மூப்பு அடையா யட்சகா 18
Yecha18
18 மூப்பு அடையா யட்சகா!!
பால்கனியில் நின்று மகன் கார் வெளியே போவதை பார்த்துக்கொண்டே நின்ற யட்சன் அலமாரி திறந்து தங்க நிற திரவத்தை எடுத்துக் கொண்டு வந்து பால்கனியில் அமர்ந்தான்... அவள பேசிவிட்டு போன பேச்சில் காது மடல் சிவந்து கண்கள் ரத்த சிவப்பாய் மினுமினுக்க , அந்த இருட்டில் எரியும் திரவத்தை குடுவையில் ஊற்றி தன் வயிற்றிலும் நெஞ்சிலும் பரவி இருந்த தீயை அணைக்க பாடுபட்டான்... இரண்டு ரவுண்டு போய்விட்டது ஆனாலும் மூளை முழுக்க அவள் ஆக்கிரமித்து இருந்தாள்...
உன் மடியில படுத்து உன் மார்பு மத்தியில் தூங்கின யட்சனோட ஆசை முகம்தான் நீ பார்த்து இருக்க.. மோகமும் தாபமும் போட்டிபோட உன்ன சுத்தி வந்த போதை முகம் தான் நீ பார்த்து இருப்ப .. ஆனா
நான் வேட்டையாடி பார்த்ததில்லை, வெறி புடிச்சு நிக்கிறது பார்த்ததில்லை என்னோட கோரத்தாண்டவத்தை நீ பார்த்ததில்லை பாக்க வைக்கிறேன்... எப்படி இன்னைக்கு என் முன்னாடி என் கண்ண பாத்து திமிரா பேசிட்டு போனியோ? அதே மாதிரி என் முன்னாடி உன்ன கதற விடல நான் யட்சன் இல்லடி என்று நிதானம் இல்லாமல் கிளாசை வாயில் சரிக்க.. உள் புகுந்த நீரில் சுள்ளென்று வயிறு இன்னும் எரியத்தான் செய்தது ... ஆனால், அவள் நினைவை எதைக் கொண்டும் அழிக்க முடியாமல் அப்படியே சேரில் தலை சாய்ந்து அமர்ந்திருக்க..
திடீரென என்ன நினைத்தானோ பட்டென கண்களைத் திறந்தவன் மணியை பார்க்க .. மணி ஒன்று தன் வெள்ளை நிற தாடியை சொரிந்து கொண்டே கண்களை சுருக்கியவன்... வேகமாக எழும்பி கீழே இறங்கி வந்தவன்... கார் சாவியை எடுத்தபடி
சண்முகம் சண்முகம் என்று அந்த இருட்டை கிழிக்க சத்தம் கொடுக்க... அவர்கள் வீட்டு பக்கத்தில் இருந்த குவாட்டர்ஸ்லிருந்து சண்முகம் கொட்டாவி விட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தவர்
சார்?
ஜீவா எந்த இடத்துக்கு பார்ட்டி போயிருக்கான்..
ஏதோ ஈசிஆருக்குன்னு சொன்னாரு ...
பார்ட்டிக்கு தான் போயிருக்கானா, இல்ல பப்புக்கு போயிருக்கானா
தெரியலையே சார் என்று அவர் தலையை சொரிய..
ஷட் , அவன் ரெகுலரா போற பப் பேர் என்ன
____ என்று கூற அதை மனதில் குறித்துக் கொண்டவன்
"நாய் ஒத்தையா நாசமா போக மாட்டானா? அவளையும் கூட்டிட்டு போயிருக்கான்... அவளுக்கு அங்கே என்ன தெரியும் என்று தள்ளாடியவன் காரை நோக்கி போக..
"சார் நான் வேணும்னா ட்ரைவ் பண்ணட்டுமா... நீங்க நிதானத்துல இல்ல, குடிச்சு இருக்கீங்க போல இருக்கே" என்று சண்முகம் தயங்க...
"ஐயம் ஆல் ரைட் பாத்துக்குறேன் பை த பை அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை நீங்களாவது என் மேல அக்கரையா இருக்கீங்களே தேங்க்ஸ்" என்று சொல்லிக்கொண்டே காரை எடுத்தவன் இருட்டில் லம்பி லம்பி போவதை சண்முகம் பாவமாக பார்த்தார்...
