தெருளோ மருளோ 3
Theru3
3 தெருளோ மருளோ காதல் ??
கண்ணுக்கு, எட்டும் தூரம் வரை பெரிய நாயகம் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கி போட்ட வயல்நிலங்கள், மரக்கடை, தென்னம்தோப்பு என்று பெரியநாயகம் சொத்துமதிப்பு அத்தனை பேரையும் சற்று பொறாமை கொள்ளத்தான் வைத்தது ...
பணத்தின் அருமை தெரியும் ,நேரத்தில் அருமையும் தெரியும் ,மனிதர்களின் சுயரூபம் தெரியும்.. எனவே அவனுக்கென்று ஒரு வட்டம் ,மாடு மாதிரி உழைப்பான்.. கையில் கிடைத்த சொத்துக்களை எல்லாம் தன் அக்கா மகள் ரதிதேவியின் பெயரில் வாங்கி குவிப்பான்...
"உழைப்பு உன்னோடது சம்பாத்தியம் உனக்க, அதை எதுக்கு நாளைக்கு வேற வீட்டுக்கு கல்யாணம் கட்டி போக போற அந்த புள்ள பேர்ல வாங்கி போடுற நாயகம்... நாளைக்கு பிரச்சனை வந்தா என்ன செய்வ
ப்ச், இந்த ஓட்டமும் உழைப்பும் யாருக்காக? எல்லாம் அவளுக்காக தான் , இந்த சொத்து பத்தை எல்லாம் சேர்க்கிறது அவளுக்காக தான்..
"ஏம்பா உனக்குன்னு ஒன்னும் வேண்டாமா
"எனக்குன்னு என்ன வேணும் அவ நல்லா இருந்தாலே அது எனக்கு போதும்; என்னை நம்பி என் அக்கா அவளை என் கையில குடுத்துட்டு போயிருக்கு... எனக்கு கடமை இருக்கு இல்ல" என்று அவன் வியர்வை சிந்தி உழைத்த அத்தனையும் வெகுமதி ஆக்கி போட்டு இருக்க ... அவன் தனக்காக வியர்வை சிந்துகிறானே என்பதை அறிய அறியத்தான் அவன் மீது காதல் பித்து பிடித்து சுற்றுகிறாள் அவன் ரதிதேவி ...
பெரிய பெரிய இடத்தில் இருந்து நாயகத்துக்கு வரண் வந்தது... ஆனால் அசைந்து கொடுத்தான் இல்லை ....
"அவ புருஷன் வீட்டுக்குப் போன பிறகு உனக்கு ஒரு துணை வேணும்ல... "
"அவ பெத்து தர்ற பிள்ளையை வளர்ப்பேன் அது போதும்" என்று அவளோடு தன் வாழ்க்கையை சுருக்கி கொண்ட உத்தமன் அவன் ,..
பெரிய நாயகம் தன் மரக்கடை உள்ளே புல்லட்டை நிறுத்தி விட்டு வெட்டிப்போடப்பட்டிருந்த மரங்களை பார்த்து கொண்டே உள்ளே நுழைய... அவன் இருக்கையில் மேஜை மீது காலை வைத்து ஆட்டி கொண்டு இருந்தான் முத்து..
பளீர் என்று அவன் மண்டை வாக்கில் ஒரு அடி விழ சோவாரிக்கொண்டிருந்த அவன் தலையை தடவி கொண்டே நிமிர எதிரே நாயகம் நின்றான்...
எதுக்கு கூட சுத்துதுன்னே தெரியாம ஒன்னு கூடவே சுத்தும் அப்படித்தான் இந்த முத்துப்பாண்டி ... அவன் தகப்பன் செத்து தாயும் மகனும் கடன் தொல்லை தாங்காது சாகத்தான் வேணும் என்று நின்ற போது சரி கூட மாட வந்து என்கூட இரு என்று தெரியாத்தனமா கூட்டிட்டு வந்த பாவத்துக்கு, என்ன செய்ய என்று சம்பளம் கொடுத்து வச்சிருக்கும் ஒரு வேஸ்ட் ஜந்து முத்து ...
"ஹிஹி வாங்க முதலாளி இப்பதான் வர்றியலா
"நான் வர்றது இருக்கட்டும்லே , காலையில லோடு அனுப்ப சொன்னேனே அனுப்பாம காலை விரிச்சு காத்து வாங்கிட்டு இருக்கியா... ஹோட்டல் ஆறுமுகம் வந்தானா இல்லையா??" சட்டையை கழட்டி போட்டு விட்டு அறுப்பு மிஷனை நாயகம் கையில் எடுக்க
"அது வந்து முதலாளி வந்தான் ..
"பின்ன ஏன் லோடை ஏத்தல...
