கழிமுள்ளி நெஞ்சுக்காரி-28
கழிமுள்ளி-28
நதியா வீட்டுக்குப்போக நினைத்தவள், வேண்டாமென்று திரும்பவும் கிளாஸிற்குள் போய் உட்கார்ந்தாள். அவளது முகத்தைப் பார்த்ததுமே அவள் அழுதிருப்பது தெரிந்தது.
அவளது பிரண்ட்ஸுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருக்கவும் அவள் உட்கர்ந்திருந்த பென்ஞ்சிற்கு பின்னாடி போய் உட்கார்ந்தனர்.
முகேஷ்தான் “ நதி நாங்க உனக்கு பின்னாடி வந்துட்டோம்”என்று மெதுவாகச் சொன்னான்.
அதேக்கேட்டு அவள் திரும்பிப்பார்த்து சிரித்தாள்.
“ரொம்ப சிரிக்கவேண்டாம்னு சொல்லுடா. உன் பிரண்டுகிட்ட கேளுடா அவங்க எங்கேஜ்மெண்டுக்கு நம்மளுக்கு சொல்லுவாங்களா?இல்லை ஒரேடியா கல்யாணமெல்லாம் முடிஞ்சு ஏர்போர்ட்ல வைச்சு டாட்டா காட்டுறதுக்கு மட்டும் நம்மளைக் கூப்பிடுவாங்களான்னு கேட்டுச்சொல்லுடா குள்ளா?”என்று கேட்டான்.
அதைக்கேட்டவளுக்கு இப்போதான் கஷ்டமாக இருந்தது. இவங்களை விட்டுட்டு பாரீன் மாப்பிள்ளையைக் கட்டிக்கமாட்டேன்னு சொன்னனே. இப்போ நானே பாரீன் மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு வெளிநாட்டுக்குப் போகப்போறனே என்று மனசுக்குள்ளே திக்கென்று உணர்ந்தாள்.
உடனே அவள் முகம் மாறியதும் விஜய் எதுவும் பேசாது அமைதியாகிவிட்டான்.
காலேஜ் முடிஞ்சு போகும்போது முகேஷ் என்று கூப்பிட்டாள்.
எல்லோரும் திரும்பி பார்க்கவும் “எனக்கு அடுத்தவாரம் எங்கேஜ்மெண்ட். அதுக்கு அடுத்தவாரம் கல்யாணம். அப்பா பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன். அப்பா உங்கக்கிட்ட இதையெல்லாம் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க ஆனாலும் உங்கக்கிட்ட சொல்லுறேன். எல்லோரும் வந்திருங்க. அப்புறம் அப்பா என் போனை காலையிலயே எடுத்து வைச்சிக்கிட்டாங்க. கேட்டா அரவிந்த் ஏதாவது பண்ணி இந்த பொண்ணுபார்க்கிறதை கெடுத்துட்டா என்ன பண்ணுவன்னு கேட்டாரு. அதுக்கு என்கிட்ட எந்த பதிலும் இல்லை. அதனால போனை அப்பா தர்ற வரைக்கும் அவங்ககிட்டேயே இருக்கட்டும்னு விட்டுட்டேன். இன்னைக்கு காலையில்தான் என் கைக்கு வந்துச்சு. மேக்ஸிமம் நாளையில் இருந்து இங்க வருவேனான்னு எனக்குத் தெரியாது. எனக்கு அரவிந்தை எதிர்கொள்ள முடியலை. அவனை மறக்கவும் முடியாமல் அவன் பேசினதையும் என்னை வேண்டாம்னு சொன்னதை மன்னிக்கவும் முடியாமல் தடுமாறிட்டிருக்கேன். இதுக்கு பெட்டர் ஆப்ஷன் அப்பா கைக்காட்டுறவனை சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டு கண்காணத இடத்துப்போயிடணும். ஆனால் உங்களை பார்க்காமல் எப்படி இருக்கப்போறோம்னு தெரியலை. அதுதான் கஷ்டமா இருக்கு”என்றவளுக்கு அடுத்துப்பேச தொண்டையில் வார்த்தை வராது சிக்கித் தவித்தாள்.
