பொய் 13

Poi13

பொய் 13

13 பொய்யில் ஒரு மெய் !! 

சீதா 

"பேசாதீங்க ராம் .. உங்களுக்கு உடம்பையும் மனசையும் கட்டுப்படுத்த தெரியாதா.எனக்கும் ஆசைகள் தேவைகள் இருந்திருக்கு ராம், பொண்ணுங்க இதே பண்ணி இருந்தா விட்டு இருப்பீங்களா? எத்தனை பட்டம் கட்டி இருப்பீங்க .. வேசியா ஆக்கி அடிச்சு விரட்டி இருக்க மாட்டீங்க 

சீதா ஆஆஆஆ

"கோவம் வருதா , பொண்ணு செஞ்சா தப்பு ஆண் செஞ்சா பொறுத்து போகணும் இல்ல... 

"நல்லவேளை தப்பிச்சு இருக்கீங்கன்னு கடவுளுக்கு கோடி கும்பிடு போடுங்க , நான் நினைச்ச மாதிரி எவ கூடையாவது கொட்டம் அடிச்சிருந்தா உங்க நிலை என்ன ஆகி இருக்கும்னு தெரியுதா, ப்ச் திருட்டு முழி முழிக்காம வந்து வண்டியை எடுங்க என்ற மனைவி சொல்லே மந்திரம் நிலையில் அரவிந்த் ஓடினான்..

வீட்டில், அவள் தாய் தகப்பன் பதைப்பதைப்பாக அமர்ந்திருக்க ... 

"வாங்கம்மா எப்ப வந்தீங்க? என்று செருப்பை கழட்டி போட்டுக்கொண்டு இயல்பாக உள்ளே வந்த மகளை பார்த்து எல்லாருக்கும் பகீர் என்று தான் இருந்தது.. பின்னாலேயே அரவிந்த் அவர்களை பார்த்து ஒரு தலையசைப்போடு உள்ளே வந்தான் .. விவகாரத்து பண்ண போறேன் என்று நேற்று காலையில் போன் போனதில் இருந்தே அவர்கள் நெருப்பு மீது நடந்த கதைதான்..  

சீதா கிச்சனில் போய் அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருக்க.. அரவிந்துக்கு எதற்குமே பொறுமை இல்லை.. என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்று தெரிந்தே தீர வேண்டும்.. சிறிது நேரம் அங்கும் இங்குமாக சுற்றி வந்தவன் விக்கல் எடுப்பது போல செய்கை செய்து கிச்சனில் உள்ள தன் மனைவியை நோக்கி போனவன் அவள் தோளை தொட போக வெடுக்கென்று திரும்பி அவனை பார்த்து முறைத்த சீதா 

"என்ன ? 

உன் கிட்ட பேசணும் சீதா 

"வீட்ல ஆள் இருக்குல்ல , என்னத்த பேச போறீங்க இப்ப பேச முடியாது பிறகு பேசலாம்" என்று வெடுக்கென முடித்து விட, அரவிந்த் ஆளோடு ஆளாக உட்கார வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டான்..

சரி அவர்கள் போன பிறகு பேசலாம் என்று பார்த்தால் பிள்ளைகள் வந்து விட்டனர் ,பிள்ளைகள் இரண்டும் படிக்க உட்கார , அரவிந்த் பெருமூச்சு விட்டு அறைக்குள் போக நினைக்க

"எங்க போறீங்க இங்க உட்காருங்க, அவங்க ரெண்டு பேரும் படிக்கட்டும். நாம கிச்சன்ல வேலை செய்யலாம் என்ற மனைவியை பார்த்து நாலா பக்கமும் தலையாட்டியவன் அவள் பின்னாலே சென்றான்..

"இந்த காய வெட்டுங்க ப்ச், ஏன் கத்தி இப்படி ஆடுது கத்திய ஒழுங்கா புடிங்க என்று அவன் கையைப் பிடித்து கத்தியை வைத்து வெட்ட பழக்கி கொடுத்தவள்..

