பகலவன்26

Pani26

பகலவன்26

26 பகலவனின் பனிமலர் அவளோ??

மாலை நாலு மணி வரை சுவாதி இதமாக இருந்தாள் ஆனால் ஸ்ரீ சொன்னது போலவே வரவில்லை .. போனை போட... கட் பண்ணி விட்டான்...

"சாதிக்க பார்க்கிறான் என பிஏ , முதல் வாட்ச்மேன் வரை போன் நம்பர் தேடி கலெக்டரை ஏலம் போட..

"ப்ச் என்னடி?

"உங்க ஆபிஸ் வாசல்லதான் இருக்கேன் வர முடியுமா முடியாதா "அவள் சத்தம் கலெக்டர் ஆபிஸில் எதிரொலிக்க, ஸ்ரீ ஜன்னல் வழியே வெளியே பார்த்தவன், முகத்தில் மீசை தாண்டி அழகிய புன்னகை.. சொன்னது போலவே மைக்கை வைத்து மரத்தடியில் அவன் மனைவி நின்றாள்..

"பாவா ஐயம் வெயிட்டீங் வாங்க என்று கத்த ..

"இவளாலதான் வேலை போகணும்னு எழுதி இருக்கு போல, எனக்கு என்ன நிம்மதியா வீட்டோட புருஷனா செட்டில் ஆகிடுவேன் என்று தலையை கோதி கொண்டே அவளை நோக்கி நடந்தான்....  

"வர முடியாது என்று சண்டை போட்டவனை கடத்தி கொண்டு வந்துவிட்டாள் 

"ஏர்போர்ட் வாசலில் மாமியார் மாமனார் நாத்தியார் என செல்லம் கொஞ்சும் மனைவியை நகத்தை கடித்து கொண்டே பார்த்தவன்..பொறுமை போய் நேரே சுவாதியை இழுத்து தன் கையில் விட்டு கொண்டு ..

"யோவ் உனக்கு அசிங்கமா இல்லை, நான் கூப்பிடாம என் வீட்டுக்கு வர்ற , ஒழுங்கா அடுத்த டிக்கெட் போட்டு தர்றேன் ஊருக்கு போங்க... அனைவர் முகமும் கருக்கும் என எதிர்பார்க்க 

"இத்தனை நாள், நான் சம்பாதிச்ச காசுல நீ காலாட்டிகிட்டு தின்னல்ல, இப்ப உன் காசுல நான் திங்கிறேன் ..கார்ல ஏசி போட்டுருக்கதான, நமக்கு புழுக்கம் செட் ஆகாது ,,"என மகேந்திரன் கார் முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொள்ள.. ஸ்ரீ திரும்பி மனைவியை பார்க்க, நாக்கை துருத்தி வக்கனை செய்து இச் இச் என்று மாறி மாறி உதட்டை குவித்து கொடுக்க காலை தரையில் உதைத்து ...

"நான் பண்ற டார்ச்சர்ல எல்லாரும் ஓடிருவீங்க உனக்கும் சேர்த்து தான் 

"நீங்க ஓடாம இருந்தா சரிதான் 

"ஸ்ரீ தனி வீடுதான ,நைட்டுக்கு நாட்டு கோழி வாங்கிட்டு வந்திடு, அப்பாவுக்கு கொஞ்சம் நெஞ்சுக்கறி..

"அண்ணா எனக்கு வஞ்சரம் மீன் 

"அவருக்கு வேலை இருக்கும் ,நாமளே போய் மார்க்கெட்டுல வாங்கிட்டு பில்லை மட்டும் கலெக்டர் ஆபிஸ் அனுப்பி விடுவோம், ஏன் பாவா நீங்க வர்றீங்களா , இல்லை டிரைவரை வந்து வண்டி எடுக்க சொல்லவா.. "ஆத்திரத்தில் பல்லை கடித்த ஸ்ரீயின் தோளை சுரண்டி கேட்க..

"நீங்க வந்தா நேரே வீட்டுக்கு போகலாம் , இல்லை புதுசா திறந்த ஜவுளி கடை போய் உங்க பேரை சொல்லி மேஞ்சிட்டு வந்திடுவோம், வர்றீங்களா போறீங்களா பாவா .."

"ச்சை போய் தொலை "என்று எரிச்சலில் வண்டியை எடுத்தவனுக்கு சந்தை கடை போல சத்தம் .. 

"இந்தாளு அளந்து வச்சித்தான பேசுவான், வேணும்னே இப்ப அதிகம் பேசி காதை செவுடாக்குறான், இது ஆவுறதுக்கு இல்ல, நம்ம வாயை திறந்திட வேண்டியதுதான்

"ச்சை நிறுத்தி தொலைங்க _____ ஓசியில சோறு போட்டா வந்து சேர்ந்திருவீங்களா, அவ கூப்பிட்டா கிளம்பி வந்து என் உயிரை எடுப்பீங்களா, " அரைமணிநேரம் வட்டம் வட்டமாக கிழித்து விட்டு திரும்பி பார்க்க .. பின்னே பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்கி கொண்டிருக்க , ஸ்ரீ பல்லை கடித்து மகேந்திரனை பார்க்க 

"உன் டெக்னிக் தான் தம்பி.. "என்று காதிலிருந்து பஞ்சை எடுத்து காட்டி..

