அலெக்ஸ் 16

Alex16

அலெக்ஸ் 16

16 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி !!

டிஸ்சார்ஜ் ஆகி மனைவியை தன் காரிலேயே கொண்டு வந்து வீட்டு வாசலில் நல்லபெருமாள் விட்டார் ..

"உள்ள வரலாமே..

"இல்ல இன்னொரு நாள் வர்றேன்.. 

" நான் உங்க கூட இருக்கவான்னு கேட்க வாய் வரல அப்போ இங்கேயே இரு என்று வீட்டு வாசலில் இறக்கி விட்டு விட்டார்...

உன்னை நானே பார்த்துக்கிறேன்டி வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூட இப்ப கூட மனசு வரல என்று ஸ்ரீதேவியும் அவர் இறக்கி விட்ட இடத்தில் இறங்கி கொண்டு உள்ள வாங்க என்று கூப்பிட சண்டித்தனம் பண்ணி வாசலிலேயே நின்று கொண்டவர் ..

பரவாயில்ல உடம்ப பாத்துக்கோ , அடுத்த செக்கப்புக்கு வர்றேன் 

"உங்களுக்கு ஏன் சிரமம் பக்கத்துல தானே இருக்கு நானே போயிட்டு வந்துடுறேன்

அப்போ உன் இஷ்டம் மாத்திரை எல்லாம் வேளா வேளைக்கு போடு சரி என் மகனை கூப்பிடு பாத்துட்டு கிளம்புறேன்... 

" ராத்திரி முழுக்க தூங்கல நீங்களே வண்டி போட்டுட்டு போகணுமா ஒரு நாள் ஓய்வெடுத்துட்டு போகலாமே 

ம்ம் , பக்கத்து லாட்ஜ்ல ரூம் போட்டு இருக்கேன் அங்க போயி தூங்கிடுறேன் துண்டுக்க நின்ற கணவனை என்ன செய்ய?

ஊரோ வந்து நின்ற நல்லபெருமாளை கண்டு வாயை பிளந்தது விவாகரத்து ஆன கணவனும் மனைவியும் சேர்ந்து விட்டார்களா என்று அதற்கும் புரளி பேசினார்கள்.. அன்று பிரிந்து நிற்கும் பொழுதும் வாயில் வந்ததை பேசினார்கள்.. இன்று சேர துடிக்கும் பொழுதும் வாயில் வந்ததை பேசினார்கள். 

இவர்களுக்கு வேறு வேலை தான் இல்லையோ என்று தான் ஸ்ரீதேவி நினைத்து தலையில் அடித்தாள்.. அன்று பக்குவம் இல்லாத வயது கண்டதையும் பேசும்பொழுது வீட்டில் வந்து உட்கார்ந்து ஒப்பாரி வைப்பாள்... ஆனால் இப்போது பக்குவப்பட்ட வயது அடப்பாவிகளா!! இந்த நாலு பேர் நாலு விதமா சொல்றதை நம்பி எத்தனை நாள் தேவையில்லாம பக்கெட் பக்கெட்டா அழுது ஊத்தி இருக்கேன்.. இதுகளுக்கு வேலையே இல்லை என்பதே இப்போதுதான் புரிந்தது..

என் புருஷன் கூட நான் சேரணும்னு நினைச்சாலும் இதுகளுக்கு எரியும் போல இருக்கு , அடுத்தவன் நல்லா இருந்தா அது பொறுக்காதது அந்த நாலு பேருதான் என்பதுதான் உண்மை ..

தகப்பனின் கார் சத்தம் கேட்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்து அவர் தோளில் தொங்கிக்கொண்ட யாமினி , நல்லபெருமாள் கன்னத்தில் இச்சு வைத்தவள் 

"இப்பதான் உன் பொண்ண பார்க்கணும்னு தோணுச்சா டேடி 

"இல்லம்மா ஹாஸ்பிட்டல் வேலைன்னு அப்பாவுக்கு கொஞ்சம் நேரமே இல்லை மகளும் தகப்பனும் பேசுவதை ஏக்கமாக தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி ...

