கழிமுள்ளி நெஞ்சுக்காரி-11
கழிமுள்ளி-11
நதியா காலேஜிக்கு கிளம்பி வந்தவள் நர்மதாக்கூட சண்டைப்போட்டுட்டே சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தாள்.
அப்போது ரமேஷ் “நதிம்மாஆஆ இன்னைக்கு என்கூட கார்ல வர்றியா. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்”என்று அமைதியாகக் கேட்டார்.
அதைக்கேட்ட கீதாஞ்சலியோ “என்னாச்சு உங்களுக்கு அவளுக்குத்தான் வண்டி வாங்கிக்கொடுத்திருக்கோம்ல அவா வண்டியிலயே போகட்டும். நீங்க கார்ல போங்க”என்று சொல்லிவிட்டு ஆபிஸூக்குப்போக கிளம்பிவிட்டார்.
அதைக்கேட்டதும் நதியா “ஏன் கலெக்டரம்மா மட்டும்தான் பிரின்சிபால் வண்டியில போகணுமா என்ன?இன்னைக்கு நான் எங்கப்பா கார்லதான் போவேன். அப்பாஆஆ நான் உங்கக்கூட வர்றேன்பா”என்றவள் வேகமாகப் போய் கார் டோரைத் திறந்து முன்பக்கம்போய் உட்கார்ந்துக்கொண்டாள்.
அதைப்பார்த்த கீதாஞ்சலியோ “அப்பாவும் மகளும் சண்டைப்போடாமல் காலேஜிக்கு போங்க. எனக்கு நேரமாகிட்டு” என்று அவருக்காக வந்து நின்ற ஜீப்பில் ஏறி போய்விட்டார்.
இவங்களையெல்லாம் நான் கண்டுக்கொள்ளுவதேயில்லை என்பதுபோல நர்மதா தனது ஸ்கூட்டியை எடுத்துட்டுப் போய்விட்டாள்.
இப்போ ரமேஷ் வந்து காரை எடுத்தவர் நதியாவிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக ஓட்டிக்கொண்டிருந்தார்.
நதியா உடனே தினேஷுக்கு போன் பண்ணினாள். உடனே எடுத்தவனிடம் “டேய் நான் இன்னைக்கு எங்கப்போவோட கார்ல காலேஜிக்கு வர்றேன். நீங்க எனக்காக வெயிட் பண்ணாமல் காலேஜிக்கு வந்திடுங்க என்ன?”என்று தகவல் சொன்னாள்.
அவனோ “உனக்காக யாரு வெயிட் பண்ணினா. நாங்க ஏற்கனவே கிளம்பி காலேஜிக்கு வந்துட்டோம். நீ உங்கப்பாக்கூட வந்தாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. இல்லை தனியா உன் வண்டியில வந்தாலும் எங்களுக்குப் பிரச்சனையில்லை”என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.
இத்தனை வருஷ பிரண்ட்ஷிப்ல எந்த சூழ்நிலையிலயும் அவங்க யாரும் அவளை எங்கேயுமே விட்டுக்கொடுத்ததில்லை. ஆனால் இன்னைக்கு இப்படி தனியா விட்டுட்டு காலேஜ் போயிட்டாங்களே என்று திகைத்து போனை அப்படியே காதில் வைத்திருந்தாள்.
அவளது கண்கள் தானாக கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
அதைப்பார்த்த ரமேஷ் பதறி காரை ஒதுக்கி நிறுத்திவிட்டார்.
“நதிம்மாஆஆ என்னாச்சு?யாரு போன்ல?யாருக்கும் எதுவும் ஆகிடுச்சா?”என்று அவளது தோளைப்பிடித்து உலுக்கிக் கேட்டதும் கண்ணீரை வேகமாகத் துடைத்தவள் “நேத்து எங்க கேங்குக்குள்ள ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டேண்டிங் ஆகிடுச்சுப்பா. அதுக்காக இந்த தடியனுங்க நாலுபேரும் என்னை விட்டுட்டு வந்துட்டானுங்க. இப்பவும் எனக்காக வெயிட் பண்ணாமல் காலேஜிக்குப் போயிட்டாங்கப்பா”என்று சொல்லும்போதே அவளது அழுகையின் வீரியம் கூடி, சத்தமா அழுதாள்.
