பொய் 11
Poi11

11 பொய்யில் ஒரு மெய்!!
ம்ம் இங்க ஷில்பா எங்க வந்தா ??
அந்த நேரத்துல தான் ஷில்பா ஒரு நாள் நைட் எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தா , தனியா என்ன மீட் பண்ணும்னு ... வந்து தன்னோட மனசுல இருக்கிறத என்கிட்ட சொன்னா, அவளுக்கு என் மேல ரொம்ப நாளா ஆசையாம்.. டைரக்டாகவே கேட்டுட்டா, நம்ம ரெண்டு பேரும் இல்லீகளா இருக்கலாமா சார்னு..
"ஓஓஓஓ நீங்க என்ன சொன்னீங்க? "
"அவ கூட வேலை விஷயமா சில டைம் வெளியே போக வேண்டியது இருந்திருக்கு.. ஆனா, ஒரு நாள் கூட நான் அந்த பொண்ண அப்படி நினைச்சதே இல்ல சார் ..அவன்னு இல்ல, எந்த பொண்ண பாத்தாலும் சீதாலட்சுமி கிட்ட வர அந்த உணர்வெல்லாம் வந்துடாது சார்.. காதல் காமம் அப்படின்னு வந்தாலே அது என் பொண்டாட்டி தான்.. சீதாவுக்கு அழுகையின் உதடு துடிக்க ஆரம்பித்தது ...
"அந்த பொண்ணு இப்படி டைரக்ட்டா என்கிட்ட கேட்கவும், நாமதான் எதுவும் தப்பு பண்ணிட்டோமோனு எனக்குள்ள ஒரு பயம் ..ஏன்னா கொஞ்ச நாளா நான் கொஞ்சம் இல்ல அதிகமா தடுமாறுறேன்.... என்றவன் எச்சில் விழுங்கி
பரவாயில்லை சொல்லுங்க..
"அதிக தனிமை ஆபத்துன்னு உங்களுக்கு தெரியாதா சார் , கையில செல்போன் வடிவத்துல எல்லா தப்பும் நம்ம கண்ணையும் மனசையும் கெடுக்குறதுக்கு சாத்தான் உருவத்துல இருக்கு.. சாயங்காலம் வேலை முடிச்சு வந்த பிறகு என் புள்ளைங்கள படிக்க வைக்கிறேனு சீதாவுக்கு வேலை நைட் 10 மணி வரைக்கும் இருக்கும், அதுவரைக்கும் நான் இந்த போன் கூட தனியாவே இருக்கணும்.. அந்த டைம்ல கொஞ்சம் தப்பான படங்கள் என்றவன் தலையை குனிய
"ம்ம் புரியுது சொல்லுங்க "
"ஏற்கனவே எனக்குள்ள இருந்த ஆசைகள் வெடிக்க ஆரம்பிச்சது.. இந்த பொண்ணு வேற என்கிட்ட வந்து நேரடியாகவே கேட்கவும் உண்மையிலேயே ஆடிப் போயிட்டேன்..
"அந்தப் பொண்ணுக்கு தாய் தகப்பன் இல்ல கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறி இந்த வேலையில வந்து இருக்கு சோ பல நேரங்களில் அந்த பொண்ணுக்கு நான் உதவி செஞ்சுருக்கேன்... எந்த தப்பான எண்ணத்துலையும் அந்த பொண்ணு கூட நான் பேசுனது இல்ல, பழகுனது இல்ல .. உடம்பு முடியலன்னா கூட எனக்கு பாக்குறதுக்கு யாருமே இல்ல சார்னு சொல்லும் போது எனக்கு பாவமாய் இருக்கும் , நான் ஹாஸ்பிட்டல் கூட கூட்டிட்டு போயிருக்கேன்... அதெல்லாம் மனிதாபிமானம் மட்டும் தான்...
