அநாயகா-53

அநாயகா-53

அநாயகா-53

இளந்தீரனுக்கு மதுமதி செத்ததுல எந்தவித கஷ்டமும் இல்லை, வருத்தமும் இல்லை.

ஆனால் ரகுவரன் இவ்வளவு பரிதாபமாக செத்தது அவனுக்கு வலித்தது. என்னதான் இருந்தாலும் உயிர் நட்பு அல்லவா!ஆனாலும் அவனுக்கு இது தேவைதானே!

‘கூடா நட்பு கேடில் முடியும் என்பதுபோல என் வாழ்க்கைதான் இவனுங்களால சூன்யமாகப்போயிற்று!அவனுக்கு காதலி சரியில்வாமல் போச்சு உயிரும் மயிரு மாதிரி போயிடுச்சு!இதுக்கு நம்ம ஒன்னும் செய்யமுடியாது’ என்று தன்னுடைய மனசை தேத்திக்கிட்டான்.

அவங்க இரண்டுபேரோட உடலையும் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல போஸ்ட்மார்ட்டத்திற்காக வைத்திருந்தனர். அதுதான் அன்றைய முக்கிய செய்தியாக இருந்தது.

அமைச்சர் இளந்தீரனின் மனைவி மற்றும் மாமனாரைக் கடத்திக்கொலை செய்ய முயற்சி!கொலைசெய்ய முயன்ற எதிர்கட்சித் தலைவர் சிவானந்தனின் மகளும் மருமகனும் தங்களைதாங்களே தாக்கி இறந்த சம்பவம்! ஊரே பரபரப்பு!போலீசார் வெற்றிகரமாக இளந்தீரனின் மனைவி ஆதிராவையும் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசந்திரனையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்!என்று எல்லா சேனல்களிலும் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது.

அதை வீட்டிலுள்ளவர்கள் பார்த்துவிட்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினார்கள். இளந்தீரன் ஆதிராவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். அவள் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள். ஜெயசந்திரனுக்கு ஒன்னுமில்லை என்பதால் அவரும் அந்த ரூம்லயே உட்கார்ந்திருந்தார்.

அவருக்கு நடந்தை இளந்தீரன் சொல்லிருந்தான். அவரால் நம்பவே முடியவில்லை.

ஆனலும் நம்பித்தானே ஆகணும். அவள் அப்படித்தானே அரக்கி மாதிரி நடந்துக்கொண்டாள்.

மொத்த குடும்பமும் பதறியடிச்சுட்டு ஹாஸ்பிட்டல் வந்துவிட்டனர்.

மகேஷ்வரி மகளைப் பார்த்துவிட்டு அழுதார். கவிதா மகனின் கையைப் பிடித்துக்கொண்டார்.

சங்கி ஆத்தா ஜெயசந்திரனின் தலை தடவிக்கொடுத்தவர் “இரண்டாவது தடவையா உயிர்பொழைச்சு வந்திருக்க. இதுக்குபிறகு எந்த இதுவும் வரக்கூடாதுன்னு சாமியை வேண்டிக்கணும்”என்று மகனை பாசமாகப் பார்த்தார்.

அதுசரி அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க பிள்ளைங்கதானே முக்கியம்!

இன்னும் ஆதிரா கண்முழிக்கவில்லை என்றதும் எலோருக்குமே கவலைதான். இப்போவரைக்கும் குடும்பத்துல உள்ளவங்களுக்கு ஜெயசந்திரன் கோமாவுல இருந்தமாதிரி முணுமாசமா நடிச்சது தெரியாது. அதை வெளியே சொல்லவும் மாட்டாங்க. 

இளந்தீரன்தான் ரொம்ப நேரம் யோசனையில் இருந்தான். அவன் என்ன யோசிக்கிறான்னு யாருக்குமே புரியலை.

இங்கே சிவானந்தன் வீட்டினை சுற்றியும் போலீசார் நின்றிருந்தனர். ஆதிராவையும் ஜெயசந்திரனையும் சிவானந்தன்தான் கடத்தச்சொல்லிருப்பாரோ?

அதனால்தான் மதுமதியும் ரகுவரனும் கடத்தியிருப்பாங்களோ? என்ற சந்தேகம் வந்தது. அந்த சந்தேகத்தின் அடிப்படையில் சிவானந்தனை விசாரிக்க கைது செய்ய போயிருந்தார்கள்.

