தெள்ளழகே-21

தெள்ளழகே-21

தெள்ளழகே!-21

கிருஷ்ணன் மோகனிடம் “என்னடா மோகன்?என் பொண்டாட்டி உன்கூட சிரிச்சிட்டே பேசிட்டு வந்தாளே என்ன அவக்கிட்ட கடலைப்போட்டு சிரிக்கவைச்சா நான் அவளை அடிப்பேன் சண்டைப்போடுவேன்னு ப்ளான்தான பண்ணின?அது நடக்காதுடோய்.என் பொண்டாட்டியைப் பத்தி எனக்குத் தெரியும். நீ என்னதான் பேசி சிரிக்க வச்சாலும், நீ என்னதான் பக்கத்துல நின்னாலும் அவள் மனசு எனக்குமட்டும்தான். உன்னோட வந்துவிடமாட்டாள்.அவளுடை மனசு மாறும்னு எனக்கு தெரியும்.உனக்கு மதுரையில் என் கல்குவாரியில போட்டு வெளுத்துவிட்டது பத்தாதாடா திரும்பவும் வாங்க போறியா” என்று கிருஷ்ணன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மீசைய முறுக்கிக்கொண்டே அவனிடம் தெனாவட்டாக பேசினான்.

மோகனோ நக்கலாகச் சிரித்தவாறே“என்ன மதுரை மைனரே நீங்களே சென்னைக்கு ஒண்ட வந்திருக்கீங்க.உங்களை மதுரைல வைச்சித் திருப்பி அடிக்கமுடியலதான்.அதுக்காக இங்கவைச்சும் திருப்பி அடிக்காமலா இருப்பேன்? என் மேல கைவைச்சா வைச்சக் கையை உடைச்சிடுவேன்டா. உன் ஊர்ல நீ ராஜானா என் இடத்துல நான் ராஜாடா.என் மேல கையை வச்சுப் பாரு அப்போதெரியும் நான் யாருன்னு?” என்று தனது காலரைத் தூக்கிவிட்டவன் அப்படியே கெத்தாக கிருஷ்ணன் முன்பாக நின்றிருந்தான்.

“ஹாஹாஹா அடிவாங்கும்போது வலிக்குதுன்னு கதறினவன்தானே நீ. அப்போவே உன் ஆம்பளைத்தனத்தை பார்த்துட்டேன். நீயெல்லாம் என் ராதா பின்னாடி சுத்துற பாரு. உன்னை கண்டம்துண்டமாக வெட்டிப்போட்டுடுவேன் ஜாக்கிரதை. எந்த ஊராக இருந்தாலும் சிங்கம் சிங்கமாகத்தான்டா இருக்கும்.நரியாக மாறாது”

“வாரேவா பயங்கரமா டயலாக்கெல்லாம் பேசுற. அன்னைக்கு நீ அடிக்கும்போது நான் நினைச்ச ஒரே விசயம் ராதா மட்டும்தான். நல்லவேளை இப்படியொரு மனுஷன்கிட்ட இருந்து ராதா தப்பிச்சிருக்காளேன்னுதான். போயும் போயும் ராதாவுக்கு நீ எப்படி புருஷனாக வந்த. மயிலப்புடிச்சு குரங்குக்கையிலக் குடுத்திருக்காங்கன்னு நினைச்சேன். அதனால் மட்டும்தான் உன்னை திருப்பி அடிக்காமல் இருந்தேன். இல்லைன்னா அங்கயே உன்னை அடிச்சு தூக்கி போட எனக்கு ரொம்ப நேரம் ஆகிருக்காது மிஸ்டர் கேடிக்கிருஷ்ணன்ன. நீங்க ராதாவோட வெத்துவேட்டாகச் சுத்தும் நாசமா போன கிருஷ்ணன். அதனால் மரியாதையா இனி இங்க இருந்து உங்க நேரத்தை வீணாக்காமல் மதுரைக்கு ஓடிப்போங்க.இல்லை உங்கக் கையயும் காலையும் எடுத்து ஊருக்குப் பேக் பண்ணிடுவேன் .நான் ராதாவுக்கு மட்டும்தான் சாப்ட் பெர்சன்.உனக்கெல்லாம் இல்லை. அதுதான் மொத்தமா உனக்கு விவகாரத்தை கொடுத்து உன்னை வேண்டாம் ஒதுக்கித்தானே வைச்சிருக்கா. இந்த ஆறு ஏழு மாசமாவும் உன்னை சீண்டக்கூட செய்யலை. அங்க நின்னு ராதா பார்த்திட்டிருக்கா மரியாதையை ஓடிப் போயிரு இல்ல நான் யாருன்னு சென்னையில வைச்சு உனக்கு காண்பிக்க வேண்டியது இருக்கும்” என்று மோகனும் கிருஷ்ணனுக்கு சவால் விட்டான்.

