தினம் தினம் 9
Thinam9

9 தினம் தினம்!!
ஒரு சப்பி மிட்டாயுக்கு ஆசைப்பட்டு சாவ போயிட்டியே அஞ்சு பைக்கில் ஏறி அமர்ந்த அஞ்சலிக்கு அப்படியே இருதயம் எல்லாம் கொதிக்க ஆரம்பித்தது ...
முதலில் எல்லாம் உட்கார்ந்து ஒவ்வொன்றுக்கும் அழுதாள் அவள் அழுகைக்கு மதிப்பு இல்லை, அவள் கூக்குரலுக்கு பதில் இல்லை... அவள் கேவலுக்கு கேவலமான பார்வைகள் தான் வந்தது? பார்த்தியா உனக்கு சமாதானம் இல்லாம ஆக்கிட்டேன் என மாமியாரும் நாத்தனார் அவளை கேவலமான ஒரு பார்வை பார்க்க.. என்ன நடந்தாலும் பரவால்லடா அழுதா பாத்திடுவோம் அந்த குட்டி சந்தோஷத்தை அவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதற்காகவே என்ன நடந்தாலும் சரிதான் தன் மனதிற்குள்ளாக ஏதாவது ஒரு கமெண்டை கொடுத்து அவளை அவளே தட்டிக் கொடுத்துக் கொண்டாள்
அது கூட இல்லை என்றால் இன்று அவள் உயிரோடு இருக்கவே முடியாது ....இவளைப் பற்றி அவள் கணவனுக்கு தெரியுமா தெரியாது .. ஆனால் அவனைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும்.. இவ்வளவு அமைதியாக இருக்கிறான் என்றால் ஊமையாக இருந்து ஏதோ பெரிதாக ஆப்பு வைக்கப் போகிறான் என்பது மட்டும் உறுதி
கடவுளே அதையும் தாங்கும் இதயத்தை கொடு என்றுதான் யோசிக்க பழகிக் கொண்டாள் ..
சரியாக சனியன் சகுடை வந்து போனில் ஆஜர் ஆகினான் ..பள்ளியிலிருந்து போன் வந்தது ..
"உங்க மகன் ஒருத்தனை அடிச்சு மூக்க உடைச்சுட்டான் ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு போறோம் வந்து என்ன ஏதுன்னு ஹெட்மாஸ்டரை பாருங்க சார் "என்று போன் வர ... இவன் திரும்பி தன் மனைவிய ஒரு பார்வை பார்த்தான் புளாயை கரைத்து விட்டது..
:என்னங்க தம்பி அப்படியெல்லாம் பண்ற ஆளு இல்ல அவசரப்பட்டுடாதீங்க, கோவப்படாதீங்க
"உன் பிள்ளை தானே அவன் பண்ணி இருப்பான்டி , திமிர் புடிச்ச நாய், இப்பவே தகப்பன் என்ன சொன்னாலும், நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு உன்ன போலவே வளர்த்து வச்சிருக்கல்ல, இதுவும் பண்ணி இருப்பா இன்னமும் பண்ணி இருப்பான்.. நாயி, இப்பவே ரவுடித்தனம் பண்ணுது இதெல்லாம் எங்க உருப்பட போகுது...
"ஐயோ கடவுளே!!! நான் பேசிய பேச்சுக்கு என் புள்ள பலியாடாக போகுதே" என்று அஞ்சலிக்கு பதறியது அவள் வேலை பார்க்கும் இடத்தில்தான் பிள்ளைகளும் படிக்கிறார்கள்
"சார் என்ன பிரச்சனை?? என்று ஹெச்எம் அறைக்குள் சத்யா உள்ளே நுழைந்தான்.... அவன் கொடுத்த மரியாதையிலேயே அஞ்சலி அவனிடம் உண்மைகளை சொல்லவில்லை என்று தெரிந்து விட திமிராக ஒரு பார்வை அஞ்சலியை பார்பார்த்தவன்
"இது ஒன்னும் முதல் தடவை கிடையாது சார்,. பல தடவை அஞ்சு மிஸ்கிட்ட உங்க மகனோட நடவடிக்கை எதுவும் சரியா இல்லைன்னு நான் சொல்லி இருக்கேன்... சொன்னேனா இல்லையான்னு கேளுங்க" என்றதும் சத்யா முறைத்த மேனிக்கு தன் மனைவியை திரும்பி பார்க்க ... அவள் தலையை குனிந்து கொண்டாள்
"போச்சு அம்புட்டு பக்கிகளும் ஒண்ணா சேர்ந்துடுச்சு இனிமே நமக்கு பால் ஊத்துறத யாராலும் தடுக்க முடியாது , உசுர் இருந்தா எனக்கு, இல்லன்னா கடவுளுக்கு "அப்போது கூட சிரிக்க முடியும் என்றால் அவளை மாதிரி ஒரு தைரியசாலி இந்த உலகத்தில் உண்டோ..
