என் இனிய விவகாரத்தே 6

Divorce 6

என் இனிய விவகாரத்தே 6

6 என் இனிய விவகாரத்தே!!

ஸ்ரீநாத் ரஞ்சனி சொன்ன பொய்யில் பேச்சிழந்து நின்றான்.. 

உலகமே பொய்யால் , அயோக்கியத் தனத்தால் கட்ட பட்டது போல , இங்கே நேர்மைக்கும் உண்மைக்கும் இடமே இல்லை போலும்... உண்மைக்கு பெயர் போன அரிச்சந்திரனும், நட்புக்கு பெயர் போன கர்ணனும் வாழ்ந்த பூமியா இஃது!! 

"மேடம் கல்யாணத்துக்கு முன்னாடியே அவருக்கு மனநோய் இருந்திருக்கு.... அதை மறைச்சு கல்யாணம் கட்டி வச்சுட்டாங்க... கொஞ்ச நாள் ரொம்ப நல்லா தான் இருந்தார்.... அவங்க அம்மா இறந்த பிறகு, எல்லாமே தலைகீழா மாறிடுச்சு, ஒரு பொண்டாட்டி எதையெல்லாம் பார்க்க கூடாதோ எல்லாத்தையும் பாத்துட்டேன்... வீட்டுக்கு பால்காரன் வந்தா கூட அவன் கூட சேர்த்து வச்சு என்ன தப்பா பேசுவாரு "என்று ரஞ்சனி சேலையில் கண்ணீரைத் துடைத்தவள் ....

"தெருவுல என்ன பத்தி விசாரிச்சு பாருங்க ...மனசு அறிஞ்சு நான் அவருக்கு எந்த துரோகமும் பண்ணுனதே இல்லை... எனக்கு அவரும், குழந்தையும் அவ்வளவு பிடிக்கும் .. முதல் டெலிவரி சிசேரியன் ஆனதுனால அடிக்கடி குறுக்கு வலி வேற வரும்... அதனால குழந்தையை அம்மா வீட்டுல விட்டுட்டு, ரெஸ்ட் எடுப்பேனே தவிர ... ஒரு நாள் கூட நான் சும்மா இருந்ததே கிடையாது ... அதோட சொல்லவே நா கூசுது மேடம் தினமும் கண்ட கண்ட படத்தை பார்த்துட்டு வந்து என்னை சித்ரவதை பண்ணுவார் _க்ஸ் டார்ச்சர் பண்ணுவார் வலி உயிர் போகும் இதை எல்லாம் நான் வாயை திறந்து யார்கிட்டேயும் சொன்னது கூட இல்லை என்ற ரஞ்சனி அபாண்ட பழியில் ஸ்ரீநாத் மொத்தமாக உருக்குலைந்து விட்டான்,..

இப்ப கூட மியூச்சுவல் டைவர்ஸூக்கு நீ சம்மதம் சொல்லலைன்னா, உன்ன யாரு கூடேயாவது சம்பந்தப்படுத்தி அசிங்கப்படுத்திடுவேன்னு சொல்லிதான் இங்க கூட்டிட்டு வந்தார்... 

பரவாயில்ல மேடம் என்ன ஆனாலும் , அவரையும் குழந்தைய நான் விடுறதா இல்ல... மாலை மாலையாக கண்ணீர் வடிக்க...

என்ன ஸ்ரீநாத் உங்க மனைவி விவாகரத்துக்கு சம்மதிக்க முடியாதுன்னு சொல்றாங்க அவங்க சொல்றதெல்லாம் உண்மையா ?

அப்படியெல்லாம் இல்ல மேடம் நான் பைத்தியம் எல்லாம் இல்ல.... நான் ரொம்ப நல்லா தெளிவா தான் இருக்கேன்... டைவர்ஸ் கொடுக்க கூடாதுன்னு வேணும்னே இதையெல்லாம் பண்றாங்க... நம்பாதீங்க மேடம் ... 

அப்போ, உங்க மேல வீண் பழி போட காரணம் என்ன ?

"அவளை அசிங்கப்படுத்த எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது மேடம்... ஆனா அது என் நோக்கம் இல்லை... அவளும் நிம்மதியா இருக்கட்டும், என்னையும் நிம்மதியாக இருக்க விடுன்னு தான் இந்த டைவர்ஸ்க்கு நான் ரெடி பண்ணினது... "

"அதான் இப்போ வேண்டாம்னு சொல்றாங்களே போய் சேர்ந்து வாழ வேண்டியதுதானே?"

