லுங்க, அவங்க எல்லாம் கேட்டா காலனும் கடவுளும் கூட அவங்க முன்னாடி மண்டி போடுவாங்க.... கேட்க சொல்றீங்களா மதர்...
இரும்மா லவுட் ஸ்பீக்கரில் போடுறேன்.. நீயே உன் பிள்ளைங்க கிட்ட சொல்லிடு,,
குழந்தைங்களா
" அம்மா" அங்கே இங்கே வாயில் எச்சில் ஒழுக்கிக் கொண்டு அடங்காமல் ஒவ்வொரு திசையில் சுற்றிக் கொண்டிருந்த பிள்ளைகளை முதியவர்களை கொண்டு வந்து அங்கே நிற்கவைக்க... அவர்கள் மனம் போலத்தான் அழகாய் சிரித்தார்கள்..
" உங்களுக்கெல்லாம் டிரஸ் வாங்க காசு தருவாரு இல்ல அது யாரு
" நம்ம அப்பா" என்று குழந்தைகள் ஒன்று போல் கூற
அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, எல்லாரும் எங்க அப்பா எங்களுக்கு வேணும், எங்களுக்காக செய்யுறதுக்கு இந்த உலகத்துல யாருக்கும் இரக்க குணம் கிடையாது ... எங்க அப்பாவுக்கு தான் அந்த இரக்க குணமும் எங்கள் மேல அன்பும் உண்டுன்னு எங்க அப்பாவை திருப்பி கொடுன்னு அந்த கடவுள்கிட்ட சண்டை போடுறீங்களா ?
அவ்வளவு தானே இதோ " கடவுளுக்கு வசைபாடல் நடந்தது கத்தி கத்தி கடவுளை சண்டைக்கு இழுத்தனர்...
என்னிடம் பணம் இல்லாம இருக்கலாம் ஆனா படை இருக்கு மதர் பாத்தீங்களா? அவர் திருப்பி கொண்டு வந்துடுவேன் வைக்கிறேன் மதர்.... என்று வைத்தவள் கண்களை துடித்தாள்.... விறுவிறுவென அந்த இருட்டில் காரிடரில் பெண் சிங்கமாக நடை போட்டாள்....
கடவுளை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தவள் நேராக ஐசியூ முன்னே போய் நின்றாள் ... ஜீவா ஒரு சேரில் தலை சாய்த்து அமர்ந்து இருந்தான் .... அவள் ஐசியூ கதவின் மீது கையை வைக்க போக
"உன்ன போன்னு சொன்னேன், நான் சொல்றது புரியல என்று அவளை பிடித்து தள்ள போக, தூண் போல நின்றவள் பளீர் என்று ஒரு அடி அவன் கன்னத்தில் போட்டாள் , அவன் பே என்று நிற்க ...
"உன் அப்பன் கூட வாழ்ந்தவ நான் யாருடா உனக்கு? அவன் இசை முகத்தில் தெரிந்த ரெளத்திரத்தில் ஆடாது நிற்க
"உன் அப்பன் கூட வாழ்ந்த நான் உனக்கு அம்மா முறை , இன்னொரு தடவை மேல கை வச்ச .... அவருக்கும் எனக்கும் இடையில நீ யாருடா தடிப்பயலே, தள்ளிப்போடா "என்று குறுக்கே நின்ற ஜீவாவை ஓங்கி பிடித்து தள்ளிவிட்டு உள்ளே போக அந்த ...படுக்கையில் உடல்கள் முழுக்க உயிர்க்காக்கும் கருவியோடு கிடந்த யட்சன் முன்னே போய் நின்னாள் ...
"டேய் கிழவா ஆசை காட்டி மோசம் பண்ண பாக்குறியா? வாழ்றதுக்கு பேயாசை கொடுத்துட்டு நீ பேயா போயிடலாம்னு பாக்குறியா.. அப்படி எல்லாம் உன்ன விட முடியாது, என்ன அங்க போய் எனக்கும் சேர்த்து இடம் பிடிக்க பாக்குறியா, நான் எதுக்கு சாகணும் ? நான் உன் பின்னாடி எல்லாம் வரமாட்டேன், உனக்கு நான் தேவைன்னா, நீ என் பின்னாடி வா ... இந்த சுகர் பேபி வேணும்னா, நீ வாழ்ந்துதான் ஆகணும்... நான் ரெடி உனக்கு வப்பாட்டியா வாழணுமா, வாழ்றேன் ஊருக்கு தெரியாம புள்ள பெத்துக்கணுமா ... பெத்துக்கலாம் என்ன வேணும்னாலும் செய்றேன்.... என்று அவன் முகம் முன்னே முகத்தை கொண்டு வந்து காற்றை நிரப்பி அவன் உதட்டில் ஊதிய தேனிசை...
