மூப்பு அடையா யட்சகா 20
Yecaa20
20 மூப்பு அடையா யட்சகா !!
நல்ல தூக்கம் வெயில் சுள்ளென முகத்தில் அடித்த பிறகு தான் யட்சன் கண்களை கசக்கி கொண்டு கையை தூக்கி நெட்டி முறித்தவன், படுக்கையை விட்டு எழும்ப போனவன் யோசனையாக அவன் அணைப்புக்குள் என்ன இருக்கிறது என்று கீழே எட்டிப் பார்க்க...
தலையணையில் தேனிசை கழட்டி போட்ட நைட்டியை மாட்டி அதன் மீது அவனை படுக்க வைத்து விட்டு போயிருந்தாள், அவள் வாசத்தில்தான் தூக்கம் கலையாது தூங்கி இருக்கிறான் ... தலையணையை தூக்கி அறையின் மூலையில் வீசியவன் ..
"இவ இல்லன்னா செத்துட போறேனா , பெருசா கரிசனை, இவ நினைப்புல தான் நான் தூங்காம கிடக்கேன்னு நினைப்பு போல, "திட்டி கொண்டே குளியலறை உள்ளே போக , அவள் குளித்துவிட்டு போயிருப்பாள் போல அவன் சோப்பை எடுத்து யூஸ் பண்ணி இருக்க
"எடத்தை கொடுத்தா மடத்தை பிடிப்பாளே, கொஞ்சம் போதையில பக்கதுல இடம் கொடுத்துட்டேன் இந்தா ஆட ஆரம்பிச்சிட்டால்ல .... இவளுக்கு வச்சிருக்கேன் வேற வைத்தியம் "என்று நரநரவென பல்லை அரைத்தாலும் அவள் ஈரம் பண்ணிய சோப்பை வைத்து குளித்து வாசமாக கிளம்பினான் கிழவன் ....
தேனிசை வெகு நாளைக்கு பிறகு நல்ல தூக்கத்தில் இருந்தவள் கண்களை முழித்து பார்க்க .. அவன் மார்புக்குள் போட்டு அமுக்கிப் பிடித்து இவளை தூங்க வைத்திருந்தான் யட்சன்... எழும்பி மணியை பார்த்தவள் அடித்து பிடித்து எழும்பி அங்கேயே குளித்து யட்சன் சட்டை ஒன்றை மாற்றிக் கொண்டு தன் அறைக்குள் யாருக்கும் தெரியாமல் வந்து புகுந்து கொண்டாள் ..,
பெட்டியை திறந்து சேலைகளை உருட்டியவள் சென்னை போய் ஏற்காட்டுக்கு திரும்பி வந்த போது அவன் வாங்கி கொண்டு வந்த சிகப்பு நிற சேலை பில் கூட கிழிக்கபடாது இருந்தது ...அதை எடுத்து கட்டி கொண்டவள் , பால்கனி மீது படர்ந்து இருந்த மல்லிகை கொடியில் மலரை பறித்து தொடுத்து பின்னலிட்டு அதில் வைத்தவள்
"ரெட் ரோஸ் வச்சா இன்னும் நல்லா இருக்கும் , தோட்டத்துல இருந்தா பறிச்சு வைக்கணும்.... ஓகேவா இருக்கேனோ?? கண்ணாடி முன்னே அவளை முன்னும் பின்னும் திருப்பி அழகு பார்த்தவள்
"நல்லா இருந்து என்ன பிரையோஜனம் ப்ச் "சலித்து உச்சி கொட்டியவள் காதில் யட்சன் குரல் ஓங்கி ஒலிக்க
என்ன ஆச்சு என்று தேனிசை ஓடி வர .. ஹாலில் சட்டை கலைந்து வந்து நின்ற ஜீவா கன்னத்தில் பொறி பறந்தது
"டேட் "தகப்பன் அடித்த அடியில் ஜீவா ஸ்வைங் என்று சுற்றி போய் சோபாவில் விழ
"உன்ன தொலைச்சி கட்டிடுறேன் நாய "என்று யட்சன் தன் பெல்ட்டை உருவ
"டேட்
"வாயை திறக்காத நாய ஒரு பொண்ணை கூட்டிட்டு போனியே அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சதாடா .... தேனிசை பதறி அருகே போக போக சண்முகம் தடுத்து
"அவங்க அப்பா பிள்ளை இடையில போறதை சார் விரும்ப மாட்டார்மா... இங்கேயே நில்லுங்க பின்ன நம்ம கிட்ட கோவப்படுவார் "என்று அவளை தடுக்க
"அதுக்கு வேடிக்கை பார்க்கணுமா
"வேடிக்கைதான் பார்த்து ஆகணும் சார் குணம் அது
"ப்ச்
"சாரிப்பா காலையில தான் பவுன்சர் சொல்லி விவரம் தெரியும் அப்பவே அவங்க ப்ரெண்ட்சிப் கட் பண்ணிட்டேன் ... இனிமே இப்படி நடக்காதுப்பா நேத்து நான் குடிச்ச ட்ரிங்ஸ்ல ஏதோ கலந்துட்டாங்க போல இருக்கு, அதான் என்னால எழும்ப முடியல இல்லனா நான் என்று ஜீவா தலையை குனிய
_____ட்டி கிழிச்சு இருப்ப , காரணம் சொல்லாத ... பாதுக்காப்பு கொடுக்க முடியலைன்னா பத்திரமா வச்சிக்க தெரியலைன்னா, எதுக்குடா கூட்டிட்டு போற தற்குறி நாய "என்று பெல்ட்டை வீச ..
