கழிமுள்ளி நெஞ்சுக்காரி-15
கழிமுள்ளி-15
ரமேஷுக்கு கோபம் வந்துவிட்டது “ நதியாஆஆஆ என்ன பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசுறியா?அவன் அரவிந்தை அடிச்சிருக்கான். அது தெரிஞ்சும் அவனுக்கு சப்போர்ட் பண்ணாத” என்று திட்டினார்.
“அப்பாஆஆ அவன் வேணும்னேவா போய் அரவிந்தை அடிச்சிருக்கான். ஏதோ மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கல அது நடந்திடுச்சு. அதுதான் நான் மன்னிப்புக் கேட்டுட்டனேப்பா”என்று கெஞ்சினாள்.
அதைப்பார்த்த அரவிந்த் அங்கிருந்து எழுந்து வெளியே போனான். அவனுக்கு கோபம் என்பது அதைப்பார்த்த நதியாவுக்கு புரிந்தது. அதனால் அவன் பின்னாடியே ஓடி அவனுக்கு முன்னாடிபோய் வழியை மறித்துக்கொண்டு நின்றாள்.
அவனோ அவளைப் பார்த்த பின்னும் அவளை தாண்டிப்போக முயன்றான். அவனது கையை சட்டென்று பிடித்து நிறுத்தினாள்.
அரவிந்த் திரும்பி தனது கையையும் அவளையும் மாறி மாறி பார்த்தான்.
“ப்ளீஸ் அரவிந்த். விஜய் செய்ததுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன். அவன் ஒரு பாவம். எனக்கு நீ என்னென்னவோ கொடுத்துன்னு வந்து அடிச்சிட்டான். நம்ம லவ் பண்றது அவனுக்குத் தெரியாது. அவனோட லைப் இது. நம்ம வாழ்க்கையில் ஞாபகமா இப்படியான கசப்பானதுதான்இருக்கணுமா என்ன?அவன் என் நண்பன். என்னை எல்லாயிடத்திலும் காப்பாத்த நினைப்பவன். எனக்காக அவனை மன்னிக்கமாட்டியா?ப்ளீஸ் இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்று. இனி உன் பக்கமே திரும்பி பார்க்கமாட்டான். அதுக்கு நான் உத்திரவாதம்”என்று விஜயிக்காக கெஞ்சினாள்.
அவளது கண்கள் கலங்கி கண்ணீரோடு இருப்பதைப் பார்த்தவன், நின்று நிதானமாக அவளிடம் கேள்வியாகக் கேட்டான்.
“எனக்கு அடிபட்டிருக்கு, நல்லவேளை தையல் போடலை. ஆனால் இரத்தம் வந்து கட்டுப்போட்டிருக்கேன். அதை செய்தது விஜய். எனக்காக பரிதவிக்காமல் அவனுக்காக பரிதவிக்கிறியே. என்னைவிட உனக்கு அவன்தான் முக்கியமா?நான் உன்னோட வாழ்க்கை. அவன் ஜஸ்ட் பிரண்ட்டு அவ்வளவுதான். அவனுக்கென்று ஒருத்தி வந்துட்டா உன்னைவிட்டுட்டு போயிடுவான். அவனுக்காக என்னை தாழ்ந்து தணிந்துப்போகச் சொல்லுறது என்ன நியாயம்? நீயே சொல்லு”
“அது அது வந்து” என்று வார்த்தை எதுவும் வராமல் பேசமுடியாது போராடினாள்.
“சரி உனக்காக நான் அவனை மன்னிச்சுவிட்டுறேன். அதுக்காக நீ எனக்கு என்ன பண்ணுவ சொல்லு?”
“என்ன பண்ணனும்னு சொல்லு செய்யிறேன்”
“அவனுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவியா?எனக்காகக்கூட இவ்வளவு இறங்கி வரமாட்ட, ஆனால் அவனுக்காக இவ்வளவு இறங்கி வர்ற. என்னைவிட அவன்மேல உனக்கு பாசம் அதிகமாக இருக்குப்போல ம்ம்ம். அப்போ காதலைச் சொன்ன நான் டம்மி பீசா?”
