தெள்ளழகே-20

தெள்ளழகே!-20
கிருஷ்ணனுக்கு இப்போது சென்னையில் இருக்கும் இரு முக்கியமான வேலையில் ஒன்று தினமும் காலையிலும் மாலையிலும் தனது மனைவி மற்றும் காதலியினைப் பார்க்க ஆபிஸிற்கு வருவது அவள் திரும்பிப் பார்க்கும்வரைக்கும் காத்திருப்பது.அடுத்தது மாலையில் மகளை பள்ளியில் இருந்து அழைத்துவருவது அவளோடு சிறிது விளையாடிவிட்டு மனைவியை பார்க்க போய்விடுவது.இதுதான் அந்த இரண்டு முக்கியமான வேலைகள்.
மைதிலியும் மணிகண்டனும் ஒரேவாரத்தில் வீடு பார்த்து மாறிவிட்டனர்.
இப்போதை அந்த வீட்டில் ராதா சுதந்திரமாக நடமாடுகிறாள். மூச்சுவிடுகிறாள்.இப்போதெல்லாம் தாமரை மகளைக் கண்டபடி திட்டுவதில்லை.
எப்படியும் நம்ம காலத்துக்குப்பின் கிருஷ்ணன் பார்த்துப்பான் என்ற நம்பிக்கை இப்போது வந்திருந்தது.
ஆறுமாசமா ராதா பின்னாடியே சுத்துறான்.அவளும் மனசு இரங்கிறமாதிரி தெரியலை. ஆனாலும் அவள்தான் என் வாழ்க்கை என்று சுத்துறகிறான்.
சனி ஞாயிறு ஊருக்குப் போயிடுவான்.திங்கள்கிழமை ஆனால் எப்படித்தான் வருவானோ அவளுக்கு முன்னாடி ஆபிஸ்வாசல்ல காரோடுக் காத்திருப்பான்.
சரண்யாதான் ராதாவிடம் “அடியேய் இன்ன டைமுக்கும் வீட்டிலிருந்துக் கிளம்புறேன்.இன்ன டைமுக்கு ஆபிஸ் ரீச்சாயிடுவேன்னு நீதானே அவனுக்கு சரியகாத் தகவல் கொடுக்கிற. பாரு எவ்வளவு பங்க்ச்சுயூவாலிட்டியா அவரு வந்திடுறாரு.உன் காதலும் காத்திருப்பும் அவருக்கு முன்னாடி குறைஞ்சிடும்போலயே”என்று ஆச்சரியப்பட்டாள்.
“ஒரு மண்ணும் இல்லை.அவனுக்கு வேற ஆளு செட்டாகலை அதுதான் காத்து நம்ம பக்கமாகத் திரும்பியிருக்கு. இல்லைன்னா நம்மளைச் சீண்டக்கூட மாட்டாரு.பேருதான் காதலிச்சாம்னு.ஆனால் அந்தக் காதலை அவனோடு வாழ்ந்த ஒருவருஷத்துல ஒரு நாளுக்கூட உணரலையே.அதெப்படி டி இவனுங்களுக்கு மட்டும் பொண்ணுன்னா மண்ணுமாதிரியே தெரியுது?”
“ப்ச்ச் ஒருவேளை அவருக்கு அப்போ அதைக் காண்பிக்கவோ வெளிப்படுத்தவோ தெரியாமல் இருந்திருக்கலாம்.இல்லையா அதைப் புரிஞ்சுக்காமல்கூட இருந்திருக்கலாம், அதானால்தான் இப்போ அனுபவத்துல புரிஞ்சுக்கிட்டு வந்திருக்கலாம். இல்லன்னா உண்மையான காதல் என்ன என்று புரிஞ்சு இருக்கலாம். நிறைய மாற்றங்கள் வந்து இருக்கலாம்.இப்படி நிறைய இருக்கே ராதா”
“எனக்கு இதெல்லாம் கூட தெரியல ஆனா இதுல எதுவுமே உண்மையாக இருக்கலாம் எனக்கு தோணுவே மாட்டுக்கு. என்னைக்கு உண்மையாய் இருக்குன்னு தோணுதோ அன்னைக்கு நான் அவனை ஏத்துக்கிறேன்”
“க்கும் அதுவரைக்கும் அவரு சந்நியாசம் வாங்காமல் இருக்கணும் அதுபோதும்”
“அவனாவது சந்நியாசம் போகுறதாவது. அப்படியே நாலு நாள் எனக்காக காத்திருந்துவிட்டு ஐஞ்சாவது நாள் வேறொருத்தியைக் கட்டிக்கபோறான் பாரு”
“ஆறுமாசம் ஆச்சு இன்னும் அந்த ஐஞ்சாவது நாள் வரலையா ராதா?”என்று நக்கலாகக் கேட்டுவிட்டு ராதாவைப் பார்த்தாள்.
