வேஷம் போடும் வேடா 31
Veda31

31 வேஷம் போடும் வேடா !!
"பெருசா என் காதலை சேர்த்து வைக்கிறேன்னு சபதம் போட்ட உன்னால ஒரு துரும்ப கூட அசைக்க முடியல... உன்னை நம்பி வந்ததுக்கு என்ன செருப்பால அடிக்கணும் என்று நித்தியா எஸ்டேட் புல் தரைறியில் உட்கார்ந்து புலம்பி கொண்டு இருக்க
புல்தரையில் படுத்து கிடந்து புல்லை வாயில் வைத்து கடித்து படி கிடந்த அதிரா அவளை நோக்கி தலையில் முட்டு கொடுத்து திரும்பிப் படுத்தபடி
"இப்ப எதுக்கு என்ன திட்டிக்கிட்டு இருக்க ??
"பின்ன என்னடி ஒரு வாரமா வந்துட்டு வந்துட்டு போறோம்.. இப்படி ஒரு கேரக்டர் வந்ததையே அவர் கவனிச்ச மாதிரி இல்ல .. வேலைய பாக்குறார்.. நைட்டு போகும்போது குட் நைட்னு சொல்லிட்டு போறார், இதுக்காடி கமிட்டானேன்... நான் எவ்வளவு கனவுல வந்தேன் தெரியுமா? ஒரு மண்ணும் நடக்கல..
"ப்ச் , உனக்கு லவ் பண்ண தெரியல நான் என்ன செய்யறது?"
"ஒரு வாரமாக இவர்களும் காலேஜ் முடித்தவுடன் எஸ்டேட் வந்து விடுவார்கள்.. ஓசியாக டீ பஜ்ஜி எல்லாம் கிடைக்கும் அதிரா உட்கார்ந்து அதை முக்கிவிட்டு
"அண்ணே நாளைலிருந்து கூட ரெண்டு பஜ்ஜி ஆர்டர் போட்டு வாங்கி தந்துடுங்க .. காலேஜிலிருந்து நேரா இங்க வந்துட்டோமா, பசி தாங்க முடியல..
"உனக்கு பஜ்ஜி தான் முக்கியமாடி,
" உனக்கு காதல் முக்கியம், எனக்கு பஜ்ஜி தாண்டி முக்கியம் என்று முட்டிக் கொள்ளுவார்கள்... அயோக்கியா, தன் அறையில் உட்கார்ந்து அவன் வேலையை முடித்துவிட்டு போகும்போது இருவருக்கும் குட் நைட் என்று விட்டுப் போவான்...
இன்னைக்கு ஏதாவது நடக்கல அவ்வளவுதான் சொல்லிட்டேன்
" ஏண்டி புலம்பி தள்ளுற லஸ்ட் பத்தி கேளு ஆயிரம் இல்ல லட்சம் ஐடியா தரேன் .. இந்த கருமாந்திரம் புடிச்ச லவ்வ பத்தி எனக்கே சத்தியமா ஒன்னும் தெரியாதுடி.."
" சரி அந்த லஸ்டாவது எப்படி வர வைக்கிறதுன்னு சொல்லி தொலையேன் ..
"இப்படி கேட்டிருந்தா, நான் வந்த முதல் நாளே உனக்கு ரூட் போட்டு கொடுத்து இருப்பேன் என்று சம்மணம் போட்டு எழும்பி அமர்ந்த அதிரா..
"அதுக்கு முன்னாடி லைட்டா பசிக்கிற மாதிரி இருக்கு வாட்ச்மேன் அண்ணன்கிட்ட சொல்லி ஏதாவது வாங்கிட்டு வர சொல்லேன்... காசு வச்சிருக்கியா ??"என்ற ஆதிராவை முறைத்துக் கொண்டே பணத்தை எடுத்து வாட்ச்மேனிடம் கொடுத்து அவளுக்கு வேண்டியது வாங்கிட்டு வர சொன்னாள்..