"வரும்போதே ஒரு கிலோ பஞ்சை அமேசான்ல ஆர்டர் போட்டு வாங்கிட்டு வந்துட்டோம் .. முன்ன பார்த்து வண்டியை ஓட்டுங்க .. என்று சீட்டில் தலைசாய்ந்து படுத்து கொண்டவர் கண்கள் மகனை விட்டு அகல வில்லை ..

"யோவ் ஏன்ய்யா அப்படி பார்க்கிற.. முன்ன பாரு..

"இந்த அப்பாவை மன்னிப்பியாடா, என்று கண்னின் ஓரம் கண்ணீர் துளிர்த்து நின்றவர் பார்க்காது திரும்பியவன்.. 

"வயசான காலத்துல சீனை போடாம சாஞ்சி தூங்கு" என்று சீட்டை சாய்த்து கொடுத்தவன், தூங்கும் தன் குடும்பத்தை பெருமூச்சு விட்டு பார்த்தவன்... சுவாதி தலையை எட்டி தடவி விட்டவன் கண்கள் சொல்ல முடியாத வலியை காட்டியது...

பத்து மாதம் சுவாதிக்கு குடும்பம் அன்பு மழை பொழிய , ஸ்ரீ வம்பு மழை பொழிய என்று சுவாதி தான் இழுந்தது எல்லாம் இதை பெறத்தான் என்று நினைத்து கடந்து போன காலங்களை விட்டுவி்ட்டு புதிய வாழ்கைக்கு தன்னை முழுமையாக கொடுத்து விட..

விடுமா அவளை சுற்றிய காரிருள்....

இரவு அனைவரும் தூங்கி கொண்டிருக்க சுவாதி பாவா.... பாவாஆஆ என்றவள் வயிற்றை பிடித்து கொண்டு முனுங்க ஸ்ரீ பட்டென்று எழும்பி அவளை தூக்கி கொண்டு மருத்தவர் நோக்கி ஓடினான்.. 

அவளுக்கு வைத்தியம் பார்த்த கேரள மருத்துவர், , இன்னும் பல மருத்துவர்கள் உள்ளே நிற்க.. ஸ்ரீ முகத்தில் வியர்வை வடிந்தது ... அவள் நாடித்துடிப்பு பிடித்து பார்த்த வைத்தியர் பெருமூச்சு விட்டார்..

ஸ்ரீயின் காதல் எதுவென புரிந்தவர் இவர்தானே... சுவாதியை மீண்டும் ஆந்திராவில் கண்டு அவன் தேடி ஓடி வந்தது அவளுக்கு வைத்தியம் கொடுத்த இவரை நோக்கி தான் ...மனைவி உடல் நலம் குறித்து அவனுக்கு தெளிவு வேண்டும் என்று நினைத்தான் வந்தவனுக்கு உலகமே இருண்டு நின்றது ..  

ஆம் !! சுவாதியின் நாட்கள் முடிவை நோக்கி நெருங்கி கொண்டிருப்பதை அறிந்தவன் அவன் மட்டுமே!!

தன்னை அறிமுகம் செய்தது கொண்டு, மனைவி உடல்நிலை குறித்து கேட்க..

"நான் ஒரு பொய் சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருந்தேன் ஸ்ரீ .. அந்த பொண்ணு விஷம் குடிச்சு இங்க வந்த போது, தனக்கு மூளையில உள்ள பிரச்சனை தெரிஞ்சு சிரிச்சது.. அவளோடு சிரிப்பு இப்பவரை எனக்கு அப்படியே நியாபகம் இருக்கு .. தன் சுயநினைவை இழக்க போகும் கடைசி நிமிசம் ..

"எனக்கு குணமாகிடுச்சுன்னு அம்மாகிட்ட சொல்லிடூங்க பாவம், கடைசி காலத்துல நிம்மதியா இருக்கட்டும் ... இந்த ஒரு சத்தியம் பண்ணுங்க ப்ளீஸ்...

"சரிம்மான்னு சத்தியம் பண்ணி கொடுத்தேன்.. புது மனுசியா எல்லாம் மறந்து நின்ன பொண்ணுகிட்ட உனக்கு எதுவும் சரியாகல , எப்ப வேணும்னாலும் உன்னோட மூளை அதன் செயல்பாட்டை நிறுத்தும்னு சொல்லி .. எப்பவோ வர்ற மரணத்தை இப்பவே ஏன் அழைப்பானேன்னு அவளுக்கு கொடுத்த சத்தியத்தின்படி அதை, அவ கிட்டேயும் மறைச்சிட்டேன் அது தெழில் தர்மன் இல்லைதான் ஆனா மனித தர்மம் "... ஸ்ரீ தலையை பிடித்து கொண்டு பொத்தென்று அமர்ந்தான்..  