"இதை எல்லாம் ஏன் உங்க மனைவி கிட்ட சொல்லல"
"அது எந்த பொண்டாட்டியும், வேற பெண்ணுக்கு செய்றத விரும்ப மாட்டாளே தேவையில்லாம சந்தேகம் வந்திடும்னு பயந்து தான் சொல்லலை..
"சோ அது தப்பு தான் அப்படிதான??..
'ஆனா என் மனசுல கள்ளம் இல்ல சார், அந்தப் பொண்ணு முகத்தை தாண்டி கூட நான் பார்த்தது இல்ல சார்.. இப்படி வந்து என்கிட்ட கேட்கவும் உண்மையாகவே அதிர்ச்சி தான்
20 வயசு பொண்ணு நான் 45 வயசு ஆண் என்ன நினைப்புல இப்படி கேக்குறீங்க கொஞ்சம் கோவமா அந்த பொண்ணு கிட்ட கேட்க
"சார் இந்த மாதிரி லைஃப்ல செட்டில் ஆனவங்க கிட்ட போனா நாளைக்கு எங்களுக்கு பிராப்ளம் வராது,எங்களோட ஆசையையும் தீர்த்துகிட்ட மாதிரி ஆயிடும் .. அதோட இந்த மாதிரி ஆண்களோட இருந்தா பொண்டாட்டி, குடும்பம்னு பயந்து எங்களையும் வெளியே போட்டு கொடுக்க மாட்டீங்க எங்களுக்கும் சேப் அன்ட் செக்யூரிட்டி அதான், அதேசமயம் உங்களுடைய ஏக்கத்தையும் தீர்த்து வச்ச மாதிரி ஆயிடும்..."
நான் அப்படி பட்ட ஆளு இல்ல ஷில்பா.. கிளம்பு என்றான் கடுப்பாக.. இதில் விலக தெரிந்த ஆண் தப்பித்து விடுவான்.. முடியாத ஆண் விழுந்து விடுவான் ...
சும்மா சொல்லாதீங்க சார் , அன்னைக்கு உங்க கேபின்குள்ள ஒரு பைல் தேடி உள்ள வந்தேன்.. அப்போ உங்க போன்ல நீங்க சேவ் பண்ணி வச்சிருக்கிற வீடியோஸ் எல்லாம் தற்செயலா பார்க்க வேண்டியதாகி போச்சு... அரவிந்துக்கு முகத்தை எங்க வைக்க என்று தெரியவில்லை..
"உங்களுக்குள்ள இப்படி ஒரு காம தேடல் இருக்குன்னு எனக்கு தெரியும் போது, எனக்குள்ளேயும் அதே ஆசைகள், அந்த வயசுக்குரிய ஏக்கங்கள் நிறைய இருக்கு. ஏன் உங்க கூட அதை ஷேர் பண்ணிக்க கூடாதுன்னு நினைச்சேன்.. ஐ மீன் நான் தப்பா எதுவும் கேட்கல உங்களுக்கு வேண்டாம்னா வேண்டாம், வேணும்னா உங்க வீட்டுக்கு தெரியாம நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்.."
ச்சே உன்ன நல்ல பொண்ணுன்னு நினைச்சேன் இப்படி பேசுற "
"சார் இதுல என்ன நல்ல பொண்ணு கெட்ட பொண்ணுன்னு என்ன இருக்கு.. எனக்கு ஒரு தேவை இருக்கு , உங்களுக்கு ஒரு தேவை இருக்கு ரெண்டையும் தீர்த்துக்க வழி சொல்றேன்.. வேண்டாம்னா வேண்டாம்னு சொல்லுங்க , அத விட்டுட்டு என்ன ஜட்ஜ்மெண்ட் பண்ணாதீங்க...
"என் மனைவிக்கு நான் எப்பவும் துரோகம் பண்ண மாட்டேன்
ஏன் சார் இதுக்கு பேரு துரோகம் இல்லையா, கிளி மாதிரி பொண்டாட்டி வீட்டுல இருக்கும்போது.. நீங்க விதவிதமா வீடியோஸ் பார்த்து அதை சேவ் பண்ணி ரசிக்கிறது தப்பு இல்லையா ?? இன்னைக்கு நல்லவரா வேஷம் போடலாம்... ஆனா எத்தனை நாளைக்கு சார் உங்க உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும்...