காரில் ஏறிய யட்சன், ஆக்சிலேட்டரை ஒரே அழுத்து அழுத்தினான்... அந்த இருட்டில் கீங் கீங் என்று சவுண்ட் போட்டு கொண்டு அவன் கார் ரோட்டில் புயலை விட வேகமாக பாய்ந்து கொண்டு இருந்தது..
"இசை இப்ப எதுக்கு அழுற எல்லாரும் பாக்குறாங்க என்று ஜீவா இசை தோளை தொட வர.. அவனிடமிருந்து விலகி நின்று கொண்டவள்...
பார்ட்டின்னு தான சொன்ன இங்க வந்த பிறகு எல்லாரும் என்னென்னமோ பண்றாங்க...
என்ன பண்றாங்க நீ பேசுறத பாத்தாதப்பா இருக்கு எல்லாரும் குட்டியா சரக்கு அடிப்பாங்க. அப்புறம் ராத்திரி வரைக்கும் பேசுவாங்க , அவ்வளவுதான் முதல்ல இதெல்லாம் பயமா இருக்கும் இசை... அப்புறம் போகப்போக பழகிடும்.,
"உனக்கு பழகிடும் எனக்கு இதெல்லாம் சரி வராது என்ன கொண்டு போய் வீட்ல வீடு ஜீவா "என்று பல்லை கடித்துக் கொண்டு ஜீவாவின் முன்னால் நின்ற தேனிசைக்கு கண்ணீர் கட்டியது...
"ப்ளீஸ் இசை எல்லாரும் ஆசைப்படுறாங்க ஒரே ஒரு டான்ஸ் தானே இப்படி பேபி டால் மாதிரி இருக்கிற உன் டான்ஸ் பார்க்க ஆசைப்படுறாங்க, ஜஸ்ட் டான்ஸ் தானே ஆடுனா என்ன தப்பு ...
"என்ன தப்பா கிழவன் தருதலை நாயை பெத்து விட்டிருக்கான் என்று பல்லை கடித்தவள் ...
என்னால ஆட முடியாது என்ன வீட்ல கொண்டு போய் விட முடியுமா முடியாதா....
நான் பார்ட்டிக்கு வந்துட்டு பாதில போக மாட்டேன்..
"அப்ப வெளிய போய் உட்காருறேன், முடிஞ்ச பிறகு கூட்டிட்டு போ..
"அது உன் இஷ்டம் என்று முறைத்தபடி சொல்லிவிட்டு ஜீவா அவன் கூட்டத்தோடு போய் சேர்ந்து கொள்ள ...
உவாக் தலைவலி எடுத்துவிட்டது நாத்தம் குடலை புடுங்கியது ..
நாகரீகம் என்ற பெயரில் இளைய பட்டாளம் எப்படி எல்லாம் சீரழிகிறது... அவளையும் சேர்த்துதான் திட்டிக் கொண்டாள்...
போட்டு இருந்த ஆடை வேறு அவளுக்கு அசவுகரியமாக இருந்தது , சேலையாக இருந்திருந்தால் முந்தானை எடுத்து உடலை மூடி போட்டு இருக்கலாம் ... அங்கு இருப்பவர்களின் பார்வை எல்லாம் என்னவோ செய்ய மெதுவாக அந்த கூட்டத்தை விட்டு நகர்ந்து வெளியே வந்து இருட்டில் இருந்த சேரில் வெவெடக்கும் குளிரில் கைகளை சூடாக உடலோடு கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டாள்
ஜீவா இப்போது வருவான் இப்போது வருவான் என்று பப் வாசலை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் ,. ஜீவா வந்தது மாதிரி இல்லை..