அதைக்கேட்டதுமே நான்குபேருக்கும் கண்கள் கலங்கிவிட்டது. அவள் பக்கத்தில் வந்து நின்றார்கள்.
“இங்கப்பாரு எவ்வளவு தூரத்தில் எப்படி இருந்தாலும் நீ எங்களோட பெஸ்ட் பிரண்ட் நீ நல்லாயிருக்கணும்னுதான் நாங்க நினைக்கிறோம். அதனால் உனக்கு இதுதான் நல்லது அரவிந்த்கிட்டயிருந்து தப்பிக்கணும்னு நினைச்சு பண்றன்னா ஓகே. உன் வாழ்க்கையை சந்தோசமா வாழு”என்று அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
ஆனால் விஜய் எதுவுமே சொல்லவில்லை. அமைதியாக அவளது கையைப் பிடித்தவன் “உன் கல்யாணத்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்றுவிட்டு அங்கிருந்து விலகி நடந்தான்.
அதைப்பார்த்தவளுக்கு இன்னும் கஷ்டமாக இருந்தது.
அவனையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தினேஷ்தான் “கவலைப்படாத நதி. எங்கிருந்தாலும் என்ன சண்டைப்போட்டாலும் எப்பவும் எந்த சூழ்நிலையா இருந்தாலும் அவன் உன்கூடத்தானே இருப்பான். இப்பவும் கண்டிப்பா உனக்காக வந்து அவன் நிப்பான். அவனை நம்பு”என்று சொல்லி ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தான்.
அந்த நேரம் ரமேஷ் அவர்கள் பக்கத்தில் வரவும் இவர்கள் யாரும் அவரோடு பேச நிற்காமல் “வர்றோம் நதி. டேக் கேர்”என்றுவிட்டு நேராக விஜய் இருக்கும் இடத்தைத் தேடிப்போனார்கள்.
அவனோ மரத்தடியில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனது தோளில் தட்டிய தினேஷ் “ஏன்டா மரத்தடியில் உட்கார்ந்தா புத்தருக்குத்தான் ஞானம் கிடைக்கும்,நமக்கெல்லாம் காக்கா எச்சமும் நவ்வா பழக்கொட்டையும்தான் கிடைக்கும். ஏன்டா நதி காலேஜ் வராமல் இருக்கிறது உனக்கும்மட்டும்தான் வருத்தமாயிருக்கமா?எங்களுக்கு இருக்காதா?எழுந்து வாடா. வீட்டுக்குப்போவோம்”என்று அவனது கையைப்பிடித்து இழுத்தார்கள்.
“ப்ச்ச் அவள் இரண்டாங்கிளாஸ்ல இருந்து நமக்கு பிரண்டுடா. யாருக்கிட்டயாவது எதுக்காகவாவது நம்மளை விட்டுக்கொடுத்திருக்காளா?ஆனால் இப்போ அவளது வேதனையை தனக்குள்ள மறைச்சிக்கிட்டு அவங்கப்பா பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு போறேன்னு முடிவெடுத்திருக்காள். அது அவளுக்கு எவ்வளவு வலியைக்கொடுக்கும்னு உங்களுக்கு தெரியலையா?அந்த அயர்லாந்துக்காரனை கல்யாணம் பண்ணிட்டு இங்கிருந்து போனாலும் அவா சந்தோசமா வாழ்ந்திடமாட்டா. அதுதான் உண்மை. அது அந்த மரமண்டைக்கு புரியமாட்டேங்குதுடா. அப்பா சொன்னாரு ஆட்டுக்குட்டி சொல்லுச்சுன்னு கல்யாணம் பண்ணிட்டு போறதுக்கு தயாரா இருக்கா. இதுக்கு ஏதாவது தீர்வு கண்டுப்பிடிக்கணும்டா. எவ்வளவு பெரிய பிரச்சனையானாலும் பரவாயில்லை” என்றவனுக்கு கண்கள் கலங்கி சிவந்துவிட்டது.