ஆனா நீயும் நானும் சேர்ந்து வாழனும் கிழவா, இந்த நரை முடியை பாக்காம என்னால இருக்க முடியாது, என்ன பாக்காம உன்னால இருக்க முடியாது.... அப்படி எல்லாம் உனக்கு டிக்கெட் கொடுத்து மேல அனுப்ப முடியாது .. காலையில வரைக்கும் தான் உனக்கு டைம் எழும்பி வர்ற... நீ வாங்கி தந்த பாதி துணி இன்னும் நான் உனக்கு போட்டு காட்டல, சொன்ன தானே ஹாஸ்பிட்டல்ல வச்சு ஒரு ரொமான்ஸ் பண்ற மாதிரி சீன் ரெடி பண்ணனும்னு, நீ சீன் எல்லாம் ரெடி பண்ண வேண்டாம், பாருங்க எல்லாம் பக்காவா இருக்கு, நீங்கதான் எழும்பி வரணும்... கால் கை தானே உடைஞ்சிருக்கு , மத்தது நல்லா தானே இருக்கு ரொமான்ஸ் பண்றதுக்கு கையும் காலுமா முக்கியம், உன் நரை முடி போதாது கிழவா, நான் சொல்றது எல்லாம் உன் காதுல கேட்குதுன்னு எனக்கு நல்லா தெரியும் ... என் பேச்சுக்கு மட்டும் தான் உன் காது செவக்கும் அங்கிள் அங்கிள் அங்கிள் வருவீங்கதான என்று கத்தினாள்....
மூணு அங்கிள் போட்டிருக்கேன் மூணு கடி வேணும் அங்க சரியா கிழவா? என்று கிசுகிசுப்பாக கூறி அவன் உதட்டில் முகத்தை போட்டு புரட்டி முத்தம் வைத்தவள்...
கிழவா திரும்பி வா , உனக்காக எல்லாம் கண்ணீர் வீணாக்க முடியாது புரியுதா? ஏகப்பட்ட தேவை இருக்கு ... எவன் எனக்கு பணம் தருவா சொல்லு, நீதான் எனக்கு கிடைச்ச இளிச்சவாய், உன்ன நம்பி தான் இடத்தை வாங்கி போட்டிருக்கேன் , பீல்டிங் கட்ட வேண்டி இருக்கு , லைப் டைம் செட்டில்மேண்டுக்கு காண்ட்ராக்ட் போடணும் சீக்கரம் வந்து சேர் என்றவள் அவன் நரைத்த தாடி இழுத்து நரைத்த மீசை நடுவே உள்ளே மறைந்து இருந்த யட்சன் உதட்டில் முத்தம் வைத்தவள்... உதட்டை அசைத்து ஏதோ சொல்ல, என்ன சொன்னாளோ ?
கீங் கீங் கீங் என்று உயிர்க்கருவி எல்லாம் அலற ஆரம்பிக்க
அய்யய்யோ !! எங்க அப்பாவை கொன்னுட்டா என்று ஜீவா அலற டாக்ட்டர் அனைவரும் பதறி உள்ளே வர இவள் யட்சனை மேலிருந்து கீழ் வரை முறைத்து பார்த்து கொண்டே
இப்ப செக் பண்ணுங்க , ட்ரீட்மெண்ட் கொடுங்க கிழவன் கோ ஆப்ரேட் பண்ணுவார் "என்று விட்டு போக மருத்துவர்கள் போகும் அவளை கண்கள் விரிய பார்த்து கொண்டு நின்றார்கள் உயிர்கருவி கீர் என்று உயர்ந்து ஆபத்து கட்டத்தை தாண்டியது...
காமம் சாகடிக்கும்
காதலுக்கு வாழ வைக்க மட்டுமே தெரியும் !!