"வீட்ல இருந்தா கிழவனோட தொல்லை தாங்க முடியாதுன்னு அவர்கிட்ட இருந்து தப்பிக்க இவன் கூட வந்ததுக்கு எனக்கு இதுவும் தேவை, இன்னமும் தேவை "என்று முணுமுணுத்துக் கொண்டே உட்கார்ந்தவள் அருகே கப்பென மதுவின் வாடை அடித்து தலையை தூக்கிப் பார்க்க நான்கு பேர் சிகரட்டை புகைத்து அவள் முகத்தில் விட்டபடி தேனிசையை மேலிருந்து கீழ் வரை வக்கிரமாக பார்த்துக் கொண்டு நெருங்க
என்ன வேணும் என்றாள் கொஞ்சம் திமிராகவே
ஜீவாவோட பிரெண்ட்ஸ் நாங்க
"அதுக்கு கட்டவுட் வைக்கணுமா, ஆளையும் மொகரையும் பாரு , தல நிறைய கோழி கக்கா இருந்து விட்ட மாதிரி ஒரு ஹேர் ஸ்டைல் , கஞ்சா குடுக்கி மாதிரி ஒரு ட்ரெஸ்ஸிங்... பெரிய பேரழகன்க நினைப்பு வந்துட்டாங்க என்று திட்டிவிட்டு அவர்களை விட்டு விலகி நடக்க... மீண்டும் அவர்கள் வந்து இவளை மறைத்தார் போல் நின்று கொண்டு
"ஜீவா பாதி குவாட்டர் அடிச்சா மீதி நாங்க தான் அடிப்போம்
"நல்ல கொள்கை தமிழக மேம்பாட்டு அறிக்கையில சேர்த்துடுவோம்...
"ஜீவா புது கார் வாங்கினா முதல்ல அவன் ஓட்டுவான் அப்புறம் நாங்க ஓட்டுவோம் ....
"அதுக்கு நான் என்ன எழவுடா பண்ணணும்...
"அதே மாதிரி தான் அவன் என்ன வாங்குனாலும் ஷேரிங் ஷேரிங் தான்....
"எப்பா என்ன கருமத்தை பேச வர்றானுங்க... இந்த நாசமா போறவனை பெத்து வளர்க்க தான் இந்த கிழவன் இந்த பாடு பட்டானா என்று தலையில் அடிக்க தோன்றியது...
"இப்போ புதுசா லவ்வர் வாங்கி இருக்கானாமே.. எங்ககிட்ட கூட சொல்லல... திடீர்னு அழகா அம்சமா உன்ன கொண்டு வந்து எங்க முன்னாடி நிப்பாட்டுனதும் ஸ்டன்னாகிட்டோம் ... எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? என்று அவர்கள் அவளை வர்ணனையாக பார்க்க ... லைட்டாக அவர்கள் எண்ணம் புரிய திகைத்தாள்... அருகே இருந்த அழகுச் செடியின் பின்னால் தன் அழகை மறைத்தபடி நின்று கொண்டவள்..
இதே வார்த்தையை ஒவ்வொரு அம்மாகிட்டேயும் போய் சொல்லுங்கடா குளிர்ந்து போவாங்க சீசீ , வழியை விட்டு நகர்ந்து நில்லுங்கடா .... இல்ல இங்க உடைஞ்சி கிடக்குற பாட்டில் எல்லாம் ஒவ்வொருத்தன் வயித்துலேயும் போய் லேண்ட் ஆகிடும் ,,, என்ற தேனிசை நோக்கி ஒருவன் அடி மேல அடிவைத்து நெருங்க ..
பக்கத்துல வராதுன்னு சொன்னேன் கேக்கல... ஜீவா ஜீவாஆஇஆஆஆ என்று அவள் கத்த..
ஜீவாதான் அடித்த போதையில் மேஜையில் குப்புற கிடந்தானே ... இவள் சத்தம் எப்படி அவனுக்கு கேட்டிருக்கும்
"ஜீவா உன்னோட பிரெண்ட்ஸ் என்கிட்ட மிஸ்பிகேவ் பண்றாங்க வாடா, எங்கடா போய் தொலைஞ்ச வாடா என்று தேனிசை கத்த ,. அந்தோ பரிதாபம் அந்த இருட்டில் அவளுக்கு கருணை காட்ட எந்த ரட்சகனும் வரவில்லையே
"டேய் அவ வாய பொத்து அப்படியே பின்னாடி இருக்கிற காட்டுப் பக்கம் கொண்டு போயிடலாம் என்று ஒருவன் கூற, மீதி மூவரும் அவளின் துள்ளலை அடக்க அருகே வர
விடுங்கடா என்று ஓட போனவள் பின் ஆடை கிழிய ...