அம்மா நல்லா இருக்கியா என்று ஒரு வார்த்தை மகள் கேட்க மாட்டாளா என்று தவித்தது பெற்ற இருதயம்..

 தகப்பனிடம் பேசி கையை ஆட்டிவிட்டு அவர் கார் போனதும் உள்ளே வந்த யாமினி சோபாவில் அமர்ந்திருந்த தாயை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே அறைக்குள் போய்விட்டாள்... நெப்போலியன் வீட்டில் சமையல் செய்வதற்கு என்றே ஆள் போட்டு விட்டான் ..இரவு மனைவி ரூமுக்குள் நுழையும் தம்பியை ஸ்ரீதேவி யோசனையாக பார்க்க... 

எங்க போனீங்க என்று உள்ளிருந்து மகள் குரல் வர 

எப்பா என்கூட அனுசரணையாக போகலைன்னாலுப் பரவாயில்லை அவனோடு வாழ்ந்தால் சரிதான் என்று ஸ்ரீதேவி இருவர் வாழ்க்கைக்கும் வாழ்த்தி நகர்ந்து கொண்டார்..

முழுநேரம் ஓய்வில் தன் அக்காவை வைத்து கொண்டான்.. அவன் இருக்கும் பொழுது அவனேப் பார்த்துக் கொள்வான்..

இரவுகளில் அவனாக தேடினாலும் தேடலுக்கு மனைவி அவளை கொடுப்பாள் . அவளாக தேடினால் அவனும் தன்னைக் கொடுப்பான். என்ன மாதிரியான வாழ்க்கை இருவரும் வாழ ஆரம்பித்திருக்கிறோம் என்பது நெப்போலியனுக்கு புரியவில்லை .. ஆனால் மாதங்கள் கடந்து இதோ நான்கு மாதங்கள் முடிந்து போனது கோர்ட் அவர்களுக்கு கொடுத்த அவகாசம் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது..

சண்டை சச்சரவு எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மோகம் தாபம் எல்லாம் இன்னொரு பக்கம் ஜெகஜோதியாக நடந்து கொண்டுதான் இருந்தது..

நேத்து ராத்திரி கூட அவன் மீது விழுந்தவள் 

பெரிய தோட்டம் தோட்டம்னு சொல்றீங்க கூட்டிட்டு போங்க அப்படி என்ன தான் இருக்கு ன்னு பார்கிறேன் "

இரவே அவளை தூக்கி பைக்கில் வைத்து கொண்டு தங்கள் வயல் வரப்புகளை காட்டியவன் 

"இதுல உட்கார் என்று அவளுக்கு மண் படாது டவலை விரித்து அவன் மணலில் அமர போக அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டவள் 

"இது இருக்கும் போது வொய் டவல்....  

"உட்கார்றது சரிதான் நேத்து தலைவலிக்குன்னு தலைவி தலைவனை பக்கத்தில் விட வில்லை" என்று அவளை தீ கக்க தயாராக இருக்கும் சூலை மீது இருத்தி அமர வைக்க 

இன்னைக்கு தலைவி நல்ல மூடில்தான் உள்ளார் தலைவா என்று அவள் இன்னும் தீ எரிய வைக்க அவனை நோக்கி அமர்ந்து கால்களை இரண்டு பக்கமும் போட்டு கொண்டு அமர 

அப்படியா அப்போ தலைவனுக்கு இங்கேயே பசி ஆத்தலாமே ?

"ஆத்திட்டா போச்சு என்று முன் புறம் கொக்கி வைத்த நைட்டியை கழட்டி விட்டவள் பிதுக்கி போட்ட உப்பு மீது நாவை வைத்து கோலம் போட்ட நெப்போலியன்... 

"யாராவது வந்தா என்னடி செய்வ இப்படி தூக்கி கொடுக்கிற..

"வந்தா மாமா கூட மஜா பண்ணிட்டு இருக்கேன் பத்து நிமிசம் கழிச்சு வாங்கன்னு சொல்லுவேன் என்று இடம் தேடி அலையும் மனைவிக்கு மணலில் படுத்து கொண்டே மடி மீது மலை ஏற இடம் கொடுத்தான்..

