மான்சினீல் மயூரா 4

Maya4

மான்சினீல் மயூரா 4

4 மான்சினீல் மயூரா !!

ஆட்டோ வந்து ஊர் இறுதியில் இருந்த மயான பகுதியில் உள்ள அவன் வீட்டின் முன்னே வந்து நின்றது ...

அந்த டாக்டருக்கு நீங்க என்ன வேணும்?... 

ஒரு தடவை தாலி கட்டினான், அப்போ பொண்டாட்டின்னு தான் நினைக்கிறேன் , இந்தா நூறு ரூபாய் 

"மேடம் ஹாஸ்பிட்டல்ல இருந்து இங்க வரை ஒரு மணிநேரம் ஆகும் ஐந்நூறு ரூபாய் கொடுங்க கட்டாது 

"மறுபடியும் அதே ஹாஸ்பிட்டல் போய் என் புருசன் அங்கன பொணத்தை போட்டு மேஜிக் பண்ணிட்டு இருப்பான் அவன்கிட்ட நான் சொன்னேன்னு மீதி காசை வாங்கிக்க..."

"நல்லா வாச்சிங்க புருஷனும் பொண்டாட்டியும்" என்று அவர் திட்டி கொண்டே போக .. மயூரா இருட்டில் தனித்து நின்ற அவன் வீட்டின் வெளியே இருந்த ஒற்றை விளக்கை தன் பிஞ்சு விரல் கொண்டு ஒளிர விட, அமாவாசை வானில் ஒற்றை நட்சத்திரம் போல அந்த மயான பூமியில் ஒரு வெளிச்சம் அவள் வருகையால் உண்டானது .... கதவை திறந்து மயூரா அவள் கணவன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்து உள்ளே போக ..வீடு என்று அதை சொல்ல முடியாது அறிவியல் கலைக்கூடம் அஃது... 

விரும்பியதை தான் ரசிக்க முடியும், ரசிப்பதை தான் அழகு படுத்த முடியும் , அப்படித்தான் அந்த இடம் முழுக்க அவன் ரசனைக்கு உட்பட்ட பகுதி .. 

உள்ளே நுழைந்த அவள் கண்ணில் எந்த பயமும் இல்லை தயக்கமும் இல்லை , சர்வ சாதாரணமாக அந்த வீட்டுக்குள் நுழைந்து உலாத்தினாள், அவன் தொழிலை காதலிக்கிறான் எனவே அங்கிருந்த அத்தனையும் அவன் காதல் சின்னங்கள் அதை அவள் ரசிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் அதை அருவருக்காதவளை மெச்சிக்கொள்ளத்தான் வேண்டும் ...

படுக்கை அறை உள்ளே நுழைந்த மயூரா அங்கே இருந்த அலமாரி திறந்து சேஷா ஆடைகளை கலைத்து போட்டு அதில் இருந்த கருப்பு சட்டை குவியலை சலித்து பார்த்தவள் 

"கருப்பை தவிர பேயன் வேற ஒன்னும் போட மாட்டான் போல ஒருநாள் அட்ஜெஸ்ட் பண்ணுவோம் என்று அவன் சட்டை ஒன்றை எடுத்து கொண்டு குளித்து முடித்து அவன் சட்டையை மாட்டி கொண்டாள்... கீழே அவன் லுங்கியை மடித்து கட்டி கொண்டு அவன் அழகிய மனைவியாக அவன் வீட்டுக்குள் முதல் உரிமை எடுத்து கொண்டாள்...

வேலையை முடித்து விட்டு சேஷா வெளியே வர சித்திக் போனில் அவனை அழைத்தான்... உப்பிய வயிற்றோடு இலை மாங்காய் வெட்டி மிளகாய் போட்டு கொண்டு வந்து அவனுக்கு நீட்ட .... அதை சப்பு கொட்டி தின்றவனை பார்த்து இளங்கோ தலையில் அடித்தார் ... 

"வாயும் வயிறுமா இருக்கிறது அவ , அவ மாங்காய் தின்னா ஒரு நியாயம் "

"வாயும் வயிறுமா ஆக்கினதே நான்தான் மாமா அப்போ , நான் திங்கிறது தப்பா ? "

"ம்க்கும் வாய்க்கு மட்டும் குறைச்சல் இல்லை, என்று இலை சித்திக் கன்னத்தில் கிள்ள

"வேற எதுக்குடி குறைச்சல்  

"எல்லாத்துக்கும் தான், தளிர்தான் என் தங்கச்சின்னு கண்டுபிடிச்சு மாசக்கணக்கா ஆகுது உங்களால, அவகிட்ட பேசி அப்பா கூட சேர்த்து வைக்க முடியலயா? 

