கழிமுள்ளி நெஞ்சுக்காரி-7
கழிமுள்ளி-7
நதியாவும் அவளது கேங்கும் அமைதியாக கிளாஸில் அமர்ந்திருப்பதைப் பார்த்த லெக்ட்சரர்ஸுக்கே ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் நதியா அமைதியாக உட்கார்ந்து நோட்ஸ் எடுப்பதைப் பார்த்ததும் மினி ஹார்ட் அட்டாக்கே வந்ததுபோன்றிருந்தது.
அவள் அமைதியாக கிளாஸில் இருக்கிறாள் என்ற தகவல் ரமேஷுக்கு போனதும் ஆச்சர்யபட்டவர் “அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லையே!நீங்க உண்மையிலயே என் பொண்ணு நதியாவத்தான் பார்த்தீங்களா?இல்லை அதுலயும் ஆள்மாறாட்டம் எதுவும் பண்ணிவைச்சிருக்காளான்னு பாருங்க”என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இரண்டு லெக்ட்சர் போனதும் அவருக்கே மனசு கேட்காமல் மெதுவாக ரவுண்டஸ் வந்தவர் நதியாவின் கிளாஸை எட்டிப்பார்த்தார்.
எப்பவுமே அவங்க கேங்க்ல யாராவது ஒருத்தன் வெளியே நிப்பான். இன்னைக்கு என்னடான்னா ஒரு பிரச்சனையும் பண்ணாமல் இருக்காங்க என்று ஆச்சர்யபட்டவர் வேகமாக உள்ளே வந்தார்.
எல்லா ஸ்டூடன்ஸ்ஸும் அவரைப் பார்த்து எழுந்து நின்றார்கள். அவர் மெதுவாக பார்வையை சுழட்டியவாறே தன் மகளைப் பார்த்தாள்.
அவளோ ஒன்னுந்தெரியாதவள் போல் பாவமாக அவரைப் பார்த்தாள். அவரும் இதுக்குமேலயும் நம்பாமல் இருக்கமுடியாது என்று போய்விட்டார்.
லன்ச் டைமல் நதியாவிடம் தினேஷ் கேட்டான்” எதுக்கு நதியா இன்னைக்கு கிளாஸ்ல அவ்வளவு அமைதியா இருந்த?எங்களையும் இருக்க சொன்ன?பாரு பிரின்சிபால் சாரே இரண்டுதடவை ரவுண்டஸ் வந்துட்டாரு.ஒருதடவை கிளஸுக்குள்ள வந்துபார்த்தாரு. என்ன ப்ளான் உன்னோடது?”
“ம்ம்ம் ஒரு மண்ணாங்கட்டி ப்ளானும் இல்லை. இதுங்க எல்லாம் சஸ்பெண்ட் பண்ணினா நம்ம திருந்திருவோம்னு நினைச்சுத்தானே சஸ்பெண்ட் பண்றதே. அதுதான் நாங்க மூணு நாள்ல திருந்திட்டோம்னு பாருங்கன்னு காண்பிக்கிறதுக்குத்தான் அமைதியா இருந்தேன். இந்த ஒருவாரம் இப்படியே இருந்துட்டோம்னா இவங்களும் டக்குன்னு எல்லாத்தையும் மறந்திருவாங்க. வீட்டுலயும் பாஸ்போர்ட் பாரீன் போறதுன்னு பேசமாட்டாங்க. எப்படி நம்ம ஐடியா?”
“ஐடியா நல்லாதான் இருக்கு. ஆனால் உங்கம்மா பாஸ்போர்ட் அப்பளை பண்ணினதை வைச்சுப் பார்த்தா கண்டிப்பா உனக்கு பாரீன் படிப்பு கன்பார்ம்”என்று ஊமைக்கோட்டான் முகேஷ் இன்னைக்கு வாயைத் திறந்து சொல்லிவிட்டான்.
அதைக்கேட்டதும் நதியா அவன் பின்னந்தலையிலயே ஒன்னுபோட்டவள் “எப்பவும் திங்கதுக்கு மட்டும்தானே வையைத் திறப்ப கழுதை. இன்னைக்கு என்ன எனக்கு பதில் சொல்ல வாயை திறந்திட்ட. அடி வெளுத்திருவேன். இனி வாயைத் திறந்தன்னா இருக்கு”என்று கோபப்பட்டாள்.
