கழிமுள்ளி நெஞ்சுக்காரி-9

கழிமுள்ளி நெஞ்சுக்காரி-9

கழிமுள்ளி-9

அரவிந்தை அடிக்கவிடாமல் அவர்களைத் தடுத்தவள் அரவிந்துக்கு அடியெதுவும் பட்டிருக்கான்னு கேட்டதுலயே அவனுங்களுக்கு உச்சி மண்டையில சுர்ரென்று கோபமேறியது.

அதையே கண்ட்ரோல் பண்ணிட்டு பக்கத்தில் வந்து “நதியா அரவிந்தைவிடு. அவனுக்கு ஒன்னும் அடிபடலை. அவனை அவன் பார்த்துப்பான். நீ இங்க தள்ளிவா”என்று விஜய் அவளைக் கூப்பிட்டான்.

ஆனால் அவளோ “என்ன விஜய் பேசுற. சும்மா இருந்த அரவிந்தை எதுக்கு அடிக்க வந்த. அது தப்பில்லை. அவன்கிட்ட மன்னிப்பு கேளு. டேய் தினேஷ் நீயும் சேர்ந்து அடிக்கப்போற இது சரியில்லை”என்று கத்தினாள்.

அதைக்கேட்ட விஜயிக்கும் தினேஷுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“நம்ம நதியாவா இது?நம்ம அடிக்கிறதுக்கு முன்னாடியே எவனன்னாலும் முதல் ஆளாப்போய் அடிச்சி துவைச்சு எடுக்கிறவளுக்கு இப்போ என்னாச்சு?அரவிந்துக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றா?என்னாச்சு இவளுக்கு. நம்மளைவிடவும் அரவிந்த் அவளுக்கு முக்கியமா போயிட்டானா என்ன?”என்று கோபம் வந்தவர்கள் அரவிந்திடமிருந்து விலகியவர்கள் அவங்க அவங்க பேக்கை எடுத்துட்டு அவளிடம் சொல்லாமலயே கிளம்பி போய்விட்டார்கள்.

எப்படியும் வெளியே போகமுடியாது என்பதால் எப்படியும் கேண்டீனில்தான் இருப்பானுங்க என்று நதியாவுக்குமே தெரியும். 

அவங்க நாலுபேரும் போனதும் நதியா அரவிந்தைப் பார்த்து “இங்கப்பாரு நீ இப்படியெல்லாம் நடந்துக்காத. உன்னைப் பார்த்தா பாவமாக இருக்குன்னுதான் உன்னை சும்மாவிட்டு வைக்கிறேன். என் பிரண்டஸ்கிட்டயிருந்தும் உன்னைக் காப்பாத்திவிட்டிருக்கேன் புரியுதா?”

அதைக்கேட்ட அரவிந்த் எல்லா பக்கமும் தலையை ஆட்டிவைத்தான்.

“என்ன பூம்பூம் மாடுமாதிரி தலையை ஆட்டிவைக்கிற. ஏதாவது ஒரு பக்கம் ஆட்டு”

“சரிங்க மேடம் இனி உங்கக்கிட்டயிருந்து தள்ளியே இருக்கேன் மேடம். எனக்கு உங்களையெல்லாம் பார்த்தால் பயமாயிருக்கு மேடம். இனி இப்படியெல்லாம் நடந்துக்கமாட்டேன் மேடம்”

“அது அந்த பயம் இருக்கட்டும். இனி என்னை மேடம்னு சொல்லாத. என்னைப் பார்த்து பயப்படாத,அரவிந்த். யாராவது உன்கிட்ட பிரச்சனை பண்ணினா நதியா மேடம் கேங்க்குன்னு சொல்லு. யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க. அப்புறம் என் பிரண்டஸ் இருக்கும்போது என்கிட்ட பேசாத. அவங்க ரொம்ப டெரர் சரியா. ஓகே ஓகே அவனுங்க கோபமா போயிட்டாங்க நான் போறேன். நீ பிராக்டிஸ் பண்ணு. உனக்கு விளையாட்டுல நல்ல ப்யூட்சர் இருக்கு. வேணும்னா விஜய் க்ரூப்ல சேர்ந்து காலேஜிக்காக விளையாடு. நான் உனக்காக ரொகமெண்ட் பண்றேன்”

“வேண்டாம் மேடம். நான் ஏற்கனவே ஸ்டேட் லெவல் ப்ளேயரதான் மேடம். விஜயிக்கு வேணும்னா நான் ட்ரெயினிங் குடுத்து என்கூட சேர்த்துக்கட்டுமா?”

