தெள்ளழகே-23

தெள்ளழகே!-23
கிருஷ்ணன் மெதுவாக ஒரு வாரம் கழித்து ராதவை பார்ப்பதற்காக ஆபிஸ் வாசலில் காத்திருந்தான்.
ராதா அவனை கண்டதும் நேராக வண்டிய அவனது வண்டிக்கு முன்பாகக்கொண்டுபோய் விட்டவள் கீழ இறங்கி கோபத்தில் அவனது சட்டையைப் பிடித்து இழுத்து பளாரென்று அறைந்துவிட்டாள்.
அத்தனை பேரின் முன்பும் அவள் அவனை அறைந்தது அவனுக்கு கேவலமாக இருந்தது.அவளைத் திரும்ப அடிக்க அவனால் முடியும் என்றாலும் இப்பொழுது அதற்கு மனம் வரவில்லை
அவளது கோபம் நியாயமானதுதான் என்று அமைதியாக நின்றிருந்தாள்.நீ என் வாழ்க்கையில் தான் விளையாடிட்டன்னு உன்கிட்ட இருந்து பிரிந்து வந்து தனியா வாழ்ந்துட்டு இருக்கேன். இப்பவும் என்ன நிம்மதியாய் இருக்க விடமாட்டியா? எதுக்கு நீ மோகன் கையை உடைச்ச? நீ தான் அவனை அடிச்சிருக்கன்னு எனக்கு நல்லாத்தெரியும்.அவன் உன் பேர்ல கேஸ் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டான்.நீ செஞ்சதைக் காட்டிக் கொடுக்கவும் இல்லை. ஆனால் எனக்கு தெரியும் நீதான் அதை செய்திருப்பன்னு. அவங்க அம்மா என்னால்தான் இவ்ளோ பிரச்சனை வருதுன்னு சொல்லிட்டு என்னை அசிங்கமா திட்டுறாங்க.இதுக்கு மேல நான் நிம்மதியாக இருக்கறது பிடிக்கலைன்னா பேசாம நான் செத்துரட்டுமா? என்று சத்தமாக பேசியவள் தாங்கிக்க முடியாது தனது இரு கைகளாலும் தனக்கும் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
என்ன மயிலு இப்படி எல்லாம் பேசுற?நீ அடிச்சதைக்கூட நான் தாங்கிக்கிட்டேன். ஒன்னுமே சொல்லமுடியல. ஆனால் இப்படி நீ அழுதன்ன என்னாலத் தாங்கிக்க முடியல என்றவன் அவளது முகத்தில் இருந்துக் கையை எடுத்துவிட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“உன்னால் தான் எனக்கு இப்போ தூக்கமே இல்லாம போயிருச்சு. பாப்பாக்கும் தூங்க முடிய மாட்டேங்குது அடுத்து நீ என்ன பண்ணுவியோ என்று நினைத்து நினைத்து தூக்கம் வரமாட்டேங்குது. இந்த மூணு வருஷத்துலக்கூட உன் கிட்ட இருந்து விலகி வந்துட்டோம். நான் உண்டு என் பொண்ணு ஒன்னு வாழ்ந்துட்டு இருக்கோம் .அந்த நிம்மதியில் மண்ணள்ளி போட்டுட்ட. இப்போ ஒரு வருஷமா இந்த பாடாய் படுத்திட்டிருக்க. எதுக்கு என்ன இப்படி சாகடிக்கிற? அதுதான் உன் வாழ்க்கைகுள்ள நான் வரமாட்டேன் முடிவா சொல்லிட்டேனே!என் வாழ்க்கையிலிருத்துப் போய் தொலையேன். இல்ல எங்கயாவது போய் செத்து தொலையேன்” என்று சத்தம் போட்டாள்.
அதற்குமேல் முடியாது அவனிடமிருந்து திமிறி விலகியவள்”இந்த கைகள்தானே அன்னைக்கு வயித்துலக்குழந்தை இருக்குன்னுக்கூட பார்க்காமல் அடிச்சுது.அப்போ எங்கேப்போச்சு உன் காதலும் மயிரும்.போங்கடா நீங்களும் உங்க அக்கறை டேஷூங்களும்.எனக்கு எவனும் வேண்டாம்.நானும் என் குழந்தையும் எந்த ஆம்பளை நாய்களும் இல்லாமல் வாழ்ந்திடுவோம் எவனுங்களும் எங்களுக்கு வேண்டாம்”என்று அழுதவாறே ஆபிஸிற்குள் சென்றுவிட்டாள்.
