பொய் 14

Poi14

பொய் 14

14 பொய்யில் ஒரு மெய் !!

சிலுசிலுவென்று காற்றில் அவள் சிகை அசைந்தாட .. அதை விரல் கொண்டு கோதிக் கொண்டிருந்த தன் மனைவியை வெகு நேரம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ..

பெண் மட்டும் அன்பை தேட மாட்டாள் .. 

ஆணின் தேவையும் அன்பில் தான் அடங்கி உள்ளது ... 

இப்படி அவள் தனியாக அவனுக்காக நேரத்தை ஒதுக்கி எத்தனை வருடங்கள் ஆகிறது... இன்றும் நைட்டிதான் அணிந்திருந்தாள்.. ஆனால் மாலை பூ வைத்திருந்தாள் ..அரவிந்த் உள்ளே வரும் போதே அதை கவனிக்க தான் செய்தான் ..

டெய்லி பூ போட்டிருங்க அக்கா என்று பூக்கார பெண்ணிடம் கூறியதும் அவன் காதில் கேட்டது ... 

"என்னம்மா பூ மகளுக்கா? 

"இல்லக்கா எனக்கு தான் .. மல்லிகை பூவா கொண்டு வாங்க "அவனுக்கு பிடித்த மலர் அதுதான் .. அவன் ஆசை ஒன்றும் மிக பெரிது இல்லை என் மனைவி ஜீரோ இடைகாரியாக இருக்க வேண்டும் , சிக்கென சிறு பெண் போல அவனோடு வெளியே வர வேண்டும் என்பது எல்லாம் இல்லை , இருக்கும் உருவத்தில் அவன் கண்ணை நிறைத்தால் போதும் அவன் வரும் போது நீட்டா சேலை கட்டி குட்டியாக பூ வைத்து பளீர் புன்னையோடு கதவை திறந்தால் கூட அவன் அலுப்பு தீர்ந்து போகும் ... அவ்வளவுதான் அவன் பேராசை என்றால் அவளுக்கு செய்ய கசக்குமா... 

டெய்லி பூ போட்டுடுங்க அக்கா 

"சரிம்மா போட்டுடுறேன்..

"ம்மா என்ன பூவெல்லாம் புதுசா வைக்கிறீங்க என்று மகள் கண்ணை சிமிட்ட 

"என்னடி நக்கல் பண்ற. என் புருசனுக்கு பிடிக்கும் நான் வைக்கிறேன் போடி"என்று சிறிய சண்டை வேறு நடந்தது, ஆனால் அரவிந்த் அந்த,சண்டையை இன்று நின்று ரசித்தான்... பிள்ளைகளின் தாய் என்ற நிலையில் இருந்து அவன் மனைவி அந்தஸ்த்துக்கு மறுபடி வந்திருந்தாள்.... பேசி தெளிந்த பிறகு பரம திருப்தி இருவருக்கும், எங்கே தப்பு செய்தோம் எப்படி அதே நேர் செய்ய என்று இருவருமே தங்களை சுய பரிசோதனை செய்து விட்டனர்...

மனைவி இரவு உணவு முடித்து அறைக்குள் போகும் போது அலமாரியை கலைத்து போட்டு சேலைகளை தேடி கொண்டிருக்க..

என்ன தேடிட்டு இருக்க சீதா?? 

"என்னதான் தேடிட்டு இருக்கேன் ராம் 

"ஹான் புரிலையே 

"ம்ம் நான் கொஞ்சம் வருடமா தொலைஞ்சு போயிட்டேன் நீங்க தேடின சீதாவை, நானும் தேடிட்டு இருக்கேன் ... இந்தா கிடைச்சிருச்சு" என்று சேலைகளை தூக்கி காட்டியவள்...

"நாளையில இருந்து இந்த ஊத்த நைட்டியை தூக்கி போட்டுட்டு சேலை கட்டிக்கலாம்னு இருக்கேன் ராம் 

"சீதா நான் எதுவும் உன் மனசை காய படுத்திட்டேனாடி...