சிவானந்தனுக்கு கடத்தல் விவகாரம் எல்லாம் தெரியும். இரண்டுபேரும் கொலை பண்ணிட்டு சத்தமில்லாமல் வருவாங்கன்னு எதிர்பார்க்க, இப்போ இரண்டுபேரும் இறந்துட்டாங்க அப்படின்னாதும் தாங்கிக்க முடியாது உடைந்துப்போய் உட்கார்ந்துவிட்டார்.

மரகதத்தால் இதைத்தாங்கிக்க முடியாது நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள்.

“இப்படி என் பொண்ணை கொன்னுட்டியே பாவி. அவளை அரசியல்ல இறங்கவேண்டாம் கல்யாணத்தைப் பண்ணிட்டு வாழ்ப்பாருன்னு சொல்லித்தானே கல்யாணத்தை முடிச்சு வைச்சேன். இப்படி வயித்துல பிள்ளையோட போயிட்டாளே. அவா தப்பா முடிவெடுக்கான்னு அப்பவே சொன்னனே கேட்டியா” என்று அவரை அடித்தார்.

இனி அழுது புலம்பி என்ன பயன்?போனவங்க இரண்டுபேரும் திரும்பவா வரப்போறாங்க! 

சிவானந்தனை அடுத்த ஒர மணி நேரத்துலயே கைது பண்ணிக்கூட்டிட்டுப் போயிட்டாங்க. இனி அவர் வாழ்க்கை ஜெயிலுக்குள்ளும் கோர்ட்டுக்குள்ளும்தான் இருக்கும்!நம்ம என்ன செய்கிறமோ அது நம்ம பின்னாடியேதான் வந்து நிற்கும்!

நம்ம அடுத்தவன் முதுகுல முதுகுல குத்தினா நம்ம முதுகுல குத்த ஒருத்தனை ரெடி பண்ணி வைச்சிருக்கும் இந்த வாழ்க்கை!இதுதான் உலக நியதி!

ஆதிரா மெதுவாக கண்ணை முழித்துப் பார்த்தாள். பக்கத்தில் மகேஷ்வரி உட்கார்ந்திருந்தார்.

மற்ற எல்லோரும் வீட்டுக்குப் போயிட்டாங்க!ஜெயசந்திரன் அங்கயே பக்கத்தில் ஒரு பெட்டில் படுத்திருந்தார்.

அவள் கண்ணுமுழிச்சதும் மெதுவாக எழுந்து உட்கார்ந்தவள் மகேஷ்வரியைப் பார்த்தவள் “அப்பா எங்கம்மா?”என்று கேட்டாள்.

அவளது சத்தம் கேட்டு ஜெயசந்திரன் எழுந்து வந்து அவளது கையைப்பிடித்துக்கொண்டார்.

“ஊப்ஸ் பார்த்தீங்களா அந்த மதுமதியை உங்க மருமகன் வீட்டுக்குள்ள விட்டதுல யாருக்கெல்லாம் பிரச்சனையா வந்து நிக்கிது. நல்லவேளை அவளே செத்துப்போயிட்டா. இல்லைன்னா இன்னும் உங்க மருமகன் அவளை கூட்டிட்டு வந்து நம்ம வீட்டுக்குள்ளயே விட்டிருப்பான். எந்த கடவுள் நமக்கு இறங்குனாரோ தெரியலை உங்க எல்லோரையும் காப்பாத்திட்டாங்க.அவனுக்கும் கையில நாலு தையலோட போச்சு. எது எப்படியோ நம்ம குடும்பத்துக்கு பிடிச்ச மொத்த பீடையும் செத்துப்போனது நல்லதுதான்”என்றவரே மகேஷ்வரியும் ஆதிராவின் தலையை வருடிக்கொடுத்தார்.

மகேஷ்வரி திட்டிக்கொண்டிருக்க ஆதிரா அதுக்கேட்டதும் “ என்னது மதுமதி செத்துட்டாளா?”என்று அதிர்ச்சியில் ஜெயச்சந்திரனைப் பார்த்தாள்.

“ஆமாடா ரகுவரனும் அவளும் செத்துப்போயிட்டாங்க. என்ன நடந்துச்சுன்னு நான் அப்புறமா சொல்லுறேன். நீ இப்போ எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத”

“எப்படி செத்தாங்க?”

