கழிமுள்ளி நெஞ்சுக்காரி-
கழிமுள்ளி-30
ரமேஷ் அதிர்ச்சியில் நிற்பதைப் பார்த்த வெற்றிவேல்தான் “என்ன பிரின்சிபால் சார். பொண்ணுக்கு நிச்சயதார்த்ததுக்கு எங்களை வரச்சொல்லிட்டு நீங்க இப்படி அதிர்ச்சியில் நின்னா எப்படி?உங்க சொந்தக்காரங்களாம் பயந்துடமாட்டாங்களா என்ன? உட்காருங்க. அடுத்து நடக்கவேண்டியதை சீக்கிரம் நடத்துவோம். ஏற்கனவே இரண்டுபேருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜை முடிச்சிட்டோம். அப்போதானே பொண்ணுக்கு ஜப்பானுக்கு விசா எடுக்கமுடியும்னு, இனி நம்ம சொந்தங்கள் முன்னாடி நிச்சயத்தையும் கல்யாணத்தையும் முடிச்சிட்டா அவங்க வாழ்க்கையை பார்த்துப்பாங்கல”என்று அவ்வளவு கேசுவலாக பேசினார்.
அதைக்கேட்ட ரமேஷின் குடும்பத்தினர் அத்தனை பேரும் “என்ன ரெஜிஷ்டர் மேரேஜ் முடிஞ்சிட்டுதா?அப்படியா?”என்று ரமேஷையும் கீதாஞ்சலியையும் பார்த்தனர்.
அவர்களுக்கே இது அதிர்ச்சிதான். அதனால் அந்த அதிர்ச்சியோடு நதியாவைத் திரும்பிப் பார்த்தனர். அவளோ பயத்துப்போய் நர்மதாவின் பின்னாடி ஒளிந்துக்கொண்டவள்,அவர்களது முகத்தைப் பார்க்காமல் தலையை குனிந்துக்கொண்டாள்.
அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் என்பது உண்மைதான் என்று ரமேஷ்க்கு புரிந்துவிட்டது. அதனால் கோபத்தில் நதியாவை உறுத்துப்பார்த்தார். அந்த பார்வையின் அர்த்தம் ‘இப்படி எங்களை கழுத்தறுத்திட்டியே. உன்னை நாங்கள் எவ்வளவு நம்பினோமே’அப்படின்னு அது இருந்தது.
அவளுக்கு இந்தக் கூட்டத்துக்குள் என்னத்தை பேச என்றிருந்தது.
அங்கிருந்த பெரியவர் இப்போது பேசினார். அவர்தான் அரவிந்தின் அப்பா மாணிக்கவேல் “நாங்க கோயமுத்தூர்லயே பெரிய குடும்பம். எங்களுக்கு இருக்க சொத்துக்கு இவன் படிச்சிட்டு ஜப்பான்ல கம்பெனி வைக்கணும்னு எந்த அவசியமும் இல்லை. ஆனாலும் எம்.ஈ முடிச்சதும் அங்கப்போய் கம்பெனி வைச்சான். அப்புறம் அங்க பார்ட்னர்கிட்ட விட்டுட்டு இங்க எம்.பீ.ஏ படிச்சான். இப்போ பிரின்சிபால் பொண்ணையே இரண்டுமாசத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டான். எல்லாம் அவனோட விருப்பப்படிதான் நடக்குது. அதுதான் பொண்ணை முறைப்படி கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டுப்போகலாம்னு வந்திருக்கோம்”என்று உண்மையை பட்டுன்னு போட்டு உடைத்துவிட்டார்.
“ரமேஷ் சார் என்ன அமைதியாவே நிக்கிறீங்க. எங்க வீட்டு மருமகளை வரச்சொல்லுங்க. அவளை நாங்களும் பார்த்துட்டு அப்படியே தட்டு மாத்திட்டு நாளையும் குறிச்சிடலாம். நம்மளே பேசிட்டிருக்கோம், வந்திருக்கிற சொந்தங்களும் காத்திருக்காங்கள்ல”என்று வெற்றிவேல் சொன்னார்.
