தெள்ளழகே-24

தெள்ளழகே!-24
ராதாவை அழைத்துக் கொண்டு வந்து அவளுடைய வீட்டில் விட்டவன் ராதாவை சரமாரியாகத் திட்டிக்கொண்டிருந்தான்,
“அறிவு இருக்கா அவன் நல்லவன்தான் இல்லைன்னு சொல்லல.ஆனா நல்லவன்லாம் சந்தர்ப்பம் கிடைக்குப் வரைக்கும்தான் புரியுதா?அவன் நல்லவன் வேஷமெல்லாம் கலைஞ்சுப்போயிடுச்சு.இன்னும் இரண்டுமூணு நாளில் புரிஞ்சுக்குவான், அவனை எதுக்கு நான் போலீஸ்ல காண்பிச்சுக் கொடுக்கலன்னா அவன் கிரிமினல் கிடையாது.
அவனுக்கு என்மேல் கோபம்.அந்தக் கோபத்தை உன்னைக் கடத்தி பழிதீர்த்துக்க நினைச்சான். கடத்ததெரியாமல் கடத்திட்டான். நான் கடத்துனமாதிரி எல்லோருக்கும் தெரியணும் போலீஸ் என்னைப்பிடிச்சுட்டுப் போகணும்னுதான் அவன் திட்டமே.அதனால்தான் நான் காரை எங்க விட்டுட்டுப்போயிருக்கேன்னு கண்டுப்பிடிச்சு எடுத்திருக்கான்.
இப்போ உன்னைக் கடத்தினது என் காரைக் கடத்தினதுன்னு கேஸ் கொடுத்தால் அவன் வாழ்க்கையே போயிடும்.அந்தளவுக்கு பழிவாங்குறளவுக்கு அவன் கெட்டவனும் இல்லை அதேளவுக்கு அவன் நல்லவனும் இல்லை.சந்தர்ப்பம் வந்தால் சூழ்நிலையைத் தனக்குத் தக்க மாத்திக்கிற சந்தர்ப்பவாதி அவ்வளவுதான்.
அப்புறம் அவனை அடிச்சிருக்கேன தவிற கொல்லல.இனி அவன் உன் பின்னாடி வந்தால் கொன்றுவேன் புரியுதா?” என்று கோபத்தில் அவளிடம் சத்தம்போட்டுப் பேசிக்கொண்டிருந்தான்.
நள்ளிரவைத் தாண்டித்தான் அவளையே கண்டுப்பிடித்து வந்திருந்தான்.
அதனால் இதற்குமேல் வேற எங்கேயும் போகமுடியாது என்பதால் எல்லோரும் அங்கயே தங்கிவிட்டனர்.
பழையமாதிரி இருந்தால் எல்லோரும் தனித்தனியாக அவங்கங்க அறைக்குள் போய் பதுங்கிக்கொள்ளுவார்கள்.
ஆனால் இப்போது அப்படியில்லையே! ஓரளவு மனதின் குரோதங்களை வெளிக்காட்டாது நல்லவிதமாக இருக்கப் பழகியிருந்தனர்.
மைதிலி ராதாவோடு பேசாவிட்டாலும் முன்பிருந்த பகையை காண்பிக்காது இருந்தாள்.அதுவே பெரியவிசயம்.
அது மணிகண்டன் குடுத்த ஒத்தை அடியில் அவளது நரித்தனம் வெளியே தெரியாது அடங்கியிருக்கிறது.
கிருஷ்ணனை அங்கயே தங்கச்சொல்லி எல்லோரும் பிடித்துவைத்தனர்.அவனோ நான் மைதிலி அக்கா வீட்டுலபோய் படுத்துக்கிறேன் என்றுதான் பிடிவாதம் பிடித்தான்.
அதெல்லாம் வேண்டமென்று அங்கயே ராதாவின் அறையிலயே படுத்துக்கங்க என்று தாமரையும் நல்லத்தம்பியும் சொல்லிவிட்டனர்.
எப்படியும் ராதாவோடுதான் வாழ்வேன் என்று பிடிவாதமாக இருப்பதாலும் இன்னைக்கு ராதாவைத் தேடிக் கண்டுப்பிடித்ததாலும் இனி அவர்கள் வாழ்க்கை இணைந்தே பயணிக்கும் என்று நம்பினதால் அவனை ராதாவின் அறைக்குள் படுக்கச் சொல்லிருந்தனர்.
இதற்குமேல் ராதாவாலும் எதுவும் சொல்லமுடியாது போனது. அதற்குக்காரணம்அவனைத் தேடித்தான் அந்தக் காரின் அருகில் போய் எட்டிப்பார்த்தாள்.