“ப்ச்ச் அரவிந்த் என்ன பேசுற. நீ என் லவ்வர். என் லைப். என்கூட எல்லாத்தையும் பகிர்ந்துக்க போற பார்ட்னர். உன் மேல உயிரையே வைச்சிருக்கேன். இதுக்குமேல என்ன எதிர்பார்க்கிற. அவன் அப்படியில்லை இவ்வளவு நாளும் எனக்காக நின்ன என் பிரண்ட் நட்பு.இதுக்கூட உனக்குப் புரிஞ்சிக்கத் தெரியலையா”
“என் மேல உயிரையே வைச்சிருக்கியா? அதை நிருபிக்க சொன்னா நிருபிப்பியா?”
“எப்படி?”
“எப்போ சொல்லணுமோ அப்போ சொல்லுறேன்” என்றவன் இப்போ திரும்பி பிரின்சிபால் ரூமுக்குப் போனான்.
அதிலயே கொஞ்சம் ஆசுவாசமானவள் அவன் பின்னாடியே கண்ணைத் துடைத்துவிட்டு போனாள்.
அரவிந்த் வெற்றிவேலிடம் “மாமா மனோஜுக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுத்தமோ அதே பனிஷ்மெண்ட் விஜயிக்கும் கொடுத்திடலாம். இந்த தடவை எக்ஸாம் எழுதவிடவேண்டாம். அவன் எப்பவும்போல காலேஜ் வரட்டும். அடுத்த ஒருவருஷம்தானே இருக்குபடிச்சு முடுச்சுட்டு இந்த பேப்பர்ஸையும் டேலண்ட் இருந்தா எழுதிட்டு போகட்டும். இதுக்குமேல என்னால இறங்கி போகமுடியாது. இதுதான் என்னோட முடிவு”என்று சொல்லிவிட்டு யாரையும் பார்க்காது போய்விட்டான்.
அதற்குள் விஜயின் அப்பா திருமூர்த்தியும் வந்துவிட்டார். அவரிடம் என்ன பிரச்சனைன்னு சொன்னதும் நேராக விஜயிடம் வந்தவர் அவனை ஓக்கி அறைந்துவிட்டார்.
அவர் அடிப்பார் என்று எதிர்பார்க்காதவன் அப்படியே அதிர்ந்து அப்பாஆஆஆ என்றவாறே கன்னத்தில் கைவைத்து நின்றுவிட்டான். அதைப்பார்த்த எல்லோருக்கும் வருத்தமாகிப்போனது.
“நதியாஆஆ அவர் பக்கத்தில் போனவள் “மாமா அடிக்க்திங்க மாமா. பாவம் அவன் எனக்காக ஏதோ செய்யப்போய் இப்படி வந்து மாட்கிக்கிட்டான். இந்த ஒரு செமஸ்டர்தானே பார்த்துக்கலாம். நாங்கெல்லாம்கூட இருக்கோம்ல பார்த்துக்கிறோம். அவன் இன்ஞ்சினியாராகிட்டுத்தான் இங்கிருந்து வெளியே வருவான்”என்று அவருக்கு நம்பிக்கைக் கொடுத்தார்.
இதுக்குமேல இங்க எதுக்கு நிக்கணும்னு மனோஜின் அப்போ கிளம்பினவர் “சார் மனோஜை யாரு அடிச்சான்னு அந்த சீ.சீ.டீ.வில பார்த்துட்டு சொல்லுங்க சார். இல்லைன்னா நான் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுக்கிறேன்”என்றவர் போய்விட்டார்.
வெற்றிவேல் இதுக்குமேல என்ன பேச என்று ரமேஷிடம் காலேஜ் விசயமாக பேசிட்டுப் போய்விட்டார்.
ரமேஷ்குமாருக்கோ நதியாவிடம் நிறைய பேசவேண்டியதிருந்தது. ஆனாலும் இப்போதைக்கு பேசவேண்டாம் வீட்டுக்கு வரட்டும் என்று நினைத்து அவர்களை சும்மாவிட்டுவிட்டார்.
நதியாஆஆ இப்போது விஜயோடு வெளியே வந்தாள். அவளுக்கே ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று ஆதங்கமாக வந்தது. அப்படியே கிரவுண்டுக்கு வந்து மரத்தடியில் உட்கார்ந்தார்கள். இதுக்குமேல என்ன செய்யணும்னு அவங்க யாருக்குமே தெரியலை.
இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி எல்லோரும் ஒழுங்கா படிக்கிறதுதான் என்று முடிவெடுத்துவிட்டு வீட்டுக்குப்போக கிளம்பினார்கள்.
நதியாவுக்கு அரவிந்தை பார்த்து பேசணும்னு தோணவும் “விஜயை பத்திரமா கூட்டிட்டுப்போங்க நான் அப்பாக்கிட்ட பேசிட்டு மெதுவா வீட்டுக்குப் போயிக்கிறேன்”என்றுவிட்டு அங்கயே இருந்தாள்.
அரவிந்தோட போன் நம்பரை ஏற்கனவே ரமேஷ்கிட்டயிருந்து நேத்தே எடுத்துவிட்டாள். ஆனால் பேசத்தான் அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. நாளைக்கு அவன்கிட்ட நேரடியாக பேசினதுக்கு அப்புறம் போன்ல காண்டக்ட் பண்ணலாம் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் அவனிடம் இப்போ தனியா பேசியே ஆகணும் என்று நினைத்தவள் போனை எடுத்து அவன் நம்பரையே பார்த்திருந்தாள்.
அவன் இப்போ இருக்கிற கோபத்துக்கு என்ன பேசுவான்னு தெரியலையே என்று யோசித்து அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
“இப்படியே போனையே பார்த்திட்டிருந்தா போன் தானாகவே நீ நினைக்கிறவங்களுக்கு கால் பண்ணி பேசுமா என்ன?எவ்வளவு நேரம்தான் அந்த போனையே பார்த்திட்டிருப்ப?”என்று கேட்டுவிட்டு அப்படியே அவளது பக்கத்தில் வந்து அரவிந்த் உட்கார்ந்தான்.
அவனை ஏறிட்டுப்பார்த்தவளுக்கு ஏனோ கண்கள் கலங்கி அழுகை வந்துவிட்டது. அவனது தோளில் சாய்ந்து அப்படியே அழுதுவிட்டாள்.
எதுக்கு அழுகிறாள் என்று தெரிந்தும் அரவிந்த் அமைதியாக இருந்தான்.
அவளாக அழுது முடித்ததும் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ ஏதோ யோசனையோடு இருந்தான்.
“அரவிந்த்”
“ம்ம்ம்”
“என் மேல கோபமா?”
“ம்ம்ம்”
அந்த ம்ம்மை கேட்டதும் சட்டென்று அவனது முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.
“அரவிந்த்த்” என்று நடுங்கும் குரலில் கூப்பிட்டாள்.
இப்போது குனிந்து அவளது முகத்தைப் பார்த்தவன் “அந்த விஜய் என்ன அப்படி உனக்கு பெரிய இவனா போயிட்டான். உன் பிரண்டாவே இருக்கட்டுமே ஆனால் நீ எனக்குத்தான முக்கியத்துவம் கொடுத்திருக்கணும். அதைவிட்டுட்டு அவனுக்கா அழுதிட்டிருக்க?அவனுக்காக அழுதன்னா நான் எழுந்து போயிடுவேனு பரவாயில்லையா?”என்று கொஞ்சம் கடுமையான குரலில் கேட்டான்.
அவன் பேசியதைக் கேட்டதும் என்ன அரவிந்த் இப்படி பேசுற? நீ ரொம்ப சாப்ட்டுன்னு நினைச்சிருந்தேன். ஆனால் இன்னைக்குத்தான் உன்னோட பேச்சாலயே நீ வேறமாதிரியனவன்னு புரியவைக்கிற. சத்தியமா இதை நான் உன்கிட்ட எதிர்பார்க்கலை”என தனது மனத்தாங்கலை சொன்னாள்.
அவனோ அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவளது கண்ணைப் பார்த்தான்.
“நேத்து இந்த கண்ணுல எனக்கான காதலைப் பார்த்தேன். இப்போ யாருக்கான கண்ணீரை பார்க்கிறேன். இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு கோபம் வருமா? வராதா? நானும் சாதாரண மனுஷன்தான். என்ன உன் மேல லவ்வு வந்துட்டு. அதுதான் இங்க பிரச்சனை”
“என்ன அரவிந்த் இப்படி பேசுற. இன்னைக்கு நடந்த பிரச்சனையில் யாராக இருந்தாலும் அழுவாங்க”
“எனக்காக அழுதியா?இங்கப்பாரு என் கையைக்கூட நீ தொட்டுப்பார்க்கலை. எனக்காக பரிதவிக்கலை. நான் எப்படி இனி இந்தக்காதலை அடுத்தக் கட்டத்துக்கு தைரியமா கொண்டுபோவேன் சொல்லு”என்று நியாயமான கேள்வியைக் கேட்டான்.
“அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது திணறியவள் நான் நான் உனக்கு அடிபட்டிருக்குன்னு பார்த்தேன் நீதான் என்னை கண்டுக்கலை. இப்போ உன்னைப் பார்க்கிறதுக்குத்தான் இங்க உட்க்ர்ந்திருந்தேன்”என்றவள் அவனிடம் கேட்காமலயே அவனது கையைப்பிடித்து தனது மடியில் வைத்தாள்.
அவளது கண்ணீர் அவன் கையில் விழுந்தது.
அதைப்பார்த்தவன் இங்கப்பாரு “என்மேல உயிரையே வைச்சிருக்கேன். எதுன்னாலும் செய்வேன்னு சொன்னல்ல”
“ஆமா”
“அப்போ நான் கேட்கிறதை எனக்காக செய்”
“ம்ம்ம். சொல்லு அரவிந்த்”
“நாளைக்கு சொல்லுறேன். அப்புறம் நீ உன்பிரண்ட்ஸ்கிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இரு. அவங்கதான் நம்ம காதலுக்கும் நமக்கும் இடையில் வில்லனுங்களா வர்றானுங்க. இப்படியே போச்சுதுன்னா நம்மளை பிரிச்சிருவாங்கன்னு எனக்குப் பயமாயிருக்கு”
“அரவிந்த் என்ன பேசுற. அப்படியெல்லாம் பண்ணமாட்டாங்க அவங்க. எனக்காக விட்டுக்கொடுத்துதான் போவாங்க”
“என்னவும் செய்யட்டும் நமக்கு இடையில் வராமாயிருந்தா சரிதான்”
“வரமாட்டாங்க
“நல்லது”
“நான் கிளம்புறேன். அப்புறம் அப்பா பார்த்தா திட்டுவாங்க”
“ம்ம்ம்”
உடனே அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு போக மனசில்லாமல், அவனது கையை எடுத்து மடியில் வைத்து மீண்டும் தடவிக்கொடுத்தவள் குனிந்து முத்தம் வைத்தாள்.
“சாரி அரவிந்த். விஜய் ரொம்ப அடிச்சிட்டானா?உள்ள ரொம்பக் காயமா?”
“ம்ம்ம் நீ போனதும் காரை யாரோ தட்டிக்கூப்பிட்ட மாதிரி இருந்தது. யாருன்னு பார்த்தேன் விஜய் நின்னுட்டிருந்தான். இவன் இப்போ இங்க என்ன பண்ணுறான்னு பார்த்துட்டு காரைவிட்டுக் கீழே இறங்கினேன்
அவ்வளவுதான் உடனே அடிக்கத் தொடங்கிட்டான். நானும் அவனைத் தடுத்துப் பிடிச்சேன் “எங்க நதியாவை ஏமாத்தி பொக்கே கிரீட்டிங் குடுத்து புரோப்போஸ் பண்ணுறியா?நீ எங்களைப் பழிவாங்கதானேடா அவளைக் காதலிக்ககற மாதிரி நடிக்கிறன்னு கேட்டு அடிச்சான். நானும் பாவம் எவ்வளவுதான் தாங்கிக்கிறது. நானும் எதிர்த்து அடிக்கப்போனேன் அதுக்குள்ள பக்கத்துல கிடந்த கட்டையை எடுத்து அடிச்சான். அந்த அடியை தடுத்தேனா கையில் பட்டு கை கிழிஞ்சிட்டு நல்லவேளை தையல் போடாமலயே மருந்து வைச்சிக் கட்டிவிட்டாங்க. காயம் ரொம்ப ஆழமாயில்லை”என்று சொன்னவனை பாவமாகப் பார்த்தாள்.
அப்படியே எழுந்தவள் அவனது தலையைப் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
அவனுக்கும் அது தேவையாக இருக்கவும், அவளது முதுகோடு கையைப்போட்டு பிடித்து எலும்பு உடையிறளவுக்கு கட்டிக்கொண்டான்.