அவள் அழவும் அவளது தோளைத்தட்டிக்கொடுத்தவர் “இதுக்காகவா அழற நதிம்மாஆஆ. உன் பிரண்ட்ஸ்தானே.நீங்க போடாத சண்டையா?எப்பவும் சண்டைப்போட்டு பேசமால் இருந்து அப்புறம் ஒன்னா கேங்கா சேர்ற ஆளுங்கதானே. இன்னைக்கு சண்டைப்போட்டுட்டு நாளைக்கு சேர்ந்திடுவீங்க. இதுதானே உங்க பிரண்ட்சிப்புக்குள்ள நடக்குது. இதுக்கு எதுக்கு அழற? கண்ணைத் துடைச்சிக்க. அவனுங்களை பிரிஞ்சு நீ இருக்கமாட்டா, அவனுங்களும் உன்னை விட்டுட்டு இருக்கமாட்டானுங்க. இதுக்காகவா அழுத நானும் பயந்துட்டேன்”என்றவர் அவளைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.
அவருக்கு அரவிந்த் விசயம் இன்னும் தெரியாது என்பதால் எப்போதும் போல அவங்க பிரண்ட்ஸ்குள்ள ஏதோ சண்டைன்னு நினைச்சு, ஆறுதல் சொல்லிட்டு மீண்டும் காரை ஓட்டினார்.
இப்போது காலேஜுக்குள்ள கார் வரும்போதே அவளது கண்கள் அவளோட க்ருப்பை தேடியது.அவர்கள் அங்கேயில்லை.
எங்கப் போயிருப்பானுங்க. கழுதைக் கெட்டா குட்டிச்சுவருங்கிற மாதிரி கேண்டின்ல இருப்பானுங்க. இல்லையா கிரவுண்டல இருக்க மரத்தடி திண்டுல இருப்பானுங்க என்று நினைத்தவாறே காரிலிருந்து இறங்கினாள்
ரமேஷ் “நதிம்மாஆஆஆ எதுன்னாலும் பொறுமையா கேண்டில் பண்ணு” என்று சொன்னவருக்கு உள்ளுக்குள்ள மகளை நினைத்து உதறல் எடுக்கத்தான் செய்தது. அவள் காதலிக்கிறேன்னு வந்து நம்ம முன்னாடியே நின்னுறக்கூடதே என்று தவிப்பு இருக்கத்தான் செய்தது. அதை அவர் வெளியே காட்டிக்கவில்லை அவ்வளவுதான்.
“ஸ்யூர்ப்பாஆ”என்றுவிட்டு இறங்கி கேண்டீன் பக்கமாக நடந்தாள்.
அவள் அங்க போகும்போதே அவங்க நாலுபேரும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டாள். அவள் உள்ளே வர்றதைப் பார்த்ததும் கண்டுக்காத மாதிரியே தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்தவளுக்கு கடுப்பாகிவிட்டது.
‘நான் இவங்களை என் உயிர் நட்புன்னு நினைச்சிட்டிருந்தா இவனுங்க என் உயிரை எடுக்கிற நட்புமாதிரி நடத்துக்கிறானுங்க. இருங்கடா இந்த நதியா யாருன்னு காண்பிக்கிறேன்’என்று நினைத்தவள் சுத்தி சுத்திப் பார்த்தாள்.
அங்கே மனோஜ் உட்கார்ந்திருந்தான். அதற்கு அடுத்த டேபிளில் அரவிந்தும் உட்கார்ந்திருந்தான்.
