கழிமுள்ளி நெஞ்சுக்காரி-27
கழிமுள்ளி-27
நதியா கிளாஸ்ல உட்கார்ந்திருக்க அவளுக்கு அந்தப்பக்கமாக விஜய் கேங்க் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் கிளாஸை கவனித்துக்கொண்டிருந்தனர்.
அரவிந்த்துதான் பாடம் எடுத்துக்கொண்டிருந்தான். அதைப்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனசுக்குள்ள என்னவென்று தெரியாத உணர்வு மறுபடியும் வந்தது. அது நேத்து பொண்ணுப்பார்க்க வரும்போதே மனசு முழுவதும் அரவிந்த் ஞாபகம்தான் வந்தது. ஆனாலும் அதை மறைத்துக்கொண்டாள்.
இப்போதும் அதே உணர்வுதான் மனசுக்குள் மோதியடிக்க அவளால் இருக்கமுடியவில்லை. அதைவிடவும் அவளது பிரண்ட்ஸ் எப்போதும் வந்து பேசுறதுபோல இன்னைக்கு பேசவேயில்லை.
அதுவும் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ‘எல்லோரையும்போல நம்மளும் இந்தக் காதல் கத்திரிக்காய்னு வந்ததும் பிரண்ட்ஸ்கிட்ட ஒதுங்கிட்டமோ?இல்லை கல்யாணம் ஆகப்போகுதுன்னு இப்படியிருக்கோமா?ஐய்யோ ஏன்டா அரவிந்த் என் வாழ்க்கையில் வந்த?’என்று இப்போதும் எல்லாத்துக்கும் கோபம் அவன்மேல்தான் வந்தது.
அவனையே கண்ணெடுக்காது பார்த்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது. இவனை என்ன செய்யலாம் என்று பார்த்திருந்தவளுக்கு ஏனோ கண்கள் கலங்கியிருந்தது.
அவளால் அவனை நேராக பார்க்க முடியாது கண்ணீர் மறைத்தது. அதனால் இமைகளை அழுத்தி முடித் திறந்தவளின் கன்னங்களில் கண்ணீர் இறங்கியது.
அதைப் பார்த்த அரவிந்த் ஒரு நிமிடம் பாடத்தை நிறுத்திவிட்டு அப்படியே அவளையே பாத்து நின்றுவிட்டான். அவனது பார்வை போன இடத்தை எல்லோரும் திரும்பிப்பார்க்க நதியா தலைகவிழ்ந்துப் படுத்திருந்தாள்.
அவன் பாடத்தை நிறுத்தவும் இனி எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்கன்னு தலையை டெஸ்க்ல வைச்சுப் படுத்துக்கொண்டாள்.
தினேஷ்தான் “பாவம்டா அவக்கிட்ட காலையில் வந்ததும் பேசியிருக்கலாம்ல. நம்மளைவிட்டா அவளுக்கு ஷேர் பண்ண யாரு இருக்கா. இப்போ பாரு அவளுக்கு என்னமோ ஆகிருக்கு. ஆதுதான் அரவிந்த் சாரே பாடத்தை நிறுத்திட்டு பார்த்திருக்காங்க.ஏன்டா நீயும் இப்படி பண்ற. உங்க இரண்டு பேரையும் பிரண்டா வைச்சிக்கிட்டு நாங்கபடுற பாடு இருக்கே ஐய்யய்யோ முடியல”என்று அலுத்துக்கொண்டான்.
“ அவளை பொண்ணுபார்க்க வர்ற தகவலையும் நமக்கு சொல்லல. காலேஜிக்கு வரமாட்டாள் அப்படிங்கிறதையும் சொல்லல. இன்னைக்கு சார்கூடவே கார்ல வந்து நேரா கிளாஸுக்கு போயிட்டா. அப்போ நம்மெல்லாம் அவளுக்கு முக்கியமேயில்லைன்னுதானே காண்பிக்கிறா. அப்புறம் போய் நீ எங்களுக்கு முக்கியமான பிரண்டுன்னு காண்பிக்கணுமா?நேத்து அவா வீட்டுக்கு பதறிப்போய் ஓடினோம். நர்மதா சொல்லலைன்னா நமக்கு பொண்ணு பார்க்க வர்ற மேட்டரே தெரியாது. விடுறா அவா போனா போகட்டும்”
“உண்மையில் உனக்கு என்னடா பிரச்சனை. அவளுக்கு கல்யாணம்னா நமக்கு சந்தோசம்தானே. நீ ஏன் வருத்தப்படுற?அரவிந்தை காதலிக்கும்போதும் இப்படித்தான் கோபப்பட்ட. இப்பவும் அதேமாதிரிதான் கோபப்படுற.நாங்க ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டல்ல?”