ராதா கண்கள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் இறங்கிக் கொண்டிருக்க அதை வேகவேகமாகத் துடைத்துக்கொண்டிருந்தாள்.
“ஏய் ராதா நான் விளையாட்டாகச் சொன்னேன்டி.இதுக்கு எதுக்குடி அழற.சாரிப்பா”என்று அவளது தோளைத்தட்டி சமாதானம் செய்தாள்.
“அதில்லடி அந்த வீட்டுல நான் ஒருவருஷம் வாழ்ந்தேன்தான் ஆனால் இவனுக்குப் பொண்டாட்டியா வாழலை. அவங்கம்மாவும் அக்காங்களும் என்னை எதிரியாவே நடத்தினாங்க.பொண்டாட்டின்னா இராத்திரி படுக்க மட்டும்தானா? இவனுக்கு அதுக்கு மட்டும்தான் நான் தேவைப்பட்டேன்.ஒரு நாளுக்கூட சாப்பிட்டியான்னு கேட்டதில்லை.ஆனால் அவனுக்கு வக்கனையா நான் பார்த்துப் பார்த்துச்செய்வேன்.அப்போக்கூட ஒருவாய் நீ சாப்பிடுன்னுக்கூட சொன்னதில்லை.சரி அதுக்கூட ஆம்பளைப்புத்தின்னு விட்றலாம்.நான் மாசமா இருந்தேன்ல அப்போக்கூட என் பக்கத்துல உட்கார்ந்து கொஞ்சினதில்லை.என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனதில்லை.ஆசை ஆசையா நமக்கு என்ன புள்ளைப்பொறக்கும்னு கேட்டதில்லை. காசுக்கூட அவங்கம்மாகிட்டதான் குடுத்தானே தவிர என் கையில பத்து ரூபாய்கூட தந்ததில்லை.அதுல அவங்கம்மா ஏதாவது சொல்லிக்குடுத்துட்டா உடனே அடிச்சிருவான். நீ அப்படி பேசினியா? என்ன நடந்துச்சுன்னுக்கூட கேட்கமாட்டான்”
“அச்சோ இதெல்லாம் வேற பண்ணுவாரா?”
