பகலவன்27
Pani27

27 பகலவனின் பனிமலர் அவளோ!!
வினய் விஷயம் அறிந்து அடுத்த நொடி நண்பன் அருகே நின்றான்..
"மச்சான் என்று வினய் அவனை தாவி அணைத்து கொண்டு முதுகை தடவி கொடுக்க..
"அவ திரும்பி வந்தா, உன் மச்சான் திரும்பி வருவான், இல்லை என் குழந்தையை பார்ததுக்கடா" என்று லேபர் வார்ட் உள்ளே போன நண்பனை பார்த்து வினய் சத்தமில்லாது அழுதான்...
"என்னதான்டா நடக்குது , டாக்டர் என்னவோ சொல்றார்.. இவன் ஒரு மாதிரி இருக்கான் யார்டா இந்த சுவாதி?" என மகேந்திரன் வினய்யை பிடித்து உலுக்க அவள் பற்றிய அத்தனையும் சொன்னான்....
"ஆண்டவா ஆஆஆஆஆ அந்த பிள்ளை மேல உனக்கு இரக்கமே இல்லையா, எத்தனை போராட்டம் அந்த குழந்தைக்கு "என்று சிவகாமி உட்கார்ந்து தலையில் அடித்து கொண்டு அழ .... குடும்பமே இருளில் தவித்த நொடிகள்..
"ஏன்டா இப்படி ஆகும்னா ,பேசாம சி செக்ஷன் பண்ணி இரண்டு பேரையும் சேஃப்பா பிரிக்க வேண்டியதுதான... பேறுகால வலி வந்தாதான அவளுக்கு பழசு நியாபகம் வரும் ,இல்ல கோமா போகும்... சிவகாமி கேட்க
"இல்லை அத்தை அவளுக்கு ஏற்கனவே நினைவு திரும்ப ஆரம்பிச்சிடுச்சு, என்னைக்கா இருந்தாலும் இவளுடைய பழைய மனிதர்களை பார்க்க வாய்பபு வரும், அப்ப கண்டிப்பா இதே நிலைதான் மறுபடியும் வரும்னு சொல்றாங்க, இதை விட சிவியர் கூட ஆகலாம் போல , நம்ம ஸ்ரீக்கு தெரியாத அறிவியலும் விஞ்ஞானமுமா நமக்கு தெரிய போகுது ...
"என் சுவாதி பிள்ளையும், என் மகனும் நல்லா வந்தா போதும்" பச்சை தண்ணீ பல்லில் படாது காத்து கிடக்க ..
உள்ளே லேபர் வார்டில் சுவாதி வலியில் கிடந்தாள்..
"ஸ்ரீ அவங்கள ப்ரீ பண்ணுங்க ஸ்டேர்ஸ், ஆக விடாம ,ஏதாவது பேசிட்டே இருங்க, குழந்தை தலை திரும்ப லேட்டாகும் போல.. அவள் தலை உடல் முழுவதும் சிறு மருத்துவ கருவி வைத்து அவள் மூளை கண்காணிக்க பட்டு கொண்டது ருந்தது..
"பாவாஆஆஆஆஆ பயமா இருக்கா.. ஸ்ரீ அமைதியாக இருக்கவும், சுவாதி வலியோடு அவன் கையை தடவி கொடுத்தாள்
"நான் ஏன்டி பயப்பட போறேன் , உள்ள இருக்கிற குழந்தை எப்பவா இருந்தாலும் , வரத்தான செய்யும் .. "அவள் வலியோடு அவனை பார்த்து முறைக்க..
"எழும்பி உட்கார் இந்த ஜூஸை குடி கத்த தெம்பு வேணும்ல என்று அவள் வாயில் கொடுக்க..
"ச்சை போடா வெளிய , நான் வலிக்குதுன்னு கத்துறேன் கிண்டல் பண்றியா, ஐ ஹேட் யூ பாவா..