அவள் பேசியதையெல்லாம் கேட்டவன் அவளது கையைப்பிடித்து வைத்திருக்கத்தான் முயன்றான்.ஆனாலும் அவள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு போய்விட்டாள்.
அவ்வளவுதான் அடுத்து என்ன செய்யவென்று யோசித்தவன் தனது காரை எடுத்துக்கொண்டு ஊருக்கு போய்விட்டான்.
ராதாவோ சரண்யாவிடம் நடந்ததைச் சொல்லி புலம்பிவிட்டாள்.அடுத்தடுத்த நாட்கள் கிருஷ்ணன் வரவில்லை என்றதும் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தாள்.
ஆனால் நாட்கள் செல்லச்செல்ல கிருஷ்ணன் வந்திருக்கானா? வந்திருக்கானா? என்று அவன் நிற்க்கும் இடமெல்லாம் ஒரு நொடி திரும்பி பார்த்துவிட்டு தான் ஆபிஸிற்குள்ளே நுழைவாள் அவளது எதிர்பார்ப்பை அவளாலே கட்டுப்படுத்த முடியவில்லை.
ஒரு மாதம் இரண்டு மாதம் முடிந்தும் இன்னும் அவன் வரவில்லை. ஒருவேளை அவன் மனம்மாறிட்டானோ என்றும் யோசித்தாள்.
அவன் திருந்திட்டான்னு சொன்னதெல்லாம் பொய்யோ? எனக்காக காத்திருக்க அவன் விரும்பவில்லையா? என்று அவனுக்காகவே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
குழந்தையும் பார்க்க வரவில்லை. கொஞ்சமே கொஞ்சம் திரும்பி வந்து திருத்திட்டேன்னான்.அதே காதலை மறுபடியும் காண்பிக்கிறானே என்று ஒரு சின்ன நம்பிக்கை அவளை அறியாமல் மனதிற்குள்ளே விதையாக விழுந்திருந்ததுபோல.
அது இப்பொழுது அவனைக் காணவில்லை என்றதும் அந்த ஏக்கம் கோபம் எல்லாம் மறுபடியும் அவளை மூக்கமாக மாற்றி இருந்தது. யாரோடும் பேசாது தனது இதயத்தை மீண்டும் இறுக்கிவைக்கத் தொடங்கினாள்.
அப்பொழுதுதான் ஒரு நாள் மாலை ஆபீஸ் விட்டு வெளியே வரும் பொழுது கிருஷ்ணனின் கார் நின்றிருந்தது.
இவன் திரும்பவும் வந்துட்டானா? என்று சின்னதாக ஒரு மின்னல் மனதிற்குள் வெட்டவும் காருக்கு அருகில்போய் எட்டிப்பார்த்தாள்.
அங்கே உள்ளே யாருமேயில்லை.அதனால் யோசனையோடு காரை சுத்திப்பார்த்தாள்.
அவ்வளவுதான் பின்னாடியிருந்து யாரோ அவளைக் காருக்குள்ளே தள்ளி கதவைமூடியதும் கிருஷ்ணன்தான் தன்னை மறுபடியும் தூக்கிட்டுப்போறான் போல என்று தைரியமாக இருந்தாள்.
ஆனால் ஆள் யாரென்று தெரிந்ததும் அதிர்ந்தவள் அவனை அடிக்க ஆரம்பித்தாள்.
இரவாகியும் ராதாவைக் காணவில்லை என்றதும் தாமரை பயந்து நல்லத்தம்பிக்கு அழைத்து “ராதா இன்னும் வீட்டுக்கு வரலையே. உங்கக்கிட்ட ஏதாவது சொன்னாளா?”என்று கேட்டார்.
இல்லையே.கொஞ்சநேரம் பார்ப்போம் வந்திடுவா என்று போனை வைத்தவருக்கும் கொஞ்சம் பயம்தான். ராதாவின் ஆபிஸிக்கு அழைத்துக்கேட்டார். அவள் சாயங்கலாமே கிளம்பிவிடாடாளே என்று பதில்தான் வந்தது.
சரண்யாவுக்கு அழைத்துக்கேட்டனர். அவள் அன்று ஆபிஸிற்கு வரவேயில்லை என்று தெரிந்தது.
தாமரை உடனே ராதாவைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள்.