“ஐய்யோ இவா ஒருத்தி. இப்போ எல்லாம் ரொம்ப பேசுறா. அடுத்த வருஷம் லாஸ்ட் செமஸ்டர்ல யோசிக்க வேண்டியதை இந்த வருஷம் யோசிக்கிறா பாரு. உன்னை நான் அடி வெளுத்திருவேன்” என்று தினேஷ் திட்டினான்.
வஸந்தும் விஜயும் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
நதியாவோ சாப்பிடாமல் அப்படியே யோசித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கை மட்டும்தான் சாப்பாட்டில் இருந்தது. ஆனால் சாப்பாடு வாயிக்குள்ள போகலை.
விஜய் சாப்பிட்டு முடித்துவிட்டு அவளது டிபனை பார்த்தவன் “என்ன நதி இன்னும் சாப்பிடலையா?”என்று கேட்டுவிட்டு அவளது டிபனை எடுத்தான்.
அது அவளுக்குப் பிடிச்ச மசாலா போட்ட தக்காளி சாதம்தான் இருந்தது.
உடனே அதை எடுத்து வேகாமாக அவளுக்கு ஊட்டினான். அவளோ “வேண்டாம் விஜய் எனக்கு சாப்பிட பிடிக்கலை. இந்த பிரச்சனைக்கு அப்புறம் ஒரு மாதிரி மனசு ஆகுது. அம்மா அப்பாவை பிரிஞ்சிடுவனோ?உங்களை பிரிஞ்சிடுவனோ?யாருமேயில்லாமல் தனியா போய் மாட்டிப்பனோன்னு படபடன்னு வருது” என்று உண்மையாகவே பயந்து சொன்னாள்.
அதைக்கேட்ட நாலுபேருக்குமே இவா இவ்வளவு சீரியஸாகவா இந்த விசயத்தை யோசிக்கிறான்னு அப்போதான் அவளது முகத்தைப் பார்த்தார்கள்.
அவளது கண்கள் கலங்கிப்போய் இருந்தது.
“ஏய் நதி’ பக்கத்தில் வந்து உட்கார்ந்து அவளது தோளைப் பிடித்துக்கொண்டனர்.
அவளுக்கு சட்டென்று அழுகை வந்துவிட்டது. அப்படியே பொங்கி அழவும் விஜய் அவளைத் தனது தோளில் சாய்த்துக்கொண்டான்.
அவளது தோளைத் தட்டிக்கொடுத்தவன் “ஏய் லூசு இதுக்காகவா இவ்வளவு எமோஷன் ஆகுற. நீ எங்கப்போனாலும் நாங்களும் உன்னைத் தேடி வந்திடமாட்டோமா?நீ மட்டும்தான் எங்க மேல பாசம் வைச்சிருக்கியா என்ன?அப்போ நாங்கெல்லாம் சும்மாவா பிரண்டுன்னு பழகுறோம். உங்கம்மா என்ன சொன்னாலும் சரின்னு போ. அம்ம்வோட அன்பு கிடைக்காத எனக்கெல்லாம் அந்த வரம் திரும்பக் கிடைக்காதான்னு இருக்கு. நீ என்னடான்னா அம்மா அங்க படிக்க அனுப்புறாங்க இங்க படிக்க அனுப்புறாங்க என்ன பண்றதுன்னு கண்ணீர் வடிச்சிட்டிருக்க. ஏன் அழற நதி ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாத, அழாத கஷ்டமா இருக்கு”என்றவனுக்கே குரல் ஒரு மாதிரி வேதனையோடும் அழுகையோடும் வந்தது.
“அது அது ஏனோ தெரியல ஏதோ கெடுதல் வர்றமாதிரியே இருக்கு. மனசு கஷ்டமாக இருக்கு அதுதான் அழுகை வந்திடுச்சு”
“க்கும் பொல்லாத அழுகை போடி”என்ற முகேஷுக்கு கோபம் வந்து எழுந்து போய்விட்டான்.
அவள் அழுதாளென்றால் அவனுக்குப் பொறுக்காது. அதனால் எழுந்துபோய்விட்டான்.