“ஓஓஓ வேண்டாம் வேண்டாம். இப்போதைக்கு வேண்டாம்.நான் அவன்கிட்ட பேசிக்கிறேன். ஓகே பை”

“ஓகே தியா. பை”என்றவனை ஒரு மார்க்கமாகப பார்த்துவைத்தாள்.

“என்னாச்சு தியா?”

“மீ தியா?நான் தியா இல்லையே. நான் நதியா அரவிந்த். அச்சோ அச்சோ உனக்கு ஏதோ ஆகிட்டுப்போல. ரொம்ப பயப்படாத, இப்படி பயந்துட்டே இருந்தா இப்படித்தான் குழம்பிப்போவ. படிப்புல மட்டும் கவனம் செலுத்தினா போதாது. என்னை மாதிரி எங்க கேங்கை மாதிரி எல்லாத்துலயும் தைரியமா இருக்கணும். அப்போதான் லைப்ல சாதிக்கமுடியும் என்ன?”

அதைக்கேட்டவன் “உன்னைத்தான் தியான் கூப்பிட்டேன் நதியா? நதியாவோட பாதி தியாதானே. அதான் அப்படிக் கூப்பிட்டேன். அப்படிக்கூப்பிடக்கூடாதா தியா?”என்று தயக்கமாகக் கேட்டான்.

“அதைக்கேட்டவள் அது அது உனக்கு எப்படி இஷ்டமோ அப்படிக் கூப்பிட்டுக்கோ. ஆனால் என் பிரண்ட்ஸ் என்னை நதின்னுதான் கூப்பிடுவாங்க. ஓகே”

“ஓகே தியா”

“ஓகே பை”என்றவள் திரும்பி இரண்டுபடி இறங்கி கேண்டினுக்குப் போக நடந்தாள்.

“தியாஆஆஆ”என்று உரிமையோடு அவளை அரவிந்த் கூப்பிட்டான்.

அவளோ என்ன என்பதுபோல திரும்பிப் பார்க்கவும் “தேங்க்ஸ்”என்றான்.

“எதுக்கு?” என்று தனது கையால் செய்கை செய்து கேட்டாள்.

“அது உன் பிரண்ட்ஸ் கிட்டயிருந்து என்னை அடிவாங்கமால் காப்பாத்துனதுக்கு தியா. ரொம்ப தேங்க்ஸ்”

“இட்ஸ் ஓகே”என்று தனது கையை தம்ப்ஸ் அப் காட்டியவள் வேகமாகப் போய்விட்டாள்.

அரவிந்த் இப்போது தனது கையில் இருந்த பாலை கீழே போட்டு எட்டி உதைத்தான். அந்த பாலே கிழிந்துவிட்டது.

அப்படியே போய் அங்கே உட்கார்ந்தவன் பேக்கில் இருந்த பாட்டில் தண்ணியை எடுத்து வேகமாக குடித்து முடித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் தனது நெற்றியை தொட்டுப்பார்த்தான். 

அந்தக் காயத்திலிருந்த தையலை எடுத்தபிறகும் இன்னும் ஆறாதிருந்த காயம் கையில் தட்டுப்பட்டது. அதைத் தடவிக்கொடுத்தவாறே தூரத்தில் போகும் நதியாவையே கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தான்.

உன் மனசுல என்னதான்டா வைச்சிருக்க அரவிந்தா?

நதியா இப்போ நேராக கேண்டீனில் போய் தன்னோட கேங்க் எங்கேயிருக்கு என்று தேடினாள்.

அவங்க நாலுபேரும் அங்கதான் உட்கார்ந்து டீ குடிச்சிட்டிருந்தாங்க. அவளும் வேகமாகப் போய் அவங்க பக்கத்துல உட்கார்ந்தவள் தனக்கும் ஒரு டீ சொன்னாள்.