"உண்மையை சொன்னேன் மரக்கட்டை வேண்டாம்னு போயிட்டார் முதலாளி , மிஷனை வைத்து பெரிய மரத்தை ரெண்டாக கிழித்த படி நாயகம் கூர்ந்து முத்துவை பார்த்து
என்ன உண்மை ?
"இந்த காலத்துல போய் மரக்கட்டை வச்சி அடுப்பு எரிக்கிறியே அண்ணன், கேஸ் வாங்கி போட்டா பத்து ரூபாய் கூட வரும்,ஆனா வேலை மிச்சம்னு ஆஆஆஆஆஆ ஏன் முதலாளி அடிக்கிதிய என்று முத்து முதுகை தடவ பல்லை நரநரத்த நாயகம்
"சும்மா கிடக்கிற விறகை அவன்ட தள்ளி காசாக்க பார்த்தா வியாபாரத்தை கெடுத்துட்டு ,பல்லை வேற காட்டுறியா ... ஒரு பைசாவுக்கு உன்னையை வச்சி உதவி இல்லை ... கறிக்கடை பாய் ஒத்திக்கு பணம் தரணும் அதை போய் கணக்கு பார்த்து வாங்கிட்டு வா போ, வந்து வாச்சிருக்கு பாரு ...
"அது வந்து முதலாளி காலையில அவனும் வந்தான் ... ஆயிரம் ரூபாய் குறையா இருக்கு அதை நாளைக்கு தர்றேன்னு சொன்னான்... நான்தான் எங்க முதலாளி கணக்குல கறார், அந்த ஆயிரம் ரூபாயையும் சேர்த்து நாளைக்கு கொண்டு வாங்கன்னு சொல்லிட்டேன்... ஏன் முதலாளி செங்கலை எடுக்கிறிய அய்யோ அய்யோ என்று அலறிக்கொண்டு ஓடிய முத்துவால் நயா பைசாவுக்கு உதவி இல்லை என்றாலும் நாயகம் கைக்குள் காலுக்குள் வந்தே கிடக்கும் விசுவாசம் கொண்ட நாய் அவன் என்று அறிந்து தான் போய் தொலை என்று விட்டு விடுவான்.... முதலாளி இங்கே வியர்க்க விறுவிறுக்க வேலை செய்ய, முத்துவோ ரோட்டில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு நின்றான்....
மதியம் வாட்டி வதைக்கும் வெயில் எல்லாம் நாயகம் உடலை வதைக்கவில்லை , ஒவ்வொருவருக்கும் ஒரு நேரப்போக்கு நாயகத்துக்கு வேலை செய்ய பிடிக்கும் , வியர்வை வடிய வடிய மரக்கட்டைகளை எல்லாம் பிளந்து அடுக்கிக் கொண்டு நின்றவன், சட்டென பின்னால் திரும்பி பார்க்க.... குடை பிடித்தபடி அவனை பார்த்துக்கொண்டு நின்றாள் ரதிதேவி!! அவளை இந்த நேரத்தில் இங்கே கண்டவன்
"என்னட்டி பள்ளிக்கூடத்துக்கு போகாம இங்க என்ன பண்ணுத, "
"இல்லங்க மாமா எக்ஸாம் முடிஞ்சிடுச்சு .... இனி ஸ்கூல் போக வேண்டாம்" அப்பாடா இனிமே வயசாகி போச்சு என்று கல்யாணத்துக்கு பேசுவார்கள்... மாமா மனசுல நுழைஞ்சு கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிட வேண்டியது தான் என்ற நப்ப ஆசையிலேயே கடைசி பரிச்சைக்கு ரதிதேவி காத்திருக்க ..அதுவும் இன்று முடிந்தது .. அத்தனை பேரும் பிரியாவிடை கொடுக்க , இவளோ ஓட்டமும் நடையுமாக மாமனை பார்க்க ஓடி வந்தாள்.. அவனோ எப்போதும் போல ஒரு பார்வை பார்த்து விட்டு ...
