கழிமுள்ளி நெஞ்சுக்காரி-14

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-14

கழிமுள்ளி-14

ரமேஷ் சாப்பாட்டு நேரத்துல நதியாவிடம் பேசினார்.

“நதிம்மாஆஆ உன் பிரண்டஸ்கூட சண்டை சமாதானமாகிடுச்சா?இப்பவும் உன் முகம் டல்லா இருக்கே. இன்னும் சண்டைதான் போயிட்டிருக்கா?”என்று கேட்டார்.

“அந்த விஜய்தான் முறைச்சிக்கிட்டுப் போயிட்டான். எப்படியும் நாளைக்கு சரியாகிடுவான்பா. அதை நான் பார்த்துக்கிறேன்பா. நீங்க எதுவும் டென்சன் எடுத்துக்காதிங்க”

“அவன் ஒரு ஆளுன்னு அவன்கூட சண்டைப்போட்டிருக்கப்பாரு. அவன் எப்பவும் முறைச்சிட்டேதானே இருக்கான். அவன்கூட தனியா வேற சண்டைப்போடணுமா. அந்த சண்டைக்கோழிக்கிட்டயிருந்து நீ தள்ளியே இரு. அப்போதான் நீயும் பொம்பளை பிள்ளை மாதிரி இருப்ப”என்று நர்மதா பெரிய மனுஷி மாதிரி பேசினாள்.

அவளைத் திரும்பிப் பார்த்த நதியா “உன் வாயிக்கு அவன்கூட சண்டைதான் போடணும். நீயெல்லாம் கேர்ள்ஸ்கிட்டயே சண்டைதான் போடுற. இதுல பாய்ஸ்கிட்டன்னா சொல்லவே தேவையில்லை கட்டிப்பிடிச்சு மண்ணுல உருண்டு தலை முடியை பிச்சிக்கிட்டுத்தான் சண்டைபோடுவ.அப்படியான நீ எங்க பிரண்ட்ஸ்குள்ளயும் பிரண்ட்சிப்புக்குள்ளயும் வராது. அவங்களைப் பத்தி பேசாத புரியுதா?”என்று திட்டிவிட்டாள்.

“க்கும் உன் பிரண்ட்ஸையெல்லாம் மனுஷங்கன்னு சொல்லாத. அந்த தினேஷ் இருக்கே அவன்லாம் ஒரு கரடி. அப்புறம் அந்த குள்ளவாத்து இருக்கே முகேஷு அதுக்கிட்டலாம் பேசிட்டாலும். அப்புறம் ஒரு நெட்டையன் இருந்தானே ஹான் பேரென்ன வஸந்து அவனை நிமிர்ந்து பார்த்துட்டாலும் ஒட்டகச்சிவிங்கி. அப்புறம் எப்பவுமே உராங்குட்டான் மாதிரியே சுத்துமே அது பேரென்ன ஹான் விஜய். இந்த டிஸ்கவரி சேனல்ல சுத்துறத உன்கூட பிரண்டுன்னு வைச்சிக்கிட்டு நீயெல்லாம் வாய் பேசாத. கலெக்டரே உங்க பொண்ணுக்கிட்ட சொல்லி வைங்க. ப்ளூ கிராஸ்ல இதுங்களை பிடிச்சு குடுத்திருவேன்னு. வந்துட்டா பெரிய பிரண்ட்ஸுன்னு போடி”என்று திட்டியவள் கீதாஞ்சலி பக்கத்துலபோய் உட்கார்ந்துவிட்டாள்.

அவள் சொன்னதையெல்லாம் கேட்டு ரமேஷும் கீதாஞ்சலியும் சத்தமாக சிரித்துவிட்டனர்.

அதைப்பார்த்த நதியாவுக்கு உண்மையிலயே கோபம் வந்துவிட்டது.

“அப்பாஆஆஆஆ!அவா என் பிரண்ட்ஸை அசிங்கமா திட்டுறா நீங்க சிரிக்கிறீங்க. கலெக்ட்டரே இது சரியில்லை”என்றவள் கோபத்தில் சாப்பிடாமல் எழுந்தாள்.

“ப்ப்ச் என் நதிம்மா உட்காரு. அவா சும்மாதானே கலாய்ச்சா விடு. உன் பிரண்ட்ஸ் உன் தங்கச்சித்தானே விடு”

அதன்பின் அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்து ரூமுக்குப் போனவளுக்கு அரவிந்த் ஞாபகமாகவே இருந்தது.

