அநாயகா-52

அநாயகா-52

அநாயகா-52

மதுமதி வெளியே ஓடிப்போய் காரில் ஏறுவதற்குப் போனாள். அது அவனது கார் இல்லை. அது ரகுவரனுடைய கார் என்றதும் சந்தேகத்துடன் உள்ளே எட்டிப்பார்த்தாள்.

ரகுவரன் அப்படியே மூச்சுக்கு ஏங்கி ஏங்கித் துடித்துக்கொண்டிருந்தான்.

“ஐய்யோ மாமா என்னாச்சு?”என்று பதறியவள் காரின் டோரைத் திறக்க முயன்றாள்.

ஆனால் மதுமதியால் அந்த கதவை திறக்க முடியவில்லை. 

உடனே பதறியவள் “ஐயோ மாமா என்னாச்சு?நீங்க எப்படி இங்க வந்தீங்க?கார் சாவி யாருக்கிட்ட இருக்கு?” என்றீ பதறி அழுதாள்.

அடுத்து என்ன செய்யலாம் என்று எதையும் யோசிக்க முடியாது திணறினாள்‌.

அச்சோ யாராவது வந்து என் மாமாவைக் காப்பாத்துங்க என்று கத்தியவாறே காரை சுத்தி சுத்தி வந்தாள். 

ரகுவரனை வெளியே கொண்டுவர என்னவெல்லாமோ செய்தாள். அது எதுவுமே வேலைக்காகவில்லை என்றதும்‌ மறுபடியும் ரகுவரனை கண்ணாடியைத் தட்டிக்கூப்பிட்டாள்.

உள்ளிருந்த ரகுவரனோ “இளந்தீரன்கிட்டதான் சாவி இருக்கு. போய் வாங்கிட்டு வா” என்று கையால் செய்கை செய்தான்.

“அவன்கிட்டயா?நீங்க காருக்குள்ள இருக்கீங்கன்னு சொல்லவேயில்லையே. அவன் காருக்குள்ளபோய் உட்காருன்னுதானே அனுப்பினான். அப்போ அப்போ ஏதோ திட்டத்தோடுதான் வந்திருக்கானா?அவனுக்கு இருக்கு”என்றவள் கோபத்தில் மறுபடியும் அந்த வீட்டுக்குள்ளே ஓடினாள்.

“டேய் இளந்தீரா எதுக்குடா ரகுமாமாவை காருக்குள்ள அடைச்சு வச்சிருக்க? அவருக்கு மூச்சு முட்டுதுடா. சாவியை தாடா கார் டோரைத் திறந்து விடுடா” என்று இளந்தீரனை மரியாதை இல்லாம பேசினவாறு அவனைக் கொன்றுவிடும் கோபத்தில் ஆங்காரமாக நின்றிருந்தாள்.

அவள் இத்தனை நாளும் “இளா அத்தான் இளா அத்தான் என்று கூப்பிட்டு கூப்பிட்டு மயக்கின அந்த ந நடிப்பெல்லாம் போய்விட்டது. இப்போது வெளிபட்டதுதான் அவளது உண்மையான குணம். அந்த குணம் அவளது முகத்திலும் உடலிலும் தெரிந்தது. அவளை கண்ணெடுக்காது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த இளந்தீரன் அவளை பார்த்து மெதுவாக சிரித்தான்.

அவன் சிரிப்பதைப் பார்த்ததும் நெஞ்சமெல்லாம் எரிந்தது. என் மாமா, என் புருஷன் அங்க உயிருக்குப் போராடிக்கிட்டிருக்காங்க. இவன் இங்க இருந்துட்டு நம்மளைப் பார்த்து சிரிக்கிறானே என்றுதான் கோபம் வந்தது.

அதனால் இளந்தீரனைப் பார்த்து கையைக்காட்டினாவள் “ஏன்டா சிரிக்கிற?எதுக்குடா சிரிக்கிற? என் புருஷன் அங்க மூச்சு விட முடியாமல் மூச்சுக்கு திணறிட்டு இருக்காங்க,அவங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா இங்க நின்னு சிரிச்சிட்டிருக்க. கார் கீ உன்கிட்டதானடா இருக்காமா. எதுக்குடா அவரை உள்ளை வைச்சு பூட்டிட்டு என்சினை ஓடவிட்டுட்டு வந்த. கீயை குடு நான் அவங்களை வெளிய கொண்டுவந்து காப்பாத்தாணும்” என்று கேட்டாவாறே அவன் அருகில் வந்தாள்.