“பாருடா புள்ளபூச்சின்னு நினைச்சேன்.இப்போ இங்க வந்து என்கிட்ட தைரியமாக எதிர்த்து நிக்கிற.பரவாயில்லை நீயும் ஆம்பளைன்னு நிருபிக்க பார்க்கிற.என் மேல மட்டும் கைவைச்சுப்பாரு மதுரையில மட்டும் நான் மைனரில்ல. இங்கேயும் நான் மைனருதான்னு காண்பிச்சிட்டுத்தான் போவேன். அப்புறம் இந்த வாய்ஸ் ஏற்றி இறக்கி பேசுறது இந்த பந்தா காண்பிக்கிறது, அவள் முன்னாடி என்ன சீண்டி பார்த்து நான் உன்ன அடிக்கணும் அதனால என் மேல அவளுக்கு வெறுப்பு வர வைக்கிறது, இப்படியான இந்த கிரிமினல் புத்தி எல்லாம் இங்க இருக்க உனக்கு தான் வரும்னு இல்லை. நாங்க எல்லாம் அப்படி இல்லன்னு கற்பனை பண்ணாத. உன்னைப் போடணும்னு நெனச்சாலே தலையைச் சீவிட்டு போயிட்டே இருப்போம். என்ன வந்தாலும் பாத்துக்கலாம்னு போயிடுவோம் புரியுதா? நான் அமைதியாக இறங்கி போறது என் பொண்டாட்டிக்காக மட்டும்தான். நான் காத்திருக்கிறது என் பொண்டாட்டி என் கூட வாழ வருவா அப்படிங்கற காரணத்துனால மட்டும்தான். நீ எல்லாம் எனக்கு தாசு மாதிரி தூக்கி போட்டு மிதிக்க ரொம்ப நேரமாகாது போடா டேய்” என்று சிரித்தாவறே கிருஷ்ணன் சொன்னான்.

“பாருடா நம்ம கிரிமினல் மூளையெல்லாம் உனக்கும் புரிஞ்சிருக்கே. அன்னைக்கு உன்கிட்ட அடி வாங்கிட்டு ஓடிவந்தது ராதா ஓட பேரு வெளிய கெட்டுப்போயிடக் கூடாது, நம்ம சண்டை போட்டோம் அப்படிங்கறது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மட்டும்தான். இப்ப நான் நிக்கிறது ராதா உன்ன மொத்தமா வெறுக்கிறாள் உன்னை திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்கற அப்படிங்கற காரணத்தினால் மட்டும்தான் ஏன்னா எனக்கு ஒரு வாய்ப்பு இருக்குல. அந்த வாய்ப்பை நான் சரியா பயன்படுத்தணும்ல அதற்காகத்தான் பொறுமையா போறேன்.அவள் எனக்கு பொக்கிஷம் மாதிரி உனக்கு சாதாரண பொண்டாட்டி ஆனா எனக்கு அப்படி இல்ல என் காதல் தேவதை”

“அட மானங்கெட்டவனே என் பொண்டாட்டிய அடையறதுக்கு நான் என்ன பண்ணனுமோ அதை செய்வேன்.ஆனா அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி அலையுறியே உனக்கு வெக்கமா இல்லையா? மானங்கெட்டவனே! உன்னை இப்பவே தூக்கிப்போட்டு மிதிக்க ரொம்ப நேரம் ஆகாது.ராதா அங்க நிக்கிறாள். அதுவும் நம்மைப் பார்த்துட்டு நிற்கிறாள். நான் எப்போடா உன் மேல கை வைப்பேன் என் மேல மொத்தமா வெறுப்பை உமிழ்றதுக்கு காத்துட்டு இருக்காள். நீயும் அதைத்தான் செக் பண்ணிட்டு இருக்கான்னு தெரியும். மோகன் அவமட்டும் போகட்டும் உன் ஒருகைய உடச்சு மறு கையில் தந்திடுறேன்” என்று சிரித்துக் கொண்டே கிருஷ்ணன் பேசினான்.

அதைக்கேட்டு மோகன் ஹாஹாஹா என்று சத்தமாகச் சிரித்துக் கிருஷ்ணனை கோபப்டுத்தினான்.ஆனால் கிருஷ்ணன் தனது கோபத்தை வெளிக்காட்டாமல் அப்படியே சிரித்துக்கொண்டே மோகனின் தோளில் கையைப்போட்டு தன்பக்கமாக இழுத்துக் கட்டிக்கொண்டான்.

அதைப்பார்த்த ராதாவோ சந்தேகத்தோடு அவர்களை உற்றுக் கவனித்தாள்.