அதைப்பார்த்தவள் இனி அழுதாள் சரியாகாது என்று உடனே முகத்தைத் துடைத்துவிட்டு விஜயிடமிருந்து நகர்ந்து உட்கார்ந்தவள் டிபனை எடுத்து சாப்பிட உட்கார்ந்தாள்.
விஜயோ அவளது டிபனை பிடுங்கியவன் சாப்பாட்டினை அள்ளி ஊட்டிக்கொடுத்தான்.
“க்கும் ஏற்கனவே உங்க பிரண்ட்ஸிப் தொல்லையைத் தாங்க முடியல. இதுல நீ இவளுக்கு ஊட்டிக்கொடுத்தன்னா அப்பா அம்மா எங்களையே மறந்துட்டுவா”என்று சொல்லியபடி ரமேஷ் வந்து நின்றார்.
அவரைப் பார்த்ததும் மத்த மூன்று பேரும் எழுந்து நிறுக நதியாவோ அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
“என்ன விஜய் உன் பிரண்டுக்கு கையில எதுவும் அடிபட்டிருக்கா என்ன?நீ ஊட்டிவிடுற?”
“இல்ல சார் அவளே சாப்பிடாமல் அழுதிட்டு”என்று அவள் அழுததை சொல்ல வாயெடுத்தான்.
உடனே நதியா “உங்க லவ்வரு வைச்ச தக்காளி சாப்பாட்டை சாப்பிடமுடியாமல் அழுதிட்டிருந்தேன். அவன் அள்ளித்தந்தான். வேணும்னா நீங்களும் எனக்கு ஊட்டிவிடுங்க யாரு வேண்டாம்னு சொன்னா?”
“இது காலேஜு நான் பிரின்சிபால். அப்பாங்கிறதெல்லாம் வீட்டுல”
“அப்போ நீங்க போங்க சார் என் பிரண்டு எனக்கு ஊட்டுறதை ஏன் தடுக்குறீங்க”
“நதியாஆஆஆஆ”ஒரு அரட்டு அரட்டினார்.
அவ்வளவுதான் “சாரி சார்”என்றவள் பேசாமல் உட்கார்ந்தாள்.
“ஆமா காலையில கேண்டின்ல வைச்சு அரவிந்த்கிட்ட ஏதோ பேசிட்டிருந்தியாமே?அவனை மிரட்டுனியா?”
“யாரு அரவிந்த்து? நான் எதுக்கு அவனை மிரட்டணும்?’என்று ஒன்னும் தெரியதவளைப் போல கேட்டுவைத்தாள்.
அதைக்கேட்ட மூணுபேரும் வாயிக்குள்ளாகவே சிரித்துவைத்தனர்.
‘இவா காலையில அவனை மிரட்டுனதை மட்டும் இவரு நேர்ல பார்த்துக்கணும் அவ்வளவுதான் நதியாவுக்கு சங்கு ஊதிருப்பாங்க. இப்போ எப்படி பேசுறா பாரு’ என்று அவளைத்தான் பார்த்தனர்.
“யாரு அரவிந்தா?ஏன் இப்படி கேட்கமாட்ட,நீ அடிச்சு மண்டையை உடைச்சியே அவன்தான். க்லையிலயே கேண்டின்ல ஏதோ தகராறு பண்ணினதா பேச்சு வந்துச்சு”
“யாரு சொன்னா அவனா வந்து சொன்னானா?”
“அவன் வந்து கம்ப்ளெயிண்ட் பண்ணியிருந்தாதான் இதுக்குள்ள உங்க கேங்கை வரச்சொல்லிருப்போமே?”
“அப்புறம் யாரு சொன்னா?அதுதான் கம்ப்ளெயிண்ட் வரலையே. போங்க டாடீ. சும்மா சும்மா எங்களை வீட்டுக்கு அனுப்புறதுலயே குறியா இருக்கீங்க. உங்க லவ்வர் ப்ளான் பண்ணிட்டாங்க.என்னை எங்கேயவது அடிச்சு விரட்டணும்னு அதையே நீங்களும் நடத்திவைக்கலாம்னு நினைக்கிறீங்க. நடத்துங்க நடத்துங்க”
“நதியாஆஆஆஆ என்ன பேசுற. ஏற்கனவே நீ அரவிந்துக்கிட்டு பிரச்சனை பண்ணித்தான் சஸ்பெண்டாகி திரும்ப வந்திருக்க. அதுதான் மறுபடியும் என் மகளுக்கு பிரச்சனை வந்திடுமோன்னு பயந்துக் கேட்டேன். எனக்கு என் மகள்மேல அக்கறை இருக்குமா இருக்காதா? சும்மா கண்டதையும் உளறாத. எங்களுக்கு நீ எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியாதா?”என்று கேட்டவர் பக்கத்தில் நின்றிருந்த மூன்றுபேரையும் முறைத்தார்.