“ஏன்டா என்னை விட்டுட்டு வந்தீங்க. ஏன் மேல ஏன்டா உங்களுக்கு இவ்வளவு கோபம். அவனால் நமக்கு பிரச்சனை வந்திடக்கூடாதுன்னுதானே அவனை சமாதானப்படுத்துனே. அது புரிஞ்சுக்காமா ஏன்டா என்னை தனியாவிட்டுட்டு வந்தீங்க. அப்போ என் பிரண்ட்சிப் உங்களுக்கு தேவையில்லை அப்படித்தானே”என்றவள் விஜயின் கையைப் பிடித்தாள்.

அவனோ அவளது கையைத் தட்டிவிட்டான். அதில் நதியாவுக்கு முகம் ஒரு மாதிரியாகிவிட்டது. 

தினேஷ்தான் “அதுல்ல நதி அவன் உன் காதுக்கிட்ட குனிஞ்சதும்பேசினும் தப்புத்தானே. அப்போ எங்களுக்கு தூரத்துல இருந்து வேற மாதிரி தாப்பாதானே தோணும். எங்க பிரண்டை எவன் தப்பா பார்த்தாலும் நடத்தினாலும் நாங்க எப்படி சும்மா இருப்போம். அதுதான் எதுவுமே யோசிக்காமல் அவனை அடிக்க வந்துட்டோம்”

“நீங்க அடிக்க வந்ததெல்லாம் எனக்காகத்தான்அது எனக்கு புரியாமலா இருக்கும். ஆனால் தப்பே பண்ணாமல் ஒருத்தன் அடிவாங்கலாமா? நல்லவேளை அவனை நான் சமாதானப்படுத்திட்டு வந்தேன். அதுவுமில்லாமல் அங்க வேற யாரும் இந்த நேரத்துல இல்லைன்னா அதுவேற பெரிய பிரச்சனையாகி மறுபடியும் சேர்மன் வரைக்கும் போயிருக்கும்”என்று ஆசுவாபட்டுக்கொண்டாள்.

“நீ சொல்லுறதும் சரிதான். ஆனால் நீ தப்பு சரின்னு இதுவரைக்கும் பார்த்ததில்லையே நதி. நமக்குத் தோணுச்சா அடிப்போம் எவன் வந்து இதுவரைக்கும் கேட்டிருக்கான் சொல்லு”

“இதுவரைக்கும் கேட்கலை தினேஷ். ஆனால் நம்மளை மன்னிப்புகேட்கவைச்சிட்டாங்க இந்த தடவை அது ஞாபகமிருக்கா?இல்லையா?”

“இருக்கு”

“அது யாரால?”

“அரவிந்த்”

“அப்போ நான் செய்தது சரியா? தப்பா?”

“உன் பக்கம் பார்க்கும்போது சரி. ஆனால் எங்க பக்கம் பார்க்கும்போது தப்பு”

“ப்ச்ச் நான் என்ன பண்ணனும்னு நினைக்கிற. உங்களுக்காக போய் அந்த சோடாபுட்டியை அடிச்சிட்டு வரணுமா?அப்போதான் என்கிட்ட பேசுவீங்களா என்ன?”

“அப்படியெதுவும் செய்யவேண்டாம்னு சொல்லு தினேஷ். அதுதான் அவன் முன்னாடி வைச்சு நம்மளை கேவலப்படுத்திட்டாளே. அவன் அன்னைக்கு இவளை மன்னிப்பு கேட்கச்சொன்னான். அவளுக்காக நம்மளும் சேர்ந்து மன்னிப்புக் கேட்டோம். ஆனால் பாரு இப்போ அவனுக்காக நம்மளை அடிக்கவிடாமல் தடுத்திட்டாள். இவா நமக்கு பிரண்டா வேண்டாம் தினேஷ். நம்ம நாலுபேரும் மட்டும் கேங்கா இருப்போம். இவளுக்கு யாருக்கூட பிரண்ட்சிப் வைச்சிக்கணும்னு தோணுதோ அவங்கக்கூடவே பழகட்டும். புதுசா வந்திருக்கவங்களைத்தான் நம்மளைவிடவும் ரொம்ப பிடிச்சிருக்குப்போல. வாங்கடா நம்ம கிளம்புவோம்”என்றவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அவன் போனதும் மற்ற மூணுபேருமே அவன் பின்னாடியே போய்விட்டனர்.

