மூப்பு அடையா யட்சகா 1

Mupppu1

மூப்பு அடையா யட்சகா 1

1 மூப்பு அடையா யட்சகா !! 

சென்னை ஜன நெருக்கமான தெரு அஃது ... 

அந்த மிடில் கிளாஸ் வீட்டின் முன்னே ரேஞ்ரொவர் புதுக்கார் நின்றது .... காரில் 25 வயது இளைஞன் கையில் ஐபோனை வைத்து பேசி கொண்டு யாரின் வருகைக்காகவோ காத்து இருந்தான் ... அவன் நின்ற விதமே பெரிய வீட்டின் வாரிசு என்று சொல்லாது சொன்னது.. அவனுக்கு இங்கே என்ன வேலை ?? தேனீர் அருந்தவே அந்தமான் தீவுக்கு போகும் அளவு செல்வந்தன் இந்த குறுகிய சந்து கொண்ட தெருவில் என்ன செய்கிறான்..  

எஸ் டேட் இதோ கிளம்பிட்டேன், அவன் போனில் மறுமுனையில் என்ன சொல்ல பட்டதோ ... 

யா 

ஓகே

ம்ம் "

வந்திடுறேன் பதில் போய் கொண்டே இருந்தது....  

 

"ஓகே டேட் வந்துட்டா , பிறகு பேசுறேன் ... என போனை வைத்து விட்டு எதிரே நடந்து வந்த நபரை அவன் விழி விரித்து பார்த்தான் .... 

:வாவ் ஊஊஊஊஊஊ கார்ஜியஸ்!!" என்ற அவனின் பார்வையில் வெட்க புன்னகை புரிந்தாள் அவள்... 

சிவப்பு பட்டு சேலையில் , தலைநிறைய பூவோடு கையில் சிவப்பு கண்ணாடி வளையல் , கையில் இனிப்பு பாக்ஸோடு அவனை நோக்கி வந்த பெண்ணை வாயை பிளந்து பார்த்தான் அவன் .. அவன் பார்வையில் மெலிதாக சிரித்த பெண் அவளோ...

உண்மையாவே நல்லா இருக்கா ஜீவா? ஓகேவா இருக்கேனோ?? அப்பெண் தயக்கமா கேட்க ... 

கண்கள் ஜதி மீட்டியது , கண்மை கண்ணில் விழுந்தவன் எவன் ஆகிலும் மீள்வது கடினமே!! அவள் பேசும் சிவந்த உதட்டை ருசி பார்ப்பவன் அரக்கன் ஆயினும் மரணம் தழுவி விடுவான் அத்தனை மீ மதுரச கோப்பை அஃது!! அவள் நெளிந்த இடை பிரம்மன் மெனக்கெட்டு நேரம் ஒதுக்கி செதுக்கியது போல வளைந்து, அதன் பின்னே பருத்து என்று ஆஹா ஆஹா!! அவளை படைத்த கோலத்தில் பார்க்க போகும் உடையனுக்கு உடல் எல்லாம் மச்சம் இருக்க வேண்டும் ... அழகில் என்னடா இருக்கிறது அது அழிந்து போகும் ஒன்றே என்று சொன்னாலும் உலகம் தேடி தேடி அலைவது என்னவோ இந்த அழகையும் இளமையையும் தான் என்பதை ஒத்துகொள்ளத்தானே வேண்டும் .... 

அவள் அழகை தெருவில் நடந்த சிலறும் வாயை பிளந்து பார்த்து விட்டு கடந்தனர் 

பின்னே இது யாருக்கு கொடுத்து வைக்க போகிறதோ என்ற வயித்தெரிச்சல் சிலர் கண்ணில் 

அப்படி ஒரு பேரழகியா என்றால் ஆம் சொர்ண சுந்தரி!! தங்கத்தில் வடித்த பெண் சிலை அவள் , வைரத்தில் செதுக்கிய வண்ண அழகி அவள் ... எப்போதும் சுடிதாரில் பவணி வரும், அவள் இன்று பட்டு சேலையில் வந்து நிற்க நெறி தவறா ஆண் கூட சற்று தடுமாறித்தான் போவான் !! 

உண்மையாவே இது ஓகேவா ஜீவா" அவளுக்கோ தன் அழகில் இன்னும் சந்தேகம் தான் போலும் !!  

"அய்யோ செமயா இருக்க என்றான் அவளுக்கு காரின் முன் கதவை திறந்து விட்டபடி 

"உங்களுக்கு பிடிச்சு இருக்கா ?