“நதி நாங்க கிரவுண்டல் இருக்கோம்”என்றவனுங்க ஓடிப்போயிட்டானுங்க.
இப்போ நதியா அவங்கப்பாவை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“என்ன நதிம்மா இது?எதுக்கெடுத்தாலும் கோபப்பட்டு பேசினா எப்படி. இன்னைக்கு நீ கிளாஸ்ல அமைதியா இருக்கிறதைப் பார்த்து ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இன்னும் ஒரு வருஷம் ஓடிப்போயிடும். நீ நல்லா படிச்சா நல்லதுதானே நதிம்மா”என்று பக்கத்தில் வந்து அவளது முகத்தை துடைத்துவிட்டார்.
“ம்ம்ம் இனி ஒழுங்கா படிக்கிறேன்”
“யாருக்கிட்டயும் சண்டைக்குப்போகாத”
“ம்ம்ம் ட்ரை பண்றேன்”
“குறிப்பா அந்த அரவிந்த்கிட்ட நெருங்காத. அவன்கிட்ட பிரச்சனை பண்ணானத”
அதைக்கேட்டதும் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.
“உன் நல்லதுக்குத்தானே நதிம்மா சொல்லுறேன்”
“அந்த பயந்தாங்கோழிக்கு ஏன்பா நீங்க பயப்படுறீங்க”
“ஹாஹாஹா இது நல்ல ஜோக். அவனுக்கு எதுக்கு நான் பயப்படபோறேன். என் வேலை போனாலும் எவனுக்கும் பயப்படமாட்டனே. இது என் பொண்ணோட வாழ்க்கைல அதுதான் கொஞ்சம் பொறுமையா இருக்க சொன்னேன்”
“போங்கப்பா அவனெல்லாம் ஒரு ஆளு. அவன்கிட்ட பேசமாட்டேன். ஆனா பிரச்சனைன்னு வந்தா விடமாட்டேன்”
“ஏதோ ஒன்னு அவன்கிட்ட சண்டைப்போடாத அவ்வளவுதான். அப்புறம் அந்த மனோஜ்”
“ஹாஹாஹா அப்பா இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா. அவன் என்னைப் பார்த்து பயந்து ஓடிட்டான்”
“அப்படியா அவனா? பயந்துட்டானா?அப்போ இனி உன் வழிக்கு வரமாட்டான்னு சொல்லு”
“எஸ்ஸூஊஊ”
“ஏதோ ஒன்னு உனக்குப் பிரச்சனை வராமல் இருந்தா சரிதான்”
இரண்டுபேரும் இப்போது சத்தமாக சிரித்துவிட்டனர்.
அவளது தலையை ஆதூரமாகத் தடவிக்கொடுத்தவர் “நீ எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே சந்தோசமா இருக்கணும்டா. அதுக்குத்தானே உங்கம்மாவும் நானும் இவ்வளவுதூரம் கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கோம். உங்களுக்கு எது நல்லதோ அதுதான் நாங்க செய்வோம்னு புரிஞ்சிக்கோங்க போதுமா”
“ம்ம்ம்”
“ம்ம்மா செய்த சாப்பாடு அவ்வளவு மோசமாவா இருந்துச்சு. விஜய் ஊட்டிவிட்டான்”
“ம்ம்ம் ஆமான்னு சொன்னா என்ன செய்வீங்க?”
“நதிம்மா அதுதானே நானும் சாப்பிட்டேன். செமையா இருந்துச்சே. பொய் சொல்லாத அம்மா சமையல் எப்பவுமே நல்லாயிருக்குமே”என்று முகம் நிறைய புன்னகையோடு சொன்னவரை முகம் சுழித்தவாறே பார்த்தாள்.