இப்படி தென்னை ஓலை உரசும் ஒலியில் நீரோடும் தங்கள் வயல் நடுவே தொட்டு தடவிய முதல் காதலி நிலம் மீது ,புதுகாதலி மனைவியை சுகிப்பது பரம போதையாக இருந்தது... எக்கி எக்கி நுரை பொங்க வைக்க பிரயத்தனம் படும் மனைவி துள்ளல் அவனுக்கு மட்டும் அடங்கா கழுதை அடங்கி கிடக்கும் இடம் இது அன்றோ !!

"இன்னும்டி குதிரைக்கு பின்னே அடி போட்டு விரைவு சொல்லி கொடுத்த கணவனுக்கு ஏற்ற விதமாக ஓடும் பெண் புரவி அவள் ஆகி போக...

கண்ணு எரியுது எல்லாம் உங்களால தூங்க விடல என்ற மனைவியை கண்டு முறைத்தவன்

"நீதான்டி தூங்க விடல உள்ளே போய் படு இளநீர் வெட்டி கொண்டு வர்றேன் 

ம்ம் என்று போன மனைவிக்கு வாழ்க்கையை கற்று கொடுத்து விட்டோம் என்று நிம்மதி ...

இன்னும் ஒரு பிள்ளை மட்டும் வந்துட்டா சரியா ஆகிடுவா , பிள்ளையை பத்தி அவளுக்கு என்ன தெரியும் வைத்தியர்கிட்ட கூட்டிட்டு போய் வரணும் 

பிள்ளை என்றதும் அவன் மீசையை திருகி முறுவலித்து சிரித்தான் 

"இருக்குமோ , என்னன்னு தெரியல பத்து நாளா ரொம்ப சோர்வா தெரிறா, பின்ன அவள தூங்க விடாம எனக்கு அத கொடு இதை கொடு ன்னு விதவிதமா கேட்டா .. அதுல என் பொண்டாட்டிய குறை சொல்ல முடியாது நான் ஒன்னு கேட்டா அவ ரெண்டு கேட்டு வாங்கிகிறதுல கில்லாடி கட்டிலில் போட்டா போட்டி போடும் மனைவியை எந்த விஷயத்தில் பிடித்ததோ இல்லையோ அதில் பிடிக்க தான் செய்யும் 

சார் சார் வீட்ல யாராவது இருக்கீங்களா? என்ற குரலில் மனைவிக்கு இளநீரை வெட்டி வைத்துக் கொண்டு இருந்த நெப்போலியன் சட்டையை அணிந்து கொண்டு வெளியே வந்து பார்க்க

யாரோ புதிதாக ஒரு பெண் நின்றார்

யாருங்க ?

மேடம் இல்லைங்களா?"

அக்கா பின்னாடி நிக்கிறா 

இல்ல சார் உங்க ஒய்ப் யாமினி இல்லையா

அவங்க அப்பா அனுப்பிவிட்ட டாக்டர் நான் "

டாக்டரா?? அவளுக்கு என்ன செய்யுது, என்ன விஷயம் டாக்டர் உள்ள வாங்க, அவளை வர சொல்றேன் என்று அவரை உட்கார வைத்துவிட்டு.. அறைக்குள் வர தலையை சீவிக் கொண்டிருந்த யாமினி 

யார் வந்திருக்கா ?

உன்னை பார்க்கிறதுக்கு தான் பட்டணத்தில் இருந்து பெரிய டாக்டர் வந்திருக்காங்க

"ஓஓஓ வந்துட்டாங்களா பத்து மணிக்கு தான் வருவேன்னு சொன்னாங்க 

"கொடி உன் உடம்புக்கு என்ன 

"எனக்கென்ன எதுவும் இல்லையே என்று ஷாலை எடுத்து மேலே போட்டுக் கொண்டு கண்மை பூசிக்கொண்டு வெளியே வந்தாள்

ஸ்ரீதேவியும் சத்தம் கேட்டு தன் தம்பி அருகே வந்தவர் ..

போன மாசம் கூட இந்த பொண்ணு வந்து பாப்பாவை ஏதோ செக் பண்ணிட்டு போச்சுடா

 "அப்படியா ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல??