"எனக்காக கஷ்டப்பட்டு உழைக்கிறவர் எனக்காக லோன் போட்டு வீடு கட்டி மகாராணி மாதிரி வச்சிருக்கிறவர் எனக்காக பார்த்து பார்த்து செய்றவர், அவர் கஷ்டப்பட்டுடக்கூடாதுன்னு, அவர் சுமைய சுமந்துட கூடாதுன்னு நினைச்சுதான் உங்க சுமையையும் சேர்த்து இந்த குடும்ப பாரத்தை இழுத்தேன் ..அதுல இருந்த காதல் உங்களுக்கு தெரியவே இல்லையா ராம்?" கண்ணில் நீர் கட்டி நின்றது... 

"சீதா நான் உன்ன தப்பா சொல்லவே இல்ல "என்று அவன் அவளை பாவமாக பார்க்க . சட்டென அவன் கை சந்தில் முகத்தை புதைத்துக் கொண்ட சீதா... 

"நானும் தப்பு பண்ணிட்டேன் ராம் , சாரி , தப்பு என் பெயரிலும் இருக்கு இல்ல.. "

"சீதா 

உங்களுக்கு என்ன சாப்பாடு வேணும்னு ..யோசிச்சேன் என்ன ஷர்ட் அயன் பண்ணனும்னு வரைக்கும் யோசிச்ச நான் .. உங்களுக்கு என் அணைப்பும் என்னோட முத்தமும் காதலும் தேவைன்னு யோசிக்கவே இல்ல...   

ஒரு கணவன் மனைவி கிட்ட மட்டுமே தேடக்கூடிய அந்தரங்கமான அன்பும், ஐக்கியமும் தரணும்னு நான் நினைச்சு பாக்கவே இல்லல்ல..

"சீதா குழந்தைங்க இருக்காங்க ,பிறகு பேசலாமே என்றான் சங்கடமாக நெளிந்து கொண்டு

'இதே சங்கடம் தான் எனக்கும், ராம் .. நாம ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நின்னாவே திரும்பி பாக்குற பிள்ளைங்களை வச்சுக்கிட்டு.. எப்படி அன்னோனியமா இருக்க முடியும் சொல்லுங்க.. ஒரே அறை விவரம் தெரிஞ்ச புள்ள , நாம ஓங்கி சத்தம் கொடுத்தா கூட அதுக கெட்டுப் போயிடுமோன்னு பயந்து பயந்து சேர வேண்டியது இருக்கு.. அதுவே நாளடைவில் எனக்கும் சலிப்பை உண்டாக்கிடுமே...

"உங்களுக்கான நேரத்தை நான் கொடுக்காம வீடு குடும்பம் அலைஞ்சது தப்பு ... ஆனா ஒரு வாட்டியாவது என்கிட்ட நீங்க மனம் திறந்து பேசி இருக்கலாமே ராம் "

"எனக்கே வெக்கமா இருந்தது சீதா ,இத போய் உன் கிட்ட நான் எப்படி சொல்றது.. நீங்க என்ன சின்ன புள்ளையா இன்னும் என் முந்தானைய புடிச்சுகிட்டு திரியன்னு நீ கேட்டுட்டா..

"கேட்டா என்ன என் புருஷனுக்கு நான் தான் வேணும்னு அடம் பிடிக்கிறான்னு சந்தோஷம் வந்திருக்கும் இல்ல ... 

"ம்ம் பேசி இருக்கணும் தப்பு தான் .. 

"அப்படி என்ன அந்த வீடியோவில் இருந்தது..

"அது 

"நான் எல்லாத்தையும் பார்த்தேன் அதுல எதுவுமே இல்லை ஆஊன்னு சத்தம் மட்டும்தான் இருந்தது.... 

