வேஷம் போடும் வேடா 16
Veda16

16 வேஷம் போடும் வேடா !!
அயோக்கியா கிளம்பி தன் எஸ்டேட்டுக்கு சென்று வேலையில் பிஸியாகிவிட்டான்...அதிராவும் காலேஜ் போய் விட்டாள் ....
மதிய வேளை வரும் வரை தன் காமஅழகியை யோசிக்கும் நேரம் அவனுக்கு இல்லை .. உடலை நெட்டி முறித்தபடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான் அயோக்கியா
சார் என்று அவன் பிஏ உள்ளே வர
"என்ன?" என்று கூலிங் கிளாஸை கழட்டி தன் சட்டையில் போட்டான்...
"நாளைக்கு உங்க அம்மாவோட நினைவு நாள்" என்றதும் நிறம் நிறமாக அவன் கண்கள் மாற சுட்டு விரலால் போ என்று கூறிவிட்டு கண்களை மூடி அப்படியே இருக்கையில் சாய்ந்து விட்டான்..
வெகு நேரம் அவன் முகத்தில் அக்கினி பிழம்பு ஒன்று பற்றி எறிய.. சமநிலையற்ற மனதை, விட்டு விட்டு துடிக்கும் இதயத்தை ஆழ மூச்செடுத்து காற்றை உதடு வழி வெளியே விட்டு , தன்னை சமம் செய்ய முயன்றும் தோற்றுப்போய் கண்களை திறக்க... ரத்தம் கட்டிப் போய் அவன் கண்கள் இரண்டும் அக்கினி போல இருக்க... தன் எதிரில் தொங்கும் தன் தாயின் புகைப்படத்தை வெகுநேரம் வெறித்து கொண்டு இருந்தான்
அதிஷ்டலெட்சுமி !! பெயரில் இருந்த அதிஷ்டம் வாழ்க்கையில் ஏனோ இல்லையே ....
கருப்பு நிற தேவதை , கண்கள் இரண்டும் கதை பேசுமா? அதில் கருணை இருக்குமா? அதில் அன்பு இருக்குமா? முகம் நிறைந்த புன்னகையோடு வா என்பது போல் கையை நீட்டி நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படம்.... தானாக அவன் கால்கள் தன் தாயின் புகைப்படம் நோக்கி நகர்ந்தது....
அதிர்ஷ்ட லட்சுமியின் புகைப்படத்தை பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தவனின் கண்கள் தன் தாயின் முகத்தை வருட , மெலிதாக புன்னகை வந்தது..
ஏதோ யோசனை வந்தவனாக தன் போனை எடுத்து ஆடை அலங்காரம் இல்லாது அரை அழகில் காலை இன்னட்டு அழகி அனுப்பிய போட்டோவில் நிர்வாண அழகை ரசிக்க வேண்டிய காமக்காதலன் அவள் கண்ணை ஜூம் செய்து அதில் தெரியும் கவர்ச்சியை வெகு நேரம் பார்த்தவன்... தலையை தூக்கி தன் தாயின் புகைப்படம் பார்க்க , அதே பார்வே அது , அவனை அதிராவிடம் ரசிக்க தேட வைத்தது எது என புரிந்தது...
தன் தாயின் நிறம் , அழகு , கண்ணழகு கொண்டு சுற்றும் அவள் இயற்கையாக அவனை வசீகரித்தது ஒன்றும் தவறு இல்லையே ... ஏன் இந்த பிரியம் என்று உணரவேண்டிய வேடனோ எப்போதும் போல தினுசாகத்தான் யோசித்தான்
"என் அம்மா நிம்மதி இல்லாம செத்தாங்க ... நீ மட்டும் நிம்மதியா சந்தோசமா எப்படி இருக்கலாம் , உன் சந்தோஷத்தை பார்க்கும் போது ஏன் என் அம்மாவுக்கு மட்டும் எதுவும் கிடைக்கலன்னு தோண வைக்கிற ... நீ சிரிச்சா அவ பட்ட வலி வேதனைதான் எனக்கு நியாபகம் வருது... சோ நீயும் சிரிக்காத மத்த பொண்ணுங்க போல நீயும் அழுது வடி, ஐ நீட் தட் எமோஷன்... நீ உடைஞ்சு அழுறதை பார்க்கணும்டி "விசித்திர ஆசை கொண்டு நின்றான் ....
அதிஸ்டலெட்சுமி வேறு அதிமதுரா வேறே!! அவள் அழ வேண்டும் என்றால் அவன் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வர வேண்டும் ... இந்த உலகில் உள்ள கோடி பெண்களில் அவள் தனி ஒருத்தி என்ற ரகசியம் அவள் மட்டும் அறிந்தது ...
அவள் நினைவு வரவும் அவளுக்கு போன் போட்டு அவள் தரும் காம பேச்சு வேண்டும் என்று மனம் உந்த போனை எடுத்து மை லிட்டில் லஸ்ட் பாட்னர் என்ற நம்பருக்கு போனை போட்டான் .... திரையில் நேற்று இரவு காரில் இருவரும் உதட்டை கவ்வி கொண்ட போது அவனே எடுத்த புகைப்படம்... அவள் மட்டுமா கிறங்கி முத்தமிட்டாள் அவனும்தான் கண்கள் சொருக அவள் இதழுக்குள் தன் இதழை திணித்து கொடுத்தபடி இருந்தான்...