"ப்ச் ச்சே அப்படி எல்லாம் இல்ல ராம், பிள்ளைங்க குடும்பம்னு நம்ம காதலை தொலைச்சிட்டோம் ராம் நல்ல வேளை இப்பவாது புத்தி வந்துச்சே, அதான் தொலைஞ்ச காதலை மீட்டு எடுக்க போறேன் 

"அப்படியா எப்படி?? .. 

"லவ் பண்ணும் போது உங்களுக்கு பிடிக்கும்னு தேடி தேடி சேலை கட்டுவேன், பூ வைப்பேன் நீ ஒரு பார்வை பார்பீங்க பாருங்க அந்த பீல் எல்லாம் சான்ஸே இல்ல ராம் ... ச்சை அதெல்லாம் இப்ப மிஸ் பண்றோம்ல 

"ம்ம் ரொம்படி 

"மறுபடி லவ் பண்ணலாமா? 

"நீ இப்படி கேட்க மாட்டியான்னு தாண்டி ஏங்கிட்டு இருந்தேன் , லைப் லாங்க் லவ் பண்ணலாம்... 

"அம்மா அப்பா என்று இரண்டும் உள்ளே ஓடி வரவும் புருசனை பார்த்து கண்ணை சிமிட்டிய சீதா 

"நைட் பேசலாம் தூங்கிடாதீங்க என்று உதட்டை அசைக்க அந்த உதட்டு அசைவில் மரணித்த காதல் மெல்ல மீண்டது ..  

நிறைய படபடப்பு, காதல் தேவை , ஒத்திகைகளோடு இருவரும் வந்து நின்றனர் ....

நிலாவை ரசித்து கொண்டிருந்த மனைவியை அரவிந்த் ரசித்து கொண்டிருக்க அவனை திரும்பி பார்த்த சீதா சிரித்து கொண்டே 

"என்ன அப்படி பாக்கிறீங்க ராம் ? 

"சும்மா 

"என்னவோ பார்க்காத மாதிரி பார்த்து வைக்கிறீங்க என்றவள் அவளாகவே அவன் அருகே போய் நின்று அவன் தோளில் சாய..அவன் அப்படியே நிற்க... 

"என்ன இன்னும் பொண்டாட்டி வேணுமா, இல்ல கள்ள பொண்டாட்டி வேணுமான்னு தெரியாம யோசிக்கிறீங்களா ? கைதவறி போனதா என் காதல் என்று கதறி கிடந்தவளுக்கு நீதான் அந்த காதலை உயிர் பெற வைக்க வேண்டும் அவன் காதல் அப்படியே தான் இருக்கு என்று அறிந்த நொடி உயிரே வந்த நொடிகள்!! 

"அய்யோ இல்ல சீதா எனக்கு நீதான் வேணும்..வேகமாக சரண்டர் ஆனான்.. 

"அப்போ அவ? என்று அவள் இழுக்க

"அது 

"அவளும் நான்தானா இல்ல ? 

"நீதான் நீதான் ... உன்கூட பேச ஆசைப்பட்டது தான் அதுல பேசினேன் சீதா...வேற யாரும் இல்லை உன்ன நினைச்சு தான் பேசினேன்..கற்பனையில் கூட வேறு ஒருத்தி வரவில்லை என்பது அவள் காதலுக்கு கிடைத்த பரிசு தான்!! 

"ம்ம் நம்பிட்டேன், உங்களுக்கு அப்படி எல்லாம் பேசணுமா ? கிசுகிசுக்க மனைவி குரலில் கீரை நாற்று நரநரவென நடுங்கியது..

"இல்ல .. அது என்று அவன் நெளிந்தான் ..  

"அந்தரங்கம் வரை ரெண்டு பேரும் பார்த்து இருக்கோம் என் உடம்புல என்ன உண்டு உங்களுக்கு தெரியும்.. உங்கிட்ட என்ன உண்டு எனக்கு தெரியும் . சொல்ல போனா ஒளிவு மறைவு இல்லாத ஒரே உறவு , இந்த புருசன் பொண்டாட்டி உறவு தான் .. ஏன் இத்தனை தயக்கத்தை அதுக்குள்ள திணிக்க பார்க்கறாங்க ராம் .... 

