கழிமுள்ளி நெஞ்சுக்காரி-13
கழிமுள்ளி-13
நதியாவுக்கு இப்போ என்ன பண்ணனும்னு தெரியாமல் அன்று முழுவதும் அமைதியாகவே யோசித்துக்கொண்டிருந்தாள்.
சாயங்காலம் அப்பாக்கூட போதற்காக காருக்குப் பக்கத்தில் நின்றிருந்தாள். விஜய் மத்தியானமே வீட்டுக்குப்போயிட்டான். மத்த மூணுபேரும் அவள் சார்கூட போயிடுவாங்கிற தைரியத்தில் கிளம்பிவிட்டார்கள்.
இப்போ தனியா நின்றவளுக்கு அரவிந்தை பார்த்துட்டுப்போகலாமா?அவன் போயிட்டானா?என்று நினைத்தவாறே அவனது கார் நிக்கிதான்னு பார்த்தாள்.
அவன் கார் அங்கதான் நின்றிருந்தது. உடனே அவன் கார் பக்கத்தில் போனவள் அதைத் தொட்டுப்பார்த்தாள்.
ஏனோ ஒருவிதப்புன்னகை அவளது இதழை அலங்கரித்தது. அப்படியே அரவிந்த் நிக்கிறானா என்று சுற்றிப்பார்த்தாள்.
அவள் வெளியே பார்த்துக்கொண்டிருக்கும்போதே கார் கதவுதிறந்து அப்படியே அவளை உள்ளிழுத்தது.
ஆஆஆ ஐய்யோஓஓ என்று அலறியவளின் வாயை தனது கையால் அடைத்திருந்தான் அரவிந்த்.
அவனைப் பார்த்ததும் “நீ என்ன காருக்குள்ள இருக்க. அப்போ புட்பால் பிராக்டிஸ் பண்ணலையா?”என்று முக்கியமான கேள்வியாக அதைக்கேட்டு வைத்தாள்.
அவனோ அவளது கண்களின் வழியாக ஊடுருவிப்பார்த்தவன் மெதுவாக சிரித்தான்.
“என்ன சிரிக்கிற?”என்று கேட்டவளுக்கு அவனது பார்வை ஒரு மாதிரியாக இருக்கவும் அவனது கையை தனது வாயிலிருந்து எடுத்துவிட்டாள்.
“யாரைத் தேடிட்டிருந்த?என்னையவா தேடின?”
“இல்லையே நான் எங்கப்பாவைத் தேடிட்டிருந்தேன்”
“யாரு உங்கப்பாவயா?அவரை எதுக்கு என் காருக்குள்ள தேடினா. சரிதான் பொய் சொன்னாலும் சரியா சொல்லணும்னு உனக்குச் சொல்லித் தரலையா?”
“இல்லையே”
“அப்போ நான் சொல்லித்தரவா?”
“வேண்டாம். எங்கப்பா வர்றதுக்குள்ள நான் எங்க காருக்குள்ள போகணும். என்னை விடு அரவிந்த்”என்று கதவைத் திறக்கப்போனாள்.
கார் கதவை அவளால் திறக்கமுடியவில்லை. உடனே திரும்பி அரவிந்தை முறைத்துப் பார்த்தாள்.
“என்ன டான் மேடம் முறைக்கவெல்லாம் செய்றீங்க. எதுக்கு இந்த முறைப்பாம்”
“எதுக்கு இப்போ என்ன சிறை பிடிச்சு வைச்ச மாதிரி காருக்குள்ள அடைச்சி வைச்சிருக்க அதைச்சொல்லு”
“வெளியே வைச்சு பேசினாதான் உன் பிரண்ட்ஸ் வந்து அடிக்கிறாங்களே. வேற எப்போ எப்படி பேசுறதான் டான் மேடம்”
“ஓஓ சாரி சாரி காலையில விஜய் பொக்கேயைத் தூக்கி போட்டுட்டான்ல. ரொம்ப சாரி. வலிச்சுதா?’என்று கேட்டவாறே அவனது முகத்தை தடவினாள்.
அவளது கையைப் பிடித்தவன் எதுவுமே சொல்லாது தனது நெஞ்சில் வைத்தவன் “அந்த கார்டையும் பூவையும் நான் தந்திருந்தால் மனோஜை திட்டின மாதிரி என்னையும் திட்டுவியா?”என்று கேட்டுவைத்தான்.