தெரியலையே நானும் சொல்ல மறந்துட்டேன், பாப்பாவுக்கு என்ன எதுன்னு தெரியலையே அக்கா...

இரு பார்ப்போம் , உன் மகன் வாயிலிருந்து வார்த்தை வந்துட்டா தான் முத்து உதிர்ந்து போகுமே..

மருத்துவரை அழைத்து கொண்டு அறைக்குள் போய் யாமனி கதவை அடைத்தாள்... சிறுது நேரம் கழித்துப் பைலை புரட்டி பார்த்து கொண்டே யாமினி வெளியே வர 

அக்காவும் தம்பியும் என்ன நடக்குது இங்க என்று தெரியாது வேடிக்கையாளர்கள் போல நின்றனர் 

ஓகே யாமினி ஹெல்த் பார்த்துக்கோங்க நல்லா சத்தானது சாப்பிடுங்க 

ம்ம் ஓகே , 

"டாக்டரம்மா அவளுக்கு என்ன ஆச்சு "என்று ஸ்ரீதேவி பதறி ஓடி வந்து டாக்ட்டர் கையை பிடித்து கொள்ள டாக்டர் யோசனையாக யாமினியை பார்த்தவர் அவள் கண்டுகொள்ளாது பைலை பார்க்கவும் 

அது 

எதுன்னாலும் சொல்லுங்க டாக்டரம்மா...பயமா இருக்கு 

பயப்பட ஒன்னும் இல்லை அம்மா அவங்க கன்சீவா இருக்காங்க "

அப்படின்னா??? அக்காவும் தம்பியும் ஒருபோல கேட்க 

பிள்ளை உண்டாகி இருக்காங்க, இது ரெண்டாவது மாத செக்கப், அதுக்கு தான் வந்தேன், குழந்தை நார்மலா இருக்கு மேடமுக்கு தான் கொஞ்சம் ப்ரஷர் சாஸ்தி அப்டேட் எல்லாம் மேடம் கிட்ட கொடுத்து இருக்கேன் பார்த்துக்கோங்க "என்று வி்ட்டு போக 

அய் என் பொண்ணு அம்மா ஆகிட்டா" என்று ஸ்ரீதேவி சீனியை எடுத்து கொண்டு வந்து கல் போல அமர்ந்திருந்த நெப்போலியன் வாயில் போட போக அதை தடுத்து நிறுத்தியவன் எழும்பி மனைவி அருகே வந்தான்...

என்ன கொடி இது ??

என்ன எது ??

நீ பிள்ளை உண்டாகி எத்தனை நாள் ஆகுது?? 

அது இருக்கும் ரெண்டு மாசம்" என்றாள் தோளை உலுக்கி ...

உனக்கு தெரியுமா ??

ம்ம் தெரியும் 

ஏன் என்கிட்ட சொல்லலை... அவன் முகத்தில் அடக்கப்பட்ட கோவம் 

எவ்வளவு பெரிய வேதனை , கூடவே இருக்கும் மனைவி இதை கூறாது இருக்க ஆணாக அடிபட்டு போனான்..

சொல்ல தோணல, "

நான் அந்த குழந்தைக்கு அப்பாடி 

யார் இல்லைன்னு சொன்னா..."

"நீ என்னதான்டி நினைச்சிட்டு இருக்க , என்ன பார்த்தா உனக்கு பைத்தியக்காரன் போல தெரியுதா குழந்தை உண்டானதை சொல்ல கூடாத அளவுக்கு நாங்க என்னடி உன்ன செஞ்சோம்...

தோணல சொல்லலை எதுக்கு இப்போ கத்துறீங்க .என்று அவள் அறைக்குள் நுழைய பார்க்க கையை நீட்டி தடுத்த நெப்போலியன் 

ஒரு முடிவை சொல்லிட்டு போ 

என்ன முடிவு ??

என் மனைவியா சுக துக்கங்களை பரிமாறி என் கூட இருக்கிறதா இருந்தா இரு ,இல்லை உன் இஷ்ட கூந்தலுக்கு இஷ்டப்படி தான் வாழ்வ இருப்பேன்னா என்று வாசல் நோக்கி கையை நீட்டினான்....