அப்படியே போய் கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், தனது உதட்டைத் தடவியாவாறே கண்ணாடியில் மீண்டும் பார்த்தாள்.

“இந்த சோடாபுட்டிக்கு எவ்வளவு வேகம் பாரேன். அப்படியே என்னை இரண்டு கையாலும் வாரிச் சுருட்டி தனக்குள்ளயே வைச்சிக்கிட்டான். அம்மாஞ்சி இன்னைக்கு யாருக்கும் தெரியாமல் என்ன வேலையை செய்துட்டான். நம்மளையே மயக்கி முத்தம் கொடுத்துட்டான். நாளைக்கு காலையிலயே அவன்கிட்டபோய் அவன் சட்டையை பிடிச்சு ஏன்டா இப்படி பண்ணினன்னு கேட்கணும்”

‘நீ அவன்கிட்ட கேள்வி கேட்க போறீயா’என்று மனசாட்சி கேட்டது.

‘ஆமா என்ன கேள்வி கேட்ப? எதுக்கு எனக்கு முத்தம் கொடுத்தன்னா?’

‘ஆமா’

‘அப்படிக்கேட்டா என்ன பதில் சொல்லுவான்’

‘மறுபடியும் முத்தம் கொடுத்திடுவான்’

“செய்தாலும் செய்வான். அமைதியா யாருக்கும் தெரியாமல் முத்தம் கொடுத்திட்டு போயிடுவான்”

‘தெரியுதுல்ல சும்மா இரு’என்றதும் நேராகப் போய் அவளது பேக்கினை எடுத்து அவன் கொடுத்த ரோஜாவையும், கார்டினையும் எடுத்து பத்திரமாக தன்னுடைய வார்ட்ராப்பில் பத்திரப்படுத்தினாள்.

அதுக்கு அப்புறம்தான் அவளுக்கு தூக்கமே வந்தது. அப்படியே தூங்கிவிட்டாள்.

அடுத்த நாள் எப்போதும் போல பிரண்ட்ஸோடு சேர்ந்து காலேஜ் உள்ளே நுழையும் பொழுது காலேஜ் பரபரவென்று இருந்தது. 

“என்னடா நம்ம காலேஜா இது? ஏதோ பிரச்சனை போல இருக்கே. அப்பா வேற காலையிலே கிளம்பி வந்தாங்களே. என்ன பிரச்சனைன்னு என்கிட்டயும் சொல்லலையே சேர்மன் சாரோட கார்வேற நிக்குது” என்று பேசியவாறு ஐந்து பேரும் உள்ளே வந்தார்கள். 

இன்னும் என்ன பிரச்சனையென்று எதுவும் தெரியாது கிளாசுக்கு உள்ளே போகும்பொழுது ப்யூன் ஐந்து பேரையும் கூப்பிட்டான்.

ஐந்து பேரும் என்னவென்று கேட்கும்பொழுது “உங்க ஐஞ்சு பேரையும் கிளாசுக்குள்ள அலோவ் பண்ண கூடாதுன்னு சேர்மன் சார் சொல்லிருக்காங்க. நீங்க வந்ததும் உடனே பிரின்ஸ்பால் ரூமுக்கு வரச் சொன்னாங்க” இந்த தகவல் சொன்னவன் வேற எதுவும் பேசாமல் போய்விட்டான்.

இது என்னடா புது பிரச்சனை? நம்மதான் எதுவுமே பண்ணலையே! நம்மளை எதுக்கு கூப்பிட்டு விட்டாங்க என்று ஐந்து பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுக்கொண்டே பிரின்ஸ்பால் ரூமுக்குள் போனார்கள். 

அங்கே மனோஜின் தலையிலும் கையிலும் கட்டு போட்டிருந்தது. அவனது அம்மாவும் அப்பாவும் வந்திருந்தனர்.

அந்தபக்கம் சேர்மன் இருந்தாரு. அவரு பக்கத்துல இருந்த அரவிந்துக்கு கையில் கட்டுப்போட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நதியாஆஆ பதறிவிட்டாள்.