“அவங்க அக்காகாரி ஒருத்தி ஊருலக் கிடக்கிறாளே அவள் ஏதோ என்னை ஏழு மாசத்துல வேலை ஏவினாள்.நான் செய்யமாட்டேன்னு சொன்னதுக்கு மாமியார் எனக்கு சாப்பாடுக்கூட தரலை.அடிக்க வந்துச்சு. எதிர்த்துப் பேசினேன்டி அதுக்கு இராத்திரி வந்து அடிச்சான் பாரு அதையெல்லாம் நினைச்சாலே பயமா இருக்கு. இப்பவும் வலிக்குது.கட்டில்ல தள்ளிவிட்டுட்டுப் போயிட்டான். நல்லக் குடிச்சிருந்தான் தெரியுமா.நல்லவேளை வயித்துல அடிபடலை.பாப்பாவும் நானும் தப்பிச்சோம்.அன்னைக்கு முடிவு பண்ணினேன்.இப்படி பொண்டாட்டியை மனுஷியாக்கூட நினைக்காத இவன்மேல எதுக்கு எனக்கு காதல் வந்துச்சு? இந்தக்காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம்னு வந்துட்டேன்”
“எனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா.நீ இதையெல்லாம் சொல்லலையா கிருஷ்ணனை பாவம்னு நினைச்சிட்டேன்”
“அவனும் பாவம்தான் அம்மா அக்காங்கன்னு நம்பிட்டான்.அவங்க அவனது வாழ்க்கையை கெடுத்துக் குட்டிச்சுவராக்கின சூனியக்காரிகள்னு தெரியலை. யாரு என்ன சொன்னாலும் செய்தாலும் என் பொண்டாட்டின்னு ஒரு அன்பு இருந்திருக்கணுமா இல்லையா? அதைச்செய்யலை. நம்மளை நம்பி வந்தவளை நம்ம எப்படிப் பார்த்துக்கணும்னு அறிவே இல்லாத கழுதை. குழந்தைப் பிறந்ததைக்கூட பார்க்கவரலைன்னா எப்படிப்பட்ட ஆளுன்னு பார்த்துக்க. அவ்வளவு காதல்காரர் பாசகாகாரர்.இப்போ மகள்மேல் பாசத்தைப் பொழியுறாரு. ம்ம்ம் இவனை நான் எப்படி நம்பி மீண்டும் என் வாழ்க்கையையும் உயிரையும் பணையம் வைப்பேன்னு சொல்லு? இவன் கூட்டிட்டுப்போய் கல்குவாரில புதைச்சுட்டு செத்துட்டான்னோ இல்லை தற்கொலைப் பண்ணிக்கிட்டான்னோ சொன்னாலும் சொல்லிடுவான்” என்றவளுக்கு அதற்குமேல் பேச வார்த்தை வரவில்லைக் கதறி கதறி அழுதாள்.
அவள் அனுபவித்த வேதனை வலியை இத்தனை வருடம் மனதிலே பூட்டி வைத்திருந்தவள் இன்று சரண்யா கேட்டதும் மொத்தமாக கொட்டித் தீர்த்துவிட்டாள்.
அந்தப்பாரம் இன்னும் இன்னும் அவளை அழ வைத்தது அதனால் தான் கதறி கதறி அழுது கொண்டிருந்தாள் சரண்யாவால்கூட அவளை கட்டுப்படுத்த முடியாது போயிட்டு.
ராதா அத்தனை வேதனையை அந்தக் கல்யாண வாழ்க்கையில் அனுபவிருந்தாள்.அதனால்தான் மீண்டும் அந்த வாழ்க்கைக்குள் நுழைய அவளால் முடியாது என்று தீர்க்கமாக நம்புகிறாள்.
ஆனால் சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் கிருஷ்ணனின் காதல் உண்மையானதாக இருக்கும் ஒரு வாய்ப்பை கொடு என்று அவளிடமே சிபாரிசு செய்து கொண்டிருக்கின்றனர்.
இது ஒன்னும் வேலைக்கான சிபாரிசு இல்லையே! வாழ்க்கைக்கான சிபாரிசு.
ஒரு முறை பட்ட அனுபவம் அவளுக்குபபதுமானதாக எண்ணுகிறாள்.ஒருமுறை சூடு கொண்ட பூனை திரும்பவும் அந்த இடத்திற்கு போகாது என்பது போல அவளது எண்ணம் இருந்தது.
மறுபடியும் அந்த வாழ்க்கைக்குள் நுழைந்தால் அதே வலியும் வேதனையும் வந்துவிடுமோ? என்று அவளை அறியாது உள் மனதிற்குள் பயந்து கொண்டிருக்கிறாள்.
அந்த பயத்தின் வெழிப்பாடுதான் கிருஷ்ணனு ஏற்க மறுத்து தள்ளி வைத்திருப்பது .அதை சுற்றி இருக்கும் ஒருத்தராலும் புரிந்து கொள்ளமுடியவில்லை.புரிந்துக்கொள்ளவும் முடியாது.