“அது அது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டுவரச்சொல்லுறேன்”என்றவர் கீதாஞ்சலியையும் மகள்களையும் கூட்டிட்டு உள்ளே போனார்.
நதியா தயங்கித் தயங்கி போனவள், அப்படியே பயந்துப்போய் பதுங்கி நின்றிருந்தாள்.
ரமேஷும் கீதாஞ்சலியும் அடக்கப்பட்டக் கோபத்தில் “ நதி நீ எங்கக்கிட்ட எதையாவது மறைச்சிட்டியா அரவிந்த் விசயத்துல?அவங்க ஏதோ உங்க இரண்டுபேருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்திருக்கிறதா சொல்லுறாங்களே அது உண்மையா?”என்று கேட்டார்.
ஆமா என்று தலையைத்தான் ஆட்டினார். கீதாஞ்சலி பாய்ந்து ஒரு அடிக்கொடுத்தார். அதை அவள் எதிர்பார்க்கவில்லை அப்படியே சுவரில் போய் முட்டிக்கொண்டு நின்றாள்.
அவ்வளவு வேகமாக கீதாஞ்சலி அடித்திருந்தார். அம்மாஆஆஆ என்று வலியில் கதறியவள் அப்படியே கோழிக்குஞ்சு மாதிரி நடுங்கிக்கொண்டிருந்தாள்.
அப்போது வேகாமாக உள்ளே வந்த அரவிந்த் ரமேஷை தள்ளிவிட்டு நதியாவை பிடித்து தன் கைவளைவில் நிறுத்தியவன் “ இதுக்குமேல உங்க ட்ராமாவை கொஞ்சம் நிறுத்துங்க. மகளுக்கு நல்லது பண்றேன்னு அவளோட வாழ்க்கையையும் என்னோட வாழ்க்கையும் சிதைச்சிட்டு இருக்கீங்க. உங்கக்கிட்டயிருந்து எதிர்ப்பு வரும்னு நாங்க ஒன்னும் ரெஜிஸ்டர் பண்ணிக்கலை. நான்தான் அவளை போர்ஸ் பண்ணி அவ பிரண்ட்ஸோட வெளியே போகிறமாதிரி ப்ளான் பண்ணி கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னோட சூழ்நிலையால் அவளை எங்கே இழந்திடுவோமோன்னு பயந்து யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அவ்வளவுதான். நங்க வேற எந்த ப்ளானும் பண்ணவேயில்லை. உங்கக்கிட்டயிருந்து உங்க மகளைப் பிரிக்கணும்னா அப்பவே அவளோடு வாழ்ந்திருப்பேன் புரியுதா. ஒரு அப்பாவா நீங்க என் வீட்டுக்கு வந்து பிரச்சனை பண்ணினதால்தான் இவ்வளவு நாள் விட்டு வைச்சேன். இனி என் பொண்டாட்டிய இங்க விட்டு வைக்கமாட்டேன். இப்பவே எல்லோர் முன்னாடியும் நிச்சயதார்த்தை நடத்துங்க. நம்ம பிரச்சனையை அப்புறம் பேசிக்கலாம்”என்று அடக்கப்பட்ட கோபத்தோடு அடிக்குரலில் பேசினான்.
கீதாஞ்சலி அவனது சட்டையைப் பிடித்து இழுத்தவர் “என் மகளைவிடுறா. உன்னை மாதிரி ஒரு கொலைகாரனுக்கு என் பொண்ணை நான் தரமாட்டேன். விடுறா அவளை”என்றவர் நதியாவின் கையைப்பிடித்து தன்பக்கமாக இழுத்தார்.
