கழிமுள்ளி நெஞ்சுக்காரி-1
கழிமுள்ளி நெஞ்சுக்காரி-1
அரிஹண்ட் இன்ஞ்சினியரிங் காலேஜ் கேண்டீனில் உட்கார்ந்திருந்த நதியாவும் அவளது பிரண்ட்ஸ் நான்குபேரும் பேசிக்கொண்டிருந்தனர்.
“டேய் சினிமாவுக்கு போவோமா? இன்னைக்கு லெக்ட்சர் எல்லாமே போரிங்கா இருக்கும்.பதினோரு மணி ஷோவுக்கு புக் பண்ணலாமா?”என்று கேட்டுக்கொண்டே போனில் மொபைலில் சோக் பண்ணி டிக்கெட்டும் புக் பண்ணினாள்.
“ஏய் என்ன பண்ணிட்டிருக்க நதியா?ஏற்கனவே நமக்கு அட்டென்டென்ஸ் கம்மியா இருக்கு. எக்ஸாம் எழுதவிடமாட்டாங்க. நான் சினிமாவுக்கு வரலப்பா”என்று சொன்ன வஸந்த்தை நதியா முறைத்துப்பார்த்தாள்.
“நீ முறைச்சா மட்டும் வந்திருவோமா என்ன வரமாட்டோம்”என்று கெத்தாக சொல்லிவிட்டு முகேஷ் எல்லோரையும் பார்க்க எல்லோரும் அவனை முறைத்துக்கொண்டிருந்தனர்.
“சரிடா நீங்க போகும்போது நானும் வராமலா இருப்பேன்” என்று சமாதானக்கொடியை பறக்கவிட்டவன் நதியாவைப் பார்த்து சிரித்தான்.
“இருடா உன் டிக்கெட்டை கேன்சல் பண்றேன். நீ கிளாஸ்ல இருந்து பாடத்தைக் கவனி. நீ எதுக்கு வரமாட்டேன்னு சொல்லுறன்னு எனக்குத் தெரியும். உன் ஆள சைட்டடிக்கத்தானே. நடத்து நடத்து.நானும் பார்த்துக்கிறேன்”
“ஆத்தா மகமாயி நான் உன்கூட சினிமாவுக்கே வர்றேன். என்னை விட்டுடு. எனக்கு ஆளுன்னு ஒருத்தி இல்லவே இல்லை. நான் சும்மா எவளையாவது சைட்டடிப்பேன் அவ்வளவுதான் ஆளுன்னு ஒருத்தியும் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா. என்னை விட்று”என்று சொன்னவனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள் நதியா.
அப்போது அவர்களது பின்னாடியே வந்த மனோஜ் நேராக வந்து நதியாவின் கையைப்பிடித்து இழுத்து எழுப்பினவன்”ஏன்டி நான் பைக் விடுற இடத்துலதான் உன் ராயல் என்பீல்ட்ட நிப்பாட்டுவியா?நீ என்ன பெரிய சண்டிராணியா?உன்கூட நாலு பசங்க சுத்தினா நீ பெரிய ரவுடியா என்ன?உன்னையெல்லாம் சும்மா விட்டுவைச்சிருக்க எங்களைச் சொல்லணும். உங்கப்பன் பெரிய இவன்னா நீ ரொம்ப ஆடுவியா. வாடி வந்து வண்டியை தள்ளி நிறுத்துடி”என்று இழுத்தான்.
ஏற்கனவே அவன் கையைப் பிடித்து இழுத்ததும் நதியாவும் அவளது பிரண்ட்ஸும் கோபத்தில் அவனை அடிக்க எழுந்திருந்தனர்.
அதில் இப்போது மனோஜ் அவளை அசிங்கமாகப் பேசவும், நதியா குடித்துக்கொண்டிருந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை வேகமா எடுத்து மனோஜை அடிக்கப்போனாள்.
அந்த நேரம் பார்த்து மனோஜ் அவளது கையை விட்டுவிட்டு விலகவும் ஏதேச்சையாக கை தானாக போய் அங்கே உட்கார்ந்திருந்த ஒரு பாவப்பட்ட ஸ்டூடண்ட்டின் நெற்றியில் பட்டு, பாட்டில் உடைந்து, அவனது நெற்றியில் இருந்து பொளபொளவென்று இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
ஆஆஆஆஆ என்று தனது தலையைப் பிடித்துக்கொண்டு என்ன நடக்குது என்று நிமிர்ந்து பார்த்தவன், தனது சட்டை முகமெல்லாம் இரத்தம் வடியவும், தனது கர்ச்சீப்பை எடுத்து நெற்றியில் அழுத்திப்பிடித்துக்கொண்டு நதியாவை பார்த்தான்.