"எப்ப பார்த்தாலும் சோறு சோறு சோறு உன்னை நம்பி இதுல கமிட் ஆனேன் பாரு என்ன சொல்லணும்
"சும்மா சும்மா என்னையே திட்டாதடி ,அதான் உன்ன அவர் லஸ்ட் பார்ட்னர் ஆகிட்டேன்ல ... உனக்கு விவரம் பத்தல என்ன குறை சொல்லாத, அந்த விவரத்தை நான் சொல்லிக் கொடுக்கிறேன் வா.. வந்து பக்கத்துல உட்காரு என்று நித்யா கையை பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்த அதிரா
"காதலுக்கு கண்ணில்ல , ஆனா காமத்துக்கு கண்ணு ஏகப்பட்டது உண்டு..
"ஓஓஓஓ
"ம்ம் முதல்ல அயோக்கியா அத்தான் மூட மாத்தணும் மூடு வர வைக்கணும்.. அதுக்கு நீ இப்படி மாடல் டிரெஸ் போட்டா எல்லாம் ஆகாது என்றதும் தன் வெஸ்டர்ன் டிரஸ்ஸை குனிந்து பார்த்தாள்
"என்னடி குழப்புற எல்லாரும் அரைகுறையா டிரஸ் போட்டா தானே திரும்பி பார்ப்பாங்க..
"அது மத்தவங்க உன் ஆளுக்கு தாவணி சேலை கட்டி சும்மா கொஞ்சமா இடுப்ப காட்டி நச்சுன்னு வந்து நின்னா ரொம்ப பிடிக்கும்... அதோட இந்த ஹீரோ சைஸ் இடுப்பு எல்லாம் மனுசனுக்கு ஆகவே செய்யாது குட்டி தொப்பை, பெருத்த அழகு, பின்னாடி டிங்கி டிங்கின்னு அடிக்கிற அளவுக்கு பின்னல்.... அப்புறம் சாயம் போடாத கருப்பு உதடு இது எல்லாம் தகுதி பட்டியல்ல முதல்ல வரும்
"ஓஓஓ
"ம்ம் , இதெல்லாம் பார்த்தாலே ஆளுக்கு செம மூடு வந்துடும்
"என்னடி எல்லாம் வித்தியாசமா சொல்ற..
"அதான் சொன்னேனே ஆளு கொஞ்சம் வித்தியாசமானவர்ன்னு
"சேலை, பின்னல் இதெல்லாம் ஓகே... ஆனா தொப்பை
"அது உன் பாடு "அவளுக்கு வாட்ச்மேன் வாங்கிக் கொண்டு வந்த பப்ஸ் சோமாஸ் அத்தனையையும் நித்தியா எடுத்து வேக வேகமாக தின்ன ஆரம்பித்தாள்
டயட் டயட் என்று கொறிக்கும் அவள், தொப்பைக்காக அத்தனை உணவையும் வாயில் கொட்ட
அச்சச்சோ!! இவளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம்னு சொல்லி நமக்கு வாங்கிட்டு வந்த சாப்பாடு போச்சே ,
"எப்படியும் நாலு நாள்ல தொப்ப வந்துடும் அதி, வரலைன்னா கொஞ்சம் பீர் குடிச்சா தொப்பை வந்துடும்
செம செம
"அதிரா வேற என்ன எல்லாம் செய்யணும்..
"இப்படியே அவர ரூமுக்குள்ள விட்டுட்டு, நீ வெளியே உட்கார்ந்து காத்து வாங்குனா லஸ்ட் காத்து வாங்கிடும்
என்ன செய்ய சொல்ற ?
"அவருக்கு முன்னாடி அடிக்கடி ஷோ ஆகணும்டி, அவர் பாக்குற மாதிரி நிக்கணும், குனியனும் அப்பப்ப தாவணியை திறந்து இடுப்ப காட்டணும் .. மனுசன் வேலை செய்ய விடாம மனச கலைச்சுக்கிட்டே இருக்கணும்.. அவர் பார்க்கும் போது உதட்டை கடிக்கணும்,
இதெல்லாம் பண்ணுனா என்ன தப்பான பொண்ணா நினைச்சிட்டா"
" இதெல்லாம் பண்ணுனா தான் உனக்கு அவர்கிட்ட போறதுக்கு வழி உண்டு
"ம்ம் சரிடி ட்ரை பண்ணி பாக்குறேன் ,
ஹாய் நித்தியா என்று தன் லேப்டாப் பேக்கை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு போவதற்காக கிளம்பி வெளியே வந்தான் அயோக்கியா, சட்டை பட்டனை கழட்டிக்கொண்டு அவர்கள் அருகே வந்து நினறான்
"இங்க எல்லாம் உனக்கு கம்ஃபர்டபிலா இருக்கா நித்யா..