ஓஓஓஓ , அப்போ இனிமே பெரிய படிப்பு படிக்கணுமோ? என்று வியர்வையை துடைத்து கொண்டே வந்தவன், பெடசல் ஃபேனை ஆண் பண்ணி கடை உள்ளே நுழைந்த ரதிதேவி நோக்கி வைக்க
"என்னது பெரிய படிப்பா??? அதெல்லாம் வேணாம்ங்க மாமா... நான் படிக்கல"
"என்னது படிக்க மாட்டியா??? என்றவன் ஒற்றை உறுமல் கேட்டு வயிற்றில் அவளுக்கு புளி கரைத்து போக
"தொலைச்சு புடுவேன்ட்டி, நம்ம வீட்டுல நீயாவது நாலு எழுத்து படிச்சு வருவேன்னு பார்த்தா படிக்க மாட்டியா காலை வெட்டி புடுவேன், தமிழ்நாட்டுலையே பெரிய காலேஜ் பார்த்து சேர்த்து விடுவேன்... போய் படிக்கிற "அவள் ஆசை மண்ணா போன விரக்தியில் ரதி மலங்க மலங்க விழித்தப்படி
"இல்லைங்க மாமா அந்த படிப்பு எல்லாம் கஷ்டம் எனக்கு வராது "
" கஷ்டமா , சோத்த திங்க கஷ்டமா இருக்கா, முகத்துல முகப்பரு வந்தா மஞ்சள் தேய்ச்சு மூணு மணி நேரம் ஊற வைக்கிறதுக்கு கஷ்டமா இருக்கா, கால்ல கையில மருதாணிய வச்சுக்கிட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆட்டிகிட்டு திரிய வருத்தமா இருக்கா படிக்கிறதுக்கு மட்டும் கஷ்டமா இருக்கோ , படிக்க வைப்பேன் படிக்கிற, படிக்கணும், புரியுதா?? படார் பட் என்று பேசிவிடுவான் அதுதான் நாயகம் .... அதில் ரொம்பி கிடப்பது அத்தனையும் பாசம் என அவள் அறிவாளே....
இல்ல
என்ன இல்ல நொள்ளை , ஏன் பெலில் ஆகிடுவியோ..."
"இல்லைங்க மாமா "
"பின்ன என்ன போய் படி கண்ணு, படிப்புதேன் பொண்ணுங்களுக்கு சாமி... புருசன் கஞ்சு ஊத்துறானோ இல்லையோ படிப்பு கஞ்சு ஊத்தும் ஆத்தா " .... அவன் வாயில் இருந்து கொஞ்சல் வார்த்தை வருவது அபூர்வம் ... வந்ததும் இதுதான் சாக்கு எப்படியாவது படிப்பை தலைமுழுகி இவனோடு இருந்து விட ஆசைகொண்டு
"எனக்கு படிக்க விருப்பம் இல்லை ங்க மாமா
"வேறென்னத்துல விருப்பம் ???"மீசையை திருகி அவன் ரதியை கூர்ந்து பார்க்க
உன் மீது தீராத ஆசை, உன் மீது தீராத காதல் என்று சொல்ல முடியாது தொண்டையில் எச்சில் விழுங்கினாள்..
"சொல்லுட்டி உன்ற கிட்டதேன் கேட்டுட்டு இருக்கேன்
"இல்லை வீட்டுல இருந்து வீட்டை கவனிச்சிக்கிறேன் மாமா அதான்" இழுவைப் போட
"ஆமா இவ கவனிக்கலைன்னா வீடு நாலு கால் முளைச்சு ஓடிரும் பார் , மார்க் வந்ததும் படிக்க போற அம்புட்டுதேன்.. டேய் முத்து கரும்புச்சாறு வாங்கிட்டு வந்து இவளுக்கு கொடு குடிச்சுட்டு நடையை கட்டு என்று நாயகம் உள்ளே போய் முகத்தை கழுவ.... அவள் அருகே கிடந்த நாயகம் சட்டையை அவன் அறியாது எடுத்து முகத்தில் வைத்து புதைத்து கொண்டவள்
"ஏன் மீசை உனக்கு இந்த அக்கா மொவ மேல ஆசையே வராதா?? ஊரே என்ன பார்த்து ஜொல்லு விடுதுய்யா, ஆனா நீரு இன்னும் நான் பால்குடி புள்ளை போல பார்த்து வைக்கிற ... பாரு மாமா எனக்கு பட்டம் படிக்க எல்லாம் ஆசை இல்லை, உம்மரு மார்புல காலம் முழுக்க கிடக்கணும் அம்புட்டுதேன் ஆசை .. ஆனா என்ற ஆசையை எப்படி எங்க இருந்து சொல்லன்னு தெரியலையே, அவர் சிவந்த கண்ண பார்த்தாவே உடம்பு நடுங்குதே காதலிக்க வச்சிடுவேனா வச்சிடுவ வச்சிடுவ , முடிஞ்ச வரை ட்ரை பண்ணுவோம் , கடைசி ஆயுதமா கண்ணீர் விட்டு கதறிட வேண்டியதுதான்... ஒரு ரெண்டு வருஷம் போகட்டும் அப்பதேன் சரியா வரும் .. அது வரை மாமனை லவ்ஸா பண்ணி தள்ளுவோம் என்றவளுக்கு பேராசை வந்து அவன் சட்டைக்கு இச் இச் இச் என்று முத்தம் கொடுக்க... நாயகம் திரும்பும் சத்தம் கேட்டு சட்டையை அதன் இடத்தில் போட்டு விட்டு ரதிதேவி அங்கே மலர்ந்து கிடந்த மலர்களை ரசிக்க ஆரம்பிக்க... அவளை பார்த்து கொண்டே வந்த நாயகம்
ஏலே முத்து மல்லிகையை மொட்டா பறிச்சு தேவி கையில கொடு, முத்துவோ ஆஆ என வாயை பிளந்து ரோட்டில் போகும் பேருந்துகளை வேடிக்கை பார்க்க
இவனோட என்று தலையில் அடித்து கொண்டு
மல்லிகை மொட்டு பறிச்சு தர்றேன் வாங்கிட்டு போ ...