அவள் வேதனையோடு பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, இப்போதும் அவளைப் பார்த்து இளந்தீரன் சிரித்தான்.

அவளுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பொறுமையும் காற்றில் பறந்துவிட்டது.

அதனால் ஓடிவந்து அவனது சட்டையை பிடித்து இழுத்தவள் “சாவி கொடுடா என் மாமாவை காப்பாத்தணும். ரகுவரன் அங்க துடிச்சிட்டு இருக்காங்க” என்றவளின் கண்கள் கலங்கியது, அப்படியே பதட்டத்துடன் சத்தமாக அழுதாள்.

அவளது கையை தனது சட்டையில் இருந்து எடுத்துவிட்டவன் “ஏன்டி உன் புருஷன், உன் மாமான்னதும் இவ்வளவு அழுகையும் இவ்வளவு கோபம் வநது துடிக்கிறியே. அப்படியே அவனைக் காப்பாத்தணும்னு ஓடுறியே,இதே மாதிரிதானே என் பொண்டாட்டியை எனக்கு காப்பாத்தணும்னு இருக்கும்,துடிச்சிருப்பேன். இங்கே இப்படி இரத்தம் வடிய வடிய உட்க்காந்திட்டிருக்கேன். இது உன் கண்ணுக்கு தெரியலை. ஆனால் உன் புருஷன் லேசா மூச்சு விட முடியாமல் அங்கே காருக்குள்ள இருக்கான்னதும் அதை பெரிய விஷயமாக வந்து பேசிட்டிருக்க. எங்களையெல்லாம் பார்த்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி இருக்காடி? இவ்வளவு நடந்தபிறகும் என் பொண்டாட்டியையும் மாமாவையும் கடத்திட்டு வந்து என்கிட்டயே நடிச்சபார்த்தியா. யப்பா என்னாவொரு நடிப்பு. எங்களையெல்லாம் பைத்தியக்காரனாக்கியிருக்க”

“ஆமாடா நீ ஒரு பைத்தியக்காரன்தான். உன் குடும்பம் ஒரு லூசு குடும்பம்டா. இப்போ அதுக்கு என்னடா பண்ணனும்னு நினைச்சிட்டிருக்க லூசு பையலே. உனக்காக இருந்த ஒரு குடும்பத்தையே நான் காதலிக்கிறேன்னு சொன்னதும் சண்டை போட்டு பிரிஞ்சு வந்தவன்தானடா கூமுட்டை பையலே. என்னைக்காவது அறிவை யூஸ் பண்ணி இருக்கியாடா? நான் சொன்னதெல்லாம் கேட்டுட்டு தலையாட்டிட்டு உங்க மாமாவையே கொலை பண்ண போனவன்தானடா நீ? உன்ன விட வடிகட்டின முட்டாள் இந்த உலகத்துல யாரும் கிடையாதுடா. உனக்காக உயிரையே குடுக்கிறளவுக்கு இருந்த ஆதிராவை தூக்கியெறிச்சிட்டு என்கிட்ட வந்தவன்தானே நீ. உன்னைவிடவும் ஒரு நடிகன் வேற யாரு இருக்க முடியாது. இப்ப என் மாமாவை வந்து திறந்து விடுடா” என்று அவனது கையை பிடித்து இழுத்தாள்.

“பாருடா இத்தனை வருஷமா இப்ப வரைக்கும் இளா அத்தான் இளா அத்தான்னு கொஞ்சிட்டு இருந்த. இப்போ என்னடி பேச்சு எல்லாம் ஒரு தினுசா மாறுது. இளா அத்தான்னு கூப்பிடு. இப்போ கொஞ்சம் முன்னாடி எப்படி கொஞ்சி பேசினா அதை மாதிரியே கொஞ்சிப் பேசு. அதுக்கப்புறம் ரகுவரனை நான் வெளியே எடுக்கிறேன்” என்று சொன்னவனை அதிர்ந்துப் பார்த்தாள்.