அரவிந்தினைப் பார்த்தாள். ஆனால் அவனோ அவளை பார்ப்பதை தவிர்த்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

நேத்து ஈவ்னிங் வரைக்கும் நல்லாதானே இருந்தான். இப்போ என்னடான்னா நம்மளை திரும்பிக்கூட பார்க்கமாட்டுக்கானே! என்று ஒருமாதிரியாக உணர்ந்தாள். அதை யாரிடமும் சொல்லவும் முடியாது என்பதால் அமைதியாக நின்றிருந்தாள்.

ரமேஷ்குமாரின் கண்களில் அவ்வளவு கோபம் இருந்தது. அதைப் பார்த்தவளுக்கு என்ன பேசணும்னு தெரியாமல் முழித்தாள்.

சேர்மன் வெற்றிவேல்தான் “ இந்தப் பையன் மனோஜை நேத்து யாரோ நாலுபேரு சேர்ந்து அடிச்சு தூக்கிப்போட்டுட்டு போயிருக்காங்க.அதுவும் நம்ம காலேஜுக்குள்ள வைச்சே அடிச்சிப் போட்டிருக்காங்க. இப்போ இது போலீஸ் கேஸ் ஆகிடுச்சு. அவங்கப்பா கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காங்க. என்னோட காலேஜ் பேரு இப்படி கெட்டுப்போறதை நான் விரும்பல. இது முதல் பிரச்சனை. நாங்க விசாரிச்சா அந்தப்பையன் ரமேஷ் சாரோட பொண்ணு பேரைத்தான் சொல்லுறான்”என்று சொல்லிவிட்டு அவரையும் திரும்பிப் பார்த்தார்.

அவருக்கோ கேவலமாக இருந்தது. ஆனாலும் எதுவும் பேசமுடியாத சூழ்நிலை என்பதால் அமைதியாக பல்லைக் கடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

“என் பேரா? நான் என்ன பண்ணினேன். நான் ஒன்னுமே பண்ணலையே?”

“நீ ஒன்னும் பண்ணலைதான்.ஆனால் உன் பிரண்ட்ஸை வைச்சு அடிச்சிருக்கன்னு மனோஜ் சொல்லுறான்”

“நான் எதுக்கு அவனை அடிக்கப்போறேன்.ஏற்கனவே அவனால்தான் பிரச்சனை வந்துச்சுன்னு நாங்க அவனைக் கண்டுக்கிறதேயில்லை சார்”

“என்ன மனோஜ் அவா வேற ஏதோ சொல்லுறாளே. நீ என்ன சொல்லுற?”

“சார் நேத்து நான் அவளுக்கு கிரீட்டிங் கார்டும் பொக்கேவும் கொடுத்தேன். அதுக்காக அவளோட பிரண்ட்ஸ் என்னை அடிச்சிட்டாங்க”

“நீ எதுக்கு அவளுக்கு பூ கொடுத்த?”

“அது நான் அவளை லவ் பண்றேன் அதுதான்”

இப்போ எல்லோரும் நதியாவைப் பார்க்க, அந்த இடத்திலும் விஜய் நதியாவிடம் “ நதி இவனா உனக்கு நேத்து பூவும் கார்டும் கொடுத்தான். அப்போ அது அரவிந்த் கொடுக்கலையா?”என்று சத்தமாகக் கேட்டுவைத்தான்.

அதில் அரவிந்த் அப்படியே அதிர்ச்சியாகி தனது மாமாவைப் பார்த்தான்.

நதியாவோ “இல்லை. எனக்கு மனோஜ்தான் கார்டும் பூவும் தந்தான். நான் அவனை திட்டி அனுப்பி விட்டுட்டேன். உன்கிட்ட சொன்னா நீ அவனை அடிக்கப்போவன்னுதான் சொல்லலை”என்று உண்மையைச் சொன்னாள்.

உடனே தினேஷும் “ஆமா சார். அவன் ஏதாவது கோபத்துல போய் சண்டைப்போடுவான்னுதான் அவன்கிட்ட எதுவுமே சொல்லாமல் மறைச்சிட்டேன்”என நேத்து இருந்த சூழ்நிலையை லேசாகச் சொல்லி வைத்தான்.

“நான் அரவிந்துதான் நதியாவுக்கு புரோப்போஸ் பண்ணினான்னு அவனை போய் நேத்து அடிச்சேன். அவன் தடுத்ததுல அவன் கையிலக் காயம் பட்டுட்டு. அதுக்கு வேற யாருமே காரணமில்லை.நான் மட்டும்தான் காரணம்.என்பிரண்டஸுக்குக்கூட இது தெரியாது”என்று உண்மையை ஒத்துக்கொண்டான்.

