நாளை இரவு கதை நீக்கப்படும் poi16

Poi16

நாளை இரவு கதை நீக்கப்படும் poi16

16 பொய்யில் ஒரு மெய் !!

சில வருடங்கள் கழித்து 

சீதா நான் வேலைக்கு போயிட்டு வரேன்"...

"சீதா நான் வேலைக்கு போயிட்டு வரேன் .. மகள் காலேஜுக்கு கிளம்பி நிற்க.. அரவிந்த் வாசலில் நின்று இரண்டு முறை அழைக்க 

"ராம், இங்க கொஞ்சம் வந்துட்டு போங்க, எனக்கு கொஞ்சம் மளிகை பொருள் வாங்கிட்டு வர வேண்டியது இருக்கு, பில் போட்டு வச்சிருக்கேன் எடுத்துட்டு போங்களேன் என்று சீதா உள்ளிருந்தே குரல் கொடுக்க ..

அவிரா கார்ல ஏறி உட்காரு , அம்மா கிட்ட போயி பில்ல வாங்கிட்டு வந்துடுறேன் என்று அரவிந்த் கிச்சன் நோக்கி உள்ளே வர... பச்சை நிற சேலையில் காலையிலேயே குளித்து பின்னல் பின்னி பூ வைத்து நின்ற மனைவியை அரவிந்த் கண்ணால் களவாடிட... அவன் சட்டையை கொத்தாக இழுத்து சுவரில் சாய்த்த அவன் மனைவி அவனை முறைத்தாள்

"ஏன்டி நேத்துல இருந்து கோவமா இருக்க .. வீட்டு வேலைகளை இருவரும் பிரித்து பேசி கொண்டே செய்வது. கடைக்கு சேர்ந்து போவது மகளுக்கு அவள் பாடம் எடுத்தால் , மகனுக்கு அவன் எடுப்பான் இப்படி அத்தனையும் பிரித்து செய்வர் .. எனவே வேலைப்பளு குறைவு.. இருவருக்கும் தனிமையும் இருப்பது இல்லை ... திட்டமிடல் மட்டுமே குடும்பத்தை சரியாக வழிநடத்தும் என்று இருவரும் அறிந்து செயல்பட்டனர்.. 

நேத்து மதியம் உங்களுக்கு மெசேஜ் பண்ணினேன் ஏன் ரிப்ளை இல்ல" உதட்டை சுளித்து சீதா குற்றம் சாட்டினாள் .. பின்ன அவனை விட இப்போது கண்ட பேச்சில் அவள் தான் ஆர்வம் காட்டுகிறாள் .. பேச்சு பேச்சோடு நிற்குமா அதை செயல்முறை படுத்தும் ஆசையில் பிள்ளைகள் கண்ணை மறைத்து கபடி ஆடி விடுவர்...  

"இல்லடி ஏகப்பட்ட வேலை இருந்தது. அதான்... பட் பார்த்தேன் ரிப்ளை பண்ண முடியல "உலகத்தை வேடிக்கை பார்க்க அவனுக்கு இப்போது நேரமே இல்லை .. அந்த நேரத்தை அவன் மனைவி எடுத்து கொண்டாள்...

"ஓஓஓ , இன்னைக்கு பண்ணுவேன் ரிப்ளை பண்ணல ,இந்த வாரம் ஒரு நாள் கட் என்று சீதா கண்ணடிக்க ... 

"ஐயையோ!! என் தேவதையே அப்படி எல்லாம் சொல்லிடாத , என்னோட ரிலாக்சேஷனே நீ தான்

"ஓ அப்போ ரிலாக்ஸ்க்குதான் நானா?

எல்லாத்துக்கும் நீ தாண்டி என் செல்லம்.. மாமாவை பட்டினி போட்டுடாத.. அன்னைக்கே மாதிரி ரொம்ப நேரம் பேசலாம் "என்று இவனும் கிசுகிசுக்க..

இவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது .. பேங்க் மிட்டிங் போன வாரம் பெங்களூர் சென்றான்... அது ஆபிஸ் டிரிப்பா ஹனிமூன் ட்ரிப்பா என தெரியாது இரவு முழுக்க போனில் மனைவியோடு கண்ட பேச்சு .. அவளும் தங்கள் தனி அறையில் புருஷனை பேசி பேசி மயக்க..மயக்கம் தெளியாது சுற்றுகிறான்.. 

இத்தனை வயதாகி போனது, ஆனால் காதல் வயாகரா போல இருவருக்கும் காதல் உற்றெடுக்கிறது எல்லாம் காதல் புதுப்பித்ததில் வந்த வினை!!

