கழிமுள்ளி நெஞ்சுக்காரி-6

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-6

கழிமுள்ளி-6

நதியா கேங்க் மூணு நாள் சஸ்பெண்ட் முடிஞ்சு இன்னைக்கு மறுபடியும் காலேஜிக்குள்ளே எண்ட்ரீ குடுக்கும்போதே அலப்பறையோடுதான் என்ட்ரீ கொடுத்தனர்.

நதியா தனது என்பீல்டை நேராகக் கொண்டு மனோஜின் வண்டியின் மீதுதான் கொண்டுவிட்டாள். 

அது தொபுக்கடீர்னு விழுந்துவைக்க, அதைப்பார்த்து ஐந்துபேரும் சந்தோசமா சிரிக்க, அங்கே மனோஜ் வந்து நின்றான்.

அவன் ஏதாவது சொல்லுவான் அவன் வாயை உடைக்கணும் என்று காத்திருந்தவர்களுக்கு, அவன் பேசாமல் வண்டியை தூக்கியெடுத்து வேற பக்கம்போய் விட்டணும் புஷ்ஸுன்னு போயிடுச்சு.

நதியா “என்னடா நடக்குது இங்க?” என்று அவனை ஆச்சர்யத்தில் பார்த்தாள்.

அவனோ உங்கக்கூட எதுக்குப்பா எனக்கு வம்பு என்பதுபோல பார்த்து வைத்தவன் அமைதியாகப் போய்விட்டான்.

“அட இது நம்ம மனோஜ்குமாராடா இப்படி பயந்துக்கிட்டு ஓடுறான். எப்போ பார்த்தாலும் என்கிட்டயே சண்டைக்கு வருவானே. என்னாச்சு இவனுக்கு?”என்றவள் வஸந்தின் தோள்மேல் கையைப்போட்டவாறு கேட்டாள்.

“யாருக்கு தெரியும் நம்ம வீட்டுல திட்டுறதோட விட்டுட்டாங்க. அவங்க வீட்டுல சாட்டையால வெளுத்திருப்பாங்களாயிருக்கும். அதுவும் பட்டக்ஸ்லயே விழுந்திருக்கும்போல ஆளே ஒரு மார்க்கமா நடக்குறானே”

“அப்படியும் இருக்குமோடா?”

“இருக்கும் இருக்கும்”

“ஏதோ ஒன்னு நம்மக்கிட்ட வாலாட்டாமல் இருந்தா சரிதான். ஆனால் நமக்கு ஒரு எண்டெய்ன்மெண்ட் போச்சேடா. இவனை வைச்சுத்தான் ஓட்டிக்கிட்டிருந்தோம் இப்போ என்ன பண்றது?”

“கவலையேப்பாடாத அங்க ஒருத்தன் வர்றான் பாரு. சேர்மனுக்கு சொந்தக்காரன். நீ அடிச்சு மண்டையை உடைச்சவன். அவனை பிடி அந்த அம்மாஞ்சியை வைச்சு மீதியிருக்க இந்த வருஷத்தை ஓட்டுவோம். அடுத்த வருஷம் வேற எவனாவது கிடைப்பான்”என்று தினேஷ் கைகாட்டிய திசையை விஜய்யும் திரும்பிப் பார்த்தான். அங்கே அரவிந்த் வந்துக்கொண்டிருந்தான்.

“டேய் சும்மாயிருங்கடா. நீங்க ஏத்திவிடுறதுல இவா போய் ஏதாவது வம்பு வளர்த்து வைக்கப்போறா அப்புறம் மொத்தமா டீசியை கிழிச்சு மூஞ்சில எறியப்போறாங்க. இவங்கப்பாவாலயும் அப்புறம் நம்மளைக் காப்பாத்த முடியாது”

“அப்போ இவ்வளவு நாளும் இவங்கப்பாதான் நம்மளைக் காப்பாத்திவிட்டுட்டு இருந்தாரா என்ன?”

“பின்ன இல்லையா. நம்ம பண்ற அட்டூழியம் தெரிஞ்சும் இந்த காலேஜ்லயே நம்மளை மூணு வருஷம் படிக்கவைச்சு பாஸ் பண்ண வைச்சிருக்காருன்னா அவருதானே நம்மளைக் காப்பாத்திவிடுறாருன்னு அர்த்தம். அது எல்லோருக்கும் தெரியும் இவளுக்கும் தெரியும்”

“பின்ன அவரோட ஆசைப்பொண்ணு நான் என்னை சும்மா எவனாவது வந்து சீட்டைக் கிழிக்க விட்றுவாரா என்ன?”