அதைக்கேட்டவளோ “இல்லை திட்டியிருக்கமாட்டேன்”என்று உண்மையைச் சொன்னாள்.
“அப்போ என்ன பண்ணிருப்ப? உன் பிரண்ட் விஜய் போட்ட மாதிரி என் முகத்துல தூக்கிப்போட்டிருப்பியா?”
“இல்லை. அப்படியே சந்தோசமா வாங்கிட்டு பதிலுக்கு பதில் சொல்லிருப்பேன்”
“என்ன சொல்லிருப்ப?”
“நீ போய் பொக்கேயும் கார்டும் வாங்கிட்டு வந்து சொல்லு. அப்போ நான் பதில் சொல்லுறேன்”என்று தைரியமாக சொன்னாள்.
அடுத்த நொடியே அவளது முன்பாக நீட்டி ஒரு ஒற்றை ரோஜாவையும் கார்டையும் நீட்டியவன் “ஐ லவ் யூ தியா”என்று சொன்னான்.
அதை அவள் உண்மையாகவே எதிர்பார்க்கவில்லை. அப்படியே வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஹல்லோ டான் மேடம். அதிர்ச்சியானது போதும் எனக்கு இப்போ பதில் சொல்லுங்க மேடம்” என்று வாய் நிறைய புன்னகையோடு கேட்டான்.
அதை எதிர்பார்க்காதவள் அடுத்து என்ன சொல்லணும் என்று தடுமாறினாள்.
அதைப்பார்த்தவன் அவளது கன்னத்தை லேசாக தொட்டு “என்னாச்சு தியா?”என்று மயக்கும் குரலில் கேட்டான்.
ஒன்னுமில்லை என்று தலையாட்டியவளின் கன்னத்தை இரு கைகளாலும் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.
அவளோ ஒன்றுமே பேசாது தன் கண்களை அங்கும் இங்கும் உருட்டிக்கொண்டிருந்தாள்.
“என்ன கண்ணு அங்கேயும் இங்கேயுமா போகுது. என்னை நேரா பாரு தியா”
அவ்வளவுதான் அவள் நேராக அவனது கண்களைப் பார்த்ததும் உதடுகள் நடுங்க “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு சோடாபுட்டி. நீ யாரு என்னென்னுலாம் தெரியல. முதல் நாளே உன் கண்ணுல ஏதோ இருந்துச்சு. அந்த நேரத்துல ஏதோ ஈர்ப்புன்னு நினைச்சிட்டேன். ஆனால் பாரு அது ஈர்ப்புல்லன்னு புரிஞ்சதும் உன்கிட்ட சொல்லத்தான் வந்தேன் என்னால முடியல. எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு”என்று சொன்னவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவளது அந்த நிலையை பார்த்தவனுக்கு ஏதோ மொத்தமாக உடைந்துப்போகவும் சட்டென்று அவளை இழுத்து அவளது கண்கள் இரண்டிலும் முத்தம் வைத்தான்.
அந்த முத்தத்தை எதிர்பார்க்காதவள் சட்டென்று கண்ணைத் திறந்துப் பார்த்தாள்.
அந்த கண்களில் தெரிந்த காதலில் அப்படியே நெக்குருகிப்போனாள்.
என்ன இவன் நம்மளைவிடவும் பாஸ்டா இருக்கான் என்று குழம்பியவள் “என்ன டக்குன்னு முத்தம் கொடுத்துட்ட சோடாபுட்டி. நீ இவ்வளவு விவரமான ஆளா என்ன?”என்று நேரடியாகவே கேட்டுவைத்தாள்.
“இதுல என்ன விவரம் வேண்டிக்கிடக்கு டானு. நம்ம விரும்புற பொண்ணுக்கு முத்தம் கொடுக்கிறதெல்லாமா விபரம். நான் இதைவிட விவரம்னு உனக்கு எப்படி புரியவைக்கிறது.ம்ம்”என்று கேட்டவன் புருவத்தை ஏற்றியிறக்கினான்.
“எப்படி புரியவைப்ப?”என்று புரியாது கேட்டவளின் உதட்டை தனது விரல்கொண்டு அப்படியே தடவிக்கொடுத்தான்.
அதில் உடல் நடுங்கியவள் “ஆத்தாடி இவன் போற ஸ்பீடுல நம்மளை இன்ஞ்சினியாராக்கிறதுக்கு பதிலா அம்மாவாக்கிருவான் போலயே” என்று முழித்தாள்.
