அநாயகா-51
அநாயகா-51
ஜெயசந்திரன் கோமாவில் விழவில்லை. அவர் கோமாவில் விழுந்ததுபோல நடித்துதான் இளந்திரனை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட மதுமதிக்கு அப்படி ஒரு ஆற்றாமையாக இருந்தது.
நம்ம இத்தனை வருஷம் பிளான் பண்ணி, இவனுங்களுக்கு பண்ணினதை இந்த ஆளு ஒரு மூணு மாசத்துல நம்மளுக்கு எதிரா திருப்பிட்டாரே!
இவரை சும்மா விட்டு வைச்சா ஜென்மத்துக்கும் நம்ம இந்த தேர்தல்ல நின்னு ஜெயிக்கவும் முடியாது அரசியலுக்குள்ளேயும் நுழைய முடியாது, இப்போ வேற இவங்க இரண்டு பேரையும் கடத்திட்டோம், கண்டிப்பா இளந்தீரன்றேன் தேடி வருவான். ஆனா அவனுக்கு உண்மை தெரியக்கூடாது. என்ன பண்ணலாம்? என்று ஒரு நொடியில் யோசித்து முடித்து, உடனே என்ன பண்ணனும் என்பதையும் தீர்மானம் எடுத்துவிட்டு அமைதியாக ஆதிராவை பார்த்தாள்.
ஆதிராவோ இவா என்ன யோசிக்கிறா என்று பார்க்கும்போதே ஆதிராவின் கன்னத்தில் வேகமாக அடித்தாள்.
அதைப்பார்த்த ஜெயசந்திரன் “ஏய்ய் என் மகள் மேல கையா வைக்கிற நாயே. உன்னையெல்லாம் அடிச்சுத் தூக்காமல் சும்மா விட்டு வைச்ச என்னை சொல்லணும்டி!பேயைவிட கொடுரமானவள்டி நீ. பொண்ணா நீ. பொணத்து மேல அரசியல் பண்ணனும்னு நினைக்கிற நீயெல்லாம் அழிஞ்சுத்தான்டி போவ. நீயும் கர்ப்பாமக இருக்கியேன்னுதான் பாவம்பார்த்து விட்டுவைச்சிருக்கேன். இதுக்குமேல என் பொண்ணுமேல கையைவைச்சா என்ன பண்ணுவேன்னே தெரியாது” என்று அவரைக் கட்டிப்போட்டிருந்த சேரோடவே எழுந்து ஆவேசமாக அவரை அடிக்க நின்றார்.
ஆதிராவோ அவள் அடித்த அடியில் ஆஆஆஆ என்றவாறு அப்படியே கன்னத்தைப் பிடித்துக்கொண்டு சரிந்தாள்.
“இவளென்ன சைக்கோவா?பைத்தியாக்காரி மாதிரி பிஹேவ் பண்றாப்பா?”என்று வலி தாங்கமுடியாது கத்தினாள்.
அதற்குள் மதுமதி ஆதிராவிடம் இருந்து ஒதுங்கியவள் தன்னுடைய ஆட்களைப் பார்த்து கண்ணைக் காண்பித்தாள்.
அவர்கள் ஓடிவந்து ஜெயசந்தகரனைப் பிடித்திழுக்க, அவரோ காலால் எட்டி உதைக்க முயன்றார். ஆனால் அவர்கள் அவரை இழுத்து உட்காரவைத்ததும் மதுமதி அவரது பக்கத்தில் வந்தாள்.