“அது எதுக்கு உனக்கு செத்துட்டாங்க அவ்வளவுதான் வேற எதையும் நினைக்காத. நல்ல ரெஸ்ட் எடு. இராத்திரி வீட்டுக்குப்போகலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க”

“ம்ம்ம் உங்க மருமகனை எங்க?”என்று ஏதோ கேட்கணுமே என்பதால் கேட்டாள்.

“அவனா வெளியே பேசிட்டிருக்கான். அவனுக்கும் கையில வெட்டுப்பட்டிருக்குல்ல எப்படி பட்டுச்சு என்னன்னு விச்ரிச்சிட்டிருக்காங்க?அவன் மட்டும் சரியான நேரத்துக்கு வரலைன்னா நினைக்கவே பயமாயிருக்கு?”

“இவ்வளவுக்கும் காரணமே அவங்கதானேப்பா. அவங்க ஒழுங்கா இருந்தா ஏன் இவ்வளவுதூரம் வரப்போகுது”என்று அடக்கப்பட்ட கோபத்தில் பேசினாள்.

“ஆதும்மா நமக்குத் தெரியாத நிறைய விசயங்கள் இருக்கு. எதையும் தெரிஞ்சிக்காமல் சட்டுன்னு குற்றம்சாட்டக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா?உன்கிட்ட இந்தமாதிரி பேச்சுக்களை எதகர்பார்க்கல”என்று கோபப்பட்டார்.

ஆதிராவை திட்டியதும் மகேஷ்வரிக்கு கோபம் வந்துவிட்டது.

“அவ சொல்லுறதுல என்ன தப்பிருக்கு அவனாலதான் இவ்வளவும் வந்துச்சு. சும்மா அவளைத் திட்டாதிங்க. எப்பவும் உங்களுக்கு உங்க மருமகன்தானே பெருசு”என்று மகேஷ்வரி கணவரிடம் சாடினார்.

“உனக்கு ஒன்னும் தெரியாதுடி நீ சும்மா இரு. அன்னைக்கு வீட்டுக்கு வரும்போதே தீரா எல்லாத்தையும் என்கிட்ட பேசிட்டான்.இந்த மதுமதியைப்பத்தியும் சொல்லிட்டான். அவளோட திட்டமே வேற. நம்ம குடும்பத்தை மொத்தமா நாசம் பண்றதுதான் அவளோட மொத்த ப்ளானுமே. உனக்கு அரசியல் சூதும் அதோட நடக்கிற கொலைகளைப் பத்தியும் எதுவும் தெரியாது. நீ சும்மாயிரு. அவன்தான் மொத்தமா என்னையும் ஆதிராவையும் காப்பாத்தியிருக்கான். சும்மா அவனைப் பத்திக் குறைச் சொல்லக்கூடாது. இனி அவனைப் பத்தி தப்பா பேசாத.என்னை இரண்டுதடவை அவனுங்ககிட்டயிருந்து காப்பாத்தியிருக்கான். ஆதிராவுக்கும் இது தெரியும். பேசாமல் இருங்க”என்று திட்டவும் அமைதியாகிவிட்டனர்.

மதுமதி செத்திட்டான்னு கேட்டதுமே ஆதிராவுக்கு திக்குன்னுதான் இருந்தது. 

“அவள்கிட்ட கடைசியா பேசிட்டிருந்தது அத்தான்தானே. அங்க ரகுவரன் எப்படி வநதான். என்னாச்சு?அத்தானே மதுமதியை கொன்னுட்டாங்களா?

எனக்காகவா?”என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு அவனைப் பார்க்கணும்போல இருந்தது. ஆனாலும் அவன்மேல உள்ளக் கோபத்தில் அதைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

ஒருவழியாக போலீஸ் மீடியான்னு எல்லா விசாரனையும் முடிஞ்சு ரூமுக்கு வந்தவனை ஆதிரா ஏறிட்டுப்பார்த்தாள்.

