தெள்ளழகே-26

தெள்ளழகே-26

தெள்ளழகே!-26

ராதாவும் கிருஷ்ணனும் நல்லத் தூங்கிக்கொண்டிருந்தனர்.

காலையில் சாப்பிடவும் வரவில்லை. மத்தியான சாப்பாட்டுக்கும் நேரமுமாகிவிட்டு இன்னும் ராதாவும் மாப்பிள்ளையும் ரூமுக்குள்ளே இருக்கிறார்களே என்று தாமரைக் கதவை தட்டினார்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ராதா உருண்டு படுக்க வெண்ணிலா எழுந்து பார்த்தாள் அவளை முதுகு தட்டி படுக்க வைத்து கிருஷ்ணன் வந்த கதவை திறந்தான்.அவன் அறக்க பறக்க வந்து கதவு திறந்ததைப் பார்த்த தாமரை ஐயையோ தப்பான நேரத்துல கதவைத் தட்டிட்டோமோ? என்று யோசித்தவரே நின்றிருந்தார்.

என்னத்தை என்று கேட்டு நின்றான்.

“இல்ல காலையிலேயே ரெண்டு பேரும் சாப்பிடல பாப்பாவும் ஒன்றும் சாப்பிடலாம். மத்தியானமும் ஆகிட்டுதே அதுதான் என்னாச்சுன்னு கதவை தட்டி கேட்டேன்” கொஞ்சம் தயக்கத்தோடு கேட்டார்.

“அது வந்து இரண்டு பேர் தூங்கிட்டு இருக்காங்க. இப்ப எழும்பி குளிச்சிட்டு வந்திடுறோம் அத்தை”என்று கிருஷ்ணன் சொன்னதை கேட்டதும் புரிந்து கொண்டார்.

“சீக்கிரம் வாங்க சாப்பாட்டு நேரமாகிட்டு”எனச் சொல்லிவிட்டுத் தாமரை போய்விட்டார்.

அவருக்கு ஒரே சந்தோஷம் நம்ம மகளுடைய வாழ்க்கை திரும்பவும் வசந்த காலமாக மாறப்போகுது என்று ஒரு நிம்மதி பிறந்ததால் சீக்கிரம் போய் விருந்தாகவே சமைத்து விட்டார்.

அதற்குள் கிருஷ்ணன் தூங்கிக்கொண்டிருந்த ராதாவினை மெதுவாக தட்டி எழுப்பவும் பக்கத்தில் உருண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்த வெண்ணிலாவும் எழுந்து விட்டாள்.

ஆகமொத்தம் மூன்று பேரும் குளித்து முடித்து மெதுவாக வெளியே வரும் பொழுது அவர்களுக்காக மாப்பிள்ள விருந்தே காத்திருந்தது. அங்கே மணிகண்டனும் செல்வமும் வீட்டில் தான் இருந்தார்கள்.

ஆக ஒட்டுமொத்த குடும்பமும் விருந்து உண்டு அவரவர் வீட்டிற்கு செல்ல ராதாவும் கிருஷ்ணனும் மதுரைக்கு கிளம்பினார்கள்.

ராதா தன் மனதில் ஒரே முடிவாக இருந்தால் கிருஷ்ணன் ஏற்றுக் கொண்டாகிவிட்டது அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களை இனி நான் பார்த்துக் கொள்வேன் என்ற தைரியம் வந்துவிட்டது. ஏனென்றால் கிருஷ்ணன் இப்பொழுது ராதாவின் கிருஷ்ணனாக மாறி இருந்ததால் வந்த தைரியம்.

அதனால் அவளும் வெண்ணிலாவும் தங்களுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு கிருஷ்ணனோடு போவதற்கு தயாராக இருந்தனர்.

 இருவரும் வெளியே வந்த நல்லத்தம்பி தாமரை காலில் விழுந்தனர்.

நல்ல தம்பி மருமகனை இழுத்ணைத்துக் கொண்டவர் “அவளை நீங்கதான் பார்த்துக் கொள்ளணும் இதுவரைக்கும் நடந்ததெல்லாம் மறந்துவிட்டு வாழ்க்கையைப் புதியதாக வாழுங்கள். உங்களோட வாழ்க்கை, உங்கள் சந்தோஷமும் உங்க இருவருடைய எண்ணத்திலும் கைகளிலும் இருக்கிறது” என்று அறிவுரை சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

என்னதான் ராதா தைரியமாக அவனோடு சென்றாலும் அவரது உடலுக்குள் ஒரு உதரல் இருந்து கொண்டே இருந்தது.