உங்களுக்கு அப்படி அதுல என்ன புடிச்சது சொல்லுங்க "

"வேணாண்டி இப்ப பேச வேண்டாமே

"ம்ம் நைட் கண்டிப்பா இத பத்தி பேசி தான் ஆகணும் அதனால ப்ரிப்பேர் பண்ணி வச்சுக்கோங்க இப்ப காய வெட்டுங்க" என்றவள் அவன் தோள்பட்டையில் நறுக்கென்று கடித்து வைக்க

"ஸ்ஆஆஆஆ எதுக்குசீதா கடிக்கிற??

"இது அந்த பொண்ண பைக்ல ஏத்துனதுக்கு , 

"இல்லை சீதா தனிதனியா போனோம்.. பைக் ரிப்பேர் ஆகி 

ஓஓஓ ஆட்டோவுல எல்லாம் ஏத்தி விட மாட்டீங்க...

எதுக்கு ஹாஸ்பிட்டல் போனீங்க ?

"அந்த பொண்ணு சாப்பிடாம மயங்கி விழுந்துட்டு வேற வழி இல்லாம "

"ஏன் லேடி ஸ்டாப் அனுப்பி விட மாட்டீங்களா

"அது அப்போ யோசிக்க தோணலையே..

"ஓஓஓஓ என்றவள் அவன் முதுகில் இன்னும் பலமாக கடித்து அவன் கத்த முடியாமல் முழிப்பதை ரசித்துக்கொண்டே

இது அந்த பொண்ணு வந்து கேட்டதை என்கிட்ட சொல்லாம மறைச்சதுக்கு என்றவள் .. அவன் காது மடலை கடித்து 

"இது கண்ட கண்டதை பார்த்து கெட்டுப்போய் இருக்கிறதுக்கு .... 

"நைட் மொத்தமா இருக்கு உங்களுக்கு"

"என் மேல கோபம் இல்லையே சீதா, டைவர்ஸ் எல்லாம் வாங்க மாட்ட தானே, உன் மேல சத்தியமா நான் எந்த தப்பும் பண்ணலடி"" என்று அவன் சீதா தலையில் அடிக்க போக ... அவன் கையைப் பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தவள்

கோபம் இருக்கு , ஆனா பிரிஞ்சு போகிற அளவுக்கு எந்த தப்பும் நீங்க பண்ணலன்னு சந்தோஷமாகவும் இருக்கு ... அப்பா கொஞ்ச நாளா மண்டைக்குள்ள பேய் ஏறி உட்கார்ந்து இருந்த மாதிரி அழுத்திக்கிட்டு இருந்துச்சு... இப்பதான் ஃப்ரீயா இருக்கு.. 

"ரொம்ப தேங்க்ஸ் சீதா என்றவன் நெஞ்சில் சீதா சாய அரவிந்த் எட்டி பிள்ளைகளை பார்த்தான்

இப்பொழுது தான் புரிகிறது அவள் கஷ்டம் என்னவென்று பிள்ளைகள் கண்ணை மறைத்து முத்தம் கொடுப்பது கூட கஷ்டம் தான் ..

"அதெல்லாம் இங்க நின்னா பிள்ளைங்களுக்கு தெரியாது இனிமே எங்க நின்னா தெரியாதுன்னு பார்த்து கட்டி பிடிக்க பழகுங்க "என்று செல்லமாக அவன் மீசையை பிடித்து திருகியவள் 

"ஐ லவ் யூ ராம் "என்று அவன் உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டு வெளியே ஓடிவிட்டாள்..

அவனுக்கு அவ்வளவு தான் தேவை!!

அவன் மனைவி தரும் இந்த அன்பு முத்தமும், சின்ன சின்ன சேட்டைகளும் அவன் தனிமையைக் கலைக்கும் மந்திர சொற்களும், மர்ம பார்வையும் போதும்..அவள் கொடுத்துவிட்டு போன ஈரமுத்தத்தை தன் நாவு கொண்டு வருடியவனுக்கு

பொய்யிக்கு இனி வேலை இல்லை .. மெய்யாய் மெய்யுடலாக,மெய் நேசமாக என் மனைவி எனக்கே எனக்காய் கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சி அவன் முகம் முழுவதும் பிரகாசிக்க செய்தது...

