மூப்பு அடையா யட்சகா 24

Yechq24

மூப்பு அடையா யட்சகா 24

24  மூப்பு அடையா யட்சகா!! 

காலை கண்களை திறந்த யட்சன் படுக்கை மீது அவள் இல்லாது போக 

சுகர்பேபி இஇஇ என்று குளியலறை உள்ளே இருக்கிறாளோ என்று குரல் கொடுக்க அமைதியாக இருந்தது 

ப்ச் கீழ போயிட்டாளோ? ஆடையை மாற்றி கொண்டு சர்வசாதாரணமாக யட்சன் கீழே இறங்கி வந்தவனை சண்முகம் கையை பிசைந்து கொண்டு பார்க்க 

குட் மார்னிங் சண்முகம் சுகர்பேபி காப்பி" என்று "கிச்சன் உள்ளே அவளை தேடி கொண்டே குரல் கொடுக்க 

"அவங்க அம்மா அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டாங்க 

"யாரை ??என்றான் வேலையாள் கொண்டு வந்த காப்பியை வாங்கி குடித்தபடி 

தேனிசையை காலையிலேயே அவங்க அப்பா அம்மா  வந்து  இழுத்துட்டு போயிட்டாங்க 

வாட் ஏன் எதுக்கு என்று புரியாது முழித்த யட்சன் கையில் நியூஸ்பேப்பரை கொடுத்த சண்முகம் 

"பாருங்க புரியும் என்று அவர் எச்சில் விழுங்கி ஒதுங்கி நிற்க 

"அப்படி என்ன இதுல இருக்கு" என்று சோபாவில் அமர்ந்து பேப்பரை பிரித்தவன் உடல் முழுக்க மின்சார அதிர்வு ... 

கையில் இருந்த நியூஸ் பேப்பரை பார்த்தவன் முகம்  இறுகி போனது .. 

பெருகி வரும் சுகர்டேடி சுகர்பேபி கலாச்சார சீரழிவு தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை...  பெரிய பெரிய ஜாம்பவான்கள் , தொழிலதிபர்கள் தங்களுடைய காம இச்சைகளை தீர்த்துக் கொள்ள தன்னைவிட பாதி வயது இளைய பெண்களோடு தொடர்பில் இருப்பதாகவும்,  அவர்களுடைய பணத்தேவையை காண்ட்ராக்ட் முறையில் பூர்த்தி செய்வதாகவும் , உலகிற்கு தெரியாமல் ஒரு இருட்டு உலகில் வாழ்ந்து தங்கள் வக்கிர புத்திகளுக்கு தீனி போட்டுக் கொள்வதாகவும் சர்வே சொல்கிறது... 

இதோ பிரத்தியேகமாக நமது நாளிதழில் ஆதாரத்தோடு சுகர்பேபி  சுகர்டேடி கலாச்சாரத்தை முகத்திரையை கிழித்து இருக்கிறோம்.. இந்த படத்தில் இருக்கும் நபர் பிரபல ஜேஜே கம்பெனியின் சேர்மன் யட்சன்... அவரின் அந்தரங்க விளையாட்டுகளும் வயதிற்கு மீறிய செயல்களும் இதோ உங்கள் பார்வைக்கு என்று யட்சன் ஏற்காட்டில் தேனிசையோடு சுற்றியது காரில் இருவரும் ஒட்டி உரசி விளையாடியது , இன்னும் கண் கூச வைக்கும் சில காட்சிகள் சட்டென பேப்பரை மேஜையில் போட்டவன்....  ஒரு நொடி தலையில் கை வைத்து  அப்படியே நெற்றியை வருடிக் கொண்டிருந்தான் ....  உடல் முழுவதும் இரும்பை காய்ச்சி ஊற்றியது போல இறுகிப்போய் கிடந்தது.... 