இளந்தீரனுக்கு நம்ம செய்தது எல்லாம் தெரிந்துவிட்டது மதுமதிக்கு இப்பொழுது நன்றாக புரிந்தது. அதனால் ருகவரனைக் காப்பாத்த வேற வழி தெரியாமல் அவனிடம் தணிந்துப்போனாள்.

“இளா அத்தான் ப்ளீஸ் ப்ளீஸ் ரகு மாமாவை எப்படியாவது காப்பாத்து, அவங் என் புருஷன்.‌ என் வயித்துல இருக்க குழந்தைக்கு அப்பா. அவங்க இல்லாமல் நான் உயிரோடு இருக்க மாட்டேன் செத்துருவேன். நீ எதுக்காக இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க. என்னையும் ரகுவரனையும் சேர்த்து வைக்கிறேன்னு சொன்ன அதெல்லாம் நாடகம். நானா போட்ட நாடகம்தான். நான் செய்த தப்புக்கு என்னை எனவேணும்னாலும் செய். அவங்களை விட்று இப்ப எதுக்கு அவங்களைக் கொல்லத் நினைக்கிற?” என்று கோபம் அழுகையும் கெஞ்சலுமாக அவனோடு பேசிக்கொண்டிருந்தாள்.

“ஒஹோ அவனைத்தான் நீ காதலிச்சியா. உன் ரகுமாமாவைத்தான் உயிரா நினைச்சன்னா என்ன மயித்துக்குடி என்னைக் காதலிக்கிறேன்னு பத்து பனிரெண்டு வருஷமா சுத்தல்ல விட்ட? என் வாழ்க்கையை நாசமாக்குன?”

“நான் எங்கடா நாசாமாக்கினேன். நீதான்டா எல்லோரையும் ஏமாத்தி சுத்தல்லவிட்ட. ஏன்டா நீயே ஒருத்தியை காதலிச்சதானே அவள ஐவிட்டுட்டு எதுக்குடா என் பின்னாடியே வந்த?உன் கட்சியில பதவி ஏதும் தர மாட்டாங்கன்னு நினைச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என் கட்சியோடவும் என்னோடவும் வந்துவிடலாம் என்று ஒரு சின்ன பிளானோடதானே வந்த. அப்படித்தான் நானும் உன்னை ஜெயசந்திரன்கிட்ட இருந்து பிரிச்சிட்ட, அந்தாளை கீழகொண்டு வந்துடலாம், அப்புறம் நாங்க மேல வந்திடலாமான்னு பிளானோடதான் உன்னைக் கவிழ்த்தோம்.‌ இதுதான் உன்னை காதலிக்கிறேன்னு வந்ததுக்கு காரணம். இந்த உண்மையெல்லாம் சொல்லிட்டேன் போதுமா இதுக்கு மேல உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்? எப்படியும் உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குன்னு எனக்கு தெரியும். அதெல்லாம் இப்ப பிரச்சனை இல்ல. நீ என்ன வேணும்னாலும் பேசிக்கோ இப்ப என் புருஷன காப்பாத்து” என்று அவன் முன்னாடி கையை எடுத்து கும்பிட்டு நின்றாள். 

அதைப் பார்த்ததும் “உன் புருஷன் உயிரெல்லாம் பெருசா இருக்கு ஆனா அடுத்தவங்க உயிரெல்லாம் உனக்கு மயிருமாதிரி அப்படித்தானே. உனக்கு பதவி ஆசை, அதுக்கு என்ன வேணாலும் செய்வ அப்படித்தானே. என் பொண்டாட்டி ஆதிராவை எப்படி கொலை பண்ண போன, அந்த வெட்டுதான் என் கையில விழுந்திருக்கு. இது அவ கழுத்துல விழுந்து இருந்தா என்னாகிருக்கும்?”

“செத்துருப்பாடா செத்திருப்பா. உன்னை மாதிரி ஒருத்தனை காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கை நாசாமா போச்சுன்னு அழுததைவிடவும் மொத்தமா சாகுறது நல்லதுன்னு செத்திருப்பா. நீ பழைய காதலியான என்ககூட போறதை பார்க்கும்போதெல்லாம் அவ ஒவ்வொரு நாளும் உயிரோட செத்திட்டுத்தானே இருந்திருப்பா அதுக்கு இது ஒன்னும் பெருசில்லை போடா’ என்று இப்போ கொஞ்சம் தெனவெட்டாகத்தான் பேசினாள்.