“அம்மாஆஆஆ. நீங்களும் அப்பாவும் சேர்ந்து நடத்தின நாடகத்துல பாதிக்கப்பட்டது நதியாதான். அப்படியிருந்தும் இன்னும் மனசாட்சி இல்லாமல் அவளோட வாழ்க்கையை மொத்தமாக அழிக்க நினைக்கிறீங்களே. நீங்கெல்லாம் என்ன அம்மா?உங்களால்தான் இவ்வளவும் நடந்திட்டிருக்கு. இதுக்குமேலயும் உங்க டிராமவை நிறுத்தலைன்னா அவ்வளவுதான். எனக்கு எல்லா விசயமும் தெரியும். நதி இதுக்குமேலயும் அப்பாவையும் அம்மாவையும் நம்பாதடி. அவங்கதான் அரவிந்தை உன்கிட்டயிருந்து பிரிஞ்சுப்போக மிரட்டினது. அவங்களாலதான் இது எல்லாமே நடந்திட்டிருக்கு. கொஞ்சமாச்சும் உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கண்ணு முழிச்சு நல்லா பாருடி”என்று திட்டினாள்.
“நர்மதா ஷ்ஷ்ஷ் சத்தம் வெளியகேட்கும். எதுன்னாலும் அவங்கெல்லாம் போனதுக்கு அப்புறம் பேசலாம்.இப்பவ நம்ம சண்டைப்போட்டுக்கிட்ட உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும்தான் குடும்பத்தாளுங்க முன்னாடி தலைக்குனிவா இருக்கும்”என்று அவளை அடக்கிப்பேசச்சொன்னான்.
நதியாவோ கீதாஞ்சலி அரவிந்தை கொலைகாரன் என்று சொன்னதையே தாங்கிக்க முடியாமல் அதிர்ச்சியில் நின்றாளென்றால், இப்போ நர்மதாவும் அரவிந்தும் பேசிக்கொண்டதை கேட்டவளுக்கு தலையே சுத்தியது.
“இங்க என்ன நடக்குது?முதல்ல அதைச் சொல்லுங்க. அவன் என்னடான்னா என்னை கல்யாணம் பண்ணிட்டான்னு அவன் வீட்டுக்குக்கூட்டிட்டுப்போக வந்திருக்கான். நர்மதா என்னடான்னா அப்பா அம்மவைக் குறை சொல்லுறா? அவங்க இப்பவும் எமோஷனலா என்னை அவங்கபக்கமா இழுக்கிறாங்க. ஆகா மொத்தம் யாருமே எனக்கு ஒரு விருப்பம் இருக்கும், எனக்கு ஒரு ஆசையிருக்கும்னு யோசிக்கவேயில்லை அப்படித்தானே. யப்பாஆஆ இனியும் நான் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியதிருக்கோ தெரியலையே கடவுளே”என்று தன் தலையில் அடித்துக்கொண்டாள்.
அவளுக்கு இப்போ பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்தது.
கீதாஞ்சலி அடித்த அடியின் வலி வேற உயிர்போனது. அப்படியே கன்னத்தைத் தடவிக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.
ரமேஷ்தான் “இங்கப்பாரு அரவிந்த் என் பிரண்ட் கார்த்திக்கேயன் குடும்பத்தை என்ன பண்ணின முதல்ல சொல்லு. அவங்கதானே நிச்சயம் பண்ண வர்றேன்னு சொன்னாங்க. நீ எப்படி இங்க வந்த?”