"நானும் ஐ ஹேட் யூ தான்டி, இவ்வளவு சின்ன வயசுல என்ன அப்பா ஆக்கிட்ட என்று உதட்டை பிதுக்கிய ஸ்ரீ நெஞ்சில் சாய்ந்த சுவாதி..அவன் நெஞ்சு தாறுமாறாக அடிப்பதை பார்த்து , அவனை அண்ணாந்து பார்த்தாள்... ஸ்ரீ கையை அழுத்தி பிடித்து கொண்டே ..
"எனக்கு ஏதாவது ஒன்னு ஆகி போச்சின்னா, என்ன செய்வீங்க பாவா..பட்டென்று கீழே குனிந்து அவளை பார்த்தவன் அவள் கண்ணில் தெரிந்த கலக்கத்தில்
"வேற என்ன பண்ண ஸ்வீட்டி ,நாலுநாள் உட்கார்ந்து அழுவேன்.."
"அப்பறம்
"கலெக்டர் ஸ்ரீராமுக்கு நல்ல மணமகள் தேவைன்னு விளம்பரம் கொடுத்து அடுத்து ஒருத்தி கூட கமிட் ஆக வேண்டியதுதான்..அவன் நெஞ்சில் குத்தியவள்
"போங்க பாவா , நான் மட்டும் தான் உங்களுக்கு நான் இல்லைன்னாலும், இந்த இதயததில என்ன தவிர யாருக்கும் இடம் இருக்க கூடாது, எனக்காகவே வாழணும் சரியா? டேடி ப்ராமிஸ் சொல்லுங்க "என்று கையை நீட்ட , அவன் இதயத்தில் கடப்பாரை பிளந்த வலி...
"என் ஸீவிட்டி ப்ராமிஸ் ,இல்லை, சுவாதி ப்ராமிஸ் ... சுவாதி தலையை பிடித்து கொண்டே
"ம்மாஆஆஆஆ பாவா ... எனக்கு கண்ணை கெட்டிகிட்டு வருது பாவா , நிறைய உருவம் நீங்க அப்பறம் அப்பறம் ஆஆஆஆஆ , பயமா இருக்கு என்ன விட்டுட்டு போயிடாதீங்க" நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக முன்டியிட்டு வர துடிக்க, மூளையின் செயல்பாடு, இடுப்பு வலி என எல்லாம் சேர்ந்து அவள் முகம் கருக்க ஆரம்பித்தது..
"என்கிட்ட ஏதாவது பேசிட்டே இருடி என்ன பார்த்துட்டே இரு...என்ன தவிர எதையும் யோசிக்காத ... "அவள் முகத்தை திருப்பி தன் முகத்தை பார்க்க வைத்து கொண்டான்...
"இந்த சுவாதி பிடிக்குமா பாவா .. ம்மா.. ப்ளீஸ் உங்க மனசுல நான் இருக்கேனான்னு தெரிஞ்சிக்க ஆஆ ஆசையா இருக்கு பாவா, "விட்டுவிட்டு மூளையில் வலி ஒன்று சுருக்கென்று வந்து தைய்த்து போக... ஸ்ரீ அவள் தலையில் முத்தமிட்டு கொண்டே இருந்தான் ..
"இந்த உலகத்தில நான் வாழ ஆரம்பிச்சதே உங்ககிட்ட தான் பாவா , என்ன டார்ச்சர் பண்ணும் போது கூட , என்னைய பிடிச்சி வச்சி தொல்லை பண்ண ஒருத்தன் இருக்கான்டா, நான் மறந்தாலும் என்ன பின்னாடி தொரத்தி வந்து தொல்லை கொடுக்க இந்த ஸ்ரீராம் இருக்கான்னு உங்கள தேடுவேன் பாவா.. இந்த இரும்புக்கரம் எனக்கு மட்டும் இதம் தந்திச்சு பாவா.. நீங்க பக்கத்தில உட்கார்ந்து பிராண்டி கிட்டே இருந்தா வேற எந்த கவலையும என் தலைக்குள்ள ஏறவே செய்யாது, ஏன்டா இப்படி பண்றான்னு உங்களையே நினைச்சு நினைச்சு வெறுப்பு காதல்கிறுக்கா மாறி போச்சு.. நீங்கதான் என்னோட பழைய காதல்னு ..ஆஆஆ தெரியும் போது ஐயம் ஹேப்பி.. "
ம்மா ஆஆஆஆ "குழந்தை வேறு இடுப்பை நெறித்து வெளிய வர துடிக்க... மருத்துவர்கள் கண்ணை காட்ட.. ஸ்ரீ அவளை ஒழுங்காக தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான்...