மனோஜ்கிட்ட பேசினாக்கூட இவனுங்க கடுப்பாகமாட்டானுங்க. ஆனால் அரவிந்த்கிட்ட பேசினா கண்டிப்பா கடுப்பாவனுங்க என்று நேராக அரவிந்த் இருந்த டேபிளுக்கு முன்னாடி போய் நின்றாள்.
அவன் நிமிர்ந்து பார்க்கவும் “ஹாய் அரவிந்த் எப்படி இருக்கீங்க. ஆர் யூ ஓகே”என்று நல்ல பிரண்ட் மாதிரியே கேட்டுவிட்டு சேரை நகர்த்தி அவனுக்கு எதிராக உட்கார்ந்தாள்.
அரவிந்த் “என்ன நடக்குது இங்க?” என்று தனது கண்ணாடியை இறக்கிவிட்டு பார்த்தான்.
அவனது பார்வையைப் புரிந்துக்கொண்டவள் அவனது ஜூஸை எடுத்து வேண்டுமென்றே குடிக்கத் தொடங்கினாள்.
அதை அந்தப்பக்கம் இருந்த மனோஜூம் பார்த்து அதிர்ச்சியானான் என்றால், விஜய் க்ரூப் மொத்தமாக காதில் புகை வர்றளவுக்கு பார்த்து முறைத்தனர்.
அதைக்கண்டுக்காத நதியா ஜூஸைக் குடித்துவிட்டு “ எப்பவும் வீட்டுல சாப்பிடமாட்டியா அரவிந்த். நான் பார்க்கும்போதெல்லாம் கேண்டீன்ல ஜூஸ் குடிக்கிற. நீ சேர்மன் வீட்டுலதானே இருக்க. அப்புறம் என்ன சாப்பிட்டு வரவேண்டியதுதானே”என்று அக்கறையாகக் கேட்டாள்.
“இது புட்பால் பிராக்டிஸ் முடிஞ்சு வந்து எனர்ஜிக்காக பிரஷ்ஷா குடிக்கிறது. ஏற்கனவே மாமா கேண்டீன்காரன்கிட்ட சொல்லிவைச்சிட்டாங்க. அந்த ஜூஸ்தான் இது. ஆமா நீ என்ன சாப்பிடாமலா வந்த?வந்ததும் என் ஜூஸை எடுத்துக் குடிச்சிட்டியே?”
“அதெல்லாம் நல்ல சாப்பிட்டுத்தான் வந்தேன். சும்மா ஜூஸ் குடிக்கணும்னு தோணுச்சு அதுதான்”
“அப்புறம் சொல்லு தியா”என்று ஏதோ ஆண்டாண்டாக பழகியவன் போல உரிமையாக அவளது பேயரை செல்லமாக சுருக்கிக் கூப்பிட்டான்.
அதைப்பார்த்த விஜய் கேங்க் கடுப்பாகி அவளையும் அரவிந்தையும் அடிக்கிற மாதிரியே பார்த்து வைக்க, மனோஜோ அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தான்.
“என்னடா நடக்குது இங்க, இவன்கூட எப்படி நதியா பிரண்டானாள். அவளோட உயிர் நட்புக்கள் அங்க இருக்காங்க?இவா இந்த அரவிந்த்கூட எப்படி பழகினாள்?” என்று அதிர்ச்சியில்தான் பார்த்தான்.
‘அதுவா நான் உன்கூட பழகுறது என் கேங்குக்குப் பிடிக்கலைடா. அவங்களை வெறுப்பேத்ததான் வந்தேன்ன’ உன்கிட்ட சொல்லவா முடியும் என்று மனதிற்குள்ளாக நினைத்தவள் லேசாக சிரித்துவைத்தாள்.
“ஆஹா இந்த லேடி டான் நதியாவுக்கு சிரிக்கக்கூட தெரியுமா?நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருக்க தெரியுமா!” என்று ரகசியக்குரலில் சொன்னான்.