"ஆமா சார்
"ஏதாவது கத்து கொடுத்திருக்காளா?? என்று அதிராவை ஓரக்கண்ணால் பார்க்க
"இப்பதான் சார் கத்துக்கிட்டு இருக்கேன் நாளைக்கே ட்ரையல் பாத்துட்றேன்
"ம்ம் , குட் அப்போ நாளைக்கு பார்க்கலாம் என்று அயோக்கியா போய்விட
அடுத்த நாள் சேலையில் சவுரி முடி பின்னல் போட்டு தலை நிறைய பூ பொட்டு என சர்வ லட்சணத்தோடு வந்து இறங்கினாள் நித்யா
"எப்படி அதிஇருக்கேன் பாக்க நல்லா இருக்கேனா
"சூப்பரா இருக்க ஜெகஜோதியா ஆரம்பிச்சிடும் பாரு ஒன்னே ஒன்னு சொல்றேன் உனக்கு குழந்தை பிறந்தா அதிமதுரான்னு என் பேரு தான் வைக்கிற
சத்தியமாடி, இந்த லவ் மட்டும் செட் ஆயிடுச்சுன்னு வை, எத்தனை பிள்ளை பிறந்தாலும் அத்தனை பிள்ளைக்கும் உன் பேர்தான் வைப்பேன், இது உன் மேல ப்ராமிஸ் ..
நண்பிடா!! போ போய் தூண்டில் போட்டு பாரு நான் சொன்ன மாதிரி அடிக்கடி கண்ண கண்ண சிமிட்டு இன்னைக்கு ஆளு மொத்தமா உன்கிட்ட ப்ளாட்டாக போறார் நித்தியா வெட்கத்தில் சிரித்துக்கொண்டே அயோக்கிய அறையை நோக்கி ஓடினாள்...
போன சிறிது நேரத்தில் நித்யா தொங்கிப்போன முகத்தோடு வந்து அதிரா முன் நிற்க .. அவள் மிச்ச மீதி வைத்த பப்ஸை மொக்கி கொண்டு இருந்த அதிரா வாயை துடைத்துக்கொண்டே
என்னடி ஏதாவது நடந்ததா?
போடி ஒன்னுமே நடக்கல
"ஒண்ணுமே நடக்கலையா, போய் பத்து நிமிஷம் ஆச்ச ஒரு கிஸ் கூடவா பண்ணல .. என்ன நடந்தது சொல்லு
"உள்ள போனேன், சார் உள்ள வான்னு சொன்னார் நான் அவர் முன்னாடி உள்ள சேர்ல போய் உட்கார்ந்தேன்
"ம்ம உன்ன பார்த்தாரா?
"அதெல்லாம் நல்ல முறைச்சு முறைச்சு பார்த்தார்
"நீ சேலை கட்டியிருக்கிறத பத்தி ஏதாவது சொன்னாரா
"ம்ம் சொன்னாரே சேலையில ரொம்ப நல்லா இருக்க, எங்க பர்ச்சேஸ் பண்றேன்னு கேட்டார்.. நான் கடை விலாசம் வரைக்கும் சொன்னேன்
"ரொம்ப நல்லது அப்படியே கடைக்கு கூட்டிட்டு போய் இரண்டு சேலை வாங்கிட்டேன்...
"என்னடி ஏதாவது தப்பு பண்ணிட்டேனா
"இல்ல மேல சொல்லு
"அப்புறம் பபுள்காம் திங்குற பழக்கம் இருக்கான்னு கேட்டார் எப்பவாவது தின்பேன்னு சொன்னேன் திங்குறியான்னு கேட்டார்,
"நீ என்ன சொன்ன,
" உங்க கிட்ட வேற ஏதாவது இருக்கான்னு கேட்டேன் அவர் என் உதட்டில் உள்ளது தான் இருக்குன்னு சொன்னார்.. எச்சி அது வேண்டான்னு தலையாட்டினேன் ..சரி போன்னு சொல்லிட்டார் அவ்வளவுதான் ..