எப்பவும் ஒன்னாவே சுத்தும் இவங்க கேங்கில் நதியா மட்டும் தனியாக உட்கார்ந்திருந்க்கவும் அங்கிருந்தவரகள் அவளையே குறுகுறுன்னு பார்க்கிற மாதிரி இருந்துச்சு. அதனால் ஒருமாதிரி இன்சல்டிங்காக உணர்ந்தவளுக்கு அழுகையாக வந்தது.

கொஞ்சநேரம் கழித்து எழுந்து வெளியே வந்தாள். அங்கே மனோஜ் கேங்க் நின்னுட்டிருக்கவும் அவர்களை முறைத்துப் பார்த்துவிட்டு தனது என்பீல்டை எடுத்தவள் நேராக அவர்களை பயமுறுத்துற மாதிரி கொண்டுபோய் நிறுத்தினாள்.

மனோஜ் விலகி போய் நின்றவன் அவளைப் பார்த்து “ஹாய் நதியா” என்று கையைக்காட்டினான்.

‘ஆஹா இருக்ககோபத்தை இவனுங்க மேல திருப்பலாம்னா இவன் நம்மளைப் பார்த்து இளிச்சு வைக்கானே. இவனுக்கு என்னாச்சு’ என்று யோசித்தவள் வண்டியை எடுத்துக்கொண்டு நேரா வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அவளது முகமே சரியில்லை.அவள் அவளாகவே இல்லை. அவளது இதயத்துக்குள் ஒருவிதமான மயக்கம் வந்திருந்தது. பிரண்ட்ஸ்கூட சண்டை ஒரு பக்கம் இந்த மயக்கம் ஒருப்பக்கம் என்று குழப்பத்துலயே இருந்தாள்.

அதனால் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட்டாள். எதுவுமே வாக்குவாதம் பண்ணலை. அப்படியே எழுந்து போய் வெளியே பால்கனியில் உள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தாள்.

அந்த ஊஞ்சல் போலவே அவளது மனசும் ஆடிக்கொண்டிருந்தது. நிறைய நிறைய யோசித்தாள்.அவளது முகமே குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை காட்டிக்கொடுத்தது.

நர்மதா வந்து அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் “என்ன டான் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு. மறுபடியும் எவனையாவது அடிச்சிட்டு வந்துட்டியா என்ன?”

“இல்லையே ஏன்?”

“சும்ம்மா கேட்டேன்”

“சும்மா கேட்கிறா ஆளா நீ?நீயெல்லாம் கடைஞ்செடுத்த களவானிடி. என்ன என்கிட்ட போட்டு வாங்கி உங்கம்மாக்கிட்ட போட்டுக்கொடுக்க ப்ளான் பண்றியா. அது இங்க நடக்காதுடி போ போ”

“அதில்ல நது. நீயும் நானும் அக்கா தங்கச்சி நமக்குள்ள என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கு. நீ எதுன்னாலும் எனக்கிட்ட சொல்லு நது நான் சொல்லுயூசன் சொல்லுறேன். நம்ம என்ன அப்படியா பழகியிருக்கோம்”

“நம்ம அப்படியொன்னும் பழகலையே நர்மதா?”

“சும்மா விளையாடாதக்கா. நீயும் நானும் அக்கா தங்கச்சி மாதிரியா பழகுறோம். உனக்கும் உன் பிரண்டஸுக்கும் சண்டைன்னு எனக்கு நல்லா தெரியும். இன்னைக்கு அவங்களை ரோட்டுல பார்த்தனா?விஜய் என்னை முறைச்சான் தெரியுமா?அதுதான் கேட்டேன்”

“உன்னை அடிக்காம விட்டானேன்னு சும்மாயிரு”

“ஓஓஓ அவன் என்னை அடிப்பானா? அடிக்கிற அவன்கையை உடைச்சு அவனோட இன்னோரு கையிலயே குடுத்திருவேன். அவனெல்லாம் ஒரு ஆளைப்பாரு. உன்கூட சண்டைன்னா என்னை அடிப்பானா என்ன?”