ஆசையும் மோகமும் மூன்று மாதங்கள் தான் என்பது உண்மைதான்.. ஆனால் காலம் முழுக்க சேர்ந்து வாழக்கூடிய தம்பதிகளுக்கு இடையே அந்த காதல் புதுப்பிக்கப்பட்டு கொண்டு இருக்க வேண்டும்..

காதலின் சலிப்பு , அன்பில் பஞ்சம் வந்துவிட்டால் இடைவெளி வந்துவிடும்.. இடைவெளி வந்து விட்டால் பிரிவு வந்துவிடும் , பிரிவு வந்துவிட்டால் வாழ்க்கையே வீணாகி போகும் .. 

அதற்கு வழி??

காதல் மீட்டுணர்வு..

எப்படி காதலை மீட்க??

எப்படி ,காலத்துக்கு ஏற்ப போனை மாற்றுகிறோமோ அதே போல காதல் , அன்பை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் .... இதில் ஒரு கேட்டகிரி ஆண் பெண் உண்டு... என்ன கொடுத்தாலும் திருப்தி அடையாத ஜென்மங்கள்.. நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்க தான் போகும், அப்படி நபர்களை குளிப்பாட்டி அழகு பார்ப்பது வீண்!! ஆனால் , அன்பை எதிர்பார்க்கும் கணவன் மனைவிக்காக நம்மை சிறுது மாற்றி கொள்வதில் தவறு இல்லேயே!! 

பிள்ளைகள் இரண்டும் உறங்கிய பிறகு கண்ணை மூடி படுத்து கிடந்த அரவிந்த் காலை சீதா விரல்கள் சுரண்ட ..கண்ணை முழித்து அரவிந்த் பார்க்க.

மேலே வா என்பது போல் சொல்லிவிட்டு சீதா மொட்டை மாடிக்கு ஏறி போக, இவனும் கள்ள பொண்டாட்டியை சந்திக்க போவது போலவே பதட்டமாக ஏறி அவள் பின்னால் போனான்...

தாய் தந்தை பிள்ளைகள் எல்லாம் ஒரு கட்டம் வரை தான் கடைசி வரை கைப்பிடித்து வாழப் போவது கணவனும் மனைவியும் தான்..

அவர்களிடையே சின்ன சின்ன சீண்டல் நெருக்கம் அன்பு அன்னியோனியம், இதை கூடாது என்று யாராலும் தடை போட முடியாது .... பிள்ளைகள் பிறந்து விட்டார்கள் என்பதற்காக அவர்கள் சன்னியாசியாக வேண்டும் என்று எந்த சட்டமும் எழுதி வைக்கவில்லையே , பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று அவர்கள் இருவரும் தனித்தனி படுக்கையில் தான் படுக்க வேண்டும் என்று எந்த சம்பிரதாயமும் சொல்லவில்லையே.. பிள்ளைகள் வயதிற்கு வந்து விட்டார்கள் என்பதால் புருஷனும் மனைவியும் உடலளவில் சேரக்கூடாது என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லையே பின்னே ஏன் இந்த இடைவெளி ...

மனமும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால் மனைவிக்கும் கணவனுக்கும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் , அவர்கள் சாகும் வரை காதலிக்கலாம், சாகும் வரை ஒருவரோடு ஒருவர் ஒன்றாக கலக்கலாம் .. அன்பை கொடுக்கலாம் அன்பை வாங்கலாம், அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் மட்டுமே .. 

எளிதாக கிடைக்கும் பொய்யை விட , அபூர்வமான மெய் விலையேற பெற்றது கிடைப்பது அரிது தான் ஆக மெய்யை நேசியுங்கள்.. தங்கம் ஒருநாளும் கருத்து போகாது ..பித்தளை என்றாகினும் அதன் குணத்தை காட்டி விடும் 

மெய் அன்பை மெய் நேசத்தை தேடுங்கள் அதை தக்க வைத்து கொள்ளுங்கள்...