அவனை மூன்று பேர்களும் அப்படியே தோளோடு தோள்சேர்த்துப் பிடித்துக்கொண்டனர்.
“நீங்க அன்னைக்கு கேட்டீங்களடா நதியாவை உனக்கு ரோம்ப பிடிக்க்மாடான்னு?அவளை விரும்புறியான்னு இன்டைரக்டாகேட்டீங்கதானே. உலகத்துல யாரு அப்படி கேள்விக்கேட்டிருந்தாலும் நான் வேற மாதிரி பதில் சொல்லிருப்பேன். ஆனால் எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படியான கேள்விக்கேட்டால், மத்தவனுங்க அசிங்கமாதானே கேட்பானுங்கன்னு தோணுச்சு. அம்மா இறந்து இரண்டு வருஷமா என்னைப் பார்த்துக்க ஆளில்லாமல் அங்கேயும் இங்கேயும்விட்டு சொந்தக்காரங்களை பார்த்துக்க சொல்லின்னு அப்பா என்னவெல்லாமோ பண்ணிப்பார்த்துட்டும் யாருமே என்னை சரியா கவனிக்கலை. அதுக்கு அப்புறம் இரண்டு வருஷம் ஸ்கூலுக்குப்போகாமல் வீட்டுலயே படிக்காமல் இருந்தேன். அப்பா சாப்பாடு வைச்சிட்டு வீட்டைப் பூட்டிட்டு ஆபிஸுக்குப் போயிடுவாரு. அப்புறம் சாயங்காலாம்தான் வருவாரு. அந்த வீட்டைத்தவிர எதுவுமே தெரியாது. உலகமே அந்த வீட்டுக்குள்ளன்னு இருந்து ஒரு சின்னப்பையனுக்கு என்னத் தெரியும்?எல்லாத்துலயும் முரட்டுத்தனமாவே செய்யப்பழகின ஒரு சின்னப்பையன். அதுக்கப்புறம் திடீர்னு ஸ்கூல்ல கொண்டுவிட்டா, சரியா பேசவராது,எதுக்கெடுத்தாலும் கையை நீட்டுறதுன்னு இருக்கிற தாயில்லாதவனை பக்கத்தில் வந்து உட்கார்ந்து பேசி சிரிச்சு, சண்டைப்போட்டு ஓரளவுக்கு உங்கக்கூடவும் பழகவைச்சு இத்தனை வருஷமும் பிரண்டா இருக்கிற ஒருத்தி எனக்கு யாரா இருப்பா? ம்ம்ம் சொல்லுங்கடா?”என்று கேட்டான்.