"ப்ளீஸ் பாவா எனக்காக ஒரே ஒரு பொய்யாவது சொல்லுங்களேன்"
"என்னடி ?
"உன்ன மட்டும்தான்டி எனக்கு பிடிக்கும்னு, இந்த உலகத்தில எனக்காக ஒருத்தன் இருக்கான்னு நம்ப வைங்க பாவாஆஆஆஆஆ ...."சட்டென்று அவளை தூக்கி சுவாதி உதட்டை கவ்வி சுவைத்தவன் கண்ணீர் அவள் கண்ணிரோடு கலந்தது ... அவள் கன்னம் தாங்கி முகம் முழுவதும் எச்சில் முத்தம் கொடுத்த ஸ்ரீ..
"அந்த ஸ்வீட்டியை விட, இந்த சுவாதியை ரொம்ப பிடிக்கும் , என் தொல்லையை பொறுத்துக்கிட்டு என்னையும் என் குடும்பத்தையும் சேர்த்து சுமக்கிற இந்த சுவாதியை ரொம்ப பிடிக்கும் .. நீ ஸ்விட்டியா இருந்தாலும் சுவாதியா இருந்தாலும்.. நீ இந்த ஸ்ரீக்கு மட்டுமே உரியவ.. இந்த ஸ்ரீக்கு நீ வேணும்டி.. நீ மட்டும்தான் வேணும் உனக்காக இந்த ஸ்ரீ இருப்பான்டி..
"பாவா ஆஆஆஆஆஆஆ ம்மமாஆஆஆஆஆஆ கண்கள் கருக்க, உடல் தூக்கி தூக்கி போட ஆரம்பிக்க ...
"அம்மு அம்மு, என்ன பாருடி ஏதாவது பண்ணுங்கய்யா .. என் ஸீவிட்டி எனக்கு வேணும்.. என்று கத்திய ஸ்ரீ... வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்த மனைவியை மார்பில் போட்டு கொண்டு கதற ஆரம்பித்தான்..
மரணம் பயங்கரமானது !! என கண் முன்னால் மனைவி காட்டி கொண்டிருந்தாள்...
ஆஆஆஆஆஆஆ என்று இடுப்பை கூறு போட்டு மகள் வெளியே வர ஆரம்பிக்க...
"பா.....ஆஆஆஆஆஆஆ" என்றவள் சத்தம் அடங்க தொடங்கியது..அவள் மூளை அங்கும் இங்கும் மின்னல் போல வெளிச்சத்தை வெட்டி, கருப்பு நிற கோடாகி தன் நினைவுகள் செயல்பாடுகள் அத்தனையும் இழக்க தொடங்கியது..
ஞே ஞேஏஏஏஏஏஏ என மகள் அழ ...
மனைவி கண்ணின் கருவிழிகள் மேலே சொருகி அவள் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பிக்க ஸ்ரீ திரும்பி மருத்துவரை பார்த்தான்..அவர் முடியாது என்று தலையாட்ட....
"ஸ்வீட்டி அவளை தொட பயந்தான்..
"ஸ்வீட்டி பாவா சத்தம் கேட்குதாடி"
"அம்மு உன் ஸ்ரீராம் சத்தம் கேட்குதா??" என்று மெல்ல அவள் கன்னத்தை தொட உறைபனி போல குளிர்ந்து கிடக்க ...
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று ஸ்ரீ கத்திய சத்தம் வெளியே நின்ற குடும்பம் மொத்தத்தையும் உடைய வைத்து விட்டது...
சுவாதி தன் நினைவுகளோடு தோற்று சுயநினைவு இழக்க தொடங்கிட ஆரம்பிக்க ..ஸ்ரீ அவளை தூக்கி பிடித்து சுவாதி கன்னத்தில் ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்து விட்டான் வெறி பிடித்தவன் போல...