அவனை இதுக்கு முன்னாடி அந்த காலேஜ் நதியாவோட க்ரூப் பார்த்ததேயில்லை என்பதால் “யாருடா இது?” என்று பார்த்தனர்.
உடனே மனோஜ்தான் அவனைப் பிடித்து உட்காரவைத்தவன் வேகமாக தண்ணீர் எடுத்து அவனுக்குக் குடிக்கக் குடுத்தான்.
அதை வாங்கி குடித்தவனிடம் எந்த பதட்டமும் இல்லை. பொறுமையாக தண்ணியை குடித்துமுடித்தவன் எழுந்து யாருக்கோ போன் பண்ணினான்.
நதியாவும் பக்கத்தில் வந்து “சாரி சாரி இந்த பரதேசியை அடிக்க ஓங்கினது உங்களை அடிக்கணும்னு நினைக்கலை. ”என்றுவிட்டு தோளைப் பிடித்து சமாதானப்படுத்தினாள்.
அவன் பார்க்கத்தான் பாவமாக இருந்தான். அவளை அவன் பார்த்த பார்வையில் தீம்பிழம்பே எரிவதுபோன்று இருந்தது.
அந்தப்பார்வையில் சட்டென்று அவனது தோளிலிருந்து கையை எடுத்தவள், பயந்து பிரண்ட்ஸோடு சேர்ந்து நின்றுகொண்டாள்.
மொத்த கேண்டின்ல உள்ளவங்களும் அவங்களை சுற்றி நின்று என்ன நடக்குது என்று பார்த்தனர்.
அதற்குள் இங்கு நடந்தது பிரின்சிபாலுக்கு தகவல் போய் அங்கிருந்து லெக்ட்ரசரர்ஸ் முதற்கொண்டு கேண்டினுக்கு ஓடிவந்தனர்.
உடனே அடிபட்டவனை காரில் ஏற்றி அவனை ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பிவைத்தனர். அவனோடு மனோஜ்தான் துணைக்குப்போனான். அவனுக்கு மனோஜ் யாருன்னு தெரியாது. மனோஜுக்கும் அடிபட்டவன் யாருன்னும் தெரியாது. எங்க நம்ம அங்கிருந்தால் மொத்தமா நம்மளும் அந்த கூட்டத்தோடு சேர்த்து நிற்க வைச்சு விசாரிப்பாங்க,பனிஷ்மெண்ட் வாங்க வேண்டியிருக்கும் என்றுதான் அவனோடு போனான்.
உடனே பிரின்சிபால் நதியா கேங்கினைப் பார்த்து “நீங்க ஐஞ்சு பேரும் இப்பவே என் ஆபிஸ் ரூமுக்கு வாங்க” என்றவர் கேட்டினை இழுத்து அடைக்க சொல்லிவிட்டார்.
இப்போ பிரின்சிபல் ரூமின் உள்ளே…
பிரின்சிபால் ரமேஷ்குமார் தன் முன்னாடி நின்றிருந்த ஐந்துபேரையும் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த ஐந்துபேரும் பாவம்போல முகத்தை வைத்துக்கொண்டு அடுத்து அவர் என்ன சொல்லுப்போகிறார் என்பதைக் கேட்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர்.
“பிரியா மேடம் இவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டீங்களா?”
“சொல்லுறதுக்காக போன் பண்ணினோம் சார்.யாருமே போன் எடுக்கல. நம்ம காலேஜில் இருந்து போன் போனாலே அவங்க அலர்ட் மோடுக்கு போயிடுறாங்க சார். அவங்களுக்கு தகவல் வாட்ஸப் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் சொல்லியாச்சு சார்”
“அதுசரி இவங்க பேரண்ட்ஸ்தானே அப்படித்தான் இருப்பாங்க”என்று அவர்களை மேலும் கீழும் பார்த்தவர் அவர்களோடு நின்றிருந்த நதியாவைப் பார்த்தார்.
“உங்கம்மாதான் சப்கலக்டராச்சே அவங்களும் போனை எடுக்கலையா? என்ன அவங்களுக்கே பொண்ணைப் பத்தி தகவல் வந்ததும் பயமா?”