மனைவி தன்,தேவையை சொல்ல கூச்சபடுறா, அவளா ஆசைப்பட்டு தன் கணவனை தொட்டா வேசி போல பார்த்து வைக்கிறாங்க, அதை பத்தி பேசினா குத்தம் ,புருஷன் இயல்பான ஆசையை பல நேரம் மனைவியிடம் சொல்ல மறுக்கிறான்... ஏன் இந்த பயம் ராம் ??

"என்ன சொல்ல இதை பத்தி பேசினா தப்பு தப்புன்னே ஒரு முத்திரையை குத்தி வச்சிட்டான்.... காதலும் காமமும் ஒரு இயல்பான உணர்வுதான்னு சொல்ல வேண்டியவங்க அதை ஒரு மறை பொருளாக ஒளிச்சே வச்சிட்டாங்க... எப்பவும் தெரியாத ஒன்ன தேடித்தான் மனுச மனம் ஓடும், சோ அதுல என்ன இருக்குன்னு தேடி அலையுறாங்க சரியான விளக்கம் இல்ல.. எது காமம் எது காதல்னு சரியாக வகைபடுத்த தெரில விளைவு , உடல் தேவையை காதல்னு ஒரு கூட்டம் சொல்லிட்டு திரியுது... 

ம்ம் , காதல் இல்லாத காமம் எப்படி இனிக்கும் ராம்... 

கடமையா ஒரு கூடல் அதுல ருசி இருக்காது காதலும் இருக்காதே ராம் ..

"உண்மைதான் சீதா , நானும் அதுல தான் சலிச்சு போயிருக்கேன் 

"நீங்க சொல்லிட்டீங்க பட் நான் சொல்லல அவ்வளவு தான் ..

"ஏன் நீ ஓபனா பேசி இருக்க வேண்டியதுதான?

"பொண்ணுக்கு தான் இதை பேச உரிமை இல்லேயே ராம் , மீறி பேசினா பொண்ணா இவ கழிசடைன்னு சொல்லிடுவீங்களோன்னு பயம் தான் ..

"காதலை பரிமாற உரிமை இருக்குன்னா, இதுக்கும் உனக்கு உரிமை உண்டுடி .. எனக்கு தேவை அதுதான் 

"புரியல ராம் 

"ப்ச் மனைவியா நீ வேணும் கள்ள பொண்டாட்டியாவும் நீ வேணும் 

"ஓஓஓ அய்யாவுக்கு ரெண்டு பொண்டாட்டி வேணுமோ??..

"அது அப்படி இல்லடி.. சில நேரம் மனைவியா சில நேரம் என்ன போன்ல டெம்ட் பண்றது, பசங்களுக்கு தெரியாம சேட்டை பண்றது , இப்படி சின்ன சின்ன சீண்டல் நம்ம காதலை உயிர்போட வச்சிருக்கும்ல அதை சொன்னேன்..

அது இருக்கட்டும் கண்டது எல்லாம் பேசி வச்சிருக்கீங்க அப்படி நானும் பேசணுமா!? அது பொண்டாட்டி கேட்கிரில வருமா ,இல்லை கள்ள பொண்டாட்டி கேட்கிரியா சார்..

ஹிஹி கள்ள பீல்தான் என்று தலையை சொரிய அவன் காதை பிடித்து திருகிய சீதா .. 

"அப்படி நானும் பேசணுமா?

"அது அது என்று அவன் தயங்க 

ப்ச் பேசணுமா வேண்டாமா ? 

அப்பப்ப பேசினா நல்லா தான் இருக்கும் .. இது தான் எனக்கு வேணும் என்று கேட்க தெரிந்த விட்டால் விரிசல் விழாது.. 

"ஓஓஓ ....சரி இப்ப , பேமிலி பிளானிங் பத்தி பேசுவோமா ? 

"அதான் பண்ணிட்டியே சீதா? 

"இது லவ் ப்ளானிங் ராம் 

"புரியல ..அவனை முன்னோடு கட்டி கொண்ட சீதா ...