அவ்வளவுதான் சேர்மன் எழுந்து வந்து அவனது சட்டையைப் பிடிச்சு இழுத்து கன்னத்தில் நாலு அறைக்குடுத்தார்.

அவ்வளவுதான் பிரண்ட்ஸ் எல்லோரும் விஜய் என்று கத்த, அவனோ அதிர்ச்சியில் வெற்றிவேலைப் பார்த்தார்.

“யாரை யாரு அடிக்கிறதுடா. உங்கப்பன் ஒரு கிளர்க்குதானே கவர்மெண்ட் ஆபிஸ்ல. நீயெல்லாம் என் மருமகன் மேல கை வைக்கிறளவுக்கு வந்துட்டியா?அவன் யாரு தெரியுமா? என் அக்கா மகன். அவன் நினைச்சா இந்த காலேஜையை அவனுக்கு மாத்திடுவான். ஏன்னா இதுல பாதி பங்கு எங்கக்காவுக்கும் இருக்கு. நீயெல்லாம் என் மருமகன்மேல கைவைக்கிறளவுக்கு வந்திருக்கு. எவ்வளவு தைரியம் இருக்கணும் உனக்கு. உனக்கு இவன் என் சொந்தக்காரன்னு தெரியுமா? தெரியாதா?”

“தெரியும்”

“தெரிஞ்சே அடிச்சிருக்க.இப்பவே உன்னை போலீஸ்ல பிடிச்சுக்கொடுக்கட்டுமா. உன்னை மொத்தமா அழிச்சிட்டுப்போயிடுவான் என் மருமகன். என் ஒத்தை சொல்லுக்காக அமைதியா நிக்கிறான்”என்று எச்சரித்தார்.

அதைக்கேட்ட நதியாஆஇ திரும்பி அரவிந்தைப் பார்த்தாள். அந்தநேரம் ரமேஷுமே அவனைத்தான் பார்த்தார்.

அவனோ எதுவுமே பேசாது அமைதியாக அங்கு நடப்பதை எந்தவிதப் பதற்றமும் இன்றி பார்த்திருந்தான்.

நதியாஆஆவுக்கோ விஜயை அடிக்கிறாங்க யாருமே கேட்கலையே என்று ஆற்றாமையாக இருந்தது.

“அப்போ மனோஜையும் அரவிந்தையும் நீதான் அடிச்சி காயப்படுத்தியிருக்க?”

“இல்லை சார் நான் அரவிந்தை மட்டும்தான் அடிச்சேன். அரவிந்த்கூட சண்டையும்போட்டேன். ஆனால் மனோஜை அடிச்சது யாருன்னு எனக்குத் தெரியாது சார்”

உடனே திரும்பி மனோஜிடம் “ இவன்தான் உன்னை அடிச்சானா?”என்று திடமான பார்வையோடு கேள்வியைக் கேட்டுவைத்தார்.

“யாரு அடிச்சதுன்னு முகம் தெரியாது சார். நாலுபேரு வந்தாங்க. முகத்துல கருப்பு மாஸ்க்துணி இழுத்துப் போட்டிருந்தாங்க. என்கிட்ட வந்ததும் என் பேரு கேட்டாங்க சொன்னதும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க சார்”

“பேரு கேட்கும்போது குரல் தெரிச்சிருக்குமே. அது யாரு குரலு”

“அது தெரியாது சார்”

“நம்ம காலேஜுக்கு கேட்டுக்கு பக்கத்துலதானே நடந்துச்சு. இரு சீ.சீ.டீ.வியை செக் பண்ணிடுவோம்” என்றவர் உடனே அதை செக் பண்ணினதுக்கு ஆளைக் கூப்பிட்டார்.

“ரமேஷ் சார் இதுல நீங்க சொல்லுறதுக்கு எதுவும் இருக்கா?”

“இல்லை சார். நீங்க என்ன முடிவு எடுத்தாலும் சரிதான்சார்”என்று சொல்லிவிட்டார்.