“அதுதான் உன்னைப் பத்தியும் நதி பத்தியும் எங்களுக்கு நல்லா தெரியுமேடா. இப்போ எதுக்கு இதையெல்லாம் சொல்லுறடா”
“அப்பாவுக்கு அடுத்து என்னை பார்த்துக்கிட்ட ஒரே ஆளு நதியாதான். ஸ்கூல்லயும் காலேஜ்லயும் உங்கக்கூட இருக்கும்போதுதான் நான் சந்தோசமாவே இருக்கேன். அம்மா இறந்தபிறகு என்னை பார்த்துக்காத சொந்தங்களை அப்பா வெறுத்து அப்படியே ஒதுக்கி வைச்சிட்டாரு. என்னை ஒரு மனுஷனா கொண்டுவந்தது நதிதான். எனக்காக சண்டைபோட ஆரம்பிச்சு நம்மகூடவே சுத்தினா.நம்மளைத் தவிற அவளுக்கு எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கிறதுக்கு வேற எந்த பிரண்ட்டும் அவளுக்குன்னு தனியா இல்லை. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா. சாமியை பக்தனுக்கு பிடிக்காமால் போகுமா. அவா எனக்கு சாமிடா. என்னை மனுஷனா உருவாக்கி என்னையும் சந்தோசமா சிரிக்க வைச்ச சாமிடா. அப்போ அவளுக்காக நான் எல்லாவிதத்துலயும் பாதுகாப்பா இருக்கணுமா வேண்டாமா?அவளுக்காக நான் நிப்பேன்டா, அவளை எவனையும் நெருங்கவிடக்கூடாதுன்னுதான் அரவிந்தை அவா பக்கத்துலயே நெருங்கவிடலை. ஆனால் காதல் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுடுச்சு. இப்போ வலியையும் வேதனையும் அவா தனியா அனுபவிக்கிறா” என்றவன் அப்படியே தளர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
ஏன்டா இப்படியொரு கேள்வியை இவன்கிட்ட கேட்டோம் என்றளவுக்கு மூன்று பேரும் குற்றவுணர்ச்சியில் துடித்துவிட்டனர்.
“விஜய் எங்களை மன்னிச்சிடுடா” என்ற அவனைக் கட்டிக்கொண்டனர்.
“டேய் எதுக்குடா எங்களுக்கு இவ்வளவு விளக்கம் சொல்லுற? நீயும் நதியும் லவ் பண்ணிருந்தாக்கூட நாங்க தப்பா நினைச்சிருக்கமாட்டோம்டா. உன்னைவிடவும் அவளை யாருடா நல்லா பார்த்துப்பா?நதியாவுக்கும் உனக்கும் இருக்கிற புரிதல் வேற லெவல்டா. அதுதான் நாங்க கேட்டோம். ஒருவேளை நீ அவளை விரும்பியிருந்தால் அவா என்ன பண்ணிருந்தாலும் அவளை நீ ஏத்துக்கிட்டிருப்பியேடா?அவளை இப்படி தவிக்கவிட்டிருக்கமாட்டியேன்னுதான் கவலை”என்று தினேஷ் அவன் தோளில் கையைப்போட்டுப் பிடித்துக்கொண்டு சொன்னான்.
“என்னைவிடவும் அவளை நல்ல பார்த்துக்க அரவிந்த் இருக்கான்டா. அவன் பார்த்துப்பான்”
“என்னடா உளர்ற. ஏதோ நதியா லவ் பண்ணிட்டதால அரவிந்த் இவ்வளவு செய்தபிறகும் நாங்க சும்மாயிருக்கோம். நீயென்னடான்னா அரவிந்த் பார்த்துப்பான்னு சொல்லுற?அவன்தான் அவளை வேண்டாம்னு ப்ரேக்கப் பண்ணிட்டு போகப்போய்தான் அவா தற்கொலை முயற்சியே செய்தாள். இப்போ அவன் பார்த்துப்பான்னு சொல்லுற?”
“உண்மையைதான்டா சொல்லுறேன். அவன் எல்லாத்தையும் பார்த்துப்பான். அவன் ஒன்னும் நதியா சொல்லுறமாதிரி அம்மாஞ்சி கிடையாது புரியுதா?அவன் என்னையவே தூக்கி சாப்பிட்டுட்டு போயிட்டே இருப்பான். அவன் பெரிய ஆளு”
அதனைக்கேட்டு எல்லோரும் புரியாது அதிர்ச்சியில் பார்க்க, அவர்களுக்கு நடந்ததையெல்லாம் விஜய் சொன்னான்.