"நம்ம ரெண்டு பேருக்கும் இடையே கேப்பே விழாத மாதிரி ஒரு பிளானிங் பண்ணிக்கலாமா

"எப்படி

"ஓகேவான்னு சொல்லுங்க பண்ணிக்கலாம்..

ஓகே

"இனிமே எப்ப எல்லாம் நீங்க ஃப்ரீயா இருக்கீங்களோ, அப்ப எனக்கு மெசேஜ் தட்டி விடுங்க நம்ம பேசலாம் என்றவள் அவன் சட்டை பட்டனை சுருட்டி விளையாட ,, அதில் அவளும் அவன் அத்தனை விளையாட்டுக்கும் தயார் என்ற சமிக்ஞை இருந்தது.. 

"இல்ல சீதா எனக்காக எல்லாம் நீ மாற வேண்டாம் நான் உன்னை சங்கடப்படுத்திட்டேனோ ?

"அப்படி எல்லாம் இல்ல .. யோசித்து பார்த்தேன் பாத்திரம் தேய்க்கணும், துணி துவைக்கணும் பசங்களை படிக்க வைக்கணும், உங்களுக்கு சமைக்கணும் இவ்வளவுதான் என் வாழ்க்கையா? இதுல என் வாழ்க்கை எங்க இருக்கு.. உங்களுக்கும் எனக்கும் இடையில என்ன இருக்கு ?? எதுவுமே இல்ல இல்ல ... அப்போ நாம வாழ்க்கையை தொலைச்சுக்கிட்டு இருக்கோமோ? இந்த இயந்திரகதியான உலகத்துல நமக்கான நேரத்தை நாம கோட்டை விட்டுவிட்டு இருக்கோம்மான்னு இப்பதான் எனக்கு புத்தி வருது ராம் 

காதலிக்கும் போது காதலும் பண்ணிக்கிட்டு படிப்பிலும் ஃபர்ஸ்ட் வந்து நீங்க வேலைக்கு போய் எல்லாத்தையும் நம்ம மேனேஜ் பண்ண தானே செஞ்சோம்.. ஏன் இப்போ நம்மளால முடியல .. ஏன்னா நம்ம மனசு மாறிடுச்சு .... இவர் நம்ம புருஷன் தானே அப்படின்னு அசால்ட் வந்துடுச்சு, அதோட நம்ம லவ் தொலைச்சிட்டோம்... தொலைஞ்ச லவ்வ தேடி புடிச்சு தான் ஆகணும்... 

அப்பா!! அவன் சொல்ல நினைத்ததும் அதுதான் நல்ல வேளையாக அலைவரிசை சரியாக போய் அவளை அடைந்திருக்கிறது என்று பெருமூச்சு விட்டான்

"அதனால இனிமே பிளான் பண்ணி தான் லவ் பண்ணனும்..

"அப்படின்னா ??

"ஏன்னா பசங்க கண்ணையும் உறுத்தக்கூடாது இல்ல என்ற மனைவி அவனை இன்னும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ள ... கணவன் இதமாக அணைத்தானே, தவிர இறுக்கமாக அணைக்கவில்லை என்று அவள் அறியாமல் இருப்பாளா? இன்னும் இறுக்கமாக அவன் இடையோடு இடை உரச அணைத்துக் கொண்டவள் 

"ஏன் வீடியோ எல்லாம் பார்த்தா தான் ஐயாவுக்கு மூடு வருமோ பொண்டாட்டிய பார்த்தா வரலையோ என்றவள் கைகள் அவனை மர்மமாக தீண்ட மனைவி தீண்டலில் கண்கள் சொரூகியது....

"மனைவியை நினைச்சு தான் இன்ன வரை படுக்கையில் உருள்றேன்டி" என்றவன் மோகமாக அவளை பார்த்தான்... 

எல்லா மனிதனுக்குள்ளும் நல்லவனும் உண்டு கெட்டவனும் உண்டு ..நல்லவனை சாந்தி படுத்துவது எளிது .. கெட்டவனையும் அமைதி ஆக்கி விட்டால் ஐம்புலனையும் அடக்கி ஆண்டு விடலாம் அவ்வளவே!!