தெள்ளழகே-22

தெள்ளழகே-22

 தெள்ளழகே!-22

மோகன் ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தான்.அவனது ஒரு கையில் கட்டுப்போட்டுத் தொங்கப்போட்டிருந்தனர். 

அவனருகில் ருக்குமணி உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தார்.

“இதுக்குத்தான்டா நான் தலபாடா அடிச்சிகிட்டேன்.அந்த ராதா வேண்டாம் சரிப்படாது.அவள் விவாகாரத்து ஆனவள்னு படிச்சுப் படிச்சுச் சொன்னனே. உனக்கு மித்ராவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். உன் வாழ்க்கை வாழப்பாருன்னு நான் எவ்வளவோ சொல்லிருக்கனே. இப்போபாரு அவள் கிருஷ்ணனுக்கு தான் சப்போர்ட் பண்ணி இருக்காள். இப்போ நீ போய் கிருஷ்ணா என்னை அடிச்சி கையை உடைச்சிட்டான்னு சொன்னால்கூட நம்ப மாட்டாள். கிருஷ்ணன் மேல நீ பழி போடுறான்னுதான் சொல்லுவாள். உனக்கு இது தேவையா? தேவையா?” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

அருண் அவனருகில் வந்து “என்ன மச்சான் இப்படியாகிப் போச்சு நீதான் அந்த ராதாக்க்கிட்ட இருந்து ஒதுங்கி வந்துட்டியே. மறுபடியும் இப்படி கிருஷ்ணன் வந்து அடிச்சிருக்கான். என்னாச்சு? என்னதான்டா பிரச்சனை? ஆனா உன்னை அவன்தான் தூக்கி ஹாஸ்பிடல் கொண்டு போட்டிருக்கான். நீ வழியில் மயங்கி கிடந்திருக்கன்னு அவன் பெயரை எழுதி சேர்த்துட்டு போயிருக்கான். இப்போ நம்ம எதுவுமே சொல்ல முடியாது. அவன் பக்கம் தப்பு இருக்குன்னு ராதாகிட்ட நிரூபிக்க முடியாது. இப்போ என்ன பண்ண முடியும்? எந்த அளவுக்கு அவன் இதுல இறங்குறான்னு இதுல இருந்து தெரியுது. நீ எதுக்கு அந்த பொண்ணு திரும்ப திரும்ப போயிட்டு டார்ச்சர் பண்ற மாதிரி பண்ற?இப்போ கை உடைஞ்சு வலியும் வேதனையும் உனக்குன்னா பாவம் அத்தைக்கு மனசாளவில் வலி. உங்களுக்காகத்தானே அவங்க இவ்வளவு பாடுபட்டாங்க, நானுமே முதல்ல அத்தை சொல்லுறதை ஏத்துக்கல.ஆனால் இப்போது எனக்கு நல்ல ஞானம் வந்துட்டு.உனக்கானவள் அந்த ராதா கிடையாது.

உன்னுடைய காதலை அவள் எந்த ஜென்மத்திலும் ஏத்துக்கட்ட மாட்டாள்னு உறுதியாகத் தெரிஞ்சுட்டு.அந்தளவுக்கு உனக்கு மண்டைக்கு ஏறினா சரிதான்.இனி உன் வாழ்க்கையை நீ பாரு.அதுவே குடும்பத்துல உள்ள எல்லோருக்கும் நிம்மதி.குறிப்பா அத்தைக்கு நிம்மதி”

அவனோ எதுவுமே பேசாது அமைதியாக இருந்தான்.அவனைப் பார்க்க மித்ராவும் சங்கரனும் வந்திருந்தனர்.

மித்ராவின் கண்களில் அவனுக்கான வேதனையைக் கண்டான்.ஆனாலும் இது சரிவராது நம்மளே இன்னோருத்திப் பின்னாடி போயிருக்கோம் காதலிச்சிருக்கோம் என்று இவளுக்குத் தெரியும். அப்படியிருந்தும் இனி நம்மளைக் கல்யாணம் பண்ணினால் அது சரியாக இருக்காது என்று நினைத்தவன் அவளைப் பார்க்காது அப்படியே கண்களை மூடிக்கொண்டான்.

அவன் கண்களை மூடும் போது கிருஷ்ணன் இவனை கேவலமாக அடித்ததும் அவனை நடத்திய விதமும்தான் கண்முன்வந்தது.

அதனால் மீண்டும் கண்களை திறந்தவன் எப்போ அம்மா ஹாஸ்பிடலில் இருந்து போகலாம்னு டாக்டர் சொல்லி இருக்காரு? என்று ருக்மணியிடம் கேட்டான்.