இதுவரைக்கும் தினேஷ்கிட்டக்கூட முழு விவரத்தையும் அவன் சொல்லவில்லை. இப்போ மொத்தமா என்ன நடந்துச்சுன்னு சொன்னதும் அவங்களால நம்பவே முடியவில்லை. “ஆஆஆஆ இவ்வளவு நடந்திருக்கா?ஆனால் பார்த்தூ அப்படியெல்லாம் செய்திருப்பாங்களான்னு சொல்லமுடியாதளவுக்கு இருக்குடா?”என்று அதிர்ச்சியில் வாயைப்பிளந்தார்கள்.
“வாயை மூடுங்கடா பக்கிகளா?இப்போ புரியுதா நான் ஏன் நதிக்கு அந்த அயர்லாந்து மாப்பிள்ளை வேண்டாம்னு சொன்னேன்னு?”
“நல்லா புரியுது”என்று மண்டைய மண்டைய ஆட்டினார்கள்.
“நம்ம நதிக்காக எப்பவும் அவக்கூடவே இப்போதைக்கு இருக்கணும்.அதுதான் ரொம்ப முக்கியம்”
“ஆனால் அடுத்தவாரம் அவளுக்கு நிச்சயம்னு அவா சொன்னாளே!அதெப்படி தடுக்கமுடியும்?”
“அதெல்லாம் முடியும் வாங்கடா”என்று அவர்களை இழுத்துக்கொண்டு இப்போ வீட்டுக்குப் போனான்.
ரமேஷ் வீட்டுக்கு வந்தவர் நதியாவிடம் ஒன்றுமே பேசாது போனை எடுத்துட்டு வெளியே போனார்.
அவர் போனில் என்ன பேசினார்னு யாருக்கும் தெரியாது.
அவர் வீட்டுக்குள்ள வரும்போதே சிரித்த முகத்தோடு வந்தவர் “கீது மாப்பிள்ளை வீட்டுல இருந்து போன் பண்ணினாங்க. நிச்சயத்தை சீக்கிரம் நடத்திடணும்னு சொல்லுறாங்க. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமையே நிச்சயத்தை வைக்கலாமான்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன். உன் குடும்பத்துக்கு என் குடும்பத்துக்கும் மட்டும் முக்கியமானவங்களுக்கு சொல்லிடலாம், பிரண்ட்ஸ்க்கென்று யாருக்கும் சொல்லவேண்டாம். நதி, நர்மதா நீங்களும் உங்க பிரண்டஸ்க்கு சொல்ல வேண்டாம். கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைச்சுக்கலாம் சரியா”என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.
நதியாவுக்கு அவருக்கிட்ட ஏன்பா இவ்வளவு அவசரம்னு கேட்கமுடியாது?கேட்டா அரவிந்தைக் காரணம் காட்டுவாங்க. அதனால் அமைதியாக தலையாட்டிவிட்டாள்.
நர்மதா மெதுவாக “மிஸஸ் கீதா உங்க வீட்டுக்காரர் செய்கிறது எதுவும் சரியில்லை சொல்லிட்டேன். அப்புறம் பிரச்சனையில் வந்து நிக்கப்போகுது. அப்புறம் ஐய்யோ கத்தப்போறீங்க. என்கிட்ட வந்து கல்யாணம் பண்ணிக்க அவன் தம்பியிருக்கான்னுலாம் சொல்லப்படாது. அப்படி வந்து சொன்னீங்கன்னா அவன் மண்டையை உடைச்சிடுவேன்” என்று நேரிடையாகவே சொல்லிட்டு போய்விட்டாள்.
கீதாதான் இவா செய்தாலும் செய்வா என்று அதிர்ச்சியாகிவிட்டாள்.
அடுத்த நாள் காலையில் நதியா பிரண்ட்ஸ்கிட்ட பேசலாம்னு போன் எடுத்தாள். போன் உடைஞ்சு இருந்தது. இது எப்படி உடைஞ்சது என்று சந்தேகமாகப் பார்த்தாள்.