ஆஆஆஆஆஆஆஆஆஆ என்று உடலை மறைத்து கோண்டவள் முன்னே ஒருவன் குரங்கா பல்டி அடித்தான்..
அவளை காக்க ரட்சகன் வேண்டுமானால் வராமல் இருக்கலாம்.. யட்சகன் வராமல் இருப்பானோ ஒருவன் முதுகில் பளீர் என்று யட்சன் மிதித்த மிதியில் பொத்தென்று போய் மணல் மீது விழ,,, அவன் பின்னே மற்ற மூவரும் போய் தரையில் விழுந்தனர்..
ராஸ்கல்ஸ் என்று வெள்ளை சட்டையை முறுக்கி விட்டபடி அவர்கள் முன்னால் நரைத்த மீசையை முறுக்கி விட்டபடி ஆறடி இரும்புத்தூண் போல தூணை பிளந்து எடுக்கும் நரசிம்மன் போல, வேட்டையாடி சூடான ரத்தத்தோடு இரையை தின்னும் சிறுத்தை போல, ஓங்கி உயர்ந்த படர்ந்த உடலோடு அவர்கள் முன்னால் நின்று கொண்டிருந்தான் யட்சன்...
அங்கிள் என்று நால்வரும் பதறி எழும்ப,,, தேனிசை கொண்ட நிம்மதிக்கு அளவே இல்லை
யூ இடியட்ஸ் என்று கையை ஓங்கப் போக .
இது உங்களுக்கு தேவையில்லாத வேலை அங்கிள் சத்தம் இல்லாம எதையும் பார்க்காதது போல வெளிய போயிடுங்க இல்லன்னா
என்னடா பண்ணுவீங்க ஹான் என்று அவன் ஓங்கிய கால்கள் நச்சு நச்சு என்று அத்தனை பேரையும் மிதித்து தள்ளியது ...
இது டிரையல்தான் , காலையில நான் யாருன்னு உங்களுக்கெல்லாம் தெரியும்டா ... என்று சுருண்டு கிடந்தவர்களை ஒரு விரல் நீட்டி எச்சரித்தவன்
வா என்று வெடுக்கென விலகி நின்று கொண்டிருந்த அவள் கையை பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்தவன்... சட்டென நின்று தன் சட்டையை கழட்டி அவள் முகத்தில் வீச..
அப்போது குமட்டிய அதே மது நெடிதான், இப்போது அவன் வாசத்தோடு சேர்ந்து சட்டையில் அடித்தது குமட்டவில்லையே நிம்மதியை அன்றோ கொடுத்தது அவன் கொடுத்த சட்டையை வேகமாக போட்டு கொண்டவள் கையை மறுபடியும் இழுத்து கொண்டு யட்சன் வெளியே நின்ற காரை நோக்கி வர..
அதேசமயம் விஷயம் வினையாகி விடும் என்று நினைத்த நால்வரும் காரில் ஏறி இவனை கார் ஏற்றி இவர்களை கொல்லும் ஆத்திரத்தில் யட்சன் நோக்கி காரை வேகமாக செலுத்தி வர ,.,, அவன் இழுத்த இழுவைக்கு வந்து கொண்டிருந்த தேனிசை போதையில் லம்பினாலும் அவளை தன் கை வளைவுக்குள் பிடித்து வைத்து லம்பிக்கொண்டே நடந்து காரை தேடிக் கொண்டிருந்தவன் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தவள் .. அவனை நோக்கி வந்த காரை ஒரு நொடியில் பார்த்து விட்டாள்
அய்யய்யோ" என்று அலறி அவனை பிடித்து மறுபக்கம் தள்ளிவிட்டு அவள் காரில் அடிபட்டு அவன் மீதே போய் விழுந்தாள்...
ஹேய் இஇஇஇஇஇஇஇ நல்லவேளை அவளும் நகர்ந்ததால் இருவருக்கும் சின்ன அடிதான்... அவள் இடை கால் கையில் காயம் அவன் நெற்றியில் காயம் என்று இருவரும் ரோட்டுக்கு அந்த பக்கம் அவன் மீது இவள் என்று கிடந்தனர் ... கார் இருவரையும் தாண்டி வேகமாக பறந்து விட்டது ...