எப்படி பூங்கோதையும் ஆவுடையப்பனையும் சமாளிப்பது. அவர்கள் நம்ம மேல் கோபத்தில் இருந்தார்களே. அதைவிட நாகேஸ்வரி திரும்ப வருவாளே! எல்லாரையும் எப்படி சமாளிப்பது” என்று ஒரு பயத்தோடு இருந்தாள்.

அவளது பயத்தை புரிந்து கொண்ட கிருஷ்ணன் அவள்தோளில் கையைப் போட்டு தனது தோளில் சாய்த்துக் கொண்டான்.

அது போதுமே அவளுக்கு வாழ்நாள் எல்லாம் எந்த பிரச்சனையும் வந்தாலும் அவனுக்காக தாங்கிக் கொள்வாளே.அத்துனைக் காதல் அவன்மேல் இருந்தது.

மோகன் இப்பொழுது தலைக் காயத்தில் கட்டுப்போட்டவாறு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். ஹாஸ்பிட்டலில் ஒரு நாள்தான் இருக்க அனுமதித்தனர் விரட்டி விட்டு விட்டனர்.

ஏற்கனவே அவனை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தபோதே ருக்குமணி அவனை அடித்த அடியில் ஏன்டா இதை செய்தோம் என்றாகிவிட்டது.

என்னதான் கோபம் பழிவாங்கன்னு ஒரு பெண்ணை இப்படித்தான் பெண்ணை கடத்துவாங்களா.நீ எவ்வளவு பெரிய கிரிமினலா இருக்கணும்.?உன்னை கிரிமினலாகவாடா நான் பெத்துபோட்டேன் இவ்ளவு கஷ்டப்பட்டு உங்க அப்பா போனதுக்கப்புறம் வளர்த்து ஒரு நல்ல வேலையில சேர்த்தேன். கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பான்னு பார்த்தால் என்னாலாம் பண்ணிட்டு வந்திருக்க.உன்னால் சுமி வீட்டுலயும் பிரச்சனை.இனி அவளும் இங்க வந்துப்போக முடியாது. அவ்வளவு பிரச்சனையை உண்டு பண்ணி வச்சிருக்க நீ எல்லாம் மனுசனாடா?”

அம்மா கண்டபடி பேசாதே. நானே மனசு நெந்துப் போயிருக்கேன். அந்த கிருஷ்ணன் செய்ததெல்லாம் உனக்கு தெரியாதா. ஆனாலும் நான் கொஞ்சமாவது திருப்பி செய்யணும்ல. எனக்கு எப்படி மனசு வலிக்கும் அது பத்தி யோசிக்கவே இல்லையா? நானும் மனுஷன் தானே நானும் ஆம்பளைத்தானே.என் வீரத்தையும் காண்பிக்கணும்ல” என்று கோபப்பட்டான்.

“ஆமா ஆமா நல்ல வீரத்தைக் காண்பிச்சபோ.உன்னையெல்லாம் ஏன்டா பெத்தேன்னு இருக்கு. நல்லவேளை இது அருண் வீட்டுக்கும் நமக்கு மட்டுமாகப் போச்சு. வெளியே யாருக்கும் தெரியல.அந்தக் கிருஷ்ணன் உன் பேர்ல கேஸ் கொடுக்க விருப்பப்படல.கேஸ் குடுத்தால் அவன் பொண்டாட்டி பேரும் வெளியே அடிபடும் அப்படின்னு சொல்லிட்டான். அதனாலதான் விட்டுட்டுபோனான். இல்லையென்றால் உன்னை தூக்கிப்போட்டு மதுரைக்காரன் மிதிச்சிட்டு போனதோட நிக்காம உன்ன ஜெயில்ல களியையும் திங்க வச்சிருந்திருப்பான். அந்த அறிவு உனக்கு இருக்காடா ஜெயிலுக்கு போனால் உன் வாழ்க்கை என்ன ஆகிறது? என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா மடச்சாம்பிராணி என்று திட்டிக்கொண்டிருந்தார்.

அதைக்கேட்டதும் எழுந்து வெளியே செல்லமுயன்றவனைப் பார்த்து “அப்படியே எங்கேயவது போயிடு.என் மகன்னு சொல்லிட்டு இந்தப்பக்கம் வந்திடாதே” என்று சத்தம்போட்டார்.