“அவங்களுக்குப் பயமெல்லாம் இல்லை.அவங்க பொண்ணைப் பார்த்துக்கவும் அவ பிரச்சனையை சமாளிக்கவும் அவங்க புருஷன் நீங்க இருக்கீங்கன்னு தைரியத்துல போனை எடுக்காமல் இருப்பாங்களாயிருக்கும்”
“அடிங்க பேசுறதைப் பாரு. நான் இருந்தால் என்னவாம்?உனக்கு என்னாச்சுன்னு கேட்கமாட்டாளாமா?அவக்குடுக்கிற தைரியத்துலதானே இப்படி அழிச்சாட்டியம் பண்ணிட்டிருக்க. உன் தோலை உறிச்சிருந்தா இப்படி பிஹேவ் பண்ணிரீக்கமாட்ட”
“அதை உறிக்கவேண்டியதுதானே யாரு வேண்டாம்னு சொன்னா?”
“என்ன?”
“ஒன்னுமில்ல எங்க மம்மி வருவாங்க. எப்படியும் மெயில் பார்த்திருப்பாங்க”
“எவ்வளவு தெனாவெட்டா பேசுற”
“உங்கள மாதிரிதானே எனக்கும் பேசவரும்”
“வாயை மூடு நதியா”என்று சொல்லும்போதே டோரை தட்டும் சத்தம்கேட்டது.
“எஸ் கம் இன்”என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.
அங்கே நதியாவின் அம்மா கீதாஞ்சலி உள்ளே நுழைந்தார்.அவரைப் பார்த்ததும் ரமேஷ்குமார் அமைதியாகப் பார்த்தார்.
“எக்யூஸ்மீ எனக்கு மெசேஜ் பண்ணி வரச்சல்லிருந்தாங்க. என்ன விசயத்துக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“அதெப்படி மிஸஸ் கீதாஞ்சலி எதுக்காக வரச்சொல்லிருப்போம்னு தெரிஞ்சிக்கிட்டே தெரியாதமாதிரியே கேட்கிறீங்க. எதுக்கு வரச்சொல்லிருப்போம் உங்க சீமந்தபுத்திரி ஏதாவது செய்துவைச்சிருப்பாங்கன்னுதானே. அது தெரிஞ்சிக்கிட்டே கேட்கலாமா?”என்று ரமேஷ்குமார் நக்கலாகக்கேட்டார்.
அவ்வளவுதான் கீதாஞ்சலி அவரை முறைத்துப் பார்த்துவிட்டு திரும்பி தனது மகள் நதியாவை பார்த்தாள்.
அந்தப் பார்வையில் இருடி வீட்டுக்கு வா உனக்கு பூஜை நடத்துறேன் என்ற சங்கதி இருந்தது.
அவளோ எதுன்னாலும் நான் பயப்படமாட்டேன் என்ற தெனாவெட்டில் நின்றிருந்தாள்.
இருடி என்று கீதாஞ்சலி முணுமுணுத்தவள் திரும்பி பிரின்சிபாலிடம் “இதுக்கு என்ன சார் பனிஷ்மெண்ட் குடுக்கப்போறீங்க. எப்பவும் போல அப்பாலஜி லெட்டர் எழுதித்தரணுமா?”என்று நேரடியாகவே விசயத்துக்கு வந்தார்.
“இந்ததடவை அப்படியெல்லாம் அப்பாலஜியோட முடியபோறதில்லை. முதல்ல இவங்க என்ன பண்ணினாங்கன்னு நீங்க கேட்கவேயில்லை. நீங்க வந்ததும் நேரடியா என்ன பனிஷ்மெண்ட்னுதான் கேட்டீங்க. அப்போ உங்க வீட்டுப் பிள்ளைங்க என்ன செய்தாலும் உங்களோட ரியாக்ஷன் இப்படித்தான் இருக்குமா.நல்லா படிச்சா மட்டும்போதுமா டிசிபிளினா இருக்கவேண்டாமா?”
அதுக்குள்ள அவக்கூட நின்றிருந்தவனுங்க பெற்றவர்களும் வந்துவிட்டனர். அந்த ரூமுக்குள்ளயே அப்படியொரு அமைதி நிலவியது.
அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நதியா மெதுவாக தன் பக்கத்தில் நின்றிருந்த நண்பர்களில் ஒருவனான தினேஷின் சட்டையின் நுனியை இரண்டு விராலல் பிடித்து யாருக்கும் தெரியாமல் இழுத்தாள்.
என்ன என்று அவன் பார்க்கவும் “என்னடா நடக்குது இங்க? ஏதோ மாநாடு நடக்கிறது மாதிரி அமைதியா இருக்காங்க. சட்டுபுட்டுன்னு பஞ்சாயத்தை முடிச்சு அனுப்ப சொல்லுடா. சினிமாவுக்கு நேரமாகிட்டு. புக் பண்ணிருக்கோம்ல”என்று கிசுகிசுத்தாள்.