"நீ ஏம்மா சொல்ல மாட்ட, அந்த பத்மாவதி உள்ள போக நான் தான் காரணம்னு முதல் ஆளா என்னை போட்டு தள்ள சுத்திட்டு இருக்கா உன் தொங்கச்சி , இப்ப போய் உன் அப்பாவுக்கு சிபாரிசு பண்ணி என் பிள்ளைக்கு தகப்பன் பேர்ல மட்டும் என்னையே இருக்க சொல்றியா ...

"நீங்கதான கொழுந்தியா வேணும்னு ஆசைப்பட்டது நல்ல கொழுந்தியா கிடைச்சிருக்கு அவளை சுத்தாம பழைய பொண்டாட்டியை சுத்துறீங்க" என்று இலை சிரிக்க 

"எதுக்கு அவளை சுத்தி ஒத்த பிள்ளையோட உன் புருஷன் அந்த பாக்கியத்தை இழக்கவா? போம்மா அங்கிட்டு அவளும் அவ வாயும் என் லவ்வர் பெத்த மகளா போயிட்டா அதனால பொறுத்து போறேன் ..

"ம்க்கும் அவளுக்கு பயம்னு சொல்லுங்க அதான் பக்கத்துல போக மாட்டைக்கிறீங்க

"பயம் எல்லாம் இல்லை, அவ மனநிலை யோசிச்சு பார் பத்மாவதியை சாமி போல நினைக்கிறா , நாம அவளை தூக்கி உள்ள போட்டிருக்கோம், நம்ம மேல இருந்த கோவம் வெறியா மாறி நிக்கும், இப்போ நாம என்ன சொன்னாலும் அவ காதுல கேட்காது 

"அதுக்கு இப்டியே அவளை தனியா விட சொல்றிங்களா.... சொத்து எல்லாம் போய் நடுரோட்டுல நிக்கிறாளாம்.. அப்பாவுக்கு தெரிஞ்சவங்க சொல்லி இருக்காங்க, அவ ஏன் தனியா நிக்கணும் நாங்க இருக்கும் போது அவ ஏன் யாரும் இல்லாம இருக்கணும்..

"நீ பேசுறது எல்லாம் நல்லா தான் இருக்கு வான்னு சொன்னா வந்திடுவாளா? 

"அது என்று இலை இழுக்க 

"எம்மாடி இலை மருமகன் சொல்றது தான் சரி ..அவர் படிச்ச புள்ள சரியாதான் யோசிப்பார் .... புள்ள தனியா கிடக்கே அதுவும் பொட்ட புள்ள என்ன செய்யும்னு கொஞ்சம் பயமா இருக்குய்யா வேற ஒன்னும் இல்லை " என்று இளங்கோ பெருமூச்சு விட 

யார் அவளால யாருக்காவது ஆபத்து வந்தாதான் உண்டு ..! உங்க மக ஒன்னும் தனியா தவிச்ச கிடக்கல, சேஃபா அவ புருசன் வீட்டுல போய் டேரா போட்டு உட்கார்ந்தாச்சு ....

 "ஏதே அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சா???" என்று இளங்கோவும் இலையும் அதிர

"ஹிஹி நம்ம பயதான் தாலி சும்மா இருந்துச்சுன்னு பத்து பைசா செலவு இல்லாம போய் தாலியை கட்டி வச்சிட்டு வந்துட்டான் , உன்கிட்ட சொன்னா அந்த அரைவேக்காடுக்கு எதுக்குடா என் தங்கச்சியை கட்டி வச்சேன்னு திட்டுவ அதான் சொல்லல "

"உங்களை , இப்பவும் உங்களை தான் திட்டுவேன் , அவளை இதுக்கு நீங்க கல்லை கட்டி ஆத்துல தள்ளி இருக்கலாம்  

"ஆறு எல்லாம் வத்தி போச்சாம் அதான் அவன்கிட்ட தள்ளிட்டேன் , அவனுக்கு என்ன குறை மாமா, கை நிறைய சம்பாரிக்கிறான், நல்ல பையன் .... உங்களுக்கு பிடிக்கலையா? என்று இளங்கோவை சித்திக் பார்க்க 

"எனக்கு என் மக வேணும்ய்யா அவளும் நல்லா இருக்கணும் அம்புட்டுதேன் நீ பார்த்துப்ப பார்த்துக்க" என்று இளங்கோ எழும்பி போய்விட 

"எப்படியோ போய் தொலைங்க... என்று இலையும் நகர சித்திக் நண்பனுக்கு போனை போட்டான் பல அழைப்புக்கு பின்னே போன் எடுக்கப்பட்டது 

"ம்ம் சேஷா உம் வர 

"என்னடா மோகினி கரையை கட்ந்திருச்சா

"வீட்டுக்கு இப்போதைக்கு போயிருக்கு ... 