வகுப்பில் பின் இருக்கையில் உல்லாசமாக காலை ஆட்டிக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அதிரா ... மடியில் கிடந்த போன் சத்தம் இல்லாது அதிர, அவன் குறுகுறுபபு மூட்டும் புதிய இடம் சிலிர்த்தது அதை எடுத்து பார்க்க ...
வியர்வை வடிய காலை அவன் மேல்சட்டை இல்லாது நின்ற போட்டோ
"லஸ்ட் பாட்னர் காலிங்" என்று வந்தது.. குசும்பு பிடித்தவளே அவன் போடும் அத்தனை,ஃபாலுக்கும் சிக்சர் அடிக்கும் வித்தகி ஆகிற்றே ..
"சார்" ஒற்றை விரலை காட்டிவிட்டு வகுப்பு மாணவர்கள் சிரிப்பை பொறுப்பெடுத்தாது வெளியே ஓடி வந்து பெஞ்சில் அமர்ந்தாள்...
ப்ச் சலித்து அவன் போனை கட் பண்ண போக
இச் இச் தொடர் முத்தம் வந்து ஃபோன் வழியாக விழ ..
"ம்க்கும் செத்துட்டியோன்னு நினைச்சேன்
"நீங்க உயிரோட இருக்கும் போது நான் மட்டும் எப்படி சாக சேர்ந்து செத்து போகலாம் அத்தான் ..
நான் ஏன்டி சாகணும்
அப்புறம் நான் மட்டும் ஏன் சாகணுமாம்.. என்ன பகல்ல காமகாதலி நியாபகம் வந்திருக்கு
"காமத்துக்கு பகல் என்ன இரவு என்ன ?
"ஓஓஓ அப்போ மூடா இருக்கீங்களா அத்தான்
"லைட்டா
"நான் கூடதான் அத்தான் ,காலையில நீங்க அனுப்பின போட்டோ பார்த்த பிறகு கண்ணை மூடினாவே அதே தான் நியாபகம் வருது
""என்ன தோணுச்சு ?
"சொல்லவா? கீச்சு குரலில் சரசம் பேசினாள்..
"ம்ம் சொல்லு பார்ப்போம் "என்று கரகர குரலில் காது சிவந்தான் சிவப்பழகன்..
"ஆரம்பிச்ச பிறகு அங்க போகணுமா இல்ல முதலிலேயே என் தேவைக்கு உறிஞ்சு எடுக்கலாமான்னு சிவந்த கோழியை பார்த்து ஆசை வந்து உதட்டை கடிக்க வைக்கிறீங்க தெரியுமா அத்தான்"
"அவளுக்கு ரசிகன் ஆனானோ இல்லையோ, அவள் பச்சை சென்சார் இல்லாத பேச்சுக்கு ரசிகனாகி கழுத்தை தேய்த்து கொண்டே...அப்போது பார்க்காத அவள் அன்னத்தின் அழகை இப்போது ஜூம் பண்ணி பார்த்தான்... உச்சியில் அடர் கருப்பு அழகிய மச்சம்... அவள் தன்மீது உட்கார்ந்து படகில் துடுப்பு போடும் போது இந்த அடர் கருப்பு மச்சத்தை கடித்தால் எப்படி இருக்கும் இப்போதே ஆசை வந்தது
"அது என்னடி இப்படி துருத்திட்டு நிக்குது ஆசை ஓவரோ .. "
"காலையில உங்களை பார்த்ததில இருந்து மொட்டு எல்லாம் வெடிச்சிடுச்சு தெரியுமா ? அதான் அப்படியே போட்டோ எடுத்து உங்களுக்கு அனுப்பி விட்டேன் அழகா இருக்கா?
"ம்ம் மேல மட்டும் தான் இருக்கு .... குறை வர
"நைட் மத்தத்தும் அனுப்பவா?
"ஆனாலும் உனக்கு கொஞ்சம் கொழுப்பு ஜாஸ்திதாண்டி" என்று பெருத்த அழகை விரல் வைத்து தடவினான்
"அதான் தெரியுமே டபுள் எக்ஸ்எல் "என்று கண்ணை சிமிட்ட
" தெரிது தெரிது லோட் ஜாஸ்திதான்.. ஒரு ஆம்பளைக்கு இப்படி அரைகுறையா போட்டோ அனுப்பி விட்டு இருக்கியே .. நான் இதை அப்படியே நெட்ல போட்டு உன் மானத்தை வாங்கிட்டா என்னடி பண்ணுவ...
"உங்களுக்கும் கொஞ்சம் கொழுப்பு நீளம்தான் அத்தான் , ஒரு பொம்பளைக்கு வெக்கமே இல்லாம மொட்ட மொழுக்குன்னு உங்க போட்டோவை அனுப்பிவிட்டு இருக்கீங்களே, இதை நான் நெட்ல சுத்திவர வச்சுட்டேன்னா உங்க மானம் என்ன ஆகிறது.. "
"ஓஹோ அப்போ பதிலுக்கு பதில் செய்வ போல இருக்கு.."