"சூப்பரா இருக்க "

"ஓஓஓஓ அப்போ உங்க அப்பாவும் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்வாரா ஜீவா? சற்று பயந்த பார்வை அவள் பார்க்க 

நான் ஏற்கனவே சொல்லிட்டேனே, என் டேடிக்கு என்னோட ஹேப்பி தான் முக்கியம் ... நீதான் பொண்ணுன்ணு காட்டுனா ஓகேன்னு சொல்ல போறார் என்று ஜீவா வந்து காரை எடுக்க 

இல்ல அப்பெண் இன்னும் தயங்கினாள்.. தங்க சிலை போல அழகிதான்!! ஆனால் இவனோ தங்க அரண்மனையில் வாழும் ஆண்வைரக்கிளி!! 

ஏணி வைத்தால் மட்டும் அல்ல லிப்ட் வைத்தும் எட்டி பிடிக்க முடியாத உயரம் , காதலுக்கு ஏற்ற தாழ்வு இல்லை காதலிச்சாச்சு ஆனால் திருமணம் முரண்டியது பெண்ணுக்கு !! 

கோடிகளில் புரளும் இவன் எங்கே மாத செலவுக்கு விரலை நீட்டி கணக்கு பார்க்கும் அவள் எங்கே ? டேடி உன்ன மீட் பண்ணணுமாம் வர சொல்லி இருக்கார் என்று இரவு ஜீவா அழைப்பு வர 

அய்யோ அப்போது இருந்து பயப்பந்து உருட்டியது இத்தாரகைக்கு ... 

"ஏன் இப்பவே நம்ம விஷயத்தை சொன்னீங்க ஜீவா கொஞ்ச நாள் கழிச்சு சொல்லி இருக்கலாமே ஆற்றாமையில் நெளிந்தாள் ... 

"டேட் கண்ணை விட்டு எதையும் மறைக்க முடியாது நேத்து அவரே கேட்டுட்டார்.... யார் அந்த பொண்ணுன்னு ,அப்பறம் என்னால மறைக்க முடியல.. சோ சொல்ல வேண்டியதுதாகி போச்சு .... 

"ஓஓஓஓ ஏத்துப்பாரா ?

"என் டேட் மத்த அப்பாக்கள் போல இல்லை , எனக்கு ஓகேன்னா டேடிக்கு டபுள் ஓகே .... அவன் சொன்னாலும் இவளுக்கு பயப்பந்து இன்னும் உருண்டது.... 

கார் சென்னை பணக்கார முதலைகளின் அலுவலகம் நிறைந்து இருக்கும் ஏ கிளாஸ் இடங்களுக்குள் நுழைந்தது இவளுக்கோ பயம் பதட்டம் நொடிக்கு ஒரு முறை கையை பிசைந்தாள் 

"ஹே ரிலாக்ஸ் எனக்கு பிடிச்சா என் டேடிக்கும் பிடிக்கும் இப்படி டென்சன் ஆகாத, பாரு ஏசி காத்துல கூட வியர்க்குது என்று டிஸ்யூ எடுத்து ஜீவா நீட்ட அப்பெண் அதை வாங்கி துடைத்து கொண்டாள் ...

"இதான் டேடி கம்பெனி இறங்கு" என்றான்... அஃது ஏழு மாடி அலுவலகம்...

"எப்பா இதுவா உங்க ஆபீஸ்" என்று அவள் அண்ணாந்து பார்த்தாள் கண்ணில் பிரமிப்பு இருந்தது 

"ம்ம் மெயின் ஆபீஸ் திநகர் பக்கம் இருக்கு .... இதுக்கு டேடி அப்பப்ப வருவார் .... டுடே வொர்க் இங்க போல , அப்பா ஆல்வேஸ் பிசி , கால்ல சக்கரத்தை கட்டிட்டு ஓடிட்டு இருப்பார்" தகப்பன் பெருமை பேசி கொண்டே ஜீவா முன்னே நடக்க ..... இவள் அங்கே உள்ள அமைதி , அலுவலகம் என்றாலும் மெனக்கெட்டு அங்கே அமைக்கப்பட்ட நீரூற்று, தோட்டம் , ஓவியம் சிலை என தனித்துவமான அழகை அத்தனை கலவர மன நிலையிலும் ரசிக்க தவறவில்லை ....  