அதைக் கேட்டதும் சத்தமாக சிரித்தவன் “அதுக்கு பழிவாங்கத்தான்டி உன்னை மொத்தமா போட்டுதள்ள நான் இப்ப வந்திருக்கேன்” என்றவனுக்குள் இருந்த ஒரிஜினல் இளந்தீரன் வெளியே வந்து கெத்தாக உட்கார்ந்து பேசினான்.

“இளந்தீரா!!!”என்று கத்தியவள் தன்னுடைய ஆட்களை திரும்பிப் பார்த்தாள்.

அவர்களோ கொஞ்சம் பயத்துடன் அவ பக்கத்துல வந்தாங்க, அவங்கெல்லாரும் கிட்டத்தட்ட பத்து இருபது பேர் இருந்தார்கள்.

“இப்பவே இவனை துண்டு துண்டா வெட்டி போடுங்கடா! பத்து பேரு என் கூட வாங்க சின்னையா காருக்குள்ள மாட்டிகிட்டு இருக்காரு அவங்களை வெளியே எடுக்கணும்”என்று வாசல் பக்கமாக ஓடினாள்.

ஆனால் அவள் கூட யாருமே வரவில்லை என்பதை உணர்ந்து திரும்பி அவளது ஆட்களைப் பார்த்தாள்.

“சின்னம்மா அவன் கையில் துப்பாக்கி வச்சிருக்கான் பாருங்க. எங்களை போட்டு தள்ளிட்டா என்ன பண்றது? அவனை வெட்டிப்போட எங்களுக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் எங்களை சுட்டு தள்ளிட்டான்னா ஒன்னும் பண்ண முடியாது. அதுவும் அவன் மேல எல்லாம் கேஸூம் போட முடியாது .ஏன்னா அவன் அமைச்சர் பதவியில இருக்கான். யாரையாவது தெரியாம போடணுமா, போட்டு தள்ளணுமா, தூக்கிட்டு வரணுமா தூக்கிட்டு வர்றோம் .ஆனால் இப்போ இவனை எங்களால் போட முடியாது மேடம் வேணும்னா நம்ம சின்னய்யாவைக் காப்பாத்த போவோம்” என்று அதிலிருந்து ஒருவன் தைரியமாகப் பேசினான்.

அவ்வளவுதான் திரும்பி வேகமாக வந்தவள் மற்றவர்கள் இமைக்கும் நேரத்திற்குள் முன்னாடி நின்னு பேசியவனை வெட்டி வீழ்த்திவிட்டாள்.

அதைப் பார்த்தவர்கள் பயந்து “என்ன சின்னம்மா பண்ணிட்டீங்க” என்று அவனைத் தூக்குவதற்குள் அவர் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தான். 

“என்னையவே எதிர்த்து பேசுறான். நான் சொன்னா நீ செய்யணும் அதுக்காக மட்டும்தான் உங்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்து உங்கழை இந்த வேலையில வச்சிருக்கேன்”என்றவள் இதற்குமேல் இளந்தீரனிடம் கெஞ்சமுடியாது என்று நினைத்தவள் அந்த பெரிய கத்தியை எடுத்துக்கொண்டு நேராக வெளியே ஓடினாள்.

ரகுவரன் இருந்த காரின் கண்ணாடியை வேகமாக கையிலிருந்த கடப்பாரையால் வேகமாக உடைத்தாள்.

அதுவோ உடைவேனா என்றிருந்தது. அது ஃபாரின் இறக்குமதி கார் பாதுகாப்பிற்காக இறக்கப்பட்ட கார் என்பதால் அவ்வளவு சீக்கிரமாக அவர்களால் உடைக்க முடியவில்லை. 

அங்கே கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு இருந்த ரகுவரன் இப்பொழுது மயங்கியேவிட்டான்.

அவ்வளவுதான் ரகுவரனுக்கு ஒன்று என்றால் துடித்துப்போகும் மதுமதி, தன்னை அறியாமல் அப்படியே வேதனையில் துடித்து மீண்டும் இளந்தீரனிடம் ஓடி வந்தாள்.

“நீ என் மாமாவைக் கொன்னுட்டடா பாவி. அவரைக் காப்பாத்தாமல் விட்டுட்டியேடா. அவரைக் கொன்ன உன்னை நான் சும்மா விடமாட்டேன்டா”என்றவள் கையில் இருந்தக் கடப்பாரையால் அவனை தாக்கவந்தாள்.