“கேளுங்கடா?”
“உனக்கு…?”
“ம்ம்ம் எனக்கு?”
“நதியை ரொம்ப பிடிக்குமா?”
“ஆமா பிடிக்கும்.இதென்ன கேள்வி? நம்ம எல்லோருக்கும்தான் அவளைப் பிடிக்குமே?”
“அந்த பிடித்தம் இல்லடா. நீ அவளை விரும்புறியா?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும் நக்கலாகச் சிரித்தான். நம்ம பிரண்ட்ஸ்குள்ளயே இந்தகேள்வியா?சரிதான் என்று லேசாக சிரித்தவன் அதற்குப்பிறகு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகிவிட்டான்.
அதற்குமேல் யாருக்கும் அவனிடம் திரும்ப இதே கேள்வியைக் கேட்கணும் என்கின்ற எண்ணமும் வரவில்லை, தைரியமும் வரவில்லை.
அரவிந்த் கிளாஸ் முடிஞ்சும் போகாது கொஞ்சநேரம் நின்று பாடம் எடுத்துவிட்டுத்தான் வெளியே வந்தான்.
அவன் வெளியே வந்ததும் நதியா நிமிர்ந்துப் பார்த்தாள்.
அவள் அழுதிருக்கிறாள் என்று அவளது முகமே காட்டிக்கொடுத்தது. அதனால் திரும்பித் திரும்பி அவளையே பார்த்துவிட்டு போகமனதில்லாது போனான்.
அவன் போனதும் நதியாவும் வெளியே வந்தவள் போய் கிரவுண்டில் எப்பவும் அரவிந்த் பிராக்டிஸ் செய்யும் அந்த புட்பால் கிரவுண்டுக்கு பக்கத்தில் இருந்த திண்டில் உட்கார்ந்தாள்.
அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் அப்படியே நெஞ்சில் மோதியடிக்க,கண்களை மூடிக்கொண்டு அப்படியே உட்கார்ந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியிருந்தாளோ தெரியாது. அவள் பக்கத்தில் யாரோ வந்து நிற்பதுபோல இருக்கவும் ‘அரவிந்த் வந்துட்டானோ?’ என்று சட்டென்று கம்களை திறந்தாள் மனோஜ் நின்றிருந்தான்.
“என்ன நதியா இங்க தனியா இருக்க?உன் பிரண்ட்ஸ் உன்னை கைவிட்டுட்டானுங்களா?நீ ஏன் கவலைப்படுற செல்லம். வா உனக்கு நானிருக்கேன்”என்று கையைப்பிடித்து இழுத்தான்.
அவள் சாதாரணமாக இருந்திருந்தாளென்றால் இதற்குள்ளாக மீண்டும் அவன் மூக்கை உடைத்திருப்பாள். ஆனால் இப்போ மனசுளவிஸ் உடைந்துப்போய் இருப்பதால் ஒரு சண்டைக்கோ பிரச்சனைக்கோ அவள் தயாராக இல்லை. அதனால் மனோஜை அடிக்காமல் அமைதியாக “என் கையை விடு மனோஜ் என் பிரண்ட்ஸுங்களுக்கு நீ என் கையைப் பிடிச்சது தெரிஞ்சுதுன்னு வையேன் உன் குடலை மிதிச்சே வெளியில எடுத்திருவாங்க, மரியாதைக்கு போயிடு”என்று எச்சரித்தாள்.