வணக்கம் போட்டு கொண்டே ஜீவா முன்னே நடக்க அவன் பின்னே அப்பெண்ணும் விறுவிறுவென ஓடினாள் 

"சண்முகம் அண்ணா டேட் இருக்காரா ... முதியவரை அழைத்து ஜீவா கேட்க 

"ஆமா தம்பி அப்பா இப்ப தான் ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு ரூம் போனார் ...

"டேட் ப்ரீயா ?

"அவர் என்னைக்கு தம்பி ப்ரியா இருந்தார் பிசிதான் ... போய் பாருங்க 

"ம்ம் வா என்று வேடிக்கை பார்த்தபடி நின்ற அவளை அழைக்க ...

"இல்ல ஜீவா நீங்க போய் முதல்ல பேசுங்க, அவர் ஓகே சொன்னா நான் வர்றேனே,,அப்பெண் கையை பிசைய 

"ப்ச் அய்யோ உன்னோட , எத்தனை தடவைதான் சொல்றது மத்த அப்பா போல என் அப்பா இல்லை எனக்கு ஒன்னு பிடிச்சா அது எப்படி இருந்தாலும் அப்பாவுக்கும் பிடிக்கும் ...

"பட் இஇஇஇஇ 

"வா என்று அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு தந்தையின் தனி அறை போய் கதவை டொக் டொக் என்று தட்ட கதவின் மீது ..

யட்சன் எம்பிஏ !! 

எம்டி ஆப் ஜேஜே குரூப் ஆப் கம்பெனி என்ற பெயர் பலகை கம்பீரமாக தொங்கியது ..... 

டொக் டொக் இஇஇஇ

"யா கம் இன் கம்பீர குரல் உள்ளிருந்து வர 

"வா என்று அவளை இழுத்து கொண்டு கதவை திறந்து ஜீவா உள்ளே வர .. இருக்கையில் கால் மேல் கால் போட்டு வெள்ளை தாடி வெள்ளை முடியோடு சால்ட்அன்ட் பெப்பர் லுக்கில் சேரை சுழட்டி அவர்களை நோக்கி திரும்பினான் அவன் ... 

இதுதான் என் டேட் யட்சன் !!! என்று ஜீவா அறிமுகம் செய்தான் ...

படு ஸ்டைலாக க்ரே கோர்ட் அணிந்து கூலிங்கிளாஸை அதன் இடையே சொருகி விட்டபடி வயதுக்கும் அழகுக்கும் இளமைக்கும் ஏதடா சம்மந்தம் என்பது போல நரைத்த முடியிலும் அழகனாய் திரும்பினான் யட்சன்!! 

மூப்பு என்பது வெறும் சொல்லோ??

ஆம் ஆறடி அழகன் 30 வயதில்தான் இருக்க வேண்டுமா என்ன ?? 50 வயதிலும் இருக்கலாம்... ரெட்டை பட்டன் திறந்து விட்டிருந்தான், அதன் வழி குட்டி கழுகு டாலர் போட்ட தங்க செயின் கொள்ளை அழகு!! உடலை பேணி காத்து ஆண் சிற்பம் போல அமர்ந்து இருந்தான்..

பெண் சிற்பத்தை ரசித்த உலகம் ஏனோ ஆண் சிற்பத்தை மறந்து போனதுவோ அதை நினைவு படுத்த வந்தானோ இவன் !! 

பண்டைய கிரேக்க கூரோஸ் ஆண் சிற்பம் போல எடுப்பான உடலும், அதற்கெத்த மிடுக்கும் ஹெர்குலஸ் சிற்பம் போல வலிமையான உடல் கட்டும் , ஓங்கி உயர்ந்த தேக்கு தேகமும் என்று இருந்த அவனின் வயதை பின்னுக்கு தள்ளி விட்டது அவன் அழகும் , கம்பீரமும்!!! 

"வாடா என்ன இந்த பக்கம் ? என்று லேப்டாப்பை தட்டும் போது அவன் கையிசெயின் நுனியில் தொங்கும் டைமண்ட் கழுகு லேப்டாப்கீபோர்ட் மீது உரசும் போது உண்டான சத்தம் மெல்லிசை தான்... 

"நேத்து சொன்னீங்களே டேட் 

"என்ன சொன்னேன்??" கண்ணை சுருக்கி மகனை பார்த்த யட்சன் அப்போதுதான் அவனுக்கு பின்னே பட்டு சேலை ஒன்று தெரிவதை கண்டு புருவம் உயர்த்தினான்... 