அதன்பின் காரில் ஏறியதும் கிருஷ்ணன்தான் வந்திருக்கிறான் என்று தானாக மனதில் பூப்பூத்தது.அதை அவள் உணர்ந்திருந்தாள்.
ஆனால் மோகன் என்றதும் அப்படியே முகம் சுருங்கி அருவருப்பாக உணர்ந்தவள் மோகன்சார் நீங்களா? நீ நீ எப்படி என் புருஷன் காரன் எடுத்துட்டு வந்தார் நீ எதுக்கு என்னை கடத்தல் என்று ஆத்திரத்தில் அவனை அடிக்கப் போனாள்.
அவனோ சும்மா இரு ராதா. உன் புருஷன்னு சொல்லுற உனக்கு வெட்கமாயில்ல. அவனோடு நீ வாழமாட்டேன்னு விவாகரத்து வாங்கிட்டு வந்துட்டியே!
ஆனால் இன்னும் அவனை புருஷன்னு சொல்லிட்டு அவன் தாலியையும் போட்டுட்டு அலையுற. அப்புறம் எதுக்கு எங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் அலைய விடுறீங்க? என் புருஷன்தான் எனக்கு வேணும் அவன் கூட தான் வாழ்வேன் சொல்லிட்டு போக வேண்டியது தானே! இத்தனை நாளும் பின்னாடியே அலைஞ்சனே! என்னைப் பாத்தால் உனக்கு மடப்பயலா தெரியுதா? அது கூட பரவால்ல உனக்காக உன் புருஷன்கிட்ட எல்லாம் அடிவாங்கினேன்.அவளை பழிவாங்காத்தான் உன்னை கடத்தினதே! அவன் கார்ல உன்னைக் கடத்திட்டு போயிட்டிருக்கேன் .அப்போ அவன் தான் கடத்தினதுன்னு சாரைப் போலீஸ்தேடும் .அவன் மாட்டட்டும் எனன கைய உடச்சதுக்கு போலீஸ்ல அடிவாங்கிச் சாகட்டும்,உன்னை என்ன பண்ணுவேன்னு அப்புறமா யோசிச்சு சொல்லுறேன்”
“என்னது என்னை என்னப் பண்ணபோறேன்னு நீ யோசிச்சு சொல்லுறியா? இது மட்டும் என் புருஷன் கிருஷ்ணனுக்கு தெரிஞ்சுச்சுன்னா உன் கழுத்தை அறுத்து போட்டுருவாரு. மதுரைக்காரன்டா மதுரை வீரன்டா.அவனை பத்தி தெரியாமல் நீ ரொம்ப வாலாட்டுற.ஏற்கனவே உன்னைக் கல்குவாரியில வச்சு அடிச்சது பத்தாதடா.உன்னை நல்ல மனுஷன்னு நினைச்சேன்பாத்தியா அதுக்கு என்ன செருப்பால அடிக்கணும். என் புருஷன் வந்து உன்னைச் செருப்பால அடிப்பாரு எனக்கு பதிலா என்று ரொம்ப தைரியமாக சொன்னாள்.
அதைக் கேட்டு கடுப்பானவன் “இப்பவும் என் புருஷன் என் புருஷன் சொல்ற பாத்தியா.அதுலதான்டி காண்டாவது” என்று கடுப்பில் காரை வேகமாக ஓட்டினான்.
அதில் அவனது முதுகில் வேகமாக அடித்தவள் “டேய் காரை நிறுத்துடா.எங்க வீட்டுலயும் கிருஷ்ணனுக்கும் நீதான் கடத்தினதுன்னு தெரிஞ்சுதுனா உன்னை மிதிச்சே பிதுக்கிடுவாங்கட!”என அவனைத்திட்டியாவறே அடித்தவள் அவனிடமிருந்துத் தப்பிக்க வழியைத்தேடினாள்.
அதற்குள் அவளை மயக்கமருந்து அடித்து மயங்க வைத்தவன் நேராகக் காரைக்கொண்டு சுமி வீட்டில் நிறுத்தியவன் அவளைத் தூக்கிக்கொண்டுபோய் அங்கே ஒரு அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.
அருண் அவனையும் ராதாவையும் பார்த்து பயந்து உள்ளே ஓடிவந்து “என்னடா இது இப்படி பண்ணிட்ட இந்த பொண்ண தூக்கிட்டு வந்தது தப்பில்லையா? என்று பயந்து போய் கேட்டனர்.