“உன்னையெல்லம் ஒத்தை ஆளை அனுப்பிக் கொன்னுட்டு போயிட்டேயிருந்திருப்பேன். ஆனால் அப்போ என் கையில் எந்த பவரும் இல்லை. இந்தா நிக்கிறானுங்கள்ல அவனுங்களைப்போஒ ஆடகளையும் கரூப்பையும் கொஞ்சம் கொஞ்சம் உருவாக்கி எனக்குன்னு அரசியலுக்காக ஒரு கூட்டத்தை உருவாக்கி வைச்சிருக்கேன். நான் கண்ணசைச்சா இவனுங்க உன்னைப் போட்டுத் தள்ளிருவானுங்க. ஆனால் அத்தனை சுலபமா உன்னையெல்லாம் கொல்லமாட்டேன். உன்னை மாதிரியே திமிரோடவும் கெத்தோடவும், எதுக்கும் பயப்படாமல், இவ்வளவு அறிவோட வளர்த்து வைச்சிருக்கியே உன் பொண்ணு அவளைத்தான் கொல்லுவேன். அவளை முதல்லக்கொன்னுட்டா அதுலயே நீ பாதி செத்திருவ. அப்புறம் உன்னைக் கொல்லுறதுலாம் மேட்டரேயில்லை. ஆனால் உங்களைத் தேடி மட்டும் அந்த இளந்தீரன் வந்தான்னா அவன் கழுத்தை அறுத்துக்கொல்லுவேன். அவனால்தான் இவ்வளவும். அந்ந நாயை அன்னைக்கே அடிச்சு கொன்னுடலாம்னுதான் போட்டேன். ரகு மாமாதான் தடுத்துட்டார். இப்பவும்அவனைக் கொல்லுறது ரொம்ப ஈஸியான வேலைதான். உங்களைக் கொன்னுட்டு அவன் வீட்டுக்குப்போனாலே போதும் அவனுக்கு விஷம் வைச்சே கொன்னுடுவேன்”என்று இராட்சஷியின் குணத்தில் மனித உருவத்தில் இருந்த மதுமதி பேசினாள்.
அவளது மனதில் பத்துவயதில் விழுந்த பதவி வெறி, புகழ்வெறி, அரசியல்ல தான் வரணும் என்கிற பேராசை அவளை குறுக்கு வழியில்தான் சிந்திக்க வைத்ததுதான் இங்கு தவறாக போயிற்று.
அவளது எண்ணம் தப்பென்று சொல்லாத சிவானந்தன்தான் இதில் பெரிய குற்றவாளி!அவள் என்ன செய்தாலும் பல்லை இளித்துக்கொண்டு தலையாட்டி தலையாட்டி காதல் என்கிற பேர்ல செய்துகொடுத்த ரகுவரன் இரண்டாவது குற்றவாளி!
எந்த வெற்றியும் எந்த கொண்டாட்டங்களும் குறுக்கு வழியில் வந்தால் அது நிலைக்காது. கடின உழைப்பும் நேர்மையும் தொடர்ந்து ஓடுகின்ற ஓட்டமும் உழைப்பும் மட்டுமே நிலைத்து நிற்கும்.
இவன் செத்தால் நான்மேல வந்திருவேன். இவன் அந்த இடத்துல இல்லைன்னா நான் அந்த இடத்துல இருப்பேன் என்று அடுத்தவன் காலை இழுத்து கீழேபோட்டு மிதிச்சு நீ மேல ஏறி போனனா உன் காலை இழுத்துப்போட பின்னாடியே கர்மா ஆளை அனுப்பும். இது புரிஞ்சா வாழ்க்கை அதுபாட்டு எளிமையா போயிட்டிருக்கும்.
அப்படி புரியாமல் அறியாமல் தெரிந்தும் அப்படித்தான் செய்வேன்னு திமிர்ல மெதப்புல செய்தா என்னாகும்? இப்படித்தான் கொலை கொள்ளைன்னு செய்யத்தூண்டும். வாழ்க்கையே நரகமாக மாறும்!
மதுமதி அப்படியே தனது அடியாளின் கையிலிருந்த கூர்மையான அந்த நீளக்கத்தியை எடுத்து தனது விரல் வைத்துத் தொட்டுப்பார்த்தாள்.
அவளது கண்களில் கொலைவெறியும் இரத்தவெறியும் தாண்டவமாடியது!
அதைப்பார்த்த ஜெயசந்திரனே உறைந்துபோய் எச்சிலை மெதுவாக விழுங்கியவாறே தனது மகளைப் பார்த்தார்.
“கடவுளே என் மகளை நீதான் காப்பாத்தணும்.இப்படியொரு கொடூரமான ஒருத்தியை என் வாழ்நாள்ல இதுவரைக்கும் பார்த்ததில்லை. இத்தனை வருஷ அரசியல் களத்துலக்கூட இப்படியொரு மோசமான ஜென்மத்தைப் பார்த்ததில்லை. ஆதும்மாஆஆஆஆ” என்று பயந்து கத்தியவரை உதடுவளைத்து சிரித்தவாறு மதுமதி பார்த்தாள்.