“இதுக்குத்தான் சொன்னேன். அவளை வேலைக்கு விடாதிங்க கிருஷ்ணன்கூடவே பிடிச்சு அனுப்பிடுங்கன்னு. இப்போ பாரு அந்த மோகன்கூடவே ஓடிப்போயிட்டாள்” என்று சத்தமாக தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அதைக்கேட்ட நல்லத்தம்பி தாமரை அடித்துவிட்டார் “வாய மூடு என்னச்சு என்ன பிரச்சனை என்று எதுவுமே தெரியாமல் நீ பாட்டுக்கு மோகன்கூட ஓடிப் போயிட்டாள்னு சொல்லுற. இது தப்பில்லையா? நம்ம பிள்ளையை நம்மளே கேவலப்படுத்தின மாதிரி இருக்கு. அப்படியேபோயிருந்தாலும் அது வெளியே தெரியாம மூடிமறைக்கத்தான் பார்க்கணும். வாயை மூடிட்டு இரு” பக்கத்தில் பாவம்போலமுழித்துக் கொண்டிருந்த வெண்ணிலவை பார்த்ததும் அமைதியாகிவிட்டார்.
உடனே மணிகண்டனையும் செல்வத்தையும் அழைத்துக்கொண்டு ராதாவைத் தேடிப்போனார்கள்.அவளது வண்டி ஆபிஸிற்கு முன்பு சரிந்துக்கிடந்ததைக் கண்டுப்பிடித்தனர்.
வண்டியில்தான் பேக்கு சாவி எல்லாம் இருக்கென்றால் அவளை எங்கே?அப்படியே போகணும்னா பேக்கோடுதானே போகணும். பேக்கில்தான் போன் எல்லாம் இருக்கு என்று பார்த்துவிட்டு ஒருவேளை யாராவது கடத்தியிருப்பார்களா?என்று சந்தேகப்பட்டனர்.
உடனே கிருஷ்ணனுக்கு அழைத்து அவன் ஒருவேளை தூக்கிட்டு போயிருக்கலாமா என்று விசாரித்தனர்.
அவன் ஏற்கனவே காரை அங்கே ஒரு செட்டில் நிறுத்திவிட்டு போயிருந்ததால் பஸ்ஸில் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னைக்கு வந்து விடுவதாகவும் சொன்னான்.
அவனிடம் ராதா விஷயத்தையும் அவள் காணாமல் போனதை சொன்னார்கள்.அதைக் கேட்டவனின் மண்டைக்குள் ஆயிரம் விஷயங்க ஓடியது. ஆனாலும் ராதாவின் மீது நம்பிக்கை வைத்து அடுத்த ரெண்டு மணி நேரத்தில் ராதாவின் வீட்டிற்கு வந்துநின்றான்.
“என் காரை யாரோ திருடிட்டுப் போயிருக்காங்க.காரைக் காணலை.நேத்துவரைக்கும் அங்கதான் இருந்திருக்கு. இன்னைக்குக் காணவில்லை.நான் வந்துதான் பார்க்கிறேன். ஒருவேளை ராதாவையும் அந்தக்காரிலயே கடத்தியிருக்கலாமோ? அப்போ காரையும் ராதாவையும் பத்தி நல்லத் தெரிஞ்ச யாரோதான் இதை செய்திருக்கணும்” என்று உடனே போலீஸில் புகார் கொடுத்தான்.
அவர்கள் உடனே ஆபிஸிற்கு முன்னாடி உள்ள கடைகளிலும் ஆபிஸில் மாட்டியிருக்கும் கேமராக்களிலும் என்ன நடந்தது என்று பார்த்தனர்.
அதில் கிருஷ்ணனின் கார் அங்கு வந்த நிற்பதையும் சிறிது நேரத்தில் ராதா வந்து அது யார் என்று சுற்றி பார்ப்பதையும் அதன் பிறகு ராதாவை கடத்திக் கொண்டு அந்தக் கார் செல்வதையும் பார்த்தார்கள்.
யாரோ வேண்டுமென்றே திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.ஆனால் வந்தது யார் என்று தெரியவில்லை முகத்தில் துணி கட்டிக் கொண்டிருப்பதால் அடையாளம் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
ஆனால் ஆளின் அடையாளங்களை வைத்து கிருஷ்ணன் ஓரளவுக்கு அது யாராக இருக்குமென்று யூகித்துவிட்டான்.
நேராக மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு மோகனின் வீட்டிற்குதான் போய் நின்றான்
அவனது வீட்டு அட்ரஸ் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமாக ஒன்றும் இருக்கவில்லை. ஆபிஸிலிருந்துக் கண்டுபிடித்து விட்டான். அங்க போய்நின்றதும் ருக்குமணி பயந்துவிட்டார்.