அவளுக்கு அது அவஸ்த்தையாக இருந்தாலும், அந்த காதலின் அவஸ்த்தை அவளுக்குப் பிடித்திருந்தது.
அரவிந்த் மெதுவாக அவளை நிமிர்ந்துப் பார்க்க முகம், அரைவட்டமாக மலைமுகட்டுக்குள் ஒளிந்து பார்க்கும் நிலாவாக தெரிந்தது.
“இப்படியே கட்டிப்பிடிச்சிட்டு இருந்தா எல்லாம் மறந்துப்போகும் தியாஆஆஆ”என்று சொன்னவன் அவளது வயிற்றில் முத்தம் வைத்தான்.
வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் அதிக இடைவெளியில்லை என்பதால் அது அரவிந்துக்கு வசதியாகிப்போனது. இன்னும் இழுத்து தனது மடியில் வைத்து அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து உரசினான்.
“ஏய்ய் அரவிந்த் வேண்டாம். இது எல்லோரும் பார்க்கிற இடம் இங்க வேண்டாம். அப்புறம் நம்ம காதலிக்கிறது எல்லாருக்கும் தெரிஞ்சிடும்”
“தெரிஞ்சா என்னவாம், எப்படியும் ஒரு நாள் தெரியத்தானே செய்யும், அது இப்பவேதெரியட்டுமே”
“என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருந்தால் தெரியட்டும்னு விட்றலாம் அரவிந்த்”
“ப்ப்ச்ச் போடி ஏதாவது சொல்லாத. இன்னும் இறுக்கமா கட்டிக்க எனக்கு உன் அணைப்பு வேணும்”என்றவாறே அவளை அணைத்துக்கொண்டான்.
“சோடாபுட்டி இப்போ உன் கோபம் போயிடுச்சா”
“இல்ல”
“அப்போ எப்போ போகும்”
“தெரியல”
“நான் போகவைக்கட்டுமா?”
“ட்ரை பண்ணு”என்றவன் அவளது மூக்கோடு மூக்கு வைத்து உரசினான்.
அடுத்த நொடி அவனது மீசையோடு சேர்த்து அவனது மேலுதட்டை தனது உதட்டால் கவ்வியிருந்தாள் நதியாஆஆஆ!
அரவிந்தின் கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் அவளைப் பார்க்க, அவளோ கண்ணை மூடு என்று சைகை செய்ய, அவ்வளவுதான் இருவரும் அந்த முத்தத்தில் மூழ்கி திளைத்துக்கொண்டிருந்தனர்.
நேற்றைய முத்தத்தைவிடவும் இந்த முத்தம் அரவிந்துக்கு இன்னும் அதிகமாக தித்தித்தது என்பதைவிடவும், காதல் உலகின் இன்பத்தைத் தூண்டியிருந்தது.
நதியாவின் கைகள் அவனது முடியைப் பிடித்திருக்க, அரவிந்தின் கைகள் அவளது இடையோடு முதுகோடும் படர்ந்து பரவிக்கொண்டிருந்தது.
அவர்கள் இருவரும் மோகத்தின் மோனநிலையில் இருக்க, அங்கே வந்த விஜய் அதைப்பார்த்து அப்படியே பதறிவிட்டான்.
“நம்ம நதியாஆஆஆவா இது. அதுவும் அரவிந்தோடு கட்டிக்கிட்டு இருக்கா”என்று அதிர்ந்தவன் அங்கே நிற்காமல் தள்ளி ஓடிவந்துவிட்டான்.
அவனது கண்களையே அவனால் நம்பமுடியாது கண்களை மூடித்திறந்தான்.
“நதியாவா? நம்மளைவிடவும் அரவிந்த் முக்கியம்னு அவனோடு கொஞ்சிக் குழாவிட்டிருக்காளா?”என்று அதை ஜீரணிக்கமுடியாது தவித்தான்.
இங்க ஒருத்தன் நம்மளை பார்த்துட்டுப்போனான் அப்படிங்கிறதே தெரியாமல் அங்கே காதல் சிட்டுக்கள் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள்!
விஜயிக்கு ஒரு ஜிஞ்சர் சோடா பார்சல் பண்ணுங்கடாவ்!