“அப்படியெல்லாம் உடனே உன்னை அம்மாவாக்க முடியாது தியா. அதுக்கு வேற பிராஸஸ் இருக்கு. அது இப்போதைக்கு வேண்டாம்” என்று சொல்லிவிட்டு கண்ணடித்தான்.
“யோவ் சோடாபுட்டி இவ்வளவு ஸ்பீடெல்லாம் ஓவர். இப்போதான் லவ் யூன்னு சொல்லிருக்க. அதுக்குள்ள என்னவெல்லாம் பேசுற. நான் இன்னும் லவ் யூ சொல்லவேயில்லை”
“சொன்னதான் ஆச்சா. அதுதான் என் முத்தத்தை ஏத்துக்கிட்டு பக்கத்துல உட்கார்ந்து அடுத்த முத்தத்திற்காக காத்திருக்கிறியே இதுலயே தெரியலையா நீ என்மேல எவ்வளவு லவ்வுல இருக்கன்னு”
“என்னது அடுத்த முத்தத்திற்கு காத்திருக்கேனா?உனக்கு நினைப்புத்தான். கார் டோரை திறந்துவிடு அரவிந்த் நான் போகணும்”என்று திரும்பினாள்.
அவளது கையைப் பிடித்து இழுத்து தன் மடியில் வைத்தவனது ஆளுமையில் அசந்துப்போனாள்.
“ஏய்ய் அரவிந்த் என்னதிது? அப்பா வந்திடப்போறாங்க. நான் உன் கார்ல இருந்து இறங்கினா தப்பா நினைப்பாங்க. என்னை விடு”என்று அவனது கையை எடுத்துவிட முயன்றவளால்,அது முடியாதுபோகவும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனது முகமும் அவளது முகமும் அருகருகே இருக்கவும் கண்கள் இரண்டும் ஒருவரை ஒருவர் விழுங்குவதுபோன்று பார்த்தது.
அவனது தலை தானாகவே அவளை நோக்கி குனிந்தது. அவளும் தன்னையறியாமல் அவனிடம் நெருங்கினாள்.
அடுத்த நொடியே அரவிந்தனின் உதடுகள் அவளது துடிக்கும் உதடுகளை மெதுவாக கவ்வியது.
அப்படியே நதியாவின் இதழ்களை தனது உதட்டுக்குள் இழுத்து பற்கள் கொண்டு கடித்து இழுத்தான்.
இதுவரைக்கும் இப்படியான உணர்வை அறிந்திராதவளுக்கு கண்கள் மயக்கத்திற்குப் போனது.
அதைப்பார்த்த அரவிந்தும் தனது கண்களை மூடிக்கொண்டான். அவ்வளவு அழுத்தமாக அவளைப் பிடித்திருந்தவனது கைகள் மெதுவாக அவளது இடுப்பிற்குபோய், இன்னும் அவளை வளைத்து தன்னோடு அணைத்துக்கொண்டது.
அவனது நெஞ்சோடு நெஞ்சம் மோதி உரசிக்கொண்டு காதல்தீயை மொத்தமாக பற்றிக்கொண்டது. அவனின் ஒரு கை மேலாக ஏறி அவளது முடிக்குள் நுழைத்து இறுக்கிப்பிடித்துக் கொண்டது.
நதியாவின் உடல் தானாக இளகி அவனிடம் இன்னும் அதிகமாக நெருக்கம் காண்பித்தது.
அவ்வளவுதான் இதுக்குமேலயும் சின்ன முத்தத்தோடு அவன் விடுவானா என்ன?
அரவிந்த் தனது தலையை சரித்து இன்னும் வாகாக உட்கார்ந்தவன், அவளது உதட்டுக்குள் தனது நாவினை நுழைத்து அவளது நாவினைத் தொட்டுப்பிடித்து உயிரோடு உயிர் இணைக்கத் தொடங்கினான்.
முதலில் கண்ணை விரித்து என்ன நடக்குது என்று புரியாது பார்த்தவளின் கண்ணின் மொழியைப் பார்த்துவிட்டு, மீண்டும் அந்த சுகத்தில் கண்களை முடிக்கொண்டவள் அவனது தோளை இறுகப் பிடித்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடினாள்.
அதில் இருவரது உடலும் இணைய என்னென்னவோ நடத்தியது. மூளையோ வேண்டாம் என்று தடுத்தாலும் உள்ளமோ இன்னும் வேணும் என்று கேட்டது.