“அம்மாஆஆ என் போனை யாரோ உடைச்சிட்டாங்க” என்று எழுந்து வரும்போதே சோகமாக வந்தாள்.
“அது நர்மதா எதுவும் பண்ணிட்டு வைச்சிருப்பா. புதுசு வாங்கலாம் விடு”
“உங்க இளைய மகன்னா ஒன்னும் சொல்லிடாதிங்க” என்று கோபப்பட்டாள்.
நர்மதாவோ “நான் எங்க உடைச்சேன். நான் உன் ரூமுக்கே வரலைடி”என்று சொன்னாள்.
“அதானே நீ என்னைக்கு செய்த தப்பை ஒத்துக்கிட்டிருக்க. போடி என்கிட்ட பேசாத” என்று போய்விட்டாள்.
“இந்த வீட்டுல எல்லா மர்மும் நடக்குது. ஆனால் அதை நான் செய்தததா சொல்லிட்டிருக்காங்க. உண்மையில நான் பண்ணலடி” என்று கத்திட்டு காலேஜிக்கு கிளம்பிவிட்டாள். கீதா லீவு போட்டுட்டு மகளோடு வீட்டில் இருக்கிறாள்.
ரமேஷ் மட்டும் பிரின்சிபால் பதவியில இருக்கோமே போகணுமேன்னு தினமும் காலேஜிக்கு போனார்.
அவரைப் பார்க்கும் போதெல்லாம் அரவிந்த் பார்த்து சிரித்துவிட்டுப்போனான்.
அவருக்குத்தான் அந்த சிரிப்பை பார்த்துக் கடுப்பாகியது. ஆனாலும் ஒன்றும் செய்யமுடியாதே என்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்துவிடுவார்.
நதியாவுக்கு போனில்லாமல் ஒரு மாதிரி இருந்தது. புது போன் வேணும்னு இவள் கேட்டதுக்கும் “கல்யாணத்தோட வாங்கிக்கலாம் நதிம்மா”என்று ரமேஷ் சொல்லிவிட்டார்.
இதையெல்லாம் கவனமாக பார்த்துக்கொண்டிருந்த நர்மதா மெதுவாக விஜயிக்கு நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் போன் பண்ணினாள்.
“ஹாய்”என்று மெசேஜ் பண்ணியிருந்தாள். அவனோ நல்லத்தூக்கத்தில் இருந்தான்.
அவன் பதில் சொல்லவில்லை என்றதும் கோபத்தில் இவளும் போனை வைத்துவிட்டு தூங்கிவிட்டாள்.
காலையில் எழுந்து போனை எடுத்துப்பார்த்தவன் “ஐய்யோ இந்த பேய் எதுக்கு மெசேஜ் பண்ணிருக்குன்னு தெரியலையே. நதியா போன் என்னாச்சுன்னு தெரியலையே. ஏதோ சம்பவம் நடந்திருக்கு போல”என்று பதறிப்போய் அவளுக்கு போன் பண்ணினான்.
அவளோ போனை கட்பண்ணிட்டு கிளம்பி அவளுடைய காலேஜிக்கு கிளம்பினாள். “இன்னும் இரண்டு நாள் இருக்கு. இவனுக்கு மெசேஜ் பண்ணிருக்கேன் இவன் நல்லா தூங்கிட்டு நான் கிளம்பும்போது கால் பண்றான். போடா டேய்”என்று திட்டிவிட்டு நதியாவை பாவமாகப் பார்த்தாள்.
அவளோ என்னவென்று கண்களாலயே கேட்டாள். ஒன்றுமில்லை என்று தலையாட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.
அவளது காலேஜ் வாசலில் விஜய் காத்திருந்தான்.ஐய்யோ உராக்குட்டான்! இவன் எங்கே இங்கே!என்று பயத்துலயே அவனைக் கடந்துப்போக யோசித்து நின்றாள்.
என்ன நர்மதா உனக்கே விஜயைப் பார்த்து பயமா!