கழிமுள்ளி நெஞ்சுக்காரி-2
கழிமுள்ளி-2
ரமேஷ்குமார் இப்போது கீதாஞ்சலியைப் பார்த்தவர் “உங்க மகள்தான் அடிச்சிருக்கா அதனால் அவளை காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ணச் சொல்லித்தான் டிசிபிளின் கமிட்டி பரிந்துரை பண்ணிருக்காங்க. இதுக்கு நான் இப்போ எந்த முடிவும் எடுக்கலை, எடுக்கவும் முடியாது. காலேஜ் சேர்மன் சார் இப்போ வர்றதா சொல்லிருக்காங்க. அவங்க என்ன முடிவு எடுக்குறாங்களோ அதுதான் பைனல் டிசிஷன். அதை நம்ம ஏத்துக்கிட்டுத்தான் ஆகாணும். மீதி நாலு பேரையும் ஒரு வாரம் சஸ்பெண்ட் பண்றோம். அடுத்து வரும்போது இப்படியான தகராறு பண்ணமாட்டோம், டிசிபிளினா இருப்போம்னு லெட்டர் எழுதி மன்னிப்பு கேட்டால்தான் உள்ளவிடுவோம். இந்த வருஷம் கடைசி செமஸ்டர்,இன்னும் அடுத்து ஒரு வருஷம் இருக்கு. இருக்கிற படிப்பை ஒழுங்கா படிச்சு முடிச்சிட்டுப்போங்க”என்று சொன்னார்.
மகளை டிஸ்மிஸ் பண்ணப்போறாங்க என்றதுமே கீதாஞ்சலிக்கு முகமே மாறிட்டு. அதைக்கேட்டுக்கொண்டிருந்த நதியாவுமே இதை எதிர்பார்க்கலை. அப்படியே ஷாக்காகி நின்றுவிட்டாள்.
அவளது நண்பர்கள் நால்வருமே அதிர்ச்சியில் ஐய்யோ நதியா நம்ம காலேஜைவிட்டு போயிடுவாளா?அது நடக்கவேக்கூடாது என்று நினைத்தவர்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் வாயைத் திறந்தனர்.
“நதியா படிக்காத காலேஜ்ல நாங்களும் படிக்கமாட்டோம். எங்களையும் சேர்த்தே டிஸ்மிஸ் பண்ணுங்க” என்று சொல்லவும் சேர்மன் உள்ளே வந்திருந்தார்.
அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டேதான் உள்ளே வந்தார். அவருக்குப் பின்னாடியே நதியாவிடம் அடிவாங்கியவனும் வந்தான். அவனது நெற்றியில் கட்டுப்போட்டிருந்தது.
அவன் அவர்கள் ஐந்துபேரையும் திரும்பிப் பார்த்துக்கொண்டேதான் போனான். அவனது பார்வையில் என்ன இருந்தது என்று அவர்களால் யூகிக்கமுடியவில்லை.
“இவனெல்லாம் முறைக்கிற மாதிரியா இருக்கு. பாவம் புள்ளைபூச்சியா இருக்கான். எப்படியும் நம்மளைவிடவும் நாலஞ்சு வயசு பெரியவனாதான் இருப்பான். ஆனால் நம்மகிட்ட இன்னும் அடிவாங்க ரெடியா இருக்கிறவன் மாதிரியே இருக்கான்”என்று விஜயிடம் மெதுவான குரலில் சொன்னாள்.
“அவனை ஒருதடவை அடிச்சதுக்கே உன்னை டிஸ்மிஸ் பண்றளவுக்கு வந்து நிக்குது. இதுல அடுத்தும் அடிக்க ரெடியாயிருக்கியா என்ன?ஷ்ஷ்ஷ் வாயை மூடிக்கிட்டு அமைதியா நில்லு. இல்லைன்னா அவ்வளவுதான்”என்று திட்டினதும் வாயை மூடிக்கொண்டு நல்லபொண்ணாக அமைதியாக நின்றாள்.
சேர்மன் வந்ததும் அவரது இருக்கையில் உட்கார்ந்தவர் அவர் பக்கத்தில் அடிபட்ட பையனையும் உட்கார வைத்தார்.
அப்போதே அவனது பவர் இந்த காலேஜ்ல என்ன என்பது அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது.
அவர் இப்போது ரமேஷ்குமாரைப் பார்த்தார்.