அவனோ அவளைக் கண்டுக்காது ஜெயசந்திரனைப் பார்த்து நின்றவன் “ மாமா இப்போ டிஸ்சார்ஜ் ஆகிடலாம். வீட்டுக்கு போகும்போது போலீஸ் காவலோடுதான் இனி போகமுடியும். சிவானந்தனையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க. ஆனாலும் அடுத்து என்ன நடக்கும்னு நம்ம யூகிக்க முடியாது. ஏற்கனவே வீட்டைச் சுத்தியும் காவலுக்கு போலீஸ்காரங்களை போட்டாச்சு. கொஞ்சநாளைக்குக் கழனமா இருந்தா போதும். இனி அவங்களால எந்த பிரச்சனையும் வராதுன்னு நம்புவோம். வாங்க கிளம்பலாம்”என்றுவிட்டு அவன் வெளியே போய்விட்டான்.

ஆதிராவுக்கு கோபம்வந்துவிட்டது.

“இவங்க என்ன நான் எழுந்துட்டன்னா?எப்படி இருக்கேன்னு ஒன்னுமே கேட்கலை. அதுபாட்டுக்கு வந்துட்டு அதுபாட்டுக்கு போறாங்க. செய்கிற தப்பெல்லாம் இவங்க செய்துட்டு என்னை கண்டுக்காமல் போறதை பாரேன். நானும் இனி கண்டுக்கமாட்டேன்”என்று மனதிற்குள் உறுதியா நினைத்துக்கொண்டாள்.

அதுக்கபுறம் ரெடியாகி வெளியே வந்தவர்கள் காரில் ஏறி உட்கார்ந்ததும் இளந்தீரன் வெளியே நின்றவாரு டிரைவரிடம் பேசியவன் அவனது பெயர் எல்லாம் கேட்டுவிட்டு, போலீசாரிடமும் பேசிவிட்டு அவர்கள் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு ஏற்பாடு பண்ணிதான் வீட்டுக்கு அனுப்பிவைத்தான்.

அப்போ இவங்க நம்மக்கூட வீட்டுக்கு வரலையா?என்று யோசனையோடு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“சரி மாமா நீங்க கிளம்புங்க. நான் என்னோட கார்ல கிளம்புறேன்”என்றவன் வேகமாகப் போய் அவன் காரில் ஏறிக்கொண்டான்.

“அப்பா அத்தான் நம்மக்கூட வரலையா?”

“இல்லா அவன் அவன்வீட்டுக்குப் போறான். நம்ம நம்ம வீட்டுக்குப் போறோம்”

“ஏன்?”

“இதென்ன கேள்வி ஆதிரா. இனி அவன் வீடும் உன் வீடும் தனித்தனிதானே. நீ டைவர்ஸ் கேஸ் போட்டிருக்கல்ல. அப்புறம் ஏன்னு என்ன கேள்வி கேட்கிற?” மகேஷ்வரியே பாயிண்டாகப் பேசினார்.

‘ஆஹா நம்ம பொண்டாட்டியே இவளை மொத்தமா பிரிச்சுக்கூட்டிட்டு வந்திடுவா போலயே’ என்று ஜெயசந்திரன் பயந்தார். 

மகேஷ்வரியிடம் திரும்பியவர் “கொஞ்சம் சும்மா இருக்கியா நீ. எதுன்னாலும் அப்புறம் பேசிக்கலாம்” என்று சத்தம்போட்டவர் அத்தோடு பேச்சை முடித்துக்கொண்டார்.

ஆதிராவுக்கு ஒரு மாதிரி மனசுக்குள்ள ஏதோ குற்றவுணர்ச்சியாகவே இருந்தது. 

‘டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டமோ?என்ன நடந்திட்டிருக்குன்ன அத்தான்கிட்ட முழுசா பேசி தெரிஞ்சிருக்கணுமோ?”என்று யோசனையோடு இருந்தவளுக்கு உடம்பு ரொம்ப டயர்டாக இருக்கவும் அப்படியே அம்மாவின் தோளில் தலையை சாய்த்துகொண்டாள்.

ஜெயசந்திரனும் ஒன்றுமே கேட்கவில்லை. அவளே கலங்கித் தெளியட்டும் என்று விட்டுவிட்டார்.

வீட்டுக்கு வந்துமே ஆதிரா படுத்தே இருந்தாள். அவளது மனசு சோர்வாங உணரவும் உடம்பும் சோர்வை உணர்ந்தது.