மொத்தமாக அவன் சேர்த்து வைத்திருந்த மரியாதை சீட்டுக்கட்டு மாளிகை போல இடிந்து விழுந்து இருந்தது ... வெள்ளை நிற மீசையை சிறிது நேரம் தடவிக் கொண்டே இருந்தவன்...  எழும்பி நடக்க ஆரம்பிக்க .... சண்முகம் ஓடி வந்து 

அந்த பொண்ணு தான் ரிலிஸ் பண்ணி இருக்கும்னு நினைக்கிறேன் சார் , காலையில இருந்து பிரஸ்காரன் தொல்லை தாங்கல என்ன பண்ண? 

அங்கிருந்தவர்கள் எல்லோரும் குசு குசு என்று பேசிக்கொண்டு நிற்க இவன் தலையை தூக்கிப் பார்த்த பார்வையில் அத்தனை பேரும் கீழே குனிந்து கொள்ள ....

"டேடி வாட் இஸ் திஸ்??" என்று ஓடிவந்த மகனுக்கு முகம் கொடுத்து பார்க்காது பதில் சொல்லாமல் தன் கார் சாவியை கையில் எடுத்தவன்...  எப்போதும் போல கூலர்ஸை எடுத்து கண்ணில் மாட்டிக் கொண்டு  ஒரு நொடி தாமதம் செய்து பெருமூச்சு விட்டவன்...  பழையபடி அதே மிடுக்கோடு தோரணையோடு சட்டையை முறுக்கி விட்டபடி கார் நோக்கி நடக்க ஆரம்பிக்க.... 

ஜீவா தன் தகப்பனை பார்த்தபடி கண்கலங்கி நின்றான் உலகம் பற்றி தெரியாதவன்தான் ஆனால் நண்பர்களின் கேலி பேச்சில் உடைந்து நின்றான்...பதில் சொல்ல வேண்டியவன் யாருக்கும் பதில் சொல்லாமல் போய் காரை எடுத்தான் ...

இரவு அவன் தந்த பரிசை பார்க்க ஆசை கொண்டு தூங்கும் யட்சன் தன் இடையில் போட்டிருந்த கையை விலக்கிவிட்டு பரிசை எடுக்க போக அவள் தொடையோடு தன் காலை போட்டு அமுக்கிய யட்சன் 

எங்க ?

"அது என்னன்னு போய் பார்த்துட்டு வர்றேன்...

"குச்சிமிட்டாய் வேற ஒன்னும் பெருசா இல்லை படு

பார்த்துட்டு வர்றேன் கிழவா 

படுடி காலையில பாரு 

"அப்படி என்ன வாங்கிட்டு வந்தீங்க? 

"காலம் முழுக்க இந்த கிழவனுக்கு சுகர்பேபியா இருக்க லைப்டைம் செட்டில்மெண்ட் அக்ரிமெண்ட்... 

"அது ரொம்ப காஸ்ட்லியே  கிழவா" என்று அவன் மீது இவள் காலை போட 

"மொத்த சொத்தும் போனாலும் ஓகே பாத்துக்கலாம் 

"அப்ப உங்க இஷ்டம் "என்று அவன் நரை முடி பிடித்து தூக்கி தன் நெஞ்சில் போட்டு கொண்டு தூங்கியவள் , காலை அவன் தந்த பரிசை பூஜை அறையில் வைத்து விட்டு 

"அவர் வந்ததும் அவர் முன்ன திறந்து பார்க்கிறேன் அப்படி என்னதான் கிழவன் வாங்கிட்டு வந்தான்னு பாத்துடுவோம் "என்று  துள்ளல் நடையோடு ஹால் உள்ளே  வர   பளார் என்ற அறையில்  தரையில் பொத்தென்று விழுந்தாள்...  அங்கே தந்தை கண்ணீர் வடிந்த முகத்தோடு நிற்க தாய் ஆங்காரம் நிறைந்த முகத்தோடு கையை ஓங்கி கொண்டு நின்றார் 

"ப்பா 

"ம்மா என்று தட்டுதடுமாறி எழும்பிய தேனிசை முகத்தில் வந்து பேப்பர் விழ அதை எடுத்து பார்த்தவள் உலகம் காலடியே நழுவியது,அந்நிலையிலும் அவள் யட்சனை தேடித்தான் ஓட போனாள் , தாயின் கையில் கொத்து முடி பிடிபட , தர தர தரையில் அவள் இழுபட இழுத்து கொண்டு போய் ஆட்டோவில் போட்டார்கள்...

