தினம் தினம் 10

Thinam10

தினம் தினம் 10

10 தினம் தினம் !!

மாலை தாண்டி இரவு வந்தது ...

அஞ்சலி காப்பி போட்டு கொடு வெளியே இருந்து சத்யா குரல் வந்தது பதிலே போக வில்லை.. 

யாழி அம்மாவை காப்பி போட்டு தர சொல்லு மகளை அனுப்பி விட சுவற்றில போட்ட பந்து போல மகள் வந்து ..

"அம்மா உம்முன்னே இருக்கு டேடி பேச மாட்டைக்குது... சண்டை போட்டீங்களா 

"ப்ச் அதெல்லாம் ஒன்னு இல்லை யூனிபார்ம் கழட்டு 

"அம்மாதான் கழட்டி விடும் டேடி ... அவனே கழட்டி வி்ட்டு வேறு உடை மாற்றி விட்டான் ...

"அஞ்சு அஞ்சு காப்பி கொடு கடைக்கு போகணும் ம்ஹூம் பதில் இல்லை .... 

 

"பார்த்தியா சத்யா கொழுப்பு எடுத்தவள , இரு நான் போட்டு தர்றேன்... நீ வர்றதுக்கு முன்ன என் மகனை சீரும் சிறப்புமா நான்தான் வளர்த்தேன்..பெருசா இவதான் , இந்த குடும்பத்தை தலையில தூக்கி வச்சு சுமந்த மாதிரி ரொம்ப பண்ணிக்கிட்டு இருக்கா.. இவளுக்கு எப்பவுமே என் மகள் கரிச்சு கொட்டணும் , இவளால தான் என் மகளுக்கு இத்தனை வருஷம் ஆகியும் பிள்ளை தணிக்காம இருந்துச்சு... இப்போ இவ கண்ணு பட்டு என் புள்ளைக்கு எதுவும் ஆகிடுமோன்னு பயமா இருக்கு .. கடவுளே எங்க குடும்பத்தை இவகிட்ட இருந்து காப்பாத்துப்பா , 

"அம்மா நீ வேற புலம்பிக்கிட்டு இருக்காத , ஏண்டா வீட்டுக்கு வர்றோம்னு இருக்கு , வீட்டுக்குள்ள வந்தாவே மாத்தி மாத்தி ஏதாவது பேசிக்கிட்டே இருக்கீங்க... மனுசன் நிம்மதியா இருக்கணும்னு நினைக்கிறீங்களா இல்லையா? 

"நான் என்னடா செஞ்சேன், 

"நீ தயவு செஞ்சு பேசாம போய் காபி போட்டு எடுத்துட்டு வாம்மா... எல்லாம் காயத்ரியால வந்துச்சு, அவ பாட்டுக்கு அது வேணும் இது வேணும்னு லிஸ்ட் போட்டு கொடுத்துட்டு போயிட்டா நான் இவகிட்ட காச கேட்க போய் , இவ நான் என்னமோ இவள கொள்ள அடிச்சிட்டு ஓடுறவன் மாதிரி பேசி அந்த கோவத்த அவன் மேல காட்டிட்டேன்..

"அவன் செஞ்சதும் தப்பு தானே சத்யா... நீ எல்லாரையும் வெகுளி மாதிரி நம்பிகிட்டே இரு, அதனாலதான் அவ ஏறி நின்னு மிதிக்கிறா இதெல்லாம் சொன்னா அம்மாக்காரி குடும்பத்தை கெடுத்து விடுறான்னு அதுக்கும் என் மேல பழியை தூக்கி போடுவா.. எனக்கு என்ன வந்தது, உங்க வீட்டு விஷயம்.. புருஷன் பொண்டாட்டி பிரச்சினை நீங்களே பாத்துக்கோங்கப்பா, இந்த காப்பி குடி உன் மனசு சங்கடப்பட்டு கிடக்குமேன்னு எனக்கு தான் பாரமா இருக்கு , யாரு உன் மனச பத்தி யோசிக்கிறா எனக்குத்தான் என் புள்ள கஷ்டப்படுறானேன்னு கிடந்து நெதமும் அடிச்சுக்கிது .... சத்யா அமைதியாக காப்பியை குடித்து விட்டு மகளை அழைத்து கொண்டு கடையில் தன்னோடு வைத்து கொண்டான் ..