அவ்வளவுதான் அதைக் கேட்டவன் கோபத்தில் வெளியே சென்றான்.அதன் பிறகு அவன் வீட்டுக்கு வரவே இல்லை. ருக்குமணி எவ்வளவோ தேடிப் பார்த்தும் அவன் கிடைக்கவில்லை எங்கே இருக்கிறான் எங்க போனான் என்று தெரியவில்லை.

அய்யய்யோ மகனைக் கோபத்தில் திட்டி அனுப்பினோம்.இப்போது அவனை இழந்து விட்டோமோ? என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார் ருக்குமணி.

காதல் செய்த கோலம் அவனையும் அவனது வாழ்க்கையும் ஏனோதானவென்று மாத்திவிட்டது.

ராதாவும் கிருஷ்ணனும் இராப்பொழுதுதான் வந்து சேர்ந்தனர். நல்ல தூங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் படுக்கவைத்தவன் மெதுவாக ராதாவைம் தட்டி எழுப்பினான்.

அவள் கண்முழித்ததும்” வா வீடு வந்துவிட்டது என்று சொன்னான்.

“வீடு வந்துவிட்டது என்று சொன்னதுமே பயந்து கால்களை எடுத்து வைத்தாள்

இந்த வீட்டில்தானே அவமானப்பட்டு ஆயிரத்தெட்டு அடிகள் வாங்கி பிரச்சனைகளோடு இந்த வீடு நமக்கு வேண்டாம் என்று வெளியேறினேன். மறுபடியும் இந்த வீட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது என்று நினைத்ததால் அவளால் கால்களை கீழே இறக்கி வைக்க முடியவில்லை.

அதை உணர்ந்தவன் கையை கொடுக்க அவளை கீழே இறக்கி வீட்டிற்கு முன்பு கொண்டுபோய் நிறுத்தினான்.

அவ்வளவுதான் அவளுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.ராதாகிருஷ்ணன் இல்லம் என்று எழுதியிருந்த அந்தப்புதுவீட்டைப் பார்த்ததும் அப்படியே கண்ணீரோடு கிருஷ்ணனைக் கட்டிக்கொண்டாள்.

இந்த வீடு இந்த ஒரு வருஷமாக உனக்காக நான் கட்டிக் கொண்டிருந்த வீடு இதனோட வேலையை முடிக்க தான்போன ரெண்டு மாசமா இங்கே உட்கார்ந்து முழுசா முடிச்சுட்டு வந்தேன்.

நீ வந்ததுக்கு அப்புறம்தான் பால்காய்ப்பு வைக்கணும்னு இருந்தேன். உனக்காகவும் நீ என் மேல வைத்தக் காதலுக்காகவும் எதிர்பார்ப்புக்காகவும் இந்த வீட்டை கட்டியிருக்கேன்.

இது உன் புருஷன் கிருஷ்ணனோட சம்பாத்தியத்தில் கட்டின வீடு. இதுல உரிமை கொண்டாட ராதாவுக்கும் வெண்ணிலாவுக்கும் மட்டுமே உரிமை இருக்கிறது. வேறு யாருக்கும் உரிமை கிடையாது. இந்த வீட்டில நீ சுதந்திரமா இருக்கலாம். உன் விருப்பத்திற்கு இருக்கலாம் யாருக்கும் அடிமையாக இருக்கவேண்டாம். யாருக்கும் பயந்து இருக்கணும் இல்ல. உன் புருஷனுக்கே நீ பயப்படனும்னு அவசியம் இல்ல” என்று சொன்னவுடனே நிமிர்ந்து பார்த்தவன் அவள் ரசிக்கும் அந்த மீசையை அப்படியே தனது உதட்டால் எடுத்து கடித்து அந்த வெட்ட வெளியில் நிலா வெளிச்சத்தில் முத்தம் வைத்துக் கொண்டிருந்தாள்.

இதுபோதுமே இந்தக்காதல் போதுமே அவர்களது மிச்ச வாழ்க்கையையும் வாழ்ந்துத்தீர்ப்பதற்கு.

கிருஷ்ணா உன் பொண்டாட்டி ராதாவின் மனசையே ஜெயிச்சிட்டியே! 

அன்பின் வழியது! எந்த சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் அந்த அன்பும் காதலும் நாம் அழைத்தருமும் கூட்டி சேர்க்கும் என்பதற்கு ராதாவும் கிருஷ்ணனும் உதாரணம் அவர்கள் வாழ்க்கை அந்த ராதாகிருஷ்ணன் காதலை போல எப்பொழுதும் காதலோடும் அன்போடும் இருக்கும்!

                  வாழ்கவளமுடன்