ராதாவை சமாதனாப்படுத்திய சரண்யா அதற்குப்பிறகு அவளிடம் கிருஷ்ணனைப் பத்தி எதுவுமே பேசவில்லை.
கிருஷ்ணன் இப்போது மைதிலி வீட்டில் இருந்தான்
மைதிலிக் கோபத்தில் அவனிடம் பேசாது எழுந்துப்போகவும் மணிகண்டன்தான் ”என்ன மைதிலி இப்படி எழுந்துப்போற. அவன்தான் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு இப்போதும் உறுதியாக இருக்கானே.திரும்பத் திரும்ப உங்கம்மாவும் நீங்களும் அவனை டார்ச்சர் பண்றீங்க. ஏன் என் தங்கச்சி ராதாவோடு அவன் மறுபடியும் வாழ்றதுல உங்களுக்கு எங்க வலிக்குது? அப்போ இதுக்கு முன்னாடியும் என் தங்கச்சியை திட்டமிட்டுத்தான் பிரிச்சு அனுப்புனீங்களா?’ என்று புது அவதாரம் எடுத்ததுபோன்று தைரியமாக மைதிலியிடம் கேள்விக்கேட்டான்.
ஏற்கனவே மணிகண்டனின் கோபத்தை பார்த்திருந்ததால் மைதிலி மெதுவாக” ராதாதான் இவன் வேண்டவே வேண்டாம்னு மொத்தமாகவும் முடிவாகவும் சொல்லிட்டாளே! அதுக்கப்புறம் அவளைப்போய் ஏன் தொந்தரவு பண்ணிட்டு இருக்கான்? இவனுக்காக பார்த்து வச்ச அந்த தருணிகா பொண்ணுக்கூட இப்போ கல்யாணம் முடிஞ்சு அவளுக்கும் ஏழு மாசம். அம்மா முன்னாடியே புருஷன்கூட நடந்து போறாளாம்
அம்மா அதைப் பார்த்து பார்த்து வயித்தெரிச்சலோடு இங்க வந்து எங்ககிட்ட அழுறாங்க அவங்க மகன் மட்டும் வாழாமல் இருக்கான்னு அழறாங்க. அப்போ அதுக்கேட்டு எங்களுக்கு வலிக்குமா வலிக்காதா அதுதான் வேற கல்யாணமாவது பண்ணிக்கன்னு, வேற பொண்ணு பார்க்கிறோம்னு சொல்லியாச்சு. இதைச் சொன்னா இவன் பிடிவாதமாக இருக்கான். ராதாதான் வேணும்னு இருக்கான். அப்புறம் என்னதான் பண்ண போறாரு? இந்த வாழ்க்கை முழுவதும் அவள் தனியாக இருப்பான்னு இவனும் வாழ்க்கை முழுவதும் தனியா இருப்பானா?’என்று தம்பிக்காக வருத்தப்பட்டுப் பேசினாள்.
அதைக்கேட்ட கிருஷ்ணன் “எனக்கு அவதான் வேணும்.வேற எவக்கூடவும் வாழமுடியாது.இது என்னோட முடிவு.அதை ஏற்கனவே சொல்லிட்டேன் திரும்பத் திரும்ப வேற பொண்ணு பாக்குறேன் கல்யாணம் பண்ணிக்கோன்னு டார்ச்சர் பண்ணக்கூடாது. கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு இப்ப மட்டும் வலிக்குதா என்ன? இதுக்கு முன்னாடி மூணு வருஷம் அப்படித்தானே இருந்தேன். அப்போ யாருமே எதுவுமே யோசிக்கலையே ஏன்? நீங்க செய்தது உங்களுக்கே தெரியும். இது நான் திரும்ப குத்தி காட்டுறேன்னு நினைக்காதீங்க இதுக்கு மேல பொண்ணு பாக்குறேன் கல்யாணம் பண்ணிக்கோ அப்படி இப்படின்னு ஏதாவது சொன்னீங்கன்னா மொத்தமா வீட்டை விட்டு எங்கேயாவது போயிடுவேன்.இதை உங்கம்மா பூங்கோதைக்கிட்ட சொல்லிடு”என்று தனது பேச்சை முடித்துவிட்டான்.