“சினிமாவுக்கு புக் பண்ணினதா இப்போ முக்கியம். வாயை மூடு. இன்னைக்கு வீட்டுக்குப்போனா எங்கப்பா எதைக்கொண்டு என்னை அடிப்பாருன்னு தெரியாம முழிச்சிட்டிருக்கேன். நீ வேற ச்சூஊஊ சும்மாயிரு”
அவன் பக்கத்தில் நின்றிருந்த விஜய் இவங்க பேசிக்கிறதைப் பார்த்து தினேஷிடம் என்னடான்னு கை செய்கையால் கேட்டான்.
“இப்போ வந்து சினிமாவுக்கு புக் பண்ணிருக்கோம் எப்போ பஞ்சாயத்தை முடிப்பாங்கன்னு கேட்கிறாடா”
“ஆமால்ல சினிமாவுக்கு புக் பண்ணிருந்தோம்ல. எப்போ டைமிங்கு”என்று விஜய் கருத்தாகக் கேட்டு வைத்தான்.
அவன் அப்படி கேட்டதும் தினேஷ் தனது நெத்தியில் அடித்துக்கொண்டான்.
“டேய் நம்ம பஞ்சாயத்துல நிக்கிறோம்டா. நம்ம நாட்டமை பிரின்சி முதல்ல என்ன சொல்லுறாங்கன்னு பாருங்கடா. எத்தனை நாள் வெளியே நிக்கவைக்கப் போறானுங்களோன்னு பயத்துல இருக்கேன். நீங்க வேற கடுப்பேத்தாதிங்கடா”என்று இரண்டுபேரையும் திட்டினான்.
“இவன்கிடக்கிறான். நம்ம கூப்பிட்டா நம்மக்கூட சினிமாவுக்கு ஓடிவந்திருவான். அவன் பேசுறதைப்பாரு” என்று உதட்டை ஏளனமாக வளைத்து நக்கலாகச் சொல்லிவிட்டு அவளுக்கு இந்தப்பக்கமாக அமைதியா மார்க்கத்தை தழுவிக்கொண்டவர்களைப் போல நிற்கும் மற்ற இரு நண்பர்களையும் பார்த்து வாட்சைக் காட்டினாள்.
அவனுங்களோ கண்களாலே “சும்மாயிரும்மா ஆத்தா” என்ன ரீதியில் நின்றிருந்தனர்.
அந்த நேரம் பார்த்து ரமேஷ்குமார் “ நதியா அங்க என்ன பேசிட்டிருக்க?”என்று கோபத்தில் கத்தினார்.
அவளோ எஸ் டாடீ என்று சொல்லிவிட்டு இருக்கும் இடத்தை உணர்ந்து “சொல்லூங்க சார்”என்று தன்னைத் திருத்திக்கொண்டாள்.
அத்தனைபேரோட பேரண்ட்ஸும் இப்போ நதியாவைத் திரும்பிப்பார்த்தார்கள்.
இவளால்தான் நம்ம பசங்களும் தெனாவெட்டுல அலையுறானுங்க. முதல்ல இவாகிட்டயிருந்து இவனுங்களை பிரிச்சு வேற காலேஜிக்கு கூட்டிப்போகணும் என்று நினைத்தார்கள்.
கீதாஞ்சலியோ ‘யப்பா இன்னும் ஒரு வருஷம் மட்டும் எப்படியாவது இவா இங்க படிச்சு முடிக்கட்டும். அதுக்கப்புறம் இவனுங்ககிட்ட இருந்து இவளைப் பிரிச்சு வெளிநாட்டுக்கு பீ.ஜி படிக்க அனுப்பிடணும்னு’ அவள் ஒரு பக்கம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாள்.
“சார் எவ்வளவு நேரம் இப்படி அமைதியா எங்களையே பார்த்திட்டிருப்பீங்க. எங்களுக்கும் வேலையிருக்கு சார். எதுன்னாலும் சீக்கிரம் பிரச்சனையை முடிச்சு வைங்க” என்று கீதாஞ்சலி சொல்லவும் அவளை ஒரு மார்க்கமா பார்த்துவைத்தார்.
கீதாஞ்சலி “பார்க்கிறதைப் பாரு. எங்க வந்து எப்படி பார்த்துட்டிருக்காங்க” என்று நினைத்து கொஞ்சமாக வந்த வெட்கத்தையும் காட்டிக்காது அவரை முறைத்தாள்.
