தெருளோ மருளோ காதல்2

Theru2

தெருளோ மருளோ காதல்2

2 தெருளோ மருளோ காதல்??

எய்யா பெரிய நாயகம் வயது 29 ஆகி போச்சு , அந்த சின்ன கழுதையும் சமைஞ்சுட்டா, இனியும் கிடந்த அவளை பார்க்கணுமா? உனக்கு ஒரு கல்யாணம் கட்டி பொஞ்சாதி வந்தா அவ அவளை பார்த்துக்க மாட்டாளா, தங்கப் காப்பை முறுக்கி விட்டபடி நாயகம் வாசலில் வரிசையாக நின்ற கூலியாட்களுக்கு கூலி கொடுத்து கொண்டு இருந்த நாயகம் புருவத்தை உயர்த்தி அந்த கிழவியை பார்க்க கப்சிப் என்று வாயை பொத்தி கொண்டார்...

அவன் சுமந்த பாரமா?இல்லை உலகம் இப்படித்தான் என்ற வெறுப்பா , நாயகம் வளர வளர அவன் முகம் இறுக்கமும் , கோவமும் கம்பீரமும் நாலு மடங்கு கூடி போய் ஒத்த ஆளாக பணத்தில், கெளரவத்தில் முழு ஆணாக நின்றான் பெரியநாயகம் .. 

நாயகம் அவ சரியாதானடே கேட்கா, இன்னும் எத்தனை நாளைக்கு ஒத்தையாவே கிடக்க போற , நல்ல பொண்ணா பார்த்து என்று இன்னொரு பெண்மணியும் இழுக்க 

"ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னா என் கட்டை வேகாத என்ன ?"

"இல்லை ஒத்தையாவே கிடக்கியே "

"எனக்கு என்ன, என் அக்கா பெத்த ரத்தினம் இருக்கே "

"ம்க்கும் எத்தனை நாளைக்கு, அவ உனக்கு துணைக்கு இருப்பா ? "

"சாகுற வரை அவளுக்கு செய்றதே எனக்கு போதும், எனக்குன்னு உடல்துணையும் தேவையில்லை , மனத்துணையும் தேவையில்லை " என்று பணப்பெட்டியை மூடி வைத்து விட்டு நாயகம் நிமிர.. அவன் கண்ணில் இருந்த கடினம் சட்டென வெயிலில் பட்ட பனிக்கட்டி உருகுவது போல உருகியது ...

எதிரே நின்றது அவன் தமக்கை மகள் அன்றில் ரதிதேவி !!!  

ரதி போல அழகாய் வருவாள் என்று ஞானதிருஸ்டி கண்டானோ சரியான பேர் பொருத்தம் அந்த ரதிதேவியே இறங்கி வந்தது போல அழகு பெட்டகம் .. 

ரெட்டை ஜடையில் பள்ளி சீருடை பாவாடை தாவணியில் பள்ளிக்கு கிளம்பி வந்து நின்றாள், இன்னும் சில நாளில் பள்ளி படிப்பை முடிக்க போகிறாள் அவன் அக்கா மகள் அன்றில் ரதிதேவி !!! 

கணுக்காலில் கூட மாசு இல்லை என்பதை விட மாசு பட விட்டது இல்லை என்பதே சரியான வார்த்தை அவனுக்கு மகளாக பிறக்கும் மழலை கூட இத்தனை கொடுத்து வைத்திருக்குமா தெரியாது ... இவள் கொடுத்து வைத்தவள் இப்படி ஒருவன் கிடைக்க... அவன் கண்ணில் தூசி விழுந்திருக்கலாம் அவள் உள்ளங்கால் கூட தூசியே காண விட்டது இல்லை.... 

அவளை ஒரு பார்வை பார்த்தான்.. ரதிதேவி மஞ்சள் நிறத்தில் சிவந்த உதட்டில் நுனி முதல் அடி வரை அவன் வளர்ப்பில் தங்கம் போல அவன் முன் ஜொலித்தாள்... அதுவும் அவள் உதட்டுக்கு மேல இருக்கும் அழகிய மச்சம், ஊரையே சுண்டி இழுக்கும் ... அவள் அழகை ஊரே ரசித்திருக்க இவனோ கல்லையும் , மண்ணையும் பார்ப்பது போலவே தான் பார்த்து வைப்பான்... அவன் வீட்டு தோட்டத்து ரோஜா அழகு, மணக்கும் என்று தோட்டக்காரனுக்கு தெரியாதா? அதை பாதுகாப்பது மட்டுமே தோட்டக்காரன் கடமை !! 