அவளோ அவன் சொன்னதிலும் சொன்ன விததத்திலும் பீரீஷாகி அவனை கண்ணெடுக்காது பார்த்திருக்க, அவனோ கண்ணைச் சிமிட்டி சிரித்தான்.
‘ஐய்யோ இந்த சோடாபுட்டி சிரிச்சாலே நம்ம மனசெல்லாம் சிதறுதே!இங்க வந்து உட்கார்ந்தது தப்போ!’என்று அவளது மனசு மண்டையில் ஓங்கி ஒன்னுபோட்டு அவளுக்கு உணர்த்தியது.
ஆனால் அவளோ எப்படியும் எவனையாவது காதலிச்சு கல்யாணம் பண்ற ஐடியாவுலதானே இருந்தேன். அது ஏன் இந்த சோடாபுட்டியாக இருக்கககூடாது. இவனும் இங்கதானே படிக்கிறான். படிச்சு முடிக்கப்போறான். என்னைவிடவும் பெரியவன் என்று யோசித்துக்கொண்டிருந்தவள் முன்பாக விஜய் வந்து நின்றான்.
அவள் நிமிர்ந்து பார்க்கவும் “வா கிளாஸுக்கு போவோம். நேரமாகிட்டு”என்று கூப்பிட்டான்.
“எனக்குத் தெரியும். நீங்க உங்க பிரண்டஸ்கூட போங்க சார். நான் என் பிரண்ட் அரவிந்த்கூட பேசிட்டு வர்றேன். என் கிளாஸுக்கு எப்போ போகணும்னு எனக்குத் தெரியும்”என்று முகத்தை வெட்டியவள் அரவிந்தின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
அரவிந்த் அப்படியே சிரிக்கும் உதடுகளை அடக்கிக்கொண்டு விஜயைப் பார்த்தான்.
அவன் நம்மளை கேவலப்படுத்தத்தான் அப்படி பார்க்கிறான் என்பதை உணர்ந்த விஜய் அங்கிருந்து வேகமாக விலகி வெளியே வந்துவிட்டான்.
“நம்ம இவா மேல கோபத்தைக் காட்டினாள். அவா நம்ம மேல இருக்கிற கோபத்துல அவன்கிட்ட ஒட்டுறா. இது நல்லதுக்கில்லையே!” என்று யோசித்தவாறே நடந்தான்.
அவன் பின்னாடியே வந்த தினேஷும் “என்னடா மச்சான் இது. அவளை விட்டுட்டு வந்தக் கோபத்துல அவா அரவிந்த்கிட்ட பேசிட்டிருக்காடா. அவனையெல்லாம் அவா ஒரு ஆளுன்னு மதிக்கலாம் மாட்டா. நீ டென்சனாகத நம்ம நதிதானே”என்று சமாதானப்படுத்தி கிளாஸுக்குக் கூட்டிட்டுப் போனான்.
“என்ன தியா உன் பிரண்ட்ஸ்கிட்ட இப்படி பேசி அனுப்பிட்ட. அவங்கக்கூட சண்டையா என்ன?”என்று அரவிந்த் மெதுவாகக் கேட்டான்.
“அது அது அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே”
“பொய் சொல்லாத தியா. நீ பேசின விதத்துலயே தெரியுதே. எதுக்கு சண்டை. நேத்து நீ எனக்கு சப்போர்ட் பண்ணிது அவங்களுக்கு பிடிக்கலைதானே. அதுக்குத்தானே இந்த சண்டை?என்னால எதுக்கு உங்க பிரண்ட்ஸ்குள்ள சண்டைப்போட்டுக்கிறீங்க. வேண்டாம் தியா நீ உன் பிரண்டஸ்கூட போ. நான் இன்னும் இரண்டு மாசத்துல எக்ஸாம் முடிஞ்சதும் பபயிடுவேன்.உனக்கு உன் பிரண்டஸ்தானே முக்கியம்”
“அதுக்காகவெல்லாம் சண்டைபோடல அரவிந்த். நீ பீல் பண்ணாத. நான் அதைப் பார்த்துக்கிறேன். இன்னும் இரண்டுமாசத்துல நீ போயிடுவியா. ப்ச்ச் அப்போ நான் உன்னை மிஸ் பண்ணுவேன்”என்றவளுக்கு ஒரு மாதிரி பீலாகிவிட்டது.