ஹேய் ஹேய் ஆர் யூ ஓகே தன் மீது கிடந்த அவளை யட்சன் குனிந்து பார்க்க
ம்ம் ..... ஸ்ஆஆஆ எழும்ப பார்த்த தேனிசை வலியில் முகம் சுணங்கினாள் ....
என்ன ஆச்சு கால் ப்ரக்சர் ஆகிடுச்சு போல நகர முடியல என்று வலியில் கிசுகிசுக்க .. அவளை கீழே உருட்டி மேலே வந்தவன் சட்டென குனிந்து அவளை தூக்கி கொண்டு வந்து காரில் போட்டவன் காரை எடுக்க .... கார் மிதமான வேகத்தில் சாலையில் வீடு நோக்கி நகர ..
நடந்த பரபரப்பில் இவள் சற்று பயந்து தான் போனாள் போல மயக்கம் வருவது போல இருந்தது
சூடா எதாவது தொண்டைக்குள்ள போனா பெட்டரா இருக்கும் கருவாட்டு கூடையை கையில தொட்டது போலல்ல கிழவன் முகத்தை வச்சிருக்கார்..காப்பி வேணும்னு கேட்டேன் இலவச கெட்டவார்த்தை கிளாஸ்ல சேர்ந்து நானும் புதுசா நாலு கெட்டவார்த்தை படிக்க வேண்டி இருக்கும் எதுக்கு வம்பு என்று தொய்ந்து போன உடலோடு தேனிசை சீட்டில் கிடக்க காரை ஓரம் கட்டிய யட்சன் சட்டை அணியாதே இறங்கி போக தலையை திருப்பி பார்த்தாள்....
காபி ஒன்னு என்று வாங்கி கொண்டு வந்து நீட்ட அதை வாங்கி குடித்து முடித்து விட்டு நீட்டியவள் கையில் இருந்து கப்பை வெடுக்கென புடுங்கி கொண்டு போன நரைத்த அழகு இந்த இருட்டில் இன்னும் கூடித்தான் போனது,..
சண்முகம் நம்ம டாக்டர் ப்ரீயா கேளு .. வீட்டுக்கு வர சொல்லு
இதோ சார் .... கார் அவன் கையில் லாவகமாக நாட்டியம் ஆடியது ... இவள் தலையை சாய்த்து ஓரக்கண்ணால் காரை ஓட்டும் அவனை பார்த்தபடி படுத்து இருந்தாள்..
சார் டாக்டர் வந்து வெயிட் பண்றாங்க" வீட்டில் வந்து கார் நிற்கவும் சண்முகம் ஓடி வர ...
ம்ம் இறங்கு என்றவன் அவளை தூக்க வருவான் என்று தேனிசை இரண்டு கையை நீட்ட...
நடந்து வாடி என்று அவள் பிடித்து கொள்ள உள்ளங்கை மட்டும் நீட்டினான்.. உதட்டை பிதுக்கி அவன் கையை பிடித்து கொண்டு தாங்கி தாங்கி நடந்து வந்தாள்
ஒன்னும் இல்லை சார் சின்ன சுளுக்கு தான் இப்ப ஓகே ஆகிடுச்சு... கால் நடக்க முடியுதா பாருங்க இசை
ம்ம் அவள் நடந்து பார்க்க முன் போல வலி அதிகம் இல்ல
ஓகேவா இருக்கு ...
சரி சார் கிளம்புறேன் என்று டாக்டர் நகர போக
மேடம் அதுக்கு மருந்து என்று தேனிசை சட்டை இல்லாது நெஞ்சு நெற்றி மீது இருந்த யட்சன் காயத்தை கை நீட்ட ...
இதை போட சொல்லுங்க என்று மருத்துவர் மருந்தை அவள் கையில் கொடுக்க , மாடி ஏறி லம்பி லம்பி போகும் யட்சனை பார்த்தவள் அவன் பின்னே மாடி ஏறி நடக்க ஆரம்பித்தாள்...
யட்சகனே ரட்சகனும் ஆனான்!!