“பார்றா என் பொண்டாட்டியை நான் கூட்டிட்டுப்போக வந்தேன். இதுக்குமேலயும் நீங்க அவளுக்கு இன்னொருத்தனைக் கட்டி வைக்கிறதுக்கும் நிச்சயதார்த்தம் பண்றதுக்கு அனுமதிக்கமாட்டேன். உங்களுக்கு உங்க குடும்பத்தாளுங்க முன்னாடி எந்த தலைகுனிவும் வந்திடக்கூடாதுன்னுதான் என் குடும்பத்தோடு நிச்சயம் பண்றமாதிரி வந்திருக்கேன்
உங்க பிரண்டு குடும்பம் நேத்தே ப்ளைட் ஏறி அயர்லாந்துக்குப் போயிட்டாங்க. இதோப்பாருங்க நதியாவோட அப்பாங்கிறதுனாலதான் உங்களை சும்மாவிடுறேன். எதுக்கெடுத்தாலும் சைலண்டா வில்லன் வேலைப் பார்த்தீங்கன்னா அப்புறம் இனி நல்லாயிருக்காது”
“என்னடா நல்லாயிருக்காது? என்ன நல்லாயிருக்காது. உன்னோட கார்லயிருந்து இவள் இறங்கிவரும்போதே எனக்கு சந்தேகமாக இருந்தது. அதுதான் வந்ததும் கீதாஞ்சலிக்கிட்ட சொன்னேன். அவளும் கோயமுத்தூர்ல இருக்க கலெக்டர் ஆபிஸ் மூலமா உன்னைப் பத்தி விசாரிச்சா. அதுதான் உன்னோட உண்மை முகத்தைக் காண்பிச்சுது. நீ ஒரு கொலைகாரன்னும் எதுக்காக இங்க படிக்க வந்திருக்கன்னும் தெள்ளத் தெளிவா சொல்லிட்டாங்கடா. நீ எத்தனை பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் என் பொண்ணுக்கு நீ வேண்டாம். ஒரு கொலைகாரனும் ரவுடியுமா சுத்திட்டிருந்த நீ அம்மாஞ்சியா மாறி அடையாளம் தெரியாமல் இருக்கத்தானே இங்க படிக்க வந்த. அப்படிபட்டவன் என் மகளுக்கு வேண்டாம். அதுதான் நீ இங்கதான் இருக்கன்னு போட்டுக்கொடுத்தோம். நீயும் ஊருக்குப்போயிட்ட, அப்புறம் எதுக்குடா மறுபடியும் இங்க வந்த?உன்னை யாரு என் பொண்ணைத் தேடி வரச்சொன்னது?”என்று அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளினார்.
அதைக்கேட்ட நதியா “என்னது கொலைகாரனா?ரவுடியா?என்னப்பா சொல்லுறீங்க?”என்று பயந்துப்போய் கேட்டாள்.
அதைப்பார்த்த அரவிந்தக்கு அப்படியே நெஞ்சம் வெடித்தது போன்ற வலியை உணர்ந்தான். இதுக்காகத்தானே அவன் அவளைவிட்டுப் பிரிஞ்சுப்போனதே. எந்த ஒரு தருணம் தனது வாழ்க்கையில் வரக்கூடாது என்று அவன் நினைத்தானோ அதே தருணம் இப்போது வந்து நிற்கிறதே!அவனால் என்ன செய்யமுடியும்?அவளிடம் எப்படி எல்லாத்தையும் சொல்லமுடியும்?என்று விக்கித்துப்போய் நின்றான்.