“போதும் காலேஜோட பிரின்சிபால்னு நினைப்போட போய் ஸ்டுடண்ட்ஸ்ஸ பாருங்க. இங்க இருந்து உங்க லவ்வரோட சமையல் பாராட்டாதிங்க. முடியல”
அதைக்கேட்டதும் “உனக்கு பொறாமை நதிம்மா. நான் கீதாமேல பாசமா இருக்கிறதைப் பார்த்து”என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தார்.
“அப்பாஆஆஆ” என்று அவரது வாயை மூடியவளின் தோளைப்பிடித்து தன்பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்.
இரண்டுபேரும் அப்படி நிற்பதை பார்த்துக்கொண்டே வந்த அரவிந்த் “குட் நூன் சார்”என்று விஷ் பண்ணவும் ரமேஷ் தலையசைத்து சிரித்தார்.
அவனைப் பார்த்த நதியாவோ கெத்தாக அவங்கப்பாக்கிட்ட ஒட்டி நின்னவாரே, அவனை மிதப்பாக பார்த்து வைத்தாள்.
அவனோ பயந்தமாதிரி நின்றான். அதைப்பார்த்தவள் ஹ்ஹ்ம் அந்த பயம் இருக்கட்டும் என்று கண்ணால் ஜாடை காட்டினாள்.
“சரி நதிம்மா நீ கிளாஸுக்குப்போ” எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு என்று அங்கிருந்து ரமேஷ் போய்விட்டார்.
அவர் போனதும் நதியா தனது பேக்கை எடுதுதுக்கொண்டு நடக்க, அவளது பின்னாடியே வந்த அரவிந்தைத் திரும்பிப்பார்த்தாள்.
அவனோ “என்ன மேடம் ”என்று பவ்யமாக கேட்டு நின்றான்.
அவன் வளர்த்திக்கு இவளே நிமிர்ந்துதான் பார்க்கணும், அவன் இவளிடம் பம்மிக்கொண்டு நிற்கவும் “என்ன காலையில நான் உன்னை மிரட்டினத போய் எங்கப்பாக்கிட்ட போட்டுக்குடுத்தியா?”என்று கேட்டு மிரட்டினாள்.
“அப்படியெல்லாம் போட்டுக்கொடுக்கலையே மேடம்.உங்களைப் பார்த்தா எனக்கு பயமாயிருக்கே. நான் எப்படி சார்கிட்டபோய் உங்களைப் பத்தி சொல்லிருப்பேன்”
“ஓஓஓ அப்போ நான் உன்னை மிரட்டினத அப்பாக்கிட்ட யாரு சொன்னது. நீ சொல்லிருந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை. அதை நானே சமாளிப்பேன். நீ ஒன்னும் எனக்காக யோசிக்கத் தேவையில்லை. அப்புறம் அப்புறம்”என்று அவனது முகத்தைப் பார்த்தவளுக்கு பேச்சு அப்படியே நின்றுவிட்டது.
அவனது கண்கள் அவளை அப்படியே துளைக்கின்ற பார்வை பார்த்து வைக்கவும், அவனது கண்களையே பார்த்து நின்றுவிட்டாள்.
அத்தோடு அவனிடம் பேச்சை நிறுத்தியவள் பேக்கை எடுத்துக்கொண்டு படியில் இறங்க தடுமாறி விழப்போனாள்.
“ஏய்ய பார்த்து” என்று அவளை அரவிந்த் விழாமல் பிடித்துக்கொண்டான்.
அவன் பிடித்ததும் அப்படியே உறைந்துப்போனவள் அவனைத் திரும்பிப் பார்க்க அவனது கண்களில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை அப்படியே கட்டிப்போட்டது.
அவன் தன்னைப் பிடித்திருந்த கையோடு தனது கையை வைத்துப் பிடித்துக்கொண்டாள்.
அவனைப் பார்த்தால்தான் பச்சைப்புள்ள மாதிரி முகம் இருக்கு. ஆனால் அவன் அவளது இடுப்பைப் பிடித்தபிடி உடும்புபிடியாக இருந்தது. அவளை அப்படியே தூக்கி தன்னோடு சேர்த்து இழுத்து நிறுத்தியவனின் கைகள் பிடித்தபிடியில்தான் இருந்தது.
அவனது கையின் ரோமங்களைப் பார்த்தவளுக்கு ஒரு மாதிரியாகியது. அப்படியே கையைப் பார்த்துக்கொண்டே மீண்டும் முகத்தைப் பார்த்தாள்.
