தெள்ளழகே-25

தெள்ளழகே-25

தெள்ளழகே!-25

கிருஷ்ணன் கண்முழித்துப் பார்த்தான் வெண்ணிலா அவன் மீது காலைப்போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

ஹாப்பா இதுவல்லவோ பாக்கியம். மூணு வருஷத்தை வீணாக்கிட்டியேடா கிருஷ்ணா என்று அவனது மனசாட்சி அவனைக் காறித்துப்பாத குறையாகத் துப்பியது.

மகளது முகத்தை தடவிக்கொடுத்தவன் கன்னத்தில் முத்தம் வைத்து கையைப்பிடித்து தனது உள்ளங்கையில் வைத்துப் பார்த்திருந்தான்.

அங்கோ கிட்சன்ல தாமரை ராதாவை ப்பிடித்து வார்த்தையால் சலித்துக்கொண்டிருந்தார்.

இதுக்குமேல ஒரு ஆம்பளை இன்னும் எப்படி இறங்கிவரணும்னு இருக்க? நானே உன்னைத் தப்பாகத்தான் சொன்னேன். அந்த மோகன்கூட ஓடிப்போயிட்டியோன்னு அழுதேன். அவருதான் ராதாவுக்கும் எனக்கும் ஆயிரம் சண்டைக்கோபங்கள் இருந்தது. ஒருத்தொருக்கொருத்தர் வெறுப்பின் உச்சத்தில் இருந்திருக்கோம். அவளோட முகத்துல முழிக்கவேகூடாதுன்னுக்கூட குழந்தையைக்கூட பார்க்கவராமல் இத்தனைநாளும் பார்க்கமலே இருந்திருக்கேன்.ஆனால் ஒருநாளும் நான் ராதாவை சந்தேகப்பட்டதில்லை.

அவள் தப்பாபோயிடுவான்னு நினைச்சதேயில்லை.மோகன் பொண்ணுக்கேட்டு வந்தபோதுக்கூட நீங்க சம்மதிச்சு அவளுக்குக் கல்யாணம் நடத்திடுவீங்களோன்னும் அவளும் கல்யாணத்துக்கு உங்களால் ஒத்துக்கிடுவான்னும் நினைச்சிருக்கனே தவிற. அவனோடு போயிடுவா அப்படின்னுத் தப்பா நினைச்சதேயில்லை. நீங்க அப்படியெல்லாம் ராதாவைத் தப்பா நினைக்காதிங்க.ஏன்னா அவள் அப்படியெல்லாம் போகக்கூடியவள் இல்லை.என்னைக் காதலிச்சவ கண்டிப்பா இன்னொருத்தனைக் காதலிக்கமாட்டாள்.அது எனக்கு நல்லத்தெரியும் அப்படிஇப்படின்னு என்கிட்டதான சண்டைப்போட்டார்.

நீயென்னடான்னா அந்த மனுஷனுக்கு ஒரு காபிக்கொண்டுப்போய் கொடுக்கிறதுக்கு சிணுங்கிற.இந்த ஆம்பளைங்க இப்படித்தான் நம்மள மாதிரி எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு வைச்சுக்கத் தெரியாது. அவர்தான் செய்ததவறை உணர்ந்து நீதான் அவரு வாழ்க்கைன்னு வந்துட்டாரே அப்புறம் என்ன?”என்றவர் அப்படியே காபி கப்பினை அவளது கையில் எடுத்துக்கொடுத்தார்.

அதை வாங்கியவள் இன்னும் நீ என்னைப் பத்தி நல்லதாகவே நினைக்கிறமாதிரி இல்ல.உன் புத்தி மாறவே மாறாதம்மா என்று கேட்டவள் அங்கு நின்று பேசப்புடிக்காது நகர்ந்துவிட்டாள்.

அவனுக்கு என்மேல் இருக்கும் நம்பிக்கைக்கூட எங்கம்மாவுக்கு என்மேல் இல்லை.என் கஷ்டகாலம் இப்படியொரு அம்மா எனக்கு என்று திட்டிக்கொண்டு உள்ளே வந்தாள்.