"ஓஓஓஓ யா மறந்துட்டேன், கூட்டிட்டு வந்திருக்கியா? லேப்டாப்பை மூடி வைத்து விட்டு யட்சன் ஆர்வமாக மகனின் காதலியை பார்க்க நிமிர்ந்து அமர்ந்தான்...அவனுக்கு அவன் மகன் வாழ்க்கை மிக முக்கியம் !!அவன் தேர்வு வாழ்க்கை முடிவு மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் ஒரு தகப்பனாக அவன் எதிர்ப்பார்ப்பு மத்தபடி காதல் ஜாதி ஏழை பணக்காரன் இது எல்லாம் பார்க்கும் ஆள் அவன் இல்லை !! 

வாழ பணம் தேவையா குணம் தேவையா என்யால் குணம் என்று முடித்துவிடும் பக்குவம் கொண்டவன் 

"ஆமா டேட் வர ரொம்ப பயந்தா, எப்படியோ மல்லு கட்டி கூட்டிட்டு வந்துட்டேன் 

"ஹாஹா பயமா நான் என்ன பூதமா, இல்லை ராட்சசனா முதல்ல அவளை முன்ன வந்து நிக்க சொல்லு கமான் என்றதும் ...

"அப்பா இதுதான் நான் காதலிக்கிற பொண்ணு 

தேனிசை!!  

என்று முதுகு பின்னே மறைந்து நின்ற பெண்ணை இழுத்து தன் தகப்பன் முன்னே விட 

அப்போதுதான் முன்னே இருந்த ஜீவா தகப்பனை பார்த்த அப்பெண்ணோ மூளை மரத்து போய் நின்றாள்... 

இவராஆஆஆஆஆஆ அப்பட்டமாக அதிர்ந்தாள் அவள் !! எதிரே இருந்த யட்சனுக்கும் அதே அதிர்வு தான் 

"இவளா?? என்றவன் சட்டென மகன் அதிர்ந்த முகத்தை பார்க்காது மறைத்து கொண்டான் 

இதுதான் தேனிசை வயசு 22 படிச்சது பிஏ அக்ரி... ரொம்ப நல்ல பொண்ணுப்பா என்று அறிமுகம் செய்து வைத்த மகன் பேச்சில் காது இருந்தாலும் கண்கள் ரத்த சிவப்பாக மாற எதிரே நின்ற அந்த இளம் வயதுக்காரியை இஞ்ச் இஞ்சாக அளவெடுத்தான்..

அப்பா ஆஆஆ"

"ஹான் யா ஹாய் சுகர்பேபி !!  

"ஐயம் யட்சன் 

"வயசு ஸ்வீட் 50 என்று கண்ணை சிமிட்டி அவள் முன்னே கையை நீட்டினான் அவன் .... 

"இசை கையை நீட்டு ...சொன்னேன்ல டேடி செம ஸ்வீட்னு என்று ஜீவா கிசுகிசுப்பாக தேனிசையிடம் கூற , அப்பெண் வியர்த்து வடிந்த கையை அவன் முன்னே நீட்ட அதுவோ கிடுகிடுவென ஆட .... 

"டேட் ஒரு நிமிஷம் ஒரு போன் பேசிட்டு வர்றேன் என்று ஜீவா வெளியேறிய அடுத்த நொடி, நீட்டிய அவள் கையை, அவன் இழுத்த வேகத்தில் தேனிசை சட்டென வந்து யட்சன் மடியில் அமர 

"சுகர்பேபி இஇஇஇஇ!! வாவ் உன்ன இந்த இடத்தில் இந்த கோலத்தில எதிர்பார்க்கவே இல்லைடி என்றவன் கைகள் அவள் இடையை தேட , சட்டென பதறி போன தேனிசை அவனை விட்டு நகர போக ...

"அட அட உன்னை இங்க இப்படி எதிர்பார்க்கவே இல்ல சபாஷ் சபாஷ்... உன்ன தேடி ஊரெல்லாம் அலைஞ்சா நீ என் முன்னாடி என் காதலியா வாரே வாவ் ... அவளோ அமைதியாக இருக்க 

வெட்கமா சுகர் பேபி ..நீ மாறவே இல்ல என்று அவன் இளம் சிவப்பு உதடு நக்கலாக சிரிக்க ....

நான் நான் ... தீடிரென மூளை நின்ற உணர்வு அவளுக்கு .. யாரை வாழ்நாள் முழுக்க பார்க்க கூடாது என்று ஆசை கொண்டாளோ அவன் !! 