இதற்குமேல் முடியாது என்று தோன்றவும் அவனிடமிருந்து விலக முற்பட்டவளின், உதட்டை இன்னும் கவ்வியிருந்தவன் மெதுவாக அவளை விடுவித்தான்.
இருவருக்கும் சட்டென்று வந்த அந்த நெருக்கம் அவ்வளவு பிடித்திருந்தது. அதனால் விலகாது அப்படியே உட்கார்ந்திருந்தனர்.
அவளது கன்னத்தைத் தடவியவாறே “இப்போவாவது டான் மேடம் என்கிட்ட அவங்க லவ் யாவை சொல்லுவாங்களா?”என்று கேட்டவனின் உதடுகளைப் பார்த்தவாறே சிரித்தாள்.
அவளது நெஞ்சில் கைவைத்து தன்னிடம் இழுத்தவள் “இதுக்குமேலயும் வார்த்தையால் சொன்னாதான் நம்புவியா சோடாபுட்டி”என்று கெத்தகாக் கேட்டாள்.
“அப்படியெல்லாம் இல்லை. உனக்கும் என் மேல அவ்வளவு காதல் இருக்குன்னு தெரியும். ஆனாலும் சொன்னால் மனசுக்கும் காதுக்கும் அப்படியே இதமா இருக்கும்ல” என்று சொல்லிவிட்டு அவளது உதட்டைப் பிடித்து இழுத்தான்.
அவனது கையைத் தட்டிவிட்டவள் “நான் கொஞ்சம் கவனமில்லாமல் இருந்தேன்னதும் சட்டுன்னு முத்தம் கொடுத்துட்டீங்களே சார். இனி அது நம்மக்கிட்ட நடக்காது”
ஹ்ஹ்ஹ்ம் அப்படியா என்று கேட்டவன் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.
“ஏய்ய் வேண்டாம் அப்படிப்பார்த்தாலும் எதுவும் நடக்காது” என்று அவனது கண்ணை பொத்துவதற்காக எவ்வினாள்.
அவ்வளவுதான் அவளது அழகெல்லாம் அவன்மீது மோதி, அவனைத் தடுமாறச் செய்தததில் அரவிந்த் அப்படியே பின்னாடி சரிந்து சாய்ந்து படுத்துவிட்டான்.
அவன் மேல அவளும் அப்படியே படுத்துவிட்டாள்.
இதுதான் சாக்கென்று அவளது முதுகோடு சேர்த்து கையைப்போட்டு பிடித்துக்கொண்டு அரவிந்த்
“தியாஆஆஆ”என்று ரகசியமாகக் கூப்பிட்டான்.
“ம்ம்ம்”
“தியாஆஆ”
“ம்ம்ம்”
“தியாஆஆஆஆ”
இப்போது அவனது நெஞ்சில் கையை ஊன்றி அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“மொத்தமா என் பெயரை ஏலம்போட்டு முடிச்சிட்டியா?”
“உன்னை கூப்பிடத்தானே செய்தேன்.அதுக்கு எதுக்கு சலிச்சிக்கிற”
“சலிச்சிக்கவெல்லாம் இல்லை. உன் பக்கத்துல உன் நெஞ்சு மேல படுத்திருக்கவளை கூப்பிட்டுக்கிட்டே இருக்கியே அதுதான் கேட்டேன்”
“உன்னைத்தான் தியாஆஆஆன்னு ஆசையா காதாலா கூப்பிடமுடியும்”
“சரியான ஊமக்கோட்டான்டா நீ. அமைதியா பாவமாக மூஞ்சியை வைச்சிக்கிட்டு என்னை கவுத்துட்ட பார்த்தியா. எப்புட்றா?”என்று அவன்மேல படுத்துக்கிட்டு அவன்கிட்டயே வியாக்கினமாக கேள்விக்கேட்டு வைத்தாள்.
“இப்போ அதுக்கு என்னாங்குறடி?”
“என்னது டீயாஆஆ?”
“ஆமாடி காதலியை டீதான்டி போட்டுக் கூப்பிடணும்”
“நீ ரொம்பத் தேறிட்ட. என்மேல உள்ள பயமெல்லாம் போயிடுச்சுல்ல”
அதைக்கேட்டதும் சத்தமாக சிரித்தான்.
அதைப்பார்த்தவள் “இப்போ எதுக்கு சிரிக்கிற?”என்று சந்தேகமாகக் கேட்டாள்.