"நான் இல்லன்னா, இன்னொருத்தி கூட உங்க ஆசையை என்னைக்கா இருந்தாலும் அடக்கத்தான் போறீங்க, ஆம்பள அதுவும் சுகத்தை கண்ட ஆம்பளையால, வாலை சுருட்டி வாழவே முடியாது.. உங்களுக்கு அப்படி என்னைக்காவது ஒருநாள் தோனிச்சுன்னா கண்டிப்பா என்கிட்ட அப்ரோச் பண்ணுங்க சார், நான் மறக்கவே மாட்டேன் உங்களுக்கும் பிராப்ளம் இல்லாம சேஃபா இருக்கலாம் என்று கூற
"தயவு செஞ்சு இந்த மாதிரி என்கிட்ட பேசாத இனி ஒரு தடவை இப்படி பேசினா நான் நானா இருக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்... நீ என் பொண்ணு வயசு பொண்ணு இந்த மாதிரி நடந்துக்காத
"சாரி சார் ரியலி சாரி, நான் ஏதாவது தப்பு தப்பா பேசிருந்தா மன்னிச்சுடுங்க , அதுக்காக கோவம் எல்லாம் படாதீங்க இனிமே நான் லிமிட்டா இருக்கேன் என்று அவள் டீசன்டாக ஒதுங்கிக் கொள்வது போல நகர இவனும் நம்பி விட்டான் .. உலகில் நல்லவனை விட நயவஞ்சகன் தானே அதிகம்...
லட்சத்தில் சம்பவம் வாங்கும் அதிகாரி, பார்க்க
இளமையாக இருக்கும் ஆண் வேறு , அவள் ஆசைக்கு இவன்தான் தீனி...
மனைவி குடும்பம் என ஒன்று தான் அவன் ஆசையை தீர்க்க பயம் கொள்ள வைக்கிறது... மனைவியை அவனிடம் இருந்து பிரித்து விட்டால் தானாக உடல், மனது அமைதியை தேடி இன்னொரு புறம் சாயத்தான் செய்வான்.. என்று ஷில்பா காரியமாக அன்றிலிருந்து செயல்பட ஆரம்பித்தாள்... வேண்டுமென்றே சந்தர்பத்தை ஏற்படுத்து அவனோடு பேசுவது , பைக் ரிப்பேர் சார் மயக்கம் வர்ற மாதிரி இருக்கு சார் , ப்ளீஸ் கொண்டு விட்டிருங்க , க்ளைண்ட் பார்க்க போகும் போது அவளும் போவது வீட்டுல சிக்கன் சாப்பிட முடியாது என்று ஹோட்டலில் வெளுத்து கட்டுவான்.. அதை தெரிந்து வைத்து கொண்டு இவளும் அங்கேயே போவது என அவனோடு இருப்பது போல காட்டி கொள்வாள்..
இல்ல நான் என் மனைவி தவிர யாரையும் பைக்கில ஏத்துனது இல்ல என்று ரம்பம் போல இழுப்பான்
அய்ய சும்மா மனைவி மனைவின்னு ..அவ்வளவு பயமா சார் மனைவி மேல ?
"பயம்னு இல்லை பாசம்னு கூட வச்சிக்கலாமே, பாவம் என்ன நம்பியே இருக்கிற ஜீவன்...
"ம்க்கும் ரொம்தான் சார் , நீங்களே வந்தாலும் வேண்டாம் போதுமா கிளைண்ட் பார்க்க போக நேரம் ஆகுது..
"ஆட்டோவுல வாயேன்
"ப்ச் என்ன சார், ஆட்டோவுல போனா உங்களுக்கு தான் லேட்டாகும் ... அதோட உங்கள கடிச்சு தின்கிற ஐடியா இல்லை கூட்டிட்டு போங்க சார் ...