"கமிஷனர் மகன் கைய புடிச்சு ஓடச்சுருக்கான் கேட்டா வாயைத் திறக்க மாட்டேங்கிறான்... அந்த பையன் சொல்றான் இவன் பேக்குக்குள்ள சிகரெட்டை மறைச்சு வச்சிருக்கான்னு,
"என் புள்ள அப்படி எல்லாம் பண்ண மாட்டான் சார் தேவை இல்லாம என் புள்ளையை குறை பேசாதீங்க" என்று அஞ்சலி வெகுண்டு விட்டாள்..
" நீ சும்மா இரு அஞ்சலி ,அவங்க பேசிட்டு இருக்காங்க இல்ல, இடையில எதுக்கு பேசுற.. உன் மகன் செஞ்சு இருப்பாண்டி "
"ஏங்க, நீங்களே நம்ம புள்ளைய விட்டுக் கொடுத்தா எப்படி உங்களுக்கு சிலது புரியாது நான் வெளிய வந்து உங்க கிட்ட பேசுறேன்... தயவு செஞ்சு அவர் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டாதீங்க..
"உனக்கு என்னடி தெரியும் என்ன தெரியும், வாய மூடிட்டு முதல்ல நில்லு , ஆம்பளைங்க பேசுற இடத்துல உனக்கு என்னடி பேச்சு ... அஞ்சலி ஒதுங்கி நின்று கொண்டாள்
"ஹெச் எம் அஞ்சலியை புழு போல ஒரு பார்வை பார்த்தார்..
"இந்த மனுஷனுக்கு தான் நீ இவ்வளவு உண்மையாய் இருக்கியா ??என்பது போல் அவன் பார்வை அவளை இளப்பமாக நோக்கியது... சட்டை கிழிந்து விஷ்ணு அழைத்துவரப்பட்டான்
"சிகரெட் வச்சிருந்திருக்கான் அதைக் கேட்டதுக்கு நான் என்னமும் செய்வேன் உனக்கு என்னடான்னு வார்த்தை தர்க்கம் ஆகி இருக்கு ,ரெண்டு பேரும் அடிபிடி போட்டு இருக்காங்க ... இவன் கோபத்துல அவன புடிச்சி அடிச்சிருக்கான், இது ஒன்னும் முதல் தடவை கிடையாது சார், பல தடவை இப்படி மூர்க்கத்தனமாக ஒவ்வொருத்தரையும் அடிக்கிறான் ... அஞ்சலி மிஸ் இங்க வேலை பார்க்கிறதுனால தான் என்ன செய்யன்னு உங்க மகன அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டியது இருக்கு இதுவே தொடர்ந்தா இனி சரி வராது ... அஞ்சலி மிஸ் கிட்ட சொன்னா நான் பார்த்துக்கிறேன் ப்ளீஸ் சார் அவர்கிட்ட சொல்லிடாதீங்கன்னு அழாத குறையா கெஞ்சுறாங்க.... ஆனா உங்க மகன் சொல்பேச்சு கேட்கிறதே இல்ல.. படிப்பிலும் சுமார் ஒழுக்கத்துல சுத்தம் என்றதும் அத்தனை பேரும் முன்னால் வைத்து தன் மகனை சப் என்று சத்யா அறைய ஆரம்பித்து விட
அப்பா என்று அவன் எதோ பேச வாய் எடுக்க அவன் உச்சி முடியை பிடித்து ஆட்டிய சத்யா
"அம்மாவுக்கும் மகனுக்கும் கொழுப்பெடுத்து திரியுறீங்களாடா, திங்கிறது தூங்குறது எல்லாம் என் பணத்துல.. ஆனா கொழுப்பு மட்டும் தொண்டை வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் அடைச்சு கிடக்குது, இல்ல ... இந்த ஸ்கூல்ல பீஸ் கட்ட நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு உனக்கு தெரியுமாடா... உங்களையெல்லாம் வளக்குறதுக்கு