“என்னது என்னை மிஸ் பண்ணுவியா?விளையாடாத தியா. நான் யாரு உனக்கு?என்னை எதுக்கு மிஸ் பண்ணப்போற”என்று கேட்டவனின் கண்கள் அவளிடம் எதையோ எதிர்பார்த்தது.
அதைப் புரிந்தும் புரியாத மாதிரி நதியா உட்கார்ந்திருந்தாள்.
தியா என்று அவளது கையைப் பிடித்தான். அவளுக்கு என்ன சொல்லவென்று தெரியாது முதல் முதலாக படபடப்பாக உணர்ந்தாள்.
அவனது கையில் இருந்து தனது கையை உருவிக்கொண்டாள்.
“நான் நான் கிளாஸுக்கு போகணும் அரவிந்த். உனக்கு கிளாஸ் இல்லையா?”என்று எழுந்தவள் அவனை பார்த்தாள்.
அவனோ பதில் ஏதும் சொல்லாமல் அவளையே அமைதியாகப் பார்த்திருந்தான்.
இவன் ஒருத்தன் இந்த சோடாபுட்டி கண்ணாடி வழியா நம்மளை பார்த்தே மயக்கிடுவான் என்று அவனது கண்களைப் பார்க்காமல் “நான் போறேன்”என்ற நகர்ந்தவளின் கையை மீண்டும் பிடித்துக்கொண்டான்.
அதில் சட்டென்று கோபம் வந்துவிட்டது. உடனே திரும்பி “என்ன அரவிந்த் கையையெல்லாம் பிடிக்கிற. எல்லோரும் நம்மளையே பார்க்கிறாங்க. இது அப்பாவுக்கு தெரிஞ்சா என்னவாகும். இது சரியில்லை”என்று கேட்டாள்.
அதைக்கேட்டவன் “உங்கப்பா மிஸ்டர் ரமேஷ்குமாருக்கு பயப்படுற ஆளா நீ?நீ உன் பிரண்டஸ் பார்த்திடுவாங்கன்னுதானே பயப்படுற தியா உண்மையை சொல்லு?”என்று அவளைக் கணித்து சரியாக கேட்டான்.
“ஆமா அவங்களுக்குத்தான் பயப்படுறேன். ப்ளீஸ் என் பிரண்டஸ் எனக்கு முக்கியம். அவங்களுக்கு நான் உன்கூட பேசுறது பழகுறது பிடிக்காது”
“அப்போ அவங்க என்கிட்ட பேசாதன்னு சொன்னா நீ பேசமாட்டியா?”
“ம்ம்ம்”என்று தலையாட்டிவைத்தாள்.
அடியேய் அவன்கிட்ட லவ் சொல்லத்தானே வந்த. இப்படி பிரண்டஸ் முக்கியம்னு பேசி வைச்சிருக்க என்று மூளை அவளைக் குழப்பியது!
இதுக்குமேல இங்க நின்னா சரியாகாது என்று வேகமாக வெளியே வந்தாள்.
அப்போது கிளாஸ்ல இருந்த விஜயிக்கு மனசுக்குள் ஏசோ சரியில்லை என்று உணர்த்தவும் வேகமாக கேண்டீனுக்கு வந்தான்.