அவனோ அதை தனதுகையால் பிடித்துத்தடுத்தவன் அங்கு நின்றிருந்தவர்களிடம் டேய் இந்தா சாவி. அந்தக் காரை ஓபன் பண்ணி இவா புருஷனைத் தூக்கிட்டுவந்து இங்கப்போடுங்க என்றான்.

அவளுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை. அதனால் “இளந்தீரா இதுக்கெல்லாம் சேர்த்து உனக்கு நான் திரும்பத் தருவேன் பாரு. காத்திரு”என்று எச்சரித்தாள்.

எப்படி பேச வர்றோம்னு என்னைக் கூப்பிட்டுட்டு அந்த ஆத்துப்பாலத்துக்குள்ள வைச்சு என் முதுகில குத்தினல்ல அப்படியா?அப்பவே கழுத்தறுத்துப்போட்டுவோம்னு ரகுவரன்கிட்ட சொன்னியே அப்படியா?ஏய் பிராடுக்காரி உன் வீட்டுக்குள்ள வந்து உன்னைப் பார்க்க வரும்போதே உன் கண்ணுல இருந்த பயத்தையும் என்னை விலக்கிவைத்ததையும் அப்பவே பார்த்துட்டேன்டி. நீ தற்கொலைப் பண்ணப்போய் காப்பாத்தி ஹாஸ்பிட்டல்ல வைச்சிருக்கோம்னு அர்த்த இராத்திரியில் போன் பண்ணி சொன்னதே ரகுவரன்னு எனக்குத்தெரியும்டி. இத்தனை வருஷ நட்பு. ஜெயிலுக்குப்போயிட்டு வந்ததுக்கு அப்புறம் அவன் குரலை மறந்திடுவேனா என்ன?ம்ம்ம் உன் நாடகம் தெரிஞ்சேதான் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுவந்தேன். எதுக்கு ஆதிராவை அவங்க வீட்டுக்குப் போகும்போது தடுக்காமல் இருந்தேன் தெரியுமா?உன்னால கண்டிப்பா அவளோட உயிருக்கு ஆபத்து வரும்னுதான் அவா வீட்டுலயே இருக்கட்டும்னு விட்டுட்டேன். உன்னை கமுக்கமா அமுக்கி, உனக்கும் உங்கப்பனுக்கும் சேர்த்து ஒரு காட்டு காட்டணும்னு இருந்தேன். அதுக்குள்ள நீ இப்படி பண்ணிட்டு வந்து என் முன் நிக்கிறடி. நீ எந்தளவுக்கு மோசமா இறங்கி ஒருத்தனை கொல்லுவன்னு எனக்குத் தெரிஞ்சுதான் சீக்கிரமா வரணும்னு ரகுவரனைப் பிடிச்சேன். அவன் மொத்தமாக எல்லா விசயத்தையும் கக்கிட்டான்”

“ஓஹோ அப்போ நீ தெரிஞ்சே தெரியாதமாதிரியே நடிச்சிருக்க. ரொம்ப சந்தோசம். ஆனாலும் நீ எனக்கு எதிரின்னா எதிரிதான்டா. உன்னை கொல்லுறதுக்கு நான் தயங்கவேமாட்டேன்டா” என்றவள் மீண்டும் கட்பாரையை தூக்கி அவனைக் குத்துவதற்கு ஓடிவந்தாள்.

அப்போ அங்கே ரகுவரனை கைத்தாங்கலா தூக்கிட்டுவந்தவர்கள் குறுக்காக வரவும், மதுமதி கையில் இருந்த கடப்பாரை அவன் நெஞ்சிலயே குத்தி நின்றது!

ஏற்கனவே அரை மயக்கத்தில் இருந்தவனின் நெஞ்சில் ஈட்டி குத்தியதும் ஆஆஆஆஆஆ என்று ரகுவரன் அலறித்துடிக்க,அவனைத் தூக்கிட்டு வந்தவங்க பதறிப்போய் அவனை கீழே வைத்தனர்.