“என்கூட சண்டைன்னு யாரு சொன்னா?நீ என்னை படுத்துறதைப் பார்த்துதான் அவனுக்கு உன்மேல கோபமே வருது. அதனால் அவன் முன்னாடி போய் நிக்காத உன்னை கடிச்சு வைச்சிருவான் பார்த்துக்க”

“கடிப்பான் கடிப்பான் பல்லை உடைச்சிருவேன்னு சொல்லி வை. உன்கிட்ட வந்து கேட்டேன் பாரு. போடி நான் படிக்கப்போறேன்”

“போ போ போய் படிச்சு உங்கம்மா ஆசையைக் காப்பாத்து”

“அது எங்களுக்குத் தெரியும். ஒன்னு தெரியுமா பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு கூப்பிட்டிருக்காங்க. அது முடிஞ்சதும் உடனேவீட்டுக்கு வந்திடும். எனக்கு ஒரே ஜாலியா இருக்கு. இப்போ பீ.காம் முடிச்சதும் அடுத்து உன்கூடவே வந்து பாரீ யூனிவர்சிட்டில ஏதாவது நல்ல கோர்ஸா படிக்கப்போறேன். செம்ம ஜாலி”என்றுவிட்டு ஓடினாள்.

“இவா வேற வந்து வந்து நம்ம மனசை புண்ணாக்கிட்டு போறாளே. இவளை என்ன செய்யலாம்?யாருக்காவது தங்கச்சி வேணுமான்னு கேட்டு தத்துக்கொடுத்திடலாமா?”என்று புதுசா யோசனையே பண்ணிக்கொண்டாள்.

ஏற்கனவே பிரண்ட்ஸ்கூட சண்டைப்போட்டுட்டுத்தான் வந்திருந்தாள். இவா வேற நம்மை வைச்சு செஞ்சிட்டுப்போறாளே என்று எழுந்து நடந்தவளுக்கு பிரண்ட்ஸ்கூட பேசணும்போல இருந்தது.

அவனுங்ககிட்டதானே எதுன்னாலும் டிஸ்கஸ் பண்ணுவா. வேற கிளாஸ்ல நெருங்கிய நட்புன்னு யாரும் கிடையாது. 

எப்பவும் ஆம்பளை பசங்ககூட பழகுறது, அவனுங்களை தூக்கிப்போட்டு மிதிக்கிறதுன்னு ஆம்பளை பசங்க மாதிரியும் நடந்தால் யாரு தோழியா கிடைப்பா. பயந்து ஓடத்தான் செய்வாங்க. இப்போ பேசுறதுக்கு ஆளில்லை என்றதும் பைத்தியம் பிடிக்காத குறையாக புலம்பிட்டிருந்தாள்.

உடனே விஜயிக்கு போன் பண்ணி பார்த்தாள். அவனோ இவளது நம்பரை பார்த்ததும் பபனை கட் பண்ணிவிட்டான்.

“இவன் ஒரு சூனாபானா டக்கு டக்குன்னு கோபம் வந்திரும், இவனே எவா கட்டிமேய்க்க வருவாளோன்னு இருக்கு. டேய் நீயும் லவ் பண்ணு அப்போதான் என்னைய மாதிரியே பொறுமையா ம்றிடுவ” என்று யோசித்தவள் அப்போதான் உணர்ந்தாள்.

“ஐய்யோ அப்போ நான் லவ் பண்றனா?அச்சோ அரவிந்தை எனக்கு பிடிச்சுபோச்சா?அதுதான் நான் அவனைப் பார்த்து பீரீஸாகி நிக்கிறானோ?இதுதான் நம்ம பிரண்ட்ஸ் நம்மக்கூட சண்டைப்போட்டானுங்களா?”என்று அதிர்ச்சியாகி யோசித்தவள் இப்போதான் அவன் தன்னைப் பிடித்திருந்த விதத்தையும், தான் அவனை ரசித்து பார்த்ததையும் ரிவைண்ட் மோடுல கண்ணுல ஓட்டிப்பார்த்தாள்.

அப்படியே ஒருவித மோனநிலைக்கு போய் காதல் மயக்கத்தில் அரவிந்தை மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்!

ஆஹா காதல் வந்திடுச்சே!ஆசையில் ஓடிவந்தேன்னு அரவிந்தை பார்க்க ஓடிராத நதியா! உன் பிரண்டஸ் கேங்கு இதைத் தாங்கிக்கமாட்டானுங்களே!