ரஞ்சனி கண்ணீரை துடைத்துக் கொண்டே ஸ்ரீநாத்தை அப்பாவியாக ஒரு பார்வை பார்த்தாள்

"எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை மேடம்... நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு அவர் கூட வாழ எனக்கு முழு சம்மதம்.... என்றாள் ரஞ்சனி...

நீங்க என்ன சொல்றீங்க ஸ்ரீநாத்.. ஒன்னு சேர்ந்து வாழுங்க இல்லை... நீங்க மெண்டலி நல்லா இருக்கீங்கன்னு ரிப்போர்ட் தந்துட்டு, பர்தரா இந்த கேசை ஹேண்டில் பண்ணுங்க .."

"மேடம் அதுவரை குழந்தை என்கூடவே இருக்கட்டும் ப்ளீஸ் .... அவர் எப்போ என்ன பண்ணுவார்னு தெரியாது, அதுக்கு பயந்தேதான் நான் பிள்ளையை தாய் வீட்டில விடுவேன்.. ப்ளீஸ் ரஞ்சனி கையெடுத்து நீதிபதி பார்த்து கும்பிட.. பெண்ணின் கண்ணீருக்கு கிடைக்கும் மரியாதை ஆணின் மெளனத்துக்கு கிடைப்பது இல்லையே !! ஸ்ரீநாத் தோற்று போய் நின்றான்...  

ம்ம் மெண்டலி பிட்னு தெரியும்வரை குழந்தை தாயோட இருக்க உத்தரவு இடுறேன் என்று ரஞ்சனிக்கு சாதகமாகவே கூறி விட.. ஸ்ரீநாத் உடைந்து போய் நின்றான்.. 

"மேடம் மேடம் நான் சொல்றது கேளுங்க "என்று ஸ்ரீநாத் கத்தியது யார் காதிலிலும் விழவே இல்லை ... 

தாய்மை பெண்ணுக்கானது!! என்று உலகம் பெண்ணை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது .. 

கர்ப்பப்பை இல்லாதே பிள்ளையை இதயத்தில் சுமக்கும் ஆண்களும் இங்கே பலர் உண்டு !! 

ஒரு ஆண் பிடிக்காத திருமண வாழ்கையை வாழவும் 

ஒரு பெண் சகித்து கொண்டு குடும்ப வாழ்கை வாழவும் காரணம் குழந்தைகள் மட்டுமே!! 

"ரஞ்சனி நீ பண்றது எதுவும் சரியா தெரில" என்று அவள் தாய் தகப்பன் திட்ட 

"இதுல நீங்க தலையிடாதீங்க.... ஏதோ புருசன் பொண்டாட்டிக்குள்ள மனஸ்தாபம் அவ்வளவு தான் நாங்க சரி பண்ணிப்போம்... என் போக்குல விடுங்க என்றவள் ஸ்ரீநாத் கையில் இருந்த குழந்தையை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு ....

"இனி நான் செஞ்சதை கத்தி கத்தி சொன்னாலும் பைத்தியம் உளறுதுன்னு ஆகிடும் , எதை வச்சி டைவஸ்ல் வாங்க போறீங்க.... பேசாம கேஸை வாபஸ் வாங்கிட்டு நான் செஞ்சதை மறந்துட்டு, என்கூட வந்து வாழ்ற வழியை பாருங்க ... ஊர் உலகத்துல இது எல்லாம் நடக்கலையா என்ன ?? ஏதோ புத்தி கெட்டு போய் தப்பு பண்ணிட்டேன் ... இனிமே ஒழுங்கா இருக்க ட்ரை பண்றேன் "என்றவள் தவறை உணர்ந்தது போல இல்லை ... இவனை விட்டுட கூடாது என்ற எண்ணம் தான் அதில் இருந்தது ... காலையில் நடந்ததை அவள் மனம் அசை போட்டது 

"என்ன ராஜா போன் போடுறேன் எடுக்கவே மாட்டைக்கிறீங்க.... அந்த கள்ளராஜா என்ன சொன்னானோ ரஞ்சனி பேய் அறைந்தது போல நின்றாள் 