"வேணுமான்னு கேட்டா அவர், அவர் வாயில் இருந்த சுவிங்கத்தை கேட்டிருப்பார்
"அய்யய்ய எச்சில்"
"எச்சிலா !? எச்சில் தாண்டி லஸ்டுக்கு ஆரம்ப சுழியே மெண்டல் மாதிரி ஓடி வந்துட்டு... இப்போ அவர் என்ன கழுவி கழுவி ஊத்த போறார் ,என்னத்த சொல்லிக் கொடுத்து அனுப்பினேன்னு என்ன திட்டுவார்..
டார்க்கி இஇஇஇஇஇஇ அவன் குரல் வர
"இதோ வர்றேன் அத்தான், வா வந்து தொலை என்று நித்யாவையும் இழுத்து கொண்டு அயோக்கியா அறை உள்ளே போக
"ஒரு வாரமா அவளுக்கு இத தான் சொல்லி குடுத்தியா.. மூடே ஸ்பாயில் ஆயிடுச்சு, சுவிங்கம் சாப்பிடீறியான்னு கேட்டா , புதுசு இருக்கா சார்னு கேட்குது .. இதுதான் உன் டிரெய்னிங்கா???" என்று அயோக்கியா எரிச்சலாக அவளை பார்க்க..
அடுத்த வாட்டி சரி பண்ணிடுறேன் அத்தான்..
"கிழிச்ச உன்ன நம்பியிருந்தா ராத்திரி பட்ட நாமம் தான் போ" என்று எழும்பி தன் கோர்ட்டை கழற்றி சேரில் போட்டவன்
"நித்யா வா என்று அழைத்தவன்
"ஏய் நீ என்னடி அப்படியே நிக்கிற, நீயும் பக்கத்துல வா என்றதும் அதிராவும் அவன் இன்னொரு பக்கம் போய் நிற்க..
"இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உனக்கு ட்ரைனிங் கொடுக்கிறேன் ,அதுக்கு பிறகு தீக்குச்சி மாதிரி அதையே புடிச்சு பின்னாடி வந்துடனும் புரியுதா? என்று அயோக்கியா பழுப்பு கண்ணோடு நித்யாவை குனிந்து பார்க்க ..அவள் பதட்டப்பட்ட உதட்டோடு சரி என்று தலை ஆட்ட
நேராக அதிரா நோக்கி திரும்பிய அயோக்கியா
நித்யா
சொல்லுங்க சார்
இதோ இங்க நிக்கிறாளே இவ கொஞ்ச நேரத்துக்கு அதிரா இல்லை நித்யா ஓகே, நீதான் இவ..
அது ஊஊஊ
அப்போ நீயே ட்ரைனிங் எடுக்கிறியா?
"இல்லை இல்லை அவளை வச்சே ட்ரைனிங் கொடுங்க சார்
"ம்ம் இதுதான் இப்ப நித்யா, எப்படி தொடங்கணும் எப்போ தொடங்கணும் என்ன செய்யணும்னு ஒரு குட்டி பிட்டு ஓட்டுறேன் ..
பிட்டு படமா அத்தான்?? என்று இவள் உதட்டை சுளிக்க
ப்ச டெமோ டெமோ
ஓஓஓஓ
நாளையில இருந்து அதை கரெக்ட்டா செய்யணும் சரியா நித்யா ?
ம்ம்
ஆஹா ஆந்தக்கண்ணன் அபேஸ் பண்ண ஐடியா போடுறான் என்று அதிரா நகரும் முன் அவள் கழுத்தை இழுத்து தன் நெஞ்சோடு இடிக்க இணைத்து நிறுத்தி அவள் இடுப்பை அழுத்தி பிடித்தான் ..