அவரோ அவனிடம் பேசாது அமைதியாக அங்கிருந்து எழுந்து வெளியே வந்து விட்டார்.

அவருக்கு மிகவும் வருத்தம் ‘நான் எவ்வளவு கஷ்டப்பட்டு அவங்களை வளர்த்திருக்கேன்.இப்படி ஒருத்திப் பின்னாடி போயி அடியும் மிதி வாங்கி இருக்கானே என்று மிகவும் நொந்து போனார் அதனால்தான் அவனிடம் பேசாது அமைதியாக வெளியே வந்துவிட்டார்

அவர் எழுந்து சென்றதும் மித்ரா உடம்பைப் பார்த்துகாங்க மாமா என்று சொல்லிவிட்டு அவளும் ருக்குமணியோடு பின்னாடியே வந்துவிட்டாள்.

மித்ராவுக்கு மோகனைத்தான் பிடிக்கும்.அதனால்தான் ருக்குமணி சொன்னதைக்கேட்டு இன்னும் வேற எந்த வரனுக்கும் சம்மதம் சொல்லாமல் மோகனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

அதைப்புரிந்துக்கொள்ளாத மடச்சாம்பிராணி மோகன் அவளைப் பார்க்காது கண்களை மூடிக்கொண்டான்.

“சரி மாப்ள உடம்பைப் பார்த்துக்கங்க.நமக்குன்னு என்ன விதிச்சிருக்கோ அதுதானே நடக்கும்.எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்.ஒன்னுக்கும் கவலைப்படாதிங்க”என்று ஆறுதல் சொன்னார்.

“இவருக்கிட்டலாம் ஆறுதல் கேட்கவேண்டியதாகிற்றே ஆண்டவா. இவருப் பொண்ணைக் கட்டிக்கமாட்டேன்னு தட்டிக்கழிச்சதுக்கு என்னை நல்ல பழிவாங்குறீங்களே இது உங்களுக்கே அடுக்குமா?” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அடுத்தநாள் மாலையில் ராதாவும் சரண்யாவும் ஆபிஸிற்குள் நுழையும் போதே மேனேஜர் வந்து” நம்ம பழைய அசிஸ்டன்ட் மேனெஜர் மோகனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிட்டுதாம். நேத்து ராதாவோட ஹஸ்பண்ட் கிருஷ்ணன்தான் வழியிலே மோகனைப்பார்த்து தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாராம். மெயின் பிரான்ச்ல இருந்துத் தகவல் வந்திருக்கு. அவரு இரண்டுமாசம் மெடிக்கல் லீவுல போறதால நம்ம ராதாவை அங்க வேலைக்காக இரண்டுமாசம் வரச்சொல்லிருக்காங்க”என்று தகவலைச் சொன்னார்.

அதைக்கேட்டதும் புருவம் நெறித்து “மோகன் சாருக்கு அடிபலமா? கிருஷ்ணன் எப்படி அவரைக்கொண்டுபோய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்களாம்?” என்று சத்தேகத்துடனே கேள்வியைக்கேட்டாள்.

சரண்யாதான் அவளது கையைப்பிடித்து “சும்மா இரு ராதா.உங்களுக்குள்ள நடக்கிற பனிப்போர் எல்லாம் ஆபிஸில் வேற யாருக்கும் தெரியாது.நீயும் கிருஷ்ணனும் சமாதானம் ஆகிட்டீங்க.உன்னைப் பார்க்கத்தான் தினமும் அவரு வர்றாருன்னு சொல்லி வைச்சிருக்கேன். இல்லைன்னா இன்னும் நிறையபேரு உன்னைப் பத்தி வேறமாதி கதையைக் கட்டிவிட்றுவாங்க.அதனால் அமைதியாக தலையாட்டி சிரிச்சிக்கிட்ட இரு.அது உனக்கும் நல்லது உன்கூட சுத்தற எனக்கும் நல்லது”

ப்ச்ச் என்று கடுப்பில் சொன்னவள் தனது கேபினுக்கு வந்ததும் நேராக தனது போனில் இருந்த கிருஷ்ணனுக்கு அழைத்தாள்.