அந்த சிரிப்பின் அர்த்தமே வேறாக இருந்தது.
“உனக்கு அடுத்த வாரிசா இளந்தீரனை நினைச்சல்ல அதுதான் அவனை அப்படியே சுருட்டிவாரி எங்கப்பக்கம் கொண்டுவந்தேன். ஆனால் உன் மகளை இப்போ கொண்டு வரப்பார்க்கிறல்ல. உன் கட்சி ஆபிஸுக்குஅ வளைக்கூட்டிட்டுப்போய் துணைத்தலைவர் பதவிகொடுத்ததெல்லாம் எனக்குத் தெரியும். இதுக்குமேலயும் உங்களை விட்டுவைச்சா உங்கக் குடும்பமே வந்துட்டிருப்பீங்க. இன்னையோட முடிச்சிடலாம்னுதான் உங்களைக் கடத்தினேன். இத்தோட எல்லாம் முடிஞ்சு” என்றவளை பார்த்த ஆதிரா நடுங்கினாள்.
“எல்லா சூழ்நிலையையும் கையாளுகிற நம்மளையே இவா இந்தப்பாடு படுத்துறாளே. இவளைப் பார்த்தாலே பயமா இருக்கே ஆண்டவா. கையில வேற கத்தியைப் பிடிசிட்டாளே. அப்போ கண்டிப்பா நம்மளை போட்டுத்தள்ளிடுவா”என்று பயத்தில் உடல் நடுங்கியவள், உதட்டைக் கடித்தவாறே அப்பாஆஆஆஇஇ என்று தன்னையறியாமலயே கத்தினாள்.
“கத்து கத்து இதுக்குத்தானே நான் ஆசைப்பட்டேன். இளந்தீரனை முடிக்கலாம்னு இருந்தால் அவனையே கல்யாணம் பண்ணிட்டு அவன்கூடவே படுத்து வயித்துல வாங்கிகிட்டல்ல,இப்போ இதையும் வாங்கிக்கடி. நீ செத்து விழுறதைப் பார்த்து நான் ரசிக்கணும். உங்கப்பன் துடிக்கணும். உங்க இரண்டுபேரும் இரத்த வெள்ளத்துல கிடக்குறதைப் பார்த்து உன் குடும்பமும் அந்த இளந்தீரனும் துடிக்கணும். அத்போதும் எனக்கு” என்றவள் ஒரு நொடிகூட அடுத்து யோசிக்காது கத்தியை ஆதிராவின் கழுத்தை நோக்கி வீசி வெட்டினாள்,
ஆஆஆஆஆ ஆதும்மாஆஆஇ என்று ஜெயசந்திரன் அலறினார்.
ஆதிராஆஆஆஇ பயத்தில் ஆஆஆஅப்பாஆஆஆ என்று பயந்து கண்ணை மூடிக்கொண்டு கழுத்தை அசைத்து தலையை குனிந்து அலறி அழுதாள்.
ஆனால் ஆதிராவிற்கோ ஒன்றுமாகது அவளது மடியில் இரத்தம் விழவும் என்னாச்சு என்று மெதுவாக நிமிர்ந்து ஆதிரா பார்த்தாள்.
மதுமதி வீசிய கத்தியை இளந்தீரன் தடுத்துப்பிடித்திருக்க அவனது கையில் வெட்டுப்பட்டு இரத்தம் வடிந்தது.
“ஐய்யோ அத்தாஆஆன்!!!” என்று அவள் பயந்து கதற, ஜெயசந்திரன் “தீராஆஆ!!!” என்று சத்தம்போட்டார்.
“ஐய்யோ இளா அத்தான் என்ன பண்ணிட்டீங்க. நீங்க எப்படி இங்க வந்தீங்க?ஐய்யோ”என்று ஓடிப்போய் அவனது கையைப்பிடித்தவள் தனது சேலை முந்தானையால் அவனது கையைக் கட்டினாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு கைகாலெல்லாம் நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தது.
இளந்தீரனோ “என்னாச்சு மதுமதி?எதுக்கு ஆதிராவை வெட்டுறதுக்குப்போற?”என்று சாந்தமான முகத்தோடு கேட்டான்.