“அப்பா நீங்களே ஏன் அத்தானை கொலைகாரன்னு அடிக்கடி சொல்லுறீங்க. அக்கா கேட்டு அப்படியே பயந்து அவங்களை வேண்டாம்னு சொல்லுவான்னுதானே சொல்லுறீங்க. போலீஸும் கோர்ட்டும் சொல்லாத ஒன்றை நீங்க ஏன் அடிக்கடி சொல்லிட்டிருக்கீங்க. நீங்க போட்ட நாடகமெல்லாம் முடிஞ்சு போச்சுப்பா. நதியாவை முட்டாளாக்கணும்னு நினைக்காதிங்க. அவா செய்தது ஒரே ஒரு தப்புத்தான் உங்களுக்குத் தெரிய காதலிச்சது. அதுக்காக அவளை உயிரோட சாகடிக்காதிங்க. நீங்க சும்மா இருங்க. நதி எதையும் தீர ஆராயாமல் முடிவெடுக்காத. அரவிந்த் அத்தான் அப்படியெல்லாம் இல்லை. எல்லாத்தையும் என்கிட்டயும் விஜய்கிட்டயும் சொல்லிட்டாங்க. விஜய்க்கு எல்லாம் தெரியும். அப்பாதான் உங்க காதலுக்கு பிரச்சனையா இருக்காருன்னும் அவனுக்கும் தெரியும். அதுதான் அவன் உனக்காக அப்பாக்குத் தெரியாமல் எல்லாத்தையும் செய்திட்டிருக்கான் ப்ளீஸ் நீ பயப்படாத, நீ பயபடுறளவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அப்பா உன்னை ஏமாத்தி மறுபடியும் அந்த அயர்லாந்துக்காரனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கப் பார்க்கிறாங்க, ஏம்ந்திடாத. அரவிந்த் அத்தானை நம்பு என்னை நம்பு”என்று தைரியமாக பேசினாள்.
கீதாஞ்சலியோ நர்மதாவைப் பார்த்து திட்டினார்.
“நர்மதா உனக்கு ஒன்னும் தெரியாது நீ சும்மா இரு. அவன் ஒரு கொலைகாரன். அவனை எப்படி நீ நம்புற?என்கிட்ட அவனைப் பத்தின எல்லா தகவலும் இருக்கு. நான் ஒரு சப்கெலக்டருங்கிறதை மறந்திடாத. என்கிட்ட வர்ற தகவல் எல்லாம் உண்மையானதுதானே. அப்போ இவனைப்பத்தி வந்தததும் உண்மையாகத்தானே இருக்கும். இவன் இவனோட கூடவே பழகின பிரண்டையே கொன்னுருக்கான்னு ரெக்கார்ட் இருந்துச்சு. ஆனால் அதுக்கப்புறம் இவங்க பணத்தால எல்லாத்தையும் மறைச்சுட்டாங்க. எல்லாத்தையும் விலைக்கு வாங்கிட்டாங்க. பணம் வைச்சு ஒரு கொலையையே மறைக்கிறவங்க. என் பொண்ணை கொன்னுட்டு இதேமாதிரி செய்துட்டா என்ன பண்றது. அதுதான் நான் சொல்லித்தான் அப்பா அவன்கிட்ட பேசி நதியாகிட்டயிருந்து விலகிப்போகச்சொன்னாங்க. அவனும் நிலமையைப் புரிஞ்சிக்கிட்டு விலகிப்போனான். இப்போ எதுக்கு திரும்பி வந்து பிரச்சனை பண்றான்னு கேளு?”என்று சீறினார்.
கீதாஞ்சலி இவ்வளவு கோபப்படுவாள் என்பதையே நதியாவும் நர்மதாவும் இப்போதான் முதன்முறையாகப் பார்த்தனர்.
அப்படியே அடுத்து பேச்சு வராமல் விக்கித்துப்போய் நின்றிருந்தனர்.