அறையை விட்டு அஞ்சலி வெளியே வரவே இல்லை ...மகன் அருகேயே அமர்ந்து இருந்தாள்.. இரவு விளக்கு கூட அறையில் போடாமல் இருட்டாக கிடந்தது ... 

கடையில சாப்பாடு வாங்கி வச்சிருக்கேன், அவனை எழும்பி சாப்பிட சொல்லு "என்று சத்யா அறைக்குள் வந்தான்.. அப்போது சத்தம் இல்லை ... 

"ப்ச் நான் ஏதோ தப்பு பண்ணின மாதிரி ரெண்டு பேரும் இருக்கீங்க, குடும்ப நிலமை புரிஞ்சு நடந்துக்கோங்கன்னு சொன்னது தப்பா .... அஞ்சலி சாப்பாடு எடுத்து வை அஞ்சலி உன்னைத்தான்... என்று சத்யா வந்து அவள் தோளில் தட்ட அண்ணாந்து அவனை பார்த்த அஞ்சலி 

"உங்களுக்கு நாங்க வேணுமா வேண்டாமா??" என்று அஞ்சலி அழுத்தமாக சத்யாவை பார்த்தாள் ...

என்ன பேச்சு இது ?

"உங்களுக்கு நானும் என் பிள்ளைகளும் வேணுமா வேண்டாமான்னு மட்டும் சொல்லுங்க , 

"ப்ச் 

"கிடைக்காத ஒன்னுக்காக நான் இந்த அடிபாடு படணும்னு அவசியம் இல்லை "

"ப்ச் எரிச்சல கிளப்பாத போய் சாப்பிடு  

"உங்களுக்கு நான் வேணுமா இல்லை உங்க அம்மா தங்கச்சி வேணுமா முடிவை சொல்லுங்க, அப்பறம் சோத்துல கை வைக்கணுமா வேண்டாமான்னு யோசிக்கிறேன் 

"மெண்டல் போல பேசாத அஞ்சு , எப்பவும் போல நான் கோவத்துல பேசுறதுதான் நீயும் புரிஞ்சிக்காம பேசினா எப்படி ? 

"யார் நான் புரிஞ்சிக்கலையா... நீங்க என்னைக்காவது என்ன புரிஞ்சிக்க முயற்சி பண்ணி இருக்கீங்களா? கோவத்துல பேசினீங்களா அதே கோவத்துல நான் பேசினா என்ன விட்டு இருப்பீங்களா? இதே இடத்துல வெட்டி முக்கி இருக்க மாட்டீங்க, கோபம் கூட ஆண்களுக்கு வந்தா தான் சரி பொண்ணுக்கு வந்தா அது கூட தப்புதான் இல்ல.. 

"எரிச்சல் கிளப்பாத அஞ்சு , பேசாம வாயை மூடு இல்லை அறை வாங்கி செத்துடுவ 

"நாலு எட்டு வச்சா போலீஸ் ஸ்டேஷன், ஏழு எட்டு வச்சா வக்கீல் ஆபிஸ்" என்ற அஞ்சலியை சத்யா கண்களை சுருக்கி பார்க்க 