அவள் உள்ளே காபி கப்போடு வருவதைப் பார்த்தவனுக்கு முதலிரவு அன்று கையில் பால் டம்ளரோடு வெட்கமும் புன்னகையுமா கலந்து ஒருவித தயக்கத்தோடு அறைக்குள் வந்ததுதான் சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.

அதில் அவனது முகத்தில் சந்தோசம் வந்து ஒட்டிக்க நெடுநாளைக்குப் பின் தனது மனைவி தன்னோடு ஒரே அறையில் இருக்கிறாள் என்று நினைக்கயிலையே அவனுக்கு உடலெல்லாம் பரவசமானது.

காலை நீட்டி நன்றாக சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டவன் காபிக்காக கையை நீட்டினான்.

ஏற்கனவே கடுப்பாகி வந்தவள் அவன் கையை நீட்டவும் கொடுக்காது தான் ஒரு வாய் குடித்தாள்.எனக்கான காபி.உனக்கு ஒன்னும் காபிக்கொண்டு வரலை என்கின்ற ரீதியில் அவனைப் பார்த்தாள்.

அதைப்பார்த்தவன் உதட்டைச் சுழித்து நக்கலாச் சிரித்தவன் சட்டென்று எழுந்து அவளது இடுப்போடு கையைப்போட்டுப் பிடித்தவன் கையிலிருந்தக் காப்பியை பிடிங்கியவன் குடிக்க ஆரம்பித்தான்.

இப்படியெல்லாம் தன் புருஷன் தன்கிட்ட சில்மிஷம் செய்யணும்னு எதிர்பார்த்தக் காலங்கள் ஞாபகத்துக்கு வந்தது.அது எதிர்பார்ப்பாகவேதான் இருந்தது.இப்போதுதான் அது நிறைவேறுகிறது.

ஆனால் ராதாவின் மனது அதை ஏற்றுக்கொள்ளமுடியாது துவண்டு கண்கள் கலங்கிவிட்டது.

“ஏன்டி மயிலு ஒத்தைக்கப்பு காபிக்கு நான் தகுதியில்லயாடி. அதைப்பிடுங்கினதுக்கு அழற.இந்தா நீயே குடிம்மா”என்று அவளிடம் நீட்டினான்.

இந்த ஒத்தைக்கப்பு காப்பிக்கு யாரும் அழலை.இதே மாதிரி நெருக்கமான நாட்களை எத்தனை நாள் எதிர்பார்த்து அது நடக்காமல் போயிருக்குன்னு நினைச்சதும் அழுகை வந்துட்டு.அந்தளவுக்கு நம்மளுடைய காதல்வாழ்க்கை இருந்தது நினைச்சேன்” என்றவளுக்கு அழுகை இன்னும் பொங்கிவரவும் உடைந்து அழுதுவிட்டாள்.

ஒரு கையில் காபியை வைத்துக்குக் கொண்டு மறுகையால் அவளை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தவன் முதுகை வருடிக்கொடுத்தான்.

அவளுக்கும் அவன்தான் ஆறுதலென்று தெரியும்.அதனால் அமைதியாக அப்படியே நின்றிருந்தாள்.

சிறிது நேரத்தில் அப்படியேயிருந்து சமாதானமானவள் அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

அவளால் முடியவில்லை.உடனே நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்த்தாள்.தனது கையில் இருந்தக்காபியை அவளது உதட்டிற்கு நேராகக்கொண்டு சென்றான்.

ராதா பதறினாள்.உடனே சூடெல்லாம் இல்லை.நார்மல் சூட்டுலதான் இருக்கு.குடி என்று அவளுக்குக் குடிக்கக் கொடுத்தான்.

அதற்குமேல் வேண்டாம் என்று மறுக்காது ஒருவாய் குடித்தாள்.மறுவாய் அவன் குடித்தான்.அடுத்து அவளுக்குக் கொடுத்தான்.அவள் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தவாறே அதைக்குடிக்க அடுத்த கப்பினை டேபிளில் வைத்தவன் அவளது காதில் தனது உதட்டால் தேய்த்தான்.