“சார் நான் எல்லாத்தையும் பேசிட்டேன். பசங்க நாலுபேரையும் பத்து நாள் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். அதுக்கான நோட்டிஸ் ரெடி பண்ணிட்டோம். அந்தப்பொண்ணை காலேஜ்ல இருந்து டிஸ்மிஸ் பண்ண லெட்டர் ரெடி பண்ணியாச்சு. நான் கையெழுத்து போடுறேன். நீங்களும் போட்டிருங்க சார்”என்று சொல்லவந்ததை ஷார்ட்டாக சொல்லி முடித்துவிட்டார்.
அதைக்கேட்டதும் உண்மையாவே நம்மளை பணிஷ்பண்ணிருக்காங்களா? என்று ஐந்து பேருமே அதிர்ச்சியில் அப்படியே பிரின்சிபாலை பார்த்தனர்.
அவரோ எதையும் கண்டுக்காது அடுத்து சேர்மென் என்ன முடிவெடுத்து பேசப்போகிறார் என்பதை கவனிக்க அவர் பக்கமாகத் திரும்பினார்.
“என்ன ரமேஷ்குமார் சார். உங்க மகளையே டிஸ்மிஸ் பண்ண லெட்டர் ரெடி பண்ணிட்டீங்க. அப்போ உங்க மகளோட படிப்பு?”என்று சேர்மன் கேட்டதும் கீதாஞ்சலிக்கு அழுகையே வந்துவிட்டது.
ரமேஷ்குமார் கீதாஞ்சலிக்கு இரண்டு குழந்தைங்க.பெரியவ நதியா, இவளுக்கு அடுத்து நர்மதா. இரண்டுபேருமே அவங்களுக்கு இரண்டு கண்ணுங்க மாதிரி. ரமேஷ்குமாரும் கீதாஞ்சலியும் காதலிச்சு கல்யாணம் பண்ணினவங்க.
இரண்டுபேரும் வேற வேற பிரபஷன்ல இருக்கிறாங்கன்னாலும் பிள்ளைங்க விசயத்துல ரொம்ப சென்சிட்டிவ்தான்.
அதுவும் நதியா முதல் பொண்ணு அப்படிங்கிறதுனால அவளுக்கு முதல்லயே ரொம்ப செல்லம் கொடுத்து இப்படி அடாவடியா வளர்ந்து நிக்கிறாள்.
அதனால்தான் கீதாஞ்சலிக்கு சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது. அவரது வேலையில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து நிற்பவள்,இப்போ தனது மகளுக்காக கண் கலங்கிவிட்டாள்.
அதைப்பார்த்த ரமேஷ்குமாருக்குமே ஒருமாதிரியாகிவிட்டது. கீதாஞ்சலியைப் பார்க்காமல் அப்படியே திரும்பி சேர்மன் வெற்றிவேலைப் பார்த்தார்.
அவருக்குமே ரமேஷின் தவிப்பு புரிந்தது. அதனால் கணீரென்று இப்போது பேசத் தொடங்கினார்.
“இங்கப்பாருங்க பேரண்ட்ஸ் உங்க பிள்ளைங்க செய்தது பெரிய தப்பு. என்னதான் ஸ்டுடண்ஸ்குள்ள பிரச்சனைனாலும் பாட்டிலால அடிக்கிறது தப்பு. எங்க அரவிந்த் அங்க நடந்ததைச் சொன்னான்.
நான் அந்த மனோஜோட பேரண்ட்ஸையும் வரச்சொல்லியிருக்கேன். அவன் ஒரு பெண் மேல எப்படி கைவைக்கலாம். இந்த விசயத்துல எல்லா பக்கமும் கேட்டு விசாரிச்சிட்டேன். அவன் நதியா மேல கைவைக்கவும்தான் அவள் பாட்டிலை எடுத்து மனோஜை அடிக்கப்போயிருக்காள். அது மிஸ்ஸாகி எங்க அரவிந்த் மேல பட்டிருக்கு. அதனால் இந்த தடவை அவளை டிஸ்மிஸ்பண்ண வேண்டாம்னு எங்க அரவிந்த் சொன்னதுனால அவளையும் இந்த நான்குபேரோட சேர்த்து மூணு நாளைக்கு சஸ்பெண்ட் பண்ணலாம்னு எங்க அரவிந்த் சொன்னான். இவங்கிட்ட அடிவாங்கினவனே இப்படி சொல்லும்போது நம்ம வேற எதையும் செய்யவேண்டாம்னுமுடிவு பண்ணிருக்கேன். இதுததான் இவங்களுக்கு லாஸ்ட் வார்னிங் இனி அடிதடின்னு இறங்கினா நேரா சீட்டைக் கிழிச்சு வெளியே அனுப்பிடுவேன்”என்று உறுதியாகச் சொன்னார்.