"எதுவும் தெரியாம இல்லைங்க , உனக்கு தெரிஞ்சதை நீ காட்டு எனக்கு தெரிஞ்சது எல்லாம் நான் காட்டுறேனு நான் நின்னா இது வீடா இருக்காது , நீங்க அறிவாளியா இருக்க நான் முட்டாள் ஆகிகிட்டேன் அவ்வளவு தான் .. பொறுத்து போறதுனால நான் உங்களுக்கு இளப்பம் ஆகிட்டேன்ல , பிள்ளை என்ன செஞ்சான்னு கூட உங்களுக்கு கேட்க மனசு வரல..என் பிள்ளையை மாட்டை போல அடிக்கீறீங்க, அந்த பொம்பள என்னவோ என் புள்ளை தீவிரவாதி போல பேசுது 

"ஏய் அஞ்சு ஊஊஊஊ .... என்டி பொம்பள அது இதுன்னு சொல்ற "

"அப்படிதான் சொல்வேன் கெட்டவார்த்தை போட்டு பழக்கம் இல்லை , இல்ல அதையும் சொல்வேன் .. வரதட்சணை கொடுமை ப படுத்துறீங்கன்னு மொத கேஸ் உங்க அம்மா மேல தான் கொடுப்பேன்... கொடுக்கவா? நாத்தியார் கொடுமைன்னு உங்க தங்கச்சி மேல ரெண்டாவது கம்பளைண்ட் கொடுக்கவா 

அஞ்சு இஇஇஇ

கத்தாதீங்க நீங்க கேட்டது கிடைக்கலன்ன உடனே உங்களுக்கு கோவம் வருதோ நான் நினைசசது எதுவும் இத்தனை வருசத்துல கிடைச்சதே இல்லை அப்போ எனக்கு எவ்வளவு கோவம் தேங்கி கிடக்கும் ஹான் ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இதோ என்னை கொன்னுட்டு சிரிச்சீங்க இப்போ என் பிள்ளைங்க அதுக்கு நான் விட மாட்டேன் ... 

என்ன உங்களுக்கு வேணும் பணமா? அப்போ நீங்களே எல்லாம்னு வாழ்ந்த நான் என்ன செய்யணும்ங்க "

"ப்ச் எதுக்கு இப்ப ஓவர் ரியாக்ட் பண்ற அஞ்சு கடனா தான கேட்டேன் ... 

"இது ஓவர் ரியாக்ட் இல்லங்க, என் நம்பிக்கை உடைஞ்சு நிக்கிறேன் ... பயமா இருக்கு, இதுக்கா நான் உங்ககிட்ட பேச்சையும் ஏச்சையும் வாங்கி கூட்டுப்புழுவா வாழ்ந்தேன் ... 

"இப்ப என்ன செய்ய சொல்ற? 

"உங்களுக்கு நாங்க வேணும்னா சொல்லுங்க இங்க இருக்கேன் 

"இல்லைன்னா எங்க போக போறீங்க மேடம் ...என்றவன் பேச்சில் அதீத நக்கல் இருந்தது 

எங்க போய்விடுவாள் என்று தெரிந்து தானே தினம் தினம் பாடாய் படுத்து எடுக்கிறார்கள் 

"எங்கேயும் போக வழி இல்லைதான் ஆனா உங்கள நிம்மதி இல்லாம ஆக்க வழி உண்டுங்க சார் ... 

"என்ன சாக போறியா ? 

"நான் செத்தா சும்மா சாக மாட்டேன் சார்,. என் சாவுக்கு நீங்களும் உங்க அம்மா தங்கச்சி தான் காரணம்னு வீடியோ எடுத்து கமிஷ்னர் ஆபிஸூக்கு அனுப்பி விட்டுட்டு தான் சாவேன் ...அறை வாசலில் மறைந்து நின்று காதை வைத்து கேட்டு கொண்டு நின்ற மங்களம் 

"ஆத்தாடி !!!"என்று நெஞ்சில் கை வைக்க 

"கிறுக்கி என்னடி பேச்சு இது ... வாழ்ற வீட்டுல சாவு அது இதுன்னு

"நான் பேசல நீங்க பேச வைக்கறீங்க, இன்னைக்கு பேசலைன்னா சரி வராதுன்னு தான் பேசுறேன் ... 