ஆதிரா அவன் மதுமதியைப் பார்த்து என்னாச்சு என்று கேட்டதுமே ஆதிராவுக்கு அப்படியே மொத்தமா உயிரே செத்துப்போச்சு. இதுக்கு இந்த அத்தான் நம்மளைக் காப்பாத்தாமலயே இருந்திருக்கலாம். அவ வெட்டுனதுல அப்படியே ஒரேடியாக உயிர்போயிருக்குமே. இப்படி இவங்க நம்மளை கொஞ்சம் கொஞ்சமா வதைக்கிறதைப் பார்த்து சாகவேண்டியது இருக்காதை என்று நினைத்தவள் சட்டென்று சத்தமாக அப்பாஆஆஆஆஆ என்று கூப்பிட்டு கதறி அழுதாள்.
அவளை திரும்பிப் பார்த்த இளந்தீரனை இழுத்து தன்பக்கமாக உட்கார வைத்த மதுமதி “இளா அத்தான் நீங்க இல்லாத நேரம் பார்த்து அப்பாவும் மகளும் சேர்ந்து என்னைக் கடத்திட்டு வந்து அடைச்சுவைச்சு கொல்லப்பார்த்தாங்க. அதுக்குள்ள நானே தப்பிச்சு அவங்களைக் கட்டிப்போட்டு கத்திவைச்சு தாக்கிட்டு தப்பி வரப்பார்த்தேன். அதுக்குள்ள நீங்களா வந்துட்டீங்க ரொம்ப நல்லது. நான் உங்களைவிட்டுப் போனாதான் ஆதிராக்கூட நீங்க வாழ்வீங்கன்னு என்னவெல்லாமோ பேசி என்னை சித்ரவதை செய்தாங்க.என்னை தயவு செய்து இவங்கக்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்க”என்று அவனது கையைப்பிடித்து கதறி அழுதவள், அவனையும் இழுத்துக்கொண்டு வெளியே வர முயன்றாள்.
“அப்படியா? எங்க மாமாவா உன்னைக் கடத்தினாங்க. இரு அவங்களை என்ன பண்றேன் பாரு. நீ ஓடிப்போய் நம்ம கார்ல இரு. நான் இவங்களை போலீஸ்ல பிடிச்சுக்குடுத்துட்டு, என்னன்னு விசாரிக்க சொல்லுறேன்”என்றான்.
ஐய்யோ தப்பிச்சோம் என்று அவள் வெளியே ஓடினாள். இளந்தீரன் வேகமாக வந்து ஆதிராவின் கையைக் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தெடுத்தான். அவ்வளவுதான் ஆதிரா அவனது கன்னத்தில் வேகமாக அறைந்தாள்.
அவனுக்கு என்னவென்று புரியாது அவளை நிமிர்ந்துப்பார்க்க “ச்சீ நீயெல்லாம் மனுஷனா? உன் பொண்டாட்டியை ஒருத்தி கத்தியால் வெட்ட வந்திருக்கா அவா சொல்லுறதைக் கேட்டு நம்பி அவளை வெளியே அனுப்பிருக்க, என்கிட்ட என்ன நடந்ததுன்னும் கேட்கலை. என்னைக் காப்பாத்தவும் வரலை. உன்கூட வாழ்ந்த்ததுக்காக இப்போ அசாங்கமா இருக்கு. தயவு செய்து இப்படியே என்னை சாகவிட்று! உன்னைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை”என்றவள் அழுதாள்.
அவனோ தனது வெட்டுப்பட்ட கையை அவளுக்குக் காண்பித்தான். “அப்போ இதுக்குப்பேரு என்னடி லூசு?”என்று கேட்டவன் அவளை அங்கிருந்து இழுத்து நிறுத்தியவன், ஓடிப்போய் ஜெயசந்திரனின் கையையும் அவிழ்த்துவிட்டான்.
மதுமதியின் அடியாட்களோ இங்க என்ன நடக்குதென்று புரியாது பார்த்துக்கொண்டிருக்க, “இங்கப்பாருங்க இரண்டுபேரும் பின்பக்கமாக போங்க. அங்க போலீஸ் நிப்பாங்க. நீங்க போனாதான் அவங்க இங்க வருவாங்க. சீக்கிரம் ஓடுங்க”என்றதும்தான் மதுமதியின் ஆட்கள் சுதாரித்து அவர்களை பிடிக்க ஓடிவந்தார்கள்.