“அந்தா வர்றான் பாரு அவன்கிட்ட உங்கப்பாவோட வேலையெல்லாம் நடக்காது. இதுவரைக்கும் வராத சேர்மன் வந்திருக்காருன்னா இவன் அவருக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியுதா. அப்போ கண்டிப்பா உங்ககப்பாவுக்கே இவன் ஆப்பு வைக்கிறவனாதான் இருப்பான்”என்று அவன் கணித்ததைச் சொன்னான்.

“யாரு அவனா அந்த அம்மாஞ்சியா?அவனை ஏற்கனவே பார்கணும்னுதான் இருந்தேன். அவனா நம்ம முன்னாடி வந்துட்டான். அவனுக்கு ஒரு காட்டு காட்டணும்டா”என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் அப்படியே நகர்ந்து கேண்டினுக்குள் போய்விட்டான்.

அவன் பின்னாடியே நதியாவும் ஓடினாள். 

“ஏன்டா இவனே இப்போ எதுக்குடா நீ அவளை ஏத்திவிட்ட. இனி அவன்கிட்ட வம்பு பண்ணாமல் அவா வரமாட்டாளேடா. உங்களையெல்லாம் வைச்சிக்கிட்டு முடியலடா” என்று விஜய் பிரண்டஸ்ஸை திட்டிட்டு அவள் பின்னாடியே போனான்.

அரவிந்த் ஒரு ஜுஸ் ஆர்டர் பண்ணிட்டு உட்கார்ந்தான். இப்போ ஓடிவந்த நதியா அவனுக்கு முன்னாடி வந்து நின்றாள்.

அவளுக்கு மூஞ்சுவாங்கவும் அவனிடம் எதுவும் பேசாமல் அப்படியே அவனைப் பார்த்தவாறே நின்றாள்.

யாரோ வந்து நிக்கிறாங்களே என்று நிமிர்ந்துப் பார்த்த அரவிந்த் நதியாவைப் பார்த்ததும் புருவம் சுருக்கி நீயா என்பதுபோல பார்த்தான்.

அவனது கூர்மையான பார்வையில் ஒரு நொடி தடுமாறியவள் அவன் முன்பாக கெத்தாக உட்கார்ந்தாள்.

பார்றா என்பதுபோன்று பார்வையாலே மெச்சியவன் அமைதியாக தனக்கு வந்த ஜூஸைக் குடிக்கத் தொடங்கினான்.

அதைப்பார்த்தவள் “என்ன அரவிந்த் சார். நீங்கதான் எங்களை மன்னிச்சு பனிஷ்மெண்ட் ரொம்ப கிடைக்காமல் பார்த்துக்கிட்டீங்கன்னு சேர்மன் சார் மூச்சுக்கு முந்நூறு தடவை சொன்னாரு. அதுக்குத்தான் உங்களுக்கு ஸ்படசல் தேங்க்ஸ் ஒன்னு சொல்லலாம்னு தேடிவந்தேன்”என்று சொல்லிவிட்டு அவனை நேருக்கு நேர் பார்த்துவைத்தாள்.

அதைக்கேட்டவன் ஹ்ம்ம் என்று சொல்லிவிட்டு ஜூஸை கீழே வைத்தான்.

“ம்ம்ம். உங்களுக்கு அடிபட்டு இரத்தம் வந்தும் எங்களை மன்னிச்சு விட்ட அந்த பெரிய மனசுக்கு தேங்க்ஸ் சொல்லாமல் போனால் எப்படி அரவிந்த் சார்.அதுதான் ஒரு பெரிய கும்பிடா போட்டுப்போகலாம்னு வந்தேன்”

“ஹ்ம்ம்”என்று மீண்டும் தலையசைத்தான்.

அதற்குள் அவளோட கேங்க் அவளுக்கு பின்னாடி இருக்கிற டேபிளில் வந்து உட்கார்ந்தார்கள்.

விஜய் அரவிந்துக்கு நேரெதிராக இருந்தான். அவன் இப்போதும் அரவிந்தைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த அரவிந்தோ ‘இவன் எதுக்குடா எப்பவும் என்னையே முறைச்சிக்கிட்டு இருக்கான். டேய் நான்தான்டா நெத்தியில அடிவாங்கிட்டு தையலோட இருக்கேன். இன்னும் தையல்கூட எடுக்கல. உங்க மொத்தபேரையும் நான்தான் விரட்டி விரட்டி அடிக்கணும். நீங்க என்னடான்னா ஏதோ இவனுங்க பிரண்டை நான் லவுட்டிட்டு போக வந்தமாதிரியே பில்டப்பு கொடுத்து உட்கார்ந்திருக்கானுங்க. எல்லாம் என் நேரம். ஒருத்தன் பாவமா இருந்திடக்கூடாதே உடனே ஏறி மிதிக்கிறது. இதை இப்போ இங்க பேசினேன்னா அவனுங்கக்கூட சும்மா விட்றுவானுங்க இந்த ரவுடி நம்மளை சும்மாவிடமாட்டாளே’என நினத்தவன் அரவிந்தைப் பார்க்காமல் நதியாவைப் பார்த்தான்.