"பிளாக்மெயில் பண்றியா ? 

"ம்ஹூம் என்ன வாழ விடாத நீங்க ஒருத்தரும் வாழ கூடாதுங்கிற அளவு பட்டுட்டேன்... சும்மா பேசுறான்னு நினைக்காதீங்க .. இத்தனை வருட வேதனை உள்ள கிடந்து அழுத்துது சொன்னதை செஞ்சுடுவேன் ... எரிமலை எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும் எப்போது வெடிக்கும் எப்படி வெடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது அப்படியே பெண்ணும்!! 

"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலங்க நாங்க வேணுமா வேண்டாமா? சொல்லாம கொள்ளாம கழுத்த அறுக்கிறது ஒரு மெத்தட்.. இப்படி இது நம்ம குடும்பம் , நாமதான் செயணும்னு சொல்லி சொல்லி கழுத்தை அறுக்கிறது இன்னொரு மெத்தட்.. 

"சரி சரி விடு கோவத்துல ஏதோ தெரியாம பேசிட்டேன்.... நீ வேணுங்கிறதுனால தான் விட்டுக் கொடுத்து போறேன் ... தப்பு செஞ்சது நாம ரெண்டு பேரும் தான் நீயும் அப்படி பேசி இருக்க கூடாது நானும் அப்படி பேசி இருக்க கூடாது போதுமா கொஞ்சம் சாப்பாடு எடுத்து வை... என்னடி வா, நான் இன்னிக்கா உன்னை அப்படி பேசுறேன் எப்போதும் பேசதானே செய்றேன்.... அம்மா வயசானவங்க , தங்கச்சி அடுத்த வீட்டுக்கு வாழ போனவ, அவங்க கிட்ட எல்லாம் என் கோபத்தை காட்ட முடியுமா எனக்கானவ நீதானடி உன்கிட்ட தான காட்ட முடியும்....பழமாக பேசி பிட்டை போட்டு விட்டான்... 

என் அம்மா வயசானவங்க என் தங்கச்சி வேற வீட்டுக்கு வாழ போனவ அப்படின்னா உங்க வீட்டுக்கு வாழ வந்த நான் யாரு? எனக்கு என்ன மதிப்பு நீங்க கொடுத்தீங்க ? என் புள்ள செஞ்சது தப்பா சரியானு கூட கேட்க முடியாத அளவுக்கு உங்களுக்கு கோபம் வருதோ.... 

இப்ப பைனலா நான் என்னதான்டி பண்ணணும் பிசினஸ் டென்சன் ஒரு பக்கம் , அம்மா தங்கச்சி ஒரு பக்கம் நீயும் பிள்ளைகளும் ஒருபக்கம் எதை எல்லாம் தாங்குறது , பாரு டென்சன் தாங்காம ஒரு நாள் சாவ போறேன் ... 

உங்களுக்கு முன்ன நான் செத்துருவேன் போல.. நல்லா கேட்டுக்கோங்க .. இனிமே உங்க அம்மாவுக்கு என்னால எதுவும் செய்ய முடியாது.. 

அவங்க என்னடி செஞ்சாங்க... நாம செய்யாம யார் செய்வா 

ஏன் என் அப்பா அம்மா ரெண்டு பிள்ளையை பெத்து கட்டி கொடுத்துட்டு சும்மா இருக்கல இவங்க மட்டும் நொந்து பெத்தவங்க அவங்க நேப்போக்குக்கு பெத்தாங்களோ.... 