அவனோ வலியில் துடிக்க, இளந்தீரன் ஓடிப்போய் அவனது வயித்திலிருந்த கடப்பாரையை பிடுங்கியவன், டேய் தூக்குங்கடா ஹாஸ்பிட்டலுக்கு போவோம் என்று கத்தினான்.

ரகுவரனோ “பங்காளி என்னை விட்று பங்காளி. நான் பொழைக்கமாட்டேன். உனக்கு செய்த துரோகம்தான் இவ்வளவுதூரம் வந்து நிக்குது. நான் பொழைக்கமாட்டேன். உள்ள முதுகுலவரைக்கும் போயிடுச்சு. நான் பொழைக்கமாட்டேன்”என்று இரத்தமான கைகளோடு அவன் கையைப் பிடித்துக்கெஞ்சினான்.

மதுமதியோ இளந்தீரனின் கையை ரகுவரனிடமிருந்து எடுத்துவிட்டவள் “மாமா நான் தப்பு பண்ணிட்டேன் மாமா. நான் இந்த இளந்தீரனைத்தான் கொல்லணும்னு நினைச்சு வீசினேன். ஆனால் நீங்க குறுக்க வந்துட்டீங்க”என்று அவனது கையைப்பிடித்து கண்ணில் வைத்து அழுதாள்.

“அவனோ நீ செய்தது உனக்கே வந்துட்டு மது. நான் எவ்வளவு சொன்னேன். இதெல்லாம் வேண்டாம்னு காலையில் வரைக்கும் சொன்னனே.இப்போ பாரு. உன்கூட என்னை வாழவிடாமல் சாமி எடுத்துக்கப்போறாரு”

“மாமா மாமா தப்புத்தான் மாமா தப்புத்தான். இவனை பழிவாங்கணும்னு நினைச்சு உங்களைவிட்டுப் பிரிஞ்சு இவன் வீட்டுக்குப்போனது தப்புதான் மாமா. உன் குழந்தைக்காக உயிரோட இருங்க மாமா என்றவள் டேய் வந்து தூங்குங்கடா. ஹாஸ்பிட்டல் போவோம்”என்றவள் அவனது தலையைப்பிடித்துத் தூக்கினாள்.

இளந்தீரனும் அவனது காலைப்பிடித்துத் தூக்கினான். ஆனால் அதற்குள் ரகுவரனின் தலைத்தொங்கிவிட்டது.

ரகுவரன் உயிர்போய்விட்டது என்று இளந்தீரன் பார்த்ததும் அவன் அப்படியே அவனது காலைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்துவிட்டான்.

மதுமதி என்னாச்சு என்று பயந்து ரகுவரனின் தலையைத் தனது மடியில் வைத்தவள் “மாமா!மாமாஆஆஆ!”என்று கத்திக்கூப்பிட்டாள்.

இதுக்குமேல இங்கிருந்தால் நம்மளையும் போலீஸ் வந்து பிடிச்சிடும் என்று அங்கு நின்றிருந்த மதுமதியின் ஆட்கள் பயந்து பறந்தோடிவிட்டார்கள்.

அவர்கள் தலைதெறித்து ஓடுவதைப் பார்த்த போலீஸ்காரர்கள் உடனே உள்ளே வந்தார்கள். அங்கே ரகுவரன் இறந்துக்கிடப்பதையும்,மதுமதி தலைவிரிகோலமாக அவன் மேல விழுந்து அழுதுக்கொண்டிருப்பதையும் பார்த்தவர்கள் உடனே அந்த இடத்தை சுத்திவளைத்துவிட்டார்கள்.

இளந்தீரன் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் நடந்ததைச் சொன்னவன் இது ஒரு விபத்து என்று சொன்னான்.

அதைக்கேட்ட மதுமதியோ வேகமாக எழுந்தவள் “ ஏன்டா நீ என் புருஷனைக் கொன்னுட்டு விபத்துன்னு சொல்லுறியா?கொலைகாரா?” என்று அவனது சட்டையைப்பிடித்து இழுத்து தள்ளினாள்.

அவனோ மதுமதியை பிடித்து இழுத்தவன் “சும்மா இருடி பைத்தியக்காரி. உன்னால்தான் ரகுவரன் செத்தான். அவன் குணத்துக்கெல்லாம் உன்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணினதே பெரிய விசயம். பழி வாங்கணும் அரசியல்ல மேல வரணும்னு கிறுக்குப்பிடிச்சு அலைஞ்ச உன்னால்தான் இப்போ அவன் செத்துட்டான்” என்றுவிட்டு அவளைத் தள்ளிவிட்டான்.