“இங்கப்பாருங்க மாமியாரே உங்க மகளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டது உங்களுக்கு பயந்து இல்லை. எனக்காக என் வாழ்க்கைக்காக. இரண்டுபேரும் கதாலிக்கிறோம். என் சூழ்நிலை மாறிட்டுன்னா அவளோடு வாழணும். அதுக்கு வேற எந்தத் தடையும் வரக்கூடாதுன்னுதான் அவளைக் கூட்டிட்டுப்போய் ரெஜிஸ்டர் பண்ணினேன். ஆனாலும் நீங்களும் மாமாவும் வந்துக் கேட்டதும் எதுக்காக அவக்கிட்ட ப்ரேக்கப்புன்னு சொன்னேன்னா பெத்தவங்களா உங்களுக்கு பயமிருக்கும்,அதெல்லாம் சரியானதும் நானே வந்து அவளைக் கூட்டிட்டு போயிடலாம்னுதான் அவளிடமிருந்து விலகிப்போக அவளையே கஷ்டபடுத்தினேன். ஆனால் எப்போ எனக்காக தன்னையே அழிச்சிக்க இறங்கினாளோ அப்பவே முடிவெடுத்துட்டேன். அவளே என்னை வேண்டாம்னு சொன்னாக்கூட நான் அவளைவிட்டுட்டு போகமாட்டேன்னு. இப்பவும் அதுதான் சொல்லுறேன். உங்க குடும்பங்கள் முன்னாடி உங்களைக் கேவலப்படுத்தக்கூடாதுன்னுதான் என் பொண்டாட்டிய நான் கூட்டிட்டுப்போக வந்திருக்கேன். உங்க முறைப்படியே இன்னைக்கு நிச்சயம் வைச்சிட்டு, அடுத்தவாரம் கல்யாணத்தை பண்ணி வைச்சிட்டீங்கன்னா மாமா உங்களுக்கு நல்லது”
“இல்லைன்னா? என்ன பண்ணுவ?”
“இல்லைன்னா எனக்கு நல்லது. இன்னைக்கே என் பொண்டாட்டியே கார்ல தூக்கிப்போட்டு போயிட்டேயிருப்பேன். எவனையும் மதிக்கமாட்டேன். நான் அரவிந்த்!கோயமுத்தூரையே அலறவிட்டவன். இங்கெல்லாம் அதிரவிட்றுவேன்”என்றவன் தனது சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு ரமேஷ் முன்னாடி கெத்தாக நின்றான்.
அதைக்கேட்ட ரமேஷும் கீதாஞ்சலியும் “என்ன மிரட்டுறியா?உன்னை என்ன பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். உன்கிட்ட இருந்து எங்கப்பொண்ணை எப்படி காப்பாத்தணும்னும் எனங்களுக்குத் தெரியும். அவா இஷ்டமில்லாமல் ஒரு அடிக்கூட இந்த வீட்டுல இருந்து எடுத்து வைக்கமாட்டா. உன்மேல கேஸை போட்டுவிடுவோம். முடிஞ்சுப்போன கேஸையும் தோண்டி எடுக்கவைச்சிடுவோம். அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கே தெரியும்?”
“என்ன கலெக்ட்டரம்மா மிரட்டுறீங்களா?யாரை இந்த அரவிந்தையா?அங்க நிக்கிறாளே அவா ஒருத்திக்காகத்தான் உங்களுக்கெல்லாம் இப்போ இந்த நிமிஷம்வரைக்கும் மரியாதைக்கொடுக்கிறதே!அவளோட காதலின் ஆழம்கண்டு உறைந்துப்போனவன் நான். அதானல் மட்டும்தான் இப்போவரைக்கும் நீங்க உயிரோட இருக்கீங்க. உங்களையெல்லாம் தூக்கிப்போட்டு நசுக்க எவ்வளவு நேரமாகிருக்கும். கலெக்ட்ரம்மா உங்களையெல்லாம் உயிரோட விட்டுவைச்சிருக்கிறதே இவா ஒருத்திக்காகத்தான். நீங்க சொன்னீங்கள்ல கொலைகாரன்னு அப்போ உங்களைக்கொல்ல என்னால முடியும்தானே. அதைச் செய்துட்டு என் நதியாவை நான் கூட்டிட்டுப்போகட்டுமா?”என்று கேட்டவனின் குரலிலும் கண்களிலும் தெரிந்தக் கோபத்தில் அப்படியே எல்லோரும் பயந்து அதிர்ச்சியில் நின்றுவிட்டனர்.
“அரவிந்த்த்!!!”என்று நடுங்கும் குரிலில் பயத்தில் கூப்பிட்டவளை திரும்பி பார்த்தவனின் கண்களில் அத்தனை கனிவும் காதலும் இருந்தது.