கேண்டினெலிருந்து கையில் கிரீட்டிங் கார்டும், ஒரு சின்ன ரோஜா பூங்கொத்தோடும் அரவிந்தை திரும்பித் திரும்பி பார்த்தாவாறே நதியா வெளியே வந்தாள்.
அதைப்பார்த்த விஜயிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. உடனே நதியாவின் பக்கமாக ஓடிவந்தவன் அவளது கையில் இருந்த கெரீட்டிங்க் கார்டையும் பொக்கேவையும் வேகமாகப் பிடுங்கியவன் உள்ளே போய் அரவிந்தின் முகத்தில் எறிந்தான்.
“என்னடா நினைச்சிட்டிருக்க நீ கண்ணை சிமிட்டினதும் உன் பின்னயாடியே ஓடிவர்றதுக்கு எங்க நதியா ஒன்னும் பொம்மையில்லை. உன் சித்துவிளையாட்டையெல்லாம் வேற எவக்கிட்டயாவது வைச்சிக்க. இதெல்லாம் கொடுத்து அவளை மயக்கணும்னு நினைச்சாலே உன்னைக் கொன்றுவேன். இதுதான் நீ அவளைப் பார்க்கிறது கடைசியாக இருக்கணும் புரியுதா” என்று எச்சரித்தான்.
நதியாவோ பேசுவதற்கு வாயைத் திறந்தாள். அவளை பேசவிடாவிடாது இழுத்துக்கொண்டுப்போனான்.
அவளோ அவனது கையில் இருந்து வேகமாக விடுபட்டு அரவிந்த் பக்கத்தில் வந்து “ சாரி அரவிந்த் சாரி. ஒரு சின்ன தப்பு நடந்திடுச்சு”என்றவள் அந்த பொக்கேவையும் கார்டையும் எடுத்துக்கொண்டிருக்க, விஜய் அவகிட்ட வந்து அவளது கையை மீண்டும் பிடித்தவன்,அரவிந்திடம் பேசவிடாது அவளை கிளாஸுக்கு இழுத்துட்டுப்போய்விட்டான்.
அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவன் லேசாக உதட்டை வளைத்து சிரித்தான். அந்த சிரிப்பு பார்க்கத்தான் ஒரு பாவப்பட்ட ஸ்டுடண்ட்டை இப்படி கேவலப்படுத்திட்டு போறான்,ஆனாலும் அவன் பாவமாக சிரிச்சிட்டு நிக்கிறானே என்பதுபோல இருந்தது. ஆனால் உள்ளுக்குள் அரவிந்துக்கு அவ்வளவு கோபம் வந்து அதை வெளிக்காட்ட முடியாது நின்றிருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும்!
நதியாவுக்கு விஜய் செய்தது பிடிக்கவில்லை. அதுவும் எல்லோர் முன்னாடியும் அரவிந்தை அசிங்கப்படுத்தியது அவளுக்கு வருத்தமாக இருந்தது. அரவிந்த் வருத்தப்படுவானே என்று நினைத்து வேதனைப்பட்டவள் விஜயிடம் பேசுவதற்கு அவனது கையைப் பிடித்தாள்.
“இங்கப்பாரு நீ ஏதாவது காரணம் சொல்லி என்னை சமாதானப்படுத்த முயலாத. இருக்கக்கோபத்துல நான் எங்கேயாவது போயிடுவேன்” என்று அவளையே மிரட்டினான்.
இவன்கிட்ட இப்போதைக்கு பேசவேண்டாம். எதுன்னாலும் அவனோட கோபம் குறைஞ்சபிறகு பேசிக்கலாம் என்று அமைதியாகிவிட்டாள்.
ஆனால் உள்ளைக்குள்ளோ அரவிந்துக்கிட்ட பேசணும் என்ற தவிப்புஅவளை அறியாமலயே ஓடிக்கொண்டிருந்தது.
ஓடட்டும் ஓடட்டும் அப்போதானே நதியாவின் காதல் தேரோட்டம் நடக்கும்!