மோகனும் ராதாவும் நார்மலா தான் பேசிக் கொண்டு வந்தார்கள் மோகன் ராதாவிடம் வேண்டுமென்றே நெருங்கி வந்து “ரொம்ப நன்றி ராதா நான் வேற பிரான்சுக்கு போன பிறகுதான் ஓரளவு மனது நிம்மதியா இருக்கு. நீயும் உன் ஹஸ்பண்டும் எந்த அளவுக்கு சேரனும் நினைக்கிறேனோ அந்த அளவுக்கு உன்னுடைய வாழ்க்கையும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் சந்தோசமாஇரு. அவரை பிடித்துப்போய் சேர்ந்துவாழ்ந்தாலும் சரி, பிடிக்காமல் இருந்தாலும்சரி உன்னுடைய வாழ்க்கை நல்லபடியாக வாழு அவ்வளவுதான். நான்உன்னுடைய இடத்துக்கு திரும்ப வந்து பிரச்சைனைக் கொடுக்க மாட்டேன்” என்று பேசியவாறு அவளுக்கு வாழ்த்து சொல்லியதால்தான் அவள் சிரித்துக் கொண்டு வந்தாள்.

அவளுக்கு மோகன் தனது மனதை மாற்றிக் கொண்டதில் ரொம்ப சந்தோஷம். நம்மளால் ஒருத்தன் திருமணத்தை வெறுத்து வேண்டாம் என்று இருந்தால் அது சரி இல்லையே! அந்த சாபம் நமக்கு தானே வரும்னநம்மை மறந்து வேறொருத்தியைத் திருமணம் செய்து அவன் வாழ்க்கையை வாழ்ந்தால் அது நமக்கு நல்லது தானே! என்று நினைத்துதான் மோகனோடு சகஜமாக பேசிக்கொண்டு வந்தாள்.

ஆனால் மோகனின் உள் மனதிலோ எப்படியாவது கிருஷ்ணனை கொஞ்சமாவது நம்மை அடித்ததற்கு பழி வாங்க வேண்டும் என்ற ஒரு குரூர எண்ணம் இருந்தது.

கிருஷ்ணன் அவனைக் கல்குவாரியில் வைத்து அடித்து அனுப்பியதில் மனவேதனை அதிகமாக தான் இருந்தது.அந்தக் கிருஷ்ணன்கிட்ட அடிவாங்கிட்டு வந்துட்டனே.நான் ராதாவை காதலிக்கிறதுனால அடி வாங்கிட்டு வந்திருக்கிறோமே!அப்படி இவன்கிட்ட அடிவாங்கணுமா என்ன?அவனுக்குத் திருப்பிக் கொடுக்கணும்.நம்ம மனதின்வலியை இப்படியாவது தீர்த்துக்கலாம் என்றுதான் வேண்டுமென்றே கிருஷ்ணனை சீண்டினான்.

ஆனால் கிருஷ்ணனும் அவனை சீண்டினாலும் அமைதியாக ராதாவுக்காக பொறுத்து போனான் இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை ராததான் டென்ஷனாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அதனால் இதற்கு மேலும் இங்கே நின்றிருந்தால் அவளுக்கு மண்டைக் காஞ்சிடும் என்று கிருஷ்ணன் மெதுவாக மோகனின் தோளில் கையைப்போட்டு இழுத்துக்கொண்டு தனது கார்வரைக்கும் சென்றான்.

“மவனே உன்னை இதுக்குமேல ராதாவோடு பார்த்தேன் உன்னை ரோட்டுல துரத்தித் துரத்தி அடிப்பேன்” என்று ரகசியாக எச்சரித்தவன் சத்தமாக பைடா மோகன்.அப்புறம் பார்ப்போம் என்று சத்தமாக சொல்லி காரை எடுத்துக்கொண்டுப் போய்விட்டான்.

அதைப் பார்த்த ராதா சந்தேகமாக தனது வண்டி எடுத்துக் கொண்டு மோகன் அருகில் வந்து “நீங்க ரெண்டு பேரும் சண்டைதானே போட்டு இருக்கீங்க அவரு உங்கள மதுரையில் கல்குவாரியில வச்சு அடிச்சதா சொன்னீங்களே! அப்போ அதெல்லாம் உண்மையா? பொய்யா?என் ஹஸ்பண்ட் நான் வெறுக்கணும்னு பொய் சொன்னீங்களா மோகன்?” என்று சத்தமாக கேட்டா.

“ஏங்க ஒருத்தன் அடிவாங்கினதைச் சொன்னால் பொய்யின்னு சொல்லுவீங்களா.உங்க வீட்டுக்காரர் ரெட்டை வேஷம் போடுறாருங்க. அன்னைக்கு என்னை அடிச்சாரு இன்னைக்குச் சமாதானமாகப் பேசுறாரு. யாருக்கு தெரியும்? எதுக்கு சமாதானமா பேசுறார்னு? ஒரு வேளை உங்ககிட்ட நடிக்கிறாரா இருக்கும்” என்று மோகன் வந்து கோபத்தில் பேசி விட்டான்.