ஒரு நாள் முழுவதும் அவள் அப்படித்தான் இருந்தாள். அங்கே கவிதா எப்பவும்போல இளந்தீரனுக்கு சமைச்சு வைச்சிட்டு அங்கதான் இருந்தார்.

மதுமதி செத்த விசயம் கேள்விபட்டதும் அவருக்குமே அதிர்ச்சிதான். இப்போ நேரடியாகவே மகனிடம் கேட்டார்.

“தம்பி ஏன்டா அந்தபொண்ணு செத்துச்சு.அதுவும் அவா புருஷன்கூட சேர்ந்து செத்துப்போச்சு. நீதான் அவங்களுக்கு இடையில் பிரச்சனையா இருந்தியா?உனக்கும் மதுமதிக்கும் ஏதாவது?”என சந்தேகமாகக் கேட்டார்.

அவன் அந்தக் கேள்வியில் கவிதாவை முறைத்துப் பார்த்தவன் “ நான் என்னைக்காவது அவக்கூட வாழ்ப்போறேன்னு சொல்லிருக்கனா?இல்லை அவா இங்கதான் இருப்பான்னு சொன்னனா?அவா பிரச்சனை முடிஞ்சதும் போயிடுவான்னுதானே சொன்னேன். இப்போ எதுக்கு இப்படி அசிங்கமா கேள்வி கேட்டகிறீங்க கவிதாகுமாரி?”

“அதில்லடா அதுதான் அந்த இராட்சஷி செத்துப்போயிட்டளே. நம்ம ஆதிராவை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல ஏன் கூட்டிட்டு வரல.அதுதான் கேட்டேன்”

“உன் மருமகளை நான் என்னைக்காவது வேண்டாம்னு சொல்லிருக்கனா?இல்லை வீட்டைவிட்டுப்போன்னு விரட்டிருக்கனா?நான் இப்போ இருக்கிற இந்த பதவியே அவா போட்ட பிச்சைதான். அவா என்னைப் புரிஞ்சிக்காமல் போயிட்டா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும். என்கிட்ட இருந்து பிரிஞ்சிருக்கதுதான் அவளுக்கு சந்தோசம்னா அவளுக்காக அவக்கேட்டமாதிரி விவாகரத்துக்கூட கொடுத்திடுறேன். அவள் நிம்மதியா சந்தோசமா இருந்தா போதும்”என்றவன் பாதி சாப்பாட்டுலயே எழுந்துப்போய்விட்டான்.

“இந்த ஆதிரா எதுக்கு இப்போ டைவோர்ஸ் கேட்டு போயிருக்கான்னு தெரியலை. இவன் என்னடான்னா அவா கேட்டா டைவர்ஸும் குடுப்பேன்னு சொல்லுறான். இது எங்கப்போய் முடியும்னு தெரியலையே?” என்று அவங்க வாழ்க்கைக்காக புலம்பிக்கொண்டிருந்தார்.

ஆதிராவால் அங்க நிம்மதியா இருக்கமுடியல. ஒருநாள்தான் ஆகிருக்கு அதுக்கே அவளது ரொம்ப மனசு கணத்துப்போய் கிடந்தது. எழுந்துப்போய் பால்கனியில் அமைதியாக உட்கார்ந்திருந்தவள் முன்னாடி ஜெயசந்திரன் வந்து உட்கார்ந்தார்.

அவரைப்பார்த்து சோகசித்திரமாக சிரித்தவளின் கையைப்பிடித்து தன் பக்கத்தில் உட்காரவைத்தவர்.

“எதுக்குமா இவ்வளவு யோசிக்கிற?தீரன் தப்பு பண்ணிருப்பான்னா இவ்வளவு யோசிக்கிற?”

அதைக்கேட்டதும் அவரது முகத்தைப் பார்த்தவள் திரும்பிக்கொண்டாள். அவளது கண்கள் கலங்கிப்போயிருந்தது.

“தீரன் அன்னைக்கு மதுமதியோட நம்ம வீட்டுக்கு வந்தப்பவே இப்படியொரு சூழ்நிலை வரும் மாமான்னு என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டுத்தான் போனான். அவங்க என்னையும் அவனையும் கண்டிப்பா ஏதாவது செய்வாங்கன்னுதான் யோசிச்சான். உன்னை கடத்துவான்னு அவனுமே யோசிக்கலை. அவங்களோட டார்கெட்டே பதவியில் இருக்கிற நாங்க இரண்டுபேரும்தான்”

அவளோ அதைக்கேட்டு புரியாமல் பார்த்தாள். ஜெயசந்திரன் ரகுவரன் மதுமதி தற்கொலை நாடகதையும், அது நாடகம்னு தெரிஞ்சும் மதுமதியை வீட்டுக்குக் கூட்டிட்டுவந்ததும்னு இப்போ அவள் எப்படி செத்தாள் என்பதுவரைக்கும் சொல்லிமுடித்தார்.