நான் எவ்வளவு பாடுபடுறேன்னு தெரியுமாடா.. ஆனா இதெல்லாம் உங்களுக்கு தெரியாது, உங்கள ஒன்னு சொன்னதும் உங்களுக்கு அப்படியே பொத்துக்கிட்டு வந்துருது இல்ல.... இந்த வயசுல உனக்கு என்னடா அடிபிடி சண்டை போட வேண்டிய வேலை இருக்கு... வந்தோமா , படிச்சோமா , பாஸ் பண்ணினோமான்னு இல்ல, ரவுடித்தனம் பண்றியா பொத்து பொத்தென பிள்ளையை அடிக்க ஆரம்பிக்க , அஞ்சலி இதற்கு மேல் நிற்க முடியாமல் ஓடி வந்து தன் கணவனை தள்ளி விட்டுவிட்டு பிள்ளையை மறைத்தார் போல் நின்று கொண்டவள்
"அவன் என்ன சொல்றான்னுதான் கேளுங்களேன் ஏன் இப்படி புள்ளையை இத்தனை பேர் முன்னாடி அவமானப்படுத்துறீங்க ..
"அவமானப் படுத்துறனா நானா அவமானப்படுத்துறேன், அவன் தாண்டி அவமானப்படுத்துறான், தகப்பன் புள்ளைய தண்டிக்க கூட கூடாதா, டேய் நீ பண்றது தப்புன்னு சொல்ல கூட கூடாதா ...
"வீடடுல போய் கேளுங்கன்னு தான் சொல்றேன்
"சரி சார் கோபப்படாதீங்க இன்னொரு தடவை இப்படி நடந்தா பாத்துக்கலாம் , வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்ட பார்த்தார்..
எப்படியும் இன்று நடந்த விஷயத்தில் அஞ்சலி ஏதாவது செய்வாள் அதற்கு முன் அவளை குற்றப்படுத்தி விட , அவள் சொல்வது எல்லாம் பொய் தன் மீது வஞ்சம் வைத்து இப்படி எல்லாம் பேசுகிறாள் என்று அவள் பக்கம் திசை திருப்ப பிளான் செய்து அவள் மகனை மாட்டி விட்டு விட்டார் எங்கோ வைத்த கன்னிவெடியில் அஞ்சலி மகன் மாட்டிக் கொண்டான்..
"ரொம்ப நன்றி சார் இந்த ஒரு வாட்டியும் எனக்காக மன்னிப்பு கொடுங்க , இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டான்..
"ம்ம் சரி சார், சத்யா சாரை பற்றி எங்களுக்கு தெரியாதா எல்லாத்துலயும் பெர்ஃபெக்ட்டா இருப்பீங்களே அதோட அஞ்சலி மிஸ் சொல்லவே வேண்டாம், என்ன கொஞ்சம் பிள்ளைங்க மேல அதிக பாசம் பாசம்... பாசம் வைக்கிறது தப்பு இல்ல சத்யா சார் , நாளைக்கு அதுவே புள்ளைங்க எதிர்காலத்தை கெடுத்து விடக்கூடாது பாருங்க கொஞ்சம் புள்ளைங்கள கண்டிச்சு வைங்க.. அப்படியே பிள்ளைங்களுக்கு அதிகமா செல்லம் கொடுக்கக் கூடாதுன்னு மேடம் கிட்ட சொல்லிடுங்க சரி சார் பாத்துக்கோங்க .. இந்த பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்... உங்களுக்காக இது கூட பண்ண மாட்டேனா" என்ற பிரின்ஸ்பலை நன்றியோடு பார்த்த சத்யா
"ரொம்ப நன்றி சார் என்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தான்
விஷ்ணு தாயின் மடியில் படுத்து கிடக்க மங்களத்திடம் விஷயத்தை மகன் அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டான்.