நித்யா என்று அதிரா இடையை அழுத்த
ம்ம் சொல்லுங்க சார் என்றாள் அவன் கண்ணோடு தன் கண்ணை அலைய விட்டபடி அதிரா
"செம டயர்ட்
"ம்ம் பார்த்தா தெரியுது கூல் பண்ணவா என்றவள் கைகள் அவன் சட்டை மேல் பட்டனை கழட்டி தளர வைக்க ..
"சுவிங்கம் திங்கிறியாடி...என்று உதட்டை குவிக்க அயோக்கியா உதட்டின் மீது தன் உதட்டை வைத்து உரசிய அதிரா
"யா ஷூயர்" என்று கிசுகிசுக்க அவள் தொப்பை வயிற்றை அழுத்தி தூக்கி மேஜை மீதி அமர வைத்தவன்...
ம்ம் தின்னுக்க என்று உதட்டை குவித்து காட்ட
"நான் உன் கீழ் உதட்டை சுவிங்கமா திங்கிறேன் , நீ என் மேல் உதட்டை சுவிங்கமா கடிச்சு தின்னு..
ம்ம் என்றவள் அவனுக்கு கீழ் உதட்டை ஈரமாக பிதுக்கி கொடுக்க அவன் தன் மேல் உதட்டை அவள் பிளந்த இதழ் உள்ளே திணிக்க
கீரிச் பச்சக் லபெக் என்ற சத்தம் அறை எங்கிலும். முத்தம் காதலர்களுக்கு சைவம், காமக்காதலர்களுக்கு அசைவம் தானோ?? நாவையும் சப்பி இழுத்து ஒன்றுக்கு ஒன்று சளைக்காத முத்தவேட்டை, வேட்கை தீர கொடுக்க ஆரம்பிக்க... அவன் கை சும்மா இருந்தால் அவனுக்கு அழகா, இல்லை அவள் கை சும்மா இருந்தால் அவளுக்கு அழகா அவன் உடல் எங்கும் அதிரா கைகள் அழுத்தி தடவ அவன் விரல் அவள் தொப்பை வயிற்றில் இடம் தேட ..
ஸ்ஆஆஆஎக்கி சேலையிடை இடம் கொடுக்க அவன் கைகள் சுதந்திரமாக சொர்கவாசல் வரை தொட்டு வர.. பழிக்கு பழி செய்தால் தானே அவள் ஆத்மா இளைப்பாறும் .. அவன் ஆடை மீது அவள் விரல் காமநாட்டியம் ஆட ..ஒற்றை கையால் அவன் அவள் விரலுக்கு இடம் அமைத்து கொடுக்க இருவர் கண்ணும் காமத்தில் சிவந்து போய் ஒன்றை ஒன்று பார்த்து கொண்டே சொக்கி மீள முடியாத ஆசை உற்சாகத்தில் வன்மையாக அவள் தீண்ட
ஊப்ஸ் என்றவன் விரலும் அவளுக்கு காயம் ஏற்படுத்த
ஆவ்ஊஊஊஊ என்றவள் துள்ள... கால் நடுங்க களைப்பு வரும் வரை கால் கடுக்க முத்தம் முடிக்க அவன் உதட்டில் இருந்த சுவிங்கம் அவள் உதடு உள்ளே இடம் மாறி இருந்தது..
கீரிச் அவன் ஆடை மூடியபடி
நீயா இருந்தா தொட்டிருக்க மாட்டேன் , சீ பேன்னு போயிருப்பேன், உன்ன நித்யாவா கன்சிடர் பண்ணி டெமோதான் அவளுக்கு காட்டினேன்... அவன் டிஸ்யூ எடுத்து வியர்தத இடம் எங்கும் துடைக்க ...
"யா புரியுது அத்தான், நானா இருந்திருந்தா உங்கள தொட விட்டிருக்க மாட்டேன்.. சீ பே தள்ளி நில்லுன்னு சொல்லி இருப்பேன் ... நித்யாவா கன்சிடர் பண்ணி தான தொட்டிங்க, சோ நானும் இதை பெரிசா எடுத்துக்கல" என்றவள் இடை விட்டு வழுவிய அலங்கார துணியை சரிசெய்து சேலையை ஒழுங்காக கட்டி கொண்டவள்
"எப்படியாவது அவளை லவ் பண்ணுங்க அது போதும் ... வியர்வை துடைக்க சுற்றிமுற்றி துணி தேட
"நீ இனிமே ஒழுங்கா ட்ரைனிங் கொடு .... டிஸ்யூவை அவள் புறம் தூக்கி போட்டான் அவன் நறுமணம் வந்த துணியில் தன் வியர்வை துடைத்தவள்
"அப்ப நாளைக்கு வந்து ட்ரைனிங் கொடுக்கிறேன்..