"அய்யோ ஓஓஓஓஓஓ என்று ஓடிப்போய் தேனிசை குறுக்கே விழுந்து பெல்ட்டை பிடிக்க பெல்ட் நுனி அவள் இடையில் உரசி சிவந்து போனது ,.
"என்ன பண்றீங்க...
"ப்ச் அவன் கோவத்தில் கண் சிவக்க மகனை பார்த்தவன்
"தருதலையா சுத்தறது தப்பு இல்லை ... உன் பணத்துல சுத்து ... தண்ணீ அடி தம் அடி என்ன இழவு வேணும்னாலும் பண்ணு.. கூட இருக்கிறவங்களுக்கு அதுனால பாதிப்பு இல்லாம இருன்னு தானடா சொல்றேன், அது கூட உன்னால முடியாதா?? உனக்காக ஏன் உழைக்கணும் உனக்காக ஏன் ஓடணும்னு அடிக்கடி நினைக்க வைக்கிறடா ... என்றவன் குரல் லைட்டாக தழும்ப...
"ப்ச் விடுங்க... இப்ப என்ன ஆகி போச்சு அதான் நீங்க வந்துட்டீங்கல்ல" என்றாள் மெலிதாக யட்சன் தோளை அமுக்கி
"நான் வரலைன்னா என்று அவள் கண்களை பார்க்க ...
"அதான் வந்துட்டீங்களே இனிமே இப்படி நடக்காது... அதான் சாரி கேட்டுட்டான்ல போங்க... தோளுக்கு மேல வளர்ந்த புள்ளை மேல கையை வச்சிக்கிட்டு "
"அந்த காரணம் தான் இத்தனை வருசமா இப்போ மாறுவான், நாளைக்கு மாறுவான்னு காத்திருக்க வச்சது... அவன் ஊர்ல உள்ள அத்தனை கேவலமான வேலையையும் கத்துட்டு வந்து நிக்கிறான் ச்சை" என்று காலை உதைத்து விட்டு யட்சன் நகர போக அவன் மணிக்கட்டை பிடித்து தடுத்த தேனிசை
"சாப்பிட்டுட்டு போங்க" .... யானைப்பாகன் கையில் உள்ள அங்குசம் போல அவள் சொன்னதும் கட்டுப்பட்டு அந்த ஆறடி நரைத்த வாலிபன் டேபிள் நோக்கி நடக்க .... இவளும் பின்னே ஓடியவள் ... சாப்பாட்டை எடுத்து வைக்க
போதும் என்று தடித்த குரலில் வந்தது மகனை நினைத்து வேதனை படுகிறான் புரிந்தது...
"சாப்பிடுங்க வர்றேன்" என்று இன்னொரு தட்டில் சாப்பாட்டை போட்டு எடுத்து கொண்டு தகப்பன் முதல் அடியிலேயே சோபாவில் சுருண்டு கிடந்த ஜீவா அருகே ஓடிய தேனிசை
'ஜீவா
ம்ம் என்று எழும்பி அமர
இந்தா சாப்பிடு "
வேண்டாம் என்று முனங்க
"ப்ச் சாப்பிடுன்னு சொன்னேன் ராத்திரி குடிச்ச குடிக்கு காலையில வெறும் வயிறா கிடக்காத தின்னு ... அவன் தகப்பனை பார்க்க அவனும் சாப்பாட்டை அலைந்து கொண்டு தான் இருந்தான்
"அவர் ஒன்னும் சொல்ல மாட்டார் தின்னு" என்றதும் ஜீவா உணவை உண்ண ஆரம்பிக்க ...