என்ன செய்கிறான்? என்று தனது முகத்தைத் திருப்பினவளின் உதட்டில் அவன் உதடு சரியாக வந்து நின்றது.

என்ன நடக்கப்போகுது என்று அவளது கண்கள் விரிந்து ஆச்சர்யத்தில் பார்க்க கிருஷ்ணனோ காதல்மன்னனாக மாறி அவளது இதழ்களில் தனது உதட்டால் மீதியிருக்கும் வாழ்க்கையைக் காதலோடு வாழ்வதற்கானா முத்தக்கவிதையை எழுதத்தொடங்கினான்.

ஐயோ வேண்டாம் என்று ராதா அவனிடமிருந்து விலகிப்போக எத்தனிக்க அவ்வளவுதான் அவன்விடுவதாக இல்லை.அவளைத் தூக்கி டேபிளில் வைத்து அந்த முத்தத்தைத் தொடர்ந்தான்.

அங்குமிங்கும் அசைந்தவளின் இரு கைகளையும் தூக்க தனது தோள்களில் போட்டவன் பாந்தமாக அவளுக்குள் நின்று இதழ்தேனை சிந்தாது சிதறாது பருகிக்கொண்டிருந்தான்.

முதலில் விலகியவள் இப்போது அமைதியாக அவனது முத்தத்தை ஏற்றுக்கொண்டாள்.

என் புருஷன் என் புருஷன்னு எந்த வாய் மோகனிடம் உரிமைக்கொண்டாடி நிருபித்ததோ அதே உதடுகளையும் வாயையும் அவள் புருஷனே உரிமையாகக் கடித்து அவளை எடுத்துக்கொண்டிருந்தான்.

முத்தம் மொத்தமாக கிருஷ்ணனை ராதவிடத்தில் தலைகீழாகத் தள்ளியிருந்தது.

கொஞ்சமாக இப்போது விலகியவன் அவளது முகத்தைத் தனது நுனிவிரலால் தூக்கிப்பார்த்தான்.

அவனைப் பார்க்காது கண்களை மூடிக்கொண்டவளின் முகமே சந்திரவதனமாக இருந்தது.

அதில் அவழது மூக்குத்தியின் வெளிச்சக்கீற்றானது அவனது வாழ்க்கையின் ஒளியாக மாறியிருந்ததை இப்போதுதான் உணர்ந்தான்.

ராதாவின் நாடியில் முத்தம் வைத்தவன் கழுத்தில் முத்தம் வைப்பதற்காக பயணித்தான்.

அவளுக்கோ கூச்சம் நெட்டித்தள்ள அவனைத் தன்னிடமிருந்துத் தள்ளிவிட்டாள்.அவனோ விலகாது குனிந்து கால்களைப் பிடித்தவன் அவன் கல்யாணத்தன்னைக்குப் போட்டுக்கொடுத்த மெட்டியில் முத்தம் வைத்தன்.

இரு கால்களில் உள்ள மெட்டியிலும் முத்தம் வைத்தான்.கிருஷ்ணன் தன்காலைத் தொடுகிறான் என்றதுமே பதறிப்பார்த்தாள்.

அவனோ பதிலேதும் சொல்லாது மீண்டும் மீண்டும் முத்தம் வைக்க மச்சான் போதும் என்று கீழே குதித்தாள்.

அவளைத் தாங்கிப்பிடிக்க முயன்று அவளோடு தரையில் உருண்டுவிட்டான்.

நீ கொஞ்சம் வெயிட்டுப்போட்டுட்ட மயிலு. பாரு என்னால உன் பாரத்தைத் தாங்கமுடியாது வண்டிக்குடை சாஞ்சமாதிரி சாஞ்சிட்டேன் எனக் காதில் ரகசியம் பேசினான்.

அதைக்கேட்டதும் குலுக்கிச்சிரித்தவள் அவனது மீசையைப் பார்த்தாள்.