"என்ன ராஜா இப்படி சொல்றீங்க... உங்க பொண்டாட்டிய டைவர்ஸ் வாங்கிட்டு உன்ன கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொன்னதை நம்பிதானே நான் நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சம்மதம் சொன்னேன் ... இப்போ என் புருஷனுக்கு உண்மையெல்லாம் தெரிஞ்சிருச்சு தாட் புட்டுன்னு நின்னுட்டு போறார் .. நான் செஞ்ச வேலைக்கு என்னை கொன்னு போடாம டைவர்ஸ் தந்துடுவேன்னு அவரே சுமூகமா சொல்லிட்டு போனது நமக்கு எவ்வளவு பெரிய பிளஸ் தெரியுமா? இனிமேல் அவரால நமக்கு பிரச்சனையே இல்ல மியூச்சுவல் டைவர்ஸ் வாங்கிடுறேன்..நீங்களும் உங்க பொண்டாட்டிக்கு டைவர்ஸ் கொடுத்துட்டீங்கன்னா ... அதுக்கு பிறகு நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்றதுக்கு எந்த பிரச்சினையுமே இல்லன்னு நினைச்சு சந்தோஷப்பட்டா.. நீங்க என்னன்னா டைவர்ஸ் கொடுக்காதன்னு திடீர்னு சொல்றீங்க ... ஏன் என்ன ஆச்சு? 

"இங்க பாரு ரஞ்சனி , எனக்கு தோளுக்கு மேல வளர்த்த பிள்ளைங்க இருக்காங்க ...ஆம்பளன்னா அப்படி இப்படி பிட்ட போட்டு மடியுற வரைக்கும் எதையாவது சொல்லத்தான் செய்வோம்... நீ எல்லாத்தையும் நம்பி வந்து படுத்ததுக்கு கூலி வேணும்னா வாங்கிட்டு போ..என்றான் திமிராக... தாலி கட்டிய கணவனிடம் கிடைக்காத அன்பும் மரியாதையும் சுகமும் இன்னொரு ஆணிடம் கிடைக்கும் என்று நினைத்து ஏமாந்து போன பெண்களே அதிகம் ... 

"ராஜா என்ன இப்படி சொல்றீங்க.... ரஞ்சனிக்கு அவள் போட்ட இடியே அவள் தலையில் விழுந்தது போல இருந்தது ... அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி , அவளுக்கு வந்தால் ரத்தமா என்ன?? துரோகம் செய்யும் போது வலிக்கவில்லை, அதே துரோகம் ரிப்பீட் அடித்து வரும் பொழுது செய்வது தெரியாமல் திகைத்தாள் ரஞ்சனி 

"இப்பவும் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுக்காக என் பொண்டாட்டி பிள்ளை எல்லாம் விட்டுட்டு உன்னை பொண்டாட்டியா தூக்கி வைக்க முடியாது... இன்னிக்கு உன் புருஷனுக்கு துரோகம் பண்ணின நீ, நாளைக்கு எனக்கு துரோகம் பண்ணிட்டு எவன் கூடையும் போக மாட்டேன்னு என்ன நிச்சயம் இருக்கு ??

ராஜாஆஆஆஆஆ நீங்களா இப்படி சொல்றீங்க 

"ப்ளீஸ் ரஞ்சனி கோவப்படாத நிதர்சனம் பேசு.. நல்ல வேளை உன் புருஷன், என் வீட்ல வந்து பஞ்சாயத்தை கூட்டாம இருந்தான்.. நான் வச்சிருக்கிற பணம் காரு, ஆபீஸ் எல்லாமே என் மாமனார் சொத்து ... அதை புடிங்கிட்டு என்னையும் தெருவுல விட்டா பிச்சைதான் எடுக்கணும்.. ஆம்பள சபலப்படத்தான் செய்வான் ... ஆசைப்பட தான் செய்வான்.. பொண்ணு நீதான் கவனமா இருந்து இருக்கணும் ... தப்பு உன் பேர்ல ரஞ்சனி, நீ சுதாரிப்பு இல்லாம ____யாத்தனம் பண்ணிட்டு என்கிட்ட எகிறிகிட்டு வராத... வேணும்னா ஒன்னு பண்றேன் ... உன் புருஷன பிரிஞ்சது பிரிஞ்சதாவே இருக்கட்டும், உனக்கும் தனியா ஒரு வீடு ரெடி பண்ணி கொடுக்கிறேன்... அப்பப்போ வந்துட்டு போறேன்... நம்ம உறவு அப்படியே இருக்கட்டும் அவ்வளவு தான் என்னால செய்ய முடியும் ... இல்ல, என்னால அப்படி எல்லாம் உனக்கு சின்ன வீடா இருக்க முடியாதுன்னு சொன்னா ... பெட்டர், உன் புருஷனை அட்ஜஸ்ட் பண்ணி போறதுதான் நல்லது... என்னால உனக்கு வேற எதுவும் பண்ண முடியாது இனிமே இதை குறிச்சு பேச போன் போடாத "என்று அவள் மலை போல் நம்பி இருந்த அவள் கள்ளக்காதலன் ராஜா கையை விரித்துவிட ...