"எல்லாத்துலேயும் பதிலுக்கு பதில் செய்ய எனக்கு தெரியும் ... பொழுது போகலன்னா வேணும்னா என் போட்டோவ நெட்ல போட்டு விளையாடி பாருங்க, நானும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் உங்க போட்டோவ போட்டு விட்ருவேன்... சாமானியபட்டவள் இல்லை என்று நினைத்து கொண்டான்
"நான் பக்கத்துல இல்லேன்னு தைரியத்துல பேசுறியாடி ..."
"ம்ஹூம் , பக்கத்துல இருந்தாலும் இப்படித்தான் அத்தான் பேசுவேன்... பேசுறது மட்டும் இல்ல உங்கள பேச விடாம செய்யவும் எனக்கு தெரியும் அவ்வளவு மோகம் ததுப்பிய அவள் கிறக்கமான குரல் வந்து முல்லை மலரில் தேன் நிரம்ப செய்தது
"என்னடி நீ பேசுறத பாத்தா இதுல எல்லாமே தெரிஞ்சவ மாதிரி இருக்கு... நான் தான் மொத கிராக்கியா இல்ல எப்படி? "
"நீங்க மட்டும் எனனவோ பத்து பேர் கூட படுத்தவர் போல பேசுறீங்க , அதான் சொல்லிட்டேனே அத்தான் இதுவரைக்கும் இப்படி ஒரு செம கட்டை பார்த்ததில்லை, உங்களுக்காக தான் வெயிட்டிங்ல இருந்தேன்.... இதுக்கு முன்னாடியே இப்படி யாராவது வந்து இருந்தா, மே பி ட்ரை பண்ணி இருப்பேனா இருக்கும்... இப்பதான் அதுக்கு ஆப்சர்சூனிட்டி வந்து இருக்கு....சப்பை பிகர் தேடுற எனக்கு நச்சு பிகரா காந்த கண்ணழகன் கிடைக்க விடுவானா என்ன தெரிஞ்ச வித்தை எல்லாம் காட்டிட மாட்டேன் " அவன் கரகரப்பு குரளுக்கு அர்த்தம் தெரியாதவளா ? இன்னும் கரகரக்க வைத்தாள்..
"கிளாஸ் போகல" உள்ளே பிஏ வரவும் பேச்சை மாற்றினான்...
"டேய் அத்தான் "
என்ன ???
"டேய் அத்தான்
"சைன் வேணும் சார் "அவர் பைலை நீட்ட அதை கண்ணால் ஸ்கேன் செய்து கொண்டே அவளுக்கு பதில் கொடுக்க வில்லை
"டேய் அத்தான்
"ம்ம்
"பிக்கப் பண்ண வர்றீங்களா??
"எதுக்கு
"நேத்து தந்த கிஸ் போதல
"ம்க்கும் வேறென்ன வேணும்?
"துருத்தி நிக்கிற மச்சத்துல ஒரு கடி வேணும் ..
"சரி பிறகு பேசுறேன் "
"டேய் அத்தான்
"ப்ச் பிறகு பேசுறேன்டி
"சொல்லிட்டு வைடா அத்தான் தருவியா மாட்டியா அவள் அவசர அலும்பு பண்ண..அயோக்ககயா போனை கட் பண்ணி விட்டவன் மெசேஜ் மட்டும் அவளுக்கு வந்தது
டாவா போடுற மாட்டுடி ஒரு கடி என்ன பல கடி விழும் நாலு நாளைக்கு ஒன்னும் உள்ள போட முடியாம சுத்த விடுறேன்... "
"எனக்கும் பல் இருக்கு அத்தான், உங்களையும் நாலு நாள் டிங்கிமங்கின்னு சுத்த விட தெரியும் என்று கடிப்பது போல ஸ்மைலி வர ... எப்போதும் தாயின் நினைவு நாள் வரும் போது இறுகி போகும் அவன் உடல் இன்று அவள தந்த போதையில் இறுகி போய் மனம் காற்றாக பறக்க ஆரம்பித்தது ...
அவன் பனிமலையை சாய்த்தான் .. இவள் எரிமலையையே சாய்க்க கூடிய வல்லமை கொண்டவள்...
அவள் குரல் மறையவும் அயோக்கியா தன் தாயின் புகைப்படத்தை பழுப்பு கண் மாறி சிவப்பு கண்ணால் வெறிக்க, அதிராவும் தன் புத்தகம் நடுவே மடித்து வைத்திருந்த தன் தாயின் புகைப்படத்தை கருவண்டு விழிகள் அசையாது வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அவள் கண்ணிலும் ரத்தம் ஏறி நின்றது ...
வீரனும் வீரனும் மோதிக்கொள்ளும் போரில் சேதம் அதிகம் இருக்கத்தான் செய்யும் ...அது காம சேதமா காதல் சேதமா பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் ...