“ஹலோ கிருஷ்ணன் அப்படிப்பட்ட ஆளில்லை.அவர் நடிக்க கூடிய ஆளும் கிடையாது எதுவுமே ஃபேஸ் டூ ஃபேஸ் பேசி அதில் என்ன வருதோ அதை சமாளிக்க கூடிய ஆளு அவரு. இங்கு உள்ள சென்னைக்காரங்க தான் முன்னுக்கு பின்முரணாக நடந்துப்பாங்க. ஒரு நேரம் ஒன்னு பேசுவாங்க அப்புறம் வேற ஒன்னும் பேசுவாங்க. எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு! கிருஷ்ணன் உங்களை அடிச்சாரு வச்சாரு என்பது எல்லாம் வேறு விஷயம். ஆனால் நடிக்க எல்லாம் தெரியாது. எனக்கு என்னவோ நீங்கதான் பொய் சொல்லி என் லவ்வ வாங்கிக்கணும்னு நினைச்சு இருப்பீங்க போலிருக்கு. இதுக்கு மேல எல்லாம் இனி என்கிட்ட பேசாதீங்க. நட்பு கூட பாராட்ட வேண்டாம் எனக்கு கிருஷ்ணனை பத்தி நல்லா தெரியும்” என்று கிருஷ்ணனுக்காக சப்போர்ட் பண்ணி பேசினவள் அதற்குமேல் அங்கு நிற்காது கிளம்பிவிட்டாள்.

அதில் கடுப்பான மோகன்” உனக்காக நான் அடியெல்லாம் வாங்கிட்டு வந்து பாவமாக நிக்கிறேன். நீ என்ன உன் முன்னாள் புருஷனுக்கு சாதகமாகப் பேசிட்டுப்போற.உன்னை முதல்ல தூக்கிருக்கணும்டி! விட்டுவைச்சது என் தப்பு” என்று போகும் அவளையே எரித்துவிடுவதுபோன்று பார்த்தான்.

காதலிச்சா எப்போதும் நல்லவங்களாவேதான் இருக்கணுமா? இப்படித்தான் விட்டுக்கொடுத்துப் போகணும்போல. ச்சை என்னபொழப்புடா இது?என்று கோபத்தில் தனது கழுத்தில் இருந்த டை, ஐடிக்கார்டு என்று எல்லாத்தையும் கழட்டி எறிந்தவன் அங்கயே சிறிது நேரம் நின்றிருந்தான்.

ராதா சென்ற சில நிமிடங்களிலே இவனும் தூக்கியெறிந்த ஐடி கார்டை தேடி எடுத்துக்கொண்டு திரும்பினான்.

அங்கே கிருஷ்ணன் காரோடு நின்றிருந்தான்.அவ்வளவுதான் ஒருத்தரும் இல்லை என்றதும் கிருஷ்ணன் மோகனை தனது காரில் தூக்கிப்போட்டுப் போய் ஒரு இடத்தில் கொண்டு நிறுத்தினான்.

மோகன் காரில் ஏறியதுவுமே என்னதான் செய்கிறான்னு பார்ப்போம் என்று தெனாவெட்டாக உட்கார்ந்து இருந்தான். ஒரு இடத்தில் கொண்டு நிறுத்திவிட்டு கிருஷ்ணன் மோகனைக் காரில் இருந்து வெளியே தள்ளினான். அவன் கீழே விழுந்ததும் அவனது கழுத்திலே கால் வைத்து மிதித்தான்.

மோகனுக்கோ என்னவென்று புரியாது முழித்தவன் உடனே அவனை காப்பாற்றிக்கொள்ள தடுத்து கிருஷ்ணனை அடித்தான் கிருஷ்ணனும் மோகனை அடித்தான். இவ்வாறு மாற்றி மாற்றி அடித்துக்கொண்டனர்.

அதில் ஒருக்கட்டத்தில் கிருஷ்ணன் மோகனின் கையை ஒடித்து அடித்து கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டான்.

அதுதான் கிருஷ்ணன் செய்த பெரிய தவறாகப்போயிற்று.

எத்தனை தான் காதலித்த பெண்ணிற்காக சாதுவாக அமைதியாக இருக்க முடிஞ்சாலும் மோகன் இரண்டாவது முறையும் அடி வாங்கியதும் கொஞ்சம் பொங்கி எழுந்துவிட்டான்.

அந்த பழிவாங்கல் கிருஷ்ணன் பக்கம் திரும்பாமல் ராதாவின் பக்கம் திரும்பியதுதான் பெரும் பிரளயத்தை உண்டு பண்ணி விட்டது.