உடனே முகம்மாறியவன் “ரொம்ப பயப்படாத அவளை நான் எதுவும் செய்யவில்லை.அவ புருஷனுக்கு ஒரு காட்டு காட்டணும். என்னை ரொம்ப வைச்சு செஞ்சுட்டான்.என் கையை உடைச்சு இரண்டு மாசமா என்ன பாடாப் படுத்திட்டான்.அவனை சும்மா விடக்கூடாது நான் அப்படி என்ன பண்ணிட்டேன்? தப்பா கேட்கிறேன்.இல்ல அவளைக் கல்யாணம் பண்ணிக்க கேட்டது தப்பா ?எனக்கு அவள்மேல காதல் வந்துச்சு அவளைப் பத்தி தெரிந்தும் காதலிச்சேன்.அப்போ நான் கேட்டதுல எந்த தப்பும் இல்லையே?”என்று தனது கோபத்தையும் ஆற்றாமையும் வெளிப்படுத்தினான்.
“அப்போ இந்தப்பொண்ணு இனி எந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் காதலையும் நம்பாதேடா. இதெல்லாம் சரியில்லை”
“அப்படியெல்லாம் இல்லடா இவ புருஷனை இப்ப போலீஸ் தேடும் அவன்க்காரை வைச்சுதான் நான் இவளைக் கடத்திட்டு வந்தகருக்கேன்.அவ புருஷனை பிரச்சனை முத்தி போய் வேண்டாம் என்று சொல்லட்டும் அப்ப நான் பாத்துக்குறேன் அப்ப என்ன கல்யாணம் பண்ணித்தானே ஆகணும்.அவனுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும்” என்று மெத்தத் திமிரில் பேசினான்.
சுமிதான் “அண்ணா இது தப்பு இதலா சரி இல்ல அவதான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டாளே. எந்த சூழ்நிலையும் நீ வேண்டாம் சொன்னாளே.அவள் அவ புருஷனை நம்பி ஏத்துக்குறா ஏத்துக்காமல் போறாள் அது அவங்களோட வாழ்க்கை பிரச்சனை. நீ குறுக்க போகாதே.உன் வேலையை பார்த்துட்டு திரும்பி கொண்டுப்போய் அவளைவிடு. நீ என்ன பண்ணறனு உனக்குத் தெரியுதா? அந்த கிருஷ்ணனுக்கு கோவம்வந்து கையை உடைத்துவிட்டான்.இனி இது தெரிஞ்சா உன்னை கழுத்தையும் வெட்டப்போறான். ராதாவைக்கொண்டு விட்டுட்டு வந்திரு என்று கெஞ்சினார்கள்.
ஆனால் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருந்த மோகன் அதைக்கேட்காது போனான்.இப்பொழுது மொத்தமாக பிரச்சனைகளும் மாட்டிக் கொண்டான்.
அந்த நேரத்தில் ராதாவின் மனசுக்குள் இருந்தது முழுவதும் கிருஷ்ணன் மட்டும்தான்.இனி அவனைத் தவிர வேறு யாருமே அவளது மனசுக்குள்ளயும் சரி வாழ்க்கைக்குள்ளைம் சரி வரமுடியாது என்பதை புரிந்துக்கொண்டாள்.
அதையெல்லாம்விடவும் என் புருஷன் என் புருஷன்னு அவள் மோகனிடம் சொன்னதை ஞாபகபப்படுத்தி பார்த்தவளால் கிருஷ்ணனை தள்ளிப்போ என்றோ என்னைத் தொடாதே என்றோ சொல்ல மனதுவரவில்லை.
மோகன் வீட்டிலிருந்து அவளைத் தூக்கிக்கொண்டு வரும்போது அவனது முகத்தையேதான் பார்த்துக்கொண்டுவந்தாள்.
உண்மையாகவே அவளுக்காக தேடியிருக்கிறான்.தேடியலைந்து பொண்டாட்டியைக் கண்டுப்பிடிச்சுட்டானே! என்று ஆச்சர்யமாகப் பார்த்தாள்
இப்போது இவன் என்னைக் காப்பாற்ற வராமல் இருந்தால் மோகன் இரண்டுமூன்று நாள் கழித்துதான் விட்டிருப்பான்.அப்போ என்னை யாரு நம்புவா?என்மேல் அபாண்டமாகப் பழிதானே போடுவார்கள்.என்னை நம்பி வந்து தூக்கிட்டு வர்றானே!என்று ஒருவித அமைதியோடு அவனைப் பார்த்திருந்தாள்.
அந்த அமைதி இப்போதும் தொடர்கிறது.எல்லோரும் அவரவர் அறைக்குள் நுழைந்துவிட கிருஷ்ணன் மட்டும் ஹாலில் உட்கார்ந்திருந்தான்.
அவனை ராதாவின் அறையில் படுக்கச் சொல்லிவிட்டு போயாச்சு.அவனுக்கு அங்க எப்படிப்போகுறது என்று தயக்கம்?அவளுக்கும் அவன் வந்திடுவானோ என்று பதற்றம்?