கவுச்சையா?? அதுவும் அவளிடம் கிடைக்கும் காதலா ??அதுவும் அவளிடம் கிடைக்கும்.. போனில் உரையாடலா?? அவளிடம் கிடைக்கும் , அன்பு தேடலா??, அதுவும் அவளிடம் கிடைக்கும் .. என்ன இல்லை அவளிடம் .. மொத்த போதையையும் ஏற்றி வைத்திருக்க.. இவனுக்கு கண்கள் அங்கே எங்கே பார்க்க கூட நேரமில்லாத நிலைமை...

வேலையில்லாத நேரத்தில் மனைவி முழு நேரத்தையும் பிடித்துக் கொண்டு அவனை மயக்குகிறாள்.ஆனால் அது யார் கண்ணையும் இதுவரை உறுத்தியது இல்லை .. 

வேறு ஒன்றையும் அவள் செய்யவில்லை அவனுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கினாள் அவ்வளவே !! 

நேர்த்தியாக குடும்பத்தை வடிவமைக்க தெரிந்த அவளுக்கு நேர்த்தியாக அவனுக்கு காதலையும், காமத்தையும் கொடுக்க தெரியாதா என்ன?

கல்யாணம் முடிந்த புதிதில் இருந்தது போல மீண்டும் ஒரு மீட்டுணர்வு காதல்.. இருவருக்குமே அந்த புத்துணர்ச்சி அப்படியே முகத்தில் இருக்கும் 

சார் வயசாக ஆக அழகாயிட்டே போறீங்க என்று கேட்கும் அளவுக்கு தாம்பத்தியம் , அவள் தரும் காதல் அவனை அழகாக்கி கொண்டிருந்தது... 

அவளும் மட்டும் என்ன குறைந்தவளா? கணவனின் அன்பு தேவையே உணர்ந்து.. அதற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு அழகாய் அவனை தன் கைக்குள் வசியம் செய்து வைத்துவிட்டாள் மாய மந்திர காரியாக... 

மதியம் லஞ்ச் டைமில் இருவரும் உரையாட..

ஆமா கேட்கணும்னு நினைச்சேன் ராம் , அந்த ஷில்பா என்ன ஆனா ??

அட அதை ஏன் கேட்கிற நம்ம அக்கவுன்டர் இருக்கார்ல "

"ஆமா ..

அவர்கூட இல்லீகலாம் "

"அய்யய்யோ?? அவருக்கு வளர்ந்த புள்ளைங்க உண்டே "

'இவ டார்கெட்டே அந்த வயசு ஆம்பளைங்க தான போல 

"பிறகு என்னாச்சு ??

"அவர் பொணாட்டிக்கு தெரிஞ்சு ரெண்டு பேரையும் கையும் காலுமா பிடிச்சு மனுசன் அவமான பட்டு நின்னாரு .. பார்கவே சங்கடமாக இருந்தது நல்லவேளை நான் தப்பிச்சேன் சீதா...

சரி கண்டவங்க பேச்சு நமக்கு எதுக்கு அடுத்தவன குடும்பத்தை கெடுக்கவே அலைவாளுக போல ... சாப்பிட்டீங்களா ?? 

ம்ம் அதோட நீ வச்ச லெட்டரையும் பார்த்தேன் என்று சிரிக்க 

சீசீ போங்க என்று போனை வைக்க... 

இரவு மொட்டை மாடி போவோமா? என்று உதட்டை கடிப்பது போல படம் வரைந்து அனுப்பி இருக்க இப்பவே உற்சாகம் ஒட்டி கொண்டது ...

பொய் எப்போதும் பொய் தான் !! அது அழகாய் இருப்பதற்காக அதை மெய் என்று சொல்லிவிட முடியாது , உண்மை ஆற அமரத்தான் பிறருக்கு தெரியும், ஆனால் மெய் எப்போதும் அந்தஸ்தில் கூடியதுதான்..

பொய்யை தேடி மெய்யை இழக்கலாமோ??

தடுமாற வழி இருந்தாலும் தடுமாறாது வாழ்வது தான் திருமண பந்தத்தில் முதல் கோட்பாடு 

ஆயிரம் பணிச்சுமை இருந்தாலும் மனைவியாக அவனை அனுசரிப்பது தான் தாம்பத்தியத்தில் இரண்டாம் கோட்பாடு 

தனித்தனியே வாழ தாலி எதற்கு? குடும்பம் எதற்கு 

பிரிவினை இல்லாம காதலை கொடுத்து வாழ கற்று கொள்வோம் , வாழ்க்கை வளமாகும்!!

நன்றி!!

வாழ்க வளமுடன்!!!

வாழ்க தமிழ் ,

வளர்க தமிழ்நாடு!!