கிருஷ்ணன் அமைதியாக “உன் மகனுக்கு போன் பண்ணி என் பொண்டாட்டியை எங்க வச்சிருக்கான்னு கேட்டு சொல்லு. இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல அவன் இருக்க இடத்தைச் சொல்லலைன்னா உன் கழுத்தைத் திருக்கிக்கொன்றுபோட எனக்கு ரொம்ப நேரமகாது.உன் மகனும் கையில கிடைச்சானா அவன் உயிரோட இருக்க மாட்டான் சொல்லி வை” என்று அங்கே உட்கார்ந்திருந்தான்.
அப்போதுதான் ராதாவின் குடும்பத்தாருக்கு ராதாவினை மோகன் கடத்தியிருக்கிறான் என்பதே தெரிய வந்தது. அவ்வளவுதான் ருக்குமணி சுற்றி உட்கார்ந்து கொண்டனர். போலீசில் எந்த தகவலும் சொல்லாது இவர்களாகவே ருக்குமணியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.
அவர்கள் எல்லோரும் தனது வீட்டை சுற்றி வளைத்ததை கண்டதும் ருக்குமணி மெதுவாக மோகனுக்கு போன் பண்ணினார்.
மோகன் போனை எடுத்ததும் அதை வாங்கிய கிருஷ்ணன் “என் பொண்டாட்டியை எங்க மோகன் வச்சிருக்க?உன்கிட்டயிருந்து பதில் வந்தா உங்க அம்மா தப்புவாங்க இல்லையா நீ வாங்குவதை விட டபுள் அடி உங்க அம்மா வாங்குவாங்க”என்று நேரிடையாகவே எச்சரித்தான்.
இவ்வளவு சீக்கிரமாக கிருஷ்ணன் மோகனைக் கண்டுபிடிப்பான் என்று அவனே நினைக்கவே இல்லை
உடனே கிருஷ்ணனிடம் “நீ என் கையை உடைத்தல்ல அதற்கு பதிலாக உன் பொண்டாட்டியவே கடத்திட்டேன் இதுக்கு பதிலா. உன் ரெண்டு காலையும் உடைத்து உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தாலாதான் என் மனசு ஆறும்.நான் இருக்கிற இடத்தை சொல்லுறேன். நீ தனியாகவந்து என்கூட மோதி உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போ” என்று சவால் விடுத்தான்.
கிருஷ்ணனை தூண்டிவிடுவது போல அவனு பேசினான்ஆனால் கிருஷ்ணனுக்கு அவனைப் பத்தி நல்லத்தெரியும்.அதானால் யோசித்தான்”இவன் நம்மளை வேற ஏதோ டிராக்கில் மாட்டிவிடப் பாக்குறான் “எனக் கண்டுப்பிடித்துவிட்டான்.
ருக்குமணி மாமனார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மோகன் சொன்ன இடத்திற்கு தனியாகவே சென்றான்.
அது வேற யாரு வீடும் இல்லை அருண் வீடுதான் அது.ராதாவை அடைத்து வைத்திருந்தான். அங்கு சென்ற கிருஷ்ணன் கண்ணில் பட்ட அருணையும் அவன் மனைவி சுமியை அடித்தான்.
அதே கோபத்தில் ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்து மோகன் இருந்த அறைக்குள் நுழைந்தவன் கையில் இருந்தக் கட்டையால் அவனை ஒரு அடிதான் அடித்தான். மோகன் மயங்கி விழுந்துவிட்டான்.
அதைப் பார்த்த ராதா பதறியவள் அவனுக்கு உயிர் இருக்கா என்று ஓடிவந்துப் பார்த்தாள்.
உடனே கிருஷ்ணனிடம் அறிவிருக்கா என்ன பண்றீங்க? என்று திட்டிக்கொண்டே கிருஷ்ணன் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அவனோ “ஏன்டி என்னைத் திட்டுற.அவன் உன்ன தூக்கிட்டு வந்திருக்கிறான் அவனுக்காக இரக்கப்படாதே. என்னைக்கு ஒருத்தன் பழிவாங்க பெண்களை கடத்துறானோ அப்பவே மோசமானவன்னு அர்த்தம் வந்திடும்.அவனுக்கு இரக்கமே பார்க்கக் கூடாது என்று ராதாவிடம் சத்தம் போட்டான்.
அவளை இழுத்துக்கொண்டு வீடு வந்துச்சேர்ந்தாரன்
ராதா சத்தியமாக இதை எதிர்பார்க்கவேயில்லை. இவ்வளவு ஆக்ரோஷமாக கிருஷ்ணன் வருவான் என்று நினைக்கவில்லை.
இப்பொழுது மோகன், மீண்டுமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ருக்மணி கையால் பளார் பளாரென்று அடிவாங்கிக் கொண்டிருந்தான்.