அவனோ போனை எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். எப்படி அந்த பரதேசி மோகனுக்கு அடிபட்டது இந்நேரத்துல ஆபீஸ்ல தெரிஞ்சிருக்கும். அது நான் தான் இவ கரெக்டா கண்டுபிடிச்சிருப்பா. அதனால போன் பண்றா கிருஷ்ணா ஓடி தப்பிச்சினரு..இப்போ நமக்குப் போன் பண்றா.இப்போ மட்டும் போனை எடுத்த ஏற்கனவே பழைய ராதாவாக இல்லை. உன் மேல பயங்கர கடுப்புல என்ன வேணாலும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுற அளவில் இருக்கா மாட்டிக்காத போனை எடுக்காத கிருஷ்ணா”என்றவன் போனை பார்த்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தான.

இரண்டுமூன்று முறைக் கோபத்தில் அழைத்துப் பார்த்தவள் அவன் போனை எடுக்கவில்லை என்றதும் அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே மேசையில் போட்டவள் தலைவலிக்குது என்று தலையைப் பிடித்துக்கொண்டாள்.

“ஏன் ராதா தலையை பிடிச்சுக்கிட்டிருக்க கிருஷ்ணா போனை எடுக்கலைன்னா? இல்ல மோகனுக்கு அடிபட்டதுனாலயா? இல்ல மோகன் அடிபட்டதற்கு கிருஷ்ணன் காரணமாக இருப்பானோ என்ற சந்தேகமா?” என்று அடுக்கடுக்காக கேள்வி அவளை பார்த்துக்கேட்டாள்.

“கிருஷ்ணன் காரணமாக இருப்பான்னு சந்தேகமமெல்லாம் இல்லை. உறுதியாகவே சொல்லுவேன் அவன்தான் ஏதோ பண்ணிட்டான். அப்படியே தூக்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல்ல போட்டுட்டான். கிராதகன் அவனைப் பத்தி எனக்குத்தானே தெரியும.

சாயங்காலம் என்கூட வர்றியா? மோகனைப்போய் பார்த்து பேசிட்டு வரலாம். அவன் கண்டிப்பா உண்மைய சொல்லுவான் கிருஷ்ணன்தான் காரணம் என்றால் இனி ஜென்மத்துக்கு அவன் மூஞ்சிலயே முழிக்கமாட்டேன்”

“அப்படியெல்லாம் இருக்காது ஒரு வேளை மோகன் வேண்டுமென்றே கிருஷ்ணன் மேல பழியைத்தூக்கி போட்டு கிருஷ்ணாவை நீ வெறுக்கணும்னு நினைச்சு செய்திருந்தால் எப்படி இருக்கும்? ஒருவேளை அப்படி இருக்கத்தான் வாய்ப்பு இருக்குல.அதனால் அமைதியா இரு.சாயங்காலம் போய் மோகன்கிட்ட பேசிக்கலாம்” என்று ஏதாவது சொல்லி சமாதானப்படுத்தி வேலையில் கவனம் வைக்கச் செய்தாள்.

எத்தனைதான் நினைத்தாலும் அவளால் முடியவில்லை ”கிருஷ்ணன் ஏன் இப்படிப் பண்றான்? நான்தான் விலகிப்போயிடுன்னு தீர்க்கமாகச் சொல்லிட்டனே”என்று மாலைவரைக்கும் புலம்பிக்கொண்டிருந்தாள்.

மாலையில் வீடு செல்லும் பொழுது தனது வண்டியில் சரண்ய்வை ஏற்றிக்கொண்டு வெளியே வந்தாள். கிருஷ்ணனின் காரும் கிருஷ்ணனும் அங்கே நிற்கிறார்களா? என்று ஏதேச்சையாகப் பார்த்தாள். 

அவன் இல்லை நினைச்சேன் காலையிலும் வரல இப்பவும் வரல. இது அவன்தான் செய்திருக்கணும் கைல மட்டும் மாட்டட்டும் கோபத்தோடு மோகனிருக்கும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

மோகனின் அருகில் உட்கார்ந்து சரண்யா நலம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அதை அமைதியாக ராதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரண்யா மெதுவாக உங்களை ஆக்சிடென்ட் பண்ணது கிருஷ்ணனா? அவர் உங்களை அடிச்சு உங்க கைய உடைச்சுட்டு ஹாஸ்பிடல்ல கொண்டு சேர்த்தா வெளியே பேசுகிறாங்களே. அதுதான் உண்மையா? என்று நேரடியாகவே கேள்வியைக் கேட்டு விட்டாள்.