ஆதிரா அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள். “அத்தானையே கொல்லுறதுக்கு வந்தாளா?அவளே அவக்கழுத்தை அறுத்துக்கிட்டாளா?கடவுளே!”என்று நெஞ்சில் கையைவைத்து அதிர்ந்து பார்த்தாள்.

“அந்தப்பொண்ணு நல்ல அறிவுள்ள பொண்ணு. உன்னைவிடவும் புத்திசாலி. ஆனால் சிவானந்தன் தவறா வழிநடத்திட்டான். நேர்மையா உழைச்சா அந்தப்பொண்ணு எனக்கு எதிரா தேர்தல் நின்னுக்கூட ஜெயித்திருக்கமுடியும். குறுக்குவழியில மேலவரணும்னு நினைச்சா இப்படித்தான்!”

“அப்பாஆஆ”

“உன்னைவிட அறிவுள்ள பொண்ணுன்னு சொன்னது உண்மைதான். அதுக்காக கோபப்படாத. இளந்தீரனை அன்னைக்கு குத்தினதும் அவள்தான்னு தெரிஞ்சிருக்கு. அதுதான் அன்னைக்கு என்கிட்ட பேசிட்டிருந்தபோது சொன்னான்.

ஆதிரா என் தேவதை மாமா. எந்தவிதமான பழுதே சொல்ல முடியாதளவுக்கு என்மேல் காதலைக் கொட்டுற தேவதை மாமா. அவா மட்டும் அன்னைக்கு என்னைத் தேடிவந்து காப்பத்தலைன்னா புழுபிடிச்சு, யாரும் தேடாமல், அப்படியே உயிரோடவே கொஞ்சம் கொஞ்சமா செத்திருப்பேன். என்னை தொட்டு உயிர்பித்த காதல்தேவதை அவாதான் மாமா. அவளைப் பத்திரமா பார்த்துப்பேன் மாமான்னு என் கையைப்பிடிச்சு சத்தியம் பண்ணிட்டுப் போனான். அவன் எப்படி மதுமதியை ஏத்திக்கிட்டிருப்பான்?எனக்கு தீரன்மேல நம்பிக்கை இருக்கு. இப்போவும் நீ தள்ளியிருக்கன்னுதான் அவனும் உனக்காக தள்ளியிருப்பான். நீ கேட்டா விவாகரத்தும் உனக்காக தருவான்”என்று சொன்னவரின் குரலில்வேதனை தெறித்தது.

அதைக்கேட்டவளுக்கோ மனது விம்மி வெடித்தது. எதுவுமே பேசாமல் அமைதியாக அவரது தோளில் சாய்த்து அழுதாள்ன அவளது மனதிற்கு சமாதானம் கிடைக்கிறவரைக்கும் அழுதாள்.

அவரும் அவளது முதுகைத் தடவிக்கொடுத்து சமாதானப்படுத்தினார். அதன்பிறகு இரண்டுநாள் கொஞ்சம் அமைதியாக இருந்தாள்.

மூன்றாவது நாள் இராத்திரி சாப்பாட்டுக்கு அவளை மகேஷ்வரி கூப்பிட அவளைக் காணவில்லை. வீடெல்லாம் தேடிப்பார்த்தும் அவளில்லை என்றதும் எல்லோரும் பயந்துவிட்டனர்.

காலையில்தான் சிவானந்தன் வேற ஜாமீனில் விடுதலையாகிவந்திருந்தார்.

“ஐய்யயோ என் பொண்ணை மறுபடியும் யாரோ கடத்திட்டாங்கன்னு” மகேஷ்வரி அழவே ஆரம்பித்துவிட்டார்.

ஒருவேளை கடத்திருப்பாங்களோ?என்று எல்லோரும் பயந்து ஆதிராவை தேட ஆரம்பித்தனர்.