அதற்குமேல் மைதிலிக்கும் ஒன்றும் பேசமுடியவில்லை’இந்த அம்மாவும் தங்கச்சியும் ஓவரா பண்ணி நம்மளையும் சிக்கல்ல மாட்டிவிட்டுட்டாங்க.இப்போ கிருஷ்ணன் ராதாதான் வேணும்னு ஒத்தக்காலுல நிக்கிறான். என்னமோ பண்ணுங்க என் தலையை உருட்டாதிங்க’ என்று கோபத்தில் அவர்களோடும் பேசாது இருந்துவிட்டாள்.
அங்கே ஆவுடையப்பனோ நாகேஷ்வரியை வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்.
எப்போதும் பூங்கோதையை உசுப்பி விட்டுக் கொண்டே இருக்கிறாள்.கிருஷ்ணனைப் பத்தியும் ராதாவைப்பத்தியும் எந்தநேரமும் பொரணி போசிக்கொண்டிருப்பதால் பூங்கோதைக்கு கிருஷ்ணன் மீதும் இப்போது வெறுப்பு வர ஆரம்பித்துவிட்டது.
அதை அவனிடம் போனில் பேசும்போது காண்பித்து விடுகிறார்.அவனும் அதன்பின் போனை வைத்துவிட்டுப் போய்விடுகிறான் என்று பலப்பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருப்பதால் அம்மாவும் மகளும் பார்த்துக்காமலே இருக்கட்டும் அப்போதான் கிருஷ்ணன் விசயத்தில் ஒரு விடிவுவரும் என்று நாகேஷ்வரியை அவபுருஷன் வீட்டில்தான் இருக்கணும் இங்க வரக்கூடாது என்று விரட்டிவிட்டுட்டார்.
“உன் புருஷன் வீட்டுலயே இருந்துக்க.இங்க வந்தன்னா இனி சரிப்படாது.உன்னைத்தான் கட்டிக்கொடுத்தாச்சுத்தானே உன் குடும்பத்தைப் பார்க்கவழியைப்பாரு, அடுத்தவன் குடும்பத்தைக் கெடுக்கவாரதன்னு” நேரடியாகவே சொல்லிவிட்டார்.
அதைக்கேட்டதும் அழுது கொண்டே “நான் இந்த வீட்டு வாசபடி மிதாச்சா என்னை யாருன்னு கேளுங்க” என்று கோபத்தில் கத்திக்கொண்டே நாகேஸ்வரி தன் வீட்டிற்கு போய்விட்டாள்.
அப்படியே போ. நல்லது கெட்டதுக்கு வந்து சேர்ந்தா சரி இல்லையா உன் புருஷன் வீட்டிலேயே இருந்திரு என்று அனுப்பிவைத்ததுதான் அவர் செய்ததிலயே பெரிய நல்லகாரியம்.
அன்று மாலை ராதாவைப் பார்க்க கிருஷ்ணன் வந்து நிற்க ஆபிஸிற்குள்ளே இருந்து மோகனும் ராதாவும் சிரித்துக்கொண்டே வெளியே வந்தனர்.
“என்னடா இது நம்ம ஒன்னு நினைச்சா இங்க வேற ஒன்னு நடக்குது.இவனை சும்மா விட்றுக்கக்கூடாதோ என்று நினைத்தவன் அவர்கள் வரும் பாதையை மறைத்து நின்றான்.
ராதாவோ அவனை பார்த்தும் பார்க்காததுபோன்று வேண்டுமென்றே விலகிச்சென்றாள்.
மோகனோ அவனை எதிர்கொண்டு சண்டைக்கு நிற்பதுபோன்று நின்றிருந்தான்.
கிருஷ்ணன் அவனையே மேலும் கீழும் பார்த்தவன் தனது சட்டையைத் தூக்கிவிட்டு அவனிடம் நேருக்கு நேர் மோதுவதுபோன்று சென்றான்.