என்ன , நீ தேனிசை இல்லைன்னு பொய் சொல்ல போறியா ? " தோரணையாக அவளை மடியில வைத்து கதை பேசும் அளவு அவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு..... 

தொடர்புதான் , உலகம் அறியாத தொடர்பு உணர்வுகளை அடக்கிய தொடர்பு உடலை தொட்ட தொடர்பு!! 

சொல்லுடி , நான் அவ இல்லைன்னு சொல்ல போறியா , இல்லை நாம ரெண்டு பேரும் கிவ் அன்ட் டேக் பாலிசியில ஆறு மாசம் யாருக்கும் தெரியாம வாழ்ந்ததை மறுக்க போறியா ? என்றவன் கேள்வி எதற்கும் பதில் தெரியாது அவள் தலையை குனிய 

அன்னைக்கு நான் இன்னைக்கு என் மகனா? குட் சாய்ஸ்!! அவ்வளவு சீக்கிரமாக நான் சலிச்சிட்டேனா சுகர்பேபி.....  

டேடிஇஇஇஇஇஇ என்று ஜீவா உள்ளே வரும் சத்தம் கேட்டு யட்சன் தன் மடியில் இருந்த அவளை சட்டென தூக்கி அருகே இருந்த சேரில் பொத்தென்று போட பதறி சிதறி தேனிசை அமர.... 

அப்பா இசையை பிடிச்சிருக்கா ? 

யா மை சன், ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு, உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் என்றான் யட்சன் இடை தெரிய இருந்த தேனிசை இடையை கண்ணால் வருடி கொண்டே... அவள் இடையை சட்டென மறைத்தாள் இப்போது மறைத்து என்ன பயன் !!என்று அவள் மனசாட்சி காறித்தான் துப்பி இருக்கும் 

அப்போ கல்யாணம் "

"ம்ம் வச்சிக்கலாமே, ஆனா நம்ம வீட்டுக்கு வர போற பொண்ணுக்கு நம்மள பத்தி எல்லாம் எல்லாம் தெரியணும்ல மைசன் ,  

"ஆமா டேடி

"ம்ம் குட் , ஒரு மாசம் நம்ம வீடு ஆபீஸ்னு சுகர்பேபி நம்ம கூடவே இருக்கட்டும் ...  

"அது என்னப்பா சுகர்பேபி "

அவபேர் என்ன? 

"தேனிசை 

"ரைட் தேன் எப்படி இருக்கும் 

"ஸ்வீட்டா இனிப்பா 

"அப்போ நான் வச்ச பேர் சரி தானே மை சன் ,.. நம்ம வீட்டுக்கு வர போற பொண்ணு இனிப்பா இருக்கணும் என்றவன் பேச்சு மகனிடம் ஆனா‌ல் கண்ணழ அவள் உடலை மேலிருந்து கீழ் வரை யட்சன் ரசித்தான்.. அவள் உச்சி முதல் பாதம் வரை இனிக்கும் என்று சுவைத்து பார்த்த அவனுக்கு தெரியாதா என்ன ?? 

"நம்ம வீடு ஆபீஸ்னு எல்லா இடமும் இந்த ஒரு மாசத்துல பழக்கி கொடு ...

"அப்பா நான் பிசி, கார் ரேஸூக்கு தயார் ஆகிட்டு இருக்கேன் ...எப்போ வருவேன் எப்போ போவேன்னு கூட சொல்ல முடியாது ... 

"அதுக்கு என்ன , அவளை என்கூட அனுப்பு" என்றான் யட்சன் வெள்ளை மீசையை தடவி உதட்டை ஈரம் செய்தபடி அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி 

"இது சூப்பர் ஐடியா, அப்போ ஒரு மாசம் நீங்களே அவளை வச்சிக்கோங்க டேடி "

"வச்சிக்கிட்டா போச்சு ஊஊஆஆஆ" ஜீவா குனிந்து எதோ செய்து கொண்டிருந்த அந்த நொடியில் பச்சக் பச்சக் என்று தேனிசை உதட்டில் நரை மீசைக்காரனின் முத்தம் 22 வயது பெண்ணின் இதழை தீயாக தீண்டி போனது ...தேனிசை நடப்பதை நம்ப முடியாது அப்படி சிலை போல அசைய மறந்து இருந்தாள்...

காதல் மட்டும் முரண் அல்ல 

சில காமமும் முரண் தான் !!

யட்சன் அவளை பட்சித்து போவானோ!! 

இல்லை யட்சனி அவனை பட்சித்து போவாளோ?!