"உலகத்துல உள்ள சாமியை கூட நாங்க நம்புனது இல்லடி,  உன்ன நம்பினோம் , உலகத்துல சுத்தி சுத்தி தப்பு நடக்கும்போதெல்லாம் எங்க பொண்ணு இந்த உலகத்துல எந்த எல்லைக்கு போனாலும் சரியா இருப்பேன்னு நினைச்சோம் ... பிரபுவோட கல்யாணம் வேண்டாம்னு  நீ சொன்ன போது,  பிள்ளைக்கு ஏதோ புடிக்கல போலன்னு சரின்னு தலையாட்டினோம், ஜீவாவை லவ் பண்றேன்னு வந்து நின்ன போது ,.. நம்ம பிள்ளைக்கு நினைச்ச மாதிரி நகை நட்டு ஆஸ்திதான் சேர்க்க முடியல புடிச்ச காதல் வாழ்க்கையையாவது ஏற்படுத்திக் கொடுப்போன்னு அந்த பையன் யாரு என்னன்னு எதுவுமே கேட்காம சரின்னு தலையாட்டினோம்..  அப்பா  நான் அங்க போறேன், இங்க போறேன்னு சொல்லும்போது,  எங்க போறன்னு ஒரு வார்த்தை கூட நாங்க கேட்டதில்லை... ஏன் தெரியுமா?  எல்லாம் எங்க பொண்ணு மேல நாங்க வச்சிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை!!!  இன்னைக்கு ஊரே கூடி நின்னு  நம்ம வீட்டுக்கு முன்னாடி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு ... மரியாதை மட்டும்தான் உயிர்னு  நினைச்சு கெளரவமா வாழ்ந்துகிட்டு இருக்கிற எங்களுக்கு நீ நல்ல பேர் வாங்கி கொடுத்துட்டம்மா...  உன்னை நம்புனதுக்கு உன்னால எவ்வளவு முடியுமோ,  அவ்வளவு செல்வத்தை சேர்த்து கொடுத்துட்டம்மா ... இன்னும் எங்களுக்கு நீ என்ன தரப் போற , என்ற  தகப்பனின் அழுகை நிறைந்த முகத்தை ஏறிட்டு பார்க்க  முடியாமல் அவர்கள் வீட்டு தரையில் விழுந்து கிடந்தாள் தேனிசை..

"சொல்லுடி அந்த மனுஷன் கேக்குற கேள்வி எதுக்காவது,  உனக்கு பதில் சொல்ல முடியுமா? சொல்லுஊஊ,  என்று அங்கே கிடந்த பெல்ட் எடுத்து தாய் தேனிசையை விளாசி எடுக்க ஒரு சொட்டு சத்தம் வெளியே வரவில்லை...  அப்படியே அடிகளை பல்லை கடித்து வாங்கிக் கொண்டு கிடந்தாள் தேனிசை ....

என்னங்க பண்ணலாம்....

"என்ன பண்ண சொல்ற மானம் மரியாதை நமக்கு இருந்த பேரு அத்தனையும் போச்சு ...  தப்பு அத்தனையும் பண்ணிட்டு ன் இப்படி ஊமையா இருக்கா , இல்லை ,  அப்பா நான் பண்ணலன்னு நேருக்கு நேரா சொல்லக்கூடியவ இவ , அமைதியா கிடக்கான்னா என்ன அர்த்தம்? 