ம்ம் கிளம்பு கிளம்பு என்று சோபாவில் சரிந்தான் அவள் தூக்கி போட்ட குப்பை டிஷ்யூ அவன் கன்னம் மீது உரச அதிலிருந்து அவள் நறுமணம் வர கண்கள் சொக்கியது தூக்கத்திற்கு..
நித்யா நித்யா எங்கடி இருக்க ? நகத்தை கடித்தபடி கார் மீது நித்யா அமர்ந்திருக்க
என்னடி உயிரை கொடுத்து நான் உனக்கு ட்ரைனிங் கொடுத்தா நீ ஓடி வந்திட்ட..எப்ப வந்த ? அவன் இடம் மாற்றிய சுவிங்கத்தை முட்டை இட..
அதுவா உதட்டையும் உதட்டையும் ரெண்டு பேரும் உரசும் போது ஒரு மாதிரி ஆகி போய் ஓடி வந்துட்டேன்
ப்ச் இப்படி பதறினா எப்படி லஸ்ட் கத்துப்ப"
"இது எல்லாம் எனக்கு வராது போல அதிரா
"ச்சே ச்சே அப்படி சொல்லாத சித்திரமும் கை பழக்கம் திரும்ப திரும்ப ட்ரைனிங் எடு வந்திடும் ..
""மறுபடியும் ட்ரைனிங்கா ..
ம்ம் ...
அவள் நாலா பக்கமும் கண்ணை உருட்ட
"அதாவது உள்ள இருந்தது அதிரா இல்லை நித்யா அவர் அப்ரோச் பண்ணினது என்ன இல்லை உன்ன தப்பா எதுவும் நினைச்சிக்கலையே
"அது ம்ஹூம் ....
"ஹான் சஸ்ட் டெமோ காட்டினார்.... இனிமே வேணும்னா நீயே அவர் பக்கதுல போ
"இல்லை இல்லை கொஞ்சம் கம்ஃபர்டபிளா பீல் பண்ற வரை தள்ளியே இருக்கேன் ..
"ஆர் யூ ஷூயர் நித்யா ?
"ம்ம்
"இப்ப சொல்லு உள்ள இருந்தது யார் ?
"நித்யா
"அவர் வாய்ல உள்ள சுவிங்கத்தை கொடுத்தது யாருக்கு?
"நித்யாவுக்குன்னு தான் நினைக்கிறேன்
"வெரி கிளவர் ப்ரைட் ஸ்டுடெண்ட் , சீக்கரமே நீ அவர் இதய ராணி ஆகிடுவ, வா போகலாம்... செம டயர்டா இருக்கு என்று அதிரா போய் காரில் ஏற ... நித்யா தலையை சொரிந்து
அது எப்படி அதிரா நித்யா ஆக முடியும் ... கொஞ்சம் குழம்புதே
நாளைக்கு ஒரு தடவை டவுட் கிளியர் பண்ணிடுறேன் உனக்கு கிளியர் ஆகிடும் வா, வந்து வண்டியை எடு அப்படியே போற வழியில சாப்பாடும் வாங்கி கொடுத்து ஹாஸ்டல்ல இறக்கி விட்டிரு...
ம்ம் என்று நித்யா வண்டியை எடுக்க சோபாவில் கிடந்த அயோக்கியா கண்ணை மூடியதும் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விட , சீட்டில் தலை சாய்த்த அடுத்த நொடி அதிரா குறட்டை விட ஆரம்பித்து விட்டாள்
உலகில் நாம் கடந்து வந்த அத்தனை வலிகளையும் சில நொடியில் மறக்க வைக்க ஒருவரால் முடியும் என்றால் அவரே தனக்கான சரியான இணை !!