"எனக்கு தெரியும்டா, இவன் கிரிக்கெட்டு கிரிக்கெட்டுன்னு மட்டையை தூக்கிக்கிட்டு வெளியே போகும்போதே நெனச்சேன்.. இப்படி விளங்காமத்தான் போவான்னு.... ஏதாவது நாம சொன்னோம்னா என் புள்ளைய மட்டும் இவளுக்கு ஆக மாட்டேங்குதுன்னு, உன் பொண்டாட்டி முகத்தை முகத்தை தூக்குவா... பார்த்தியா எப்படி கேவலப்பட்டு வந்து நிற்கிறான்னு, இந்த வயசிலேயே சிகரெட் , கடவுளே இவையெல்லாம் எப்படிடா உருப்படப்போறான்... உனக்கு இப்படி புள்ளையா , என் பிள்ளைக்கு விரலை வாயில் கொடுத்தா கூட கடிக்க தெரியாதே இத்தனை வயசு ஆகுது ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் உனக்கு உண்டா? எல்லாம் உன் பொண்டாட்டிய சொல்லனும்டா, நீ படுற கஷ்டத்தை ஒரு நாளாவது உன் பிள்ளைகள் கிட்ட சொல்லி இருக்காளா பாத்தியா,குடும்ப கஷ்டம் தெரிஞ்ச பிள்ளைகளா இருந்திருந்தா இப்படி எல்லாம் பண்ணுமா,
"அதை ஏம்மா பிள்ளைங்க கிட்ட சொல்ல போறா, அவளுக்கு நான் படுற கஷ்டமே புரிய மாட்டேங்குதே என்னவோ நான் அப்படியே கோடி கோடியா சம்பாதிக்கிறவன் மாதிரியும் , இவளுக்கு கொடுக்காம வஞ்சனை பண்ற மாதிரியும்ல அவ முகத்தை வைக்கிறா ... அம்மையாருக்கு நம்மள விட அவங்க ஒரு படி மேலன்னு அழுத்தம், அதோட அவ நகையை எல்லாம் வாங்கி தானே நாம தொழில் எல்லாம் தொடங்கி இருக்கோம்.. நீ என்னடா என்ன பேசுறதுன்னு ஒரு நக்கல் பார்வை மனசுக்குள்ள நம்மள எல்லாம் எப்படி பேசுவா தெரியுமா ... எல்லாம் தெரியாதுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கா , இவ வண்டவாளத்தை எல்லாம் எடுத்து விட்டா சந்தி சிரிச்சி போகும்.. சரி கட்டிட்டோம் குட்டையோ நெட்டையோ அனுசரிச்சு வாழ்வோம்னு நினைச்சுதான் நானும் பொறுத்து பொறுத்து போய்கிட்டு இருக்கேன் ... இங்க பாரு அஞ்சு இன்னொரு வாட்டி உன் மகனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்தேன்னு வச்சுக்கோ பொண்டாட்டின்னு பார்க்க மாட்டேன்... அப்புறம் ஏன் முடிவு வேற மாதிரி இருக்கும்...
தன் மகன் தலையை கோதிக் கொண்டே அமைதியாக இருந்த அஞ்சலி தலையை தூக்கி தன் புருஷனை பார்த்தாள்
யாரு ராசா நீயா அனுசரிச்சு போற ,அனுசரிச்சு போற மூஞ்சிய பாப்போமே உன் தாய் தங்கை இவர்களுக்காக உன்னையே நம்பி இருக்கும் உறவுகளை அடித்து உதைத்து காயப்படுத்தும் உனக்கு பெயரா ஆண் ? இதுக்கு நீ குடிச்சிட்டு கூத்தியா வைத்திருந்தா கூட பரவாயில்லைடா உன்னை நேசிக்கும் உறவுகளை மதிக்கத் தெரியாத நீ குடிகாரனை விட பெரிய போதைக்காரன்.. என்று நினைத்தவள் பதில் எதுவும் பேசாது எழும்பி அறைக்குள் மகனை அழைத்து கொண்டு போய்விட்டாள்...