"சமாளிச்சிடுவியா ??

"அவ என்ன சமாளிச்சா சரிதான் ... 

"பார்த்துக்கடா உன்னை நம்பிதான் இருக்கேன்... உனக்கு உன் பிரைவேட்டுக்குள்ள யார் வர்றதும் பிடிக்காதுன்னு தெரியும் , கொஞ்சம் அவளை அட்ஜெஸ்ட் பண்ணிக்க.. பத்மாவதி உண்மை முகம் தெரியும் வரை தான் உனக்கு தொல்லை ... அவ, இளங்கோ மாமா மனசு புரிச்சிகிட்டா அப்பறம் தகப்பன் மகளை சேர்த்து வச்சி உனக்கு விடுதலை தந்திடுறேன் ...சித்திக் பேச்சுக்கு பதில் எல்லாம் இல்லை அமைதியாக எப்போதும் போல சேஷா கேட்டு கொண்டிருந்தான் 

"பத்மாவதி கேஸ் ரெண்டுநாள்ல ஹியரிங் வருது போல நீதான் அந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும் போஸ்ட் மார்டம் பண்ணின டாக்ட்டர் சோ உன்ன விசாரிப்பாங்க... 

"ம்ம் சீப் சொன்னார் 

"பத்மாவதிக்கு எதிரா நீ ரிப்போர்ட் கொடுத்தா உன் பொண்டாட்டி தரை அதிர ஆடுவாளே, என்ன செய்ய போற ...நீ கொடுக்க போற எவிடென்ஸ் தான் கேஸை டபுள் ஸ்டாராங் ஆக்கும் உன் பொண்டாட்டிக்கு நீதான் இந்த கேஸோட பாரன்சி டாக்ட்டர்னு சொல்லிடாத... சேசாஆஆஆ 

ம்ம் 

"எப்படிடா இருக்க ? மாமாவுக்கு அங்க புடிக்கல அதான் நான் இங்க வந்துட்டேன் அவங்களுக்கு என்ன விட்டா யார்டா இருக்கா ? நான்தானே எல்லாம் செய்யணும்... ஆனா உன்ன விட்டுட்டு இங்க வந்தது தான் ஒருமாதிரி பீலா இருக்கு சேசா... உன்ன இங்க வர சொன்னா வேண்டாம்ங்கிற அங்க நீ கம்பர்டபுளா இருக்கியா? என்னை தவிர உனக்கு யாருமே இல்லையேடா" என்ற சித்திக் தொண்டை கரகரப்பாக வார்த்தை வர .., 

"எனக்கு என்ன, ஐயம் பைன் வித் மை ஜாப் என்று சேஷா தோளை உலுக்கிட... 

"ப்ச் நாம இருந்தா அப்படியே சுத்தி வருவோம் அதை நான் ரொம்ப மிஸ் பண்றேன்டா... நண்பர்கள் இருவரும் உட்கார்ந்து காப்பி குடிக்கும் பெட்டி கடையில் சேஷா மட்டும் தனியாக உட்காந்து காப்பியை குடித்து கொண்டு இருந்தான் .. 

 "இப்ப உனக்கு தான் பொண்டாட்டி வந்துட்டாளே இனி உனக்கும் துணைக்கு ஒரு ஆள் வந்தாச்சு , அங்க இங்க சுத்தமா வீட்டுக்கு போ அவ ஒத்தையா கிடப்பா வீடு வேற தனியா இருக்கு முடிஞ்ச வரை நைட் வீட்டுக்கு போக பாரு சேசா வைக்கவா ??'

ம்ம் என்றவன் காப்பியை குடித்துவிட்டு வீட்டை நோக்கி பைக்கை விட்டான் ஷேஷா ....  