எதுக்கும் ஒரு தடவை அவ கிட்ட கேளுங்க

ஒருவேளை தப்பா கூட என்று மனைவி சொல்வது சரியோ என்று நினைத்த கணவன் தேனிசை அருகில் உட்கார்ந்து அவள் கையைப் பிடித்து தன் கைக்குள் வைத்து கொண்டு

ஏதோ தப்பு தானே நடந்துருச்சு இசை,.  அதுல உள்ள மாதிரி உனக்கும் அவருக்கும்,  எந்த தொடர்பும் இல்லல்ல என்று அவர் நடுங்கிய குரலோடு கேட்க 

சொல்லு இசை உனக்கும் அவருக்கும் அந்த பேப்பர்ல சொல்லி இருக்கிற மாதிரி தப்பான உறவு எதுவும் இல்லல்ல சொல்லித் தொலைடி...  என்று  தாய் அவளை இன்னும் முதுகில் நாலு அடி போட...

சொல்லுடி இல்ல தான .."

"இருக்கு , எனக்கும் அவருக்கும் உறவு இருக்கு ....   நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தது உண்மை.."  என்றவள் கண்ணை மூடிக்கொண்டு  சொல்லி முடித்து விட..

"அய்யோ கெடுத்துட்டாளே  பாவிமட்டை கெளரவத்தை சிதைச்சிட்டாளே... செத்து தொலைடி...  செத்து ஒழி ... 

"என்னங்க செய்ய ??

"இவளை பெத்த பாவத்துக்கு சாவுதான் தீர்வு: என்று விஷ பாட்டிலை கொண்டு வந்து முன்னால் வைக்க 

"அப்பா அம்மாஆஆஆஆ என்று அவள் பதறி தாயையும் தகப்பனையும் பார்க்க .... 

ஒன்னு  மூணு பேரும் செத்துடுவோம்..  இல்ல உன்னை கொன்னுட்டு நாங்க ஜெயிலுக்கு போயிடுறோம். இந்த அவமானத்தை சுமந்துகிட்டு எங்களால இனிமே இந்த உலகத்துல வாழவே முடியாது என்று தாயும் தகப்பனும் தலையில் அடித்துக் கொண்டு அழ .... 

கேளுடி ஊரும் உலகமும் உனக்கு வச்ச பேரை கேளு என்று தாய் ஜன்னலை திறக்க 

"சீசீ இவனுக்கு சின்ன வயசு பொண்ணு ஒன்னு தான் கேடு.,  பாவம் அந்த பொண்ணு வாழ்க்கையை என்ன சொல்லிக் கெடுத்தானோ தெரியல .. இனிமே அந்த பொண்ணு எப்படி தலை காட்டும்?  அவர் பணம் உள்ளவர் பணத்தை வச்சே பாவத்தை மறைச்சுடுவான் ஆனா அந்த பொண்ணு..

"அவரை  மட்டும் குறை சொல்லாதீங்க ... ஊசி இடம் குடுக்காம நூல் நுழைய முடியுமா .. அவ பணத்துக்காக கால விரிக்கலன்னா,  இந்த பழி அவ மேல வந்து இருக்குமா?  பணத்துக்காக போயிட்டு இப்போ,  ஆம்பிளையை மட்டும் குறை சொல்லி என்னத்துக்கு...

"ஆனாலும் அந்த புள்ளைய நான் இப்படி நினைச்சே பார்க்க முடியல...  தெருவில் நடக்கும் போது கூட தலையை குனிஞ்சுகிட்டே போகும் வரும் ... இவ்வளவு பெரிய கேவலத்தை பண்ணி இருக்கு.... 

இனிமே அவங்க அப்பாவும் அம்மாவுக்கு எப்படி தலை காட்டுவாங்க ... மானத்தோட மூணு வேளை சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க,  இப்படி மானத்தையே வாங்கிட்டாளே .. ப்ச் இனி செத்தா கூட இந்த அசிங்கம் இந்த குடும்பத்தை விட்டு போகாதே..  