“இங்கப்பாரு இங்க என்ன பஞ்சாயத்து ஓடிட்டிருக்கு இவங்கப்பா அவங்கம்மாவை சைட்டடிச்சிட்டிருக்காரு”
“டேய் சும்மாயிருங்கடா அவரு நம்ம பிரின்சி”
“பிரின்சின்னா சைட்டடிக்கலாமா?”
“அவரு அவரு வொய்ப்பதானாடா சைட்டடிக்கிறாரு. நீ வாயை மூடிட்டு நில்லுங்கடா”என்று தினேஷ் சத்தம்போட்டதும் அமைதியாகினர்.
இதுக்கெல்லாம் காரணமானவளோ யாரோ எப்படியோ போங்க. இந்த பஞ்சாயத்தை எப்போசார் முடிப்பீங்க என்ற மாதிரி பார்த்தாள்.
“க்கும் முதல்ல பிரச்சனை என்னென்னு சொல்லுங்க சார்”என்று விஜயின் அப்பா திருமூர்த்தி கேட்டார்.
“அதுவா உங்க பிள்ளைங்க ஐஞ்சு பேரும் சேர்ந்து ஒரு அப்பாவியை கேண்டின்ல வைச்சு அடிச்சு இரத்தக்காயத்தோட ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைச்சிருக்காங்க. அதுக்காகத்தான் கூப்பிட்டிருக்கோம்”
“என்னது அடிச்சு இரத்தக்காயமா?”என்று கேட்டுவிட்டு எல்லோரும் அவர்களை திரும்பிப் பார்த்தனர்.
“ஐய்யோ மொத்த டெரரிஸ்ட்டும் நம்மளைத்தான்டா பார்க்கிறாங்க” என்று ஐஞ்சு பேரும் அப்படியே தலையைக் குனிந்துக்கொண்டார்கள்.
கீதாஞ்சலி இப்போது வேகமாக எழுந்தவர் “என்ன பண்ணி வைச்ச நதியா?யாரை அடிச்சீங்க?”என்று கோபத்தில் கேட்டார்.
அது வந்து மம்மீ!அது வந்து மம்மீ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தும் பேசமுடியாது பாவமாக ரமேஷைப் பார்த்தாள்.
அவரோ நீயே உங்கம்மாவை சமாளி என்று பார்த்துவிட்டு அங்கேயிருக்கும் பெற்றோர்களிடம் பேசினார்.
“இங்கப்பாருங்க உங்க பிள்ளைங்க சும்மா யாரையாவது அடிச்சிருந்தா பரவாயில்லை. மேனேஜ்மெண்ட் ஆளையே அடிச்சிட்டாங்க அதுதான் ரொம்ப பிரச்சனையாகிடுச்சு. அந்தப்பையன் நம்ம காலேஜ் ஓனருக்கு தெரிஞ்ச பையனாம். ஏதோ எம்.பி.ஏவை லாஸ்ட் இயர் இங்கவந்து பிராஜெக்ட் பண்ணி கம்ப்ளீட் பண்ண வந்திருக்கான். அவன் வந்து கேண்டின்ல சும்மா போன் பேசிட்டிருந்திருக்கான். அவன்கிட்டபோய் ஏதோ வம்பிழுத்து சண்டைப்போட்டு அடிச்சிருக்காங்க. அதுவும் கூல்ட்ரீங்க்ஸ் பாட்டிலாலா அடிச்சதுல அவனுக்கு நெத்தியில காயம். அவனை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப்போய் தையல் போட்டிருக்கோம். மூணு தையல் நெத்தியில் போட்டிருக்காங்க. இப்போ அவனோட பேரண்ட்ஸுக்கும் நம்ம மேனேஜ்மெண்டுக்கும் பதில் சொல்லியாகணும். கரஸ் ஏற்கனவே இரண்டுதடவை போன் பண்ணி அடிச்சது யாருன்னு விசாரிச்சிட்டாரு”என்றவர் இப்போது அவர்களை நிதானமாகப் பார்த்தார்.
அச்சோ நம்ம பிள்ளைங்களோட படிப்பு அவ்வளவுதானா?காலேஜைவிட்டே துரத்திடுவாங்களோ?இனி என்ன பண்ண என்ற கலக்கம் வந்தது.
அது அவர்களது முகத்திலும் நன்றாக தெரிந்தது. ஆனால் இதையெல்லாம் பண்ணின நதியாவோ இந்த பஞ்சாயத்தை இந்த பிரின்சிபால் எப்போ முடிப்பாங்க. அடுத்து சினிமாவுக்குப் போயிடலாமா? என்று கவலையில் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்தாள்.
உன் கவலை உனக்குத் தாயி!நீ ரொம்ப நல்லவருவ!