ஸ்ரீ என்ன பண்றீங்க" என்று மருத்துவர்கள் வந்தது அவனை பிடிக்க..
"யோவ்ஊஊஊஊஊ போய்யா என் பொண்டாட்டியை எப்படி காப்பாத்தணும் தெரியும் , அவளுக்கு நாள் குறிகக நீங்க எல்லாரும் யாருடா அவகூட வாழ சாகடிக்க . எல்லாத்துக்கும் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு .. "என்று அனைவரையும் பிடித்து தள்ளிவிட்டு சுவாதி கன்னத்தை மறுபடி வலிக்க பிடித்து இழுத்து
"அம்முஊஊஊஊஊஊஊஊஊஊ எனக்கு நீ வேணும், வந்தே ஆகணும் , ஒழுங்கா பாவா கிட்ட வந்துடு ..இல்லை என் கையால கொன்னுடுவேன்.. ஐ லவ் யூடி ஆயிரம் தடவை இல்லை, லட்சம் தடவை சொல்றேன் வாடி... இங்க பாரு எழும்புடி, நாயே ஏன்டி என்ன விட்டுட்டு விட்டுட்டு போற, நான் உன் பின்னாடி பைத்தியமா சுத்துறது ஏன்டி தெரியல .. இப்ப நீ ஸ்ரீகிட்ட வருவியா மாட்டியா , உன்ன கொஞ்சினா வேலைக்கு ஆகாது "என்று அவள் உடலை போட்டு குலுக்கியவன் அவனை பார்த்து கொண்டே கண் மூட போன சுவாதியை படுக்கையில் போட்டவன் ...
"இந்த ஸ்ரீ வேண்டாம்ல உனக்கு,. போக போறியா, போ போ அப்டியே போயிடு, ஆனா இதையும் பார்த்துட்டு போ என்றவன் பல்லை கடித்து கொண்டு..
"எனக்கு முன்னாடி நீ என்னடி போறது..சாவுல கூட உன்ன ஜெயிக்க விட மாட்டேன்... நான் முதல்ல போறேன் , என் சாவை நீ பாரு.. அப்பதான் என் வலி உனக்கு புரியும் "என்று மருத்துவ உபகரணம் நடுவே தடவி சிறிய கத்தி ஒன்றை எடுத்தவன்.. அவள் கண்கள் மூடும் முன்பு தன் மணிக்கட்டில் வேகமாக குத்த.. அவன் ரத்த துளிகள் சீறி போய் மனைவி கண்ணில் தெறிக்க...ப்ளாக்ஷ் அடித்தது போல அவள் மூளை நரம்பு நடுவே ரத்தம் தெரியுது ஓடி அங்கும் இங்கும் தறிகெட்டு சீற..
"பாவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று அலறி சத்தமிட்டு கண்களை திறந்தாள்.
"பாவா ம்மா பாவா வீர்இஇஇ, மின்னல் ,, நான் பாவாவுக்கு துரோகம் பண்ணிட்டேன் .. பாவா, பாவா உங்கள மறந்து மறந்து "என ஏதோ உளறி கொண்டே ஸ்ரீராமை இறுக்கி அணைத்து மயங்கி விழுந்தாள்.... அவளை இழுத்து பிடித்து கொண்டு...உச்சியில் முத்தம் கொடுத்தவன்... மருத்துவரை பார்க்க,மருத்துவர்கள பெருவிரல் தூக்கி காட்டி சிரிக்க...
அம்முஊஊ என இறுக்கி தன்னோடு சேர்த்து கொண்டான்
அத்தனை நினைவுகளை சேர்த்தே மீட்டு கொண்டாள்.. அதில் வீரின் நினைவுகளும் அடக்கம் என்பதுதான் கசப்பான உண்மை ...