“என்ன நீ நாங்க எது பேசினாலும் வாயே திறக்காமல் கண்ணாலயே ஜாடைக்காட்டுற. நீ என்ன பெரிய மன்மதகுஞ்சா?ஆளைப்பாரு என்று உதட்டை அங்குமிங்கு வைத்து அழகுகாட்டினாள்.

‘என்னது மன்மத குஞ்சா? இவளுக்கு மட்டும் இந்த வார்த்தையெல்லாம் எங்கிருந்து கிடைக்குது. ஸ்ஸோப்பா முடியல’என்று நினைத்தவன் அவளை சுவாரஸ்யமாக பார்த்துவைத்தான்.

“இங்கப்பாரு நாங்க அடிதடி பண்ணினோம்னா அந்த இடத்தைவிட்டு உடனே ஓடிப்போயிடணும் சரியா. இப்படி குறுக்கால வந்து அடியை வாங்கிக்கிட்டு பாவம்போல நிக்கக்கூடாது ஓகேவா. நீ சேர்மன் சொந்தக்காரனா இருந்தாலும் சரி, இல்லை சேர்மனாவே இருந்தாலும் அடிப்பேன். அடிவாங்கணும்னா குறுக்க வா சரியா. அப்புறம் தம்பி உன் மண்டை பத்திரம் சரியா. நாங்க பேசிக்கலாவே கொஞ்சம் டெரர். எங்ககிட்ட வைச்சிக்காத புரியுதா”என்று கெத்தாக கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தவள் அவன் குடித்துட்டு வைத்திருந்த ஜூஸை எடுத்து குடித்தாள்.

அதைப்பார்த்த அரவிந்தின் கண்ணு இரண்டும் தெறித்து வெளியே வர்றமாதிரி பார்த்தான்.

அவளோ அதைக்கண்டுக்காதவள் ஜூஸை ரசித்துக்குடித்தாள்.

அதைப்பார்த்த அவளது பிரண்ட்ஸ்தான் “டேய் இங்கப்பாருடா நம்ம நதியை அவன்கிட்டயே போய் கெத்துக் காட்டிட்டு, அவன் வாங்கி வைச்ச ஜூஸையே எடுத்துக் குடிக்கிறாடா. இவா ப்ளான் என்னடா?”என்று அதிர்ச்சியில் குழம்பினார்கள்.

“அவா ப்ளானு ஒன்னுமில்ல மச்சான். அவளை அவங்கம்மா பிடிச்சு பாரீன் மாப்பிள்ளை யாருக்காவது கட்டி வைச்சிடுவாங்க அவா போயிடுவா. நம்ம நடுத்தெருவுல பிச்சையெடுப்போம். அதுதான் அவளோட ப்ளானு” என்று தினேஷ் சிரிக்காமல் சொன்னான்.

அதைக்கேட்ட விஜய் தினேஷை பார்த்து “உன்கிட்ட ஐடியா கேட்டாளாடா?”என்று முழித்தான்.

“க்கும் அன்னைக்கு இராத்திரி எங்க தூங்கவிட்டா. நொய்யி நொய்யின்னு போனை பண்ணி உயிரெடுத்துட்டா. நான் ஐடியா சொல்லலைன்னதும் இவனுங்களுக்கு போன் பண்ணுவான்னு தெரிஞ்சு 

அவனுங்களையும் அலர்ட் பண்ணிட்டேன். அவனுங்களும் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வைச்சிட்டானுங்க. இல்லைன்னா அவ்வளவுதான்”

“அவா நம்மளை மிஸ் பண்ணக்கூடாது,அவங்க அம்மா அப்பாவையும் மிஸ் பண்ணக்கூடாதுன்னு நிறைய யோசிக்கிறாடா?அதுதான் அவள் குழம்பிப்போயிட்டா”என்று விஜய் அவளைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்க அரவிந்தின் கண்கள் அவனை இடுங்கிப் பார்த்தது.

அவனும் அரவிந்தை நோட்டம் விட்டுக்கொண்டுதான் இருந்தது. அரவிந்த் தன்னைப் பார்க்கும் பார்வையே சரியில்லையே என்று நினைத்தவன் உடனே நதியாவைக் கூப்பிட்டான்.