"அது " அரவிந்த் தலையை சொரிய , கிளைண்ட் வேறு போன் மேல் போன் போட வேறு வழி இல்லாது அழைத்து சென்றான் ..
எல்லாரும் சறுக்க இடம் கிடைக்கிற வர தான் உத்தமன் .. நீங்க எத்தனை நாள்னு பார்கிறேன் அரவிந்த் சார் .. அவன் போனில் உள்ள கண்டதை பார்த்த பின்பு ஆணித்தரமாக அவனை அசைத்து விடலாம என்று நினைத்தாள் .. மனைவி மீது இருக்கும் அன்பை வெறுப்பாக்க வேண்டும் , பிணக்கை ஏற்படுத்திட வேண்டும் ... அவளே போட்டோ எடுத்து சீதாவுக்கு ஆதாரம் அனுப்பி சதி வேலை தீட்ட ஆரம்பித்தாள்..
பல குடும்பங்களை கெடுப்பதற்கு ஒன்று பணத்தை வீசவேண்டும் ..இல்லை சந்தேகத்தை வீச வேண்டும் இந்த இரண்டும் புகுந்த வீடு கண்டிப்பாக சிதைந்து போகும் !! சந்தேகத்தை பெண்ணின் மனதில் விதைத்து விட்டால், அது தீப்பற்றி எரிந்து அந்த குடும்பத்தையே சிதைத்து விடும்.. அது போதும் அவள் அரவிந்தோடு இணைந்து கொள்ள
ஊர் முழுக்க அவளை இணைத்து பேச ஆரம்பித்து விட்டால் தானாக அவன் மனைவியும் நம்பி விடுவாள்.. இந்த மனைவிக்காகத்தான் நீங்க என்ன வேண்டான்னு சொன்னீங்களா அரவிந்த்சார் உங்கள நம்பாத இந்த பொண்டாட்டிக்காக நீங்க உத்தமனா இருக்க போறீங்களா? இல்ல உங்க சந்தோஷத்தை தேடி வர போறீங்களா ??
"எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எப்பவும் இந்த அரவிந்த் சார் எனக்கு பிடிக்கும் , உங்களுக்கு மன நிம்மதி சந்தோஷத்தை நான் தர்றேன் "என்று அவன் தடுமாறி நிற்கும் வேளை நகரவே விடாது கட்டிக் கொண்டு சலனப்படுத்தினால் , எந்த ஒரு ஆணும் கண்டிப்பாக சலனப்படத்தான் செய்வான்... அந்த சிறிய சலனம் போதும், மொத்தமாக அவனை வீழ்த்தி தன் வலையில் போட்டுக்கொள்ள..
மனிதா தூக்கத்தில் கூட விழிப்பாக இரு
இல்லை நீ இறந்து விட்டாய் என்று
மலர் மாலை சூட்டிவிடுவான் வஞ்சகன்
மனிதா கவனமாய் இரு
கவனம் தொலைத்து விட்டால்
உன் வாழ்க்கையை சூறையாடி சென்று விடுவான் சக மனிதன்
மனிதா மிருகங்களிடம் கூட பயம் கொள்ள வேண்டாம், ஆனால் இந்த மனித மிருகங்களிடம் ஒதுங்கியே இரு ,
மிருகங்களை காட்டிலும் மனிதர்கள் மிகக் கொடியவர்கள்..
ஷில்பா சொன்னதில் ஒன்று உண்மை, எத்தனை நாள் தன்னை அடக்கி ஆள முடியாமல் என்றாவது ஒருநாள் தவறு செய்து விட்டால் .. ஷில்பாவை தடுத்து விட்டான் ஆனால் எப்போதும் மூளை தடுமாறாது இருக்குமா ..இரவானால் உயிர் போக வேதனை.. கண்கள் பார்த்ததை உடல் கேட்கிறது மனைவி மீது கை போட்டாலே..