""சுவாதி இப்ப எப்படி இருக்கா மோனே எல்லாம் சுகத்தன்னே.. 

"ம்ஹூம் , நேத்து காலேஜ் போன இடத்தில மயங்கி விழுந்துட்டா அதுக்கு பிறகுதான் எனக்கு சின்ன டவுட் வந்து இங்க வந்தேன், ஆனா இவ்வளவு பெருசா இருக்கும்னு நான் நினைக்கல..

"அச்சோ என்டே குருவாயூரப்பா... ஏன் இந்த புள்ளையை சோதிச்சு.. 

"எனக்கு சுவாதி வேணும் ஏதாவது பண்ணுங்க.. 

"மோனே ஒன்னு அவள் முழு நினைவுகள் மறுபடி வந்து மூளை சீராகணும் , அப்படி இல்லாத பட்சத்தில் அந்த பொண்ணோட மூளை மொத்தமா தன் செயல்பாட்டை நிறுத்திக்கும், லைக் கோமா போல ,இரண்டு தடவை காப்பாத்த முடிஞ்ச எங்களால மூணாவது முறை காப்பாத்த முடியாது. அவளுக்கு நினைவு வர வைங்க .

அவளே தான் எல்லாம் நினைவுக்கு கொண்டு வரணுமா ,நான் சொன்னா ஓகேவா ?

"அவளுக்காதான் அது வரணும் ஸ்ரீ , உணர்வினை கொதிக்க வச்சிட்டே இருங்க, மூளை நீங்க யாருன்னு தேட ஆரம்பிக்கட்டும் .. உங்களுக்காக ஜனனம் எடுத்திருக்கா, கண்டிப்பா நல்லதே நினைப்போம் ,அவளோட வாழ ஆரம்பிங்க அது கூட மாற்றத்துக்கு வழி வகுக்கும் எனறு அனுப்பி வைத்தார்...

"உன்ன இந்த வாட்டி இழக்க மாட்டேன்டி" .. என்றவன் தன் நெஞ்சில் பதிந்து கிடக்கும் வலியை தடவி விட்டான்.... 

"தன் எதிரே துடிக்கும் மனைவியை பரிதவிக்க பார்த்த ஸ்ரீ ,தோளை தட்டி கொடுத்தவர்

"மோனே நான் ஏற்கனவே சொன்னது போலத்தான் .. 

"இந்த பிரகனஸ்ஸியில ஒன்னு அவ கோமா நிலை போவா.. இல்லை மறந்து போன அத்தனை நினைவுகளும் ஒட்டு மொத்தமா வந்து , அவள தான் யாருன்னு அடையாளம் காட்டும் ...உங்கள மட்டும் இல்லை, நான் சொல்றது புரியுதா .. இதுக்கு தான் எப்படியாவது அவ உங்களோட வாழ்ந்த அந்த பழைய நியாயங்களை ஏதாவது செஞ்சு வரை வைங்க, காப்பாத்த ஐம்பது சதவிகித வாய்ப்பு இருக்குன்னு சொன்னேன் ."

"என்னால முடியல நானும் எல்லாவிதத்திலும் அவளுக்கு என்ன யாருன்னு புரிய வைச்சு பார்த்துட்டேன் ... நான் பாவான்னு தெரியுது, ஆனா அந்த நினைவுகள் , அரைகுறையா மட்டும்தான் அவளுக்கு இருக்கு .. இப்ப என்ன பண்றது..  

"ம்ம் , உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அதிவேகமாக இயங்கி வைக்கிறது ஒன்னு தாம்பத்தியம், மற்றொன்று குழந்தை பிறப்பு ... 

"தாம்பத்தியம் அவளோட செத்த நினைவுகளுக்கு ஈரம் உண்டாக்கி விட்டிருக்கு புரியுது , இந்த குழந்தை பிறப்பு எது வேணும்னாலும் அவளுக்கு கொண்டு வரலாம், அது மரணம் கோமா இல்லை நினைவுகள் எதுக்கும் தயார் ஆகிக்கோங்க .. கையெழுத்து வாங்கிக்குங்க" என்று . மகப்பேறு டாக்டர் வந்து அவன் கையில் பைலை கொடுக்க நடுங்கிய விரலோடு வாங்கினான்... 

"திருமதி சுவாதி ஸ்ரீராமுக்கு எது நடந்தாலும் மருத்துவரோ, மருத்துவமனையோ பொறுப்பு அல்ல என்று எழுதி இருக்க. உடைந்து போனது அவன் உலகம் ..

"நீ வேணும்டி அதுக்காக மட்டும்தான் அத்தனை போராட்டம் போராடினேன், பாவாவை விட்டுட்டு போயிடாதடி "என்று துடிக்கும் சுவாதி இதழில் முத்தமிட்டு கையெழுத்து போட ஆரம்பித்தான்... 

ஸ்ரீராம் காதலோடு போராடவில்லை ,அவள் மரணத்தோடு போராடினான்.. 

ஜெயித்தால் அவளோடு வாழ்வான் , தோற்றால் அவளோடு சாவான்..