"இங்க பார் ஜீவா..உனக்கு அட்வைஸ் பண்ற வயசு எனக்கு இல்லை ... ஆனா உன் அம்மா இருந்திருந்தா எதை சொல்வாங்களோ அதை நான் சொல்றேன் அவ்வளவு தான் ...
"மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னர்க் கசக்கும் பின்னர் இனிக்கும்" இளமையிலே முதியவர்கள் சொல்ற அறிவுரை நமக்கு கசப்பா தான் இருக்கும்.. ஆனா, அந்த கசப்ப கஷ்டப்பட்டு விழுங்கிட்டா , நாம வளரும்போது அது இனிப்பு தரும்... உன்னை சொல்லி குத்தம் இல்லை... இந்த உலகம் மார்க்குக்கும் படிப்புக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்தை, பண்புகளை கற்றுக் கொடுப்பதில, வாழ்க்கையோட தத்துவத்தை சொல்லிக் கொடுக்கிறதுல கோட்டை விட்டுடுச்சு ... இனி நம்ம சமுதாயத்தை மாற்றவோ திருத்தவோ முடியாது... இது எனக்கும் சேர்த்து தான் சசொல்றேன ஜீவா...
பெண்ணியம் என்ற பெயரில கண்டதையும் செய்ற சுதந்திரம் பெண்ணுக்கும்... செல்லம் என்ற பெயரில கட்டுப்பாடே இல்லாம வாழக்கூடிய சுதந்திரத்தை ஆணுக்கும் எப்போ கொடுத்துடோமோ... அப்பவே நம்மளோட தனிப்பட்ட ஒழுக்க நெறி தகர்ந்து போயிடுச்சு... எல்லா சுதந்திரமும் நல்லது இல்லன்னு நாமெல்லாம் கத்துக்கணும்... கத்துக்கிட்டா தான் நமக்கு பின்னாடி வர்ற சந்ததியையாவது காப்பாத்திக்க முடியும் .. இன்னிக்கி அரைகுறையாவது இருக்கிற அன்பு பாசம் காதல் நேசம் உண்மை தூய்மை இது எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் இதே நிலைமை நீடிச்சா அகழ்வாராய்ச்சியிலையோ , இல்லை கீழடி ஓலைகள்லையோ, நம் முன்னோர்கள் பயன்படுத்திய வார்த்தைகள்னு புரட்டிப் பார்க்க வேண்டிய அவல நிலைக்கு நம் சந்ததி வந்துரும்.... தப்பு செய்யாதேன்னு சொல்லல ஜீவா, கள்ளமும் கற்று மறந்துடு.. அவன் தலை கவுந்தே உட்கார்ந்து இருக்க, சாப்பாட்டை பிசைந்தபடி இருந்த யட்சன் அவள் பேசுவது கேட்டபடி, தன் சட்டையை முழுங்கை வரை மடித்து விட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்து விட்டான்....
"உன்ன ராவும் பகலுமா சம்பாதிச்சு இந்த வீட்டுக்கு போட சொல்லல... அவர் நடத்திட்டு இருக்காருல்ல 100 தொழில் அது எல்லாத்தையும் உன்கிட்ட கொடுத்து செய்யுன்னு , உன்மேல பாரத்தை தூக்கி வைக்கல ... அவருடைய லாபம் நஷ்டம் கஷ்டம் எதையும் உன் தோள்ல தூக்கி வச்சு , இந்த பாரத்தை சுமைன்னு ,உன்ன சுமக்க சொல்லல .. நீயும் எனக்கு ஒரு சுமையாகிடாதடா, இந்த சுமையெல்லாம் என்னால தாங்க முடியும்.. உன் சுமையை என்னால தாங்க முடியாதுன்னுதான் சொல்றார் அது ஏன் ஜீவா உனக்கு புரியல...
"ஒரே ஒரு நாள் வாழ்ந்து சாகுற ஈசலுக்கு கூட ஏதோ ஒரு நோக்கம் வாழ்க்கையில இருக்கு.... ஆனா உனக்கு ஏதாவது இருக்கா ஜீவா ? அவன் பாவமாக ஏறிட்டு தேனிசையை பார்க்க...