அதைக்கேட்டதும்தான் எல்லோருடைய பேரண்ட்ஸுக்கும் நெஞ்சில் பால் வார்த்தது போன்றிருந்தது.
கீதாஞ்சலி இப்போது கொஞ்சம் சந்தோசத்தில் பார்த்தார்.
“என்ன அரவிந்த் போதுமா?நீதானே அவங்களுக்கு தண்டனை இவ்ளவு பெருசா வேண்டாம் பாவம் சின்னபிள்ளைங்கன்னு சொன்ன?”என்று அடிபட்டவனைப் பார்த்துக் கேட்டார்.
அவனோ போதும் என்று அந்த வலியிலும் லேசாக புன்னைகைத்தான்.
ஏற்கனவே எங்க அரவிந்த் சொன்னதால்தான் சும்மாவிடுறேன், எங்க அரவிந்த்துன்னு பத்துடவைக்கு மேல சேர்மன் சொன்னதைக் கேட்டு கடுப்பாகியிருந்த நதியா இப்போ அவன் லேசாக புன்னகைத்து தலையாட்டவும் கடுப்பாகிவிட்டாள்.
அவனைப் பார்த்து முறைத்தாள். அவனோ அவளைக் ஏளனமாகப் பார்த்தவன் கண்களாலயே சிரிப்பதுபோன்று இருந்தது.
அதில் இன்னும் கடுப்பானவள் போடா டேய் உன் தயவு இங்க யாருக்கு வேணும். எங்களுக்கு பணிஷ்மெண்ட் குடுத்தா நாங்களே அதை டேக்கில் பண்ணிடுவோம் என்று பேச வாயைத் திறந்தாள்.
அதற்குள் வஸந்த் அவளது கையைப் பிடித்தவன் “தாயே மகமாயி உன் வாயை மூடிக்கிட்டு நில்லு. நீ வாயைத் திறந்தா மொத்தமா நம்ம கேங்கை பிரிச்சு சிதைச்சு விட்றுவாங்க. நீ வாயை மூடினா நல்லாயிருக்கும்”என்று அடிக்குரலில் சொன்னான்.
“அடேய் ஏதோ அந்த வளந்தானால நம்ம இங்க இருக்கிறமாதிரி பேசுறாங்கடா. அவன் போட்ட பிச்சையெல்லாம் நமக்கு வேண்டாம். நான் வேற காலேஜ்ல போய் படிச்சிக்கிறேன். என்னை விடுங்கடா” நான்பேசவேண்டியதை பேசட்டும் என்று அவளும் அடிக்குரலில் பேசினாள்.
“விஜய்தான் நீ சும்மா இருக்கமாட்டியா நதி எதுன்னாலும் வெளியே போய் பேசிக்கலாம்”என்று அவளது கையைப்பிடித்து அதட்டி சும்மா நிற்கவைத்தான்.
அதையெல்லாம் எந்தவிதமான ரியாக்ஷனையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அப்படியே தனது கண்ணாடிக்குள்ளிருக்கும் கண்களை உருட்டி அரவிந்த் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனது கண்களை பார்த்த நதியாவுக்கு சுர்ரென்று ஏதோ மண்டைக்குள் ஏறியது. இதுக்கு மேல இவனைப் பார்க்கமாட்டேன் என்று தனது மனதிற்குள் சபதமெடுத்துக்கொண்டாள்.
ஆனால் அவளது கண்கள் அவளது சபதத்தை ஏற்றுகொள்ளவில்லை போல. அவளையும் மீறி அவனைத்தான் பார்த்தது.
ஏன் நதி அவனையே முறைக்கிற என்று தினேஷ் கேட்டுவிட்டு அரவிந்தையும் பார்த்தான்.
அவளது முறைப்பு பார்வை எதுனாலயும் பாதிக்காததுபோல அமைதியாக உட்கார்ந்திருந்தான்.
பிரின்சிபால்தான் இப்போது பேசினார்.