வெகுநேரம் கழித்து வெளியே வந்த தாமரை “என்ன மருமகனே இங்க உட்கார்ந்திருக்க.இன்னுமா தூங்கமல் இங்கயே உட்கார்ந்திருக்கறீங்க?என்றவர் ராதாவின் அறைக்குள் போனவர் கதவைத் திறந்து லைட்டைப்போட்டுவிட்டு கிருஷ்ணனை அழைத்தார்.
“நீங்க போய் படுத்துத் தூங்குங்க”என்று அவன் உள்ளே செல்லும்வரைக்கும் காத்திருந்து பார்த்துவிட்டு அவர் அறைக்குத் திரும்பிப் போனார்.
ராதாவின் அறைக்குள் நுழைந்ததுமே வெண்ணிலாவைப் பார்த்ததும் எல்லாம் மறந்துப்போய் அவளருகில் போய் உட்கார்ந்து அவளது கையைப்பிடித்துக்கொண்டு அப்படியே கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.
அவன் அந்தப்பக்கமாக வந்து உட்கார்ந்ததுமே ராதா எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.அவளால் இனி தூங்கமுடியாதென்று புரிந்தது.
அதனால் அவளும் முழித்து உட்கார்ந்து என்ன செய்யவென்று தெரியாது போனை எடுத்துப் பார்த்திருந்தாள்.
கிருஷ்ணன் சிறிது நேரத்திலயே தூங்கிவிட்டான்.அவன் தூங்கிவிட்டான் என்று தெரிந்ததும் போனை கீழே வைத்தவள் அவனையே பார்த்திருந்தாள்.
மூணு வருஷத்துக்கு முன்பு பிரிந்துவரும்போது திமிராக கெத்தாக “உனக்கு நான் வேண்டாம்னா எனக்கும் நீ வேண்டாம்.பொம்பளை உனக்கே இவ்வளவு அழுத்தமும் திமிரும் இருந்தால் ஆம்பளை நான் எதுக்குடி உன்னைத் தேடிவரப்போறேன்.உன் பக்கம்கூட திரும்பிப் பார்க்கமாட்டேன்டி நானு ஆம்பளை சிங்கம்டி” என்று கெர்ஜித்துவிட்டு தன்னை புழுவாகக்கூட மதிக்காத கிருஷ்ணன் இவனில்லை!
இவனது நடத்தையில் குணத்தில் மாற்றம் வந்தது உண்மைதான் என்று உணரத்தான் செய்தாள்.ஆனாலும் பழைய கிருஷ்ணனின் குணம் அவளைப் பயப்படத்தான் வைக்கிறது.
திரும்பவும் சிங்கக்கூண்டுக்குள்ள போய் மாட்டிக்கிட்டு தப்பிக்க வழிதெரியாது முழிக்கக்கூடாது என்று தெளிவாக இருந்தாலும் அவனுக்காக ஒரு வாய்ப்பை வழங்கலாமா?என்று காதல்கொண்ட மனதும் ஒருகரையில் அவனுக்காக வாதாடியது.
இருமனதாக இருக்கிறவளுக்கு அவனோடு மறுபடியும் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்தது.
அப்போ இருந்த ராதா இல்லையே.இப்போ இருக்கிறவ எதையும் பேராடி தனக்கானதைப் பெற்றுக்கொள்ளும் வலிமையுடைய வெண்ணிலாவின் தாய் என்ற பெண்ணாக அல்லவா நிற்கிறேன்.அதனால் துணிந்து இறங்குவோம் மறுபடியும் அதே நரகமாக இருந்தாலுமே எப்படியும் ஏறிமிதித்து வாழ்ந்திடுவேன் என்று தைரியம் வரவும் விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கினாள்.
பெண்களின் வாழ்க்கை ஒன்னும் விளையாட்டு திடல் இல்லையே. இந்தமுறை அல்லன்னா அடுத்தமுறை என்று ட்ரையல் பார்ப்பதற்கு.
அவர்களது வாழ்வானது ஒன்றில் வேர் வீட்டு வளர ஆரம்பிக்கும்போது பிடுங்கி வேறொரு இடத்தில் நடுகிறதாக அல்லவா இருக்கிறது.
அதில் வெந்நீரை ஊற்றி முற்றிலுமாக அழிக்கத்தானே நினைக்கிறார்கள்
இதையெல்லாம் தாண்டி வளர்ந்து நின்றால் எத்தனை கல்லடிகளாக சொற்கள் வந்து விழுகிறது.
அதையெல்லாம் நினைத்து இப்போது கிருஷ்ணனுக்கு ஒரு வாய்ப்பை மனம் உவந்துக் கொடுக்கத் தயரானாள் ராதா.
இந்தக் கிருஷ்ணனின் ராதா!