“அவனோ ஹான் கிழிப்பானுங்க.சும்ம சும்மா அடிவாங்கிட்டிருக்க நான் என்ன சொம்பையா?இப்போ வந்து அவனுங்களை அடிக்கச்சொல்லு அவனுங்க மூஞ்சு முகரையெல்லாத்தையும் பேத்து எடுத்திருவேன்”
“அதை அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ என் கையைவிடுடா இல்லைன்னா நடக்கிறதே வேற. நானே வேறொரு பிரச்சனையில் இருக்கேன். இதுக்குமேல என்கிட்ட பிரச்சனை வைச்சிக்காத உனக்கு குடும்பக்கட்டுபாடு பண்ணிவிட்றுவேன்டா. உனக்கு என்னைப் பத்தி சரியா தெரியாதுடா”
“உன்னைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியும்டி. உன் பிர்ண்டஸ்கூட உரசிட்டே திரிஞ்ச. அப்புறம் கொஞ்சம் அழகா கலரா அம்மாஞ்சி மாதிரியும், உனக்கு அடிமை மாதிரியும் வந்த அரவிந்தை காதலிக்கிறேன்னு உரசிட்டிருந்த. அவனும் உன்னைத் தொட்டுட்டு விட்டுட்டு போயிட்டான் போல. அதுதான் நீ சோகத்துல அலையுற. வா அந்த சோகத்தை என்னை உரசி தீர்த்துக்க”என்றவன் அவளது கன்னத்தோடு கன்னம் ஒட்டுரமாதிரி கொண்டுபோனான்.
அவ்வளவுதான் சர்ரென்று இடிமாதிரி அடி முகத்தில் விழவும் பொத்தென்று விழுந்தான்.
யாருடா இது மனோஜை அடித்தது என்று மனோஜை பார்த்துவிட்டு, நதியா அப்படியே திரும்பியவள் அரவிந்த் பக்கத்தில் நிற்பதைப் பார்த்ததும் “இவனா அடிச்சது?” என்று ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
அவன் கோபத்துல திட்டுறதைப் பார்த்திருக்காள். ஆனால் யாரையும் அடிச்சுப் பார்த்ததில்லையே. அதே பழைய சோடாபுட்டி அம்மாஞ்சியாவே அவனை நினைச்சிட்டிருக்கிறாள் போல.
இப்போ அரவிந்த் குனிஞ்சு மனோஜை தூக்கினான். அவன் தூக்கினதுலயே மனோஜ் மிரண்டுவிட்டான்.
“போன வருஷமே அவளுக்குப் புரபோஸ் பண்ணினதுக்கே உன்னைத் தூக்கிப்போட்டு மிதிச்சவன் நான். இப்போ அவளை தொட்டுப் பேசுறன்னா உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்?”என்றவன் திரும்பவும் அவனை அடித்தான்.
அதில் உதடுக்கிழிந்து இரத்தம் வந்தது.
“நீ நதியாவைப் பத்தி என்ன சொன்ன அரவிந்துக்கிட்ட உரசிக்கிட்டு அலைஞ்சன்னா சொன்ன?அப்படி பேசினா நாக்கையும் சேர்த்து அறுத்திருக்கணும். இப்போதைக்கு உன்னை சும்மாவிடுறதுக்கு காரணம் நீ என்னோட காலேஜ்ல படிக்கிறதுனால மட்டும்தான். இதுக்குமேல் நீ இனி யாருக்கிட்டயும் இப்படி பேசக்கூடாது. அப்படி பேசினன்னு வையேன் உன் உயிர் இருக்காது”என்றவன் அவனை கீழேவிட்டான்.
அடிவாங்கி கிழிந்த நாராய் கிடந்த மனோஜ் மெதுவாக எழுந்து நின்றான்.
அவன் அரவிந்தையும் நதியாவையும் மாற்றி மாற்றி பார்த்தான். அதுக்குமேல எதுவும் பேசாமல் மெதுவாக இரத்தத்தை கர்சீப்பை எடுத்துத் துடைத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஓடிவிட்டான்.
அதைப்பார்த்த நதியா கொஞ்சம் மிரண்டுப்போய்தான் அவனைப் பார்த்தாள்.