“சார் அடுத்து இப்போ என்ன பண்றது. இவங்களுக்கு மூணு நாள் சஸ்பென்சன் நோட்டிஸ்கொடுத்திடலாமா? அப்படியே இவங்க பேரண்ட்ஸ்கிட்டயும் அவங்ககிட்டயும் சேர்த்து வாங்கிடலாமா?” என்று கேட்டார்.
சேர்மன் இப்போது அரவிந்தைப் பார்த்தார். அவனும் மெதுவாக தலையாட்டினான்.
“பார்றா இந்த அம்மாஞ்சி சரின்னு தலையாட்டினதான் நம்ம இங்க படிக்கிற மாதிரி ஆகிடுச்சே. ச்சை” என்று அவனைப் பார்த்து நதியா முணுமுணுத்தாள்.
அவளது முணுமுணுப்பை பார்த்தவன் இப்போது அவளது உதட்டையே அசையாமல் பார்த்தான்.
அதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த விஜய் அவளது தோளைப்பிடித்து இந்தப்பக்கமாக நிறுத்திவிட்டு அரவிந்தை முறைத்தான்.
அவனது முறைப்பைப் பார்த்தவன் உதட்டை லேசாக வளைத்துவிட்டு குனிந்து சேர்மனிடம் ஏதோ பேசினான்.
“போச்சு போச்சு டேய் நீங்க இரண்டுபேரும் ஏன்டா அவனை முறைச்சுட்டு நிக்கிறீங்க. அவன் ரிட்டர்ன் வாங்கி பணிஷ்மெண்டை திரும்பவும் கொடுத்திடப்போறான்டா. டேய் விஜய் உன் ஷோல்டரை இறக்குடா. அங்க இருக்கிறவன் ஒன்னும் நம்ம எதிரியில்லடா. அவன்தான் நம்மளை மொத்தமா வைச்சு செய்யப்போற சூப்பர்மேன்டா இப்போதைக்கு. இரண்டுபேரும் அடங்குங்கடா” என்று வஸந்த் அவர்களை கடிந்துக்கொண்டான்.
அதன்பிறகுதான் கொஞ்சம் கோபத்தைக் குறைத்துவிட்டு அமைதியாக நின்றனர்.
சேர்மன் சார் இப்போது பேசினார் “அவங்க ஐஞ்சு பேரும் வந்து எங்க அரவிந்த் கிட்ட மன்னிப்புக் கேட்க சொல்லுங்க. அதுபோதும் அப்பாலஜி லெட்டர் எல்லாம் எழுத் வேண்டாம்னு அரவிந்த் சொல்லுறூன். ஏன்னா அது ரெக்கார்ட்ல இருக்கும்.நாளைக்கு அவங்களுக்கு ஏதாவது வெரிபை பண்ண வந்துச்சுன்னா இதெல்லாம் ப்ளாக் மார்க்கல இருக்கும்னு சொல்லுறான். அவங்களோட எதிர்காலத்துக்காக யோசிக்ககறான். சின்னபிள்ளைங்க இப்போதான் தேர்ட் இயர் படிக்கிறாங்க. சில இடத்துல கண்டிப்பைவிடவும் மன்னிப்பு நல்லதுன்னு சொல்லுறான். அதனால் அவன்கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு போகச்சொல்லுறான். மூணு நாள் மட்டும் நோட்டீஸ் இல்லாமல் சஸ்பெண்ட் பண்ண சொல்லிட்டான். ரமேஷ்குமார் சார்உங்கப்பொண்ணை வந்து அரவிந்த்கிட்ட மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்க அதுபோதும்”என்று முடித்துவிட்டார்.
அதைக்கேட்டதும் நதியாவுக்கு இரத்தம் கொதித்தெழுந்தது. அப்படியே போய் அந்த அம்மாஞ்சி மண்டையில நாலு கொட்டு நறுக்கு நறுக்குன்னு வைக்கணும்னு தோணுச்சு. ஆனால் இப்போ அதைச்செய்தா அவ்வளவுதான் ரமேஷும் கீதாஞ்சலியும் அப்படியே அழுகாச்சி மோடுக்குப் போயிடுவாங்களே என்ன பண்றது?என்று யோசனையில் இருந்தாள்.
அதற்குள் விஜய் முன்னாடி வந்து “சார் நாங்க ஐஞ்சு பேரும் சேர்ந்தே அரவிந்த் சார்கிட்ட மன்னிப்புக் கேட்கிறோம். நாங்க ஐஞ்சு பேருமே தப்பை பண்ணிருக்கோம். நதியா மட்டும் மன்னிப்புக் கேட்டா நல்லாயிருக்காது” என்றவன் திரும்பி நான்குபேரையும் பார்த்தான்.