"ஸ்ரீ யூ டன் இட் சாதிச்சிட்டீங்க .. நடக்க முடியாத ஒன்ன நடத்தி காட்டி இருக்கீங்க... வெல்டன் நினைவு திரும்பிடுச்சு போல... கேர்புல்லா ஹேண்டில் பண்ணுங்க... தன் மார்பில் கிடந்த மனைவியை ஆதரவாக தட்டி கொடுத்தான்.. அவளுக்கான மருத்துவம் பார்க்கப்பட்டது..
தன் மனைவி, தன் ஸீவிட்டி திரும்பி வந்ததை நம்ப முடியாது அவளை கண் வெட்டாது பார்த்து கொண்டிருந்த ஸ்ரீயின் கையில் கட்டு போட.. அவன் இத்தனை நாள் அனுபவித்த வலியை விட இதொன்றும் பெரிதாக தெரியவில்லை ...
ஏழு நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள்.. அவளோடு கூடவே ஸ்ரீ இருந்தான் மருந்து வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்..சுவாதி அவ்வப்போது எழும்பும் பொழுதும், அவளுக்கான தேவைகளை ஸ்ரீ செய்ய அருகில் போகும் பொழுது ..
" இல்ல நர்ச கூப்பிடுங்க "என்று மறுக்க ஆரம்பித்தாள், அவள் ஒதுக்கம் ஸ்ரீ அறிவான்..ஆனா, அவ சொல்லி கேட்டு விடுவானா என்ன? குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு பாத்ரூமில் விடுவான்..
ஏதோ பெரிதாக யோசிக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு தெரிந்தது.. எந்த பூனை வெளியே வந்தாலும் சட்டியில் போட்டு கவுத்தி கூறு போட்டு சந்தையில் விற்று விட வேண்டியதுதான என்று நினைத்து .. அய்யோ போனா போகுது என அவனும் பெரிய மனது பண்ணி, வாயை கம் போட்டு கனபாடு பட்டு பூட்டி வைத்திருந்தான்.. பேசினா ஊர் கிழிய பேசுவானே
மகள் துருதுரு கண்ணோடு குறும்புகள் கூத்தாட மனைவி கையில் காலை ஆட்டி பால் குடிக்க... அழகோ அழகு..
"கொஞ்சம் வெளியே போங்களேன் " நெளிந்தாள் புதுப்பெண் போல.. புருஷன் பார்வை அவளையே ரவுண்ட் அடிக்க அய்ய என்றாகி போனது ..
"நான் குடிச்ச மீதிதான் உன் பொண்ணு குடிக்குது , ஒழுங்கா வாயை மூடிட்டு கொடு , இல்லை என்ன ஒரு பக்கம் போட்டு என் வயித்துக்கும் கொடு"என்ற கணவனை எதிர்க்க முடியாது சுவாதிதான் திரும்பி அமர்ந்து கொண்டாள்..
வீட்டுக்கு வந்து நாற்பது நாள் கடந்தாயிச்சு.. நம்ம ஸ்ரீ அமைதியா இருக்கானேப்பா, இது சாத்தியமா?? ஒன்னு பயலுக்கு பேய் பிடிச்சிருக்கும், இல்லை திருத்திட்டானா, எனும் அளவுக்கு அமைதியோ அமைதி .. மனைவியை கவனிக்க குடும்பம் இருந்தாலும் ,மகளை மட்டும் கவனிக்க விட்டுவிட்டு சுவாதி கூடவே பொறுப்பான ஸ்ரீயாக இருந்தான்.. அதை நம்பி சுவாதி சிலவற்றை பேசி தீர்க்க அவனை தேடி போக..
ஸ்ரீ மாடியில தம் அடிச்சிட்டு இருகான் ம்மா அப்போதுதான் நண்பனை பார்த்து விட்டு இறங்கி வந்த வினய் கூற..
"தம்மா அவர் விட்டுட்டாரே..
"அவன் எப்பம்மா விட்டான் எப்பவும் அது நடந்துகிட்டு தான் இருக்கு .. "
"ஓஓஓ என்று யோசனையாக மேலே போக.. சிறிய மாடி திணடில் படுத்து வானத்தை பார்த்து கொண்டு தம்மை இழுத்து புகையை விட்டு கொண்டிருந்தான் ஸ்ரீ.. அந்த பக்கம் விழுந்தா தலை தப்பாது ..