"என்னட்டி, பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டியா? அவன் முரட்டு குரலுக்கு.. தலையை கவுந்து கொண்டே ம்ம் என்று ரதிதேவி மண்டையை ஆட்டினாள் 

"ம்ம் அங்கன இங்கன உன்ற தலை தெரிஞ்சது தொலைச்சு புடுவேன், ஒழுங்கா போனோமா வந்தோமான்னு இருக்கணும் புரியுதா ?அன்பு இருக்கும் இடத்தில் கண்டிப்பாக கடுமையும் கண்டிப்பும் இருக்கும்... அப்படித்தான் அவன்.... இப்படிதான் இருக்கணும் என்று ரதியின் பத்து வயதிலேயே அவளை தொட்டு பேசுவதை நிறுத்தி ஒதுக்கி நிறுத்தினான்... 

ம்ம் சரிங்க மாமா குரல் வெளியே வராது குனுங்கினாள்... 

"எல்லாத்துக்கும் மண்டையை மண்டையை ஆட்டு இந்தா புடி" என்று நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்ட, அதை நடுங்கிய விரலோடு வாங்கி கொண்டு மற்ற பிள்ளைகளோடு ஓடும் ரதிதேவியை மீசையை முறுக்கி கொண்டே பெரியநாயகம் பெருமூச்சு விட்டு பார்த்தான் ... 

நல்ல இடத்துல இந்த புள்ளையை சேர்த்து புடணும் , பசின்னா கூட வாயை திறந்து பேச மாட்டைக்குது அப்படியே என்ற அக்காதேன் .... சமையும் வரை மாமா மாமா என்று அவனை சுற்றி வந்த ரதியின் பார்வை மாற்றத்தை, பேச தயங்குவது ஏன் என்று அவன் அறியாது போனான்..

"ஏன்டி இன்னைக்கும் நூறு ரூபாயா? கொடுத்து வச்சவ தான் , திண்பண்டம் வாங்கவே நூறு ரூபாய் உன் மாமா தருது .. எங்களுக்கு ஐஞ்சு ரூபாய் தரவே ஆள் இல்லை போ" என்று தோழி கிண்டல் பண்ண ரதிதேவியோ, அவன் பிரத்தியேக வாசம் அடிக்கும் நூறு ரூபாய் நோட்டை மூக்கில் வைத்து ஆசையாக நுகர்ந்தாள்.... 

ம்ம் மாமா வாசம் அப்படியே வீசுது , இழுத்து விட்டு கொண்டே கஞசாவுக்கு சொக்கும் போதைக்காரி போல கண் சொக்கினாள்... தீடீரென யோசனை வந்தவளாக 

கவி ஒரு சந்தேகம் ... என்று ரதி நண்பி நோக்கி திரும்பினாள்

என்ன ரதி?? "

"இல்லை அக்கா பொண்ணுக்கு, அவுக தம்பி என்ன முறை?? 

"முறைமாமா ,தாய்மாமா

"ஓஓஓ முறைமாமாவை கல்யாணம் பண்ணிக்கலாமா? "

"எங்க அம்மாவும் அப்பாவும் கூட அப்படிதேன்.. என்ன ஏஏஏஏஏஏஏஏஏஏ கவிதா அதிர்ந்து

"அடபாவி, இப்ப ஏன் இப்படி கேட்க...

"சும்மாதேன் , ஆமா சிம் ஒன்னு வாங்கிட்டு வர சொன்னேனே வந்தியா ? 

"அதான் உனக்கு உன்ற மாமா செல்போன் வாங்கி தந்திருக்கே , அதுவும் ஆப்பிள் போன் , நாங்க எல்லாம் ஏதாவது கேட்டா விளக்குமாறு வச்சு முதுகுல அடி விழும்... ஆனா நீ வேணும்னு கேக்குறதுக்கு முன்னாடி முதல் ரகமா உன் கைக்கு வந்துருது... ம்ம் , மச்சத்தோடு பிறந்து இருக்கடி 

"ம்க்கும், மச்சத்தோட பிறக்கல , என் மாமனுக்கு அக்கா மகளா பிறந்திருக்கேன் ...

என்னவோடி, ஆனா நீ யோகக்காரிதேன், ஆமா எதுக்கு சிம் கேட்ட நீ தான் போன் வச்சிருக்கல்ல புது சிம் வச்சி என்ன பண்ண போற ? 

" ப்ச் வளவளன்னு பேசாத, வாங்கிட்டு வந்தியா இல்லையா என்று ரதி உதட்டை சுளிக்க

"வாங்கிட்டேன் என்கிட்ட மட்டும் எகிறு உன்ற மாமனை கண்டா தெறிச்சு ஓடு ;"அப்பெண் சிம்மை எடுத்து ரதி கையில் கொடுக்க .... 

"எல்லாம் புருசன் மேல உள்ள பயபக்தி தான் என்று ரதிதேவி இன்னொரு பழைய போனில் அந்த புது சிம்மை மாட்ட 

"ஏதே புருசனாஆஆஆஆஆஆஆ?