“நதி இப்போ ஜூஸ் குடிக்கிறதா முக்கியம். கிளாஸ் போகவேண்டாமா?வா நேராமாச்சுப்பாரு”

“இருடா அரவிந்த் சார் வாங்கி வைச்ச ஜூஸ் செம்ம டேஸ்டா இருக்கு. சேர்மனுக்கு சொந்தக்காரன்னதும் இந்த கேண்டீன் அண்ணா ஸ்பெஷலா ஆப்பிள் ஜூஸ் போட்டுக் கொடுத்திருக்கான்டா. இதையே நம்ம வாங்கினா அரை ஆப்பிளுக்கு அரைலிட்டர் தண்ணீ ஊத்திக் குடுப்பான்”என்று ஆப்பிள் ஜூஸை ரசித்து ருசித்துக் கடைசி சொட்டுவரைக்கும் குடித்துவிட்டுத்தான் கிளாஸையே வைத்தாள்.

“அடக் கருமத்தை இவளோட முடியலடா.அந்த அரவிந்த் ஏதோ நம்மளை பாவம்பார்த்து விட்டேன்னு மன்னிப்பு கேட்கவைச்சான். அவன் முன்னாடி நம்மளை கேவலப்படுத்திராடா”என்று வஸந்த் அழாத குறையாக குறைபட்டுக்கொண்டான்.

உடனே விஜய் எழுந்தவன் “நதி வா போவோம்”என்று அவளது கையைப்பிடித்து எழுப்பினான்.

“இருடா நம்ம சேர்மனுக்கு சொந்தக்கார பையன்கூட பேசிட்டிருக்கன்ல. சாருக்கிட்ட நம்ம நல்லவிதமா நடந்துக்கணும்ல விஜய். அன்னைக்கு சேர்மன் சாரு மூச்சுககு மூச்சு எங்க அரவிந்த் சொன்னான் எங்க அரவிந்த் சொன்னான்னு சொல்லி நம்மளை இந்த சோடாபுட்டிக்கிட்ட மன்னிப்பு கேட்கவைச்சாருல்ல. அதுதான் சாருக்கு நம்ம யாருன்னு காட்டிட்டு போகலாம்னு இருக்கேன்”என்று கூலாக சொன்னாள்.

“என்னது சோடாபுட்டியா?இந்தக் கண்ணாடி பவர்கிளாஸ் இல்லை. இதுஇது வெளிச்சம் அதிகமா படாம கண்ணை பாதுகாக்க போடுற ஹைகிளாஸ் கண்ணாடி. யூ நோ?”என்று கேட்டவன் அவளை முறைத்துப்பார்த்தான்.

“எதுவோ கண்ணாடி போட்டா நீ சோடாபுட்டிதான்டா பட்டரு. நீ சேர்மன் சொந்தக்காரன்னா கும்பிடெல்லாம் போடமுடியாது. ஜூஸுக்கு வேணும்னா காசை வாங்கிட்டு ஓடிப்போ. இனி நாங்க இருக்க பக்கமே வராத.ஓடிப்போ” என்று அவனை மிரட்டி விரட்டினாள்.

அதைப் பார்த்ததும் அரவிந்த் சட்டென்று எழுந்து நின்றான். அவன் வளர்த்திக்கு அவள் அவனை நிமிர்ந்துதான் பார்த்தாள்.

என்னடா இவன் இவ்வளவு வளர்ந்திருக்கான். உன்னைவிடவும் வளர்த்தியா இருக்கான்டா என்று ஆச்சர்யமா பார்த்தாளா? இல்லை அதிர்ச்சியில் பார்த்தாளா? என்று தெரியாது அவனைப் பார்த்தாள்.

அவன் எழுந்திருந்த வேகத்துக்கு எப்படியும் நதியாவை அடிச்சிருவான் என்று விஜய் பயந்து அரவிந்த பக்கத்தில் போய் நெருங்கி நின்றான்.

அவனோ பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு கண்ணாடியை எடுத்து துடைத்தான்.

இப்போதான் விஜய்க்கு நிம்மதியே வந்தது. இப்போதான் மூணு நாள் சஸ்பெண்ட் முடிஞ்சு காலேஜுக்குள்ள வந்திருக்கோம் அதுக்குள்ள மறுபடியும் ஒரு சண்டை அதுவும் அரவிந்த்கூட அப்படின்னா அவ்வளவுதான் நம்ம சீட்டு கண்டிப்பா கிழிக்கப்படும் என்று கொஞ்சம் ஜெர்க்கானான்.