என்ன மயிலு மீசையைமட்டும் பார்கிற.அந்த மீசை வைச்ச மச்சானையும் கொஞ்சம் பார்க்கிறது என்று முகத்தைத் தன்னருகில் கொண்டுவந்தான்.

அதில் படபடப்பாக உணர்ந்தவள் முன்புபோன்று அவனிடம் இயல்பாக இருக்க முடியவில்லை.அதை கிருஷ்ணனும் உணர்ந்திருந்தான்.

அவளது நாடியில் ஒற்றைக் கையில் தூக்கிப்பிடித்தவன் ”உன் புருஷன்தான் நான். நீ காதலித்துக் கல்யாணம் பண்ணின அதே கிருஷ்ணன்தான்.என்ன சின்னதாக மாற்றம் நீ என் பொண்டாட்டியா இருந்த.நான் இப்போ ராதாவுடைய புருஷன் கிருஷ்ணனாக மாறியிருக்கேன்.புரியுதா இந்த ராதாவின் கிருஷ்ணனாக இருக்கேன்.எதுக்கு இந்தத் தயக்கம் பயமெல்லாம்?”என்று மென்மையாக சொன்னான்.

“தயக்கம் பயமெல்லாம் உன்னைப் பார்த்து இல்லை.மறுபடியும் பழையமாதிரி வாழ்க்கை வந்துட்டுன்னா நான் என்னபண்ணுவேன்னு என்னையும் அறியாமல் என் மனசு தவிக்குது.அதோட வெளிப்பாடுதான்”என்று உண்மையை வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள்.

அவளது கண்களையே பார்த்திருந்தவன் ரொம்ப “காயப்பட்டுட்டல்ல என்னால?”என்று வேதனைத்தோய்ந்த குரலில் கேட்டான்.

ம்ம்ம் என்று ஒற்றை வார்த்தையில் தனது மனதைச் சொல்லிவிட்டாள்.

அவ்வளவுதான் தன் நெஞ்சோடு அவளை இறுக்கமாக காற்றும் அவர்களுக்கு இடையில் நுழைந்துவிடக்கூடாது என்று கட்டிப்பிடித்து அவளைத் தனக்குப் பொத்திப் பொதிந்து வைத்துக்கொண்டான்.

அவளுக்கும் அந்த மூன்றாண்டுக்கால தவிப்பிற்கான நியாயம் அவன்செய்யவேண்டும் என்றிருந்தது நிறைவேறியது போன்று இருந்ததால் அவனோடு ஒட்டிக்கொண்டாள்.

அவள் வாசம் அவனோடும் அவன் வாசம் அவளோடும் ஒட்டிக்கொள்ளுமளவுக்கு அந்த தழுவல் அத்தனைக் காதலோடு இருந்தது.

அவளுக்கு மூச்சுமுட்டுவது தெரிந்தபின்புதான் அந்த அணைப்பைத் தளர்த்தினான்.

அவனது கைகளுக்குள்ளே அடங்கியிருந்தவளின முகமெங்கும் பிடித்து முத்தம் வைத்தான்.

இருவரது பிரிவுக்குப்பின்னும் அடுத்த ஆண்களையோ பெண்களையோ இருவரும் பார்த்ததும் இல்லை பார்த்து ரசித்ததும் இல்லை.

கல்யாணத்துக்காகப் பொண்ணுப் பார்த்திருந்தாலும் அவர்களை தங்களது இணையாகக் கற்பனைக்கூட செய்யதில்லை.

அந்த பந்தம் அடிமனதில் ஆழமா வேரூன்றி இருந்ததாலும் அவர்களது காதல் இன்னும் அழியாது இருந்ததாலும் அவர்களின் வாழ்க்கையையும் காதலையும் மீட்டுக்கொண்டனர்.

கிருஷ்ணனுக்கு அதற்குமேல் எப்படித் தன் காதலைப் வெளிப்படுத்த என்று தெரியாமல் ராதாவின் கன்னங்களை அழுத்திக்கடித்தவன் அப்படியே அவளின் மேல் படர்ந்தவன் இப்போது உதட்டோடு உதட்டைக்கவ்விக்கொண்டான்.