வீடு பேவென திறந்து கிடந்தது ஹாலில் டிவியில் ஏதோ பாட்டு வீடு அதிர ஓடி கொண்டிருந்தது, கிச்சன் உள்ளே பால் தீய்ந்த வாடை , எலும்புகூடு எல்லாம் இடம் மாறி கிடந்தது .. மண்டை ஓட்டின் மீது அவள் கைவண்ணம் காட்டி வைத்திருந்தாள், ஏதோ படத்தை வரைந்து வைத்திருந்தாள்.. சேஷா ஷூவை கழட்டி போட்டு கொண்டு நிற்க, லுங்கியை தொடை வரை ஏத்தி கட்டி அவன் முன் ஒரு தொடை தெரிய தலையை தூக்கி பார்த்தான்.. அவன் சட்டை லுங்கியில் அவன் மனைவி மயூரா கரண்டியை காதில் சொருகி காலை ஆட்டியபடி அவன் முன் வந்து நின்றாள்

ஏன் இவ்வளவு லேட்டு? வீட்டுக்கு சீக்கிரம் வரணும்னு சொன்னேன்ல.... சாப்பிட்டியா? தோசை போட்டேன் வா சேர்ந்து சாப்பிடலாம்...  

நான் டின்னர் முடிச்சிட்டு வந்துட்டேன்" ஒற்றை படுக்கை அறை உள்ளே அவன் நுழைய அவளும் பின்னாலேயே நுழைந்தவள் 

ப்ச் எனக்கு தெரியாது முதல் முதல்ல சமைச்சு இருக்கேன் அதை தின்னுட்டு வாயால வயித்தால போக நான் தயார் இல்லை, நீ வந்து தின்னு என்று அவன் கையை பிடித்து இழுத்தாள் ... 

நீ தின்னுட்டு சாகாம இருந்தா நான் திங்கிறேன்... நீ வராம நான் போறதா இல்லை வா" என்று படுக்கை மீது ஜம்பமாக சம்மணம் போட்டு மயூரா அமர்ந்து கொள்ள , நாடியை அவளை பார்த்து கொண்டே சொரிந்த சேஷா சட்டை பட்டனை கழட்ட ஆரம்பிக்க... இவள் இன்னும் அவனைத்தான் பார்த்து கொண்டு இருந்தாள், அவன் சட்டையை கழட்டி அழுக்கு துணியில் போட்டு விட்டு , பேண்டை கழட்டி லுங்கியை போட , அப்போதும் அவள் கூச்ச நாச்சம் எல்லாம் பட்டு நெளியாது ஏதோ பாடலை கம் பண்ணி கொண்டிருக்க, சேஷா வந்து படுக்கையில் ஒரு கரையில் குப்புற படுத்து கொள்ள, சுளீர் என சேஷா முதுகில் ஒரு அடி போட்டவள் 

உன்ன சாப்பிட வான்னு சொன்னேன் .... 

வேணும்னா தின்னுட்டு தூங்கு, இல்லை பட்னியா தூங்கு என்றவன் பின்புறம் ஓங்கி மிதித்து விட்டு மயூரா எழும்பி போக, அவன் அசைவு இல்லாது தூங்கவும் தொடங்கி விட்டான்... சிறிது நேரத்தில் அவன் அருகே அசைவு அவன் போர்வையை ஒரு கை இழுத்தது அவன் போர்வை உள்ளே ஒரு உடல் நுழைந்தது.... 

ப்ச் இடமே இல்லை , எருமை மாடு தள்ளி படுறா தாலி கட்டுனா மட்டும் போதுமா? வந்தவ எங்க படுப்பா , ஒரு ஏசி இல்லை, தோட்டம் இல்லை , அட்டாச் பார்த்ரூம் இல்லை நீயெல்லாம் ஒரு டாக்டரா ? இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு .. நாளைக்கு விடியட்டும் அப்போ இருக்கு உனக்கு கச்சேரி புளுபுளு என்று தூங்கும் வரை ஏதோ சண்டை போட்டவள் தூங்கும் அவனை அடித்தாள் , பிராண்டினாள் ,,கண்டபடி திட்டினாள் 

அசைவு சிறுது நேரத்தில் குறைந்து அவன் கழுத்தில் வந்து மயூரா கை விழுந்தது... இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கால் வந்து சேஷா முதுகில் விழுந்தது 

ப்ச் அவன் கைகள் அவள் காலை நகட்டி விடவிட இவள் தூக்கி போட.... எப்போது அவன் கண் தூங்கியது தெரியாது, அவளும் தூங்கி விட்டாள் அவனும் தூங்கி விட்டாள் ...  

மனமும் மனமும் இணைந்து, உடலும் உடலும் இணைந்த பின்னும் கூட விலகி இருக்கும் தம்பதியர் முன்னே எந்த சேர்க்கையும் இல்லாது இருவரும் ஒரு கூட்டில் அடைந்து கொண்டனர் என்பதை விட , அழகாக பொருந்தி விட்டனர் என்பதே சரியான சொல்லாடல்!!