"ம்ம் திருமதி பெரிய நாயகம் எப்படி இருக்கு என் பேர் என்றாள் கொட்டைப் பாக்கு கண்ணை உருட்டி 

"கிறுக்கி கிறுக்கி, அவர் உன் குலசாமிடி !! உனக்காக வாழ்ற மனுசன் ... நீ இப்படி ஆசைபடுறது மட்டும் நாயகம் அண்ணனுக்கு தெரிஞ்சது...

"தெரியும் போது அதுக்கும் ஐடியா வச்சிருக்கேன், போ போ, நீ சின்ன புள்ளை கெட்டு போயிடுவ... நான் போய் என் மீசை மாமாவுக்கு ரூட் போடுறேன் ...என்று ரதிதேவி சிரிக்க ... அவள் கையை பிடித்த நண்பி 

"நிஜமாவே தான் அவரை லவ் பண்ணுறியா ரதி 

"லவ்வா என் உசுரே அவர்தான் அவரோட வாழத்தான் இந்த உசரே இருக்கு ... 

"மடச்சி உன்ற வயசு என்ன அவுக வயசு என்ன ?? 

"உன்ற அம்மைக்கும் உன் அய்யனுக்கும் வயசு வித்தியாசம் என்ன ??

"அது அப்ப உள்ளவுக விவரம் இல்லாம பண்ணி இருப்பாக "

"காதல்னாவே அறியாமை தான் , என் மாமா முன்னாடி வயசு , உலகம் , சமூகம் எல்லாம் பின்னுக்கு போயிடும் எனக்கு என்ற மாமன் வேணும் அம்புட்டுதேன்...

"18 வயசு அலைபாய வைக்குது "

"81 வயசுலையும் அவர் மேல பைத்தியம் பிடிச்சு தான் சுத்துவேன் .... ரதிதேவி பேச்சில் அவனோடு வாழந்தே தீருவேன் என்ற வைராக்கியம் இருந்தது ... 

அவர் உன்ன மனைவியா ஏத்துக்க மாட்டார்னு உனக்கு நல்லாவே தெரியும் ரதி.... 

"தெரியுமே 

"தெரிஞ்சும் எப்படி ஏன் எதுக்கு ? முட்டாள்தனம் பண்ணாத ரதி சொன்னா கேளு ... உன் மாமா மாதிரி ஒரு ஆள் மனசை உடைச்சுபுடாத .... பிறகு காலத்துக்கும் நீ பழிகாரி ஆகி போவ... நீ தலைகீழா நின்னாலும் அவர் உன்ன கல்யாணமோ காதலோ பண்ண மாட்டார் .... 

ரதிதேவியை தான காதலிக்க மாட்டார் , அவர் விரும்ப போற ஒருத்தி அவர் அக்கா புள்ளையா இருந்துட்டா என்ன பண்ணுவாரோ?? என்று ரதிதேவி கண்ணை சிமிட்டி கொண்டே புடுபுடு என்று அவர்களை கடந்து போன பெரிய நாயகம் புல்லட்டை கண்கள் மினுங்க பார்த்து கொண்டு போனில் அவன் நம்பரை யோவ்மீசை !! என்று பதிந்து வைத்தவள்... போனை அவனுக்கு போட, பைக்கை சட்டென நிறுத்தி பட்டன் போனை எடுத்து காதில் வைத்தான் நாயகம் ...

ஹலோ யாருங்க? அவன் முரட்டு குரலில் மயங்கி நின்றாள் மாது 

ஹலோ ஹலோ .... ப்ச் வேலை ____தி இல்லையா, காலமறை போனை போட்டு புஸ் புஸ்னு மூச்சு விட்டு கிட்டு இருக்க எவம்ல அது? ... ஹலோ ஹலோ இன்னும் கோபத்தில் நாலு நல்ல வார்த்தை போட்டு விட்டு போனை அணைத்து பாக்கெட்டில் போட ...

அய்யோ சாமி!! மூச்சுக்கே இந்த திட்டு விழுது, காதல் பேச்சு எங்கிட்டு எப்படி தொடங்க..... கொஞ்சம் பயம் இருந்தாலும் ஆசை அவள் கண்ணை ,அறிவை மறைத்து விட்டது . 

மீசையை முறுக்கியபடி எதிரே வந்தவர்களுக்கு வணக்கம் வைத்தபடி வெள்ளை வேட்டி சட்டையில் நிமிர்ந்த உடலோடு போகும் தன் மாமனை ரசித்து கொண்டு நின்றாள் ரதிதேவி..

காதல் இருந்தது காதலில் உண்மை இருந்தது சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் காதல் பற்றிய தெளிவு இல்லை காதல் அறியாமையில் காதல் அத்தியாயத்திற்குள் காலடி எடுத்து வைத்தாள் கன்னிப்புறா!!