அவர்களது நட்பினைப் பார்த்து பெத்தவங்களே இப்போ நெகிழ்ந்துப்போனார்கள்.
சேர்மனது நெற்றி சுருங்கி கண்கள் ஆச்சர்யத்தில் பார்த்தது.
“சரி நீங்க ஐஞ்சு பேருமே மன்னிப்பு கேளுங்க அதொன்னும் பிரச்சனையில்லை”என்றவர் அரவிந்தனைப் பார்த்தார்.
அவன் அதுக்கு தலையசைத்து சம்மதம் சொன்னான்.
அவர்கள் ஐந்துபேரும் மொத்தமாக வந்து அவன் முன்னாடி நின்றனர். அப்போதும் அவன் எதுவும் பேசவில்லை. அவர்களை நிமிர்ந்து மட்டும் பார்த்தான்.
விஷய்தான் “அரவிந்த் சார் உங்களை அடிக்கணும்னு பாட்டிலாலல் அடிக்கலை. தெரியாமல் உங்க மேல பட்டு உடைஞ்சுட்டு. இந்த தப்பு முழுக்க முழுக்க எங்களோடதுதான். எங்களை மன்னிச்சிடுங்க”என்று சொல்லவிட்டு வெற்றிவேலைப் பார்த்தார்கள்.
நதியா எதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆண்கள் நான்குபேரும் மன்னிப்பு கேட்டிருந்தனர்.
வெற்றிவேல் திரும்பி ரமேஷ்குமாரைப் பார்த்தார்.
“நதியாஆஆஆஆ”என்று அவர் குரலை உயர்த்தி அதட்டினார்.
உடனே “மன்னிச்சிடுங்க அரவிந்த் சார்”என்றவள் அரவிந்தனை முறைத்துப்பார்த்தாள்.
அந்த பார்வையில் “என்னை மன்னிப்புக் கேட்கவைச்சிட்டல்லடா உன்னை இங்க இருந்து எப்படி விரட்டிவிடுறேன் பாரு. அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு இந்த நதியாவோடவா விளையாடுற. இவரு பெரிய ரஜ
பரம்பரை நாங்க மன்னிப்புக்கேட்டாதான் சும்மா விடுவாராம். எவ்வளவு திமிரு இருக்கணும்” என்று அவனை முறைத்துக்கொண்டே இருந்தாள்.
“அதுதான் எங்க பிள்ளைங்க மன்னிப்பு கேட்டுட்டாங்களே சார். நாங்க கிளம்பலாமா?அவங்க அஓங்க ஆபிஸ்ல பெர்மிஷன் போட்டுட்டு வந்திருக்கோம் போகணும்”என்று விஜயின் அப்பா திருமூர்த்தி சொன்னார்.
வெற்றிவேலும் ரமேஷ்குமாரிடம் திரும்பியவர் ஓகே நாங்களும் கிளம்புறோம். இதுக்குமேல இவங்களால காலேஜ்ல இனி எந்த பிரச்சனையும் வரக்கூடாது, வராமல் பார்த்துக்கிறதும் உங்கப்பொறுப்பு அவ்வளவுதான் வா அரவிந்த் போகலாம் என்றவர் அவனைக் கூட்டிட்டு வெளியே போனார்.
அரவிந்த் போகும்போது திரும்பி நதியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் போனான்.
விஜயும் அவனைப் பார்க்கத்தான் செய்தான். அவன் முகம்தான் அம்மாஞ்சி மாதிரி இருக்கு. ஆனால் உள்ளுக்குள் இவன் ஒரு வன்மம் பிடிச்சவன் இவன்கிட்ட ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும் என்று நினைத்துக்கொண்டான்.
ஒருவழியாக பிரச்சனை பெருசாகமால் முடிஞ்சதும் ஐஞ்சு பேருக்குமே சந்தோசம்தான். அந்த சந்தோசத்தோடு நேராக இப்போது தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதுவும் நதியா சீட்டின் மீது ஏறி விசில் சத்தத்தை பறக்கவிட்டு சினிமா பார்த்துக்கொண்டிருந்தாள்!
இவளை திருத்தவே முடியாதுடா! திருத்தவே முடியாது!