அதெல்லாம் சும்மாஆஆஆ என்று மழுப்பினவன் கண்ணடித்தான்.
“இப்படியே கமுக்கமாவே இருந்து கண்ணடிச்சு என்னை கவுத்துட்ட”
ஹாஹாஹாஹா என்று அதற்கும் சிரித்து வைத்தான்.
“ஏய்ய் என்னை விடு. அப்பா தேடப்போறாங்க. விடு”என்று அவனிடமிருந்து எழுந்தவளை அப்படியே கோழி அமுக்கின மாதிரி அமுக்கி இறுக்கி கட்டிக்கொண்டான்.
“ப்ச்ச் அரவிந்த் என்னை விடு நான் போகணும்”
“ஓகே விடுறேன்.அப்படியே ஒரு லவ் யூவை சொல்லிட்டு, ஒரு லிப்கிஸ்ஸையும் தந்தா டோரை திறந்து உன்னை விடுறேன்”
“இல்லைன்னா?”
“நான் இங்கயே இப்படியே படுத்துப்பேன். அவ்வளவுதான். எனக்கு ஓகே.உனக்கு ஓகேவா?”
“பார்றா சோடாபுட்டி என்னையவே மிரட்டுறதை. அப்புறம்”
அப்புறம் அப்புறம் என்று அவளை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாகப் பார்த்துவைத்தான்.
அவனது பார்வையை அறிந்தவள் உதட்டைக் கடித்துக்கொண்டு அவளும் அவனைப் பார்த்து வைத்தாள். அதைப்பார்த்தவன் சத்தமாக சிரித்தான்.
அவனது தொடையில் கிள்ளி வைத்தவள் கொன்றுவேன்டா என்று மிரட்டினவள் அவன் கொடுத்த ரோஜாவை எடுத்து அவனிடம் நீட்டியவள்.
“ஐ லவ் யூ மை அம்மாஞ்சி பையா”என்று சொன்னவள் அவனது கன்னத்தில் பச்செக்கென்று ஒரு முத்தமை வைத்தாள்.
“பார்றா லேடி டானுக்கு முத்தம் கொடுக்கலாம் தெரியுது” என்று சொல்லிவிட்டு அவளிடமிருந்து அந்த ரோஜாவை வாங்கிக்கொண்டவன், அப்படியே நெருங்கி உட்கார்ந்தவன் அவளது கையோடு தனது கையை பிணைத்துக்கொண்டான்.
இருவரும் அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தனர். அவளைத் திரும்பிப் பார்த்தவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு டோரை திறந்துவிட்டான்.
ஆனாலும் இரண்டுபேருக்கும் விலகிப்போக மனமில்லாது உட்கார்ந்திருந்தனர். இதுக்குமேல இங்கிருந்தால் சரியாகாது என்று நதியா அவனது உதட்டில் வேகமாக முத்தமிட்டவள் சட்டென்று காரிலிருந்து இறங்கினாள்.
அவள் காரிலிருந்து இறங்கவும் ரமேஷ் தனது காருக்கு வரவும் சரியாக இருந்தது.
ரமேஷ் திரும்பி அவளைப் பார்க்கவும் “அப்பாஆஆ ஏன்ப்பா இவ்வளவு நேரம்”என்று கேட்டு அப்படியே அவரிடம்போய் பேச்சுக்கொடுத்தாள்.
அரவிந்த் சத்தமேயில்லாமல் அவரைப் பார்த்ததும் காருக்குள்ளாகவே இருந்துவிட்டான்.
ரமேஷ் அவளிடம் எதுவுமே கேட்காமல் அப்படியே காரை எடுத்தார்.
ஆனால் நதியாவுக்குத்தான் நம்ம அரவிந்த் காருக்குள்ள இருந்து இறங்கினதை அப்பா பார்த்திருப்பாங்களோ என்று பயத்தவாறே உட்கார்ந்திருந்தாள்.
ரமேஷ் எப்போதும்போலவே காரை அமைதியாக ஓட்டிக்கொண்டு வீட்டிற்கை வந்தார்.
நதியாவுக்குத்தான் அன்னைக்கு இராத்திரி முழுவதும் தூக்கிமில்லாதுபோனது.
அது சரி குற்றமுள்ள நெஞ்சம் அப்படித்தான் இருக்கும்.இனி இப்படித்தான் காதல் வந்த நெஞ்சமிருக்கும் பழகிக்கோ நதியாஆ?