அவனோ எதுவுமே பேசாமல் அந்த திண்டில் அவளது பழைய அரவிந்தாக உட்கார்ந்தான். அதைப்பார்த்தவள் வேறெதுவும் பேசாது கொஞ்சம் தள்ளி விலகி உட்கார்ந்தாள்.
‘அப்போ அப்பவே இவன் சண்டியராகத்தான் இருந்தானா?என்னை இவன் ப்ரோப்போஸ் பண்ணினதுக்கே அடிச்சிருக்கானே!இவன் உண்மையிலயே அடிக்கக்கூடியவன்தானோ?எனக்கு லவ் ப்ரோப்போஸ் பண்ணினவனையே போட்டு மொத்தியிருக்கானே. இப்போ என்னைப் பொண்ணுப் பார்க்க வந்திருக்கானே அவனை என்ன பண்ணப்போறானோ? கடவுளே இவன்கிட்ட இருந்து நான் எப்படி தப்பிக்கப்போறனோ?’என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டிருந்தாள்.
“ரொம்ப யோசிக்காத நேத்து வந்தவன் பொண்ணுதானே பார்த்துட்டுப் போயிருக்கான். அடுத்து அவன் என்ன பண்றான்னு பார்த்துட்டுத்தான் அவனை அடிக்கணுமா?இல்லை கொல்லணுமா?என்று யோசிப்பேன். அதுவரைக்கும் அவன் மேல கைவைக்கமாட்டேன்”
“என்ன?”என்று அதிர்ச்சியில் பார்த்தாள்.
“எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி அதுக்குள்ள அவன்கூட கல்யாணம் முடியற மாதிரி கனவு எதுவும் கண்டியா என்ன?இவ்வளவு அதிர்ச்சியாகுற. ரொம்ப அதிர்ச்சியாகாத,கொஞ்சம் எதிர்காலத்துக்கும் கொஞ்சம் மிச்சம் வை”
“ஆமாடா அவன்கூட கல்யாணமாகி குடும்பம் நடத்தப்போறேன்னுதான் நினைச்சிட்டிருக்கேன்.இப்போ அதுக்கென்ன?”
“அவளைத் திரும்பி அந்தப் பிள்ளைக்குட்டியை மறத்திட்டியே. எத்தனை குழந்தைப்பெத்துக்கிறது வரைக்கும் ப்ளான் பண்ணிட்டியா என்ன?”
“அதைக்கேட்டவள் இன்னும் இந்த வாய் என்கிட்ட நல்லதாகவே பேசக்கூடாதுன்னு சபதம் போட்டிருக்கு போல. எது எப்படியோ என் கல்யாணத்துக்கு வந்து எங்களை ஜோடியா பார்த்து வயித்தெரிச்சல்ல புலம்புவல்ல அது எனக்குப்போதும்”
“அப்போ உங்கப்பா பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கப்போற. இதுல உறுதியா இருக்க அப்படித்தானே?”என்று கேள்விக்கேட்டான்.
“ஆமா எங்கப்பா பார்த்த மாப்பிள்ளைக்கு ரொம்ப தைரியம். யாருக்கிட்டயும் என்னை விட்டுக்கொடுக்கமாட்டான்”
“ம்ம்ம் அப்புறம்”
“உன்னை மாதிரி அம்மாஞ்சியில்லை”
“ம்ம்ம் அப்புறம்”
“உன்னை மாதிரி கட்டிக்கிட்டவளை கண்டபடி பேசமாட்டான்”
“அதெப்படி உனக்குத் தெரியும்?”
அது அது என்று பேசத் திணறியவளின் முகத்தைப் பார்த்தான். அவளுக்கு அதுக்குமேல பேசமுடியவில்லை. அப்படியே அமைதியாக இருந்தவள் இதற்குமேல் இங்கிருந்தா நான் நானாக இருக்கமாட்டேன் என்று எழுந்துப்போனாள்.
அவன் பக்கத்தில் வரவும் அரவிந்த் அவளது கையைப்பிடித்து இழுத்து, எப்போதும்போல அவனது மடியில் உட்காரவைத்துக்கொண்டான்.