ஆனால் அவன் நினைச்சபடி ஒன்னும் நடக்கவில்லை என்றதும் நிம்மதியாக மூச்சுவிட்டான்.

“நதி வா போகலாம் கிளாஸுக்கு நேரமாச்சு” என்று அவளை எப்படியாவது கிளாஸுக்கு இழுத்துட்டுப் போயிடணும்னு முயன்றான்.

அவனால் முயற்சி மட்டும்தான் பண்ணமுடிஞ்சது.

அவளோ “இருடா அந்த அம்மாஞ்சியை ஒரு அடியாவது அடிச்சிட்டு வர்றேன். அன்னைக்கு நம்மளை மன்னிப்பு கேட்க வைச்சான்ல”என்று அசால்டாக சொன்னாள்.

அதைக்கேட்ட விஜய் முதற்கொண்டு “நாலுபேரும் என்னது அடிக்கப்போறீயா?ஐய்யோ இவளே பாம்பு புத்துக்குள்ள கையைவிட்டு பாம்பை எடுத்து நம்ம மேல போடுவா போலயே. இருக்கிற பிரச்சனை போதாதா இவா வேற”என்று அவளை சுத்தி வந்து நின்றனர்.

அதைக்கேட்ட அரவிந்தோ லேசாக சிரித்தவாறே நதியாவைப் பார்த்தான்.

 என்னடா சிரிக்கிற?ஏன் சேர்மனுக்கு சொந்தக்காரனை நான் அடிக்கமாட்டேன்னு நீ நினைச்சிட்டியோ?நான் நினைச்சா அந்த சேர்மன் சொட்டைத்தலையனையே அடிப்பேன்டா. பார்க்கிறியா பார்க்கிறியா?”என்று எகிறியவளை அரவிந்த் பாவமாகப் பார்த்தான்.

“ஏய் நதியா?அவன் பாவம் அவனை விட்று. ஏதோ பச்சைப்புள்ளை தெரியாமல் சொல்லிட்டான். நீதான் நம்ம காலேஜ் டான்னுன்னு அவனுக்குத் தெரியல. ஆனானப்பட்ட மனோஜையே ஓடவிட்டவள்ல நீ. அது தெரியமல் உன் முன்னாடி வந்துட்டான் இனி வரமாட்டான். அவனை விடு. அந்தப் பிள்ளைப்பூச்சியை அடிச்சா நமக்குத்தான் கேவலம். விடு விடை”என்று அவளை பிடித்து இழுத்து நிறுத்தினர்.

அவளோ கொஞ்சம் சமாதானமாவள் “பாவம் பொழைச்சுப்போன்னு விடுறேன். எங்ககிட்ட வைச்சிக்காத இனி புரியுதா. இன்னும் இரண்டுமாசமோ மூணு மாசமோ படிச்சிட்டுப் போய்கிட்டேயிரு. எங்களுக்கு பனிஷ்மெண்ட் குடுத்திருந்தாக்கூட பரவாயில்லை. உன் முன்னாடியே என் பிரண்டஸையும் என்னையும் கைக்கூப்பி மன்னிப்பு கேட்க வைச்சல்ல அதுக்காக உன் மண்டையை உடைச்சிருக்கணும். ஆனால் நீ அமைதியான பையன்னால சும்மா விடுறேன். போ போ”என்று விரட்டினாள்.

அதைப்பார்த்த அரவிந்தோ அவளை ஏளனமாகப் பார்த்தவன் சுற்றியும் நோட்டம்விட்டான்.

அங்கே எல்லோரும் அவர்களையே திரும்பிப் பார்க்கவும் பேக்கை எடுத்துக்கொண்டு ஒன்றுமே பேசாமல்,அரவிந்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு போய்விட்டான்.

அவன் போனதும் நாலு பேரும் நதியாவை இழுத்துக்கொண்டு அப்படியே கிளாஸுக்குள்ள வந்து உட்கார்ந்தார்கள்.

விஜய் நதியாவோடு எதுவுமே பேசவில்லை. ஆனால் அவனது மனசுக்குள்ளாக அரவிந்த் ஏன் அப்படி பார்த்துட்டுப் போனான் என்ற யோசனைதான் ஓடிட்டிருந்தது.

நதியாவோ அது எதையும் கண்டுக்காது கிளாஸைக் கவனித்துக்கொண்டிருந்தாள்!

ஆனாலும் நதியா நே இம்பூட்டு டெர்ரரா இருக்கூடாது!பாரு அரவிந்தே பயந்து போயிட்டான்.