அவனது மீசை அவ்வளவு அடர்த்தியாக இருந்ததைக் கண்டவளுக்கு ‘இவன் என்ன இவ்வளவு ஹேண்ட்ஸமா இருக்கான்’ என்று அவனை ரசித்துப்பார்த்தாள்.
அவளது ரசனையான பார்வையை உணர்ந்தவனின் கண்கள் மின்னி சிரித்தது போன்றிருந்தது.
உடனே நதியா அவனிடமிருந்து விலகி நிற்க முயன்றாள். ஆனால் அவனது பிடியோ இறுகிய பிடியாக இருந்தது.
அதில் கொஞ்சம் கோபமேறியவள் “கையைவிடு”என்று முறைத்தவளைப் பார்த்து சிரித்தான்.
“சாரி நதியா மேடம் நீங்க விழப்போனதும் சட்டுன்னு பிடிச்சு நிறுத்திட்டேன் மேடம். மேடம் தப்பா நினைச்சிக்காதிங்க மேடம். என்னை அடிச்சிடாதிங்க மேடம்”என்றவன் நதியாவை விடாமல் பிடித்துதான் வைத்திருந்தான்.
அவளுக்கு ஏனோ அவன் மேடம்னு சொன்னதைவிடவும் அவனது கண்கள் பேசிய பாஷைதான் பிடித்திருந்தது. அவனிடமிருந்து அவளும் விலகாது நின்றாள்.
அவளது கண்கள் இப்போது அவனது முகத்திலிருந்து விலாகாது அப்படியே பார்த்திருந்தாள். அவனுமே அசையாது அப்படியே நின்றிருந்தான்.
அப்போது யாரோ அவளை வேகமாக பிடித்திழுத்திழுக்கவும் பயந்துப்போனவளை, அரவிந்த் தனது பிடியை இறுக்கி தன்னோடு சேர்த்து பிடித்தான்.
தன்னை யாரு பிடித்திழுத்தா என்று பார்த்த நதியாவின் கண்கள் பரபரவென்று பயந்து அங்குமிங்கும் உருண்டது.
விஜய்தான் அவளை அரவிந்திடமிருந்து விலக்கி நிறுத்தணும்னு கையைப்பிடித்து இழுத்திருந்தான்.
இப்போது நதியா விஜயைப் பார்த்ததும் அரவிந்தின் கையில் இருந்து விலகமுற்பட்டாள். இப்போதும் அவனை தனது பிடியைவிட்டானில்லை.
“நதியா என்னதிது. இவன் எதுக்கு உன்னைப் பிடிச்சிட்டு நிக்கிறான்.அவன்கூட சண்டைப்போட்டியா?”என்று கோபத்தில் அடிக்குரவில் அரவிந்தை எச்சரிப்பதுபோன்று பார்த்தவாறே அவளிடம் கேள்வியைக் கேட்டான்.
“அது அது விஜய் நான் கீழே விழப்போயிட்டேனா அரவிந்துதான் என்னை பிடிச்சு நிறைத்தினாங்க. தேங்கஸ் அரவிந்த்” என்று கண்களாலயே அவளைவிடும்படி சொன்னாள்.
அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்திய அரவிந்த் “பார்த்து நதியா மேடம். கீழ விழாமல் போங்க. எப்பவும் நான் வந்து பிடிக்கமுடியாதுல்ல”என்று பாவமாக சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டதும் “அவள் கீழே விழாமல் நாங்க பார்த்துக்கிறோம் நீங்க கொஞ்சம் தள்ளியே நில்லுங்க அரவிந்த்” என்றவன் நதியாவிடமிருந்து அரவிந்தை தள்ளி நிற்கவைத்துவிட்டு நதியாவை கூட்டிட்டுப்போனான்.
போகும்போதே விஜய் திரும்பி அரவிந்தை முறைத்தான். ஆனால் நதியாவோ தேங்க்ஸ் என்று உதட்டசைவில் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள்!
அரவிந்தோ இளம்புன்னகையோடு அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான்!
நதியா உன்னை சுற்றி காதல் தேவதைகள் பறந்தா அவங்க இறக்கையை பிடுங்கிப்போட்டிரு ஆத்தா!