அப்பா இருந்தா நான் ஏன்டி அவங்களுக்கு அனுசரிச்சு போக போறேன் தனியா நிக்கிறாங்க அஞ்சு புரிஞ்சுக்கோ,  

உங்களுக்கு சொன்னாலும் புரியாது பட்டாலும் தெரியாது... இது எல்லாத்துக்கும் காரணம் அந்த பொம்பள தான்

அஞ்சுஊஊஊஊஊ அவ்வளவு தான் லிமிட், வாயை மூடு

அஞ்சு பஞ்சு எல்லாம் அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரை,, உங்க அம்மாவுக்கு என்னால ஒன்னும் செய்ய முடியாது ... உங்க தங்கச்சிக்கு சீர் செய்யணும்னா உங்க அம்மா பேர்ல ஒரு இடம் இருக்குல்ல, அதை வித்துக் கொடுக்க சொல்லுங்க.... என் புருஷன் சம்பாத்தியத்தில ஒரு ரூபா உங்க தங்கச்சிக்கு போகக்கூடாது.... பொம்பள புள்ளைய பெத்து வச்சிருக்க நான் இளிச்ச வாயா? என்ன கொடுமக்காரின்னே சொல்லிட்டு போங்க , இல்ல வயசானவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதவளாவே இருந்துட்டு போறேன்... எல்லா அவப்பெயரும் நான் வாங்கிக்கிறேன்... நீங்களும் வேணும்னா இன்னும் நாலு பட்டப்பெயர் கொடுத்துக்கோங்க ... ஆனா இனிமே நான் யாருக்கும் வளைஞ்சு போக மாட்டேன் .... இதுக்கு எல்லாம் சம்மதம்னு சொன்னா நான் இந்த வீட்ல உங்களுக்கு பொண்டாட்டியா, உங்க பிள்ளைகளுக்கு தாயா இருக்கேன்... இல்லன்னா ஆள விடுங்க சாமி .. நானும் என் பிள்ளைகளும் எங்கேயாவது போயிறோம்... நீங்க எனக்கு ஜீவனாம்சம் கூட தர வேண்டாம்... என்ன நிம்மதியா இருக்க விட்டா போதும்... 

அம்மா சண்டை போடாதீங்கம்மா என்று விஷ்ணு எழும்பி தாயின் அருகில் அமர..

இதுக்குத்தான்டா நம்மளால நம்ம புள்ளைங்க சமாதானம் போயிட கூடாது , நம்மாள குடும்பத்தோட நிம்மதி போயிட கூடாது, நாம அழுதாலும் எல்லாரும் சேர்ந்து அழுதுட கூடாதுன்னுதான் பல்லை கடிச்சுக்கிட்டு, நாங்க எல்லாம் வாழ பழகிக்கிறோம் ..... ஆனா, எங்களோட தியாகம் இவங்க கண்ணுக்கு தெரியலன்னாலும் பரவாயில்லை ... எங்களோட தவிப்பு , வலி உங்களுக்கெல்லாம் புரியலனாலும் பரவாயில்லை ஆனா மறுபடியும் காயப்படுத்தாம இருக்கலாம்தானே... எவ்வளவு பேசுறார், பேசிட்டு ஒண்ணுமே நடக்காது போல சரண்டர் ஆகுறார் பாத்தியா.... எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் ... இருக்கவா போகவான்னு கேட்டு சொல்லுடா .... அஞ்சலி கண்ணீரை துடைத்து கொண்டே இருக்க சத்யா அமைதியாக அவளை பார்த்தவன் 

சரி சரி இனி ஒன்னும் சொல்ல மாட்டேன் .... வா ...  

இப்ப கூட இவ போனா மானம் போயிடும்னு தான மழுப்புறீங்க 

இதுக்கு மேல என்ன செய்யணும்னு நினைக்கற அஞ்சு கால்ல விழுணுமா ஹான் ... 

அம்மா பசிக்குது என்று மகள் ராகம் இழுக்க... பசி என்றதும் மூவர் பின்னால் போவது அவள் முறையானது 

இவர்களை புலி என்று நினைத்து நேருக்கு நேர் போராடவும் முடியவில்லை... எலி என்று சாதாரணமாக விடவும் முடியவில்லை, சண்டைக்கு வருவான் என்று பார்த்தால், சரண்டர் ஆகி காலில் விழுந்து விட்டான்..