"ஆனாலும் பாவாவுக்கு தைரியம் சாஸ்தி" தன்னை மீட்க அவன் பட்ட பாடுகள் எல்லாம் சேர்த்து தன் காதலின் அளவு நான் மடங்கு கூடி போனது அவன் மேல்..
"பாவாஆஆ.. "
அமைதி
"பாவா
அமைதி
"ப்ச் அவன் சிகரெட்டை புடுங்கி தூர எறிய...
"_____ மவளே, அதை ஏன்டி தூக்கி போட்ட உன் அப்பனா இந்த ராத்திரி கடை திறந்து வச்சிருப்பான்.. "என்று ஸ்ரீ எழும்பிட..
"சாரி பாவா..
"என்ன, எதுக்கு இப்ப இங்க வந்து நிற்கிற
"உங்கிட்ட கொஞ்சம் பேசணும் பாவா...
"நிறைய பேசினாலும் கேட்கிற மூடுல இல்லை பொத்திட்டு கீழ போ, டேய் மச்சான் தம்" என்று கீழே போன நண்பனுக்கு கைதட்டி சைகை காட்ட.. அவன் கீழிருந்து மேலே தூக்கி எறிய,, அதை பிடித்து கொண்டு மறுபடி வாயில் வைத்தான்..
ப்ச் உதட்டை சுளித்து திரும்பி நின்று கொண்டவள்..
"சாரி பாவா நீங்க நினைக்கிற மாதிரி நான் நல்லவ இல்லை...
"நான் எப்ப உன்ன நல்லவன்னு சொன்னேன்..
"அய்யோ கொஞ்சம் வாயை மூடுங்க பாவா , நான் பேச வந்தது மறந்து போகும்
"என் வாயை மூட ரைட்டராலேயே முடியாது..
"ப்ச் ப்ளீஸ் ..
"ம்ம் தம்மை ரசித்து இழுக்க ஆரம்பித்து விட்டான் ..
" நீங்க என் நினைப்போட மட்டுமே இருந்திருக்கீங்க, ஆனா நான் அப்படி இல்லை.. நான் உங்கள சந்திச்ச பிறகு வீர்னு ஒருத்தரை "என்று அழுகையோடு கதையை கூறி முடித்து, திரும்ப ஸ்ரீ குறட்டை விட்டு கொண்டிருந்தான்..அவனை உலுக்கிய சுவாதி
"பாவாஆஆஆ..நான் சொன்னது கேட்குதா..
"கேட்டது கேட்டது , சரி அதுக்கு என்ன பண்ண சொல்ற..
"உங்க காதல் போல என் காதல் தூய்மை கிடையாது நான் உங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்
"சரி அதனால..
"நாம டை..வர்ஸ்..பண்ணிடலாம், எனக்கு உங்கள ஏமாத்திட்டோம்னு ரொம்ப குற்றவுணர்வா இருக்கு பாவா.. "
"டைவர்ஸ் பேப்பர் கீழதான் இருக்கு நாளைக்கே வக்கீல் கிட்ட சொல்லி முடிச்சிடலாம் , என் ஸீவிட்டி கேட்டா செய்யாம இருப்பேனா "... அவள் அதிர்ந்து நிற்க
" சிரிங்க மிஸஸ் ஸ்ரீராம், ஹேப்பி பிரேக் அப் .. ஹேப்பி டைவர்ஸ்" என்று புகையை அவள் முகத்தில் ஊதி விட்டு விசில் அடித்து கொண்டே இறங்கி போய்விட.. உதட்டை பிதுக்கி அழ ஆரம்பித்து விட்டாள்..
அவன் காதல் எதுவென காட்டிவிட்டான், காதலை இழுத்து கட்டிப்போட முடியாதே, மனதை தெளிய வச்சாலும் சரிதான் இல்லை உன் இஷ்டம் போல ஒதுங்கி போனாலும் சரிதான் உன் இஷ்டம் என முடிவை அவள் கையில் கொடுத்து விட்டு போய்விட்டான்..