உனக்கு தந்த ஆறு மாச அவகாசம் முடிஞ்சு போச்சு இருக்கணுமா போகணுமா நீயே யோசிச்சு முடிவு எடுத்துக்க கட்டாய படுத்த மாட்டேன் "

எய்யா"

அக்கா இது என் வாழ்க்கை பிரச்சனை மட்டும் இல்லை என் பிள்ளை வாழ்க்கையும்.. இப்படி தனிதனியா முடிவு எடுத்து தான் நீங்க வாழ்க்கையை தொலைச்சிட்டு இப்படி ஒரு அடங்காப்பிடாரியை வளர்த்து விட்டிருக்கீங்க, என் பிள்ளைகளுக்கும் இந்த நிலமை வேண்டாம்.. நான் என்ன அவளை அப்படி இரு இப்படி இருன்னா சொல்றேன் நல்லது கெட்டது கூட என்கிட்ட சொல்ல மாட்டான்னா அப்போ எதுக்கு நான் புருசன்னு... ஸ்ரீதேவி பெருமூச்சு விட்டு ஒதுங்கி கொண்டார்.. 

அவளே முடிவு எடுக்கட்டும் புருசன் , பிள்ளை குட்டின்னு வாழ ஆசைப்பட்டா நெப்போலியன் மனைவியா இருக்கட்டும் .. இல்லை தனிக்கருத்து தனிமுடிவுன்னு தான் இருப்பேன்னா "என்றவன் பேச்சு தடைப்பட்டு போனது மனைவி இழுத்து கொண்டு வந்த சூட்கேஸில்... நெப்போலியன் இடிந்து போனாலும் அவள் வழியை விட்டு விலகி நிற்க 

எம்மாடி என்று ஸ்ரீதேவி மகள் அருகே ஓட போக அக்காவை கை நீட்டி தடுத்த நெப்போலியன் 

விடு... இதுதான் அவ முடிவுன்னா கட்டாயபடுத்தாத...மசக்கையா இருக்க டிரைவர் போட்டு அனுப்புறேன்...

ம்ம் என்று விட்டு தன் பொருட்களை எல்லாம் சேகரித்து காரில் வைத்த அவளை நெப்போலியன் சத்தம் இல்லாது பார்த்தான்

 ஜூலி கம் என்று நாயை அழைக்க ,அதுகளோ இப்போது தான் உய்யா உய்யா என்று வாழ ஆரம்பித்தது அட படுபாவிகளா!! உங்க பஞ்சாயத்துல எங்களை ஏன்டா பிரிக்கிறீங்க என்பது போல ரோமி கார் அருகே போய் உர் உர் என்று காரில் சீட்டில் அமர்ந்திருந்த காதலியை கண்டு அழ .... 

அது வேணுமா என்று யாமனி ஜூலியிடம் கேட்க அது அழுது வைக்க கார் கதவை திறந்து ரோமியையும் உள்ளே ஏத்தி கொண்டாள்...

பார்த்து கூட்டிட்டு போங்க , அங்க போய் சேர்ந்ததும் போன் போட்டு சொல்லுங்க அண்ணா, மசக்கை ஆனவ வண்டியை மெதுவா ஓட்டுங்க, இடையில எதாவது வாங்கி கொடுங்க என்று காருக்குள் தலைவிட்டு டிரைவரிடம் பத்திரம் சொல்லும் கணவனை கண்டது போல இல்லை .. காதில் போனில் இடுக்கி கொண்டிருந்த யாமினி 

"டேடி ஆறு மாசம் முடிஞ்சிருச்சு நான் கிளம்பிட்டேன்..என் ரூமை ரெடி பண்ணி வைக்க சொல்லுங்க என்று கட்டளை போட ... நெப்போலியன் நகர்ந்து வண்டிக்கு வழி கொடுக்க அவள் வந்த வழியே திரும்பி போனாள்!! 

ஏன் என்றே தெரியாது வரும் நேசங்கம் ஏன் என்றே தெரியாது போகவும் செய்து விடுகிறது ...