"சரிங்க மாமா" என்று மொட்டுகளை பார்த்து பார்த்து பறித்து வேட்டி உள்ளே போட்டு கொண்டு நின்றவனை எப்படி காதலிக்காமல் இருக்க முடியும் ...
அத்தனை மாதமும் அவன் அக்கா மகள் பூ வைக்க வேண்டும் என்று இந்த இடம் முழுவதும் ரோஜா, சாமந்தி, மல்லிகை டிசம்பர் பூ என்று அவளுக்காக தோட்டததை உருவாக்கி வைத்திருக்கிறான்... மார்க்கெட்டில் கூட பூவுக்கு பஞ்சம் வரலாம்... ஆனால் அவளுக்காக அவன் உண்டாக்கி வைத்திருக்கும் தோட்டத்தில் பூவுக்கும் , பாசத்திற்கும் எப்போதும் பஞ்சம் வராது... ஆயிரம் வேலைகள் இருந்தாலும் தினமும் அவளுக்காக பூவை பறித்து கொண்டு போய் மேஜையில் வைப்பது கடமையோ பாசமோ?? ஆனால் அவளுக்கு வளர வளர அவன் செய்கைகளில் பைத்தியம் பிடித்தது... அக்கா மகளுக்கு இத்தனை என்றால்.. அவன் மனைவிக்கு எத்தனை கிடைக்கும்?! அக்கா மகளாக இருப்பது சலித்தது மனைவியாகிவிட வேண்டும் என்ற ஆசையில் கண்கள் பள பளத்தது..
"இந்தா பத்திரமா போய் சேரு , பரிச்சை முடிஞ்சு போச்சுன்னு நான் இல்லாத நேரம் பக்கத்து வீட்டு வண்டு சிண்டுகளோட வெளியே சுத்திக்கிட்டு இருந்த , கால ஒடச்சு வீட்ல வச்சி புடுவேன்.. உன்ற ஸ்கூல் ஹெச்எம் கிட்ட போயி, உனக்கு எந்த காலேஜ்ல என்ன படிக்க வைக்கலாம்னு விவரம் கேட்டுப்புட்டு வீட்டுக்கு தாமதமாதான் வருவேன் முத்துவோட அம்மாவை கூட்டு பக்கத்துல வச்சுக்க புரியுதா?? சட்டையை மாட்டிக் கொண்டே அவளுக்கு விவரம் சொல்லிக் கொண்டிருக்க..
அவளுக்கு காது வழி எங்கே விவரம் போனது.. கண்கள் தான் வேலை செய்தது .. உரமெடுத்து நின்ற அவன் கைகள் சட்டையை மாட்டும் பொழுது திண்டு திண்டாக கூடி குறைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.,
"உன் கிட்ட தாண்டி சொல்லிக்கிட்டு இருக்கேன் புரியுதா...
"சரிங்க மாமா
கிளம்பு ...
"ம்ம் கேட் தாண்டி நடந்து போகும் ரதிதேவியை மறையும் வரை நின்று பார்த்தான்
"இப்பதான் பிறந்த மாதிரி இருந்துச்சு அதுக்குள்ளார வளர்ந்து , இன்னா அன்னான்னு பெருசாகி போச்சு, கல்யாணம் கட்டி அடுத்த வீட்டுக்கு போன பிறகு வீடு வெறுமையா ஆகி போகும்ல "பெரிய நாயகத்துக்கு தானாக ஒரு பெருமூச்சு வந்தது...
ம்ம் , நல்ல பையனா இப்பவே அலச ஆரம்பிக்கணும்.. என்று மனதில் அவளை பற்றிய யோசனைகளோடு பெரியநாயகம் நின்றான்
சிறந்தவன் கையில் அவளை பிடித்து கொடுப்பதே அவன் ஒற்றை ஆசை
இவனை விட சிறந்தவன் இந்த உலகிலேயே இல்லை இவன் கையில் மனைவியாக தவழ்வதே அவளின் ஒற்றை பேராசை !!
ஆசை வெல்லுமா? பேராசை வெல்லுமா?