அவன் இழுத்ததும் சட்டென்று எப்போதும் போல அவனது கழுத்தோடு கையைப்போட்டு அவன் மடியில் பாந்தமாக உட்கார்ந்திருந்தாள்.
அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியவன், அப்படியே அவளது கழுத்தோடு ஒற்றைக் கையைப்போட்டுப் பிடித்தவன், தனது தலையை சாய்த்து அவளது இதழோடு உதட்டை வைத்து அழுத்தி முத்தம் கொடுத்தான்.
அவளுக்கிருந்த குழப்பம் மனப்பாரம் எல்லாத்துக்கும் ஒற்றைத் தீர்வாக அந்த முத்தம்தான் இருக்கிறது என்பதுபோல, அவளாகவே கண்களை மூடி எப்போதும் போல அவன் கொடுக்கும் முத்தத்தில் மயங்கி,அவனது கையில் நெகிழ்ந்தாள்.
இவளது காதல் உள்ளுக்குள் இன்னும் எரிமலையின் உள்ளுக்குள் உறையாது எரிகழும்பைப்போல அவளது காதல் இன்னும் கணன்று கொண்டிருக்கிறது என்பது அவனுக்குமே தெரியும், அந்தக்காதல் எரிக்குழம்பை வெளியே கொண்டுவரத்தான் அவன் அவளை தனக்குள் உட்காரவைத்திருக்கிறான்.
அவளது நெகிழ்வில் தன்னைத் தொலைத்தவன் அப்படியே அவளது உதட்டைக் கடித்து இழுத்தான். அந்த வலியையும் பொறுத்துக்கொண்டவள், இன்னும் அவனது நெஞ்சோடு சாய்ந்தாள்.
அரவிந்த் மற்றொரு கையால் அவளது இடுப்போடு கையைப்போட்டு இறுக்கிப்பிடித்தான். அந்த அணைப்பில் மீண்டும் மீண்டும் அவனுக்குள் தன்னைத் தொலைத்தாள்.
அதனால் அரவிந்த் முன்னேறி இன்னும் அணைத்துக்கொண்டவன், நெஞ்சோடு நெஞ்சம்மோதி உரசி மோகத்தீயை மூட்டிக்கொண்டிருந்தது.
அவளது உதட்டை மெதுவாக விடுவித்தவன் அவளது முகத்தையே வாஞ்சையாகப் பார்த்தான். அவளது கண்கள் காதல் மயக்கத்தில் அவனைப் பார்த்தது.
அந்தக் காதலைத்தான் அவன் அவளிடம் யாசிக்கிறான். இதுக்குமேல அவனுக்கு என்ன வேணும். அவன்மேலுள்ள நதியாவின் காதல் இன்னும் அவளது நெஞ்சுக்குள் இருப்பதைக் கண்டுக்கொண்டான்.
இப்போது மெதுவாக அவளை விடுவித்தவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். நதியா அவனது முகத்தைப் பார்த்து தனது தலையை சாய்த்தவள் “ இந்த முத்தமும் என் காதலும் போதுமா?இதை இப்படியே மனசுக்குள்ளே வைச்சுக்க. இதுதான் நான் உனக்குத்தர்ற கடைசி முத்தம். இதுக்குமேல நான் இன்னொருத்தன் பொண்டாட்டியாகிடுவேன். இப்போ நான் கிளம்புறேன்”என்று சொன்னவள் எழுந்தாள்.
அவன் ஏதோ பேச வாயைத்திறக்க “தயவு செய்து எதையும் பேசி என்னோட இந்த சந்தோசமான மனநிலையை கெடுத்திடாத. ப்ளீஸ் போதும். நான் கிளம்புறேன்”என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல் வேகமாக நடந்து வெளியே போய்விட்டாள்.
அரவிந்த் தன்னிடமிருந்து விலகிப்போகும் அவளையே கண்ணெடுக்காது பார்த்துக்கொண்டிருந்தான்.
என்ன அரவிந்த் முத்தம் கொடுத்த உனக்கு நதியா அலவா கொடுத்துட்டுப் போயிட்டாளே!இப்போ அடுத்து என்ன பண்ணப்போற?