ஒரே பாடலில் கார் பங்களா வீடு வைர நகை என்று பல கனவுகளை கண்டு இருந்த ரஞ்சினியை சுடுகாட்டிற்குள் தூக்கிக்கொண்டு போய் சமாதியாக்கியது போல உணர்வு .... அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டு நின்று விட்டாள்.... 

இனி ஸ்ரீநாத்தை விட்டு விட்டால் அவள் நிலை என்ன என்று புரிபட ... தன் வாழ்க்கையை வாழ அவன் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்க எதையும் செய்யவும் துணிந்து விட்டாள்.. 

குழந்தையை பிடிங்கி கொண்டு ரஞ்சனி நகர தருண் அப்பா அப்பா என்று ஸ்ரீநாத்தை பார்த்து அழுது கொண்டே போக , மகனை பார்த்தபடி நின்ற ஸ்ரீநாத்துக்கு கண்களை இருட்டி கொண்டு வர... மன அழுத்தம் , பல நாள் தூக்கம் இல்லாமை சாப்பிடாது கிடந்தது, எல்லாம் சேர்ந்து தலை சுற்றி மயக்கம் வர அப்படியே ஆறடி சிலை போல சடசடவென நிலத்தில் சரிந்தான்... 

எனக்காக யாருமே இல்லையா? அப்படி என்ன தவறு செய்தேன் இப்படி ஒரு ஈனப்பிறவி ஆகி போனேன் என்று நினைத்தபடி அவன் கண்கள் மூடினான் ..... 

அய்யய்யோ சார் சார் என்ற பெண்குரல் அவன் காதை மெல்ல அடைந்தது, முகத்தில் நீரை பீய்ச்சி அடித்து கர்சீப் வைத்து அவன் முகத்தை துடைத்து விட்டது ஒரு மெல்லிய கரம் !!!

கொஞ்சம் காத்தோட்டமா தூக்கி படுக்க வைங்களேன் நால்வர் தூக்குவது போல உணர்வு 

சார் சார் அட்டை வைத்து காற்று வீசுவது போல உணர்வு..

ப்ச் சாப்பிடாம கிடந்து இருப்பார் போல... சலிப்பும் பரிதாபமும் அந்த குரலில் .... 

உங்களுக்கு தெரிஞ்சவரா மேடம் 

உதவி செய்ய அவர் தெரிஞ்சவராத்தான் இருக்கணுமா... என்ற பதில் அவளிடம் இருந்து ....

நீங்க வேணும்னா போங்க நான் அவர் முழிச்சதும் அனுப்பி வச்சிடுறேன் ஆண் உதவிக்கு வர ... 

ம்ம் மெல்லிய முனகலோடு அப்பெண் நகர போக 

அய்யோ உதவிய அவளை காண கண்கள் ஆவல் கொண்டதுவோ சட்டென ஸ்ரீநாத் கண்கள் திறந்து கொள்ள மங்கிய கண்கள் மெல்ல மெல்ல மலர அதன் நடுவே பச்சை சேலை கட்டிய புகழினி நின்றாள்.. 

விவாகரத்து வாழ்க்கையின் முடிவு என்று நினைப்பதும், புதிய தொடக்கம் என்று நினைப்பதும் அவரவர் மனநிலையை பொறுத்ததே!! 

இவர்களுக்கு விவகாரத்து முடிவா இல்லை புதிய ஆரம்பமா அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் .... 

வலியை நினைத்து கொண்டு வாழ்வது காயங்களை ஆற்றாது, வழியை தேடி நகர்வது ஒருவேளை காயங்களை ஆற்றவும் செய்யலாம்..