அதற்குள் இளந்தீரன் தனதுஇடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து நீட்டவும் அப்படியே நின்றுவிட்டனர்.
ஜெயசந்திரன்தான் “தீரா நம்ம நினைச்சதைவிடவும் அவள் பயங்கரமானவள் கவனமா இரு” என்றவர் வேறெதுவும் அவனிடம் பேசாமல் ஆதிராவை இழுத்துக்கொண்டு பின்பக்கமாக ஓடினார்.
ஆதிராவோ இப்போ ஜெயசந்திரன் இளந்தீரன்கிட்ட பேசினதை கேட்டதும் குழம்பினாள்.
“என்னப்பா நடக்குது இங்க?நீங்க உங்க மருமகன்கிட்ட இப்படி சொல்லிட்டு வர்றீங்க. எங்க கல்யாணம் வரைக்கும் ஓகேதான். ஆனால் அவங்க மதுமதியை நம்புறாங்க பாருங்க. எப்படி என்னைக் காப்பாத்தாமல் அவளைக் காப்பாத்த துடிக்கிறாங்கன்னு” என்று சொல்லும்போதே அழுதாள்.
“ஷ்ஷ்ஷ் ஆதிரா இப்போ எதுவும் பேசாத நீ சீக்கிரம் வா” என்று அவளை பத்திரமாகக்கூட்டிட்டு வெளியே போனார். அங்கே போலீஸ் படையே நின்றிருந்தது. அதற்குள் ஆம்புலன்ஸும் இரண்டுபேரையும்
ஹாஸ்பிட்டல் கூட்டிடுப்போக வந்திருந்தது.
அப்போதான் ஆதிராவுக்கு ஞாபகம் வந்தது “அப்பா அத்தானுக்கும் கையில வெட்டுப்பட்டிருக்கே!இரத்தம் வநதிட்டிருந்துச்சே. பாவம்ல இங்க ஆம்புலன்ஸ்ல உள்ளவங்களைப் போய் அத்தானுக்குக் ஹெல்ப் பண்ண சொல்லுங்க”என்று அக்கறையுள்ள பொண்டாட்டியாக சொன்னாள்.
அவரோ தனது தலையில் அடித்துக்கொண்டவர் “அதெல்லாம் அவன் பார்த்துப்பான் நீ வா” என்று அவளை இழுத்துக்கொண்டு ஆம்புலன்ஸ்ல ஏறி ஹாஸ்பிட்டல் போனார்.
“எதுக்கு நம்ம இப்போ ஹாஸ்பிட்டல் போறோம்ப்பா.நம்ம நல்லாதானே இருக்கோம்”என்றவளை முறைத்துப் பார்த்தார்.
கொஞ்ச தூர்மதான் வண்டி போயிருக்கும் இப்போ அங்கே நடந்ததை நினைத்ததும் ஒருமாதிரி பதறினாள்தான். இன்னும் அவள் தன்னை கொல்ல வந்ததை நினைத்து அப்படியே பயந்தாள்.
“ஆமா தீராத்தான் வரலைன்னா இந்நேரத்துக்கு நான் துடிதுடிச்சு செத்திருப்பேன்ல. நான் செத்தா என்குழந்தையும்…” என்று நினைத்தவளுக்கு அவளையறியாமலயே பயம் வந்து அப்படியே மயங்கி ஜெயசந்திரன் தோளில் சாய்ந்துவிட்டாள்.
அவர் பயந்துப்போய் “ஆதிரா ஆதிரா”என்று பயந்து அவளது கன்னத்தைத் தட்டிக்கூப்பிட்டார்.
அவருக்குமே பயம் வந்துவிட்டது. இவ்வளவுதூரம் தைரியமாக இருந்தும் கடைசியில நம்ம பொண்ணுமலேயே கைவைச்சுட்டாளே. நல்லவேளை இளந்தீரன் சரியா வந்துட்டான். இல்லைன்னா என்னவாகிருக்கும்.
கடவுளே!மகளுக்கும் அவள் வயித்திலிருக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருந்தார்!