“ஆமா கிருஷ்ணன் என்னை அடிச்சி கையை ஒடச்சாருன்னு சொன்னா உங்க பிரண்டு ராதா என்ன பண்ணிடுவாங்க? ஓடிப்போய் கிருஷ்ணனை அடிச்சு அவன் கைய உடைப்பாங்களா? இல்லல. என்ன இருந்தாலும் அவங்க தான் ஹஸ்பண்ட் வைஃப். கிருஷ்ணன் அப்படிப்பட்டவன் இல்லன்னு நம்புறவங்க. அவங்க கிட்ட எதுக்கு நான் உண்மைய சொல்லணும். எனக்கு கை உடைஞ்சிருக்கு பிரச்சினை ஆயிருக்கு நீங்க பார்க்க வந்தீங்க அதோட நிறுத்திக்கோங்க. உங்க யார்கிட்டயும் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்க வந்த வழியைப்பார்த்துப் போகலாம் என்று கையை வாசலை பார்த்து நீட்டி வெளியே போங்க என்று சொல்லாமல் சொல்லிவிட்டான்.

அதைக் கேட்டதும் ராதாவுக்குக் கோபம் வந்துவிட்டது ஏதோ பிளான் பண்றான் போல இருக்கு என்று அங்கிருந்து உடனே கோபத்தில் கிளம்பி வெளியே வரவும் எதிரே வந்த ருக்மணி அவளைப் பார்த்து விட்டார்

அவளைப் பார்த்ததும் ருக்குமணி அவளின்முன்பு போய் வழிமறித்து நின்றவர் “என்ன உன் புருஷன் செய்தது போதாதா? இனி நீ வேற என் மகனின் மனச கலைக்க வந்துட்டியா? உனக்கெல்லாம் ஒருமுறை சொன்னால் அதைப் புரிஞ்சிக்கிற அறிவு கிடையாதா? உன்னை மாதிரி இரண்டாம்தரமான ஆட்கள் எல்லாம் எனக்கு செட் ஆகாதுன்னு சொல்லிதானே நானே அன்னைக்கே அந்த பேச்சு வார்த்தை முடிச்சிவிட்டேன். நீ திரும்பத் திரும்ப என் பையனையும் என்னையையும் அவன் வாழ்க்கையும் இப்படி சிக்கல்ல மாட்டிவிடுறதுக்காகவே வர்றியா?இதைத்தான் உன்னோட பொழப்பா வச்சிருக்கியா? இதுக்கு மேல மோகனைத் தேடி நீயும் உனக்கு சம்பந்தமான யாராவது வந்தாங்கன்னா உங்க வீட்டுக்கு முன்னாடி வந்து உன்னை கேவலப்படுத்தி போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்திருவேன் பாத்துக்கோ?”என்று கண்டபடி பேசிவிட்டார்.

அதைக் கேட்டதும் ராதாவுக்கு கோபம் வந்துவிட்டது அவரை அடிக்க கையை ஓங்கி விட்டாள்.

“பெரியவங்கன்னு பார்க்குறேன். என்ன பேசணும் எது பேசணும் தெரிஞ்சு பேசுங்க.என்ன உங்க மகனை நான் ஒன்னும் என் பின்னாடி வரச்சொல்லல புரியுதா? என் புருஷன் வர்றதையே நான் கண்டுக்கல. உங்க மகனே மூணாம்தரமான ஆளு அவனையெல்லாம் நான்திரும்பிக்கூட பார்க்கமாட்டேன்.ஒன்னு பண்ணுங்க பேசாமல் உங்க மகனுக்கு வேற பொண்ணுப்பார்த்து சீக்கிரம் கல்யாணத்தைப் பண்ணி வைங்க.எனக்கு நல்லதாகப்போகும்”என்று திட்டிவிட்டு அங்கிருந்து கோபத்தில் வந்துவிட்டாள்

அதன் பிறகு அவள் மோகனைப் பற்றி யோசிக்கவும் இல்லை அவன் விசயத்தில் எந்த விதத்திலும் தலையிடவும் இல்லை. இதில் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதம் முடிந்ததுவிட்டது.

எல்லோரும் மோகனுடைய கை உடைந்த விஷயத்தை மறக்க ஆரம்பித்து இருந்தனர்.

ஆனால் மோகன் அதை இன்னும் மறக்கவில்லை அவனது கையின் தழும்புகள் அவனுக்கு மீண்டும் மீண்டும் கிருஷ்ணனின் முகத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது.

அதற்காக அந்த விஷயத்தை மறப்பதற்கு அவன் செய்த செயல் அவன் வாழ்க்கை மட்டுமல்ல ராதாவின் வாழ்க்கையையும் மொத்தமாக புரட்டி போட்டுவிட்டது.