அவள் நேராக ரகுவரன் மேலயேபோய் விழுந்தாள். அவன் மீது சாய்ந்து அழுதாள்.

“ஏன் மாமா என்னை விட்டுட்டுப்போயிட்ட. இனி நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன். என்னோட ஆசையெல்லாம் யாருக்கிட்ட சொல்லுவேன்.நான் யாரு தோள்ல சாய்ஞ்சிப்பேன். யாருக்கிட்ட காதலைச்சொல்லுவேன். யாரோடு வாழ்வேன். நீங்கதானே மாமா என் உயிரு” என்று சொல்லி சொல்லி அழுதவளைப் பார்த்தால் பாவமாக இருந்தது.

அவள் சொல்லி அழும்போதெல்லாம் இளந்தீரனுக்கு ஆதிராவின் ஞாபகம் வந்தது. அவன் வழிவிலகி ஆதிராவின் காதலைவிட்டுவிட்டு மதுமதியின் பின்னாடி போகும்போது ஆதிராவுக்கு எப்படி இருந்திருக்கும்?அவளுக்கு எவ்வளவு வலித்திருக்கும்?என்று ஆதிராவை முழுதாக நினைத்து, அவளது காதலை நினைத்து தனது நெஞ்சில் கைவைத்துத் தட்டிக்கொண்டான்.

அவளது பக்கத்தில் போய் நின்றவன் “உனக்கு உன் மாமா எவ்வளவு முக்கியமோ அதைவிட அதிகமாக ஆதிராவுக்கு நானும் என் காதலும் முக்கியம். அவள் என் தேவதைடி. அவள்தான் என் உயிர். அவளது காதலை புரிய வைச்சதுக்காக உனக்குத்தான்டி நான் நன்றி சொல்லணும். ஆனாலும் அவளையே கொல்லத் தூணிஞ்ச உனக்கு இனி ஜெயிலுதான்டி. போய் ஜெயில்ல கிடந்து சாவுடி”என்றவன் இன்ஸ்பெக்டரை கூப்பிட்டான்.

அவள் நிமிர்ந்து இளந்தீரனைப் பார்த்தவள் “போடா முட்டாக்கூமூட்டை. இன்னும் நீ மதுமதியை சரியாக புரிஞ்சுக்கலைடா. ரகுமாமாவோட உன் முன்னாடி சந்தோசமா குழந்தைக் குட்டின்னு வாழணும்னு ஆசைப்பட்டேன்டா. நீ ஆதிராவைத் தொலைச்சிட்டு பரதேசி மாதிரி சாகணும்னு நினைச்சேன்டா. ஆனால் என் மாமாவையே என்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே!உன்னாலதான் இவ்வளவும் நடந்துச்சு. எவ்வளவு ஆசை ஆசையா மாமா எங்க குழந்தைக்காக காத்திருந்தாங்க தெரியுமா?இப்போ அவரில்லாமல் நானும் என் குழந்தையும் அநாதையாக நிக்கிறோம். அதுக்காக அப்படியே இருப்போமா என்ன? நான் ஜெயிலுக்குப்போறது உனக்கு சந்தோசமா இளந்தீரா?அதைவிட பெரிய சந்தோசத்தை உனக்குத் தர்றேன் பாரு” என்றவள் அவள் மறைத்து வைத்த கத்தியை வேகமாக எடுத்து தன் கழுத்தை வேகமாக அறுத்துக்கொண்டாள்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடிக்குள் அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது.

இளந்தீரன் அவளைப் பிடிக்கப் போகவும், அவனைத் தடுத்தவள் “அப்படியெல்லாம் எவன்கிட்டயும் நான் தோத்துப்போய் நிக்கவும் மாட்டேன் வாழவும் மாட்டேன். நான் மதுமதிடா!என் மாமாக்கூடவே நானும் போறேன்”என்றவள் ரகுவரனின் கையைப்பிடித்து அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.

அவ்வளவுதான் அவளது ஆசையும் காதலோடும் காதலனோடும் சேர்ந்து அவனோடவே அவளும் போய் சேர்ந்துக்கொண்டாள்!