அவளும் அவனை எதிர்க்காது முத்தத்தை ஏற்றுக்கொண்டாள்.

கிருஷ்ணனின் தலையைப்பிடித்துக்கொண்டாள். அவனுக்கும் புரிந்திருந்தது.அவளது ஏக்கம் ஆசையெல்லாம் என்னோடுமட்டும்தான் முகிழ்தெழுகிறது. இதுவரைக்கும் இனி அவள் வாழ்க்கையில் சந்தோசமே இல்லையென்று நினைத்து மனதைக் கல்லாக்கிக் கொண்டவளுக்கு மீண்டும் என்னை ஏற்றுக்கொள்ளவே ஒருவருடமாகியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இது என்று நன்கு புரிந்துக்கொண்டான்.

தன் தலையில் இருந்த அவளது கைகளை விலக்கியவன் உதட்டிலிருந்து விலகி கழுத்தில் அவளது வாசம் நுகர்ந்தான்.

அதில் மயிர்கூச்செரிய நெகிழ்ந்த ராதா மூச்சுவாங்க அவனது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

அந்த வேகத்தடையைத் தடுத்து அவன் மீறிச்சென்று வேகத்தடையில் மோதி விழுந்து உந்திச்சுழி பள்ளத்தில் மொத்தமாக வீழ்ந்துப்போனான்.

அவளது தேகத்தில் அவன்அறியாதது ஒன்றுமில்லைதான்.ஆனால் இப்போது அவளை அறிந்துக்கொண்டானே அதனால் அந்தக் காதலும் காமமும் வேகமும் புதியதாகத் தோன்றியதுபோன்றே உணர்ந்தான்.

காலையில் குளித்துவிட்டுத்தானே சமையலறைக்கே சென்றாள். அதனால் அவள்மேல் வந்த சோப்பின் வாசமும். சமையலறையில் இருந்தபோது வேர்த்த வேர்வையும் உடலில் அங்காங்கே அவனுக்கு மோகப்பித்தைக் கூட்டிக்கொண்டே போனது.

மெது மெதுவாக ஆடைவிலக்கத்தை அவனே அமுல்படுத்திக்கொள்ள விழைந்தான்.

ஏதேச்சையாக அவள் தடுக்க அவன் தடையை உடைக்க என்று சிறிது நேரத்திற்குப்பின் அப்படியே அவளது மொத்தமாக கண்களால் அளந்துக்கொண்டிருந்தான்.

அவளுக்கோ வெட்கம்வந்து சாமரம் வீச உருண்டுப்படுத்தவளின் முதுகில் தனது வெப்ப உதடுகளால் முத்தமிட்டு அவளின் எல்லாப்பக்கமும் எனக்கே எனக்கானது என்று சொல்லாமல் முத்திரைப்போட்டான்.

ராதாவும் கிருஷ்ணனும் இப்போது ராதாகிருஷ்ணனாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

அவளுக்குள் அவன் ஊடுருவிப்பாய அவள் அவனை தனக்குள் மொத்தமாக அருவியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினாள்.

அவளை முத்தாத்தால் முற்றுகையிட்டான்.காதல் போராவாளால் அடிமைப் படுத்தி அவளை ஜெயித்துக் கொண்டிருந்தான்.

அவளோ தனது ஒற்றை முத்தத்தில் மொத்தமாக தனது காலுக்கடியில் அடிமையாக்கிவிட்டாள்.

அவளது பாதங்களில் தனது முத்தச்சரத்தை மொத்தமாகக்கொட்டி அவளும் நானும் ஒன்றுதான் நீபெருசு தான் பெருசு என்ற ஆணவமே இல்லாதுஅதை மொத்தமாக விட்டொழித்து அவள் காதலுக்கு அடிமைசாசனம் உதடுகளாலும் பத்துவிரல்களாலும் எழுதிக்கொடுத்தவிட்டான்.

இனி இந்தக் கிருஷ்ணன் ஆயுள் முழுவதும் ராதாவின் அடிமை!காதல் அடிமை!காதலியின் அடிமை!