" சாரி உன்னை கில்டி ஆக்க இதெல்லாம் சொல்லல... ஒரு தாய் இருந்திருந்தா இதெல்லாம் சொல்லி இருப்பா... தாயில்லாத புள்ளைய இதெல்லாம் சொல்லி வருத்தப்படுத்தக் கூடாதுன்னு, ஒரு தகப்பனா அவர் இத்தனை வருஷமா உன்ன வழிக்கு கொண்டுவர தெரியாம தவிக்கிறார்,,. அவர் தவிப்புக்கு மரியாதை கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை, மறுபடியும் மறுபடியும் தவிக்க வைக்காத சாப்பிடு "என்றுவிட்டு தேனிசை கையை கழுவி கொண்டு நின்ற யட்சன் அருகே போய் டவலை எடுத்து நீட்ட .... மகனை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தவன் அவள் இடையில் சொருகி வைத்திருந்த முந்தானையை இழுத்து கையை துடைத்து விட்டு போக ..
டேட் என்ற மகனை குனிந்து ஷூவை மாட்டி கொண்டு நின்ற யட்சன் தலையை தூக்கி பார்க்க ...
"ஆபிஸ் வர்றேன்...வேலை கத்து கொடுங்க "என்ற மகனை பார்க்காது எங்கோ யட்சன் திரும்பி முதுகு காட்டி நின்று கொள்ள... சட்டென கூலர்ஸ் கொண்டு வந்து அவன் முன்னே நீட்டினாள் தேனிசை...மறுப்பு இல்லாது அதை வாங்கி கண்ணில் மாட்டி கொண்டான் ...
டேட்இஇஇ சாரி என்று ஜீவா அவன் முதுகை கட்டி கொள்ள...
ப்ச் விடு
இனி ஒழுங்கா இருக்கேன் டேடி ...
இந்த வார்த்தையை நீ சொல்றது லட்சத்து ஓராவது தடவை ..."
இனி சொல்ல மாட்டேன்... நம்புங்க டேட் வேலைக்கு வர்றேன் கத்து கொடுங்க கத்துக்க ட்ரை பண்றேன்
மக்கும்" தொண்டை கரகரப்பை யட்சன் சரி செய்ய
அதான் வர்றேன்னு சொல்றான்ல, கூட்டிட்டு போறது... ஏன் கிழவன் அங்கேயும் தொடுப்பு எதுவும் வச்சிருக்கீரோ என்று அவன் மறுபுறம் நின்ற தேனிசை கிசுகிசுக்க... அவளை முறைத்த முகத்தோடு பார்த்தவன்...
எப்படி நம்ப சொல்ற ?"
ஒரு வாரம் பாருங்க டேட் ஒழுங்கா இல்லைன்னா என்ன வேணும்னாலும் பண்ணுங்க ட்ரஸ்ட் மீ ...
"சும்மா கெஞ்ச விட்டுக்கிட்டு என்னவோ இவர் யோக்கிய சிகாமணி போலத்தான் அரைக்கிழவன் ஆன பிறகு ஆடுன ஆட்டம் எனக்கு தான் தெரியும் அவனை போய் அழ வைக்கிறீங்க... வரட்டுமே குடியா முழுக போகுது" சாடை சத்தமில்லாது வந்து கொண்டே இருக்க ..
ப்ச் கிளம்பி வா ..."
"உங்ககூடவே வர்றேன் டேட் ஐஞ்சு நிமிஷம்....
ம்ம் என்று ஓட போன மகன் கையை இழுத்த யட்சன் தன் தகப்பனை பரிதவிக்க பார்த்த ஜீவா கன்னத்தில் கிடந்த அவன் கைத்தடத்தை வருடி
சா என்று சொல்ல போக
"பிள்ளையை அடிக்க அப்பனுக்கு உரிமை இல்லையா , சாரி எதுக்கு போ ஜீவா போய் கிளம்பி ஓடிவா.... ஓடு இந்த கோழி மண்டை குருவிக்காரன் சட்டையை எல்லாம் குப்பையில கிடாசிட்டு செமையா ராஜகுமாரன் போல வா பார்ப்போம்
அப்படின்னா?
ப்ச் உன் அப்பா போல கோட்டை மாட்டி கொண்டிருந்த யட்சனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே தேனிசை கூற அவனும் அவளைத்தான் நியூஸ் பேப்பர் எடுப்பது போல பார்த்தபடி சோபாவில் அமர்ந்தான்
ஓடு அவனை விரட்டியவள் யட்சனை மகனிடம் கூட மன்னிப்பை கேட்க விடவில்லை ...
அவன் நரை தாழ்வது கூட விரும்பாத அவளா காமூகியா இருப்பாள்,
அவன் கண்ணீரை உலகம் கூட காண கூடாது என்று நினைப்பவளா பணத்தை நேசிக்கும் பணப்பேயாய் இருப்பாள்..
அழகியல் அல்லவா இது !!
இதுவா காமக்காதல்!!??