“என்ன தியாம்மாஆஆஆ”என்று கூப்பிட்டவனின் குரலில் சந்தனமும் தென்றலும் குழைத்த குளிர்ச்சியாக இருந்தது.
அவளுக்கு அவனிடம் பேசவந்ததே மறந்துப்போய் அப்படியே அவனைப் பார்த்தவாறே நின்றிருந்தாள்.அவளது கண்களில் இப்போது பயமிருந்தது. அதைக்கண்டுக்கொண்டவன் அவளிடம் நெருங்கினான்.
“வாஆஆ நமக்கு இன்னைக்கு எல்லோர் முன்னாடியும் நிச்சயதார்த்தம், அப்புறம் கல்யாணம். நம்ம குடும்பம் மொத்தமும் வந்திருக்காங்க. அவங்க வெளிய காத்திட்டிருக்காங்க தியாஆஆ”என்றவன் அவளது கையைப் பிடித்தான்.
அவள் பயந்து அவனது கையை தள்ளிவிட்டு “ப்ளீஸ் எனக்கு இங்க நீ நடந்துக்கிறது எதுவும் எனக்கு புரியல, இப்போதைக்கு எதுவும் வேண்டாமே. தயவு செய்து இப்போ இங்கிருந்து போயிடுங்க”என்றவளுக்கு கைகாலெல்லாம் உதறியது.
அதைப்பார்த்தவனின் கண்கள் ஈடுங்கியது. அவளை கூர்மையாக பார்த்தான்.
அந்தப்பார்வையில் அவளுக்கே குற்றவுணர்ச்சியாகி தலையை குனிந்துக்கொண்டாள்.
அவளது நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் “என்ன உங்கப்பா சொல்லுற மாதிரி என்னை கொலைகாரன்னு நினைச்சு வேண்டாம்னு சொல்லுறியா?”என்ற கேள்வியின் இருக்கும் அர்த்தம் அவளுக்குப் புரிந்தது.
“இல்லை என்று தலையாட்டியவள் எனக்கு கொஞ்சம் டைம் தேவை. எங்கப்பா நடந்துக்கிட்ட, நீ…நீங்க நடந்துக்கிட்ட, இப்போ கேட்ட விசயங்கள் எல்லாத்தையும் ஜீரணிக்க எனக்கு டைம் தேவை.நான் நானாக இருக்கும்போது நம்ம பேசிக்கலாம். ப்ளீஸ் என்னை விட்றுங்க”என்று திக்கித் திணறி சொன்னாள்.
அதைக்கேட்டதும் ரமேஷும் கீதாஞ்சலிக்கும் லேசான ஒரு வெற்றிப்புன்னகை உதட்டில் வந்தது. அதைப்பார்த்த அரவிந்த்தும் நக்கலாக உதட்டை வளைத்து சிரித்தவன் “அப்படியெல்லாம் உன்னைவிடமுடியாதுங்க அம்மணி. நீங்க இப்போ என்ன பண்றீங்க. நாங்க கொண்டுவந்திருக்க நிச்சயாதர்த்த புடவையை அழகாக கட்டிட்டு வந்து நிக்கிறீங்க. இல்லைன்னா இந்த கோயமுத்தூர்காரன் யாருன்னு உங்களுக்கு காட்டிபுடுவேனுங்க் அம்மணி. அதுவந்து நான் கொஞ்சம் கோவக்கார ஆளுங்க. நீங்க இப்போ அங்க வரலைன்னா இப்படியே தூக்கி தோள்லபோட்டு பேசாட்டு பேயிட்டே இருப்பேனுங்க. உங்களுக்கு சௌகரியம் எப்படிங்க அம்மணி?”என்றவன் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அவளைத் தூக்க ரெடியானான்.
அடேய் இருடா அந்தபிள்ளையே உன் புரணாத்தைக் கேட்டு பயந்துப்போய் கிடக்கு. நீ வேற அவளை மிரட்டுறியே!