ராம் , உடம்பு வலிக்குது , வயிறு வலிக்குது தலை வலிக்குது என்று தினமும் ஒரு காரணம் தன்னுடைய தேவையை யாரிடம் தான் தீர்த்துக் கொள்ள தவறி விடுவேனோ? என்று பயம். என்னை உண்மையாக காதலிக்கும் மனைவியை ஏமாற்றி விடுவேனோ?? துரோகம் செய்து விடுவேனோ என்று பயம்... என் குடும்பம் குலைந்து விடுமோ என்று பயம் பயம் பயம்... இதற்கு தீர்வு என்ன??
கிடைச்சதா அரவிந்த் ?
ம்ம் நான் தேடிய காதலே , தேடிய பச்சை ஆசைகளை தீர்த்துக் கொள்ள வழிவகை செய்தது என்னோட போன்.. "
இன்னொரு போனை வாங்கி அதன் மூலம் தன் தேவையை ஒரு காதலியிடம் சொல்வது போல சொல்ல ஆரம்பித்தான்.. மனைவி தராத நேரத்தை அந்த செல்போனிடம் அவனே பேசுவது , மெசேஜ் அனுப்புவது தன் மனதில் உள்ள வக்கிரகங்களை பேசுவது என்று ஒவ்வொன்றாக செய்ய ஆரம்பித்தான் .. இங்கிருந்து அந்த போனுக்கும் அங்கிருந்து பதில் இந்த போனுக்கும் என்று காதல் உரையாடல்கள் என்னென்ன ஆசைகள் உண்டோ அதை எல்லாம் கொட்ட ஆரம்பித்தான்.. மனதில் ஏதாவது அழுத்தமோ ஆசையோ ,தேவையோ புதைந்து கிடந்தால் தான் அது வெடிக்க இடம் தேடும்.. அதை அவ்வப்போது நீக்கிவிட்டால் மனம் இலகுவாகும் உடலும் இலகுவாகும் .. அவனும் அதைத்தான் செய்தான் , ஒன்று தேவை ஆனால் அதைத் தர தன் மனைவி வேண்டும் .. அவளுக்கு தர நேரமில்லை. ஆனால் அதே இன்பத்தை ஏதோ ஒன்று தருமாயின் அது போதும் என்ற நிலை.. இதனால் யாருக்கும் பாதிப்பு வராதே ... இரண்டுமே அவன் தான் மனதிற்கு தெரிந்தாலும் உடல் புத்துணர்வாக இருந்தது ..
பொய் தான் என அவன் மெய்க்கு உணர்ந்தாலும் அந்த பொய்யில் இனிமை கண்டான்..
தன் மனைவி எப்படி எல்லாம் தன்னோடு அந்தரங்கமாய் பேசி சிரித்து ,தன் நெருக்கமான நேரத்தை எல்லாம் இலகுவாக வேண்டும் என்று நினைத்தானோ அதேபோல அந்த செல்போன் உரையாடல்களை அவனே பேச ஆரம்பித்தான்.. டெக்னாலஜிக்கா பஞ்சம், ஆண் குரலில் பேசியதை பெண் குரலில் பார்மட் செய்து ,அதை அப்படியே தன் மொபைலுக்கு அனுப்பி காது குளிர கேட்டு கற்பனை மனைவியோடு குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டான்... அவனுக்கு இருந்த மன பயமும் தீர்ந்து விட்டது ...
நான் மனைவிக்கு துரோகம் பண்ணிட்டேனா சார்?? என்று பாவமா கேட்க .. அவருக்கே என்ன சொல்ல என்று புரியவில்லை...
சார்
"இனி முடிவு உங்க மனைவி தான் அரவிந்த் எடுக்கணும்... என்று போனை எடுத்த வக்கீலை அவர் அதிர்ந்து பார்க்க
"மேடம் உள்ள வாங்க" என்று போனை வைக்க அவளை எப்படி எதிர் கொள்ள என்று தெரியாது அரவிந்த் தலையை குனிந்து நின்றான் ..
அவன் செய்தது துரோகமா??