இருபதில் காதலித்தால் இது எங்க உருப்படும் உதாரிபய  என்ற பெயர்  இலவசம் 

முப்பதில் திருமணம் முடிக்க வில்லை எனில் முத்திய கத்திரிக்காய்  பெயர் இலவசம் 

தாலி ஏறியதும் பிள்ளை பெற்று கொள்ள வில்லை என்றால் மலடி  பெயர் இலவசம் 

நாற்பதில் கணவனை இழந்தால் ராசிக்கெட்டவ என்ற இலவச பெயர் 

ஐம்பதில் சொந்த மனைவியோடு பிள்ளை பெத்து கொண்டால் இந்த வயதில் இது தேவையா  என்று மானகெட்ட பெயர் இலவசம் 

பல இலவசங்கள் நாட்டையும் வீட்டையும் கெடுத்து கொண்டே இருக்கிறது ....

அடுத்தவர்கள் வாழ்க்கையைப் பற்றி நியாய தீர்ப்பு செய்யும் அளவு இங்கே யாரும் உத்தமர்களும் இல்லை உத்தமிகளும் இல்லை..  அவர்கள் செய்தது வெளியே தெரிந்தது,  வெளியே தெரியாமல் வக்கிரத்தோடு வாழும் கூட்டம் பெருகிவிட்டது இன்று அடுத்தவரை சுட்டும் விரல்கள் நாளை நம்மையே சுட்டும்... 

கேட்டியா உன்னால எங்களுக்கு கிடைச்ச அவமானம் தலைகுனிவு பார்த்தியா.. கண்ணீரை துடைத்துக் கொண்ட தேனிசை இருவரையும் மாறி மாறி பார்த்தவள் 

"ஆயிரம் காரணம் லட்சம் விளக்கம் சொன்னாலும் உங்களுக்கு செஞ்சது தப்புதான்...  அதுக்கான பிராயசித்தம் எங்கிட்ட இல்லப்பா... என்ன  எல்லா நிலமையிலும் நம்புன உங்களுக்கு நான் செஞ்சது நம்பிக்கைதுரோகம்தான்...  அந்த நம்பிக்கை துரோகத்துக்கு பரிசா என்ன வேணும்னாலும் செய்றேன்பா என்று அந்த விஷப்பாட்டலை தேனிசை கையில் எடுத்தாள்.... 

யட்சன் முகம் கருத்து காரை பேய் போல ஓட்டினான் 

அவன் கார் ஜன நெருக்கடியான அந்த சாலையில் சீறியது..  ஹாரன் பேய் போல அடித்தான்., அக்ஸிலெட்டருக்கு  வாய் இருந்தால் டேய் பார்த்து மிதிடா வலிக்குது என்று கதறி இருக்கும்.. 

எங்கேயும் வேகத்தை குறைக்கவில்லை எவ்வளவு வேகம் கூட்ட முடியுமோ ஆக்சிலேட்டரை போட்டு மிதி மிதி என்றும் மிதித்து சாகடித்தான்.. அதிவேகம் எப்போதும் ஆபத்து என்று அறியவில்லை போலும் 

அவன் கார் , தேனிசை வீட்டை அடைய இதோ சில அடி தூரமே படீர் என்று குறுக்கே வந்த லாரி  திடீரென வேகமாக வந்து யட்சன்  காரை  இடித்து தூக்கி வீச... வானில்  பம்பரமாக சுற்றி கார் டொம் என்று சத்தத்தோடு தரையில் விழுந்தது ....  

அவன் வாங்கி கொடுத்த பரிசு  பொத்தென்று தரையில் விழுந்து சிதற ....அதே நேரம் ,  கதவு  திறந்து யட்சன் குருதியோடு விழ.. நகை பெட்டி அது ரெண்டாக திறந்து கிடந்தது அதில் அழகாக தங்க தாலி  ப்ளீச் என்று சிரித்தது .... 

மரியாதை இல்லாத உறவுக்கு மரியாதை கொடுக்க நினைத்த நேரம் மதிப்பு இல்லாது போனது அத்தாலி!!