“விஜயோட டீ.சியை ரெடி பண்ணுங்க. அவங்கப்பாவை வரச்சொல்லுங்க. இவன் நம்ம காலேஜ்ல படிச்சது போதும். அப்படியே மனோஜ் மேல டிசிபிளின் கமிட்டில சொல்லி ஆக்ஷன் எடுங்க, கூட படிக்கிற பொண்ணுக்கிட்ட புரோபோஸ் பண்ணிருக்கான் இந்த வயசுலயே. இந்த செமஸ்டர் எக்ஸாம் எழுதவிடாதிங்க. என்ன பண்ணினாலும் சேர்மன் சார் வந்து மன்னிச்சுவிட்றுவாங்கன்னு நினைக்கக்கூடாது. எனக்கு உங்களைவிடவும் என் காலேஜ் ரெப்யூட்டேஷன் முக்கியம்”என்று முடித்துவிட்டார்.

இப்படியொரு பிரச்சனையாகி இப்படியொரு முடிவுல வந்து நிக்கும்னு யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ச்சியில் இருந்தனர்.

நதியாஆஆவுக்கு அப்படியே அழுகையே வந்துவிட்டது. தன்னால்தான் இவ்வளவு பிரச்சனையும் என்று ஏங்கி ஏங்கி அழுதுவிட்டாள்.

உடனே அரவிந்திடம் போனாள். “சார் ப்ளீஸ் சார் அவனுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அவன் எனக்காகத்தான் அப்படி பண்ணிட்டான். அவனை மன்னிச்சிடுங்க. என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டீங்கன்னு நினைச்சு உங்கமேல தெரியாமல் கையைவைச்சிட்டான். எல்லாமே தப்புத்தான் இதுக்குமேல உங்கக்கிட்ட எந்த வம்புக்கும் வரமாட்டான். அவனை மன்னிச்சிடுங்க சார்”என்று அவனிடம் கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டாள்.

அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. முதல்முறையா அரவிந்திடம் மன்னிப்புக் கேட்க சொன்னதுக்கு கேட்காமல் திமிராக நின்ன அதே நதியாதான், இப்போது தனது நண்பனுக்காக அதே அரவிந்திடம் கைக்கூப்பி மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த நான்குபேரும் ஓடிப்போய் அவளது கையைப்பிடித்து இழுத்தார்கள்.

“வேண்டாம் நதி விடு. எதுன்னாலும் நான்தானே தப்புப் பண்ணினேன் நானே இந்த பனிஷ்மெண்டை ஏத்துக்கிறேன். நீ எதுக்கு மன்னிப்புக் கேட்கிற வேண்டாம்விடு. நீ யாரு முன்னாடியும் இப்படி மன்னிப்பு கேட்டு நிக்கவேண்டாம”என்று விஜயும் அவளை அரவிந்தின் முன்னாடியிருந்து இழுத்துட்டு வந்து தங்கள் பக்கமாக நிறுத்தினர்.

ரமேஷுக்கு ஒரு பிரின்சிபாலாக இந்த இடத்தில் ஒன்னுமே செய்யமுடியாது, ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். 

மகளுக்காகக்கூட பேசவில்லை. அவருக்குத் தெரியும் இந்தப் பிரச்சனையை நேத்தே சொல்லியிருந்தா வேற ஏதாவது வகையில பிரச்சனையை தீர்த்துக்கலாம். மகள் அது சொல்லாமல்விட்டது பெரிய தப்பு. அது கையை மீறி போயிட்டு இனி ஒன்னும் பண்ணமுடியாது என்று நதியாவை முறைத்துதான் பார்த்தார்.

வெற்றிவேல் திரும்பி அவர்களைப் பார்த்தவர் இதுக்குமேல என்னால எதுவும் செய்யமுடியாது. இனி விஜய் இங்க இருக்கக்கூடாது. அவன் கையில சீட்டைக் கிழித்து அனுப்புங்க என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

எல்லோரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட, நதியாவோ அப்படியெல்லாம் விடமுடியாது சார். விஜய் அடிச்சான்ல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் குடுங்க. எதுன்னாலும் நாங்க பார்த்துக்கிறோம். அவன் இந்த காலேஜ்விட்டு போகமாட்டான். அவன் இங்கதான் படிப்பான். படிச்சு டிகிரி வாங்கிட்டுத்தான் போவான்”என்றவள் விஜயிடம் போய் நின்றாள்.

அரவிந்த் அவளை கண்கள் இடுங்கப் பார்த்துவிட்டு, தனது கையையும் பார்த்தான்.

அதின் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் நட்ப்பல்லவா எப்படி விட்டுக்கொடுக்கமுடியும் என்று அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.

அடடே நதியாஆஆ நீயா இது?இவ்வளவு அறிவா பேசுறது?