விஷ்ணு
நான் எதுவும் செய்யலம்மா பாவமாக தாயை எட்டிப் பார்த்தான்
" நான் உன்கிட்ட செஞ்சியான்னு கேட்கவே இல்லையே தம்பி, எனக்கு தெரியும் என் பிள்ளையை நான் எப்படி வளர்த்து இருக்கேன்னு, என் பிள்ளை இதையெல்லாம் தொட்டு கூட பாக்க மாட்டான்னு , இந்த அம்மாவுக்கு தெரியாதாடா என்றதும் தாயை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்..
ஐயோ நான் தான் இந்த குடும்பத்தில் கிடந்து அவமானப்படுகிறேன் என்றால், என் சந்ததியும் அல்லவா அவமானப்படுகிறது.. பெத்த வயிறு வலித்தது
"என்னடா ஆச்சு
"திடீர்னு ஹெச்எம் எங்க கிளாஸுக்கு செக்கிங் வந்தாரு. .. அந்த டேனி என் பேக்ல இருந்து சிகரெட் பாக்கெட் எடுத்து கொடுத்தான் .. சத்தியமா, அது எப்படி என் பேக்குக்குள்ள வந்துச்சுன்னே எனக்கு தெரியாதும்மா ... டேனி என்ன அசிங்கமா பேசினான் கோவம் வந்து அடிச்சிட்டேன் , அவனும் அடிச்சான் நானும் அடிச்சேன்ம்மா, என்னை மட்டும் தப்புன்னு சொல்றாங்க,
"விடு விடு
"அப்பா ஏன் எதுக்குன்னு கூட என்கிட்ட கேட்காம அத்தனை பேரும் முன்னாடியும் அடிச்சிட்டார் நாளைக்கு எப்படிம்மா நான் ஸ்கூலுக்கு போவேன்..
இவளுக்கு அவமானம் பழகியது, ஆனால் பிள்ளைகளுக்கு புதிதே.. பரிதவித்து போய் தன் பிள்ளையை பார்த்தாள்
அம்மாவுக்காக இந்த ஒரு தடவை மன்னிச்சிடு தம்பி இனி இப்படி ஆகாது விஷ்ணு அமைதியாக படுக்கையில் போய் படுத்து கொண்டான்... ஆனால் எப்போதும் அறைக்குள் நடந்ததை நினைத்து கண்ணீர் வடிக்கும் அஞ்சலி.. வெகு நேரமாக தங்கள் திருமண போட்டோவை வெறித்து பார்த்து கொண்டே இருந்தாள்.. அந்த கண்ணில் அத்தனையும் வெறுமை மட்டுமே
பதினாறு வருட திருமண வாழ்க்கை பலன் என்ன ?? பூஜ்ஜியம்!! அவள் விட்டு கொடுத்து போனதின் சாராம்சம் என் புள்ளைக்கு தகப்பன் வேணும் அவள் முடிவை அவள் எடுக்க உரிமை உண்டு... ஆனால் பிள்ளைகள் முடிவை எடுக்க அவளுக்கு உரிமை இல்லையே, நாளை என் அப்பா கூட இருந்திருந்தா எங்களுக்கு இந்த நிலமை வந்திருக்காது, எங்கள அப்பாவை விட்டு பிரிச்சிட்டீங்க நீங்க கொஞ்சம் அனுசரித்து போயிருந்தா குடும்பமா இருந்திருக்கலாம் என்று பிள்ளைகள் ஏங்கி நின்று விடுமோ என்று தான் சகிப்பதும் பொறுப்பதும்..
சேதம் நம்மோடு போகும் வரை பொருத்து இருக்கலாம் , சேதம் நம் பிள்ளைகளுக்கும் வரும் எனில் நிற்க!! கவனிக்க !!சாட்டை எடுத்து விளாசி விடுக....
பொறுத்தார் பூமி ஆள்வார்
ஆனால் அதற்கும் ஒரு எல்லை மட்டுமே
பொறுமையை தாண்டும் போது ரெளத்திரம் பழகி விடுவது தவறு இல்லை ...